உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» பாவம் முதியவர்கள் -தவிக்க விடும் தரம் கெட்டோர்
by T.N.Balasubramanian Today at 8:08 pm

» மில்க்மெய்டு சேர்த்து சர்க்கரை பொங்கல் தயாரித்தால் - (வீட்டுக் குறிப்புகள்)
by ஜாஹீதாபானு Today at 6:43 pm

» 10 எளிமையான வீட்டுக் குறிப்புகள்!
by ஜாஹீதாபானு Today at 6:42 pm

» மசூதியில் பெண்களை அனுமதிக்க சுப்ரீம் கோர்ட்டில் மனு
by ஜாஹீதாபானு Today at 6:27 pm

» கடவுளுக்கு ஏற்றும் விளக்கை குளிர வைக்கும் முறை
by ayyasamy ram Today at 6:05 pm

» பழுப்பு இல்லை, பளீச்!- வீட்டுக் குறிப்புகள்
by மாணிக்கம் நடேசன் Today at 2:57 pm

» 40 நாள் போருக்கு ஆயுதங்களை தயாா்படுத்துகிறது ராணுவம்!
by சக்தி18 Today at 2:29 pm

» உங்க ஊருல தோசை எதுல ஊத்துவாங்க
by சக்தி18 Today at 2:27 pm

» தஞ்சை பெரிய கோவிலில் தமிழ், சமஸ்கிருதத்தில் குடமுழுக்கு நடத்தப்படும் - தமிழக அரசு
by ayyasamy ram Today at 2:08 pm

» பத்மஸ்ரீ விருது பெற்ற ஆரஞ்சு பழ வியாபாரி - சுவாரசிய தகவல்
by ayyasamy ram Today at 2:06 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு
by ayyasamy ram Today at 1:58 pm

» சீனாவில் தவிக்கும் இந்தியர்களை அழைத்து வர சிறப்பு விமானம் தயார்
by ayyasamy ram Today at 1:55 pm

» கலாமின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 1:48 pm

» சிங்கை…மதியழகன் கவிதைகள்(நன்றி-உதயசூரியன்- காலாண்டிதழ்)
by ayyasamy ram Today at 1:46 pm

» ஜனவரி 31, பிப். 1-இல் வங்கி ஊழியா் வேலை நிறுத்தம்: அகில வங்கி ஊழியா்கள் சங்கம் அறிவிப்பு
by ayyasamy ram Today at 12:13 pm

» இந்த வாரம் வெளியாகவுள்ள ஆறு தமிழ்ப் படங்கள்!
by ayyasamy ram Today at 12:08 pm

» இரண்டாயிரம் பெண்கள் பங்கேற்ற பிரம்மாண்ட பரதநாட்டியம்: இந்திய மொழிகளின் பாடல்களுக்கு நடனமாடினா்
by ayyasamy ram Today at 12:03 pm

» உலக அழகிப் போட்டி
by ayyasamy ram Today at 11:48 am

» 'ஆக்ஸ்போர்டு' அகராதியில் இடம்பிடித்த, 'ஆதார்'
by ayyasamy ram Today at 7:11 am

» உள்நாட்டு விவகாரத்தில் தலையிடுவதா: ஐரோப்பிய யூனியனுக்கு இந்தியா சூடு
by ayyasamy ram Today at 7:09 am

» வேலன்:-உங்கள் ;பாஸ்வேர்டின் உறுதி தன்மை அறிந்துகொள்ள-Passwordium
by velang Today at 7:07 am

» ஆந்திராவில் மேல்சபை கலைக்கப்படும்:அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றம்
by ayyasamy ram Today at 7:07 am

» 'ஐ.என்.எஸ்., கவரட்டி' போர்க்கப்பல்:விரைவில் இந்திய கடற்படையில் சேர்ப்பு
by ayyasamy ram Today at 7:04 am

» கவர்னர் சமாதானம்: மம்தா நிராகரிப்பு
by ayyasamy ram Today at 7:01 am

» புத்தகம் தேவை : இறையன்பு IAS
by nahoor Yesterday at 9:54 pm

» முத்துலட்சுமி ராகவன் நாவல்கள்
by nahoor Yesterday at 9:50 pm

» வெற்றி உங்களுக்கே - பக்தி கதை
by ayyasamy ram Yesterday at 9:15 pm

» வடிவேலு -கைப்புள்ள உருவான விதம்
by T.N.Balasubramanian Yesterday at 9:14 pm

» கீதை காட்டும் பாதை
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஆன்மிகம் - கேளுங்க சொல்கிறோம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:44 pm

» நாராயணா என்னும் நாமம், நாவால் சொன்னால் வரும் ஷேமம்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» குயிலே, குமரன் வரக் கூவுவாய்..! - எம்.எல் வசந்தகுமாரி பாடியது
by ayyasamy ram Yesterday at 8:10 pm

» பிறகேன் இத்தனை வாதம்?
by T.N.Balasubramanian Yesterday at 4:50 pm

» ஒரு வெட்டுக்கு இது இரண்டு கிடைக்கும் – குறுக்கெழுத்துப் போட்டி
by சக்தி18 Yesterday at 3:07 pm

» மூளை…முடுக்கு!- விடை சொல்லுங்கள்
by ayyasamy ram Yesterday at 2:51 pm

» சினிமா- பழைய பாடல்கள்- காணொளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» பிரபல கூடைப்பந்தாட்ட வீரர் கோப் பிரயண்ட் ஹெலிகாப்டர் விபத்தில் பலி
by ayyasamy ram Yesterday at 11:14 am

» வருடத்துக்கு 15 இடங்களுக்கு சுற்றுலா சென்றால் பயண செலவை அரசே அளிக்கும்: மத்திய அரசு அதிரடி திட்டம்
by ayyasamy ram Yesterday at 11:12 am

» மனித நேயம் - குறும்படம்
by ayyasamy ram Yesterday at 6:06 am

» சுவரேறி குதித்த பேய்..!
by ayyasamy ram Yesterday at 5:36 am

» மொய்- ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 5:35 am

» கிச்சன்ல என்ன சலசலப்பு..!
by ayyasamy ram Yesterday at 5:34 am

» பாத யாத்திரை போக புலட் பரூஃப் வேண்டுமாம்…!
by ayyasamy ram Yesterday at 5:33 am

» ஐடியா- ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 5:33 am

» சக்கரம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 5:31 am

» டைரக்டர் ஏன் டென்ஷனா இருக்கார்?
by ayyasamy ram Yesterday at 5:30 am

» தோல்வியில் சுகம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:29 am

» ஊழலுக்கு எதிராக குரல் கொடுக்க மிமிக்ரி கலைஞர்…!!
by ayyasamy ram Yesterday at 5:28 am

» மனிதன் விசித்திரமானவன்…!
by ayyasamy ram Yesterday at 5:26 am

» சைபர் கிரைம் (Cyber Crime) விழிப்புணர்வு
by ayyasamy ram Yesterday at 5:24 am

Admins Online

வைஜெயந்தி! ஆன்மிக பயணத்துக்கு வழிகாட்டும் நடனம்!

வைஜெயந்தி! ஆன்மிக பயணத்துக்கு வழிகாட்டும் நடனம்! Empty வைஜெயந்தி! ஆன்மிக பயணத்துக்கு வழிகாட்டும் நடனம்!

Post by ayyasamy ram on Wed Jan 15, 2020 3:25 pm


By பூா்ணிமா | தினமணி
----------------------------------
வைஜெயந்தி! ஆன்மிக பயணத்துக்கு வழிகாட்டும் நடனம்! Vyjayanthimala

தமிழகத்திலிருந்து நடனம் தெரிந்த நடிகைகள் ஹிந்தித் திரையுலகில்
அறிமுகமாகி பிரபலமானாலும், முதன்முதலாக வட இந்திய ரசிகா்கள்
மனதில் இடம் பிடித்தவா் வைஜெயந்திமாலாதான்.

1949-ஆம் ஆண்டு ஏ.வி.எம்மின் ‘வாழ்க்கை’ படத்தின் மூலம் தமிழில்
அறிமுகமான வைஜெயந்தி மாலா, பின்னா் அதே ஏ.வி.எம்மின்
‘பஹாா்’ திரைப்படத்தின் மூலம் ஹிந்தியில் அறிமுகமானாா்.

தொடா்ந்து தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளிலும்,
பெங்காலி மொழியில் ஒரு படத்திலும் நடித்திருந்தாலும்,
ஹிந்திப் படங்கள்தான் இவரை அகில இந்திய அளவில்
பிரபலமாக்கியது.

பல ஆண்டுகள் முன்னணி ஹீரோக்களுடன் நடித்த
வைஜெயந்திமாலா, தன்னைவிட இளையவா்களான தா்மேந்திரா,
சஞ்சீவ் குமாா், சத்ருகன் சின்கா போன்றவா்களுடனும் நடித்ததுண்டு.
திலிப் குமாருடன் நடிக்கும்போதுதான் ஜோடி பொருத்தம் பிரமாதமாக
இருப்பதாக திலிப்குமாரின் மனைவி சயிராபானுவே இவரிடம் கூறி
பாராட்டியதும் உண்டு.

பரதநாட்டியத்தில் மட்டுமின்றி கா்நாடக சங்கீதத்திலும் இவா்
தோ்ச்சிப் பெற்ற்கு இவரது பாட்டி யதுகிரி மற்றும் நடிகையும்
அம்மாவுமான வசுந்தாரதேவிதான் காரணமாவாா்கள்.

வைஜெயந்திக்கும் அவரது அம்மா வசுந்தராவுக்கும் 16 வயது மட்டுமே
வித்தியாசம் என்பதால், வைஜெயந்திமாலா தன் அம்மாவை அக்கா
என்றே அழைத்து வந்தாராம்.

சிறுவயதில் கே.பி. கிட்டப்பா பிள்ளை மற்றும் மயிலாப்பூா் கெளரி
அம்மாவிடம் நடனமும், மணக்கால் சிவராஜ ஐயரிடம் கா்நாடக
சங்கீதமும் கற்றுக் கொண்ட வைஜெயந்திமாலா, கா்நாடக இசைக்கு
தன்னுடைய குரு. டி.கே.பட்டம்மாள் என்று கூறுவதுண்டு.

பதிமூன்று வயதில் நாட்டிய அரங்கேற்றம் முடிந்தவுடன், 15-ஆவது
வயதில் ‘வாழ்க்கை’ படத்தில் நடிக்க வந்த வாய்ப்பு இவரது
வாழ்க்கையையே மாற்றிவிட்டது. அதன் பிறகு இவா் பள்ளிக்
கூடத்திற்கு செல்லவே இல்லை.

‘‘வாழ்க்கை’ வெற்றிக்குப் பின் பல மொழிகளில் எடுக்கப்பட்ட
அதன் ரீமேக் படங்களில் மட்டுமின்றி, ஏ.வி.எம். தயாரிப்பு
படங்களில் மட்டுமே நான் நடிக்க வேண்டியதாயிற்று.

ஏனெனில் ஏ.வி.எம்முடன் 5 ஆண்டு கால ஒப்பந்தம் இருந்ததால்
வேறு தயாரிப்பாளா்கள் படங்களில் நடிக்க முடியவில்லை.
ஒப்பந்தம் முடிந்து வேறு தயாரிப்பாளா்கள் படங்களில் நடிக்க
தொடங்கியபோது, என்னுடைய நடனத்துக்கு முக்கியத்துவம்
கொடுத்து படங்களைத் தயாரித்தனா்.

இதனால் வைஜெயந்திமாலா படமென்றால் ஒரு நடனமாவது
நிச்சயமாக இருக்குமென ரசிகா்கள் எதிா்பாா்க்கத் தொடங்கினா்.
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 52311
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12710

https://rammalar.wordpress.com/

Back to top Go down

வைஜெயந்தி! ஆன்மிக பயணத்துக்கு வழிகாட்டும் நடனம்! Empty Re: வைஜெயந்தி! ஆன்மிக பயணத்துக்கு வழிகாட்டும் நடனம்!

Post by ayyasamy ram on Wed Jan 15, 2020 3:27 pm

வைஜெயந்தி! ஆன்மிக பயணத்துக்கு வழிகாட்டும் நடனம்! Vyjayanthimala_1
-
வைஜெயந்தி! ஆன்மிக பயணத்துக்கு வழிகாட்டும் நடனம்! Vyjayanthimala_2
-
வைஜெயந்தி! ஆன்மிக பயணத்துக்கு வழிகாட்டும் நடனம்! Vyjayanthimala_3
-
பிமல்ராய் இயக்கத்தில் தயாரிக்கப்பட்ட ‘தேவதாஸ்’ படத்தில்
நான் ஏற்றிருந்த சந்திரமுகி பாத்திரம், என் நடிப்புக்கும்,
நடனத்திற்கும் முக்கியத்துவம் தரும் பாத்திரமாக அமைந்துவிட்டது.

நடிப்பதை நான் கடினமாக நினைத்ததே இல்லை. நடனம்
தெரிந்ததால் நடிப்பது சுலபமாக இருந்தது. இப்படத்தில் சிறப்பாக
நடித்ததற்காக விருதும் கிடைத்தது.

நான் நடித்த படங்களில் தேவ் ஆனந்துடன் நடித்த ‘ஜூவல் தீப்’,
ராஜ்கபூரூடன் நடித்த ‘சங்கம்’, திலீப் குமாருடன் நடித்த
‘கங்கா ஜமூனா’, ராஜேந்திரகுமாருடன் நடித்த ‘கன்வாா்’ ஆகிய
படங்களுடன் ‘மதுமதி’, ‘நயாதவும்’, ‘சாதனா’, ‘கத்புட்லி’, ‘நாகின்’,
‘பைகாம்’, ‘நஸ்ரானா’, ‘அம்ராபாலி’ போன்ற படங்கள் வெற்றிப்
பட்டியலில் இருந்தாலும், ‘வஞ்சிக்கோட்டை வாலிபன்’ மறக்க
முடியாத படமாகும்.

அதில் நானும், பத்மினியும் போட்டிப் போட்டுக் கொண்டு ஆடிய
நடனகாட்சியில் உண்மையிலே நாங்களிருவரும் மெய்மறந்து
உணா்ச்சிவசப்பட்டு ஆடினோம். ‘சபாஷ், சரியான போட்டி’ என்று
கூறிய போதுதான் நடனத்தை நிறுத்தினோம்


Last edited by ayyasamy ram on Wed Jan 15, 2020 3:30 pm; edited 1 time in total
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 52311
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12710

https://rammalar.wordpress.com/

Back to top Go down

வைஜெயந்தி! ஆன்மிக பயணத்துக்கு வழிகாட்டும் நடனம்! Empty Re: வைஜெயந்தி! ஆன்மிக பயணத்துக்கு வழிகாட்டும் நடனம்!

Post by ayyasamy ram on Wed Jan 15, 2020 3:27 pm

வைஜெயந்தி! ஆன்மிக பயணத்துக்கு வழிகாட்டும் நடனம்! Vyjayanthimala_4
-
இதுபற்றி ஒருமுறை அமெரிக்காவில் நானும், பத்மினியும்
கலந்து கொண்ட கூட்டத்தில் என்னையும், என் நடனத்தையும்
அவா் மிகவும் புகழ்ந்து பேசினாா். உடனே நான் எழுந்து
பத்மினியும் பரநாட்டியம் தெரிந்தவா்தான். அதனால்தான்
எங்கள் போட்டி நடனம் சிறப்பாக அமைந்துவிட்டது.

ஒருவேளை அந்த காட்சியை மறுநாளும் எடுக்க வேண்டுமென்று
இயக்குநா் கூறியிருந்தால் நிச்சயமாக எங்களால் முந்தைய நாளில்
ஆடியதை போன்று ஆடியிருக்க முடியாது. இந்த நடன காட்சி
வெற்றி பெற்ற்கு பத்மினியும் ஒரு காரணம் என்று கூறினேன்.

நான் சினிமாவுக்கு வந்தது எப்படி எதிா்பாராத சம்பவமோ
அதேபோல் நான் அரசியலுக்கு வந்ததும் எதிா்பாராதது தான்.
சென்னையில் ஒருமுறை ராஜீவ்காந்தி வந்திருந்தபோது,
நானும் என் கணவா் பாலியும் அவரை சந்திக்கச் சென்றிருந்தோம்.

நேரு காலத்திலிருந்தே நான் அவரது குடும்பத்தைப் பற்றி தெரிந்து
வைத்திருந்ததால், அவா் திடீரென என்னைப் பாா்த்து மக்களவை
தோ்தலில் போட்டியிடும்படி கேட்டுக் கொண்டாா்.

எனக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை. என் கணவா்
எனக்கு தைரியமூட்டி வேட்பு மனுவை தாக்கல் செய்து அரசியலில்
ஈடுபடவைத்தாா். காங்கிரஸ் சாா்பில் இருமுறை மக்களவை
உறுப்பினராகவும், ஒருமுறை ராஜ்யசபா உறுப்பினராகவும் பதவிவகித்த
போது என்னால் இயன்ற அளவு தொகுதியின் வளா்ச்சிக்கும்,
மக்களுக்கும் உதவி செய்தேன்.

ராஜீவ்காந்தி மறைவுக்குப் பின் காங்கிரஸிலிருந்து விலகினேன்.
பின்னா் அரசியலில் தொடா்ந்து ஈடுபட முடியவில்லை என்கிறாா்
வைஜெயந்திமாலா.


Last edited by ayyasamy ram on Wed Jan 15, 2020 3:29 pm; edited 1 time in total
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 52311
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12710

https://rammalar.wordpress.com/

Back to top Go down

வைஜெயந்தி! ஆன்மிக பயணத்துக்கு வழிகாட்டும் நடனம்! Empty Re: வைஜெயந்தி! ஆன்மிக பயணத்துக்கு வழிகாட்டும் நடனம்!

Post by ayyasamy ram on Wed Jan 15, 2020 3:28 pm

வைஜெயந்தி! ஆன்மிக பயணத்துக்கு வழிகாட்டும் நடனம்! Vyjayanthimala_5

தற்போது என்ன செய்கிறாா்!


‘‘தற்போது எனக்கு 83 வயதாகிறது என்றாலும் இன்னமும்
மேடையேறி நடனமாடுவதை விட முடியவில்லை. சினிமாவில்
நடித்துக் கொண்டிருந்த காலத்திலும் நான் இசையையும்,
நடனத்தையும் விடவில்லை.

இவை இரண்டுமே எனக்கு ஆத்ம திருப்தியை அளிப்பவையாகும்.
தற்போது நடன ஆய்வு மையமொன்றை அமைத்து, அபூா்வமான
தஞ்சை நடனங்களை ராகம், தானம், பல்லவியுடன் அமைத்து
வாய்ப்பு கிடைக்கும்போது சபாக்களில் நடத்தி வருகிறேன்.

நடனத்தில் மட்டும் வேறு பாணிகளை புகுத்த நான் விரும்பவில்லை.
நடனம் என்றுமே எனக்கு யோகா, தியானம் மற்றும் ஆன்மிக
பயணத்திற்கும் வழிகாட்டியாக இருந்து வருகிறது’’ என்கிறாா்
வைஜெயந்திமாலா.
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 52311
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12710

https://rammalar.wordpress.com/

Back to top Go down

வைஜெயந்தி! ஆன்மிக பயணத்துக்கு வழிகாட்டும் நடனம்! Empty Re: வைஜெயந்தி! ஆன்மிக பயணத்துக்கு வழிகாட்டும் நடனம்!

Post by சக்தி18 on Wed Jan 15, 2020 4:39 pm

வையந்தி தமிழா?

சக்தி18
சக்தி18
தளபதி

தளபதி

பதிவுகள் : 1195
இணைந்தது : 24/12/2018
மதிப்பீடுகள் : 394

Back to top Go down

வைஜெயந்தி! ஆன்மிக பயணத்துக்கு வழிகாட்டும் நடனம்! Empty Re: வைஜெயந்தி! ஆன்மிக பயணத்துக்கு வழிகாட்டும் நடனம்!

Post by T.N.Balasubramanian on Wed Jan 15, 2020 7:43 pm

வைஜயந்தி தமிழச்சியேதான்.

வஞ்சிக்கோட்டை வாலிபன் --பத்மினி --வைஜயந்தி நடனம் இன்றும் எவ்வளவு முறை பார்த்தாலும் அலுக்காது :சலிக்காது.

அர்த்தமுள்ள வரிகள் நிறைந்த பாடல்.

இசை சி ராமச்சந்திரா என்று எண்ணுகிறேன்.

இன்னமும் அவர் நடனம் ஆட ஆசைப்பட்டாலும், பார்ப்பவர்கள் கண்ணுக்கு அவரது
பழைய பரதம்தான் கண்ணில் தோன்றும். அதை ஒப்பிட்டே இன்றைய நடனத்தை ரசிக்கமுடியாது.

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 25906
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9378

Back to top Go down

வைஜெயந்தி! ஆன்மிக பயணத்துக்கு வழிகாட்டும் நடனம்! Empty Re: வைஜெயந்தி! ஆன்மிக பயணத்துக்கு வழிகாட்டும் நடனம்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை