உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .
by Padmajavasudevan Today at 5:13 pm

» விருது பெற்ற தமிழ்த் திரைப் பாடல்கள்
by ayyasamy ram Today at 4:41 pm

» எந்த பெண்ணிலும் இல்லாத ஒன்று...
by ayyasamy ram Today at 4:30 pm

» முகநூலில் ரசித்தவை
by ayyasamy ram Today at 4:23 pm

» இலவச காய்கறி விவசாயி தாராளம்
by ayyasamy ram Today at 4:13 pm

» துப்புரவாளருக்கு ரூபாய் மாலை
by ayyasamy ram Today at 4:11 pm

» உயிர் எழுத்துக்களில் கொரோனா கவிதை
by ayyasamy ram Today at 4:10 pm

» ஒரே மாதத்தில் 20 லட்சம்: அமெரிக்காவில் சூடு பிடிக்கும் துப்பாக்கி விற்பனை
by ayyasamy ram Today at 4:06 pm

» சீனாவில் நாளை துக்க தினம் அனுசரிப்பு
by ayyasamy ram Today at 4:02 pm

» வேலன்:-ஆடியோ பைல்களை பார்வையிட -Finetune.
by velang Today at 2:08 pm

» அமெரிக்க தடையை மீறி ஈரானுக்கு ஐரோப்பிய நாடுகள் உதவி
by சக்தி18 Today at 1:41 pm

» நடிகை ஸ்ரீதிவ்யா படங்களில் உங்களுக்கு பிடித்தது?
by சக்தி18 Today at 1:33 pm

» ஏப்ரல் 5 ஆம் தேதி இரவு 9 மணிக்கு மெழுகுவர்த்தி, செல்போன் விளக்குகளை ஒளிரவிட வேண்டும்; பிரதமர் மோடி
by சக்தி18 Today at 1:30 pm

» கொரோனா அவசரநிதி: இந்தியாவுக்கு ஒரு பில்லியன் டாலர் நிதியை வழங்குகிறது உலக வங்கி..!
by ayyasamy ram Today at 12:29 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 12:19 pm

» Can you imagine? (உங்களால் கற்பனை செய்ய முடிகிறதா?)
by Pranav Jain Today at 11:51 am

» கொரோனா தமாஷ் பாருங்கள்!
by சக்தி18 Today at 11:41 am

» கோவிலில் கூட்டுக் குடும்பம்!
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:40 am

» சமூக இடைவெளியை கடைபிடித்த குரங்குகள்.... நெகிழ்ந்து போன நடிகர்
by சக்தி18 Today at 11:39 am

» யார் இந்த சாலையோரம் பூக்கள் வைத்தது
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:36 am

» இறைவன் எங்கே? இறை தூதர்கள் எங்கே?
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:12 am

» அமெரிக்கா தனது நாட்டினரை இந்தியாவில் இருந்து அனுப்ப தொடங்குகியது - தூதரக அதிகாரி
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:00 am

» கொடுமைதான்.. கொரோனா
by பழ.முத்துராமலிங்கம் Today at 10:57 am

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
by பழ.முத்துராமலிங்கம் Today at 10:35 am

» விவேக் மீம் இணையத்தில் வைரல்! நெட்டிசன்களுக்கு அவர் வைத்த கோரிக்கை
by T.N.Balasubramanian Today at 10:19 am

» மூன்றாம் உலகப்போர் எப்படி நடக்கும்? -எழுத்ததிகாரன்
by Pranav Jain Today at 8:57 am

» கொரோனாவால் கற்ற பாடம்: நாய், பூனை இறைச்சிக்கு சீனா தடை
by பழ.முத்துராமலிங்கம் Today at 8:35 am

» 300 படங்கள் நடித்துள்ளேன்!
by பழ.முத்துராமலிங்கம் Today at 8:32 am

» இந்தியஅணி உலகக்கோப்பையை வென்ற, 2011, ஏப்ரல் 2-ம் தேதியை இந்திய ரசிகர்களால் மறக்கமுடியுமா
by ayyasamy ram Today at 8:29 am

» பல ஆண்டுகளுக்குப் பின் ஏழுமலையானுக்கு 6 மணிநேர ஓய்வு
by பழ.முத்துராமலிங்கம் Today at 8:23 am

» » » கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - ஏப்ரல் 3
by ayyasamy ram Today at 6:37 am

» மது போதைக்கு அடிமையாகி மீள முடியாத நபர்களுக்கு, 'ஆன்லைன்' மூலம் இலவசமாக மீட்பு உதவி
by ayyasamy ram Today at 6:26 am

» நண்பர்களே!!! ஒரு புளியமரத்தின் கதை நாவல் கிடைக்குமா?
by Akashgkr Yesterday at 9:06 pm

» குழந்தைகளுக்கு ‛கொரோனா', ‛லாக் டவுன்' என பெயர் சூட்டிய தம்பதியினர்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» ஏப்.,15க்கு பிறகான ரயில் முன்பதிவு: தெளிவுப்படுத்திய ரயில்வே
by ayyasamy ram Yesterday at 6:08 pm

» வேலன்:-கணிணியில் தேவையற்ற பைல்களை நீக்கிட -Wash and GO -Abelsoft
by velang Yesterday at 5:54 pm

» வேலன்:-20க்கும் மேற்பட்ட விதவிதமான ஆங்கில எழுத்துருக்கள்-English Fonts
by velang Yesterday at 5:49 pm

» வேலன்:-புகைப்படத்தில் தேவையில்லாதவற்றை நீக்கிட - PhotoScissors.
by velang Yesterday at 5:48 pm

» வீட்டுக்குறிப்புகள் -மங்கையர் மலர்
by ayyasamy ram Yesterday at 4:19 pm

» கோபுர தரிசனம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 3:58 pm

» சம்யுக்தாவின் சாகச பயிற்சி
by ayyasamy ram Yesterday at 3:55 pm

» துருக்கியில் நிகிஷா
by ayyasamy ram Yesterday at 3:54 pm

» ‘கமலி ப்ரம் நடுக்காவேரி’ ஹைடெக் பின்னணியில் ஒரு காதல் கதை
by ayyasamy ram Yesterday at 3:52 pm

» கரோனா: தமிழகம் முழுவதும் அபாயம் உள்ள பகுதியாக அறிவிப்பு!
by ayyasamy ram Yesterday at 3:43 pm

» ஏப்ரல் 2 - செய்தி சுருக்கம்)
by ayyasamy ram Yesterday at 3:30 pm

» பிறந்த தினவாழ்த்துகள் திரு மாணிக்கம் நடேசன் அய்யா அவர்கள்
by மாணிக்கம் நடேசன் Yesterday at 12:51 pm

» ஆஹா டிப்ஸ்
by மாணிக்கம் நடேசன் Yesterday at 10:33 am

» வீட்டுக்குறிப்புகள் -மங்கையர் மலர்
by ayyasamy ram Yesterday at 5:38 am

» கொரோனா தொற்று ஆய்வு பணியில் இந்திய கடற்படை
by ayyasamy ram Yesterday at 5:30 am

» » கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - ஏப்ரல் 2
by ayyasamy ram Yesterday at 5:27 am

Admins Online

கணிதப் புதிர்- தொண்ணூறிலிருந்து எழுபத்தைந்து...

கணிதப் புதிர்- தொண்ணூறிலிருந்து எழுபத்தைந்து... Empty கணிதப் புதிர்- தொண்ணூறிலிருந்து எழுபத்தைந்து...

Post by ayyasamy ram on Sat Jan 18, 2020 12:38 pm

என். சொக்கன்

‘90 கிலோவா!’

எடைகாட்டும் இயந்திரத்தை நம்ப முடியாமல் பார்த்தார்
வளர்செல்வன். அவருடைய முகத்தில் அதிர்ச்சியும்
கவலையும் சூழ்ந்தன.

சிறுவயதிலிருந்தே வளர்செல்வன் நன்றாகச் சாப்பிடுவார்,
போதுமான உடலுழைப்பு கிடையாது. உடற்பயிற்சி
செய்யலாம் என்றால், அந்த நேரத்தைத் தொலைக்காட்சி
எடுத்துவிடுகிறது.

இதனால், வளர்செல்வனுடைய உடல் பெருத்துக்கொண்டே
சென்றது. நடக்கும்போது மூச்சுவாங்கியது. இதை எல்லாம்
உறுதிப்படுத்துவதுபோல், ‘உங்களுடைய எடை 90
என்றது இந்த இயந்திரம்.

வளர்செல்வன் யோசனையோடு பக்கத்திலிருந்த
அட்டவணையில் தன்னுடைய உயரத்தைத் தேடினார்.
‘இந்த உயரத்துக்கு நீங்கள் 75 கிலோ இருக்க வேண்டும்’
என்று இருந்தது.

ஆக, அவர் 15 கிலோ எடையைக் குறைத்தாக வேண்டும்.
அதற்கு என்ன வழி என்று யோசித்தபடி நடந்தார்
வளர்செல்வன்.

முதலில், ஓர் உணவியல் வல்லுநரைச் சந்தித்து ஆலோசனை
பெற வேண்டும். உணவுப் பழக்கத்தை மாற்றியமைக்க
வேண்டும். உடற்பயிற்சியைத் தொடங்க வேண்டும், ஒ
ழுங்காகத் தூங்கி எழ வேண்டும்… இப்படிப் பல யோசனைகள்
தோன்றின.

அதேநேரம், தன்னுடைய வீட்டிலிருக்கும் மற்றவர்களைப்
பற்றியும் யோசிக்கத் தொடங்கினார் வளர்செல்வன். அவர்கள்
எல்லாம் சரியான எடையில் இருப்பதாகவே தோன்றியது.
ஆனாலும் அதை உறுதிப்படுத்திக்கொள்வது நல்லது.

மருத்துவர், உணவு வல்லுனர் ஆகியோரிடம் தன்னுடைய
பிரச்சினைகளைச் சொல்லி ஆலோசனை பெற்றுக்கொண்டார்.
எடைபார்க்கும் இயந்திரம் ஒன்றை வாங்கிவந்தார்.

”இனிமேல் உணவைக் கட்டுப்படுத்தப் போறேன், உடற்பயிற்சி
செய்யப் போறேன், அதுக்கெல்லாம் பலன் இருக்கான்னு இந்தக்
கருவி எனக்குச் சொல்லும்” என்றார் வளர்செல்வன்.

எடைபார்க்கும் இயந்திரத்தை ஓரமாக வைத்துவிட்டு, ஒரு
நோட்டை எடுத்தார். அதில் அன்றைய தேதியைப் போட்டு
‘90 கிலோ’ என்று எழுதினார்.

அதற்குப் பக்கத்தில் ஒரு கோடு போட்ட வளர்செல்வன், அங்கு
தன்னுடைய மனைவி பெயரை எழுதினார். அவருடைய
எடையைக் குறித்துக்கொண்டார். இதேபோல், தன்னுடைய மகன்,
அப்பா, அம்மா என வீட்டிலுள்ள அனைவருடைய எடையையும்
தனித்தனியாகக் குறித்தார்.

”இனிமேல் நீங்க எல்லோரும் ஒவ்வொரு வாரமும்
வியாழக்கிழமை அன்னிக்கு இந்த இயந்திரத்துல எடை பார்த்து,
இந்த நோட்டில் எழுதி வைக்கணும், நான் மட்டும் ஒவ்வொரு
நாளும் எடை பார்க்கணும்” என்றார் வளர்செல்வன்.

"ஏன்?”

”என்னோட எடை ரொம்ப அதிகமா இருக்கு. அடுத்த சில
மாதங்களில் எடையைப் படிப்படியாக் குறைக்கப் போறேன்,
தினமும் எடை பார்த்தால் நமக்கே ஒரு விழிப்புணர்வு வரும்,
ஊக்கமும் கிடைக்கும்.”

அன்று இரவு, அந்த எடை நோட்டை மீண்டும் ஒருமுறை புரட்டிப்
பார்த்தார். அதிலிருந்த எண்களைப் பலவிதமாகக் கூட்டிக்கழிக்கத்
தொடங்கியது அவருடைய மனம்.

”நம்ம வீட்ல இருக்கிற 5 பேரோட சராசரி எடை 66 கிலோ.
இன்னொரு வியப்பான விஷயம், உங்க நாலு பேரோட எடைக்கு
நடுவுலயும் சரியா 8 கிலோ வேறுபாடு இருக்கு” என்றார்
வளர்செல்வன்.

”புரியலையே?”

”இதோ பையனோட எடையைவிட அம்மாவோட எடை 8 கிலோ
அதிகம், அவங்களைவிட உன்னோட எடை 8 கிலோ அதிகம்,
உன்னைவிட அப்பாவோட எடை 8 கிலோ அதிகம்” என்றார்
வளர்செல்வன்.

”கணக்கெல்லாம் இருக்கட்டும். எடையைக் குறைக்கப் பாருங்க”
என்றார் அவர் மனைவி.

மறுநாள் முதல் உணவுப் பழக்கத்தில், வாழ்க்கை முறையில்
பல மாற்றங்களைக் கொண்டுவந்தார். அதன்மூலம் அவருடைய
எடை மெதுவாகக் குறையத் தொடங்கியது. புத்துணர்ச்சியாக
உணரத் தொடங்கினார், வேலைகளை இன்னும் சுறுசுறுப்பாகச்
செய்தார், அதனால் கிடைத்த மகிழ்ச்சி அவருடைய உடல்
நலனை மீட்டுத் தந்தது.

இப்போது வளர்செல்வனைப் பார்க்கிறவர்கள் எல்லாம்
வியந்தார்கள்.

பல மாதங்களுக்குப் பிறகு வளர்செல்வன் தன்னுடைய இலக்காகிய
75 கிலோவை எட்டினார்.

இப்போது, உங்களுக்கு ஒரு கேள்வி. வளர்செல்வன் எடைக் குறைப்பு
முயற்சியைத் தொடங்கிய நாளன்று, அவருடைய வீட்டிலிருந்த மற்ற
நால்வருடைய எடை என்ன?
-
----------------------------------
nchokkan
இந்து தமிழ் திசை

ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 54382
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12750

https://rammalar.wordpress.com/

Back to top Go down

கணிதப் புதிர்- தொண்ணூறிலிருந்து எழுபத்தைந்து... Empty Re: கணிதப் புதிர்- தொண்ணூறிலிருந்து எழுபத்தைந்து...

Post by சக்தி18 on Sat Jan 18, 2020 2:39 pm

நான் கணக்கில கொஞ்சம் வீக்.

ரமனியண் ஐயா தான் கணக்கில் புலி.

இருந்தாலும் ஒரு முயற்சி....................

48-56 -64-72-90 =330 ~ 66

கொஞ்சம் பார்த்து பாஸ் மார்க் போடுங்க ராம் சார்

சக்தி18
சக்தி18
தளபதி

தளபதி

பதிவுகள் : 1530
இணைந்தது : 24/12/2018
மதிப்பீடுகள் : 474

Back to top Go down

கணிதப் புதிர்- தொண்ணூறிலிருந்து எழுபத்தைந்து... Empty Re: கணிதப் புதிர்- தொண்ணூறிலிருந்து எழுபத்தைந்து...

Post by ayyasamy ram on Sat Jan 18, 2020 5:47 pm

@சக்தி18 wrote:நான் கணக்கில கொஞ்சம் வீக்.

ரமனியண் ஐயா தான் கணக்கில் புலி.

இருந்தாலும் ஒரு முயற்சி....................

48-56 -64-72-90 =330 ~ 66

கொஞ்சம் பார்த்து பாஸ் மார்க் போடுங்க ராம் சார்

மேற்கோள் செய்த பதிவு: 1311996
--------------
ரமனியண் ஐயா விடை சொன்னபின் மார்க் போடப்படும்..!!
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 54382
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12750

https://rammalar.wordpress.com/

Back to top Go down

கணிதப் புதிர்- தொண்ணூறிலிருந்து எழுபத்தைந்து... Empty Re: கணிதப் புதிர்- தொண்ணூறிலிருந்து எழுபத்தைந்து...

Post by T.N.Balasubramanian on Sat Jan 18, 2020 8:37 pm


@ayyasamy ram wrote:
@சக்தி18 wrote:நான் கணக்கில கொஞ்சம் வீக்.

ரமனியண் ஐயா தான் கணக்கில் புலி.

இருந்தாலும் ஒரு முயற்சி....................

48-56 -64-72-90 =330 ~ 66

கொஞ்சம் பார்த்து பாஸ் மார்க் போடுங்க ராம் சார்

மேற்கோள் செய்த பதிவு: 1311996
--------------
ரமனியண் ஐயா விடை சொன்னபின் மார்க் போடப்படும்..!!
மேற்கோள் செய்த பதிவு: 1312011சராசரி கணக்கெல்லாம் 4 ம் வகுப்பில் படித்தது.
கணக்கெல்லாம் மறந்து போய்விட்டது
நான், அய்யாசாமி ராம் அவர்கள் எல்லாம் வயதானவர்கள். அவருக்கும் கணக்கு மறந்து போயிருக்கும். இருப்பினும் அவர் இந்து தமிழ் திசையை பார்த்து விடையை எடுத்து இருப்பார். மேலும் சம்பாதிக்கும் வயதில் இருக்கும் சக்தி தப்பாக கணக்கு போட்டு இருக்கமாட்டார். விடை ஒத்துப்போனதால்தான் ராம் அவர்களும் நன்றி கூறி உள்ளார்.
ஆகவே சக்தியின் விடை சரிதான் என்று நினைக்கிறேன்.
மேலும் நிர்வாக குழுவில் தினமும் வரும் ஜாகீதா பானு /க்ரிஷ்ணாம்மா அவர்களையும் கலந்தாலோசித்து (அவர்களுக்கு வேறு விடை வந்தால் --வீண் குழப்பம் வரும்.சரிதானே)
சக்தி அவர்களுக்கு மார்க் போடவும்.
வழிமுறை (ஸ்டெப்ஸ்) சரியா என்று பார்க்கவும்.காப்பி அடித்தார் என்ற அவப்பெயர் வரக்கூடாது அல்லவா!
ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 26185
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9463

Back to top Go down

கணிதப் புதிர்- தொண்ணூறிலிருந்து எழுபத்தைந்து... Empty Re: கணிதப் புதிர்- தொண்ணூறிலிருந்து எழுபத்தைந்து...

Post by சக்தி18 on Sun Jan 19, 2020 12:21 pm

காப்பி அடிக்கல ஐயா. காப்பி குடிப்பதும் இல்லை. வேலை நேரத்தில் இவை எல்லாம் ஒரு ரிலக்ஸ்,டானிக் மாதிரி.

நான் போட்ட கணக்கு………….
பையனுடைய எடை X
அம்மா எடை - X+ 8
மனைவியின் எடை -அம்மா எடை + 8 = X+8+8
அப்பா எடை – மனைவியின் எடை +8 = X+8+8+8
வளர்செல்வன் எடை - 90

X+(X+8)+(X+8+8)+(X+8+8+8)+90 =66X5
4X+48+90=330
4X=330-138= 192
X=192/4 =48

மார்க் உண்டா?
சக்தி18
சக்தி18
தளபதி

தளபதி

பதிவுகள் : 1530
இணைந்தது : 24/12/2018
மதிப்பீடுகள் : 474

Back to top Go down

கணிதப் புதிர்- தொண்ணூறிலிருந்து எழுபத்தைந்து... Empty Re: கணிதப் புதிர்- தொண்ணூறிலிருந்து எழுபத்தைந்து...

Post by T.N.Balasubramanian on Sun Jan 19, 2020 6:43 pm

எந்தன் வழிமுறையும்
உங்கள் வழிமுறையும்
ஒத்து வருவதால்
உங்களுக்கு முழு மார்க் கொடுக்க
பரிந்துரைக்கிறேன்.

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 26185
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9463

Back to top Go down

கணிதப் புதிர்- தொண்ணூறிலிருந்து எழுபத்தைந்து... Empty Re: கணிதப் புதிர்- தொண்ணூறிலிருந்து எழுபத்தைந்து...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை