உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» ராமர் சிலையை செருப்பால் அடித்ததை ஒப்புக்கொண்ட தி.க.,
by T.N.Balasubramanian Today at 5:56 pm

» ஆறாத் துயரம் மாறாதோ ?
by T.N.Balasubramanian Today at 5:46 pm

» தாழம்பூ - திரைப்பட பாடல் வரிகள் & காணொளி
by சக்தி18 Today at 4:04 pm

» கூடையில் வெட்டுக்கிளி பார்சலை எடுத்து வந்த எம்.எல்.ஏ
by kram Today at 3:51 pm

» பள்ளிக்கு ஒருநாள் தலைமை ஆசிரியையான 10-ம் வகுப்பு மாணவி
by சக்தி18 Today at 3:51 pm

» வழிகாட்டிய மலர்கள்!
by ayyasamy ram Today at 2:00 pm

» மணி ரத்னம் தயாரிப்பில் சித் ஸ்ரீராம் இசையமைத்துள்ள வானம் கொட்டட்டும் படத்தின் பாடல்கள்!
by ayyasamy ram Today at 1:57 pm

» நான் ரசித்த சமீபத்திய கவிதைகள்
by ayyasamy ram Today at 1:50 pm

» உலகில் ஏன் இத்தனை மொழிகள்?
by ayyasamy ram Today at 1:42 pm

» தாத்தா காந்தி!
by ayyasamy ram Today at 1:41 pm

» நகைச்சுவை- இணையத்தில் ரசித்தவை
by சக்தி18 Today at 1:40 pm

» அடுத்த தலை முறை ஏ,பி,சி,டி
by சக்தி18 Today at 1:38 pm

» பொன்மொழிகள்! தொகுப்பு: சுவாமி கமலாத்மானந்தர்
by ayyasamy ram Today at 12:46 pm

» குளிக்காமலும் தரிசிக்கலாம்
by ayyasamy ram Today at 12:16 pm

» கரோனா வைரஸ்: சீனாவில் வெளியே வர முடியாமல் தவிக்கும் தமிழக மாணவர்கள்!
by ayyasamy ram Today at 11:34 am

» முதியோர் இல்லத்தில் அடைத்துவைக்கப்பட்டிருந்த 73 பேர் மீட்பு
by ayyasamy ram Today at 11:31 am

» அதிமுக முன்னாள் எம்.பி. கே.சி. பழனிசாமி கைது
by ayyasamy ram Today at 11:30 am

» நண்பா
by சண்முகம்.ப Today at 10:37 am

» குறியீடாய் மாறினாய்
by சண்முகம்.ப Today at 10:25 am

» அதிக வரி சமூக அநீதி: சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி
by ayyasamy ram Today at 5:30 am

» சர்ச்சைகளில் மாட்டுவதில் நானும் கோலியும் ஒன்று: கங்கனா ரனாவத்
by ayyasamy ram Today at 5:24 am

» சேலையணிந்து வந்து ஸ்ரீரெங்கநாதரைதரிசித்த தாய்லாந்து நாட்டுப் பெண்கள்
by ayyasamy ram Today at 5:23 am

» குதிரையில் சவாரி செய்த மணப்பெண்கள்! எதற்காகத் தெரியுமா?
by ayyasamy ram Today at 5:22 am

» தாய்மையே அன்பு!
by ayyasamy ram Today at 5:16 am

» ஹெட்போன் ஜாக்கிரதை
by ayyasamy ram Today at 5:16 am

» பிரச்சனைகளை சிரிப்போடு கடந்து போக கற்றுக் கொள்ளுங்கள்..!!
by ayyasamy ram Today at 5:14 am

» எண்ணம் போல் வாழ்க்கை…!
by ayyasamy ram Today at 5:12 am

» ஏல இங்கிலீசு பேசலாம் வாரீயால?
by ayyasamy ram Today at 5:11 am

» நேரு காட்டிய நகைச்சுவை
by ayyasamy ram Today at 5:07 am

» ஜீரோவின் மதிப்பு!
by ayyasamy ram Today at 5:06 am

» ஆரோக்கியம் பெற எளிய வழி
by ayyasamy ram Today at 5:05 am

» புத்தகம் தேவை : இறையன்பு IAS
by prajai Yesterday at 10:26 pm

» ஒற்றுமைக் கும்மி
by duraisingam Yesterday at 9:38 pm

» குண்டூசி - ஆசிரியப்பா
by duraisingam Yesterday at 9:22 pm

» ஈகரையில் புதிய உறுப்பினராக இணைவது எப்படி - விளக்கம்
by syedbasha Yesterday at 9:22 pm

» சனிப் பெயர்ச்சி பலன்கள் - 2020 (மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம்)
by ayyasamy ram Yesterday at 6:13 pm

» குடியரசு தினம் ஏன் ஜனவரி 26ம் தேதி கொண்டாடப்படுகிறது?
by ayyasamy ram Yesterday at 5:11 pm

» ஹல்வா விழா : பட்ஜெட்டுக்கு முன்பு நிதி அமைச்சகம் ஏன் இதை கொண்டாடுகிறது?
by ayyasamy ram Yesterday at 5:06 pm

» தம்பி என்னப்பா வித்தியாமா ஃபிரண்ட் பிடிச்சிருக்க
by ஜாஹீதாபானு Yesterday at 4:24 pm

» கீழடி தொன்மை
by VEERAKUMARMALAR Yesterday at 2:55 pm

» மின் நூல் படிப்பவர்களுக்கு.............
by சக்தி18 Yesterday at 2:51 pm

» Microsoft Edge புதிய வடிவில்
by சக்தி18 Yesterday at 2:47 pm

» மொக்க ஜோக்ஸ்
by சக்தி18 Yesterday at 2:35 pm

» திரை இசையில் முருகன் பக்தி பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 1:36 pm

» கண்களை கட்டிக்கொண்டு தன்னை சுற்றி உள்ளதை கூறி அசத்தும் மாணவர்
by ayyasamy ram Yesterday at 1:07 pm

» இன்று தை அமாவாசை: ராமேசுவரம் அக்னி தீர்த்தக்கடலில் பக்தர்கள் புனித நீராடினர்
by ayyasamy ram Yesterday at 1:04 pm

» தட்டையான வயிற்றை பெற, கொழுப்பை கரைக்க உதவும் எளிய உடற்பயிற்சிகள்
by ayyasamy ram Yesterday at 12:35 pm

» ஆன்மிக தகவல் சரபப் பறவை
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» ஆக்கபூர்வமான சிந்தனை, ஆக்கபூர்வமான பேச்சு!
by ayyasamy ram Yesterday at 12:09 pm

» மனைவியும் ஒரு திருக்குறள் தான்…!!
by ayyasamy ram Yesterday at 12:08 pm

Admins Online

சிவாஜியை ஏமாற்றிய சோ

சிவாஜியை ஏமாற்றிய சோ Empty சிவாஜியை ஏமாற்றிய சோ

Post by ayyasamy ram on Tue Nov 26, 2019 6:40 am


சிவாஜியை ஏமாற்றிய சோ 201911221820284820_Cho-who-cheated-Shivaji_SECVPF
முக்தா ஸ்ரீனிவாசன், முக்தா பிலிம்ஸ் என்ற படத் தயாரிப்பு
நிறுவனத்தை தொடங்கி, சிறிய பட்ஜெட்டில் நகைச்சுவை
படங்களை இயக்கி, தயாரித்துக் கொண்டிருந்தார்.

முதல் முறையாக நடிகர் திலகம் சிவாஜி கணேசனை வைத்து
முக்தா பிலிம்சில் ஒரு படம் தயாரிக்க விருப்பப்பட்டு, சிவாஜியின்
கால்ஷீட்டையும் வாங்கிவிட்டார்.

இயக்குனர் மகேந்திரனி்ன் கதையை வாங்கி, சோவின் திரைக்கதை
வசனத்தில் சிவாஜி மற்றும் வாணிஸ்ரீ நடிக்க ‘நிறைகுடம்’ படத்தை
தொடங்கினார்.

சிவாஜி நடித்த ‘பார் மகளே பார்’ படத்தில் தான், சோ திரைப்பட
நடிகராக அறிமுகமானார். அதனால் சிவாஜி அவரை உரிமையுடன்
ஏக வசனத்தில் அழைப்பார். படத்தில் பெரும்பாலான காட்சிகளும்
வசனங்களும் நகைச்சுவையாக அமைந்து இருந்தன.

அந்த கால கட்டத்தில் இலக்கியத்தரமான வசனம் கொண்ட
காட்சியோ அல்லது ஓரங்க நாடகமோ சிவாஜி படங்களில் இடம்
பெறவேண்டும் என்று திரைப்பட விநியோகஸ்தர்கள்
வற்புறுத்துவார்கள். அதற்காகவே சிவாஜியும் வாணிஸ்ரீயும் பேசும்
காதல் காட்சி ஒன்றை படத்தில் சேர்த்தார்கள்.

“டேய், நீ கேலியும் கிண்டலுமா நல்லா எழுதுவே. ஆனா இது
வேற மாதிரி. பொண்ணுங்களை வர்ணிச்சு எழுதுறது உனக்கு
பிடிக்காது. அதிலயும் இந்த வர்ணனை இலக்கியத் தரமாவும்
இருக்கணும். அப்படி எழுதுவியா?” -சிவாஜி.

“ஏன் என்னால எழுத முடியாதுன்னு நினைக்கிறீங்களா?” -சோ.

“நீ நல்லா எழுதுவே, ஆனா இந்த மாதிரி எழுதினது இல்லையே.
இதிலயும் காமெடி சேர்த்திடுவியே” -சிவாஜி.

“நாளைக்கு எழுதி கொண்டுவந்து தரேன். பாத்திட்டு பேசுங்க”
-சோ.

மறுநாள் அந்தக் காட்சிக்கான வசனத்தை சோ கொண்டு வந்து
தந்தார்.

வசனத்தைப் படிக்க ஆரம்பித்தார் சிவாஜி...

‘மயிலின் தோகை போல் பறந்து கிடக்கும் கூந்தல் என்று
சிலர் வர்ணிப்பார்கள்.

ஆனால் எனக்கு அப்படித் தெரியவில்லை.

கணக்கிட முடியாத கேசங்கள் நிறைந்த உன் கூந்தல்,
அளவிடமுடியாத உன் அன்பைப்போல் இருக்கின்றன.

மஞ்சள் பூசிய நெற்றியிலே இருக்கும் செந்நிற குங்குமப்
பொட்டு-

மற்றவர்களுக்கு மாங்கல்யத்தின் மங்கலத்தையும்
சுகத்தையும் காட்டுவது போல் தெரியலாம்.

ஆனால் எனக்கு..

களங்கமில்லாத ஒரு பெண், மனம் உவந்து ஏற்றுக்கொண்ட
மணவாழ்க்கையிலே மறைந்திருக்கும் அபாயத்தைத் தான்
அந்த செந்நிறம் காட்டுகிறது.

செம்பவழ வாய் திறந்து என்று புலவர்கள் கூறலாம். ஆனால்
உன் இதழ்கள் பிரிந்து சேரும்போதெல்லாம், அந்தத் துடிப்பிலே,
உன் இதயம் எனக்காக துடிக்கும் துடிப்பைத்தான் நான்
காண்கிறேன்.

பளிங்கு நீரைப் போன்ற உன் வெள்ளை விழிகளிலே துள்ளி
விளையாடும் கருவிழிகளைப் பார்த்துத் தானோ என்னவோ
கவிஞர்கள் மீன் விழியாள் என்று வர்ணிக்கிறார்கள்.

ஆனால் என் முகத்தின் பிரதிபலிப்பை உன் கருவிழி களிலே
காணும்போதெல்லாம்-

ஒரு வெள்ளை உள்ளத்திலே புகுந்துவிட்ட களங்கம் போல் தான்
தெரிகிறது.

கைகளைப் பற்றி கற்றோர்கள் என்ன சொல்வார்களோ எனக்குத்
தெரியாது.

ஆனால் ஐந்து விரல்களைக் கொண்ட உன் கைகள், அன்பு, பாசம்,
பரிவு, காதல் என்ற நான்கையும் அள்ளித்தரும் கருணையின்
வடிவமாகவே எனக்கு காட்சியளிக்கின்றன.

ஐந்தாவது விரல் ஏன்? என்று கேட்கலாம்.

இவை அனைத்தும் உனக்கே உனக்கே என்று என்னை
சுட்டிக்காட்டவே அந்த விரல்.

பொன்மலர்ப் பாதங்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்..

உன் பாதங்களை நம்பி நீ நிற்கிறாய்

உன்னை நம்பி நான் நிற்கிறேன்.’

இப்படிப்போய் முடியும் அந்த வசனம்.

வசனங்களைப் படித்து முடித்த சிவாஜிக்கு ஒரே ஆச்சரியம்.
“டேய் குரங்கா! (சந்தோஷம் வரும் போதெல்லாம் சோவை
அப்படி உரிமையுடன் அழைப்பார் சிவாஜி) நெஜமாவே நீ தான்
எழுதினியா? பொம்பளைங்களை வர்ணிச்சு எழுத உனக்கு
பிடிக்காதே.”

“எனக்கு பிடிக்காது தான், ஆனா உங்களுக்காக நான் ரொம்ப
கஷ்டப்பட்டு யோசிச்சி எழுதிக்கிட்டு வந்திருக்கேன். எப்படி
இருக்கு?”

“ரொம்ப நல்லா எழுதி இருக்கடா” என்ற சிவாஜி அந்த காட்சியில்
நடித்தார்.

மதியம் செட் வாசலில் உட்கார்ந்து, அடுத்த காட்சிக்கான
வசனத்தை உதவி இயக்குனரை படிக்கச் சொல்லி கேட்டுக்
கொண்டிருந்தார், சிவாஜி.

அப்போது அப்பா அந்தப் பக்கமாக வந்தார்.

அவர் சிவாஜியைப் பார்த்ததும் “என்னய்யா, சோ கேட்டார்னு
ஒரு காட்சிக்கு வசனம் எழுதித் தந்தேன். என் வசனத்தை
படிச்சியா? நல்லா இருந்துச்சா?” என்று கேட்க, சிவாஜிக்கு
சட்டென்று புரிந்துவிட்டது.

“நீ எழுதித் தந்தியா?, அதான பார்த்தேன். டேய் எங்கடா அந்த
திருட்டுக் குரங்கன்?” என்று சிவாஜி கேட்க, சோ எஸ்கேப்.

(‘என்றென்றும் கண்ணதாசன்’ தொடரை தினத்தந்தியில் படித்த
முக்தா ஸ்ரீனிவாசன் மகள் மாயா ஸ்ரீனிவாசன், முக்தாவின் மகன்
முக்தா ரவி ஆகியோர் கவியரசருக்கும் முக்தா ஸ்ரீனிவாசனுக்கும்
இடையில் நடந்த சில சுவாரசியமான நினைவுகளை பகிர்ந்து
கொண்டார்கள். அதில் ஒன்று தான் இது.)
-
அண்ணதூரை கண்ணதாசன்
தினத்தந்தி
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 52201
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12710

https://rammalar.wordpress.com/

Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை