உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» கோபுர தரிசனம் - தொடர் பதிவு
by சக்தி18 Yesterday at 9:07 pm

» பெரியாரும் ரஜினியும்
by சக்தி18 Yesterday at 9:01 pm

» டெபிட் காட் -சாப்பிட்டது 4,181 ரூபாய்க்கு,இழந்தது 4,10,036 ரூபாய்
by சக்தி18 Yesterday at 8:58 pm

» மங்கையர் திலகங்கள் தொடர்ச்சி--
by சக்தி18 Yesterday at 8:50 pm

» ஆறாத் துயரம் மாறாதோ ?
by M.Jagadeesan Yesterday at 8:40 pm

» மங்கையர் திலகம் --நகைச்சுவைக்காக
by T.N.Balasubramanian Yesterday at 8:03 pm

» கங்கை கொண்ட சோழன் - பாலகுமாரன்
by Guest Yesterday at 1:08 pm

» வேலன்:-காமிக்ஸ் புத்தகங்களை படிக்க-comic book reader
by velang Yesterday at 8:37 am

» புத்தகம் தேவை : இறையன்பு IAS
by Guest Mon Jan 20, 2020 11:27 pm

» ஈகரையை படிக்க மட்டும் செய்பவர்கள் இங்கே செல்லலாம் -RSS
by T.N.Balasubramanian Mon Jan 20, 2020 8:13 pm

» இளவரசர் பட்டத்தை துறந்தார் ஹாரி
by T.N.Balasubramanian Mon Jan 20, 2020 6:40 pm

» கடந்த 5 ஆண்டுகளில் 2200 மத்திய ஆயுதப்படை வீரர்கள் தற்கொலை
by பழ.முத்துராமலிங்கம் Mon Jan 20, 2020 11:19 am

» வாழ்த்தலாம் வாருங்கள் உறவுகளே, க்ரிஷ்ணாம்மா அவர்களின் பிறந்த தினம்.
by பழ.முத்துராமலிங்கம் Mon Jan 20, 2020 11:09 am

» பிறந்தநாள் பரிசு!
by பழ.முத்துராமலிங்கம் Mon Jan 20, 2020 11:02 am

» நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்.
by பழ.முத்துராமலிங்கம் Mon Jan 20, 2020 10:56 am

» ட்ரீட்மென்டுக்கு டி.வி.சீரியல்ல வர்ற டாக்டர்கிட்டதான் போகணுமாம்..!!
by பழ.முத்துராமலிங்கம் Mon Jan 20, 2020 10:51 am

» பேலஸ் தியேட்டரில் இரண்டு இருக்கைகள் காலி!
by பழ.முத்துராமலிங்கம் Mon Jan 20, 2020 10:50 am

» பெண் குழந்தைகளுக்கு மரியாதை!
by பழ.முத்துராமலிங்கம் Mon Jan 20, 2020 10:49 am

» வேலன்:-யூடியூப் வீடியோக்களை MP3 பைல்களாக பதிவிறக்கம் செய்திட-4K Youtube to MP3
by velang Mon Jan 20, 2020 7:20 am

» ஊரார் குறைகளை அடுக்கும் முன்…(கவிதை)
by ayyasamy ram Mon Jan 20, 2020 5:23 am

» ஜன., 23 நேதாஜி பிறந்த தினம்
by ayyasamy ram Mon Jan 20, 2020 5:18 am

» வினோபாஜி ஆன்மிக சிந்தனைகள்
by ayyasamy ram Mon Jan 20, 2020 4:45 am

» ஷீரடியில் முழு 'பந்த்' : கோவில் மட்டும் இயங்கியது
by ayyasamy ram Mon Jan 20, 2020 4:38 am

» மைசூரு: மேயர் பதவியை பிடித்த முஸ்லிம் பெண்
by ayyasamy ram Mon Jan 20, 2020 4:35 am

» மத ஒற்றுமைக்கு உதாரணமாக மசூதியில் ஹிந்து திருமணம்
by ayyasamy ram Mon Jan 20, 2020 4:30 am

» களத்தில் மட்டும் தான் வீரன்: கருணை காட்டிய காளை
by T.N.Balasubramanian Sun Jan 19, 2020 7:48 pm

» இவை யாவும் உங்களுடன் பகிரும் இன்பம் கொடு.---- [b]மீள் பதிவு [/b]
by T.N.Balasubramanian Sun Jan 19, 2020 7:05 pm

» கணிதப் புதிர்- தொண்ணூறிலிருந்து எழுபத்தைந்து...
by T.N.Balasubramanian Sun Jan 19, 2020 6:43 pm

» அவரை பிரிந்ததால் போதைக்கு அடிமையானேன் - விஷ்ணு விஷால்
by T.N.Balasubramanian Sun Jan 19, 2020 6:39 pm

» சென்னையில் புதுப்பொண்ணு……………..அன்று
by சக்தி18 Sun Jan 19, 2020 2:47 pm

» இதப்படிங்க முதல்ல...(சினிமா செய்திகள்- வாரமலர்)
by சக்தி18 Sun Jan 19, 2020 12:58 pm

» அச்சம் என்பது மடமையடா!
by சக்தி18 Sun Jan 19, 2020 12:47 pm

» சினிமா- பழைய பாடல்கள்- காணொளிகள்
by சக்தி18 Sun Jan 19, 2020 12:34 pm

» கணினி/இணைய உலகில் ஒரு சில துளி டிப்ஸ்
by சக்தி18 Sun Jan 19, 2020 12:31 pm

» அருமையான வாழைப்பூ புளிக்குழம்பு
by ayyasamy ram Sun Jan 19, 2020 10:38 am

» தூங்குவதும் தனி ‘டயட்’ தான்
by ayyasamy ram Sun Jan 19, 2020 10:36 am

» வேலன்:-வீடியோவில் உள்ள சப் டைடிலை நீக்கிட-MKV Tool Nix
by velang Sun Jan 19, 2020 7:45 am

» வேலன்:-இரண்டு தேதிகளுக்கு இடைப்பட்ட நாட்களை கணக்கிட-Calculator Days
by velang Sun Jan 19, 2020 7:43 am

» இந்தியா-ஆஸ்திரேலியா மோதும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி: பெங்களூருவில் இன்று நடக்கிறது
by ayyasamy ram Sun Jan 19, 2020 7:26 am

» செல்ஃபி மோகத்தால் இளம் பெண்ணுக்கு முகத்தில் 40 தையல்
by ayyasamy ram Sun Jan 19, 2020 7:22 am

» யானை சிலை கோயில்
by ayyasamy ram Sun Jan 19, 2020 7:13 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு
by ayyasamy ram Sun Jan 19, 2020 6:59 am

» சீனாவை மிரட்டும் 'கொரனோ' வைரஸ்: கோவை விமான நிலையத்தில், 'அலர்ட்'
by ayyasamy ram Sun Jan 19, 2020 6:54 am

» கார் விபத்தில் காயமடைந்த நடிகை ஷபானா ஆஸ்மி குணமடைய மோடி பிரார்த்தனை
by ayyasamy ram Sun Jan 19, 2020 6:53 am

» வசூல்ராஜா பட பாணியில் தேர்வெழுத வந்த இளைஞர்
by ayyasamy ram Sat Jan 18, 2020 10:41 pm

» ஈகரையில் இந்து என்ற தலைப்பில் வந்த..........
by T.N.Balasubramanian Sat Jan 18, 2020 10:18 pm

» இரட்டை வேடத்தில் யோகிபாபு
by ayyasamy ram Sat Jan 18, 2020 7:42 pm

» நயன்தாராவுக்கு அண்ணன்
by ayyasamy ram Sat Jan 18, 2020 7:40 pm

» விண்ணைத்தொடும் கட்டடங்கள்
by ayyasamy ram Sat Jan 18, 2020 7:34 pm

» ஆஹா கோதுமை ரெசிப்பிகள்
by ஜாஹீதாபானு Sat Jan 18, 2020 5:16 pm

Admins Online

‘காந்தியும், வெள்ளாடும்...!’ சித்தரஞ்சன் தாஸ் பிறந்தநாள் சிறப்புப் பகிர்வு

‘காந்தியும், வெள்ளாடும்...!’ சித்தரஞ்சன் தாஸ் பிறந்தநாள் சிறப்புப் பகிர்வு Empty ‘காந்தியும், வெள்ளாடும்...!’ சித்தரஞ்சன் தாஸ் பிறந்தநாள் சிறப்புப் பகிர்வு

Post by ayyasamy ram on Thu Nov 07, 2019 3:58 pm

‘காந்தியும், வெள்ளாடும்...!’ சித்தரஞ்சன் தாஸ் பிறந்தநாள் சிறப்புப் பகிர்வு Vikatan%2F2019-05%2F67f4d4d8-96c2-4b0f-bc00-a3243485ae82%2F71454_thumb
-
‘‘இந்தியாவை வாள்கொண்டு வென்றதாகப் பலரும் பேசுகின்றனர்...
வென்ற வாள்கொண்டே கட்டியாள வேண்டும் என்றும் கூறுகின்றனர்.
வாள் வலி கொண்டு ஒரு தேசத்தாரை என்றும் கட்டியாள இயலாது.
அன்பின் வலிகொண்டு அணைத்து ஆதரித்தலே நேசத்தை வளர்க்கும்...
பகை உணர்ச்சியைப் போக்கும்’’ என்றவர் தேசபந்து சித்தரஞ்சன் தாஸ். அவருடைய பிறந்த தினம் இன்று.
-
‘காந்தியும், வெள்ளாடும்...!’ சித்தரஞ்சன் தாஸ் பிறந்தநாள் சிறப்புப் பகிர்வு T7bapo0dS43XD4JMqFYQ+d63546a7-9c35-461c-8a5a-5083de55ed27
--
‘‘சித்தரஞ்சா... ஏன் இப்படிச் செய்கிறாய்?’’


இவர், வங்கதேசத்தில் உள்ள விக்ரம்புதூரில் 1870-ம் ஆண்டு
பூபன் மோகன்தாஸ் என்பவருக்கு மகனாகப் பிறந்தார். சிறுவயதிலேயே குறும்புத்தனம் செய்யக்கூடியவரான சித்தரஞ்சன், தன் சக வயதுடைய பிள்ளைகளுக்கு தின்பண்டங்கள் கொடுத்து மகிழ்வார்.

அதேநேரத்தில் அவர்கள் பாதி தின்கின்றபோதே அதைப் பிடுங்கிக்கொள்வார். ‘‘சித்தரஞ்சா... ஏன் இப்படிச் செய்கிறாய்’’ என்று அவர்கள் கேட்டால், அந்தப் பண்டங்களை எச்சில்படுத்திக் கடித்து விட்டுத் திரும்பக்கொடுப்பார்.

அதேபோல், விளையாட்டுப் பொம்மைகளைக் காட்டி அவர்களுக்கு எட்டாதபடி தூக்கிப்பிடித்து விளையாடுவார். இதேபோன்று சில சமயம் குழந்தைகளை, ‘‘விளையாட வாருங்கள்’’ என்று அழைப்பார்.

அவர்கள் வந்ததும்... ‘‘எனக்கு வீட்டில் வேலை இருக்கிறது’’ என்று சொல்லி ஓடிவிடுவார். இப்படி, அவருடைய குறும்புகளுக்கு அளவே இல்லாமல் போனது. ஆனாலும் வீட்டில் நல்லவர் என்றே பெயரெடுத்தார்.

இவருடைய விளையாட்டுத்தனத்தால் பிள்ளைக்கு படிப்பு வராதோ என்று பெற்றோர் கவலைப்பட்டனர். புத்தகமும், கையுமாய் அவர் இல்லாது இருந்தபோதும் ஆசிரியர் நடத்தும் பாடத்தை அப்படியே மனதில் நினைவுப்படுத்திக் கொள்வதுடன் தேர்வுகளிலும் முதலிடம் பிடிப்பார்.

‘‘வெள்ளையரின் நடுவே ஒரு கறுப்பர்!’’

கல்லூரியில் படித்தபோது மாணவர் சங்கம் ஒன்றை நிறுவினார். அதன்வழி சுரேந்திர நாத் பானர்ஜி, சித்தரஞ்சனுக்கு நன்கு அறிமுகமானார். இதன் காரணமாக, அவரது நெஞ்சில் தேச பக்தி பாய ஆரம்பித்தது. சித்தரஞ்சனின் அரசியல் குருவானார் பானர்ஜி. அது ஒருபுறமிக்க, அவரது பெற்றோர் சித்தரஞ்சனை ஐ.சி.எஸ்-ஸில் பணிபுரிய வைப்பதற்காக அவரை இங்கிலாந்துக்கு படிக்க அனுப்பி வைத்தனர்.

அதற்கான தகுதியும், வாய்ப்பும் இருந்தபோதும் அதில் தேற முடியாத சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டார். அந்தக் காலத்தில் இந்தியாவில் நிகழும் குற்றம் குறைகளை முறையிட்டுக் கொள்வதற்கு இங்கிலாந்தில் காமன்ஸ் சபை என்ற ஒன்று இருந்தது. அதுதான் இந்தியாவின் அரசியல் தலைவிதியை வரையறுக்கும் பொறுப்பு வாய்ந்ததாகக் கருதப்பட்டது.

அதில் ஆங்கிலேயரே அதிகம் இருந்தனர். அந்தச் சபைக்கான தேர்தல் வேட்பாளராய் தாதாபாய் நெளரோஜியும் களத்தில் நின்றார். அப்போது ஓர் ஆங்கிலேயர், நெளரோஜியைப் பார்த்து, ‘‘வெள்ளையரின் நடுவே ஒரு கறுப்பர்’’ என்று சொல்ல... இங்கிலாந்தில் இருந்த சித்தரஞ்சனுக்கு இது ஆத்திரத்தை ஏற்படுத்தியது. ‘‘தோலின் நிறம்கொண்டு ஒரு தேசத்தாருக்கு உயர்வோ, தாழ்வோ உண்டாகாது. உயர்வினுக்கும், தாழ்வினுக்கும் அவரவரது குணமே காரணம்.

இதை அவர் (அந்த ஆங்கிலேயர்) உணரவில்லையே’’ என்று எதிர்க்குரல் கொடுத்தார். இந்தப் பேச்சு, ஐ.சி.எஸ் தேர்வு அதிகாரிகளுக்குப் பிடிக்கவில்லை. ஆதலால் அவர், அதில் தேற முடியாமல் போனது. அதற்காக அவர் வருத்தப்படாத போதும் பாரிஸ்டர் படிப்பை நல்லமுறையில் முடித்தார்.
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 52082
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12710

https://rammalar.wordpress.com/

Back to top Go down

‘காந்தியும், வெள்ளாடும்...!’ சித்தரஞ்சன் தாஸ் பிறந்தநாள் சிறப்புப் பகிர்வு Empty Re: ‘காந்தியும், வெள்ளாடும்...!’ சித்தரஞ்சன் தாஸ் பிறந்தநாள் சிறப்புப் பகிர்வு

Post by ayyasamy ram on Thu Nov 07, 2019 4:04 pm


அரவிந்த் கோஷுக்கு ஆதரவு!


கொல்கத்தாவில் வழக்கறிஞர் தொழிலை ஆரம்பித்த
சித்தரஞ்சன் தாஸுக்கு, வசந்தா தேவி என்பவர்
வாழ்க்கைத் துணையாக அமைந்தார். இந்த நிலையில்,
பாபு அரவிந்த் கோஷ் என்பவர் ஒரு வழக்கில்
போலீஸாரால் குற்றம் சுமத்தப்பட்டார்.

அவருக்கு எதிராக 206 சாட்சிகள், 4,000 ஆவணங்கள்,
கடிதங்கள் உள்ளிட்டவற்றை ஆதாரமாக போலீஸார்
வைத்தனர். அரவிந்த் கோஷுக்கு ஆதரவாகக்
களமிறங்கினார் சித்தரஞ்சன்.

வழக்கு, நெடுநாட்கள் நடைபெற்றன. ஆனால் அனைத்தையும்
உடைத்து, அதில் வெற்றியும் கண்டார் சித்தரஞ்சன். அதன்பிறகு
அவரது புகழ் எட்டுத் திக்கிலும் பரவியது.

முதலில் 20,000 ஆக இருந்த அவரது மாத வருமானம்
பின்னர் 50,000-ஐ தாண்டியது. இதனால் வருமானம் அதிகரித்த
போதிலும் தன் தந்தையைப் போன்றே தர்ம காரியங்களுக்காகச்
செலவு செய்தார்.

தன் தந்தை தர்ம காரியங்களுக்காகக் கடனாகப் பெற்ற
தொகையையும் இவரே அடைத்தார். சித்தரஞ்சன் தாஸ்,
வழக்கறிஞர் தொழிலில் உச்சத்தில் இருந்தபோது, ஒரு வழக்குக்காக
அந்தக் காலத்திலேயே லட்சம் ரூபாய் வாங்கினார். அதேபோல்,
வீதியிலே கந்தைத் துணியுடன் திரிந்த ஒருவருக்காக வழக்காடி,
அவரை பெரிய கோடீஸ்வரனாக மாற்றினார்.

காங்கிரஸ் கூட்டங்களுக்கு ரயில் மூலம் தொண்டர்களைத்
தன் சொந்த செலவில் அழைத்துச் சென்றார்.
-

‘‘அடியோடு வீசி எறிய வேண்டும்!’’


சிறுவயது முதல் அரசியல் துடிப்பு கொண்டு விளங்கிய
சித்தரஞ்சன், முதன்முதலாக காங்கிரஸ் மகா சபையில்
இணைந்தார். இந்திய விடுதலையின் புரட்சிக்கு வீறு
கொண்டு எழுந்தார்.

இந்த நிலையில், ‘இந்தியாவின் கிளர்ச்சியை மதித்து
நாளடைவில் படிப்படியாகப் பொறுப்பாட்சி தருவோம்’
என்று ஆங்கிலேய அரசு ஓர் அறிக்கை வெளியிட்டது.

‘‘இது அர்த்தமற்றது... உதவாதது’’ என்று சித்தரஞ்சன் தாஸ்,
மக்களிடம் சிந்தனையை வளர்த்தார். இந்திய அரசியல்
கிளர்ச்சியை ஒடுக்க ரெளலட் சட்டத்தை இயற்றினர் ஆங்கிலேயர்.

அதை எதிர்த்து மகாத்மா காந்தி சத்யாக்கிரக போராட்டத்தை
ஆரம்பித்தார். அந்த நேரத்தில் அமிர்தசரஸில் ஜாலியன் வாலாபாக்
படுகொலை அரங்கேறியது. அதை விசாரிக்க பஞசாயத்து ஒன்று
உருவானது. இதன் ஓர் அங்கத்தினராக சித்தரஞ்சன் தாஸ் இருந்தார்.

இதற்குத் தலைவராக காந்தி இருந்தார். அப்போதுதான் இருவருக்கும்
நல்ல அறிமுகம் உண்டாயிற்று. இந்தப் படுகொலை விஷயம் காங்கிரஸ்
சார்பில் ஆலோசனைக்கு வந்தபோது, ‘‘அமிர்தசரஸ் விஷயத்தை
ஏற்றுக் கொள்வோம்’’ என்றார் காந்தியடிகள்.

‘‘அதனை, அடியோடு வீசி எறிய வேண்டும்’’ என்று வாதாடினார்
சித்தரஞ்சன் தாஸ். இறுதியில் அவருடன் சமரச உடன்பாட்டை
ஏற்படுத்திக்கொண்டார் காந்தியடிகள்.
-
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 52082
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12710

https://rammalar.wordpress.com/

Back to top Go down

‘காந்தியும், வெள்ளாடும்...!’ சித்தரஞ்சன் தாஸ் பிறந்தநாள் சிறப்புப் பகிர்வு Empty Re: ‘காந்தியும், வெள்ளாடும்...!’ சித்தரஞ்சன் தாஸ் பிறந்தநாள் சிறப்புப் பகிர்வு

Post by ayyasamy ram on Thu Nov 07, 2019 4:08 pm


‘‘இப்போது உள்ள அரசாங்கத்தை அகற்ற விருப்பம்!’’


1920-ம் ஆண்டு ஒத்துழையாமை திட்டத்தின்படி, தன்னுடைய
வழக்கறிஞர் தொழிலைத் துறந்தார் சித்தரஞ்சன். ‘
‘ஆங்கிலேய இளவரசரின் விஜய வைபவத்தில் யாரும் கலந்து
கொள்ளக் கூடாது’’ என்ற காந்திஜியின் வாக்கை சிரமேற்
கொண்டு அனைவரையும் திரட்டிக் கூட்டங்கள் போட்டார்.

இதனால் இளவரசர் விஜயம் செய்த கொல்கத்தா நகர் இருள்
சூழ்ந்து கிடந்தது. இதன் காரணமாக 1922-ம் ஆண்டு ஜனவரி
மாதம் சித்தரஞ்சன் தாஸ் மீது வழக்குப் போட்டனர்.

வழக்கு விசாரணையில் கலந்து கொள்ளாத சித்தரஞ்சன்,
‘‘இப்போது உள்ள அரசாங்கத்தையே அகற்ற விரும்பும் நான்,
விசாரணையில் கலந்து கொள்ளுதல் எங்ஙனம்?’’ என
வாக்குமூலம் கொடுத்தார். இதனால் அவருக்கு 6 மாதங்கள்
சிறைத்தண்டனை அளிக்கப்பட்டது.

சிறையில் அனைத்து வசதிகளும் கிடைக்கப்பெற்றார்
சித்தரஞ்சன். அவரது மாளிகையில் இருந்து தினம், வேளை
தவறாமல் அறுசுவை உணவு வந்துசேரும். அது மட்டுமல்லாது,
அவருடைய தோழர்களும், மற்றவர்களும் தின்பண்டங்களைக்
கொடுத்து அனுப்புவர்.

அவற்றைச் சிறைத் தோழர்களுக்கு பகிர்ந்து கொடுப்பார்.
நேதாஜி, அபுல்கலாம் ஆசாத் போன்றோரும் அந்தச் சிறையில்
அடைபட்டிருந்தனர். அபுல்கலாம் ஆசாத்திடம் உருது, அரபி,
பாரசீகம் போன்ற மொழிகளைக் கற்றுக் கொண்டார்.
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் இவருடைய குருவானார்.
-----------------

‘‘புதிய மாளிகை அமைக்க பழையதை அழித்தாக வேண்டும்!’’

---
இப்படிச் சிறையில் இருந்தபடியே அரசியல் தர்பார் நடத்திவந்த
சித்தரஞ்சன், அங்கேயே பல நூல்கள் எழுத ஆரம்பித்தார்.
சிறையில் இருந்து வெளியே வந்த அவர் சுயராஜ்யக் கட்சியைத்
தோற்றுவித்ததுடன், இரட்டை ஆட்சி முறையை ஒழிக்கவும்,
அந்நிய ஆட்சியை அகற்றவும், மாண்டேகுசெம்ஸ்போர்டு அரசியல்
திட்டத்தை அழிக்கவும் உறுதி பூண்டிருந்தார்.

ஏன் இந்த அழிவு வேலை? என்று அவரிடம் எல்லோரும் கேட்ட
போது, ‘‘அழகிய மாளிகை அமைய வேண்டிய இடத்தில்,
அவலமான கட்டடம் ஒன்று இருக்கிறது. ஆதலின் அந்தக்
கட்டடத்தை அழிக்க விரும்புகிறேன். புதிய மாளிகை அமைக்க
வேண்டுமானால், பழைய கட்டுக்கோப்பை அழித்தாக வேண்டும்.

ஆக்கவேலை செய்யவே அழிவு வேலை செய்கிறோம்.
உலகில் எந்தத் தேசத்தின் சரித்திரத்தையும் நோக்கிப் பாருங்கள்.
இங்கிலாந்தின் சரித்திரத்தையும் எண்ணி உணருங்கள். அங்கு
எல்லாம் அழிவு வேலையே நடந்தது.

அழிவு முட்டுக்கட்டை இல்லாமல் அங்கெல்லாம் மக்களுக்கு
உரிமையோ, சக்தியோ உதிக்கவில்லை. அத்தகைய காரியம்
இங்கிலாந்தில் நலம் பயந்தது. ஆங்கில மக்கள் சுதந்திரம் எய்தினர்.
அவ்விதமே, இங்கு நடக்கையில் ஏன் இவ்வளவு கூக்குரல்’’
என்று பதிலுரைத்தார்.

அதற்காக, தொடர்ந்து அரசியல் வாழ்வில் ஓய்வின்றி உழைத்தார்.
அடிப்படையில் நல்ல கவிஞரான சித்தரஞ்சன் தாஸ், ‘சாகர சங்கீதம்’
என்னும் கவிதை நூலை வங்க மொழியில் எழுதினார். அதை,
அரவிந்த யோகி ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். ஆங்கிலேயர்
அந்தக் கவிதைகளை வாசித்து இன்புற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

‘நாராயணா’ என்னும் மாத இதழையும், ‘ஃபார்வேர்டு’ என்ற
நாளிதழையும் அவர் வெளியிட்டார்.
---
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 52082
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12710

https://rammalar.wordpress.com/

Back to top Go down

‘காந்தியும், வெள்ளாடும்...!’ சித்தரஞ்சன் தாஸ் பிறந்தநாள் சிறப்புப் பகிர்வு Empty Re: ‘காந்தியும், வெள்ளாடும்...!’ சித்தரஞ்சன் தாஸ் பிறந்தநாள் சிறப்புப் பகிர்வு

Post by ayyasamy ram on Thu Nov 07, 2019 4:11 pm‘‘படுக்கையைவிட்டு எழுந்திருக்க வேண்டாம்!’’


அரசியலில் ஓய்வின்றி உழைத்ததன் காரணமாக,
1925-ம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே அவர் உடல்நிலை
பாதிக்கப்பட்டார். மருத்துவர், ‘‘படுக்கையைவிட்டு
எழுந்திருக்க வேண்டாம்’’ என்றார்.

இதனால் தன் சொத்துக்களை எல்லாம் தேச நலனுக்கு
அர்ப்பணித்தார். தேசத்துக்கு எழுதி வைத்த சொத்தில் 10-ல்
ஒரு பங்கைக்கூடத் தமது குடும்பத்தினருக்கு எழுதி
வைக்கவில்லை.

தன்னுடைய செலவுக்காக ரூபாய் 35 ஆயிரத்தை மட்டுமே
வைத்துக் கொண்டார். அதே ஆண்டில் மே மாதத்தில்
சித்தரஞ்சன் தாஸுக்கு உடல்நிலை மிகவும் மோசமானதால்
மருத்துவர்கள், ‘‘குளிர் பிரதேசம் ஒன்றுக்கு அவரை அழைத்துச்
சென்றால், அவரது உடல்நோய் மறையும்’’ என்றனர்.

அதன்படி, இமயமலையின் அடிவாரத்தில் இருந்த டார்ஜிலிங்
நகரம் சென்றார். அங்கு, தினந்தோறும் காலையும், மாலையும்
நெடுந்தூரம் சென்று பயிற்சி எடுத்தார். இதனால் அவரது
உடல்நிலை முன்னேற்றம் கண்டது.

இதன் காரணமாக அங்கேயே நிரந்தரமாகத் தங்கிவிட
முடிவுசெய்தார். இந்த நேரத்தில் காந்தியடிகள், அங்குச் சென்று
சித்தரஞ்சன் தாஸுடன் ஐந்து நாட்கள் தங்கியிருந்தார்.
---
‘‘விருந்தளிப்பதில் விழுமிய தலைவர்!’’


அப்போது சித்தரஞ்சன் தாஸ் கட்டிலில் படுத்திருந்தார். மகாத்மாவோ, தனது கால்களை ஒன்றின் மீது ஒன்றைக் குறுக்கும் நெடுக்குமாய் போட்டபடி அமர்ந்திருந்தார். அதைப் பார்த்த சித்தரஞ்சன் தாஸ் தமக்கு எதிரே இருந்த கட்டிலில் ஒரு துண்டையும் தலையணையையும் ஆசனமாக வைத்து காந்திஜியை அதில் அமரச்செய்தார்.

அதன்பிறகே, அவருடன் உரையாடியுள்ளார். இதுகுறித்து காந்தியடிகள், ‘யெளவன இந்தியா’ என்னும் வாரப் பத்திரிகையில், ‘‘டார்ஜிலிங் நகரிலே ஐந்து நாட்கள் தேசபந்துவுடன் (சித்தரஞ்சன் தாஸ்) நான் தங்கியிருந்தேன். எனது வாழ்வில் அந்த ஐந்து நாட்களும் மிகவும் அற்புதமான நாட்கள்.

அதற்கு முன் நான், தேசபந்து வீட்டில் பலமுறை தங்கியிருக்கிறேன். அப்போது எல்லாம் அரசியலைப் பற்றிப் பேசியிருக்கிறேன். ஆனால், டார்ஜிலிங்கில் அப்படியில்லை. அங்கு தங்கியிருந்த அனைத்து நாட்களும் அவர் என்னுடனே இருந்தார். உடல்நிலை சரியில்லாமல் அவர் படுக்கையில் இருந்தபோதும்... எனக்கும், என் தோழருக்கும் உரிய வசதிகளை எல்லாம் தாமே நேரில் இருந்து கவனித்துக் கொடுத்தார்.

அவர், எனக்கென ஐந்து வெள்ளாடுகளை வாங்கிக் கட்டியிருந்தார். வெள்ளாட்டுப் பால் ஒருவேளைகூட எனக்குத் தவறக் கூடாது என்பதே அவரது கருத்தாக இருந்தது. விருந்தளிப்பதில் விழுமிய தலைவர் அவர்’’ என்று மகிழ்ச்சிப் பொங்க அதில் எழுதியுள்ளார்.

‘‘எனது அறையைக் கொடுத்துவிடுகிறேன்!’’


அதேபோல், வங்கத்திலே கதரை எங்ஙனம் அபிவிருத்தி செய்யலாம் என்கிற நோக்கில் சதீஷ்பாபு என்பவரை இருவரும் அழைத்துப் பேசியுள்ளனர். அப்போது, ‘‘சதீஷ்பாபுவை எங்கே தங்க வைக்கலாம்’’ என்று சித்தரஞன் தாஸிடம், காந்தியடிகள் கேட்டுள்ளார்.

அதற்கு சித்தரஞ்சன் தாஸ், ‘‘என்னுடைய இந்த வீட்டில்’’ என்று சொல்ல... காந்தியடிகளோ, ‘‘இந்தச் சின்னவீட்டில் போதிய இடம் இல்லையே’’ எனப் பதிலுரைக்க, ‘‘போதிய இடமா இல்லை? எனது அறையைக்கூட அவருக்கே கொடுத்து விடுகிறேன்’’ என மறுமொழி உரைத்தாராம் சித்தரஞ்சன் தாஸ் என்று அதே கட்டுரையில் காந்திஜி எழுதியுள்ளார்.

தன்னுடைய கடைசிக் காலத்தில் கங்கைக் கரையில் சிறு குடில் அமைத்து வாழப்போவதாக சித்தரஞ்சன் தாஸ் சொன்னதைக் கேட்டு, காந்திஜி மனதில் நகைத்துக் கொண்டாராம். ஆனால், பின்னாளில் சொத்து அனைத்தையும் பிறருக்கு எழுதி வைத்துவிட்டு வறுமை நிலையில் உயிரைவிட்டபோதுதான் காந்திஜியே அதை நினைத்து உள்ளம் வருந்தினாராம்.

டார்ஜிலிங்கில் தங்கியிருந்தபோதே 1925-ம் ஆண்டு ஜூன் மாதம் 16-ம் தேதி அவரது உயிர் இந்த மண்ணை விட்டுப் பிரிந்தது. இறப்பதற்குமுன், அவர் நேதாஜிக்கு எழுதிய கடிதத்தில், “சில 100 ரூபாய் நோட்டுகள் எனக்கும் முழுமையான வறுமைக்கும் நடுவில் நிற்கிறது” என்று எழுதியிருந்தாராம்.

‘‘தனக்கு என வாழாப் பிறருக்கு உரியாளன் அவர். தாம் வசித்துவந்த விழுமிய மாளிகையையும் தேசத்துக்கு என அவர் கொடுத்துவிட்டார். என்னே அவரது தியாகம்’’ என்று மகாத்மாவால் புகழப்பெற்ற சித்தரஞ்சன் தாஸை நாமும் போற்றுவோம்.

- ஜெ.பிரகாஷ்
நன்றி-விகடன் 05 Nov 2016

ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 52082
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12710

https://rammalar.wordpress.com/

Back to top Go down

‘காந்தியும், வெள்ளாடும்...!’ சித்தரஞ்சன் தாஸ் பிறந்தநாள் சிறப்புப் பகிர்வு Empty Re: ‘காந்தியும், வெள்ளாடும்...!’ சித்தரஞ்சன் தாஸ் பிறந்தநாள் சிறப்புப் பகிர்வு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை