உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» 'ஆக்ஸ்போர்டு' அகராதியில் இடம்பிடித்த, 'ஆதார்'
by ayyasamy ram Today at 7:11 am

» உள்நாட்டு விவகாரத்தில் தலையிடுவதா: ஐரோப்பிய யூனியனுக்கு இந்தியா சூடு
by ayyasamy ram Today at 7:09 am

» வேலன்:-உங்கள் ;பாஸ்வேர்டின் உறுதி தன்மை அறிந்துகொள்ள-Passwordium
by velang Today at 7:07 am

» ஆந்திராவில் மேல்சபை கலைக்கப்படும்:அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றம்
by ayyasamy ram Today at 7:07 am

» 'ஐ.என்.எஸ்., கவரட்டி' போர்க்கப்பல்:விரைவில் இந்திய கடற்படையில் சேர்ப்பு
by ayyasamy ram Today at 7:04 am

» மசூதியில் பெண்களை அனுமதிக்க சுப்ரீம் கோர்ட்டில் மனு
by ayyasamy ram Today at 7:03 am

» கவர்னர் சமாதானம்: மம்தா நிராகரிப்பு
by ayyasamy ram Today at 7:01 am

» புத்தகம் தேவை : இறையன்பு IAS
by nahoor Yesterday at 9:54 pm

» முத்துலட்சுமி ராகவன் நாவல்கள்
by nahoor Yesterday at 9:50 pm

» வெற்றி உங்களுக்கே - பக்தி கதை
by ayyasamy ram Yesterday at 9:15 pm

» வடிவேலு -கைப்புள்ள உருவான விதம்
by T.N.Balasubramanian Yesterday at 9:14 pm

» கீதை காட்டும் பாதை
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஆன்மிகம் - கேளுங்க சொல்கிறோம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:44 pm

» நாராயணா என்னும் நாமம், நாவால் சொன்னால் வரும் ஷேமம்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» குயிலே, குமரன் வரக் கூவுவாய்..! - எம்.எல் வசந்தகுமாரி பாடியது
by ayyasamy ram Yesterday at 8:10 pm

» பிறகேன் இத்தனை வாதம்?
by T.N.Balasubramanian Yesterday at 4:50 pm

» ஒரு வெட்டுக்கு இது இரண்டு கிடைக்கும் – குறுக்கெழுத்துப் போட்டி
by சக்தி18 Yesterday at 3:07 pm

» மூளை…முடுக்கு!- விடை சொல்லுங்கள்
by ayyasamy ram Yesterday at 2:51 pm

» சினிமா- பழைய பாடல்கள்- காணொளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» பிரபல கூடைப்பந்தாட்ட வீரர் கோப் பிரயண்ட் ஹெலிகாப்டர் விபத்தில் பலி
by ayyasamy ram Yesterday at 11:14 am

» வருடத்துக்கு 15 இடங்களுக்கு சுற்றுலா சென்றால் பயண செலவை அரசே அளிக்கும்: மத்திய அரசு அதிரடி திட்டம்
by ayyasamy ram Yesterday at 11:12 am

» மனித நேயம் - குறும்படம்
by ayyasamy ram Yesterday at 6:06 am

» பழுப்பு இல்லை, பளீச்!- வீட்டுக் குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 5:38 am

» சுவரேறி குதித்த பேய்..!
by ayyasamy ram Yesterday at 5:36 am

» மொய்- ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 5:35 am

» கிச்சன்ல என்ன சலசலப்பு..!
by ayyasamy ram Yesterday at 5:34 am

» பாத யாத்திரை போக புலட் பரூஃப் வேண்டுமாம்…!
by ayyasamy ram Yesterday at 5:33 am

» ஐடியா- ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 5:33 am

» சக்கரம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 5:31 am

» டைரக்டர் ஏன் டென்ஷனா இருக்கார்?
by ayyasamy ram Yesterday at 5:30 am

» தோல்வியில் சுகம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:29 am

» ஊழலுக்கு எதிராக குரல் கொடுக்க மிமிக்ரி கலைஞர்…!!
by ayyasamy ram Yesterday at 5:28 am

» மனிதன் விசித்திரமானவன்…!
by ayyasamy ram Yesterday at 5:26 am

» சைபர் கிரைம் (Cyber Crime) விழிப்புணர்வு
by ayyasamy ram Yesterday at 5:24 am

» பேப்பர்ல என் போட்டோ வந்தபிறகுதான் நான் பைக் ஓட்டுறதே வீட்டுக்குத் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 5:22 am

» 55 ஆயிரம் மில்லியன் ஜிபி!
by ayyasamy ram Yesterday at 5:20 am

» நட்பு- கவிதை
by ayyasamy ram Yesterday at 5:18 am

» கிருஷ்ணம்மாள் ஜெகநாதனுக்கு பத்ம பூஷன் விருது: யார் இவர்?
by ayyasamy ram Yesterday at 5:17 am

» ஆதரவற்றோர் உடல்களை அடக்கம் செய்வது ஏன்?; பத்மஸ்ரீ விருது பெறும் முகமது ஷெரிப்
by ayyasamy ram Yesterday at 5:14 am

» ஒரு அரசியல் கட்சிக்கு சொந்தமானதல்ல நாடு : யோகா பாபா ராம் தேவ்
by ayyasamy ram Yesterday at 5:11 am

» சிஏஏ.,வை எதிர்த்து கேரளாவில் 620 கி.மீ., மனித சங்கிலி
by ayyasamy ram Yesterday at 5:08 am

» மூவர்ண கொடியின் நிறத்தில் ஒளிர்ந்த புர்ஜ் கலிபா
by ayyasamy ram Yesterday at 5:04 am

» 'பாக்., குடிமகனாக இருந்தவருக்கு பத்மஸ்ரீ விருதா?' காங்., கண்டனம்
by ayyasamy ram Yesterday at 5:00 am

» படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 4:56 am

» சரியான எச்சரிக்கை
by சக்தி18 Sun Jan 26, 2020 11:05 pm

» பிப்ரவரி மாதம் வெளியாகவுள்ள தமிழ்ப் படங்கள்!
by சக்தி18 Sun Jan 26, 2020 11:02 pm

» திமுக முதன்மை செயலாளராக நேரு நியமனம்
by T.N.Balasubramanian Sun Jan 26, 2020 10:01 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Sun Jan 26, 2020 4:37 pm

» பீடாவின் விலை ரூ.5 ஆயிரம்!
by ayyasamy ram Sun Jan 26, 2020 2:35 pm

» தமிழில் வெற்றி பெற்ற 96 படம், ஜானு என்கிற பெயரில் தெலுங்கில் ரீமேக் ஆகியுள்ளது.
by ayyasamy ram Sun Jan 26, 2020 2:31 pm

Admins Online

நிஜத்திலும் ஓர் ‘அவ்வை சண்முகி’ பெண் வேடமிட்டு 6 மாதங்களாக வீட்டு வேலை செய்துவரும் நபரால் பரபரப்பு

நிஜத்திலும் ஓர் ‘அவ்வை சண்முகி’ பெண் வேடமிட்டு 6 மாதங்களாக வீட்டு வேலை செய்துவரும் நபரால் பரபரப்பு Empty நிஜத்திலும் ஓர் ‘அவ்வை சண்முகி’ பெண் வேடமிட்டு 6 மாதங்களாக வீட்டு வேலை செய்துவரும் நபரால் பரபரப்பு

Post by ayyasamy ram on Fri Dec 06, 2019 3:51 am

நிஜத்திலும் ஓர் ‘அவ்வை சண்முகி’ பெண் வேடமிட்டு 6 மாதங்களாக வீட்டு வேலை செய்துவரும் நபரால் பரபரப்பு 201912060216220762_Dress-up-the-girl-For-6-months-The-person-doing-housework_SECVPF
-
மதுரை,

அவ்வை சண்முகி படத்தில் நடிகர் கமல்ஹாசன் பெண் வேடமிட்டு
நடித்திருப்பார்.

பிரிந்து சென்ற மனைவியின் வீட்டில் வேலைக்கார பெண்ணாக இருந்து,
தனது மகளை கவனித்துக் கொள்வது போன்று அவரது கதாபாத்திரம்
அமைந்து இருக்கும்.

அதே போன்று மதுரையிலும் ஒருவர் பெண் வேடமிட்டு சில மாதங்களாக
வீட்டு வேலை செய்து வந்திருப்பது தற்போது தெரியவந்திருக்கிறது.

அவரது சொந்த ஊர் சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஆகும்.
வயது சுமார் 40 இருக்கும். ஊரில் அவரது உடை லுங்கி, சட்டை. தினமும்
ஊரில் இருந்து பஸ்சில் அவர் மதுரைக்கு வந்து, காமராஜர் சாலை
தெப்பக்குளம் பகுதியில் மறைவான ஓர் இடத்துக்கு செல்கிறார்.

அங்கு லுங்கி, சட்டையை களைந்துவிட்டு, சேலை, ஜாக்கெட் அணிந்து,
தலையில் விக் வைத்து பெண் வேடத்தில் வெளியே வருகிறார்.

கமல்ஹாசனின் அவ்வை சண்முகி கதாபாத்திரத்தை ஞாபகப்படுத்தும்
அவர், ஒன்றிரண்டு அல்ல 3 வீடுகளுக்கு சென்று பாத்திரங்கள் தேய்ப்பது,
சுத்தப்படுத்துவது என்று வேலைகளை முடித்துவிட்டு, மாலையில் மீண்டும்
அதே இடத்துக்கு வந்து, தலையில் இருந்து ‘விக்கை’ கழற்றிவிட்டு
மீண்டும் லுங்கி, சட்டையை அணிந்துகொண்டு, தனது ஊருக்கு
புறப்படுகிறார்.

அவர் ஆணாக சென்று உடை மாற்றிவிட்டு, பெண்ணாக உருமாறி
வருவதை அந்த பகுதியை சேர்ந்த சிலர் கண்டுபிடித்துவிட்டனர்.
எனவே அவரை மடக்கி பிடித்து விசாரித்துள்ளனர்.

அப்போது அவரது உண்மையான பெயர் ராஜா என்பது தெரியவந்தது.
மேலும் தான் வேலை செய்யும் இடங்களில் தனது பெயரை ராஜாத்தி
என கூறி இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர்
கூறியதாவது:-

மானாமதுரையில், எனக்கு எந்த வேலையும் கிடைக்கவில்லை.
இதனால் வயதான பெற்றோரை காப்பாற்ற முடியாமல் வேதனைபட்டேன்.
எனவே பெண்ணாக மாறினால் வேலை கிடைக்கும் என எண்ணினேன்.

பெண் வேடமிட்டு சொந்த ஊரில் வேலை செய்தால் கேலி, கிண்டலுக்கு
ஆளாகலாம் என நினைத்து, கடந்த 6 மாதத்துக்கு முன்பு மதுரைக்கு
வந்து பெண் வேடமிட்டு வேலைதேடினேன்.

என்னை பெண் என்று நினைத்து 3 வீட்டில் வேலைக்கு சேர்த்தனர்.
அங்கு வீட்டு வேலைகளை செய்து விட்டு மாலையில் மீண்டும் ஊருக்கு
சென்று விடுவேன். இதன் மூலம் கிடைக்கும் சம்பளத்தில் நான் எனது
பெற்றோரை காப்பாற்றி வருகிறேன்.

நான் திருமணம் செய்து கொள்ளவில்லை. ஒரு சிலருக்கு நான் பெண்ணாக
மாறி ஏமாற்றுவது போல் தோன்றலாம். ஆனால் வயதான பெற்றோரை
காப்பாற்ற எனக்கு இதை விட்டால் வேறு வழி தெரியவில்லை.

நான் வேலை பார்க்கும் இடங்களில் இதுநாள் வரை என் நடவடிக்கையில்
சந்தேகப்படவில்லை. மேலும் எனது பேச்சு, நடவடிக்கைகள் பெண்கள்
சாயலிலேயே இருக்கும்படி பார்த்துக் கொள்வேன்.

நான் வேலை பார்த்து வந்த வீட்டினருக்கு எந்த துரோகமும் செய்யவில்லை.
ஒருநாள் இந்த மோசடி எப்படியும் எனக்கு வேலை தரும் வீட்டினருக்கு
தெரிந்துவிடும் என்பது எனக்கு தெரியும்.

அப்படி தெரிந்துவிட்டால், என் நிலையை அறிந்து அவர்கள் என்னை
மீண்டும் வேலைக்கு சேர்த்துக் கொள்வார்கள் என நம்புகிறேன்.

இவ்வாறு ராஜா உருக்கமுடன் கூறியுள்ளார்.

இதற்கிடையே ராஜா உடை மாற்றிவிட்டு, பெண்ணாக வலம் வரும்
காட்சிகள் ஊடகங்களில் நேற்று வெளியாகின.

எனவே இந்த விவகாரம் போலீசாரின் கவனத்துக்கும் சென்றுள்ளது.
மதுரையிலும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

தினத்தந்தி
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 52284
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12710

https://rammalar.wordpress.com/

Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை