உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» 'ஆக்ஸ்போர்டு' அகராதியில் இடம்பிடித்த, 'ஆதார்'
by ayyasamy ram Today at 7:11 am

» உள்நாட்டு விவகாரத்தில் தலையிடுவதா: ஐரோப்பிய யூனியனுக்கு இந்தியா சூடு
by ayyasamy ram Today at 7:09 am

» வேலன்:-உங்கள் ;பாஸ்வேர்டின் உறுதி தன்மை அறிந்துகொள்ள-Passwordium
by velang Today at 7:07 am

» ஆந்திராவில் மேல்சபை கலைக்கப்படும்:அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றம்
by ayyasamy ram Today at 7:07 am

» 'ஐ.என்.எஸ்., கவரட்டி' போர்க்கப்பல்:விரைவில் இந்திய கடற்படையில் சேர்ப்பு
by ayyasamy ram Today at 7:04 am

» மசூதியில் பெண்களை அனுமதிக்க சுப்ரீம் கோர்ட்டில் மனு
by ayyasamy ram Today at 7:03 am

» கவர்னர் சமாதானம்: மம்தா நிராகரிப்பு
by ayyasamy ram Today at 7:01 am

» புத்தகம் தேவை : இறையன்பு IAS
by nahoor Yesterday at 9:54 pm

» முத்துலட்சுமி ராகவன் நாவல்கள்
by nahoor Yesterday at 9:50 pm

» வெற்றி உங்களுக்கே - பக்தி கதை
by ayyasamy ram Yesterday at 9:15 pm

» வடிவேலு -கைப்புள்ள உருவான விதம்
by T.N.Balasubramanian Yesterday at 9:14 pm

» கீதை காட்டும் பாதை
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஆன்மிகம் - கேளுங்க சொல்கிறோம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:44 pm

» நாராயணா என்னும் நாமம், நாவால் சொன்னால் வரும் ஷேமம்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» குயிலே, குமரன் வரக் கூவுவாய்..! - எம்.எல் வசந்தகுமாரி பாடியது
by ayyasamy ram Yesterday at 8:10 pm

» பிறகேன் இத்தனை வாதம்?
by T.N.Balasubramanian Yesterday at 4:50 pm

» ஒரு வெட்டுக்கு இது இரண்டு கிடைக்கும் – குறுக்கெழுத்துப் போட்டி
by சக்தி18 Yesterday at 3:07 pm

» மூளை…முடுக்கு!- விடை சொல்லுங்கள்
by ayyasamy ram Yesterday at 2:51 pm

» சினிமா- பழைய பாடல்கள்- காணொளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» பிரபல கூடைப்பந்தாட்ட வீரர் கோப் பிரயண்ட் ஹெலிகாப்டர் விபத்தில் பலி
by ayyasamy ram Yesterday at 11:14 am

» வருடத்துக்கு 15 இடங்களுக்கு சுற்றுலா சென்றால் பயண செலவை அரசே அளிக்கும்: மத்திய அரசு அதிரடி திட்டம்
by ayyasamy ram Yesterday at 11:12 am

» மனித நேயம் - குறும்படம்
by ayyasamy ram Yesterday at 6:06 am

» பழுப்பு இல்லை, பளீச்!- வீட்டுக் குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 5:38 am

» சுவரேறி குதித்த பேய்..!
by ayyasamy ram Yesterday at 5:36 am

» மொய்- ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 5:35 am

» கிச்சன்ல என்ன சலசலப்பு..!
by ayyasamy ram Yesterday at 5:34 am

» பாத யாத்திரை போக புலட் பரூஃப் வேண்டுமாம்…!
by ayyasamy ram Yesterday at 5:33 am

» ஐடியா- ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 5:33 am

» சக்கரம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 5:31 am

» டைரக்டர் ஏன் டென்ஷனா இருக்கார்?
by ayyasamy ram Yesterday at 5:30 am

» தோல்வியில் சுகம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:29 am

» ஊழலுக்கு எதிராக குரல் கொடுக்க மிமிக்ரி கலைஞர்…!!
by ayyasamy ram Yesterday at 5:28 am

» மனிதன் விசித்திரமானவன்…!
by ayyasamy ram Yesterday at 5:26 am

» சைபர் கிரைம் (Cyber Crime) விழிப்புணர்வு
by ayyasamy ram Yesterday at 5:24 am

» பேப்பர்ல என் போட்டோ வந்தபிறகுதான் நான் பைக் ஓட்டுறதே வீட்டுக்குத் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 5:22 am

» 55 ஆயிரம் மில்லியன் ஜிபி!
by ayyasamy ram Yesterday at 5:20 am

» நட்பு- கவிதை
by ayyasamy ram Yesterday at 5:18 am

» கிருஷ்ணம்மாள் ஜெகநாதனுக்கு பத்ம பூஷன் விருது: யார் இவர்?
by ayyasamy ram Yesterday at 5:17 am

» ஆதரவற்றோர் உடல்களை அடக்கம் செய்வது ஏன்?; பத்மஸ்ரீ விருது பெறும் முகமது ஷெரிப்
by ayyasamy ram Yesterday at 5:14 am

» ஒரு அரசியல் கட்சிக்கு சொந்தமானதல்ல நாடு : யோகா பாபா ராம் தேவ்
by ayyasamy ram Yesterday at 5:11 am

» சிஏஏ.,வை எதிர்த்து கேரளாவில் 620 கி.மீ., மனித சங்கிலி
by ayyasamy ram Yesterday at 5:08 am

» மூவர்ண கொடியின் நிறத்தில் ஒளிர்ந்த புர்ஜ் கலிபா
by ayyasamy ram Yesterday at 5:04 am

» 'பாக்., குடிமகனாக இருந்தவருக்கு பத்மஸ்ரீ விருதா?' காங்., கண்டனம்
by ayyasamy ram Yesterday at 5:00 am

» படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 4:56 am

» சரியான எச்சரிக்கை
by சக்தி18 Sun Jan 26, 2020 11:05 pm

» பிப்ரவரி மாதம் வெளியாகவுள்ள தமிழ்ப் படங்கள்!
by சக்தி18 Sun Jan 26, 2020 11:02 pm

» திமுக முதன்மை செயலாளராக நேரு நியமனம்
by T.N.Balasubramanian Sun Jan 26, 2020 10:01 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Sun Jan 26, 2020 4:37 pm

» பீடாவின் விலை ரூ.5 ஆயிரம்!
by ayyasamy ram Sun Jan 26, 2020 2:35 pm

» தமிழில் வெற்றி பெற்ற 96 படம், ஜானு என்கிற பெயரில் தெலுங்கில் ரீமேக் ஆகியுள்ளது.
by ayyasamy ram Sun Jan 26, 2020 2:31 pm

Admins Online

கொண்டைக்கடலை - எஸ்.மல்லிகா பத்ரிநாத்

 கொண்டைக்கடலை - எஸ்.மல்லிகா பத்ரிநாத் Empty கொண்டைக்கடலை - எஸ்.மல்லிகா பத்ரிநாத்

Post by ayyasamy ram on Tue Dec 10, 2019 8:27 pm

 கொண்டைக்கடலை - எஸ்.மல்லிகா பத்ரிநாத் 22
-

தென் தமிழ்நாட்டில் மட்டுமல்ல... வட இந்தியரும்
அதிகம் உபயோகிக்கும் முழுப் பயறுகளில்
முக்கியமானது கொண்டைக்கடலை.

இதில் வெள்ளையாக உள்ளது ஹிந்தியில் ‘சன்னா’ என்றும்,
ஆங்கிலத்தில் ‘பெங்கால் கிராம்’ (Bengal gram) என்றும்
அழைக்கப்படுகிறது.
வங்காளத்தில் அதிகம் விளைவதால் இந்தப் பெயராக
இருக்கலாம்.

அங்கு சென்றபோது அவர்கள் அதை பச்சையாகவும்
சுட்டும் சாப்பிடுவதைப் பார்க்க நேர்ந்தது. உலர வைப்பதற்கு
முன் பட்டாணியைப் போல பச்சை நிறத்தில் இருக்கிறது.

அதை வேர்க்கடலையை வறுப்பது போல வண்டிகளில் வறுத்து
விற்கிறார்கள். தமிழ்நாட்டில் நமக்கு பச்சையாக கிடைப்பது
இல்லை.
 கொண்டைக்கடலை - எஸ்.மல்லிகா பத்ரிநாத் 22a

ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 52284
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12710

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 கொண்டைக்கடலை - எஸ்.மல்லிகா பத்ரிநாத் Empty Re: கொண்டைக்கடலை - எஸ்.மல்லிகா பத்ரிநாத்

Post by ayyasamy ram on Tue Dec 10, 2019 8:28 pm

உலர வைக்கப்பட்டு கிடைப்பதிலேயே பல வகை உண்டு.
சிறியதாக பச்சை நிறத்திலும் பிரவுன் நிறத்திலும் கிடைக்கிறது.
இதை நாம் சுண்டல் செய்ய பயன்படுத்துகிறோம். பிரவுன்
நிறத்தில், கொஞ்சம் அளவில் பெரியதாகவும் கிடைக்கிறது.

அளவில் அதைவிட பெரியதாக வெண்மையாக இருப்பதை
‘காபூலி சன்னா’ என்று அழைக்கிறோம். பிரவுன் கொண்டைக்
கடலையை தோல் நீக்கி, உலர வைத்து கடலைப் பருப்பாக
தினசரி சமையலில் உபயோகிக்கிறோம்.

இதை மாவாக்கி, கடலை மாவாக பஜ்ஜி உள்பட பல
பண்டங்களில் உபயோகிக்கிறோம்.

வட இந்தியர் கடலை மாவை ‘பேஸன்’ (ஙிமீsணீஸீ) என்று
கூறுகின்றனர். இதில் அவர்கள் செய்யும் டோக்ளா, கண்ட்வி
போன்றவை இங்கும் எல்லோரும் விரும்பும் உணவாக
இருக்கின்றன.

கேரளாவில் புட்டோடு தரும் கடலைக்கறியை இந்த பிரவுன்
நிற கொண்டைக்கடலையில் சமைக்கிறார்கள். இந்தக்
கடலையை தோலுடன் உப்பு நீர் தெளித்து வறுத்து உப்புக்
கடலையாக, மாலைநேர சிறு தீனியாக சாப்பிடுகிறோம்.

கொண்டைக்கடலையின் தோலை நீக்கி அதை
பொட்டுக்கடலை, பொரிகடலை என்று சொல்கிறோம்.
அதைத்தான் சட்னி முதல் பலவற்றிலும் உபயோகிக்கிறோம்.

முறுக்கு, தட்டை முதல் பலவற்றிலும் இந்தப் பொட்டுக்கடலை
மாவை சேர்க்கும்போது எண்ணெய் குடிக்காமல் இருக்கும்.
பொட்டுக்கடலையில் ஆந்திராவில் செய்யும் ‘பருப்பு பொடி’
மதிய உணவோடு அதிகமாக விரும்பப்படும் உணவு.
இது தமிழ்நாட்டிலும் கூட மிகவும் பிரசித்தம். மிகவும் காரமாக,
சுவையாக இருப்பதால் இதை ‘கன் பவுடர்’ (Gun Powder) என்றும்
கூறுவர்.

இப்படி நமது தினசரி சமையலில் பலவாறாக உபயோகப்படுத்தும்
கொண்டைக்கடலை செடியின் விதைப்பகுதி, புரதச்சத்து
மிகுந்தது. சைவ உணவு உண்பவர்களுக்கு புரதத்தை நாம் பருப்பு,
பயறு வகைகள், தானியங்கள், பால் மற்றும் பால் பொருட்களில்
இருந்து பெறவேண்டும். மற்ற நாடுகளில் நமது நாட்டைப்போல
பலவிதமான பருப்புகள், பயறு வகைகள் இருக்காது.

பொதுவாக தானியங்களுடன் பருப்பு அல்லது பயறு வகைகள்
5:1 என்ற விகிதத்தில் சேரும்போது எல்லா முக்கிய அமினோ
அமிலங்களும் சேர்ந்த முழுமையான புரதமாகப் பெற இயலும்
என்பதை விஞ்ஞானம் கூறுகிறது.
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 52284
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12710

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 கொண்டைக்கடலை - எஸ்.மல்லிகா பத்ரிநாத் Empty Re: கொண்டைக்கடலை - எஸ்.மல்லிகா பத்ரிநாத்

Post by ayyasamy ram on Tue Dec 10, 2019 8:29 pm


இதையே நமது முன்னோர்கள் இட்லி, தோசை, பொங்கல்
என்று பல டிபன் வகைகளில் மட்டுமன்றி, மதிய உணவில்,
சாதத்துடன் கூட்டு, பொரியல், சாம்பார் என பலவற்றிலும்
ஒவ்வொருவிதமான பருப்பு வகைகளை சேர்ப்பதின் மூலம்
பெற இயலும் என்பதை மெய்ஞ்ஞானத்தின் மூலமே
உணர்த்தினார்கள்.

மற்ற பயறு வகைகளைவிட கொண்டைக்கடலையை அதிகம்
விரும்புகிறோம். கொண்டைக்கடலை காற்றில் உள்ள
ஹைட்ரஜனை உள்ளிழுப்பதால் செடியாக இருக்கும்போது
மண்ணின் சத்துகள் அதிகரிக்கும்.கொண்டைக்கடலையை
வேக வைக்கும் போது ஒரு சிலர் சீக்கிரம் வேக வேண்டும்
என்பதற்காக சமையல் சோடா சேர்ப்பது உண்டு.
இந்த சோடாவை சேர்த்தால் முக்கியமான தயாமின் என்னும்
வைட்டமினை அழித்துவிடும்.


சிலருக்கு முழுப்பயறுகள் உண்ணும்போது வாயுத்தொல்லை
ஏற்படும். ஊறவைத்த தண்ணீரை மாற்றி நல்ல தண்ணீர் ஊற்றி
வேக வைத்தால் வாயு பிரச்னை குறையும். மேல் தோல் வெடிக்கும்
வரை நன்கு மெத்தென்று வேக வைத்தால் வாயுத்தொல்லை
அதிகம் வராது. வேகும்போதே ஒரு சிறு துண்டு இஞ்சி சேர்க்கலாம்.

பிரவுன் கொண்டைக் கடலையில் வெள்ளை கொண்டைக்
கடலையைவிட சத்துகள் அதிகம். ஒருசில சத்துகள் வெள்ளைக்
கடலையில் இல்லை. பயறு வகைகளிலேயே கொண்டைக்
கடலையில்தான் நல்ல புரதம் கிடைக்கும். கிட்டத்தட்ட 100 கிராம்
அளவில் 17.1 கிராம் அளவு புரதம் இருக்கிறது. இதில் எல்லா முக்கிய
அமினோ அமிலங்களும் இருக்கின்றன.

முளைகட்டும்போது பல சத்துகள் அதிகமாகும். சுலபமாக ஜீரணமாகும்.
முக்கியமாக என்சைம்கள் அதிகரிக்கும். வைட்டமின்சியும் கிடைக்கும்.
புரதம் சுலபமாக ஜீரணமாகும். சீக்கிரமாக வேகும். முளை கட்டியதை
வறுக்கும்போது ‘மால்ட்’ ஆக மாறும்போது நல்ல மணம் கிடைக்கும்.

எல்லா சத்துகளும் நிறைந்த இதை முழுமையான உணவு என்று
கூறலாம். எடை குறையவும், இதய நோய் வராமலும் தடுக்கும் ஒமேகா 3
என்ற கொழுப்பு சரியான சதவிகிதத்தில் ஒமேகா 6 என்ற கொழுப்புடன்
கலந்து இருக்கும் ஓர் உணவுப்பொருள். தினமும் ஏதாவது ஒரு
விதத்தில் சேர்த்துக் கொண்டால் ஆரோக்கியமாக வாழலாம்.
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 52284
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12710

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 கொண்டைக்கடலை - எஸ்.மல்லிகா பத்ரிநாத் Empty Re: கொண்டைக்கடலை - எஸ்.மல்லிகா பத்ரிநாத்

Post by ayyasamy ram on Tue Dec 10, 2019 8:32 pm


*பொட்டுக்கடலையாக உபயோகிக்கும் போது அதிகமாகத்
தண்ணீர் குடிக்க வேண்டும்.

*கர்ப்பிணிகளுக்கு மிகவும் முக்கியத் தேவையான ஃபோலிக்
ஆசிட் என்னும் பி வைட்டமின் நிறைந்தது.

* மரபணுக் கோளாறுகள் வராமல் தடுக்கும் ‘கோலின்’
வைட்டமின் கொண்டைக்கடலையில் சிறந்த அளவில் உள்ளது.

*பிரவுன் நிற முழு கொண்டைக்கடலையில் எல்லா தாது
உப்புகளும் இருக்கின்றன.

*சிறுநீரகக் கோளாறு உள்ளவர்கள், சோடியம், பொட்டாசியம்
குறைக்க வேண்டிய நிலையில் உள்ளவர்கள் வெள்ளை
கொண்டைக்கடலையை உண்ணலாம். இதில் இவை இரண்டும்
அறவே இல்லை (சல்பரும் இல்லை).

* பிரவுன் கொண்டைக்கடலையில் எல்லா தாதுக்களும் இருக்கின்றன
(மக்னீசியம், சோடியம், பொட்டாசியம், காப்பர், மாங்கனீசு,
குரோமியம், சல்பர், துத்தநாகம்).

பிரவுன் கொண்டைக் கடலையில் வெள்ளை கொண்டைக்
கடலையை விட சத்துகள் அதிகம். பயறு வகைகளிலேயே
கொண்டைக் கடலையில் தான் நல்ல புரதம் கிடைக்கும்.

கடலைக் கறி


*கேரளாவில் புட்டுடன் பரிமாறும் இதை பக்குவமாக செய்யும்
போது மிக ருசியாக இருக்கும்.ஒரு கப் பிரவுன் நிற கொண்டைக்
கடலையை 8 மணி நேரம் ஊற வைத்து பிரஷர் குக்கரில் 15 நிமிடங்கள்
வெயிட் போட்டு வேக வைக்கவும்.

6 சிவப்பு மிளகாய், 1 டேபிள்ஸ்பூன் தனியா, 1/2 டீஸ்பூன் சீரகம்,
1 துண்டு இஞ்சி, 10 சிறிய வெங்காயம் (உரித்து பொடியாக நறுக்கியது),
1/2 கப் தேங்காய் எல்லாவற்றையும் எண்ணெய் விடாமல்
ஒவ்வொன்றாக கூறிய வரிசைப்படி சேர்த்து நன்கு சிவக்க வறுத்து
ஆறியபின் மஞ்சள் தூள் சேர்த்து மையாக அரைக்கவும்.

அரைத்த விழுதை வெந்த கடலையுடன் சேர்த்து தகுந்த உப்பு,
சிறிதளவு புளிக்கரைசல், 1 பச்சை மிளகாய் கீறிப் போட்டு நன்கு
கொதிக்கவிடவும்.ஒரு கடாயில் சிறிதே எண்ணெய் விட்டு கடுகு,
கறிவேப்பிலை தாளித்து பெருங்காயத்தூள் சேர்த்து 10 சிறிய
வெங்காயத்தைப் பொடியாக நறுக்கியதையும் வதக்கிக் கொட்டவும்.
இது புட்டுடன் மட்டுமல்ல. பூரி, சப்பாத்தி, ஆப்பம் என்று
எல்லாவற்றுக்கும் தொட்டுக் கொள்ள நன்றாக இருக்கும்.

(சத்துகள் பெறுவோம்!)
நன்றி- குங்குமம் டாக்டர்


ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 52284
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12710

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 கொண்டைக்கடலை - எஸ்.மல்லிகா பத்ரிநாத் Empty Re: கொண்டைக்கடலை - எஸ்.மல்லிகா பத்ரிநாத்

Post by krishnaamma on Tue Dec 10, 2019 8:42 pm

கொத்துக்கடலை செடி கொத்துக்கடலையுடன்

 கொண்டைக்கடலை - எஸ்.மல்லிகா பத்ரிநாத் F4Xr6avLQkuADJfw5BRC+images


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 60320
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12233

Back to top Go down

 கொண்டைக்கடலை - எஸ்.மல்லிகா பத்ரிநாத் Empty Re: கொண்டைக்கடலை - எஸ்.மல்லிகா பத்ரிநாத்

Post by krishnaamma on Tue Dec 10, 2019 8:44 pm

//அங்கு சென்றபோது அவர்கள் அதை பச்சையாகவும்
சுட்டும் சாப்பிடுவதைப் பார்க்க நேர்ந்தது. உலர வைப்பதற்கு
முன் பட்டாணியைப் போல பச்சை நிறத்தில் இருக்கிறது.

அதை வேர்க்கடலையை வறுப்பது போல வண்டிகளில் வறுத்து
விற்கிறார்கள். தமிழ்நாட்டில் நமக்கு பச்சையாக கிடைப்பது
இல்லை.//


இங்கு பெங்களூரிலும் செடியுடன் அல்லது உதிர்த்து பச்சை கொத்துக்கடலை கிடைக்கும்.

 கொண்டைக்கடலை - எஸ்.மல்லிகா பத்ரிநாத் VVERnv6Rxi9ToerTuN9x+8


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 60320
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12233

Back to top Go down

 கொண்டைக்கடலை - எஸ்.மல்லிகா பத்ரிநாத் Empty Re: கொண்டைக்கடலை - எஸ்.மல்லிகா பத்ரிநாத்

Post by krishnaamma on Tue Dec 10, 2019 8:44 pm

 கொண்டைக்கடலை - எஸ்.மல்லிகா பத்ரிநாத் Jx7siCBSvOQW1mn6sGd7+5

மிகவும் சுவையாக இருக்கும் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 60320
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12233

Back to top Go down

 கொண்டைக்கடலை - எஸ்.மல்லிகா பத்ரிநாத் Empty Re: கொண்டைக்கடலை - எஸ்.மல்லிகா பத்ரிநாத்

Post by krishnaamma on Tue Dec 10, 2019 8:44 pm

 கொண்டைக்கடலை - எஸ்.மல்லிகா பத்ரிநாத் Lwxi9wPVTtOmLE8YI33j+Chickpea_pods


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 60320
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12233

Back to top Go down

 கொண்டைக்கடலை - எஸ்.மல்லிகா பத்ரிநாத் Empty Re: கொண்டைக்கடலை - எஸ்.மல்லிகா பத்ரிநாத்

Post by krishnaamma on Tue Dec 10, 2019 8:46 pm

 கொண்டைக்கடலை - எஸ்.மல்லிகா பத்ரிநாத் N94SF4MvQVaflO1w8b8n+hqdefault

இதுபோல் நாம் உரித்து வருடத்திற்கான சேமித்து வைத்துக் கொள்ளலாம் புன்னகை ..பச்சையாக அப்படியேவும் சாப்பிடலாம் , சமையலில் உபயோகிக்கலாம் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 60320
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12233

Back to top Go down

 கொண்டைக்கடலை - எஸ்.மல்லிகா பத்ரிநாத் Empty Re: கொண்டைக்கடலை - எஸ்.மல்லிகா பத்ரிநாத்

Post by கண்ணன் on Wed Dec 11, 2019 6:07 pm

நன்றி ஐயா
கண்ணன்
கண்ணன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 260
இணைந்தது : 17/10/2014
மதிப்பீடுகள் : 125

Back to top Go down

 கொண்டைக்கடலை - எஸ்.மல்லிகா பத்ரிநாத் Empty Re: கொண்டைக்கடலை - எஸ்.மல்லிகா பத்ரிநாத்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை