உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» 'ஆக்ஸ்போர்டு' அகராதியில் இடம்பிடித்த, 'ஆதார்'
by ayyasamy ram Today at 7:11 am

» உள்நாட்டு விவகாரத்தில் தலையிடுவதா: ஐரோப்பிய யூனியனுக்கு இந்தியா சூடு
by ayyasamy ram Today at 7:09 am

» வேலன்:-உங்கள் ;பாஸ்வேர்டின் உறுதி தன்மை அறிந்துகொள்ள-Passwordium
by velang Today at 7:07 am

» ஆந்திராவில் மேல்சபை கலைக்கப்படும்:அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றம்
by ayyasamy ram Today at 7:07 am

» 'ஐ.என்.எஸ்., கவரட்டி' போர்க்கப்பல்:விரைவில் இந்திய கடற்படையில் சேர்ப்பு
by ayyasamy ram Today at 7:04 am

» மசூதியில் பெண்களை அனுமதிக்க சுப்ரீம் கோர்ட்டில் மனு
by ayyasamy ram Today at 7:03 am

» கவர்னர் சமாதானம்: மம்தா நிராகரிப்பு
by ayyasamy ram Today at 7:01 am

» புத்தகம் தேவை : இறையன்பு IAS
by nahoor Yesterday at 9:54 pm

» முத்துலட்சுமி ராகவன் நாவல்கள்
by nahoor Yesterday at 9:50 pm

» வெற்றி உங்களுக்கே - பக்தி கதை
by ayyasamy ram Yesterday at 9:15 pm

» வடிவேலு -கைப்புள்ள உருவான விதம்
by T.N.Balasubramanian Yesterday at 9:14 pm

» கீதை காட்டும் பாதை
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஆன்மிகம் - கேளுங்க சொல்கிறோம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:44 pm

» நாராயணா என்னும் நாமம், நாவால் சொன்னால் வரும் ஷேமம்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» குயிலே, குமரன் வரக் கூவுவாய்..! - எம்.எல் வசந்தகுமாரி பாடியது
by ayyasamy ram Yesterday at 8:10 pm

» பிறகேன் இத்தனை வாதம்?
by T.N.Balasubramanian Yesterday at 4:50 pm

» ஒரு வெட்டுக்கு இது இரண்டு கிடைக்கும் – குறுக்கெழுத்துப் போட்டி
by சக்தி18 Yesterday at 3:07 pm

» மூளை…முடுக்கு!- விடை சொல்லுங்கள்
by ayyasamy ram Yesterday at 2:51 pm

» சினிமா- பழைய பாடல்கள்- காணொளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» பிரபல கூடைப்பந்தாட்ட வீரர் கோப் பிரயண்ட் ஹெலிகாப்டர் விபத்தில் பலி
by ayyasamy ram Yesterday at 11:14 am

» வருடத்துக்கு 15 இடங்களுக்கு சுற்றுலா சென்றால் பயண செலவை அரசே அளிக்கும்: மத்திய அரசு அதிரடி திட்டம்
by ayyasamy ram Yesterday at 11:12 am

» மனித நேயம் - குறும்படம்
by ayyasamy ram Yesterday at 6:06 am

» பழுப்பு இல்லை, பளீச்!- வீட்டுக் குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 5:38 am

» சுவரேறி குதித்த பேய்..!
by ayyasamy ram Yesterday at 5:36 am

» மொய்- ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 5:35 am

» கிச்சன்ல என்ன சலசலப்பு..!
by ayyasamy ram Yesterday at 5:34 am

» பாத யாத்திரை போக புலட் பரூஃப் வேண்டுமாம்…!
by ayyasamy ram Yesterday at 5:33 am

» ஐடியா- ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 5:33 am

» சக்கரம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 5:31 am

» டைரக்டர் ஏன் டென்ஷனா இருக்கார்?
by ayyasamy ram Yesterday at 5:30 am

» தோல்வியில் சுகம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:29 am

» ஊழலுக்கு எதிராக குரல் கொடுக்க மிமிக்ரி கலைஞர்…!!
by ayyasamy ram Yesterday at 5:28 am

» மனிதன் விசித்திரமானவன்…!
by ayyasamy ram Yesterday at 5:26 am

» சைபர் கிரைம் (Cyber Crime) விழிப்புணர்வு
by ayyasamy ram Yesterday at 5:24 am

» பேப்பர்ல என் போட்டோ வந்தபிறகுதான் நான் பைக் ஓட்டுறதே வீட்டுக்குத் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 5:22 am

» 55 ஆயிரம் மில்லியன் ஜிபி!
by ayyasamy ram Yesterday at 5:20 am

» நட்பு- கவிதை
by ayyasamy ram Yesterday at 5:18 am

» கிருஷ்ணம்மாள் ஜெகநாதனுக்கு பத்ம பூஷன் விருது: யார் இவர்?
by ayyasamy ram Yesterday at 5:17 am

» ஆதரவற்றோர் உடல்களை அடக்கம் செய்வது ஏன்?; பத்மஸ்ரீ விருது பெறும் முகமது ஷெரிப்
by ayyasamy ram Yesterday at 5:14 am

» ஒரு அரசியல் கட்சிக்கு சொந்தமானதல்ல நாடு : யோகா பாபா ராம் தேவ்
by ayyasamy ram Yesterday at 5:11 am

» சிஏஏ.,வை எதிர்த்து கேரளாவில் 620 கி.மீ., மனித சங்கிலி
by ayyasamy ram Yesterday at 5:08 am

» மூவர்ண கொடியின் நிறத்தில் ஒளிர்ந்த புர்ஜ் கலிபா
by ayyasamy ram Yesterday at 5:04 am

» 'பாக்., குடிமகனாக இருந்தவருக்கு பத்மஸ்ரீ விருதா?' காங்., கண்டனம்
by ayyasamy ram Yesterday at 5:00 am

» படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 4:56 am

» சரியான எச்சரிக்கை
by சக்தி18 Sun Jan 26, 2020 11:05 pm

» பிப்ரவரி மாதம் வெளியாகவுள்ள தமிழ்ப் படங்கள்!
by சக்தி18 Sun Jan 26, 2020 11:02 pm

» திமுக முதன்மை செயலாளராக நேரு நியமனம்
by T.N.Balasubramanian Sun Jan 26, 2020 10:01 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Sun Jan 26, 2020 4:37 pm

» பீடாவின் விலை ரூ.5 ஆயிரம்!
by ayyasamy ram Sun Jan 26, 2020 2:35 pm

» தமிழில் வெற்றி பெற்ற 96 படம், ஜானு என்கிற பெயரில் தெலுங்கில் ரீமேக் ஆகியுள்ளது.
by ayyasamy ram Sun Jan 26, 2020 2:31 pm

Admins Online

முக்தி தரும் காசி

முக்தி தரும் காசி Empty முக்தி தரும் காசி

Post by ayyasamy ram on Tue Dec 10, 2019 8:55 pm


முக்தி தரும் காசி 201711301442364543_kasi-temple-worship_SECVPF
காசியில் இறப்பவர்களுக்கு சிவபெருமானே,
ராம நாமம் ஓதி முக்தியை வழங்குவதாக ஐதீகம்.
இது குறித்து விரிவாக பார்க்கலாம்.

முக்தி தரும் காசி


இந்தியாவில் பழமையான நகரங்களில் ஒன்று காசி நகரம்.
ராமாயணம், மகாபாரதம் காலங்களுக்கு முன்பிருந்தே காசி
நகரம், புகழ்பெற்று விளங்கியதாக கூறப்படுகிறது.

இதன் புராதனப் பெயர் ‘ஆனந்த வனம்’ என்பதாகும்.
சிவபெருமான் மகிழ்ச்சியுடன் தங்கியிருக்கும் இடம் என்பதால்
இப்பெயர் பெற்றது.

இங்கு இறப்பவர்களுக்கு சிவபெருமானே, ராம நாமம் ஓதி
முக்தியை வழங்குவதாக ஐதீகம். முக்தியை தரவல்ல தலம்
என்பதால் இந்த நகரத்தை ‘அவிமுக்தம்’ என்றும் அழைக்கிறார்கள்.

வாராண், அஸ்ஸி என்ற இரண்டு நதிகள், இந்தப் பகுதியில்
கங்கையுடன் கலப்பதால் இத்தலத்திற்கு ‘வாரணாசி’ என்ற
பெயரும் உண்டு. காசியின் சிறப்புகளைப் பற்றி இங்கே பார்ப்போம்.

அன்னபூரணி ஆட்சி :


காசி நகரத்தின் முக்கியமான சக்தி, அன்னபூரணி. காசி முழுவதும்
இந்த அன்னையின் அருளாட்சிதான். விஸ்வநாதர் ஆலயத்தில்
தனிச்சன்னிதியில் அன்னபூரணி அருள்பாலிக்கிறார்.

இந்த அம்பாளை சிறிய சாளரத்தின் வழியாக மட்டுமே தரிசனம்
செய்ய இயலும்.

இடது கரத்தில் தங்கக் கிண்ணமும், வலது கரத்தில் தங்கக் கரண்டியும்
ஏந்தி பிட்சாண்டவருக்கு அன்னம் அளிக்கும் கோலத்தில் இந்த
அன்னை காட்சி தருகிறார். அன்னையின் இருபுறமும் ஸ்ரீ தேவியும்,
பூதேவியும் வீற்றிருக்கின்றனர். இந்த அன்னபூரணியை தீபாவளியன்று
தரிசிப்பது வெகு விசேஷமானதாகக் கருதப்படுகிறது.

கங்கா ஆரத்தி :

காசிக்குச் செல்பவர்கள் தவற விடக்கூடாத ஒன்று
‘கங்கா ஆரத்தி.’ தசாஸ்வமேத காட்டில் தினசரி நடக்கும் நிகழ்வு இது.
மாலை 6.30 மணிக்கு தொடங்கி இரவு 7.30 மணிக்கு இந்த வழிபாடு
முடிவடையும்.

இளம் வயதுள்ள ஏழு ஆண்கள் கங்கை நதிக்குச் செய்யும் பூஜையே
‘கங்கா ஆரத்தி’ என்று அழைக்கப்படுகிறது. முதலில் புனிதமான
சங்கை ஊதி, மணியை அடித்து பூஜையை தொடங்குகின்றனர்.
அடுத்தடுத்து ஊதுபத்தி, சாம்பிராணி, மலர்கள் என ஒவ்வொன்றின்
மூலமும் ஆரத்தி காட்டப்படுகிறது.
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 52284
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12710

https://rammalar.wordpress.com/

Back to top Go down

முக்தி தரும் காசி Empty Re: முக்தி தரும் காசி

Post by ayyasamy ram on Tue Dec 10, 2019 8:57 pm

முக்தி தரும் காசி 201711301442364543_1_kasi._L_styvpf
-
விஸ்வநாதர் ஆலயம் :


காசி நகரத்தின் சிறப்புக்குரியது விஸ்வநாதர் ஆலயம்.
இந்தக் கோவில் ‘விஸ்வேசம்’ என்று குறிப்பிடப்படுகிறது.
ஜோதிர்லிங்கத் தலங்களில் முதன்மையானது இது.

தொடர் படையெடுப்பால் தொன்மையான ஆலயம் அழிக்கப்பட்டது.
தற்போது உள்ள ஆலயத்தை 1785-ல் மகாராணி அகல்யா பாய் என்பவர்
கட்டியதாக கூறப்படுகிறது.

ஆலயத்தின் உள்ளே நேபாள அரசரால் வழங்கப்பட்ட பெரிய மணி
ஒன்று உள்ளது. இந்த மணியின் நாதம் வெகு தொலைவிற்கு ஒலிக்கும்
என்பது இதன் சிறப்பம்சம்.

ஆலயத்தின் உள்ளே உள்ள கிணற்றில் பழமையான லிங்கம்
வைக்கப்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது.

அதிகாலை 3 மணி முதல் இரவு 11 மணி வரை திறந்திருக்கும்
இந்த ஆலயத்தில், பக்தர்களே தங்கள் கையால் லிங்கத்திற்கு
அபிஷேகம் செய்யலாம். தொட்டு வணங்கலாம்.
இங்கு இரவில் நடக்கும் சப்தரிஷி பூஜை முக்கியமானது.

புண்ணிய தீர்த்தம் :


காசி நகரத்தில் உள்ள மணிகர்ணிகா தீர்த்தம், மிகப் புனிதமானது.
இங்குள்ள மயானம் மிகப் புனிதமானதாகப் போற்றப்படுகிறது.
இங்கு தகனம் செய்வது மோட்சத்தைத் தரும் என்பது நம்பிக்கை.
இங்கு நீராடி மணிகர்ணிகேஸ்வரரை தரிசித்த பின்தான், காசியின்
பிற தெய்வங்களை வணங்கச் செல்ல வேண்டும் என்ற நியதியும்
உள்ளது.

காசியில் மரிப்போரின் காதுகளில் ஈசன் குனிந்து ராம நாமத்தை
ஓதும் போது, அவர் காதுகளில் அணிந்துள்ள குண்டலங்கள்
தரையில் படுவதால் இறைவனுக்கு இப்பெயர் (மணி – குண்டலம்;
கர்ணிகா -காது).

‘மணிகர்ணிகையில் குளித்து மணிகர்ணிகேஸ்வரரைத்
தியானிப்பவர்களுக்கு, மீண்டும் பிறவி இல்லை. இந்தத் தீர்த்தத்தில்
ஒருமுறை மூழ்கி எழுந்தால் அது அனைத்துப் புண்ணிய நதிகளிலும்
நீராடிய பலனைத் தரும். மணிகர்ணிகைக்குச் சமமான தீர்த்தம் எந்த
லோகத்திலும் இல்லை’ என்கிறது கந்த புராணம்.

காசியின் காவல்தெய்வம் :


காசி நகரத்தை தன் கட்டுப்பாட்டில் வைத்து, காவல் காத்து வருபவர்
அங்குள்ள கால பைரவர். இவர் கண்ணசைவின்றி காசியில் எதுவும்
நடக்காது என்பது ஐதீகம். இவரைத் தரிசிக்காமல் காசி யாத்திரை
பூர்த்தி ஆவதில்லை. உருண்டையான முகம், பெரிய கண்கள்,
அடர்ந்த மீசை என கம்பீரமாக காட்சி தருபவர் கால பைரவர்.

உள்ளே நுழைந்து பைரவரை வணங்கியதும், ஆலயத்தில் உள்ள
மயிற்பீலியால் நம் முதுகில் தட்டுவார்கள். அதனைத் தொடர்ந்து
தண்டம் என்ற நீண்ட கோல் கொண்டு, பக்தர்களின் தலையில்
ஆசீர்வதிப்பார்கள். கால பைரவரின் ஆலய வாசலில் தான்
‘காசிக்கயிறு’ என்னும் கறுப்புக் கயிறு விற்பனை செய்யப்படும்.

நன்றி- மாலை மலர்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 52284
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12710

https://rammalar.wordpress.com/

Back to top Go down

முக்தி தரும் காசி Empty Re: முக்தி தரும் காசி

Post by krishnaamma on Fri Dec 13, 2019 12:20 pm

:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 60320
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12233

Back to top Go down

முக்தி தரும் காசி Empty Re: முக்தி தரும் காசி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை