உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» கண்களை கலங்க வைக்காத காட்சியும் பாடலும்..
by ayyasamy ram Today at 1:12 pm

» நார்வேயிலிருந்து வந்தாச்சு வெதர் ரிப்போர்ட்..
by ayyasamy ram Today at 1:08 pm

» அசத்தலாக ஆங்கிலத்தில் எழுதி அசிங்கப்பட்ட அப்பாடக்கர்கள்...!
by சக்தி18 Today at 12:33 pm

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
by பழ.முத்துராமலிங்கம் Today at 12:26 pm

» படித்ததில் பிடித்தது - {பல்சுவை - தொடர்பதிவு}
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:15 am

» அப்படீங்களா!
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:00 am

» ஆவின் பால் பாக்கெட்டுகளில் திருவள்ளுவர் படத்தை அச்சடிப்பது குறித்து பரிசீலனை - ராஜேந்திர பாலாஜி
by பழ.முத்துராமலிங்கம் Today at 10:53 am

» சென்னைக்கு மின் தடை வராது
by பழ.முத்துராமலிங்கம் Today at 10:52 am

» புற்றுநோய் செல்களை அடியோடு அழிக்கும் கருப்பு எள்
by பழ.முத்துராமலிங்கம் Today at 10:49 am

» உணவில் நல்லெண்ணெய் அதிகம் சேர்ப்பதால் ஏற்படும் நன்மைகள்.
by பழ.முத்துராமலிங்கம் Today at 10:43 am

» சிலம்ப விளையாட்டில் கலக்கல்; 5 வயது சிறுமி அபார சாதனை
by பழ.முத்துராமலிங்கம் Today at 10:41 am

» பெரும் நஷ்டத்தில் மொபைல் சேவை நிறுவனங்கள்
by பழ.முத்துராமலிங்கம் Today at 10:39 am

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Today at 8:36 am

» இசை பயிற்சி அளிக்கும் வசுந்தரா தாஸ்
by ayyasamy ram Today at 8:12 am

» பேல்பூரி - தினமணி கதிர்
by ayyasamy ram Today at 8:00 am

» மைக்ரோ கதை
by ayyasamy ram Today at 7:58 am

» பொன்னீலனின் ‘கரிசல்’ நாவல் திரைப்படமாகிறது: இயக்குநா் பி.சி. அன்பழகன் தகவல்
by ayyasamy ram Today at 7:54 am

» அரசியலைவிட சினிமாதான் என் சாய்ஸ்! இரண்டாம் இன்னிங்க்ஸை தொடங்கிய நடிகை!
by ayyasamy ram Today at 7:53 am

» குடியரசு தின விழாவில் பிரேசில் அதிபர்
by ayyasamy ram Today at 7:22 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு
by ayyasamy ram Today at 3:50 am

» Rhoneda Byrne எழுதிய புத்தகம் தேவை
by prajai Yesterday at 11:11 pm

» உணவுகளின் போட்டோகள் II :) வெங்காய பக்கோடா !
by krishnaamma Yesterday at 9:49 pm

» அடுத்த பட்ஜெட்டில் வருமானவரி விகிதத்தை மாற்றி அமைக்க மத்திய அரசு பரிசீலனை
by krishnaamma Yesterday at 9:10 pm

» பல்வேறு கோவில்களில் நடந்த அன்னாபிஷேகங்களின் போட்டோக்கள் :)
by krishnaamma Yesterday at 9:08 pm

» குற்றம் – ஒரு பக்க கதை
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 5:11 pm

» “ `முன்னாடிக்கு இப்ப ரொம்ப அழகா இருக்க’னு டயலாக் வைக்கிறாங்க!” – `ஆயுத எழுத்து’ சீரியல் பிரச்னை
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 5:06 pm

» டுவிட்ட்டரில் அழுது கொண்டிருக்கும் இந்திய பெண்.உதவி நாடும் ஜாஸ்மின் சுல்தானா.
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 5:00 pm

» தத்தெடுத்த மகளின் கட்டுரை: சுஷ்மிதா சென் நெகிழ்ச்சிப் பகிர்வு
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:53 pm

» தினமும் 3 ஜி.பி. டேட்டா வழங்கும் பி.எஸ்.என்.எல். புதிய சலுகை
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:51 pm

» குறைந்து கொண்டே வரும் ‘நாணய’ புழக்கம்…! - ட்விட்டரில் ரசித்தவை
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:35 pm

» கோவை:ரயில் மோதி 4 மாணவர்கள் பலி
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:26 pm

» பிரிக்ஸ் இளம் கண்டுபிடிப்பாளருக்கான முதல் பரிசை பெற்றார் ரவி பிரகாஷ்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:22 pm

» "சந்தோஷம் மற்றும் அமைதி" வெளியில் கண்டிப்பாக இல்லை, அது நம்மில் நமக்குள் மட்டுமே இருக்கிறது.. !
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:19 pm

» பொறாமை – ஒரு பக்க கதை
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:13 pm

» நலமுடன் வாழ - குறிப்புகள்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:06 pm

» ஜோதிட குறிப்புகள்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:05 pm

» என்னது எனக்குப் பார்த்திருக்கிறது ஆர்கானிக் பெண்ணா?
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:02 pm

» கடலூர் மாவட்டத்தில் பிறந்த மகான்கள்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:01 pm

» வாட்டர் பெல் - கேரள பள்ளிக்கு குவியும் பாராட்டு
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 3:59 pm

» பல்லக்கு ஏன் இப்படி ஆடுகிறது..?
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 3:58 pm

» நன்றிக்கடன்- ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» ஒன்பது - பத்து செல்ஃபி டைம்..!!
by ayyasamy ram Yesterday at 12:29 pm

» கட்டிங் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 12:22 pm

» குழந்தைகள் தின வாழ்த்துகள்
by ayyasamy ram Yesterday at 11:04 am

» வானம் கொட்டட்டும் படத்தின் பாடலை வெளியிடும் ஏ.ஆர்.ரகுமான்
by ayyasamy ram Yesterday at 10:35 am

» 3 பேரை கொன்ற யானை அரிசி ராஜாவை பிடிக்க கபில்தேவ் என்ற கும்கி யானை வரவழைக்கப்பட்டுள்ளது.
by ayyasamy ram Yesterday at 8:06 am

» மந்த்ரான்னு ஒரு நடிகை இருந்தாங்களே!
by ayyasamy ram Yesterday at 8:04 am

» 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .
by prajai Wed Nov 13, 2019 11:14 pm

» பொருத்துக…
by krishnaamma Wed Nov 13, 2019 10:23 pm

» ஆர்.டி.ஐ. சட்ட வரம்பிற்குள் தலைமை நீதிபதி அலுவலகம் வரும் -உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
by ayyasamy ram Wed Nov 13, 2019 5:18 pm

Admins Online

இந்த நாள் இனிய நாள் -தினமணி வாசகர் கவிதை

இந்த நாள் இனிய நாள் -தினமணி வாசகர் கவிதை  Empty இந்த நாள் இனிய நாள் -தினமணி வாசகர் கவிதை

Post by ayyasamy ram on Fri Nov 08, 2019 6:09 pm

இந்த நாள் இனிய நாள் -தினமணி வாசகர் கவிதை  Bliss
-
இந்த நாள் இனிய நாள்!

அறுசீர் ஆசிரிய விருத்தம்
-------------------------
இந்த நாளும் இனிய நாளாய்
……….இன்பம் தரவே மகிழ்ந்திருந்தோம்..!
இந்த விடியல் இன்று சிறப்பாய்
……….இருந்த தென்று மனமகிழ்ந்தோம்..!
எந்த நாளும் என்ன நடக்கும்.?
……….ஏக்கம் கொண்டே காத்திருந்தோம்..!
வந்த நாள்கள் வருமே இனியும்
……….வளமை தருமே.? வாழ்வினிலே.?
.
அந்தம் சொந்தம் அறிவ தற்கே
……….ஆதி பகவன் துணையுமுண்டு..!
பந்தம் உண்டு பாசம் உண்டு
……….பற்று மிகுந்த உறவுமுண்டு..!
சொந்தம் எல்லாம் சுகமும் தரவே
……….சோகம் மறந்த காலமுண்டு..!
மந்த புத்தி மாந்த ரானால்
……….மனித நேயம் புரிந்திடுமா..?
.
எண்ணம் எல்லாம் எங்கும் விரவி
……….இனித்தி ருக்கும் போதினிலே..!
வண்ணம் ஆகும் வாழ்க்கை எல்லாம்
……….வளமை மிகும்நல் வார்த்தையாலே..!
மண்ணில் ஆசை மறுக்க மாதும்
……….மதுவும் சூதும் வெறுத்ததாலே..
எண்ணில் அடங்கா எழுச்சி பெறுமே
……….எந்தச் செயலும் செய்கையிலே..!

- கவிஞர் பெருவை பார்த்தசாரதி
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 49966
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12694

https://rammalar.wordpress.com/

Back to top Go down

இந்த நாள் இனிய நாள் -தினமணி வாசகர் கவிதை  Empty Re: இந்த நாள் இனிய நாள் -தினமணி வாசகர் கவிதை

Post by ayyasamy ram on Fri Nov 08, 2019 6:09 pmஇந்த நாள் இனிய நாளே,
காலை கண்விழித்தேன்,
உறுப்புகள் கொண்டுள்ளேன்,
வசிக்க கூரை இருக்கின்றது,
உடுத்த உடுப்புகள் இருக்கின்றது!
இத்தனை தொடர்வதே இந்நாளை இனிதாக்குகிறதே!

புத்துயிர்க்கும் சுவாச காற்றிற்கு நன்றி,
காண கிட்டும் வெளிச்சத்திற்கு நன்றி,
பருக சுவைக்கும் நீருக்கும் நன்றி!
எனை உயிர்ப்புடன் வைக்கும் பயிர்களுக்கும் நன்றி!
எனை வாழ்த்தி வளர்த்திட்ட உற்றாருக்கும் நன்றி!

நன்றி உரைக்க ஓராயிரம் பட்டியல் இருக்க,
இன்று துவங்கிய இந்த நாள் இனிய நாளே!

-செல்வா
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 49966
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12694

https://rammalar.wordpress.com/

Back to top Go down

இந்த நாள் இனிய நாள் -தினமணி வாசகர் கவிதை  Empty Re: இந்த நாள் இனிய நாள் -தினமணி வாசகர் கவிதை

Post by ayyasamy ram on Fri Nov 08, 2019 6:10 pmஇந்நாளில் எரிமலையே வெடிக்கும் என்றே
எவரேனும் அறிவாரா ? இயம்பற் கில்லை !
இந்நாளில் நிலநடுக்கம் நடக்கும் என்றே
ஏதேனும் அறிகுறிகள் ? இமியும் இல்லை !
இந்நாளில் கடுமழையே பெய்யும் என்றே
இயம்பலினும் மிகப்பெய்யும், தடுப்பார் இல்லை !
இந்நாளின் ஆழ்துயரம் தடுப்போம் என்றே
எவருள்ளார் இவ்வுலகில் ? சொல்வார் இல்லை !

இந்தநாளே இனியநாளாய் எண்ண வேண்டும் !
இனிமையுடன் ஏற்றமுடன் இலங்க வேண்டும் !
இந்தநாளே இனியநாளாய் இயங்க வேண்டும் !
எப்போதும் இனியவழி ஏற்க வேண்டும் !
இந்தநாள்போல் எந்நாளும் எழவே வேண்டும் !
இயன்றவரை இனியவையே செய்தல் வேண்டும் !
இந்தநாளே இனியநாளாய் இயம்ப வேண்டும் !
எந்ததமிழ்போல் எந்நாளும் இனிக்க வேண்டும் !

-ஆர்க்காடு. ஆதவன்

**
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 49966
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12694

https://rammalar.wordpress.com/

Back to top Go down

இந்த நாள் இனிய நாள் -தினமணி வாசகர் கவிதை  Empty Re: இந்த நாள் இனிய நாள் -தினமணி வாசகர் கவிதை

Post by ayyasamy ram on Fri Nov 08, 2019 6:10 pmஇந்த நாள் இனிய நாளே!

உலகில் யாதோர் மூலையில்,
நினையாதவை நிகழும் பொழுது,

உலகில் யாதோர் மூலையில்,
முடியாதவை நிகழும் பொழுது,

பூவாய் புலர்ந்த இந்நாள்
இலங்கும் பொன் நாளே!

புவிக்கோர் கதிரவன் உண்டு,
அவன் வந்து சென்று உயிரூட்டம் கொடுப்பதுண்டு!
மனிதனுக்கோர் மனமுண்டு
அதில் நல்லெண்ணம் பல முளைப்பதுண்டு!

மனமென்னும் தோட்டத்தை
மாயையில் மயங்காமல் பேணுவோம்!
நல் எண்ணம் தனை விதைத்து,
தீய எண்ணம் தனை அகற்றிடுவோம்!
ஒரு உழவன் போல் மனதினை தேற்றுவித்தால்!
ஐம்புலமும் நலமாகும் நல்லவை சாத்தியமாகும்!

விழி.எழு.விருட்சமாகுக!

-இனிய தமிழ் செல்வா, ஓமன்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 49966
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12694

https://rammalar.wordpress.com/

Back to top Go down

இந்த நாள் இனிய நாள் -தினமணி வாசகர் கவிதை  Empty Re: இந்த நாள் இனிய நாள் -தினமணி வாசகர் கவிதை

Post by ayyasamy ram on Fri Nov 08, 2019 6:10 pm


**
சென்ற நாள் மீண்டும் திரும்பிவரப் போவதில்லை
இன்றுதான் எங்களுக்கு இனிய நந்நாளாகும்
நாளை எதுநடக்கும்? நாமறியோம் ஆதலினால்
ஆற்றும் கடமைகளை அன்றே புரிந்துவிட்டால்
ஏற்கும் பொறுப்பெல்லாம் இலகுவாய் ஆகிவிடும்.
தாமசத்திலூறித் தவறவிட்டால் எம்பொறுப்பை
நாமிழக்கும் வாய்ப்பு நமையழித்து வீழ்த்திவிடும்.

காலம் அழிவதி்ல்லை காட்சிகள்தான் மாறுதென்பார்
ஞாலம் சுழல்கிறது நாமுமதிற் சுற்றுகிறோம்.
ஏலும் வரைக்கும் இவ்வுலகில் வாழ்ந்துவிட்டு
தூல உடலழிய சூனியத்திலே கலக்கும்
மாயப் பிரபஞ்ச வாழ்வைச் சதமென்று
எண்ணிக் கவலையின்றி என்றும் மகிழ்வோடு
ஆற்றிக் கடமைகளை அறத்தின் வழிநிற்க
ஏற்ற நாள் இந்நாள் எமக்கென்ற எண்ணமுடன்
போற்றித் தொடங்கல் பொறுப்பு.

- சித்தி கருணானந்தராஜா.

**
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 49966
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12694

https://rammalar.wordpress.com/

Back to top Go down

இந்த நாள் இனிய நாள் -தினமணி வாசகர் கவிதை  Empty Re: இந்த நாள் இனிய நாள் -தினமணி வாசகர் கவிதை

Post by ayyasamy ram on Fri Nov 08, 2019 6:11 pm


இனிய நாள் என்றுநான்
எந்தநாளைச் சொல்ல?
பிறந்த நாளைச் சொல்லவா? - அது
வெறும் செய்தி அல்லவா?
இந்த நாள் இனிய நாள் என்று
சொன்ன நாளது – பின்
வந்த நாளால் நொந்த நாளால்
துக்கநாள் ஆனது
சுவாசித்தல் அன்றி
வேறெதுவும் செய்யாத
நாட்கள் காலண்டரில் கிழிபடும்
தாள்கள்
வாழ்ந்த நாட்களைக் குப்பையில்
கொட்டியபின் காலம் வந்து
எரித்துவிடுகிறது
ஒருநாள்
சலவைசெய்த நாட்களைக்
கொடியில் தொங்கப் போட்டால்
ஈரத்துளிகள் சொட்டிக் கொண்டிருக்கின்றன

காலாவதி ஆகிவிட்ட
நாட்களில்
இனிய நாள் என்ன
இனி நாள் என்ன?

- கவிஞர் மஹாரதி
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 49966
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12694

https://rammalar.wordpress.com/

Back to top Go down

இந்த நாள் இனிய நாள் -தினமணி வாசகர் கவிதை  Empty Re: இந்த நாள் இனிய நாள் -தினமணி வாசகர் கவிதை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை