உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» கலிபோர்னியா மாநிலத்தில் ரெயில்வே பிளாட்பாரத்தில் சாண்ட்விச் சாப்பிட்டவருக்கு கைவிலங்கு
by ayyasamy ram Today at 1:21 pm

» கண்களை கலங்க வைக்காத காட்சியும் பாடலும்..
by ayyasamy ram Today at 1:12 pm

» நார்வேயிலிருந்து வந்தாச்சு வெதர் ரிப்போர்ட்..
by ayyasamy ram Today at 1:08 pm

» அசத்தலாக ஆங்கிலத்தில் எழுதி அசிங்கப்பட்ட அப்பாடக்கர்கள்...!
by சக்தி18 Today at 12:33 pm

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
by பழ.முத்துராமலிங்கம் Today at 12:26 pm

» படித்ததில் பிடித்தது - {பல்சுவை - தொடர்பதிவு}
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:15 am

» அப்படீங்களா!
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:00 am

» ஆவின் பால் பாக்கெட்டுகளில் திருவள்ளுவர் படத்தை அச்சடிப்பது குறித்து பரிசீலனை - ராஜேந்திர பாலாஜி
by பழ.முத்துராமலிங்கம் Today at 10:53 am

» சென்னைக்கு மின் தடை வராது
by பழ.முத்துராமலிங்கம் Today at 10:52 am

» புற்றுநோய் செல்களை அடியோடு அழிக்கும் கருப்பு எள்
by பழ.முத்துராமலிங்கம் Today at 10:49 am

» உணவில் நல்லெண்ணெய் அதிகம் சேர்ப்பதால் ஏற்படும் நன்மைகள்.
by பழ.முத்துராமலிங்கம் Today at 10:43 am

» சிலம்ப விளையாட்டில் கலக்கல்; 5 வயது சிறுமி அபார சாதனை
by பழ.முத்துராமலிங்கம் Today at 10:41 am

» பெரும் நஷ்டத்தில் மொபைல் சேவை நிறுவனங்கள்
by பழ.முத்துராமலிங்கம் Today at 10:39 am

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Today at 8:36 am

» இசை பயிற்சி அளிக்கும் வசுந்தரா தாஸ்
by ayyasamy ram Today at 8:12 am

» பேல்பூரி - தினமணி கதிர்
by ayyasamy ram Today at 8:00 am

» மைக்ரோ கதை
by ayyasamy ram Today at 7:58 am

» பொன்னீலனின் ‘கரிசல்’ நாவல் திரைப்படமாகிறது: இயக்குநா் பி.சி. அன்பழகன் தகவல்
by ayyasamy ram Today at 7:54 am

» அரசியலைவிட சினிமாதான் என் சாய்ஸ்! இரண்டாம் இன்னிங்க்ஸை தொடங்கிய நடிகை!
by ayyasamy ram Today at 7:53 am

» குடியரசு தின விழாவில் பிரேசில் அதிபர்
by ayyasamy ram Today at 7:22 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு
by ayyasamy ram Today at 3:50 am

» Rhoneda Byrne எழுதிய புத்தகம் தேவை
by prajai Yesterday at 11:11 pm

» உணவுகளின் போட்டோகள் II :) வெங்காய பக்கோடா !
by krishnaamma Yesterday at 9:49 pm

» அடுத்த பட்ஜெட்டில் வருமானவரி விகிதத்தை மாற்றி அமைக்க மத்திய அரசு பரிசீலனை
by krishnaamma Yesterday at 9:10 pm

» பல்வேறு கோவில்களில் நடந்த அன்னாபிஷேகங்களின் போட்டோக்கள் :)
by krishnaamma Yesterday at 9:08 pm

» குற்றம் – ஒரு பக்க கதை
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 5:11 pm

» “ `முன்னாடிக்கு இப்ப ரொம்ப அழகா இருக்க’னு டயலாக் வைக்கிறாங்க!” – `ஆயுத எழுத்து’ சீரியல் பிரச்னை
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 5:06 pm

» டுவிட்ட்டரில் அழுது கொண்டிருக்கும் இந்திய பெண்.உதவி நாடும் ஜாஸ்மின் சுல்தானா.
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 5:00 pm

» தத்தெடுத்த மகளின் கட்டுரை: சுஷ்மிதா சென் நெகிழ்ச்சிப் பகிர்வு
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:53 pm

» தினமும் 3 ஜி.பி. டேட்டா வழங்கும் பி.எஸ்.என்.எல். புதிய சலுகை
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:51 pm

» குறைந்து கொண்டே வரும் ‘நாணய’ புழக்கம்…! - ட்விட்டரில் ரசித்தவை
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:35 pm

» கோவை:ரயில் மோதி 4 மாணவர்கள் பலி
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:26 pm

» பிரிக்ஸ் இளம் கண்டுபிடிப்பாளருக்கான முதல் பரிசை பெற்றார் ரவி பிரகாஷ்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:22 pm

» "சந்தோஷம் மற்றும் அமைதி" வெளியில் கண்டிப்பாக இல்லை, அது நம்மில் நமக்குள் மட்டுமே இருக்கிறது.. !
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:19 pm

» பொறாமை – ஒரு பக்க கதை
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:13 pm

» நலமுடன் வாழ - குறிப்புகள்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:06 pm

» ஜோதிட குறிப்புகள்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:05 pm

» என்னது எனக்குப் பார்த்திருக்கிறது ஆர்கானிக் பெண்ணா?
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:02 pm

» கடலூர் மாவட்டத்தில் பிறந்த மகான்கள்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:01 pm

» வாட்டர் பெல் - கேரள பள்ளிக்கு குவியும் பாராட்டு
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 3:59 pm

» பல்லக்கு ஏன் இப்படி ஆடுகிறது..?
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 3:58 pm

» நன்றிக்கடன்- ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» ஒன்பது - பத்து செல்ஃபி டைம்..!!
by ayyasamy ram Yesterday at 12:29 pm

» கட்டிங் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 12:22 pm

» குழந்தைகள் தின வாழ்த்துகள்
by ayyasamy ram Yesterday at 11:04 am

» வானம் கொட்டட்டும் படத்தின் பாடலை வெளியிடும் ஏ.ஆர்.ரகுமான்
by ayyasamy ram Yesterday at 10:35 am

» 3 பேரை கொன்ற யானை அரிசி ராஜாவை பிடிக்க கபில்தேவ் என்ற கும்கி யானை வரவழைக்கப்பட்டுள்ளது.
by ayyasamy ram Yesterday at 8:06 am

» மந்த்ரான்னு ஒரு நடிகை இருந்தாங்களே!
by ayyasamy ram Yesterday at 8:04 am

» 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .
by prajai Wed Nov 13, 2019 11:14 pm

» பொருத்துக…
by krishnaamma Wed Nov 13, 2019 10:23 pm

Admins Online

எந்த ராசிக்காரர் எந்த நோயால் பாதிக்கப்படுவார்கள் என்று விரிவாக பார்க்கலாம்.

எந்த ராசிக்காரர் எந்த நோயால் பாதிக்கப்படுவார்கள் என்று விரிவாக பார்க்கலாம். Empty எந்த ராசிக்காரர் எந்த நோயால் பாதிக்கப்படுவார்கள் என்று விரிவாக பார்க்கலாம்.

Post by T.N.Balasubramanian on Thu Nov 07, 2019 9:49 pm

12 ராசிக்காரர்களும் சில குறிப்பிட்ட நோயால் பாதிக்கப்படுவார்கள். எந்த ராசிக்காரர் எந்த நோயால் பாதிக்கப்படுவார்கள் என்று விரிவாக பார்க்கலாம்.
ஒவ்வொரு ராசிக்கும் என்ன பாதிப்பு? நாம் பிறக்கும் போதே, நம்மால் கட்டுப்படுத்த முடியாததாகிவிடுகிறது ஜாதகம். இருப்பினும் நாம் இந்த பிறவியில் செய்யும் செயலால் நாம் நற்பேறு அடைய முடியும்.

இருப்பினும் ஜோதிட ரீதியாக ஒவ்வொரு ராசியில் பிறந்தவர் ஒரு குறிப்பிட்ட நோயால் பாதிக்கப்படுவார் என குறிப்பிடப்படுகின்றது. அது என்ன என்பதைப் பார்ப்போம்...
மேஷம் செவ்வாயை ராசி நாதனாக கொண்ட மேஷ ராசியினர் பொதுவாக ரத்தம் சார்ந்த நோய்கள் ஏற்படலாம். இதய நோய், பைல்ஸ், விந்து குறைபாடு இருக்கலாம்.
மேஷ ராசியினர் குறிப்பிட்டு சொல்ல வேண்டுமெனில் எதையும் அதிகமாக சிந்திக்கும் மூளையை உடையவர்கள். இதனால் எரிச்சலும், கோபமும் அடையக் கூடியவர்களாக இருப்பர். இதனால் தலைவலி ஏற்படலாம். பல் வலி, பல் கடித்தல் போன்ற பிரச்னைகளும் இருக்கக் கூடும். இது எல்லாமே சாதாரணமாக மேஷ ராசியினருக்கு ஏற்படக் கூடும்.
மேஷ ராசிக்காரர்கள் வழிபட வேண்டிய தெய்வம் பிள்ளையார். சொல்ல வேண்டியது விநாயகர் துதி
ரிஷபம் தொண்டை, கீழ் தாடை, இன்சுலின் சுரத்தல் ஆகியவற்றை கட்டுப்படுத்துபவராக இருக்கும் சுக்கிரனை ராசி நாதனாக கொண்டவர்கள் ரிஷப ராசியினர்.
இதன் காரணமாக இவர்களுக்கு அழகான, திடமான பற்கள், கூர்மையாக கேட்கக் கூடிய காதுகள் கொண்டவர்களாக இருப்பார்கள்.
இவர்கள் அடிக்கடி சளி மற்றும் காய்ச்சலால் அவதியுறுவார்கள். அதோடு சுக்கிரன் வலுவடைந்து இருந்தால் தொண்டை தொற்று, கழுத்து மற்றும் காது தொற்று ஏற்படலாம். தைராய்டு பிரச்சினை சந்திக்கக் கூடும்.
பொதுவாக கருப்பை கோளாறு, கருக்கலைப்பு, நீரழிவு, தோல் நோய் ஏற்படக் கூடும். மிகவும் பிடிவாத குணம் கொண்டவராக இருப்பார்கள்.ரிஷப ராசிக்காரர்கள் நிச்சயம் வழிபட வேண்டிய தெய்வம் முருகப் பெருமான். சொல்ல வேண்டிய துதி முருகன்.

 மிதுனம் இரட்டையர்கள் என அறியப்படும் மிதுனத்திற்கு புதன் பகவான் ராசி நாதனாக இருக்கின்றார். இதன் காரணமாக உடலில் இருக்கும் இரட்டை அமைப்பான மூட்டுகள், சுவாச அமைப்பு உள்ளிட்டவை பாதிக்கப்படும்.
அடிக்கடி சளித்தொல்லையால் பாதிக்கப்படுவது, தீவிர காய்ச்சல், இருமலாலும், தசைநாண் அழற்சி ஏற்பட வாய்ப்புள்ளது.
அதுமட்டுமல்லாமல் வயிற்று கோளாறு, தொழுநோய், குழந்தை இன்மை, தோல் நோய்கள், மனநல கோளாறு, வழுக்கை போன்றவைகளும் ஏற்படக் கூடும்.
மிதுன ராசிக்காரர்கள் வழிபட வேண்டிய தெய்வம் பெருமாள் சொல்ல வேண்டியது பெருமாள் துதி.
கடகம் கடக ராசிக்கு சந்திரன் ராசி நாதனாக உள்ளார். இவர்களுக்கு செரிமான அமைப்பு, வயிறு நேரடி தொடர்பில் உள்ளதால் இது சார்ந்த பிரச்சினைகளுக்கு உள்ளாவார்கள்.
சந்திரனின் ஆளுமை இருப்பதால் அதிக கோபம் மற்றும் வலியை கட்டுப்படுத்த முடியவில்லை என்றால் வயிற்றில் அல்சர், குடல் சார்ந்த பிரச்சினைகள், செரிமான பிரச்சினையால் அவதிப்படுவார்கள்.
இவர்களுக்கு சளி, கபம், இருமல், அம்மை நோய்கள், கல்லீரல், மண்ணீரல் சார்ந்த நோய் ஏற்படலாம். கண் நோய்களும், காய்ச்சல், டைபாய்டு ஏற்படக் கூடும்.
அம்மன் வழிபாடு அவசியம். காமட்சி அம்மன், குமரி பகவதி அம்மன், ஆண்டாள் வழிபாடு செய்தால் குறை தீரும்.
.சிம்மம் சூரிய ஆதிக்கத்துடன் இருக்கும் சிம்ம ராசியினருக்கு, இதயம் மூலமாக ரத்தத்தை உடலுக்கு அனுப்பி ஆளக்கூடியவர். இதனால் எப்போது அதிகாரத்துடன் இருப்பார். தன்னம்பிக்கை அதிகமாக இருக்கக் கூடும்.
அதே சமயம் வலுவிழந்த சிம்ம ராசியினர் முதுகு பிரச்சினை, இதயம், ஊக்கமின்மை ஆகியவற்றால் பாதிக்கப்படுவார்கள். பொதுவாக காய்ச்சல், வயிறு பிரச்சினை, பித்த, கண் நோய் ஏற்படக் கூடும்.தினமும் சூரிய நமஸ்காரம், சூரிய வழிபாடு மிகவும் சிறந்த பலன்களை தரக்கூடும். சிவனை வழிபட்டுவர உங்கள் எல்லா பிரச்னைகளும் தீர்ந்து நிம்மதியை தரும்.
கன்னி புதன் பகவான் ஆளும் கன்னி ராசியினர் சுவை நரம்புகளை கட்டுப்படுத்தக் கூடியவர்களாக இருப்பதால், என்ன உணவை உண்ண வேண்டும் என்பதை அறிந்து நடப்பர். இது நேரடியாக வயிறு மற்றும் குடல் சார்ந்தது.

கன்னி ராசிக்கான சிறப்பான காலத்தில் அனைத்தும் சிறப்பாக இருக்கும். இல்லாவிட்டால் வயிறு சார்ந்த, செரிமாணம், மலச்சிக்கல் போன்ற சிக்கல்கள் ஏற்படக் கூடும். ஓய்வின்மை இருக்கும். சிலருக்கு தோல் நோய் இருக்கக் கூடும்.
பெருமாளை தரிசிப்பதும், முருகப்பெருமானை சேவிப்பதும் அனைத்து சிக்கலிலிருந்தும், நோய்களிலிருந்தும் விடுபட வைக்கும். -

சமயம் எந்த ராசிக்காரர் எந்த நோயால் பாதிக்கப்படுவார்கள் என்று விரிவாக பார்க்கலாம். 1571444738

ரமணியன்

தொடர்கிறது


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 25530
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9232

Back to top Go down

எந்த ராசிக்காரர் எந்த நோயால் பாதிக்கப்படுவார்கள் என்று விரிவாக பார்க்கலாம். Empty Re: எந்த ராசிக்காரர் எந்த நோயால் பாதிக்கப்படுவார்கள் என்று விரிவாக பார்க்கலாம்.

Post by T.N.Balasubramanian on Thu Nov 07, 2019 9:55 pm

துலாம் நியாயத்திற்காக நடுவில் நிற்கும் துலா ராசியினர், அவர்களை சுற்றி நல்ல மகிழ்ச்சியான சூழல் நிலவ வேண்டும் என விரும்புவார்கள். துலாம்ராசியை ஆளும் சுக்கிரன், சிறுநீரகங்கள், சிறுநீர்ப்பையை ஆளும்.
சிறப்பாக வாழும் துலாம் ராசியினர் சில சிக்கலான காலங்களால் சிறுநீரகம் சார்ந்த பிரச்சினைகள் ஏற்படலாம். அதனால் இது தொடர்பாக கவனமாக இருப்பது நல்லது.
மற்றபடி சறும பிரச்சினை, கண் பிரச்சினை, வாயுத்தொல்லை ஏற்படலாம்.
நடராஜர், நரசிம்மர், முருகனின் வழிபாடு அவசியம்.
விருச்சிகம் எப்போதும் சுறுசுறுப்பாக, விடா முயற்சியுடன் இருக்கும் விருச்சிக ராசியினர், மறுபுறம் பொறாமை குணமும், தானக்கு சொந்தமாவர்கள் என நினைப்பவர்கள் மீது அதிக அதிகாரம், ஆட்டிப்படைக்கும் குணத்தை கொண்டிருப்பார்கள்.
இவர்களுக்கு சில சுரப்பிகள் மற்றும் இனப்பெருக்கு மண்டல பிரச்சினை ஏற்படலாம். பெண்களுக்கு சீரற்ற மாதவிடாய் ஏற்படுதல் இருக்கலாம். சிறுநீரக தொற்று ஏற்படக் கூடும். தோல் நோய் ஏற்படலாம்.
முறையான உடற்பயிற்சி இவர்களை நோயிலிருந்து காக்கும். அதோடு லட்சுமியுடன் இருக்கும் பெருமாள், முருகன் வழிபாடு வாழ்வில் ஏற்றத்தை தரும்.
தனுசு குரு ஆளும் தனுசு ராசியினர் அவர்களின் கண் பார்வை, கல்லீரல், தொடை ஆகியவற்றின் மீது அதிக கவனம் எடுத்துக் கொள்ளுவது நல்லது.
அளவுக்கு அதிகமான நம்பிக்கையுடன் இருப்பதும், பார்வை பாதித்தல், முதுகெலும்பு பிரச்சினை, நச்சுத்தன்மையால் பாதிக்கப்படுதல் போன்ற சிக்கல்கள் உண்டாகக் கூடும்.
இவர்கள் முறையான மற்றும் சத்துள்ள உணவுகளை எடுத்துக் கொள்ளுதல், ஆன்மீக வழிபாடு நன்மையை தரும். அம்மன் வழிபாடு அதாவது காமாட்சி, மாரியம்மன் வழிபாடும், கணபதி வழிபாடு நன்மையை தரும்.
மகரம் கடின உழைப்பாளிகளாக இருக்கும் மகர ராசியினர், பிடிவாத குணத்துடனும் இருப்பார்கள். சில நேரம் இது தங்களின் லட்சியத்தை அடைய வைக்கக்கூடியதாகவும் இருக்கலாம். இவர்களுக்கு எலும்பு மற்றும் மூட்டு சார்ந்த பிரச்சினைகள் ஏற்படலாம். மூட்டு வலுவிழத்தலும் இருக்கும்.
இவர்கள் ஒரு விஷயத்தை பிடிவாதம் செய்து பெறுவதை விட, மாற்று வழியில் அதை அடைய நினைப்பது நல்லது. பெருமாளை வணங்கி வர அனைத்து சிக்கலும், இன்னல்களும் தீரும்.
கும்பம் சனி பகவான் ஆளும் கும்ப ராசிக்கு நரம்புகளின் ஓட்டத்திற்கும், அதை கட்டுப்படும் பொறுப்புகளை அடக்கியது. இவர்கள் ஓய்வில்லாமல் இருக்கக்கூடியவர்கள். இவர்கள் தங்களுக்கு என நேரம் ஒதுக்கு உடலுக்கு புத்துணர்ச்சியை ஏற்படுத்திக் கொள்வது அவசியம். இல்லையெனில் இதய நோய்கள், மூட்டு வீக்கம், வாதம், சுருள் நரம்பு, அலர்ஜி, ஆஸ்துமா உள்ளிட்ட உடல் பிரச்சினைகளைச் சந்திக்கக் கூடும்.
பைரவர் வழிபாடு, சிவனை வணங்கி வர அனைத்தும் நன்மையாக அமையும்.
மீனம் எல்லாவற்றிலும் நேர்மறையாக சிந்திக்கும் மீன ராசியினர், அது நடைமுறைக்கு சாத்தியமாக இல்லாமல் போகும் போது மன அழுத்தம், மன சோர்வு ஏற்படக் கூடும். அதுமட்டுமல்லாமல் சரியாக உணவை எடுத்துக்கொள்ளாததால் நோய் எதிர்ப்பு சக்தியை இழக்கும் நபர்களாக இருப்பார்கள். இதனால் பல வியாதிகளை அவர்களே உண்டாக்கிக் கொள்வார்கள்.
முறையாக, நல்ல உணவை எடுத்துக் கொள்வது, ஆன்மிக வழிபாடு, நற்சிந்தனைகள் நன்மை பயக்கும். முருகப்பெருமானை தரிசிப்பதாலும், ராம நாமத்தை உறைக்கும் அனுமனை தரிசித்து அனைத்து நன்மைகளையும் பெறுங்கள்.

சமயம் எந்த ராசிக்காரர் எந்த நோயால் பாதிக்கப்படுவார்கள் என்று விரிவாக பார்க்கலாம். 1571444738

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 25530
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9232

Back to top Go down

எந்த ராசிக்காரர் எந்த நோயால் பாதிக்கப்படுவார்கள் என்று விரிவாக பார்க்கலாம். Empty Re: எந்த ராசிக்காரர் எந்த நோயால் பாதிக்கப்படுவார்கள் என்று விரிவாக பார்க்கலாம்.

Post by krishnaamma on Thu Nov 07, 2019 10:12 pm

நன்றி ஐயா புன்னகை.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 59071
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 11965

Back to top Go down

எந்த ராசிக்காரர் எந்த நோயால் பாதிக்கப்படுவார்கள் என்று விரிவாக பார்க்கலாம். Empty Re: எந்த ராசிக்காரர் எந்த நோயால் பாதிக்கப்படுவார்கள் என்று விரிவாக பார்க்கலாம்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை