உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» கழுதையின் மரணம்!
by krishnaamma Today at 7:21 pm

» கரியமாணிக்கப் பெருமாள்
by krishnaamma Today at 7:18 pm

» 'வருமான வரியை ரத்து செய்ய வேண்டும்'
by krishnaamma Today at 7:17 pm

» புதிய சட்ட திருத்த மசோதா: முடிவுக்கு வரும் ஆங்கிலோ இந்தியன் எம்.பி.க்கள் கோட்டா!
by ayyasamy ram Today at 7:00 pm

» கால்களால் விமானத்தை இயக்க உரிமம் பெற்ற முதல் பெண் விமானி ஜெசிகா..
by ayyasamy ram Today at 6:43 pm

» பிரபஞ்ச அழகியாக தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த சொசிபினி துன்சி தேர்வு
by ayyasamy ram Today at 6:39 pm

» காங்., சட்டமன்ற குழு தலைவர் பதவியை சித்தராமையா ராஜினாமா செய்தார்.
by ayyasamy ram Today at 6:30 pm

» 50 வார்த்தைக் கதைகள்
by ayyasamy ram Today at 6:17 pm

» யோகிபாபுக்கு குரல் கொடுத்த பூவையார்
by ayyasamy ram Today at 6:04 pm

» விளக்கொளி பெருமாள்
by ayyasamy ram Today at 5:57 pm

» திருவண்ணாமலை பற்றிய 30 தகவல்கள்
by ayyasamy ram Today at 5:55 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு
by ayyasamy ram Today at 5:51 pm

» குயின் வெப் சிரீஸுக்கு தடைக்கோரும் ஜெ.தீபா - கெளதம் மேனன் பதிலளிக்க உத்தரவு
by ayyasamy ram Today at 5:44 pm

» அழகுல சேலையை அடிச்சுக்க முடியாது: சொல்றது 'மயிலு' மகளுங்கோ..!
by ayyasamy ram Today at 5:41 pm

» சோனியா காந்தி பிறந்தநாள் - பிரதமர் மோடி வாழ்த்து
by ayyasamy ram Today at 5:34 pm

» பெருமை – ஒரு பக்க கதை
by ஜாஹீதாபானு Today at 3:40 pm

» பிரதமர் வீட்டு வசதி திட்டத்தில் கூடுதல் வீடுகள்
by ayyasamy ram Today at 1:15 pm

» பிறந்த குழந்தையை பேணிக்காக்கும் முறைகள்
by ayyasamy ram Today at 12:48 pm

» தற்கொலை எண்ணம் வராமல் தடுப்பது எப்படி?
by ayyasamy ram Today at 12:45 pm

» திருவண்ணாமலை சித்தர்களின் சரணாலயம்
by ayyasamy ram Today at 8:48 am

» கார்த்திகை தீபத்திருவிழாவையொட்டி திருவண்ணாமலையில் நாளை மகாதீபம்
by ayyasamy ram Today at 8:36 am

» MPN சேதுராமன், பொன்னுசாமி நாதஸ்வரத்தில் மேற்கத்திய இசையும், இனிய கர்நாடக இசையும்
by ayyasamy ram Today at 8:25 am

» பாவங்களைப் போக்கும் பரணி தீபம்!!!
by ayyasamy ram Today at 8:18 am

» 5 ஆண்டுகளில் 27 மாணவர்கள் ஐ.ஐ.டி.,க்களில் தற்கொலை
by ayyasamy ram Today at 5:06 am

» பெண்கள், குழந்தைகளுக்கு சென்னை, கோவை நகரங்கள் பாதுகாப்பானவை - ஆய்வில் தகவல்
by ayyasamy ram Today at 4:59 am

» தமிழகம் முழுவதும்: உள்ளாட்சி தேர்தலில் ஒரே சின்னத்தில் போட்டியிடுவோம் - டி.டி.வி.தினகரன் பேட்டி
by ayyasamy ram Today at 4:57 am

» 4 பேர் சுட்டுக்கொல்லப்பட்டது பற்றி சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் - சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு
by ayyasamy ram Today at 4:56 am

» பிரதமர் அலுவலகத்தில் அதிகாரங்கள் குவிந்திருப்பது நல்லதல்ல - ரகுராம் ராஜன் கருத்து
by ayyasamy ram Today at 4:52 am

» சென்னைக்கு அனுப்பப்பட்ட லாரியில் இருந்து 83 வெங்காய மூட்டைகள் திருட்டு - டிரைவர் உள்பட 5 பேர் கைது
by ayyasamy ram Today at 4:49 am

» புதுமண தம்பதிக்கு வெங்காயம் பரிசளித்த நண்பர்கள்கடும் விலை உயர்வு எதிரொலிபாகல்கோட்டை அருகே ருசிகர சம்பவம்
by ayyasamy ram Today at 4:48 am

» ஆறு வித்தியாசம் – கண்டுபிடி
by ayyasamy ram Today at 4:41 am

» எனக்கு ஹிந்தி MP3 பழைய பாடல்கள் டவுன்லோட் செய்ய லிங்க் வேண்டுமே !
by prajai Yesterday at 11:03 pm

» தொகுப்பாளினி பாவனா
by T.N.Balasubramanian Yesterday at 8:55 pm

» வெற்றிடத்தை நிரப்பிய தலைவர்…!!
by ayyasamy ram Yesterday at 8:07 pm

» பயணம் & சமையல் (கவிதை)
by ayyasamy ram Yesterday at 8:06 pm

» கையறு நிலை (கவிதை} – நாஞ்சில் நாடன்
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» தேய்த்தால் பளிச் – வீட்டுக்குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 8:04 pm

» 17-வது சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் இடம்பெறவிருக்கும் முத்தான தமிழ்ப்படங்கள் இவைதான்!
by ayyasamy ram Yesterday at 7:57 pm

» பெண் குழந்தைகளின் தாய் 12-வதாக ஆண் குழந்தை பெற்றார்
by சக்தி18 Yesterday at 7:30 pm

» "பெட்ரோல், டீசல் விலை போல நாளும் உயர்க உன் புகழ்…!!
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» மழைப்போர்வை – கவிதை
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» கொசுவை கொல்லும் 'குறுக்கு' வலை!
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» உள்ளாட்சி தேர்தலில் யாருக்கும் ஆதரவில்லை – ரஜினி மக்கள் மன்றம்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» என்கவுன்டர்: நீதி கிடைத்ததாக திரைப்பிரபலங்கள் கருத்து !
by T.N.Balasubramanian Yesterday at 6:47 pm

» இதுதான் உண்மையான "தவமாய் தவமிருந்து" : கர்ப்பிணி மனைவிக்கு இருக்கையான கணவன்...
by ayyasamy ram Yesterday at 6:35 pm

» ஒரே அறையில் திருமணம் ஆகாத ஆணும் பெண்ணும் தங்கினால் தவறா: சென்னை ஐகோர்ட்
by T.N.Balasubramanian Yesterday at 6:20 pm

» நேற்று வரை நீ யாரோ நான் யாரோ
by ayyasamy ram Yesterday at 3:50 pm

» உலகளவில் 7-ம் இடம்…. இந்திய அளவில் முதலிடம் – ரவுடி பேபி பாடல் சாதனை
by ayyasamy ram Yesterday at 1:02 pm

» திரைப்பாடல் வரிகள் - தொடர்பதிவு
by ayyasamy ram Yesterday at 12:47 pm

» நித்யா மாரியப்பன்
by சக்தி18 Yesterday at 12:33 pm

Admins Online

வாயு உபாதைகளைப் போக்க...!

வாயு உபாதைகளைப் போக்க...! Empty வாயு உபாதைகளைப் போக்க...!

Post by ayyasamy ram on Tue Nov 26, 2019 6:54 pm

வாயு உபாதைகளைப் போக்க...! Ayl
-


என் வயது 83. சர்க்கரை பிரச்னை போன்ற எதுவும் இல்லை.
ஆனால் வாயுத் தொல்லை உள்ளது. அஷ்ட சூரணம் தான்
சாப்பிடுகிறேன். வாயு பதார்த்தம் எதுவும் சாப்பிடுவதில்லை.
ஆனாலும் வாயுத் தொல்லை தீரவில்லை. இதற்கான தீர்வு
ஆயுர்வேதத்தில் உள்ளதா என்பதை அறிந்து கொள்ள
விரும்புகிறேன்.

-கே. வேலுச்சாமி, தாராபுரம்.
----------------------------

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்
-
"வாதம் ஸ்நேஹேன மித்ரவத்'" என்று ஆயுர்வேதம். நண்பனை
ஸ்நேஹம் எனும் அன்புடன் எப்படி அரவணைத்துக் கொள்வோமோ
அதுபோல, மனித உடலில் எங்கும் சஞ்சரிக்கக் கூடிய வாயுவை
ஸ்நேஹம் எனும் நெய்ப்புப் பொருட்களால் அரவணைத்து
சீற்றமுறச் செய்துவிடாமல் கவனித்துக் கொள்ளுதல் அவசியமாகும்
என்று அதற்கு அர்த்தம் கூறலாம்.

நான்கு வகையான நெய்ப்புப் பொருட்களாகிய நெய் - மஜ்ஜை- வஸை
எனும் மாமிசக் கொழுப்பு- தைலம் (எண்ணெய்) ஆகியவற்றால் நீங்கள்
உங்கள் உடலில் பரவியுள்ள வாயுவைக் கட்டுக்குள் வைத்திருக்கலாம்.

இயற்கையாகவே, வயோதிகத்தில் பசியை ஏற்றமாக சில சமயங்களிலும்
குறைவாக சில நேரங்களிலும் செய்துவிடக் கூடிய தன்மையை குடல் வாயு
பெற்றிருக்கும் என்பதால், இவை நான்கில் எது தங்களுக்கு குடலில் சீரான
செரிமானத்திற்கு பயன்படுத்தப்பட்டு, உடல் உட்புறப் பகுதிகளுக்கு
அவற்றின் குணங்களைக் கொண்டு சென்று, வாயுவிற்கு எதிராகச்
செயல்படுமோ அவற்றை மட்டுமே ஜாக்கிரதையுடன் கையாளப்பட
வேண்டும்.

அதனால் பசியின் தன்மை என்பது நபருக்கு நபர் மாறக் கூடும்.
அதைப் பற்றிய விவரத்தை மருத்துவரிடம் எடுத்துக் கூறி, மூலிகை
மருந்துகளை இட்டு காய்ச்சித் தயாரிக்கக் கூடிய இந்த நெய்ப்புப்
பொருட்களை உள்ளும் புறமுமாகப் பயன்படுத்தி, நல்ல பலனைப் பெறலாம்.

இவற்றை உணவாக நீங்கள் சாப்பிட்டால், உடல் மென்மை, பலம், நிறம்,
மழமழப்பு ஆகியவை அதிகரித்து வாயுவைக் குறைக்கும். வயிற்றில் வாயு
தடைபடாதிருக்கவும், இரைப்பை முதலியவற்றின் சவ்வின் மேல் பாதிப்பு
ஏற்படாதிருக்கவும் மென்மை ஏற்படவும் நெய்ப்புத் தேவை.

இவை முன் குறிப்பிட்ட நெய் - மஜ்ஜை முதலியவற்றால் கிட்டுகிறது.
நெய்யும் எண்ணெய்யும் நேரடியாகச் சேர்க்க முடியாத நிலையில் கூட,
பால், தயிர், எள், தேங்காய் முதலியவற்றைச் சேர்ப்பதால் கிடைத்து
விடுகிறது. நெய்ப்பின்றி செல்லும் உணவும் ஜீரணத்திற்கு கெடுதலே.

புழுங்கலரிசியுடன் கோதுமை முதலிய தானியங்களையும், பாசிப்பயறு
முதலிய பருப்புகளையும் சேர்த்துச் சிறிது வறுத்துக் குருணையாக்கி
60 கிராம் எடுத்து ஒரு லிட்டர் தண்ணீரில் கால்லிட்டர் மீதமாக்கும்படி
கஞ்சியாக்கியது புஷ்டிதரும் கஞ்சி. வயிற்றில் கனமும் வாயுவும்
தங்கியிருந்தால் இதில் சுக்கைச் சீவல் போல் மெல்லியதாகச் சீவிப்போட்டு
கஞ்சிவைத்து, அதில் ஆயுர்வேத மருந்தாகிய இந்துகாந்தம் எனும் நெய்யை
5 - 10 மி.லி. உருக்கிச் சேர்த்து, சிறிது இந்துப்பு கலந்து காலை உணவாக
வெது வெதுப்பாகச் சாப்பிட, உங்களுடைய வாயுத் தொல்லை குறைந்து
உடலும் புஷ்டி அடையும்.

அமுக்கறாக் கிழங்கு எனும் அஸ்வகந்தா சூரணம் நல்ல தரமாக தற்சமயம்
விற்கப்படுகிறது. 3 - 5 கிராம் அதை எடுத்து சுமார் 100 - 120 மி.லி. சூடான
சர்க்கரை கலந்த பாலுடன் மாலை வேளையில் சாப்பிட, வாயுவினால்
வலுவிழந்த தளர்ந்த தசைகள் வலிமை பெற்று முறுக்குடன் இயங்கும்.
ரத்தக் குழாய் தளர்ச்சி நீங்கி, ரத்த ஓட்டம் சீராகும்.

உள்ளும் புறமும் நெய்ப்பு தரும் தாவர எண்ணெய் வித்துகளில் மிகச் சிறந்தது
எள்ளு. உடற்சூட்டைப் பாதுகாக்கும். சுவையில் இனிப்பும் துணையாக கசப்பும்
துவர்ப்பும் தோலுக்குப் பதமளிக்கும். எளிதில் ஊடுருவிப் பரவும். கேசம்
செழிப்பாக வளர உதவும். கண்ணிற்கு ஒளி பலம் தரும் உணவுப் பொருள்.

வாயுவைக் கண்டிக்கும். வயிற்றின் அழற்சியைக் குறைக்கும். ரத்தக்
கட்டைக் கரைக்கும். தொண்டைப்புண்ணை ஆற்றி இனிய குரல் தரும்.
எள்ளை வறுத்துப் பொடி செய்து நீங்கள் மதிய வேளையில் சூடான சாதத்துடன்
கலந்து, அதில் 3 -5 மி.லி. விதார்யாதி கிருதம் எனும் நெய் மருந்தை விட்டுப்
பிசைந்து சாப்பிட, உடல் வலிவு பெறும். வாயு உபாதைகளைத் தீர்த்து தசை
நார்களை வலுப்படுத்தும்.

திங்கள் - புதன் - சனிக்கிழமைகளில் நல்லெண்ணெய்யை இளஞ்சூடாக
தலை முதல் உள்ளங்கால் வரை தேய்த்துக் குளிக்கவும். புத்திக்குத் தெளிவு,
கண்களுக்குக் குளிர்ச்சி, பார்வைத் தெளிவு, உடம்பின் பூரிப்பு, புஷ்டி, வலிவு,
தோலின் மென்மை, தோலுக்கு வலிமை, எதிர்ப்புச் சக்தி ஆகியவற்றைத்
தரக்கூடியது.

பல மூலிகைகளை நல்லெண்ணெய்யில் இட்டு காய்ச்சக் கூடிய க்ஷீரபலா
தைலத்தைத் தலைக்கும், மஹா மாஷ தைலத்தை உடலுக்கும் நீங்கள்
பயன்படுத்தினால், மேற்குறிப்பிட்ட நன்மைகள் மேலும் இரட்டிப்பாக
உங்களுக்குக் கிடைக்கும்.
-
----------------------------
பேராசிரியர் எஸ். சுவாமிநாதன்,
ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி ஆயுர்வேதக் கல்லூரி,
நசரத்பேட்டை - 600 123 (பூந்தமல்லி அருகே)
நன்றி-தினமணி கதிர்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 50589
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12694

https://rammalar.wordpress.com/

Back to top Go down

வாயு உபாதைகளைப் போக்க...! Empty Re: வாயு உபாதைகளைப் போக்க...!

Post by T.N.Balasubramanian on Tue Nov 26, 2019 9:39 pm

உபயோகமுள்ள தகவல்கள்.

நன்றி

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 25725
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9272

Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை