உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» ஐந்து நிலங்கள்!
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:13 am

» மூன்றாம் கட்டத்திற்கு நகரும் கொரோனா... அடுத்தடுத்த நாட்களில் கட்டுப்பாடுகளை கடுமையாக்கும் மத்திய அரசு
by T.N.Balasubramanian Today at 11:12 am

» அல்லல் நீங்க…
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:12 am

» டெல்லி மாநாட்டில் பங்கேற்றதை மறைத்து மலேசியா செல்ல முயன்ற 8 பேர் விமான நிலையத்தில் சிக்கினர்
by T.N.Balasubramanian Today at 11:08 am

» பிரதமரின் வேண்டுகோளை ஏற்று இந்தியா ஓரணியில் திரண்டது; வீடுகளில் மின்விளக்கை அணைத்துவிட்டு மக்கள் விளக்கு ஏற்றினார்கள்
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:06 am

» துளிப்பா
by பழ.முத்துராமலிங்கம் Today at 10:56 am

» குலதெய்வத்தை கும்பிடுங்கள்
by பழ.முத்துராமலிங்கம் Today at 10:54 am

» வேலன்:-ஹார்ட்டிஸ்கினை பரிசோதிக்க-CheckDrive.-Abelssoft
by மாணிக்கம் நடேசன் Today at 8:58 am

» வேலன்:-கணிணி வேகமாக செயல்பட -JET DRIVE.
by velang Today at 7:25 am

» வாரியாரின் சொற்பொழிவிலிருந்து:
by ayyasamy ram Yesterday at 11:36 pm

» தி.க.சிவசங்கரன் எழுதிய, ‘தாமரை’ இலக்கிய இதழிலிலிருந்து:
by ayyasamy ram Yesterday at 11:32 pm

» கல்கி எழுதிய, ‘படித்தேன், ரசித்தேன்…’ நுாலிலிருந்து:
by ayyasamy ram Yesterday at 11:32 pm

» சுற்றுலா போன சிவசாமி!
by ayyasamy ram Yesterday at 11:25 pm

» ருத்ர முத்திரையை பயன்படுத்தி வெரிகோஸ் வெயின் பிரச்சனையை சரிசெய்யலாம்…!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» தமிழகத்தில் 32 மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு: மாவட்ட வாரியாக முழு விவரம்...
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» இந்தியாவில் 15-ந் தேதி முதல் மீண்டும் ரெயில் சேவை - தயாராக இருக்க அனைத்து மண்டலங்களுக்கும் அறிவுறுத்தல்
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» ஆயுஷ் அமைச்சகம் வௌயிட்டுள்ள ஆலோசனைகள் + ட்விட்டரில் மோடி
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» உன்னோடு ஒரு நிமிஷம் - வெ.இறையன்பு நூலினை டவுன்லோட் செய்ய .
by prajai Yesterday at 6:12 pm

» புத்தகம் கிடைக்குமா
by prajai Yesterday at 6:08 pm

» அங்கேயும் நம்ம ஊரு போலத்தான், ஞாயிற்றுக்கிழமை லண்டன் பூங்காவுக்கு வந்த 3 ஆயிரம் பேர்
by சக்தி18 Yesterday at 5:42 pm

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 5:41 pm

» வீரமாமுனிவர்
by சக்தி18 Yesterday at 5:39 pm

» பொருத்துக...
by சக்தி18 Yesterday at 5:36 pm

» உன் புன்னகை போதுமடி சில பூக்களும் பூக்குமடி
by சக்தி18 Yesterday at 5:12 pm

» காமராஜரின் தாயார் பெயர் - (குறுக்கெழுத்துப் போட்டி)
by ayyasamy ram Yesterday at 5:01 pm

» இறைவனின் கோபம்.......
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:46 pm

» பீலா ராஜேஷுக்கு ப.சிதம்பரம் பாராட்டு
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:44 pm

» எங்கள் நாட்டில் ஒருவருக்கு கூட கொரோனா இல்லை: வட கொரியா
by ayyasamy ram Yesterday at 4:39 pm

» ஆழ்ந்த துாக்கமே ஆரோக்கிய ரகசியம்!
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» பூமிப்பந்தில் ஒரு பூகம்ப வைரஸ்: வீட்டில் இருங்கள்... விழிப்புடன் இருங்கள்!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:31 pm

» வைரமுத்துவின் நூல்கள் இலவச பதிவிறக்கம்
by BookzTamil Yesterday at 4:17 pm

» மீம்ஸ் "கரோனா " பற்றியது .....
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:15 pm

» கடவுள் பார்க்கும் ஆட்டம்..
by ayyasamy ram Yesterday at 11:16 am

» வட்டியும் முதலும் - ராஜு முருகன்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» அந்த 3 பேரை காணவில்லை.
by T.N.Balasubramanian Yesterday at 10:49 am

» `டவுட் கேட்ட சிறுமி, வீட்டுக்கே வந்த ஆசிரியர்’ - `டீச்சர் ஆஃப் தி இயர்’ என்று புகழ்ந்த நெட்டிசன்கள்
by ayyasamy ram Yesterday at 10:42 am

» விளக்கு ஏற்றுதலும் விஞ்ஞானமும்!
by T.N.Balasubramanian Yesterday at 10:35 am

» பல்லக்கு ஏன் தவறான பாதையில் செல்கிறது?
by ayyasamy ram Yesterday at 7:10 am

» ராபர்ட் கால்டுவெல்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» கவிச்சக்கரவர்த்தி கம்பர்
by ayyasamy ram Yesterday at 7:07 am

» இங்கிலாந்தின் பிரபல டிவி தொடர் குழந்தை நட்சத்திரம் மரணம்
by ayyasamy ram Yesterday at 12:43 am

» நோயாளிகளுக்கு உதவ 'ரோபோ'க்கள் அறிமுகம்
by ayyasamy ram Yesterday at 12:39 am

» ஆஸ்திரேலியாவில் கொரோனா விகிதம் குறைந்தது ; பிரதமர் ஸ்காட் மோரிசன்
by ayyasamy ram Yesterday at 12:36 am

» 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .
by prajai Sat Apr 04, 2020 10:06 pm

» நாளை 9 நிமிட லைட் ஆஃப்; மின் தொடரமைப்பில் இப்படியொரு சிக்கல்- எப்படி சமாளிப்பார்கள்?
by krishnaamma Sat Apr 04, 2020 9:37 pm

» உணவுகளின் போட்டோகள் II :)'காரமல்/ caramel பாப்கார்ன் !
by krishnaamma Sat Apr 04, 2020 9:12 pm

» வீட்டிலே popcorn செய்வது எப்படி ? -இனிப்பு / Caramel Popcorn
by krishnaamma Sat Apr 04, 2020 9:01 pm

» சீனாவில் நாளை துக்க தினம் அனுசரிப்பு
by krishnaamma Sat Apr 04, 2020 8:43 pm

» அமெரிக்கர்கள் முகக்கவசம் அணியுங்கள்; ஆனால், நான் அணியமாட்டேன்: டிரம்ப்
by krishnaamma Sat Apr 04, 2020 8:42 pm

» கொரோனா பாதிப்பு - தொடர் பதிவு
by krishnaamma Sat Apr 04, 2020 8:39 pm

Admins Online

நான் திருநெல்வேலிக்காரன்.

நான் திருநெல்வேலிக்காரன்.  Empty நான் திருநெல்வேலிக்காரன்.

Post by சக்தி18 on Thu Jan 09, 2020 9:15 pm

நான் திருநெல்வேலிக்காரன். 

சீனியும் சர்க்கரையும் ஒரே பொருளைத்தான் குறிக்கின்றன. ஆனால், எது சீனி? எது சர்க்கரை? என்பது நீங்கள் எந்த மாவட்டத்துக்காரர் என்பதைப் பொறுத்தது.

முதல் முதலில் (1953) சென்னை வந்தபோது ஒரு ஹோட்டலில் போய் ஒரு கப் காப்பி ஆர்டர் பண்ணினேன். சர்வரிடம் கொஞ்சம் அதிகமாகச் சீனி போட்டுக் கொண்டுவரச் சொன்னேன். (அது அந்தக் காலம். இப்பொழுது sugarless தான் - டயபிடிஸ் இல்லை) அவன் ஒரு முழி முழித்தான். நான் ஆங்கிலத்தில் sugar என்றேன். உடனே, புரிந்துகொண்டு, வெள்ளை பொடிச் சர்க்கரையைப் போட்டு கொண்டுவந்தான். மேலும், என்னிடம் “சார், இனிமேல், சர்க்கரை என்று சொல்லுங்கள்” என்று அட்வைஸ் பண்ணினான். 

நான் மனதுக்குள் “வா, மகனே, எங்கள் ஊர்ப் பக்கம். சாதாரண ஹோட்டலில் போய், சர்க்கரை என்று சொல்லிப்பார். கருப்பட்டித் தண்ணீர்தான் கொண்டு வருவான். 

பெரிய ஹோட்டல்களில் அச்சு வெல்லத்தை (கோபுரம் மாதிரி இருக்கும்) 
உடைத்துப் பொடியாகக் கொண்டுவருவார்கள். சீனி என்று சொன்னால் மட்டும்தான் வெள்ளைப் பொடி சர்க்கரைக் கிடைக்கும்” என்று கருவிக்கொண்டேன். 

400 மைல் தூரம்தான். நெல்லைக்கும் சென்னைக்கும் இதற்கு நடுவில் எத்தனை விதமான 
‘டமில்ஸ்’. வாழ்க தமிழ்.

புலவரைச் சந்திப்போம். சீனிச் சர்க்கரைப் புலவர்

‘சர்க்கரைக் கட்டி’ என்று செல்லமாகக் குழந்தைகளைக் கொஞ்சுவது உண்டு. 
பெயராகவே வைப்பது இதுதான், முதல் தடவை என்று நினைக்கிறேன். 
இந்தப் புலவர், ரொம்பவே இனிமையானவராக இருந்திருக்க வேண்டும். இவருடைய பெற்றோர், ஒரு double emphasisக்காக சீனியையும் சர்க்கரையும் 
சேர்த்து சீனிக் சர்க்கரை என்று பெயர் வைத்துள்ளார்கள். 

இவ்வளவு இனிமையான பெயர் வைத்துக்கொண்ட இந்தப் புலவர் பிரபலமானது, ஒரு காதல் காவியம் எழுதியோ, வீரக் கவிதை எழுதியோ அல்ல. இப்பொழுது உலகத்தில் உள்ள எல்லா நாடுகளாலும் வெறுக்கப்படும் ஒரு பொருளைப் 
பற்றி எழுதிப் பிலபலமடைந்திருக்கிறார். அதுதான் விளம்பரதாரர்கள் அடிக்கடி 
‘காரம், மணம், குணம், சுவை’ என்று விளம்பரம் செய்யும் ‘புகையிலை.’

இவர் எழுதிப் பிரபலமானது - ‘புகையிலை விடு தூது’ என்ற தூது இலக்கியம்.

சீனிச் சர்க்கரைப் புலவர் பரம்பரைப் புலமை வாய்ந்த குடும்பத்தைச் சேர்ந்தவர். 
இவருடைய தகப்பனார் சர்க்கரைப் புலவர்.சாந்துப் புலவரின் தம்பி, 
இவர் காலம், 18ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி - 19ஆம் நூற்றாண்டின் 
முற்பகுதி.

தூது இலக்கியங்கள் - பிரபந்தங்கள் - எல்லா இலக்கிய மொழிகளிலும் உண்டு. 
எல்லோருக்கும் பரிச்சயமானது காளிதாசனின் ‘மேக சந்தேசம்’ என்ற நூல். 
மேகத்தை தூதாக அனுப்பித் தன் தாபத்தை வெளிபடுத்துவதாக அமைந்தது.

தமிழிலும் நிறைய தூது இலக்கியங்கள் பிரபலமாக இருக்கின்றன. இளம் வயதில் கவிதை என்றால் என்ன என்று தெரியாமலேயேப் பாடிப் பரிசுப் பெற்றது 
“நாராய் நாராய் செங்கல் நாராய்” என்று தொடங்கும் சத்திமுற்றத்துப் புலவர் 
எழுதிய ‘நாரை விடு தூது.’

SMS, twitter, email, skype இல்லாத காலம். எது கிடைத்தாலும் அதைத் தூதுவனாகக் கற்பனை பண்ணித் தான் சொல்ல வேண்டிய செய்தியைக் கவிநயத்துடன் எழுதினார்கள்  அந்தக் காலத்துப் புலவர்கள். முதலில் பத்து தூது காவியங்கள்தான் இருந்ததாம்.

எகினம், மயில், கிளி, மழை, பூவை, சகி, குயில், நெஞ்சம், தென்றல்-, வண்டு என்று. பிறகு பணம், தமிழ், மான், சவ்வாது, நெல், விறலி என்று நிறைய வந்தன.

கழுதையையும், செருப்பையும்கூட தூதுவனாக அனுப்பியிருக்கிறார்கள்.

நம்முடைய புலவர் புகையிலையைத்தூதுவனாக ஆக்கிக் கவிதை எழுதியிருக்கிறார். ‘புகையிலை விடு தூது’ இப்புலவரால் பழனி ஆண்டவர் மீது இயற்றப்பெற்றது. ஒரு தலைவி புகையிலையை அக்கடவுள் பால் 
தூதனுப்புவதாக அமைந்திருக்கிறது.

பாட்டுடைய தலைவரான பழனி ஆண்டவருக்குப் புகையிலை சுருட்டு நிவேதனமுண்டு என்று சிலர் சொல்வதுண்டு. விராலி மலை முருகனுக்கு 
அப்படியொரு நிவேதனம் உண்டென்று சொல்கிறார்கள்.

இந்தத் தூது 59 கண்ணிகள் கொண்ட பாட்டு. முதல் 53 கண்ணிகளில் 
புகையிலையின் பெருமைகளை விளக்குகிறார். தூது விடும் செய்தியைக் கடைசி 6 கண்ணிகளில் சொல்லியிருக்கிறார்.

இந்தப் பாட்டில் புகையிலையின் பெருமையையும்-, புகையிலையை வைத்துச் 
செய்யும் சுருட்டு, பொடி போன்ற பொருள்களையும் பாராட்டியிருக்கிறார்.

புகையிலையை - திருமால், சிவன், பிரம்மன், தமிழ், முருகக் கடவுள் இவர்களுடன் சிலேடை வகையில் ஒப்பிட்டுப் பாடியிருக்கிறார். புகையிலை வெளிநாட்டிலிருந்து இந்தியாவுக்கு வந்த பொருள் என்றாலும் இவர் 
மும்மூர்த்திகளையும் புகையிலையையும் இணைத்து ஒரு கற்பனைக் கதையைச் சொல்லியிருக்கிறார்.

ஒருமுறை மும்மூர்த்திகளுக்குள் ஒரு வழக்கு உண்டாயிற்று. தேவ சபை கூடியது. தேவர்கள் வழக்கைக் கேட்டவுடன், “உங்கள் வழக்கைப் பிறகு கவனித்து 
பதில் சொல்கிறோம்” என்று சொல்லி சிவன், பிரம்மா, விஷ்ணுவிடம் முறையே 
வில்வம்-, புகையிலை, திருத்துழாய் (துளசி) கொடுத்து மறுநாள் அவற்றைக் 
கொண்டுவரச் சொன்னார்கள்.

சிவபெருமான் வாங்கிய வில்வத்தை கங்கையின் அலை கொண்டுபோயிற்று. 
அதே மாதிரி, விஷ்ணுவின் திருத்துழாய் பாற்கடலில் விழுந்துவிட்டது. பிரம்மா தன்னிடமுள்ள புகையிலையைக் கலைமகளிடம் கொடுத்திருந்ததால் அது பத்திரமாக இருந்தது.

மறுநாள், தேவ சபையில், சிவனும் விஷ்ணுவும்தங்கள் பத்திரங்கள் போயின என்றார்கள். பிரம்மா, கலைமகளிடமிருந்து புகையிலையை வாங்கி “இதோ, என் பத்திரம்; என்னுடையது போகையிலை” என்று கூறினார். பிரம்மா தேவர் வழக்கில் வென்றார். அன்று முதல் இதற்கு பிரம்ம பத்திரம் என்ற பெயர் வந்தடைந்தது. 
இந்தக் காவியத்தைப் படித்தால், சுருட்டை ஒரு தரமாவது இழுத்துபார்க்கலாமே 
என்று தோன்றும். சுருட்டு, புகையுடையது,  அனலேந்துவது, நுனியிற் சாம்பலுடையது. ஆகாயம் சுருட்டுப் புகை போல இருப்பதால் இறைவன் ஆகாயமும் திருமேனியாக ஆனாரென்பர்.

“கற்றுத் தெளிந்த கனப்ரபல வான்களுமுன்சுற்றுக்கு ளாவதென்ன சூழ்ச்சியோ” 
என்று சுருட்டை நினைத்துப் பாராட்டியிருக்கிறார்.

பொடியின் மகிமை இன்னொரு கண்ணியில்“வாடைப் பொடிகதம்ப மானவெல்லா முன்னுடைய சாடிப் பொடிக்குச் சரியுண்டோ”

ஒரு சிட்டிகை பொடிக்காக மனிதரை ஏங்கவைப்பதால், அதை“சொற்காட்டு நல்ல துடிகார ராரையும்போய்ப்பற்காட்ட விட்ட பழிகாரா” நிந்திக்கிறார்.

புகையிலை விளையும் இடங்களைப் பற்றிப் பாடியிருக்கும் இவர், பரத்தை வயலில் விளையும் புகையிலையே உசத்தி என்கிறார்.

தயவுசெய்து இதை Tobacco lobbyக்கு சொல்லிவிடாதீர்கள்.

ஆதாரம்..
சீனிச் சக்கரைப் புலவர் இயற்றிய “புகையிலை விடு தூது (1939) விலை: இரண்டணா. பதித்தவர் -உ.வே.சா.
..............
(டி.எஸ்.நாகராஜன் -Marketing/Advertising Research Consultant (ஓய்வு) அம்மா வைத்த பெயர் -குப்பை.)
சக்தி18
சக்தி18
தளபதி

தளபதி

பதிவுகள் : 1541
இணைந்தது : 24/12/2018
மதிப்பீடுகள் : 495

Back to top Go down

நான் திருநெல்வேலிக்காரன்.  Empty Re: நான் திருநெல்வேலிக்காரன்.

Post by T.N.Balasubramanian on Thu Jan 09, 2020 10:22 pm

சக்கரை என்று கூற திருநெல்வேலிகாரர்கள் நகைத்தது உண்டு .
அர்த்தமே வேறுதான்.
எனது மைத்துனர் கூறிய கதை.
வீட்டில் ஒரு சுப நிகழ்ச்சி.
வேகமாக ஒரு இளைஞர் வீட்டு உள்பக்கத்தில் இருந்து வெளியே
கோபத்துடன் வருகிறார்.
வாசலில் அவரை நிறுத்திய வேறொரு உறவுக்காரர்
ஏலே ....என்ன ஜோலி ...அவசரமா போறே !
இளைஞர் .....இந்த வாத்யார் (பூஜை செய்யும் அய்யர் --அவர் வடக்கத்தி சீமை )ரொம்ப மோசம். சபைலே எல்லாருக்கும்சக்கரையை காட்டு! சக்கரையை காட்டு! என்கிறார்.

புரிந்ததா? திருநெல்வேலி காரர்கள் புரிந்திருக்கும்.

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 26205
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9463

Back to top Go down

நான் திருநெல்வேலிக்காரன்.  Empty Re: நான் திருநெல்வேலிக்காரன்.

Post by கிருபானந்தன் பழனிவேலுச்சா on Thu Jan 09, 2020 11:00 pm

ஐயா திருப்பரங்குன்றத்தில் கோவில் நிறுத்தத்தில் உள்ள ஒரு வீட்டில் பாலசுப்ரமணியன் B.E. என பெயர்ப்பலகை பார்த்தேன்

எப்போது திருநெல்வேலி ஆளானீர்கள்
கிருபானந்தன் பழனிவேலுச்சா
கிருபானந்தன் பழனிவேலுச்சா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 593
இணைந்தது : 28/12/2011
மதிப்பீடுகள் : 109

http://kirubarp.blogspot.in

Back to top Go down

நான் திருநெல்வேலிக்காரன்.  Empty Re: நான் திருநெல்வேலிக்காரன்.

Post by T.N.Balasubramanian on Fri Jan 10, 2020 5:06 pm

திருநெல்வேலி ஆளாகவில்லை:
திருபரங்குன்றத்தில் கோவில் நிறுத்தத்தில் பெயர்ப்பலகை நீர் பார்த்தாலும்,
திருச்சிதான் எந்தன் சொந்த ஊர்.
திருமதி திருநெல்வேலி.
திரு  கிருபா அவர்களே!

ரமணியன்


Last edited by T.N.Balasubramanian on Fri Jan 10, 2020 5:13 pm; edited 2 times in total (Reason for editing : additional msg)


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 26205
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9463

Back to top Go down

நான் திருநெல்வேலிக்காரன்.  Empty Re: நான் திருநெல்வேலிக்காரன்.

Post by krishnaamma on Fri Jan 10, 2020 6:24 pm

@T.N.Balasubramanian wrote:திருநெல்வேலி ஆளாகவில்லை:
திருபரங்குன்றத்தில் கோவில் நிறுத்தத்தில் பெயர்ப்பலகை நீர் பார்த்தாலும்,
திருச்சிதான் எந்தன் சொந்த ஊர்.
திருமதி திருநெல்வேலி.
திரு  கிருபா அவர்களே!

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1311407

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி சூப்பருங்க நன்றி அன்பு மலர்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 61074
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12422

Back to top Go down

நான் திருநெல்வேலிக்காரன்.  Empty Re: நான் திருநெல்வேலிக்காரன்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை