உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» கழுதையின் மரணம்!
by krishnaamma Today at 7:21 pm

» கரியமாணிக்கப் பெருமாள்
by krishnaamma Today at 7:18 pm

» 'வருமான வரியை ரத்து செய்ய வேண்டும்'
by krishnaamma Today at 7:17 pm

» புதிய சட்ட திருத்த மசோதா: முடிவுக்கு வரும் ஆங்கிலோ இந்தியன் எம்.பி.க்கள் கோட்டா!
by ayyasamy ram Today at 7:00 pm

» கால்களால் விமானத்தை இயக்க உரிமம் பெற்ற முதல் பெண் விமானி ஜெசிகா..
by ayyasamy ram Today at 6:43 pm

» பிரபஞ்ச அழகியாக தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த சொசிபினி துன்சி தேர்வு
by ayyasamy ram Today at 6:39 pm

» காங்., சட்டமன்ற குழு தலைவர் பதவியை சித்தராமையா ராஜினாமா செய்தார்.
by ayyasamy ram Today at 6:30 pm

» 50 வார்த்தைக் கதைகள்
by ayyasamy ram Today at 6:17 pm

» யோகிபாபுக்கு குரல் கொடுத்த பூவையார்
by ayyasamy ram Today at 6:04 pm

» விளக்கொளி பெருமாள்
by ayyasamy ram Today at 5:57 pm

» திருவண்ணாமலை பற்றிய 30 தகவல்கள்
by ayyasamy ram Today at 5:55 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு
by ayyasamy ram Today at 5:51 pm

» குயின் வெப் சிரீஸுக்கு தடைக்கோரும் ஜெ.தீபா - கெளதம் மேனன் பதிலளிக்க உத்தரவு
by ayyasamy ram Today at 5:44 pm

» அழகுல சேலையை அடிச்சுக்க முடியாது: சொல்றது 'மயிலு' மகளுங்கோ..!
by ayyasamy ram Today at 5:41 pm

» சோனியா காந்தி பிறந்தநாள் - பிரதமர் மோடி வாழ்த்து
by ayyasamy ram Today at 5:34 pm

» பெருமை – ஒரு பக்க கதை
by ஜாஹீதாபானு Today at 3:40 pm

» பிரதமர் வீட்டு வசதி திட்டத்தில் கூடுதல் வீடுகள்
by ayyasamy ram Today at 1:15 pm

» பிறந்த குழந்தையை பேணிக்காக்கும் முறைகள்
by ayyasamy ram Today at 12:48 pm

» தற்கொலை எண்ணம் வராமல் தடுப்பது எப்படி?
by ayyasamy ram Today at 12:45 pm

» திருவண்ணாமலை சித்தர்களின் சரணாலயம்
by ayyasamy ram Today at 8:48 am

» கார்த்திகை தீபத்திருவிழாவையொட்டி திருவண்ணாமலையில் நாளை மகாதீபம்
by ayyasamy ram Today at 8:36 am

» MPN சேதுராமன், பொன்னுசாமி நாதஸ்வரத்தில் மேற்கத்திய இசையும், இனிய கர்நாடக இசையும்
by ayyasamy ram Today at 8:25 am

» பாவங்களைப் போக்கும் பரணி தீபம்!!!
by ayyasamy ram Today at 8:18 am

» 5 ஆண்டுகளில் 27 மாணவர்கள் ஐ.ஐ.டி.,க்களில் தற்கொலை
by ayyasamy ram Today at 5:06 am

» பெண்கள், குழந்தைகளுக்கு சென்னை, கோவை நகரங்கள் பாதுகாப்பானவை - ஆய்வில் தகவல்
by ayyasamy ram Today at 4:59 am

» தமிழகம் முழுவதும்: உள்ளாட்சி தேர்தலில் ஒரே சின்னத்தில் போட்டியிடுவோம் - டி.டி.வி.தினகரன் பேட்டி
by ayyasamy ram Today at 4:57 am

» 4 பேர் சுட்டுக்கொல்லப்பட்டது பற்றி சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் - சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு
by ayyasamy ram Today at 4:56 am

» பிரதமர் அலுவலகத்தில் அதிகாரங்கள் குவிந்திருப்பது நல்லதல்ல - ரகுராம் ராஜன் கருத்து
by ayyasamy ram Today at 4:52 am

» சென்னைக்கு அனுப்பப்பட்ட லாரியில் இருந்து 83 வெங்காய மூட்டைகள் திருட்டு - டிரைவர் உள்பட 5 பேர் கைது
by ayyasamy ram Today at 4:49 am

» புதுமண தம்பதிக்கு வெங்காயம் பரிசளித்த நண்பர்கள்கடும் விலை உயர்வு எதிரொலிபாகல்கோட்டை அருகே ருசிகர சம்பவம்
by ayyasamy ram Today at 4:48 am

» ஆறு வித்தியாசம் – கண்டுபிடி
by ayyasamy ram Today at 4:41 am

» எனக்கு ஹிந்தி MP3 பழைய பாடல்கள் டவுன்லோட் செய்ய லிங்க் வேண்டுமே !
by prajai Yesterday at 11:03 pm

» தொகுப்பாளினி பாவனா
by T.N.Balasubramanian Yesterday at 8:55 pm

» வெற்றிடத்தை நிரப்பிய தலைவர்…!!
by ayyasamy ram Yesterday at 8:07 pm

» பயணம் & சமையல் (கவிதை)
by ayyasamy ram Yesterday at 8:06 pm

» கையறு நிலை (கவிதை} – நாஞ்சில் நாடன்
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» தேய்த்தால் பளிச் – வீட்டுக்குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 8:04 pm

» 17-வது சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் இடம்பெறவிருக்கும் முத்தான தமிழ்ப்படங்கள் இவைதான்!
by ayyasamy ram Yesterday at 7:57 pm

» பெண் குழந்தைகளின் தாய் 12-வதாக ஆண் குழந்தை பெற்றார்
by சக்தி18 Yesterday at 7:30 pm

» "பெட்ரோல், டீசல் விலை போல நாளும் உயர்க உன் புகழ்…!!
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» மழைப்போர்வை – கவிதை
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» கொசுவை கொல்லும் 'குறுக்கு' வலை!
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» உள்ளாட்சி தேர்தலில் யாருக்கும் ஆதரவில்லை – ரஜினி மக்கள் மன்றம்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» என்கவுன்டர்: நீதி கிடைத்ததாக திரைப்பிரபலங்கள் கருத்து !
by T.N.Balasubramanian Yesterday at 6:47 pm

» இதுதான் உண்மையான "தவமாய் தவமிருந்து" : கர்ப்பிணி மனைவிக்கு இருக்கையான கணவன்...
by ayyasamy ram Yesterday at 6:35 pm

» ஒரே அறையில் திருமணம் ஆகாத ஆணும் பெண்ணும் தங்கினால் தவறா: சென்னை ஐகோர்ட்
by T.N.Balasubramanian Yesterday at 6:20 pm

» நேற்று வரை நீ யாரோ நான் யாரோ
by ayyasamy ram Yesterday at 3:50 pm

» உலகளவில் 7-ம் இடம்…. இந்திய அளவில் முதலிடம் – ரவுடி பேபி பாடல் சாதனை
by ayyasamy ram Yesterday at 1:02 pm

» திரைப்பாடல் வரிகள் - தொடர்பதிவு
by ayyasamy ram Yesterday at 12:47 pm

» நித்யா மாரியப்பன்
by சக்தி18 Yesterday at 12:33 pm

Admins Online

இந்தியர்களை குறி வைக்கும் நோய்: இன்று உலக சி.ஓ.பி.டி., தினம்

இந்தியர்களை குறி வைக்கும் நோய்: இன்று உலக சி.ஓ.பி.டி., தினம் Empty இந்தியர்களை குறி வைக்கும் நோய்: இன்று உலக சி.ஓ.பி.டி., தினம்

Post by ayyasamy ram on Wed Nov 20, 2019 2:13 am

இந்தியர்களை குறி வைக்கும் நோய்: இன்று உலக சி.ஓ.பி.டி., தினம் Tamil_News_large_2415437
-
சி.ஓ.பி.டி.,க்கு நாட்பட்ட நுரையீரல் அடைப்பு நோய் என்று பெயர்.
சிகரெட் புகைப்பதாலும், மாசுபட்ட காற்றை சுவாசிப்பதாலும்
வருகிறது. மூச்சுத்திணறல், மார்பு இறுக்கம், சளியுடன் கூடிய
இருமல் இதன் முக்கிய அறிகுறிகள்.

மக்களை கொல்லும் நோய்களில் 8 ல் இருந்து 2வது இடத்திற்கு
இந்நோய் முன்னேறியுள்ளது.

நகர மக்களை விட கிராமத்தினரை 3 மடங்கு அதிகம் பாதிக்கிறது.
ஆண்டுதோறும் 10 லட்சம் இந்தியர் இந்நோயால் இறக்கின்றனர்.
புகைப்பிடிக்கும் பழக்கம், நிலக்கரி, மரம் மற்றும் சாணத்தை
எரிக்கும் பாரம்பரிய அடுப்புகள், நச்சுக் காற்று ஆகியவை இந்நோய்
பரப்பும் காரணிகள் ஆகும்.

புகைப்பழக்கம்

சிகரெட், பீடி புகைப்பது தான் ஆண்களுக்கு சி.ஓ.பி.டி., வர முக்கிய
காரணம். இந்தியாவில் நான்கில் ஒருவருக்கு இப்பழக்கம் உள்ளது.
அவர்களால் சுற்றியுள்ளவர்களுக்கும் பாதிப்பு ஏற்படுகிறது.

இதுதவிர 26.6 கோடி இந்தியர்கள் புகையிலை பயன்படுத்துவதாக
ஆய்வறிக்கை சொல்கிறது. புகையிலையினால் நிகழும் மரணங்களில்
48 சதவீதம் இதய நோயின் விளைவாகவும், 23 சதவீதம் நாட்பட்ட
சுவாசக்கோளாறாலும் ஏற்படுகிறது.

25 வயதில் தான் நுரையீரல் உச்சக்கட்ட ஆற்றலோடு இயங்கும்.
அச்சமயம் ஒவ்வொரு முறை மூச்சிழுக்கும் போதும் 4 முதல் 6 லிட்டர்
காற்று உள்ளிழுக்கப்படும். புகைப்பழக்கம் கொண்ட ஒருவர்
45 வயதாகும்போது, அவருடைய நுரையீரலுக்கு 75 வயதாகி விடுகிறது.
அதாவது அந்த அளவிற்கு செயல்பாடு குறைந்துவிடுகிறது.

புகைப்பிடிக்காதவர்களுக்கும்

'புகைப்பிடிப்பவர்களின் நோய்' என்று அழைக்கப்பட்ட சி.ஓ.பி.டி.,
இப்போது புகைப்பழக்கம் இல்லாதோரையும் பாதிக்கிறது. நான்கில்
ஒரு நோயாளி ஒருபோதும் புகைப்பிடிக்காதவர் என ஆய்வுகள்
சொல்கின்றன. இதற்கு காற்று மாசுபாடு முக்கிய காரணம் வகிக்கிறது.

உலகின் மிக மாசுபட்ட 20 நகரங்களில் 10 நகரங்கள் இந்தியாவை
சேர்ந்தவை.அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையத்தின் 2017அறிக்கை,
இந்தியாவில் நிகழும் 30 சதவீத மரணங்களுக்கு காற்று மாசுபாடு தான்
காரணம் என சுட்டிக்காட்டுகிறது.

டில்லியில் உள்ள ஒவ்வொரு மூன்றாவது குழந்தைக்கும் நுரையீரல்
பாதிப்பு ஏற்படுகிறது என்றும் அந்த ஆய்வு குறிப்பிட்டுள்ளது.

இதே மையம் இந்த ஆண்டில் மேற்கொண்ட ஆய்வில், காற்று
மாசுபாட்டால் இந்தியர்களின் ஆயுட்காலம் 2.6 ஆண்டுகள்
குறைந்திருப்பதாக தெரிவித்தது. மேலும் காற்றுமாசுபாட்டால்
49 சதவீதம் பேருக்கு சி.ஓ.பி.டி., நோய் ஏற்படுவதாகவும், இவர்களில்
பாதி பேர் மரணத்தை தழுவுவதாகவும் தெரிவித்துள்ளது.

கிராமப்புறங்களில் பாதிப்பு

உயிரி எரிபொருளின் அதிக பயன்பாடு காரணமாக கிராமப்புறங்களில்
சி.ஓ.பி.டி., பாதிப்பு உள்ளது. மரம், நிலக்கரி அல்லது சாணத்தை எரிப்பதில்
இருந்து வரும் புகை இந்நோய்க்கு முக்கிய காரணியாகும். இது புகை
பிடிப்பதை விட அதிகம். 70 சதவீதம் இந்திய வீடுகளின் சமையலறைகளில்
சமையல் மற்றும் வெப்ப நோக்கங்களுக்காக உயிரி எரிபொருளைப்
பயன்படுத்துகின்றனர்.

தினமும் 2 முதல் 3 மணி நேரம் சமைக்கும் ஒரு பெண் சராசரியாக
25 மில்லியன் லிட்டர் மிகவும் மாசுபட்ட காற்றை சுவாசிப்பதாக 2012
அறிக்கை ஒன்று குறிப்பிடுகிறது.

காற்று மாசுபாட்டை பொறுத்தவரை தர அளவுகோல் 0-50 என்றால்
சுகாதாரமான அளவு 51-100 மிதமான அளவு 101-150 உடல் ஆரோக்கியத்தில்
நலிந்தவர்களுக்கு பாதிப்பு ஏற்படும். 151-200 அனைவரையும் பாதிக்கும்,
201-300 மோசமான கட்டம், 300க்கு மேல் அபாயகரமானது ஆகும்.

தலைநகர் டில்லியில் வழக்கத்தை விட காற்று மாசுபாடு அபாய கட்டத்தை
எட்டியது. 625 என்ற மோசமான அளவை தொட்டது.
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 50589
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12694

https://rammalar.wordpress.com/

Back to top Go down

இந்தியர்களை குறி வைக்கும் நோய்: இன்று உலக சி.ஓ.பி.டி., தினம் Empty Re: இந்தியர்களை குறி வைக்கும் நோய்: இன்று உலக சி.ஓ.பி.டி., தினம்

Post by ayyasamy ram on Wed Nov 20, 2019 2:13 am


காற்று மாசுபாடு

தமிழக தலைநகர் சென்னையும் காற்று மாசுபாட்டால் பாதிப்பை
சந்திக்கிறது. இங்கு தர அளவு 261ஐ தொட்டது. காற்று மாசுபாட்டினால்
வட இந்தியர்களின் ஆயுட்காலம் 7 ஆண்டுகள் குறையும் என சிக்காகோ
பல்கலை எச்சரிக்கிறது.

இந்தியாவில் 1990 முதல் 2017 வரையிலான 27 ஆண்டில் 12.5 சதவீதம்
காற்று மாசுபாடு அதிகரித்துள்ளது. புகைப்பிடிப்போருக்கு என்னென்ன
பாதிப்புகள் ஏற்படுமோ, அவை அனைத்தும் காற்று மாசுபாடு காரணமாகவும்
வரும். இது குறித்த விழிப்புணர்வு அவசியம்.காற்று மாசை
கட்டுப்படுத்தவாகனங்கள் உருவாக்கும் மாசுபாட்டை குறைக்க மக்கள்
பஸ், ஆட்டோ போன்ற பொது போக்குவரத்திற்கு மாற வேண்டும்.

பயன்படாத பாலிதீன், பிளாஸ்டிக்களை எரிப்பதை விடுத்து மறுசுழற்சிக்கு
பயன்படுத்த வேண்டும். பாதசாரிகள் இடையூறு இன்றி நடக்க ரோட்டின்
இருபுறமும் வசதியான நடைபாதை அமைக்க வேண்டும்.

சைக்கிள் ஓட்டுவோருக்கும் தனி வழித்தடம் அவசியம். பொதுபோக்குவரத்தை
ஊக்குவிக்க கட்டணத்தை குறைப்பது பலனளிக்கும்.தீங்கு விளைவிக்கும்
வாயுக்களை உறிஞ்சி, காற்றை கிருமி நாசினியாக மாற்றும் மரங்களை
அதிகம் நடவு செய்ய வேண்டும்.

ஒவ்வொரு நபரும் ஆண்டிற்கு ஒரு மரத்தையாவது நட்டு பராமரிக்க
வேண்டும். நகரில் ஆங்காங்கே பசுமை பூங்காக்கள் அமைக்க வேண்டும்.
நீண்டகால திட்டங்களே காற்று மாசை குறைத்து நகரை மக்கள் வாழ
தகுதியான இடமாக மாற்றும்.

மாசில் இருந்து தப்பிக்க...

* ஆஸ்துமா, மூச்சுத்திணறல் பாதிப்பு உள்ளவர்கள் எப்போதும் கையில்
மருந்துகளை வைத்துக்கொள்ளுங்கள்.

* காற்று மாசுபாட்டால் ஏற்படும் புகைமூட்டத்தின் போது தலைவலி,
மூச்சுத்திணறல், இருமல் இருந்தால் செய்யும் வேலையை உடனே
கிடப்பில் போட்டுவிட்டு ஓய்வெடுக்க வேண்டும்.

* வெளியில் செல்லும்போது மாஸ்க் அணிந்து கொள்ளுங்கள்.

* வீடு, அலுவலகங்களில் ஜன்னல், கதவுகளை அடைத்து வைக்க
வேண்டும். துாசு புகுந்துவிடும் அளவிற்கு வழி இருந்தால் அதனையும்
அடைக்க வேண்டும்.

* வீட்டை சுத்தம் செய்யும்போது துாசி எழுந்தால் ஈரமான துணியால்
துடைத்துவிட்டு பின்னர் சுத்தம் செய்ய வேண்டும்.

* விறகு மற்றும் மெழுகுவர்த்தி எரிப்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

* விட்டமின் சி அடங்கியுள்ள காய்கறிகள், பழங்கள் அதிகம் எடுத்துக்
கொள்ளலாம்.

நுரையீரல் மறுவாழ்வு

சி.ஓ.பி.டி.,க்கான மருந்துகளை விட திறம்பட செயல்படுவது நுரையீரல்
மறுவாழ்வு ஆகும். இதில் மருத்துவ மேற்பார்வை, ஊட்டச்சத்து ஆலோசனை
மற்றும் சுவாச நுட்பங்களின் கீழ் நாள்பட்ட நுரையீரல் நோயாளிகளுக்கு
12 வார பயிற்சிகள் உள்ளன.

உடற்பயிற்சி செய்வதனால் தசைகள் நன்கு வேலை செய்து சுவாச திறன்
மேம்படும்.

இது நோயாளிக்கு பலத்தை அளிக்கிறது. நம்பிக்கை ஊட்டுகிறது.
மூசசுக்காற்றை உள்ளே இழுத்துவிடும் சுவாசப்பயிற்சி நச்சை வெளியேற்றும்.
சுவாச பாதையை சுத்தப்படுத்தும். உடலுக்கு அதிகமான பிராண வாயு
கிடைக்க வழி செய்யும். நுரையீரலின் செயல்திறனை நன்கு வைத்திருக்க
உதவும்.

குறிப்பாக மன அழுத்தத்தை குறைக்கும். நாள்பட்ட சுவாச நோய்களுக்கு
மூச்சுப்பயிற்சி மற்றும் நடை பயிற்சியை முறையாக கடைபிடித்தால்
புதுவாழ்வு பெறலாம்.

-டாக்டர் மா.பழனியப்பன்
ஆஸ்துமா, நுரையீரல் சிகிச்சை நிபுணர்மதுரை.
நன்றி-தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 50589
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12694

https://rammalar.wordpress.com/

Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை