உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» களத்தில் மட்டும் தான் வீரன்: கருணை காட்டிய காளை
by ayyasamy ram Today at 1:11 pm

» இதப்படிங்க முதல்ல...(சினிமா செய்திகள்- வாரமலர்)
by சக்தி18 Today at 12:58 pm

» அவரை பிரிந்ததால் போதைக்கு அடிமையானேன் - விஷ்ணு விஷால்
by சக்தி18 Today at 12:51 pm

» அச்சம் என்பது மடமையடா!
by சக்தி18 Today at 12:47 pm

» சினிமா- பழைய பாடல்கள்- காணொளிகள்
by சக்தி18 Today at 12:34 pm

» கணினி/இணைய உலகில் ஒரு சில துளி டிப்ஸ்
by சக்தி18 Today at 12:31 pm

» கணிதப் புதிர்- தொண்ணூறிலிருந்து எழுபத்தைந்து...
by சக்தி18 Today at 12:21 pm

» அருமையான வாழைப்பூ புளிக்குழம்பு
by ayyasamy ram Today at 10:38 am

» தூங்குவதும் தனி ‘டயட்’ தான்
by ayyasamy ram Today at 10:36 am

» வேலன்:-வீடியோவில் உள்ள சப் டைடிலை நீக்கிட-MKV Tool Nix
by velang Today at 7:45 am

» வேலன்:-இரண்டு தேதிகளுக்கு இடைப்பட்ட நாட்களை கணக்கிட-Calculator Days
by velang Today at 7:43 am

» இந்தியா-ஆஸ்திரேலியா மோதும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி: பெங்களூருவில் இன்று நடக்கிறது
by ayyasamy ram Today at 7:26 am

» செல்ஃபி மோகத்தால் இளம் பெண்ணுக்கு முகத்தில் 40 தையல்
by ayyasamy ram Today at 7:22 am

» யானை சிலை கோயில்
by ayyasamy ram Today at 7:13 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு
by ayyasamy ram Today at 6:59 am

» சீனாவை மிரட்டும் 'கொரனோ' வைரஸ்: கோவை விமான நிலையத்தில், 'அலர்ட்'
by ayyasamy ram Today at 6:54 am

» கார் விபத்தில் காயமடைந்த நடிகை ஷபானா ஆஸ்மி குணமடைய மோடி பிரார்த்தனை
by ayyasamy ram Today at 6:53 am

» வசூல்ராஜா பட பாணியில் தேர்வெழுத வந்த இளைஞர்
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» ஈகரையில் இந்து என்ற தலைப்பில் வந்த..........
by T.N.Balasubramanian Yesterday at 10:18 pm

» இரட்டை வேடத்தில் யோகிபாபு
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» நயன்தாராவுக்கு அண்ணன்
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» விண்ணைத்தொடும் கட்டடங்கள்
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» ஆஹா கோதுமை ரெசிப்பிகள்
by ஜாஹீதாபானு Yesterday at 5:16 pm

» கண்ணதாசன் பாடல்களில் பிடித்த சில வரிகள்
by ayyasamy ram Yesterday at 5:13 pm

» திரைப்பட பாடல் வரிகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:09 pm

» நல்லவை சூழ்ந்திருக்க அல்லாதவை அணுகுமா?
by ayyasamy ram Yesterday at 4:48 pm

» ஈசாப் கதைப் பாடல்கள் - ஜாதி நாய
by ayyasamy ram Yesterday at 4:24 pm

» நல்லவை முப்பது
by ayyasamy ram Yesterday at 4:21 pm

» தேன் தினை லட்டு
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» ஊக்கம் தரும் அறிவுரைகள்
by ayyasamy ram Yesterday at 1:04 pm

» பாலித்தீன் சூட்!
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» மகிழ வைப்பதே சிறந்த ஓவியம்!
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» உலகின் மிகச்சிறிய கின்னஸ் சாதனையாளர் காலமானார்
by ayyasamy ram Yesterday at 10:44 am

» பிரபாஸின் அடுத்த படம் பற்றிய அறிவிப்பு
by ayyasamy ram Yesterday at 10:39 am

» நல்ல நண்பர்கள் ஏன் தேவை?
by ayyasamy ram Yesterday at 7:23 am

» பாரதீய ஜனதா கட்சியின் அகில இந்திய தலைவராகிறார் ஜே.பி.நட்டா: 20-ந்தேதி தேர்தல்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» சிந்தனையாளர் முத்துக்கள்!
by ayyasamy ram Yesterday at 6:54 am

» கோழி முட்டையிலிருந்து இன்சுலின்!
by ayyasamy ram Yesterday at 6:52 am

» பாரத ரத்னா விருதை விட உயர்ந்தவர் மஹாத்மா: உச்சநீதிமன்றம் கருத்து
by ayyasamy ram Yesterday at 6:46 am

» இந்தியா அசத்தல் வெற்றி * தவான், கோஹ்லி, ராகுல் அபாரம்
by ayyasamy ram Yesterday at 6:44 am

» மோடிக்கு குடியுரிமை இருக்கா?: ஆர்டிஐ.,யில் கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:40 am

» அமெரிக்காவில் ஹிந்தி பேசுவோர் அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:38 am

» நாவல்கள் வேண்டும்
by saravanapriyaprakash Fri Jan 17, 2020 11:33 pm

» 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .
by sethu756 Fri Jan 17, 2020 8:49 pm

» கோகுல் ஷேசாத்ரி எழுதிய மதுர கவி தெளிவான மின்னூல்
by sethu756 Fri Jan 17, 2020 8:48 pm

» புத்தக தேவைக்கு...
by sethu756 Fri Jan 17, 2020 8:46 pm

» கோகுல் சேஷாத்ரி திருமாளிகை
by sethu756 Fri Jan 17, 2020 8:45 pm

» ரொம்பக் கோவக்கார மாடா இருக்குமோ...!!
by ayyasamy ram Fri Jan 17, 2020 8:19 pm

» அர்ஜூன்னுக்கு நடந்தது எல்லோருக்கும் நடக்கும்
by ayyasamy ram Fri Jan 17, 2020 8:04 pm

» வெள்ளிக்கிழமை பூஜை
by ayyasamy ram Fri Jan 17, 2020 8:01 pm

Admins Online

என்கவுன்டர்: நீதி கிடைத்ததாக திரைப்பிரபலங்கள் கருத்து !

என்கவுன்டர்: நீதி கிடைத்ததாக திரைப்பிரபலங்கள் கருத்து ! Empty என்கவுன்டர்: நீதி கிடைத்ததாக திரைப்பிரபலங்கள் கருத்து !

Post by krishnaamma on Fri Dec 06, 2019 11:07 pm

என்கவுன்டர்: நீதி கிடைத்ததாக திரைப்பிரபலங்கள் கருத்து!

என்கவுன்டர்: நீதி கிடைத்ததாக திரைப்பிரபலங்கள் கருத்து ! 9RYOgCgR9mIgcUzZJ8Gx+Tamil_News_large_2427974

ஐதாராபாத்: தெலுங்கானாவில் கால்நடை பெண் டாக்டர் ஒருவர் வாயில் வலுக்கட்டாயமாக மது ஊற்றப்பட்டு, பலாத்காரம் செய்து எரித்து கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுக்க அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதில் தொடர்புடைய நான்கு குற்றவாளிகளும் , இன்று(டிச.,6) விசாரணைக்காக அழைத்து சென்ற போது, போலீசாரை தாக்கிவிட்டு தப்பி செல்ல முயன்ற போது, என்கவுன்டர் செய்யப்பட்டனர். இதற்கு நாடு முழுவதும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன. தெலுங்கானா போலீசாரை அந்தமாநில மக்கள் தூக்கி வைத்து கொண்டாடி, மலர் தூவி ஆராவாரம் செய்கின்றனர்.

தொடரும்....

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 60320
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12233

Back to top Go down

என்கவுன்டர்: நீதி கிடைத்ததாக திரைப்பிரபலங்கள் கருத்து ! Empty Re: என்கவுன்டர்: நீதி கிடைத்ததாக திரைப்பிரபலங்கள் கருத்து !

Post by krishnaamma on Fri Dec 06, 2019 11:08 pm

என்கவுன்டர்: நீதி கிடைத்ததாக திரைப்பிரபலங்கள் கருத்து ! UBDIISWqCOtzsZmFi8gx+gallerye_124253178_2427974

இதுகுறித்து இந்திய திரைப்பிரபலங்கள் தெரிவித்த டுவிட்டர் கருத்துக்கள்...

நடிகர் ரிஷி கபூர் : சபாஷ். தெலுங்கானா போலீசிற்கு என் பாராட்டுகள்!

நடிகர் அனுபம் கெர் : பலாத்கார குற்றவாளிகள் நான்கு பேரையும் என்கவுன்டரால் சுட்டு கொன்ற தெலுங்கானா போலீசாருக்கு பாராட்டுகள். ஜெய்ஹோ.

தயாரிப்பாளர் பன்டி எஸ் வாலியா : பலாத்கார குற்றவாளிகளுக்கு இது தான் சிறந்த தண்டனை.

நடிகை ரகுல் ப்ரீத் சிங் : பலாத்காரம் செய்துவிட்டு குற்றவாளிகள் தப்பி ஓட முடியுமா... பெண் டாக்டருக்கு நீதி கிடைத்தது. தெலுங்கானா போலீசுக்கு நன்றி.

தொடரும்....

Last edited by krishnaamma on Fri Dec 06, 2019 11:10 pm; edited 1 time in total

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 60320
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12233

Back to top Go down

என்கவுன்டர்: நீதி கிடைத்ததாக திரைப்பிரபலங்கள் கருத்து ! Empty Re: என்கவுன்டர்: நீதி கிடைத்ததாக திரைப்பிரபலங்கள் கருத்து !

Post by krishnaamma on Fri Dec 06, 2019 11:09 pm

நடிகர் அல்லு அர்ஜூன் : நீதி கிடைத்தது

நடிகர் நாகார்ஜூனா : காலையில் எழுந்து செய்தி பார்த்தபோது நீதி கிடைத்தது.

நடிகை ஹன்சிகா : நீதி கிடைத்தது

நடிகர் ஜூனியர் என்டிஆர் : நீதி வழங்கப்பட்டது. திஷா இனி உன் ஆன்மா சாந்தி அடையட்டும்.

நடிகர் ஜெயம் ரவி : இப்போது தான் நான் நீதி என அழைக்கிறேன். திஷாவிற்கு நீதி கிடைத்தது.

இயக்குனர் அஜய் ஞானமுத்து : தெலுங்கானா போலீசிற்கு பெரிய பெரிய சல்யூட். நீதி கிடைத்தது.

நடிகை இந்துஜா : நீதி தன் கடமையை செய்தது. ஐதராபாத் அரசின் துணிச்சல் பிடித்திருக்கிறது. பெண் டாக்டர், இனி உன் ஆன்மா சாந்தி அடையும்.

காமெடி நடிகர் சதீஷ் : மற்றவர்களின் கருத்துக்களையோ, மனித உரிமை பேசுபவர்களையோ விடுங்கள்... அந்த பெண்ணின் பெற்றோருக்கு மனதின் ஓரத்தில் ஒரு சிறு நிம்மதி வருமே அது போதும்... என்ன தவறு செய்தாலும் பாத்ரூமில் வழுக்கி விழுவதுடன் முடிந்து விடும் என்று நினைப்பவர்கள் இதோடு திருந்தி விடுவது நல்லது.

நடிகர் விவேக் : நீதி கிடைத்தது. அந்த மருத்துவ சகோதரியின் ஆன்மா அமைதியாகட்டும். நோய்வாய்ப்பட்ட புத்தி உடைய வக்கிரகாரர்களுக்கு இது ஒரு பாடம். கடுமையான நடவடிக்கை எடுத்த போலீஸ் அதிகாரிகளுக்கு பாராட்டு.

நடிகை வரலட்சுமி : இறுதியாக நீதி வழங்கப்பட்டது. இது மட்டும் போதாதது. ஒவ்வொரு பாலியல் குற்றவாளிகளும் இது போன்று தண்டிக்கப்பட வேண்டும். அப்போது தான் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தடுக்கப்படும். பாலியல் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை என சட்டப்பூர்வமாக்க வேண்டும்.

நன்றி தினமலர் !

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 60320
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12233

Back to top Go down

என்கவுன்டர்: நீதி கிடைத்ததாக திரைப்பிரபலங்கள் கருத்து ! Empty Re: என்கவுன்டர்: நீதி கிடைத்ததாக திரைப்பிரபலங்கள் கருத்து !

Post by சக்தி18 on Fri Dec 06, 2019 11:38 pm

குற்றவாளிகளுக்கு தண்டனை கொடுப்பதும்,தாமதமின்றி தீர்ப்பு வழங்குவதும் முக்கியம். ஆனால்...............
இந்த என்கவுண்டரில் எனக்கு உடன்பாடில்லை.மன்னிக்கவும்.

ஆதாரம் எதுவும் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்படவில்லை. விசாரணை நடந்து கொண்டிருக்கும் போதே தண்டனை.

சமீப காலங்களில் நடந்த சம்பவங்களை நினைத்துப் பார்க்கும் போது................
யாரையாவது காப்பாற்ற போலீசார் முயற்சிக்கிறார்களா...........?
புகையிரத நிலையத்தில் கொல்லப்படுகிறாள்....சந்தேக நபர் சிறையில் தற்கொலை........ஆனால் இன்னமும் மர்மம் துலங்கவில்லை
.
செம்மரக்க கடத்தல் அப்பாவிகள் சுட்டுக் கொல்லப்படுகிறார்கள். யார் யாரோ பின்னணியில்.ஆனாலும் நீதி கிடைக்கவில்லை.
நீதித் துறைக்கு இது ஒரு சவால். ஜாமீனில் விடுதலை,ஒரு கோட்டில் தண்டனை இன்னொரு கோட்டில் விடுதலை.

சட்டத்தை கையில் எடுத்து தண்டனையை நிறைவேற்றுகிறது காவல்துறை.முழுதாக குற்றம் நிரூபிக்கப்பட்டவுடன் செய்திருந்தால்.............நீதித்துறையை நம்பி ஏமாறாமல் தண்டனை கொடுத்திருக்கலாம்.

குற்றவாளிகளா அல்லது அப்பாவிகளா? பின்னால் யார்?ஆதாரம் எங்கே?

சக்தி18
சக்தி18
தளபதி

தளபதி

பதிவுகள் : 1152
இணைந்தது : 24/12/2018
மதிப்பீடுகள் : 391

Back to top Go down

என்கவுன்டர்: நீதி கிடைத்ததாக திரைப்பிரபலங்கள் கருத்து ! Empty Re: என்கவுன்டர்: நீதி கிடைத்ததாக திரைப்பிரபலங்கள் கருத்து !

Post by ayyasamy ram on Sat Dec 07, 2019 10:44 am

தெலுங்கானா உயர்நீதிமன்றத்தில் நேற்று நடந்த விசாரணையில்,
தெலுங்கான அரசுக்கு நீதிபதி பிறப்பித்த உத்தரவு,

சுட்டுக்கொல்லப்பட்ட நான்கு குற்றவாளிகளின் உடல்களை பிரேத
பரிசோதனை நடத்தி அவற்றை வீடியோவாக பதிவு செய்து வீடியோ
ஆதாரத்தை மெகபூபா நகர் மாவட்ட முதன்மை மாஜிஸ்திரேட்டிடம்
ஒப்படைக்க வேண்டும்.

டிச.9-ம் தேதி வரை உடல்களை பதப்படுத்தி வைக்க வேண்டும்.
இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.

தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 52065
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12710

https://rammalar.wordpress.com/

Back to top Go down

என்கவுன்டர்: நீதி கிடைத்ததாக திரைப்பிரபலங்கள் கருத்து ! Empty Re: என்கவுன்டர்: நீதி கிடைத்ததாக திரைப்பிரபலங்கள் கருத்து !

Post by ayyasamy ram on Sat Dec 07, 2019 10:59 am

ஹரியானா மாநிலம் ஹிசார் பகுதியில்,
'ரா குரூப் பவுண்டேஷன்' என்ற நிறுவனத்தை நடத்தி வரும்
தொழிலதிபர் நரேஷ் செல்பார் என்பவர் அறிவிப்பு ஒன்றை
வெளியிட்டுள்ளார்.

அதில், என்கவுன்டரில் ஈடுபட்ட தெலுங்கானா போலீசார்
அனைவருக்கும், அவர்களது துணிச்சலை பாராட்டி, தலா,
ரூ.1 லட்சம் பரிசு வழங்கப்படும் எனத் தெரிவித்திருக்கிறார்.
அவரது அறிவிப்புக்கு பலரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 52065
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12710

https://rammalar.wordpress.com/

Back to top Go down

என்கவுன்டர்: நீதி கிடைத்ததாக திரைப்பிரபலங்கள் கருத்து ! Empty Re: என்கவுன்டர்: நீதி கிடைத்ததாக திரைப்பிரபலங்கள் கருத்து !

Post by சக்தி18 on Sat Dec 07, 2019 12:07 pm

இப்படியான கொடூர குற்றவாளிகளுக்கு தண்டனை கொடுப்பதில் எல்லாருக்கும் மகிழ்ச்சியே!
ஆனால் குற்றத்தை நிரூபித்தபின் தண்டனை கொடுத்திருக்கலாம்.
கடைசியாக மருத்துவரை சந்தித்த லாரி ட்ரைவர் என்னானார்?டால் கேட்டில் நடந்தது என்ன? CCTV பதிவுகள் என்னாயிற்று?

தங்களுக்கு பிடிக்காதவர்களை எல்லாம் இப்படி செய்யமாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்?
சக்தி18
சக்தி18
தளபதி

தளபதி

பதிவுகள் : 1152
இணைந்தது : 24/12/2018
மதிப்பீடுகள் : 391

Back to top Go down

என்கவுன்டர்: நீதி கிடைத்ததாக திரைப்பிரபலங்கள் கருத்து ! Empty Re: என்கவுன்டர்: நீதி கிடைத்ததாக திரைப்பிரபலங்கள் கருத்து !

Post by M.Jagadeesan on Sat Dec 07, 2019 1:18 pm

போலீஸ்காரர்களே நீதிபதியானால் , அப்புறம் நீதிமன்றங்கள் எதற்கு ?
நீதிமன்றங்களின் மீதான நம்பிக்கை குறைந்து வருவதால்தான் , மக்கள் Encounter ஐ வரவேற்கிறார்கள் .
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5292
இணைந்தது : 18/04/2015
மதிப்பீடுகள் : 2467

Back to top Go down

என்கவுன்டர்: நீதி கிடைத்ததாக திரைப்பிரபலங்கள் கருத்து ! Empty Re: என்கவுன்டர்: நீதி கிடைத்ததாக திரைப்பிரபலங்கள் கருத்து !

Post by krishnaamma on Sat Dec 07, 2019 9:08 pm

@M.Jagadeesan wrote:போலீஸ்காரர்களே நீதிபதியானால் , அப்புறம் நீதிமன்றங்கள் எதற்கு ?
நீதிமன்றங்களின் மீதான நம்பிக்கை குறைந்து வருவதால்தான் , மக்கள் Encounter ஐ வரவேற்கிறார்கள் .

கரெக்ட் ஐயா..... வருடக்கணக்காக குற்றவாளிகளுக்கு சோறு போட்டு காப்பாற்றி, என்னத்தை கண்டோம்? கோபம் கோபம் கோபம்
.
.
சிலமுறை இப்படி செய்வதால், குற்றம் செய்பவர்கள் சிலர், குற்றம் செய்வதற்கு முன் ஒருமுறை யோசிப்பார்கள் , ஒரு சில குற்றங்கள் குறைய வாய்ப்பு உள்ளது....

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 60320
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12233

Back to top Go down

என்கவுன்டர்: நீதி கிடைத்ததாக திரைப்பிரபலங்கள் கருத்து ! Empty Re: என்கவுன்டர்: நீதி கிடைத்ததாக திரைப்பிரபலங்கள் கருத்து !

Post by krishnaamma on Sat Dec 07, 2019 9:15 pm

@சக்தி18 wrote:குற்றவாளிகளுக்கு தண்டனை கொடுப்பதும்,தாமதமின்றி தீர்ப்பு வழங்குவதும் முக்கியம். ஆனால்...............
இந்த என்கவுண்டரில் எனக்கு உடன்பாடில்லை.மன்னிக்கவும்.

ஆதாரம் எதுவும் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்படவில்லை. விசாரணை நடந்து கொண்டிருக்கும் போதே தண்டனை.

சமீப காலங்களில் நடந்த சம்பவங்களை நினைத்துப் பார்க்கும் போது................
யாரையாவது காப்பாற்ற போலீசார் முயற்சிக்கிறார்களா...........?
புகையிரத நிலையத்தில் கொல்லப்படுகிறாள்....சந்தேக நபர் சிறையில் தற்கொலை........ஆனால் இன்னமும் மர்மம் துலங்கவில்லை
.
செம்மரக்க கடத்தல் அப்பாவிகள் சுட்டுக் கொல்லப்படுகிறார்கள். யார் யாரோ பின்னணியில்.ஆனாலும் நீதி கிடைக்கவில்லை.
நீதித்  துறைக்கு இது ஒரு சவால். ஜாமீனில் விடுதலை,ஒரு கோட்டில் தண்டனை இன்னொரு கோட்டில் விடுதலை.

சட்டத்தை கையில் எடுத்து தண்டனையை நிறைவேற்றுகிறது காவல்துறை.முழுதாக குற்றம் நிரூபிக்கப்பட்டவுடன் செய்திருந்தால்.............நீதித்துறையை நம்பி ஏமாறாமல் தண்டனை கொடுத்திருக்கலாம்.

குற்றவாளிகளா அல்லது அப்பாவிகளா? பின்னால் யார்?ஆதாரம் எங்கே?

எல்லாம் கேட்கலாம் சக்தி, ஆனால் நிர்பயா கேசில் என்ன ஆச்சு?...அந்த ராஸ்கல்கள் கருணை மனு கேட்கிறார்கள்.... பெண்ணை பெற்று பறிகொடுத்தவர்களுக்கு எப்படி இருக்கும்???? கோபம் ...இந்த மாதிரி ஆட்களை வெட்டிபுதைக்கவேண்டும்..... கோபம் கோபம் நீங்கள் சொல்வது போல சிலசமயங்களில் அப்பாவிகளும் மாட்டுவார்கள்.... (அப்போ அந்த பெண்கள்???? அவர்கள் அப்பாவிகள் இல்லையா?.... ) களைகள் எடுக்கும் பொழுது சில பயிர்களும் எடுக்கப்படும் தானே?...அப்படித்தான் நினைக்கவேண்டும் ...( ஒருவேளை இவர்கள் நிரபராதிகள் என்றால்...) ........புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 60320
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12233

Back to top Go down

என்கவுன்டர்: நீதி கிடைத்ததாக திரைப்பிரபலங்கள் கருத்து ! Empty Re: என்கவுன்டர்: நீதி கிடைத்ததாக திரைப்பிரபலங்கள் கருத்து !

Post by krishnaamma on Sat Dec 07, 2019 9:16 pm

@ayyasamy ram wrote: ஹரியானா மாநிலம் ஹிசார் பகுதியில்,
'ரா குரூப் பவுண்டேஷன்' என்ற நிறுவனத்தை நடத்தி வரும்
தொழிலதிபர் நரேஷ் செல்பார் என்பவர் அறிவிப்பு ஒன்றை
வெளியிட்டுள்ளார்.

அதில், என்கவுன்டரில் ஈடுபட்ட தெலுங்கானா போலீசார்
அனைவருக்கும், அவர்களது துணிச்சலை பாராட்டி, தலா,
ரூ.1 லட்சம் பரிசு வழங்கப்படும் எனத் தெரிவித்திருக்கிறார்.
அவரது அறிவிப்புக்கு பலரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

தினமலர்
மேற்கோள் செய்த பதிவு: 1309146

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி சூப்பருங்க

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 60320
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12233

Back to top Go down

என்கவுன்டர்: நீதி கிடைத்ததாக திரைப்பிரபலங்கள் கருத்து ! Empty Re: என்கவுன்டர்: நீதி கிடைத்ததாக திரைப்பிரபலங்கள் கருத்து !

Post by krishnaamma on Sat Dec 07, 2019 9:21 pm

@சக்தி18 wrote:இப்படியான கொடூர குற்றவாளிகளுக்கு தண்டனை கொடுப்பதில் எல்லாருக்கும் மகிழ்ச்சியே!
ஆனால் குற்றத்தை நிரூபித்தபின் தண்டனை கொடுத்திருக்கலாம்.
கடைசியாக மருத்துவரை சந்தித்த லாரி ட்ரைவர் என்னானார்?டால் கேட்டில் நடந்தது என்ன? CCTV பதிவுகள் என்னாயிற்று?

தங்களுக்கு பிடிக்காதவர்களை எல்லாம் இப்படி செய்யமாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்?
மேற்கோள் செய்த பதிவு: 1309160

நான் மேலே சொன்ன பதிலே தான் இதற்கும் சக்தி...........குற்றம் நிரூபிப்பது என்பது எத்தனை கஷ்டம் என்பது உங்களுக்குத் தெரிந்தது தான், அப்படியும் நிர்பயா கேசில் அல்லது எந்த கேசில் தண்டனை நிறைவேறி உள்ளது இதுவரை???? நாம் தான் அவர்களை ( குற்றவாளிகளை) மறந்து போகவேண்டும் தவிர அவர்களுக்கு தண்டனை கிடையாது...நல்லா ஜெயிலில் உண்டு உறங்கிக்கொண்டிருப்பார்கள் படுபாவிகள்............இப்படி சிலரை போட்டுத்தள்ளினால்தான் பொதுமக்களுக்கு பயமும் வரும், நம்மை காக்க காவல் துறை இருக்கு என்கிற நம்பிக்கையும் வரும்....

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 60320
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12233

Back to top Go down

என்கவுன்டர்: நீதி கிடைத்ததாக திரைப்பிரபலங்கள் கருத்து ! Empty Re: என்கவுன்டர்: நீதி கிடைத்ததாக திரைப்பிரபலங்கள் கருத்து !

Post by T.N.Balasubramanian on Sat Dec 07, 2019 9:49 pm

முன்பு,சிறு வயதில் பார்த்த ஆங்கில படத்தின் ( witness for prosecution என்று நினைக்கிறேன்) முடிவு நினைவுக்கு வருகிறது. துரோகம் செய்யும் கணவனை
சட்ட ரீதியாக குற்றவாளியாக ஆக்கி கடைசி நேரத்தில் கணவன் கொலை ஆகிறான்.
he was punished என்று நிருபர் கூற
no he was executed என்று மனைவி கூறுவார்.
அத்துடன் படம் முடிவு பெறும்,
அதே போல் இங்கும் they were executed .ஆனால் .......................................
இந்த ஆனாலுக்கு பின்னால் மறைக்கப்பட்ட உண்மைகள் பல இருக்குமோ?.............
(கிடைத்தால் அந்த witness for prosecution படத்தை மீண்டும் ஒரு முறை பார்க்கவேண்டும்)

ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25866
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9345

Back to top Go down

என்கவுன்டர்: நீதி கிடைத்ததாக திரைப்பிரபலங்கள் கருத்து ! Empty Re: என்கவுன்டர்: நீதி கிடைத்ததாக திரைப்பிரபலங்கள் கருத்து !

Post by சக்தி18 on Sun Dec 08, 2019 12:03 pm

நிர்பயா வழக்கு என்னாயிற்று?
அங்கும், எல்லா இடங்களிலும் குற்றம் நிரூபிக்கப்பட்டு விட்டது.பின்னர் தான் சில காலம் ஜெயில்,மேன்முறையீடு,கருணை மனு ….இப்படி எல்லாம்.குற்றம் நிரூபிக்கப்பட்டவுடன் தண்டனை வழங்கலாம்.மேலே தொடர்ந்து காலம் கடத்தக் கூடாது.
 
//களைகள் எடுக்கும் பொழுது சில பயிர்களும் எடுக்கப்படும் தானே?//
களைகளை எடுக்கும் போது வேண்டுமென்றே பயிர்களை அழிப்பதில்லை.அவசரஅவசரமாக விசாரணை முடிவடையாமல் தண்டனை என்ற பெயரில் கொலை செய்வது சந்தேகங்களை ஏற்படுத்துகிறது.

குற்றவாளிகளாக காணப்பட்டதும் பொலீசார் என்கவுண்டர் செய்திருக்கலாம்.எந்த விசாரணையும் முடிவடையாமல் ஆதாரம் எதுவும் இல்லாமல் குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஏற்றுக் கொண்டார்கள் என சொல்லி கொல்ல வேண்டுமா?
போலீசாரே தங்களை தாக்கியதால் சுட்டோம் என்கிறார்கள் ,தண்டனை வழங்கவில்லை
இனி பொலீசார் அவர்கள் மீது புதிய/பழைய குற்றங்களை சுமத்தி தங்களை நியாயப்படுத்துவார்கள்.
நீதித் துறையின் அலட்சியம்,தாமதம் ,நம்பிக்கையின்மை எல்லாம் அவர்களுக்கு சாதமாகி விட்டது.
இது மிகப்பெரிய விளைவுகளை ஏற்படுத்தும். பொலீசாருக்கும்,அரசியல்வாதிகளுக்கும் பிடிக்காதவர்கள் பாதிக்கப்பட வாய்ப்புண்டு.

கொஞ்சம் பொறுங்கள். சூடு தணியட்டும்.வாழ்த்தியவர்கள் திரும்புவார்கள்.தண்டனை வழங்கும் உரிமையை பொலீசாரிடம் கொடுப்பது ஆபத்தானது.நீதித்துறை சிந்திக்க வேண்டும்.விரைவில் விசாரணை முடித்து உடன் தண்டனை வழங்கப்பட வேண்டும்.
சக்தி18
சக்தி18
தளபதி

தளபதி

பதிவுகள் : 1152
இணைந்தது : 24/12/2018
மதிப்பீடுகள் : 391

Back to top Go down

என்கவுன்டர்: நீதி கிடைத்ததாக திரைப்பிரபலங்கள் கருத்து ! Empty Re: என்கவுன்டர்: நீதி கிடைத்ததாக திரைப்பிரபலங்கள் கருத்து !

Post by சக்தி18 on Sun Dec 08, 2019 12:04 pm

நன்றி ஐயா.
//இங்கும் they were executed .ஆனால் .......................................
இந்த ஆனாலுக்கு பின்னால் மறைக்கப்பட்ட உண்மைகள் பல இருக்குமோ?............ //

ஆங்கிலப் பத்திரிகைகளின் தகவல்களை பார்க்கும் போது சந்தேகம் வருகிறது. பல சந்தேகங்களை வைக்கிறார்கள்.

Witness for the Prosecution by Agatha Christie
இரண்டு படங்கள் வந்தன.1957/1982. இரண்டும் ஒரே கதைதான்.அறியத்தந்தமைக்கு நன்றி.
நீங்கள் குறிப்பிட்டது முதலாவது படத்தின் முடிவு.
முதல் கதையின் முடிவு அகதா கிறிஸ்டிக்கு பிடிக்காததால் சிறிது மாற்றி எழுதி இரண்டாவது கதை வெளியிடப்பட்டது.
She killed him,
No she executed him (இரண்டாவது படத்தின் முடிவு)
சக்தி18
சக்தி18
தளபதி

தளபதி

பதிவுகள் : 1152
இணைந்தது : 24/12/2018
மதிப்பீடுகள் : 391

Back to top Go down

என்கவுன்டர்: நீதி கிடைத்ததாக திரைப்பிரபலங்கள் கருத்து ! Empty Re: என்கவுன்டர்: நீதி கிடைத்ததாக திரைப்பிரபலங்கள் கருத்து !

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!

ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.

உள் நுழை