உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» 'ஆக்ஸ்போர்டு' அகராதியில் இடம்பிடித்த, 'ஆதார்'
by ayyasamy ram Today at 7:11 am

» உள்நாட்டு விவகாரத்தில் தலையிடுவதா: ஐரோப்பிய யூனியனுக்கு இந்தியா சூடு
by ayyasamy ram Today at 7:09 am

» வேலன்:-உங்கள் ;பாஸ்வேர்டின் உறுதி தன்மை அறிந்துகொள்ள-Passwordium
by velang Today at 7:07 am

» ஆந்திராவில் மேல்சபை கலைக்கப்படும்:அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றம்
by ayyasamy ram Today at 7:07 am

» 'ஐ.என்.எஸ்., கவரட்டி' போர்க்கப்பல்:விரைவில் இந்திய கடற்படையில் சேர்ப்பு
by ayyasamy ram Today at 7:04 am

» மசூதியில் பெண்களை அனுமதிக்க சுப்ரீம் கோர்ட்டில் மனு
by ayyasamy ram Today at 7:03 am

» கவர்னர் சமாதானம்: மம்தா நிராகரிப்பு
by ayyasamy ram Today at 7:01 am

» புத்தகம் தேவை : இறையன்பு IAS
by nahoor Yesterday at 9:54 pm

» முத்துலட்சுமி ராகவன் நாவல்கள்
by nahoor Yesterday at 9:50 pm

» வெற்றி உங்களுக்கே - பக்தி கதை
by ayyasamy ram Yesterday at 9:15 pm

» வடிவேலு -கைப்புள்ள உருவான விதம்
by T.N.Balasubramanian Yesterday at 9:14 pm

» கீதை காட்டும் பாதை
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஆன்மிகம் - கேளுங்க சொல்கிறோம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:44 pm

» நாராயணா என்னும் நாமம், நாவால் சொன்னால் வரும் ஷேமம்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» குயிலே, குமரன் வரக் கூவுவாய்..! - எம்.எல் வசந்தகுமாரி பாடியது
by ayyasamy ram Yesterday at 8:10 pm

» பிறகேன் இத்தனை வாதம்?
by T.N.Balasubramanian Yesterday at 4:50 pm

» ஒரு வெட்டுக்கு இது இரண்டு கிடைக்கும் – குறுக்கெழுத்துப் போட்டி
by சக்தி18 Yesterday at 3:07 pm

» மூளை…முடுக்கு!- விடை சொல்லுங்கள்
by ayyasamy ram Yesterday at 2:51 pm

» சினிமா- பழைய பாடல்கள்- காணொளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» பிரபல கூடைப்பந்தாட்ட வீரர் கோப் பிரயண்ட் ஹெலிகாப்டர் விபத்தில் பலி
by ayyasamy ram Yesterday at 11:14 am

» வருடத்துக்கு 15 இடங்களுக்கு சுற்றுலா சென்றால் பயண செலவை அரசே அளிக்கும்: மத்திய அரசு அதிரடி திட்டம்
by ayyasamy ram Yesterday at 11:12 am

» மனித நேயம் - குறும்படம்
by ayyasamy ram Yesterday at 6:06 am

» பழுப்பு இல்லை, பளீச்!- வீட்டுக் குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 5:38 am

» சுவரேறி குதித்த பேய்..!
by ayyasamy ram Yesterday at 5:36 am

» மொய்- ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 5:35 am

» கிச்சன்ல என்ன சலசலப்பு..!
by ayyasamy ram Yesterday at 5:34 am

» பாத யாத்திரை போக புலட் பரூஃப் வேண்டுமாம்…!
by ayyasamy ram Yesterday at 5:33 am

» ஐடியா- ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 5:33 am

» சக்கரம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 5:31 am

» டைரக்டர் ஏன் டென்ஷனா இருக்கார்?
by ayyasamy ram Yesterday at 5:30 am

» தோல்வியில் சுகம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:29 am

» ஊழலுக்கு எதிராக குரல் கொடுக்க மிமிக்ரி கலைஞர்…!!
by ayyasamy ram Yesterday at 5:28 am

» மனிதன் விசித்திரமானவன்…!
by ayyasamy ram Yesterday at 5:26 am

» சைபர் கிரைம் (Cyber Crime) விழிப்புணர்வு
by ayyasamy ram Yesterday at 5:24 am

» பேப்பர்ல என் போட்டோ வந்தபிறகுதான் நான் பைக் ஓட்டுறதே வீட்டுக்குத் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 5:22 am

» 55 ஆயிரம் மில்லியன் ஜிபி!
by ayyasamy ram Yesterday at 5:20 am

» நட்பு- கவிதை
by ayyasamy ram Yesterday at 5:18 am

» கிருஷ்ணம்மாள் ஜெகநாதனுக்கு பத்ம பூஷன் விருது: யார் இவர்?
by ayyasamy ram Yesterday at 5:17 am

» ஆதரவற்றோர் உடல்களை அடக்கம் செய்வது ஏன்?; பத்மஸ்ரீ விருது பெறும் முகமது ஷெரிப்
by ayyasamy ram Yesterday at 5:14 am

» ஒரு அரசியல் கட்சிக்கு சொந்தமானதல்ல நாடு : யோகா பாபா ராம் தேவ்
by ayyasamy ram Yesterday at 5:11 am

» சிஏஏ.,வை எதிர்த்து கேரளாவில் 620 கி.மீ., மனித சங்கிலி
by ayyasamy ram Yesterday at 5:08 am

» மூவர்ண கொடியின் நிறத்தில் ஒளிர்ந்த புர்ஜ் கலிபா
by ayyasamy ram Yesterday at 5:04 am

» 'பாக்., குடிமகனாக இருந்தவருக்கு பத்மஸ்ரீ விருதா?' காங்., கண்டனம்
by ayyasamy ram Yesterday at 5:00 am

» படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 4:56 am

» சரியான எச்சரிக்கை
by சக்தி18 Sun Jan 26, 2020 11:05 pm

» பிப்ரவரி மாதம் வெளியாகவுள்ள தமிழ்ப் படங்கள்!
by சக்தி18 Sun Jan 26, 2020 11:02 pm

» திமுக முதன்மை செயலாளராக நேரு நியமனம்
by T.N.Balasubramanian Sun Jan 26, 2020 10:01 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Sun Jan 26, 2020 4:37 pm

» பீடாவின் விலை ரூ.5 ஆயிரம்!
by ayyasamy ram Sun Jan 26, 2020 2:35 pm

» தமிழில் வெற்றி பெற்ற 96 படம், ஜானு என்கிற பெயரில் தெலுங்கில் ரீமேக் ஆகியுள்ளது.
by ayyasamy ram Sun Jan 26, 2020 2:31 pm

Admins Online

மகிழ்ச்சியை நிரந்தரமாக்கும் நல்ல எண்ணங்கள்

மகிழ்ச்சியை நிரந்தரமாக்கும் நல்ல எண்ணங்கள் Empty மகிழ்ச்சியை நிரந்தரமாக்கும் நல்ல எண்ணங்கள்

Post by ayyasamy ram on Thu Dec 05, 2019 9:08 am

மகிழ்ச்சியை நிரந்தரமாக்கும் நல்ல எண்ணங்கள் QWCF4UKRSGbFskkXMKBr+d4049ffb-fad7-411b-918b-82146de67b1d
-
இந்த வாழ்க்கையில் ஒரே ஒரு மகிழ்ச்சிதான் இருக்கிறது.
அது, நேசிப்பது, பிறரால் நேசிக்கப்படுவது’ என்கிறார்
பிரெஞ்ச் நாவலாசிரியை ஜார்ஜ் சேண்ட்.

நம்மை எல்லோரும் விரும்பவேண்டுமென்றால் அதற்கு
ஒரே ஒரு வழிதான் உண்டு. அது, நாம் பிறரை விரும்புவது.
அதிலும், பிறருக்கு உதவும் மனப்பான்மை உள்ளவர்கள்தான்
அதிகம் நேசிக்கப்படுகிறார்கள்.

தான், தன்னலம் என்று வாழ்கிறவர்களிடம் சந்தோஷம்
நிரந்தரமாக தங்குவதில்லை. பிறரைப் பற்றிய யோசனை
கூட இல்லாத மனிதர்களிடம் மகிழ்ச்சி நீடித்திருப்பதில்லை.

அதைத் தக்கவைத்துக்கொள்வது ஒன்றும் பிரம்ம
சூத்திரமில்லை. கொஞ்சம் விரிவான பார்வை இருந்தாலே
போதும், சந்தோஷம் என்கிற அபூர்வ சக்தியை என்றென்றும்
நம்முடனேயே வைத்துக்கொள்ளலாம்.

மகிழ்ச்சியாக இருப்பதைவிட, சிறந்த உந்துசக்தி இல்லை
என்கிறார்கள் தன்னம்பிக்கைப் பேச்சாளர்கள். நாம்
மகிழ்ச்சியாக இருந்தாலே, நம்மைச் சுற்றியுள்ளவர்களும்
மகிழ்ச்சியாக இருப்பார்கள்.

ஆகையால், மகிழ்ச்சி தராத பழக்கவழக்கத்தையும்,
எண்ணங்களையும் மாற்றிக்கொண்டால் மகிழ்ச்சியை
நிரந்தரமாக்கி கொள்ளலாம்.

உள்ளுக்குள் மகிழ்ச்சி இல்லையென்றால், எவ்வளவு செயல்கள்
நடந்தாலும் உங்களுக்குத் திருப்தியாகவே இருக்காது.
ஒன்று நடந்து முடிவதற்கு முன்னாலேயே உங்களைப் பின்
வாங்கச் சொல்லும். அந்த நிலையைச் சமாளிக்க,
எப்பொழுதுமே திருப்தியாக இருக்கப் பழகிக்கொள்ளுங்கள்.

ஒரு செயல் இவ்வளவு நேரத்தில் முடிக்கப்பட வேண்டுமென்று
கால வரையறையை உருவாக்கிக்கொள்ளுங்கள். வேலை
முடியும்போது, தானாக ஒரு திருப்தி உங்கள் மனதில் குடி
கொள்ளும். நல்ல எண்ணங்களின் ஆதிக்கத்தால் ஒரு புது
உலகம் உங்களுக்குக் காட்சியளிக்கும்.

இதற்கு நீங்கள் நல்லெண்ணம் உடையவர்களோடு பழகுதல்,
பிடித்த பாடல்களை கேட்டல், புத்தகம் படித்தல் போன்றவற்றைச்
செய்யலாம்.

‘பழையன கழிதலும் புதியன புகுதலும்’ என்று நம் முன்னோர்
சொன்னதை நாம் நன்கு அறிவோம்.

பழைய நிகழ்வுகள் சில, நமக்கு மிகுந்த வலியை ஏற்படுத்தி
இருக்கும். எப்போதுமே அதை நினைத்துக்கொண்டிருந்தால்,
புதிய பாதைகள் உருவாகாது.

எதிர்காலம் பற்றி இப்படி நடக்குமோ அப்படி நடக்குமோ என்ற
பயமும் சிலருக்கு உண்டு. இவற்றைத் தவிர்க்க, நாளை எப்படி
இருக்க வேண்டும் என்பதை நேற்று நடந்ததில் இருந்து கற்றுக்
கொள்ளும்படி நமது நடப்பு நிகழ்வுகளை அமைத்துக்கொள்ள
வேண்டும்.

நம்முடைய வாழ்வை நாம்தான் அனுபவிக்கிறோம்.
அதற்கு பிறரோடு ஏன் நம்மை ஒப்புமைப்படுத்தி பார்க்க
வேண்டும். அப்படி நமது வாழ்வை பிறரோடு ஒப்பிடுவது,
நமக்குள் ஒரு சின்ன பொறாமையை, தாழ்வு மனப்பான்மையை
உருவாக்கும்.

அதற்குப் பதிலாக, உங்களை உங்களோடு ஒப்பிடுங்களேன்.
அப்புறம் பாருங்க, நீங்கள் பட்டாம்பூச்சியாய் பறப்பீர்கள்.
‘நேற்றைக்கு 3 கி.மீ. வாக்கிங் போனேன். இன்றைக்கு 4 கி.மீ.
போயிருக்கேன். சபாஷ்டா’ என்று நீங்களே உங்களை ஒப்பிட்டு,
பாராட்டி கொள்ளுங்கள்.

“எப்பவும் தீய செயல்கள் மீது கவனம் செலுத்திக்கொண்டிருக்க
கூடாது. எல்லா இடங்களிலும் குறை கண்டுபிடித்துக்கொண்டே
இருந்தால், அது சரியாக இருக்காது. அதனால், அதையெல்லாம்
கொஞ்சம் ஒதுக்கி வைத்து விட்டு மகிழ்ச்சி நிரந்தரமாகும்
வகையில் நல்ல எண்ணங்களை வளர்த்து கொண்டு அதன்படி
செயல்பட வேண்டும்.

பிறர் நம்மைப் பற்றி என்ன நினைப்பார்கள் என்பதில் எல்லாம்
கவனம் செலுத்த வேண்டாம். அது, நமது வளர்ச்சியைத் தடுக்கும்.
ஆகையால், அதையெல்லாம் விட்டுவிடுங்கள். வாழ்க்கையை
கடினமான முறையில் சிலர் எதிர்கொள்வார்கள். இது, மன
அழுத்தத்தை உருவாக்கும். இதற்கெல்லாம் காரணம் அவரவர்தான்.

எதுவாக இருப்பினும் எதிர்கொள்வோம் எனும் மனநிலையில்
தன்னம்பிக்கையோடு அணுகுவோம்.
-
---------------------------
மாலைமலர்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 52284
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12710

https://rammalar.wordpress.com/

Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை