உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» 'ஆக்ஸ்போர்டு' அகராதியில் இடம்பிடித்த, 'ஆதார்'
by ayyasamy ram Today at 7:11 am

» உள்நாட்டு விவகாரத்தில் தலையிடுவதா: ஐரோப்பிய யூனியனுக்கு இந்தியா சூடு
by ayyasamy ram Today at 7:09 am

» வேலன்:-உங்கள் ;பாஸ்வேர்டின் உறுதி தன்மை அறிந்துகொள்ள-Passwordium
by velang Today at 7:07 am

» ஆந்திராவில் மேல்சபை கலைக்கப்படும்:அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றம்
by ayyasamy ram Today at 7:07 am

» 'ஐ.என்.எஸ்., கவரட்டி' போர்க்கப்பல்:விரைவில் இந்திய கடற்படையில் சேர்ப்பு
by ayyasamy ram Today at 7:04 am

» மசூதியில் பெண்களை அனுமதிக்க சுப்ரீம் கோர்ட்டில் மனு
by ayyasamy ram Today at 7:03 am

» கவர்னர் சமாதானம்: மம்தா நிராகரிப்பு
by ayyasamy ram Today at 7:01 am

» புத்தகம் தேவை : இறையன்பு IAS
by nahoor Yesterday at 9:54 pm

» முத்துலட்சுமி ராகவன் நாவல்கள்
by nahoor Yesterday at 9:50 pm

» வெற்றி உங்களுக்கே - பக்தி கதை
by ayyasamy ram Yesterday at 9:15 pm

» வடிவேலு -கைப்புள்ள உருவான விதம்
by T.N.Balasubramanian Yesterday at 9:14 pm

» கீதை காட்டும் பாதை
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஆன்மிகம் - கேளுங்க சொல்கிறோம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:44 pm

» நாராயணா என்னும் நாமம், நாவால் சொன்னால் வரும் ஷேமம்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» குயிலே, குமரன் வரக் கூவுவாய்..! - எம்.எல் வசந்தகுமாரி பாடியது
by ayyasamy ram Yesterday at 8:10 pm

» பிறகேன் இத்தனை வாதம்?
by T.N.Balasubramanian Yesterday at 4:50 pm

» ஒரு வெட்டுக்கு இது இரண்டு கிடைக்கும் – குறுக்கெழுத்துப் போட்டி
by சக்தி18 Yesterday at 3:07 pm

» மூளை…முடுக்கு!- விடை சொல்லுங்கள்
by ayyasamy ram Yesterday at 2:51 pm

» சினிமா- பழைய பாடல்கள்- காணொளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» பிரபல கூடைப்பந்தாட்ட வீரர் கோப் பிரயண்ட் ஹெலிகாப்டர் விபத்தில் பலி
by ayyasamy ram Yesterday at 11:14 am

» வருடத்துக்கு 15 இடங்களுக்கு சுற்றுலா சென்றால் பயண செலவை அரசே அளிக்கும்: மத்திய அரசு அதிரடி திட்டம்
by ayyasamy ram Yesterday at 11:12 am

» மனித நேயம் - குறும்படம்
by ayyasamy ram Yesterday at 6:06 am

» பழுப்பு இல்லை, பளீச்!- வீட்டுக் குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 5:38 am

» சுவரேறி குதித்த பேய்..!
by ayyasamy ram Yesterday at 5:36 am

» மொய்- ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 5:35 am

» கிச்சன்ல என்ன சலசலப்பு..!
by ayyasamy ram Yesterday at 5:34 am

» பாத யாத்திரை போக புலட் பரூஃப் வேண்டுமாம்…!
by ayyasamy ram Yesterday at 5:33 am

» ஐடியா- ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 5:33 am

» சக்கரம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 5:31 am

» டைரக்டர் ஏன் டென்ஷனா இருக்கார்?
by ayyasamy ram Yesterday at 5:30 am

» தோல்வியில் சுகம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:29 am

» ஊழலுக்கு எதிராக குரல் கொடுக்க மிமிக்ரி கலைஞர்…!!
by ayyasamy ram Yesterday at 5:28 am

» மனிதன் விசித்திரமானவன்…!
by ayyasamy ram Yesterday at 5:26 am

» சைபர் கிரைம் (Cyber Crime) விழிப்புணர்வு
by ayyasamy ram Yesterday at 5:24 am

» பேப்பர்ல என் போட்டோ வந்தபிறகுதான் நான் பைக் ஓட்டுறதே வீட்டுக்குத் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 5:22 am

» 55 ஆயிரம் மில்லியன் ஜிபி!
by ayyasamy ram Yesterday at 5:20 am

» நட்பு- கவிதை
by ayyasamy ram Yesterday at 5:18 am

» கிருஷ்ணம்மாள் ஜெகநாதனுக்கு பத்ம பூஷன் விருது: யார் இவர்?
by ayyasamy ram Yesterday at 5:17 am

» ஆதரவற்றோர் உடல்களை அடக்கம் செய்வது ஏன்?; பத்மஸ்ரீ விருது பெறும் முகமது ஷெரிப்
by ayyasamy ram Yesterday at 5:14 am

» ஒரு அரசியல் கட்சிக்கு சொந்தமானதல்ல நாடு : யோகா பாபா ராம் தேவ்
by ayyasamy ram Yesterday at 5:11 am

» சிஏஏ.,வை எதிர்த்து கேரளாவில் 620 கி.மீ., மனித சங்கிலி
by ayyasamy ram Yesterday at 5:08 am

» மூவர்ண கொடியின் நிறத்தில் ஒளிர்ந்த புர்ஜ் கலிபா
by ayyasamy ram Yesterday at 5:04 am

» 'பாக்., குடிமகனாக இருந்தவருக்கு பத்மஸ்ரீ விருதா?' காங்., கண்டனம்
by ayyasamy ram Yesterday at 5:00 am

» படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 4:56 am

» சரியான எச்சரிக்கை
by சக்தி18 Sun Jan 26, 2020 11:05 pm

» பிப்ரவரி மாதம் வெளியாகவுள்ள தமிழ்ப் படங்கள்!
by சக்தி18 Sun Jan 26, 2020 11:02 pm

» திமுக முதன்மை செயலாளராக நேரு நியமனம்
by T.N.Balasubramanian Sun Jan 26, 2020 10:01 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Sun Jan 26, 2020 4:37 pm

» பீடாவின் விலை ரூ.5 ஆயிரம்!
by ayyasamy ram Sun Jan 26, 2020 2:35 pm

» தமிழில் வெற்றி பெற்ற 96 படம், ஜானு என்கிற பெயரில் தெலுங்கில் ரீமேக் ஆகியுள்ளது.
by ayyasamy ram Sun Jan 26, 2020 2:31 pm

Admins Online

மங்கையர் திலகங்கள் தொடர்ச்சி--

மங்கையர் திலகங்கள்  தொடர்ச்சி-- - Page 2 Empty மங்கையர் திலகங்கள் தொடர்ச்சி--

Post by T.N.Balasubramanian on Sun Sep 15, 2019 9:11 pm

First topic message reminder :

மங்கையர் திலகங்கள்

கிருஷ்ணகிரியைச் சேர்ந்தவர் ஆறுமுகம் பெங்களூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவருக்கு வித்யா என்ற மகளும் விக்னேஷ் என்ற மகனும் உள்ளனர். சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் வித்யா நர்ஸாகப் பணியாற்றி வருகிறார். விக்னேஷ் சிறுசேரியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலைபார்த்து வருகிறார். நண்பரின் திருமணத்தில் பங்கேற்பதற்காகத் திருநள்ளாறு செல்வதாக வித்யா குடும்பத்தினரிடம் தெரிவித்துள்ளார். திருமணம் முடிந்து காரைக்காலிலிருந்து சென்னைக்கு பஸ் ஏறிவிட்டதாகத் தன் சகோதரர் விக்னேஷ்க்கு போனில் தகவல் தெரிவித்துள்ளார். சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் வந்து அழைத்துச் செல்லுமாறு கூறியுள்ளார். விக்னேஷ் அவரது செல்போன்னுக்கு தொடர்புகொள்ள முயன்றுள்ளார். ஸ்விட்ச் ஆஃப் என வந்துள்ளது.

இந்தத் தகவலை விக்னேஷ் தன் தந்தையிடம் தெரிவித்துள்ளார். சிறிது நேரத்தில் ஆறுமுகத்தின் தந்தையின் செல்போனுக்கு மர்ம நபர் ஒருவர் போன் செய்து வித்யாவைக் கடத்தி வைத்திருப்பதாகக் கூறியுள்ளார். 10 லட்சம் கொடுத்தால் உங்கள் மகளை விடுவிப்போம். போலீஸாரிடம் போனால் உங்கள் மகளை உயிருடன் பார்க்க முடியாது எனக் கூறியுள்ளார். ஆறுமுகம் தன் மகனை அழைத்து விவரத்தைக் கூறியுள்ளார். இதற்கிடையில் தொடர்ந்து ஆறுமுகத்திடம் மர்ம நபர் போனில் மிரட்டியுள்ளார். சென்னை கோயம்பேடு வந்து பணத்தைக் கொடுத்தால் உங்கள் மகளை விடுவிப்பேன் என அந்த நபர் கூறியுள்ளார். இதனால் பதறிப்போன ஆறுமுகம் சென்னை கோயம்பேடு காவல்நிலையத்தில் புகார் தெரிவித்தார்.

இதையடுத்து இணை கமிஷனர் விஜயகுமாரி மேற்பார்வையில், துணை கமிஷனர் முத்துசாமி தலைமையில் தனிப்படை அமைத்து விசாரணையில் இறங்கினர். சென்னை கோயம்பேடு பேருந்து நிறுத்தம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்த கண்காணிப்பு கேமராவை போலீஸார் ஆய்வு செய்தனர். வித்யா கோயம்பேடு பேருந்து நிலையத்தில் வந்திறங்குவது. அங்கிருந்து கிண்டி செல்லும் மாநகரப் பேருந்தில் ஏறியதும் சிசிடிவி காட்சியில் பதிவாகியிருந்தது. இதையடுத்து கிண்டி பேருந்து நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தபோது வித்யா ஒரு இளைஞருடன் புதுச்சேரி செல்லும் அரசுப் பேருந்தில் ஏறுவது தெரியவந்தது. இருவரும் நண்பர்கள் என விசாரணையில் தெரியவந்துள்ளது.

`உன்னை ஜெயிலுக்கு அனுப்ப நானே காரணமாகிவிட்டேனே'- தந்தையை ஏமாற்ற நினைத்து சிக்கிய மகள்!
செல்போன் சிக்னல் வைத்துதான் இந்த வழக்கில் துப்பு துலக்கியது. அந்த எண் காரைக்காலைச் சேர்ந்த மனோஜ் என்பவரது என்பது தெரியவந்தது. மனோஜ் புதுச்சேரியில் இருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. போலீஸார் நெருங்குவதை அறிந்த இருவரும் சென்னை வந்துள்ளனர். கோயம்பேட்டில் வைத்து இருவரையும் போலீஸார் கைது செய்தனர்


இதுகுறித்து காவல்துறை அதிகாரிகள் பேசுகையில், ``வித்யாவும் பணம் கேட்டு போன் செய்த நபரும் நண்பர்கள் என்பது விசாரணையில் தெரிந்தது. காரைக்காலில் வித்யா படித்துக்கொண்டிருந்தபோது இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. மனோஜ் கனடா செல்வதற்காக வித்யாவிடம் பணம் கேட்டுள்ளார். சமீபத்தில் தன் தந்தை விவசாய நிலத்தை விற்றதும் அதன்மூலம் கிடைத்த 13 லட்சத்தை வங்கியில் டெபாசிட் செய்ததை மனோஜிடம் கூறியுள்ளார். இருவரும் கடத்தல் நாடகத்தை அரங்கேற்றியுள்ளனர். சென்னையில் வைத்து இருவரையும் கைது செய்தோம்” என்றனர். சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின்னர் இருவரையும் சிறையில் அடைத்தனர்.

மகளிடம் பேசிய ஆறுமுகம், இப்படிச் செய்து நம் குடும்பத்தையும் உன்னையும் சங்கடப்படுத்திவிட்டாயே, உன்னை ஜெயிலுக்கு அனுப்ப நானே காரணமாகிவிட்டேனே என்று கண்ணீர் மல்க கூறியுள்ளார். அப்போது போலீஸார் வழக்கின் விவரத்தை ஆறுமுகத்திடம் கூறி நிலைமையைப் புரிய வைத்துள்ளனர். இதையடுத்து தந்தையை ஏமாற்றி பணத்தைப் பறிக்கத் திட்டமிட்ட மகள், போலீஸாரின் 12 மணி நேர தேடுதல் வேட்டையில் சிக்கிக் கொண்டார். இந்த வித்தியாசமான வழக்கு காவல்துறையினருக்கும் ஆறுமுகம் குடும்பத்தினருக்கும் மட்டுமல்ல அனைவருக்கும் ஒரு பாடம் என்றார் காவல்துறை அதிகாரி ஒருவர்.

நன்றி விகடன்

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 25904
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9370

Back to top Go down


மங்கையர் திலகங்கள்  தொடர்ச்சி-- - Page 2 Empty Re: மங்கையர் திலகங்கள் தொடர்ச்சி--

Post by Dr.S.Soundarapandian on Sat Oct 12, 2019 8:44 pm

சுட்டுத்தள்ளூ!
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 5039
இணைந்தது : 23/10/2012
மதிப்பீடுகள் : 2794

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

மங்கையர் திலகங்கள்  தொடர்ச்சி-- - Page 2 Empty நிர்மலா ஆபீசுக்கே போறது கிடையாதாம்.. 2 வருஷமா

Post by T.N.Balasubramanian on Sun Oct 13, 2019 6:52 pm

நிர்மலா ஆபீசுக்கு போறதே கிடையாதாம்.. 2 வருஷமா வீட்டிலேயேதானாம்.. அதிர வைத்த அதிகாரி!

திண்டுக்கல்: நிர்மலா ஆபீசுக்கே போறது கிடையாதாம்.. 2 வருஷமா வீட்டில் இருந்து கொண்டே சம்பளம் மட்டும் வாங்கி வந்து உள்ளார் இந்த அரசு பெண் அதிகாரி! திண்டுக்கல்லை சேர்ந்தவர் நிர்மலா. மண்டல அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில் அதிகாரி பொறுப்பில் வேலை பார்த்து வருகிறார். 57 வயதாகிறது. இன்னும் சில மாதங்களில் ரிடையர் ஆகபோகிறார். இந்த கடைசி நேரத்தில் இவர் மீது ஒரு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. நிர்மலா 2 வருஷமா வேலைக்கே போக காணோம். கால் விரலில் ஏதோ 2 வருஷத்துக்கு முன்பு ஆபரேஷன் செய்திருக்கிறார். இதுக்கு மெடிக்கல் லீவு போட்டவர்தான் அப்படியே வீட்டுக்குள்ளேயே டேரா போட்டுட்டாராம். ஆபீஸ் பக்கமே எட்டி பார்க்காமல், வெறும் சம்பளத்தை மட்டும் 2 வருஷமாக வாங்கி கொண்டு வந்துள்ளார். அதுவும் சம்பள நாள் அன்னைக்கு தான் ஆபீஸ் போவாராம். ஒரே நாளில் போய், அந்த மாசத்துக்கான வருகை பதிவேட்டில் மொத்த கையெழுத்தையும் போட்டுவிட்டு வந்துவிடுவாராம். இதற்கெல்லாம் காரணம், நிர்மலாவின் சொந்தக்காரர் யாரோ அரசியலில் பெரிய புள்ளியாம். அதனால் நிர்மலா ஆபீசுக்கு வருவதைகூட கண்டுகொள்வதே இல்லையாம். இதை பற்றி நிர்மலாவிடம் கேட்டதற்கு, ஆமாம், ஆபீசுக்கு போறது இல்லை என்பதை ஒப்புக் கொண்டு இருக்கிறாராம்!

நன்றி : ஹேமவந்தனா/தட்ஸ்தமிழ்  

ரமணியன்


Last edited by T.N.Balasubramanian on Sun Oct 13, 2019 6:54 pm; edited 1 time in total (Reason for editing : editing)


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 25904
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9370

Back to top Go down

மங்கையர் திலகங்கள்  தொடர்ச்சி-- - Page 2 Empty Re: மங்கையர் திலகங்கள் தொடர்ச்சி--

Post by T.N.Balasubramanian on Sun Oct 13, 2019 6:57 pm

இந்த ரெண்டு வருஷத்தில் ஓவர்டைம் ஏதாவது வாங்கினாரா?
அதையும் விசாரிக்கலாமே!

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 25904
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9370

Back to top Go down

மங்கையர் திலகங்கள்  தொடர்ச்சி-- - Page 2 Empty Re: மங்கையர் திலகங்கள் தொடர்ச்சி--

Post by ஜாஹீதாபானு on Mon Oct 14, 2019 4:55 pm

@T.N.Balasubramanian wrote:நிர்மலா ஆபீசுக்கு போறதே கிடையாதாம்.. 2 வருஷமா வீட்டிலேயேதானாம்.. அதிர வைத்த அதிகாரி!

திண்டுக்கல்: நிர்மலா ஆபீசுக்கே போறது கிடையாதாம்.. 2 வருஷமா வீட்டில் இருந்து கொண்டே சம்பளம் மட்டும் வாங்கி வந்து உள்ளார் இந்த அரசு பெண் அதிகாரி! திண்டுக்கல்லை சேர்ந்தவர் நிர்மலா. மண்டல அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில் அதிகாரி பொறுப்பில் வேலை பார்த்து வருகிறார். 57 வயதாகிறது. இன்னும் சில மாதங்களில் ரிடையர் ஆகபோகிறார். இந்த கடைசி நேரத்தில் இவர் மீது ஒரு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. நிர்மலா 2 வருஷமா வேலைக்கே போக காணோம். கால் விரலில் ஏதோ 2 வருஷத்துக்கு முன்பு ஆபரேஷன் செய்திருக்கிறார். இதுக்கு மெடிக்கல் லீவு போட்டவர்தான் அப்படியே வீட்டுக்குள்ளேயே டேரா போட்டுட்டாராம். ஆபீஸ் பக்கமே எட்டி பார்க்காமல், வெறும் சம்பளத்தை மட்டும் 2 வருஷமாக வாங்கி கொண்டு வந்துள்ளார். அதுவும் சம்பள நாள் அன்னைக்கு தான் ஆபீஸ் போவாராம். ஒரே நாளில் போய், அந்த மாசத்துக்கான வருகை பதிவேட்டில் மொத்த கையெழுத்தையும் போட்டுவிட்டு வந்துவிடுவாராம். இதற்கெல்லாம் காரணம், நிர்மலாவின் சொந்தக்காரர் யாரோ அரசியலில் பெரிய புள்ளியாம். அதனால் நிர்மலா ஆபீசுக்கு வருவதைகூட கண்டுகொள்வதே இல்லையாம். இதை பற்றி நிர்மலாவிடம் கேட்டதற்கு, ஆமாம், ஆபீசுக்கு போறது இல்லை என்பதை ஒப்புக் கொண்டு இருக்கிறாராம்!

நன்றி : ஹேமவந்தனா/தட்ஸ்தமிழ்  

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1305395

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 30906
இணைந்தது : 16/04/2011
மதிப்பீடுகள் : 7337

Back to top Go down

மங்கையர் திலகங்கள்  தொடர்ச்சி-- - Page 2 Empty Re: மங்கையர் திலகங்கள் தொடர்ச்சி--

Post by T.N.Balasubramanian on Mon Oct 14, 2019 6:37 pm

நிர்மலா என்றால் "களங்கமில்லாத" என்று பொருள்.
சமீப காலமாக நிர்மலா என்ற பெயரில் களங்கமிக்க
செயல்பாடு உள்ளவர்களே செய்திகளில் வருகிறார்கள்.
தமிழகமே !எங்கே சென்று கொண்டு இருக்கிறோம்??

ரமணியன்.


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 25904
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9370

Back to top Go down

மங்கையர் திலகங்கள்  தொடர்ச்சி-- - Page 2 Empty Re: மங்கையர் திலகங்கள் தொடர்ச்சி--

Post by T.N.Balasubramanian on Thu Dec 12, 2019 9:02 pm

மங்கையர் திலகம் 7 ரேவதி
அண்ணியும்.. மைத்துனனும் சேர்ந்து.. காட்டி கொடுத்த கண்ணாடி வளையல்.. இப்ப ஜெயிலில்!
சென்னை: மச்சினன் ராஜேஷுடன் சேர்ந்து ரேவதி செய்த காரியம் இருக்கே.. போலீசாரே அதிர்ந்து விட்டனர்.. ரேவதியின் வளையல்தான் மொத்த வண்டவாளத்தையும் வெளியே கொண்டுவந்துள்ளது.
சென்னை அம்பத்தூர் பகுதியை சேர்ந்தவர் பேச்சியம்மாள். இவருக்கு 42 வயதாகிறது.. வீட்டுக்கு அருகிலேயே மளிகை கடை நடத்தி வருகிறார்.. கடந்த 6-ம் தேதி மதியம் கடையில் இவர் இருந்தபோது, அந்த பகுதியில் ஆள்நடமாட்டம் குறைவாக இருந்துள்ளது. இந்த நேரத்தில் இளைஞர் ஒருவர் மளிகை சாமான் வாங்குவதை போல வந்து, திடீரென பேச்சியம்மாளின் கழுத்தில் கிடந்த தங்க செயினை பறித்து இழுத்தார்.. இதை கொஞ்சமும் எதிர்பாராத பேச்சியம்மாள், அந்த செயினை கெட்டியாக பிடித்து கொண்டு இளைஞரிடம் போராடினார்.. ஆனால் இளைஞர் செயினை அறுத்து கொண்டு ஓடினார்.. பேச்சியம்மாள் அலறி கத்தினார். அக்கம்பக்கத்தினர் வருவதற்குள் இளைஞர் தப்பிவிட்டார்.
சிசிடிவி கேமிரா
இந்த திருட்டு சம்பந்தமாக அம்பத்தூர் போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் திருட்டு நடந்த இடத்தில் பொருத்தப்பட்டிருந்த
சிசிடிவி கேமிராவை ஆய்வு செய்தனர். அப்போதுதான், பேச்சியம்மாளின் செயினை பறித்து ஓடிய இளைஞர் ஒரு பைக்கில் ஏறி செல்வது தெரிந்தது. பைக்கை ஓட்டியவர் ஹெல்மட், ரெயின்கோட் போட்டிருந்தார்.. இளைஞர் பின்னால் ஏறி உட்காரவும் பைக் பறந்தது.. இதையடுத்து அந்த பைக் செல்லும் வழியெல்லாம் இருந்த 64 சிசிடிவி கேமிராக்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன.
வாகன சோதனை
அப்போது பைக் வில்லிவாக்கம் சப்-வே பக்கம் திரும்பிவிட்டது. இதற்கு பிறகு தொடர்ந்து அந்த பகுதியில் போலீசார் வாகன சோதனையை தீவிரப்படுத்தினர். இந்நிலையில், நேற்று, சிசிடிவியில் பார்த்த அதே கலர் பைக் வந்தது.. ஒரு பெண் ஓட்டி கொண்டு வந்தார்.. அவரை வழிமறித்து போலீசார் விசாரித்தனர். முகத்தில் எந்தவித சலனமும், பயமும், பதட்டமும் இன்றி பெண் பதிலளித்தார்.  
வளையல்
அப்போதுதான், போலீசார் பெண்ணின் கையில் இருந்த வளையலை கவனித்தார்.. சிசிடிவியில் பைக் ஓட்டியவர் வளையலை போலவே அந்த வளையலும் இருந்தது.. உடனே போலீசார் அந்த பெண்ணை, விசாரிக்க வேண்டும் என்று சொல்லி ஸ்டேஷன் அழைத்து வந்தனர். அப்போதுதான் பேச்சியம்மாளிடம் நகையை பறித்த உண்மையும் வெளிப்பட்டது..

[மங்கையர் திலகங்கள்  தொடர்ச்சி-- - Page 2 Youngwomanarrestedinchainsnatchcasenearchennai1-1576147221

இந்த பெண்ணின் பெயர் ரேவதி, 30 வயதாகிறது.. வில்லிவாக்கம், நாராயண மேஸ்திரி தெருவைச் சேர்ந்தவர்.. கணவன் பெயர் ஜெயசந்திரன்.. ஐசிஎப்.பில் உள்ள, பெட்ரோல் பங்க்-கில் மேனேஜராக வேலை பார்க்கிறார். ரேவதி கொள்ளையடிக்க உதவியது இவரது மச்சினன் ராஜேஷ்.. அவருக்கு வயது 31 ஆகிறது. இருவரையும் போலீசார் கைது செய்தனர். மூன்றரை பவுன் செயின், பைக் பறிமுதல் செய்யப்பட்டது. ரேவதிக்கு டூ வீலருக்கான கடன் இருக்கிறதாம்.. அந்த கடனை அடைக்கதான், ஆண் வேடமிட்டு கொள்ளையில் ஈடுபட்டு வந்துள்ளார்.

மழை காலங்களில் இவருக்கு திருடுவது ரொம்பவும் எளிது.. இதற்காக ரெயின் கோட்டு கூட வாங்கி வைத்துள்ளார்.. ஆண்கள் போல டிரஸ் அணிந்து, ஹெல்மெட் போட்டுக் கொண்டால் எளிதில் அடையாளம் தெரிவதில்லை. இப்போது அண்ணியும் - மச்சினனும் ஜெயிலில் உள்ளனர்.


Last edited by T.N.Balasubramanian on Thu Dec 12, 2019 9:13 pm; edited 2 times in total (Reason for editing : additional msg)


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 25904
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9370

Back to top Go down

மங்கையர் திலகங்கள்  தொடர்ச்சி-- - Page 2 Empty Re: மங்கையர் திலகங்கள் தொடர்ச்சி--

Post by சக்தி18 on Tue Jan 21, 2020 1:52 pm

(கருத்து சொல்ல பயமாக இருக்கிறது. இருந்தாலும்......
ஏன் மங்கையர் திலகம் தலைப்பு என யோசித்தேன். பெண்களை போற்றும் தமிழ் நாட்டில் ,குஷ்பூ உட்பட பெண்களுக்கு கோயில் காட்டும் நாட்டில், இப்படி நடக்கிறதே என்ற ஆதங்கமாக இருக்கலாம்.
பொங்கல் திருநாளில் டாஷ்ட்மார்க் மது விற்பனை லாபம் 605 கோடி என மார்தட்டிக் கொள்கிறது தமிழக அரசு.எதை பேச வேண்டுமோ அதை தவிர்த்து எதை பேச வேண்டாமோ அதையெல்லாம் பேசுகிறார்கள் பலர்.)

.............................................

4 வயது குழந்தைக்கு மது ஊட்டிய தாய்..! 2-வது கள்ளக்காதலனுடன் சேர்ந்து செய்த அட்டூழியம்..!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த பாகலூர் ஜீவா நகரில் 4 வயது மகள் நயனா-ஸ்ரீ உடன் தாய் நந்தினி வசித்து வருகிறார். நந்தினிக்கு, மாதேஷ் என்பவருடன் 6 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைப்பெற்று, கணவனை பிரிந்து தனியாக வசித்து வரும் நிலையில், சந்தோஷ் என்பவருடன் கள்ள உறவில் இருந்து வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நந்தினியின் கள்ளக்காதலன் சந்தோஷ் பணிக்கு சென்ற நிலையில், மற்றொரு கள்ளக்காதலனுடன், இணைந்து மது அருந்தியுள்ளார். அப்போது மது போதை தலைக்கேறிய நிலையில், யாரும் செய்ய துணியாத செயலில் நந்தினி ஈடுபட்டுள்ளார்.

தான் மட்டும் மதுவை அருந்தாமல், எதுவுமே தெரியாத அந்த 4 வயது பெண் குழந்தைக்கு மதுவை கட்டாயப்படுத்தி ஊட்டி, கண்ட மேனிக்கு அடித்து உதைத்து கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது.

குழந்தையின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர், தரையில் சுருண்டு கிடந்த குழந்தையை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஓசூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். குழந்தைக்கு சிகிச்சை அளித்த போது, ரத்த வாந்தி எடுத்ததையடுத்து மது மட்டுமின்றி மதுவில் விஷம் கலந்திருக்கலாம் என மருத்துவர்கள் சந்தேகிக்கின்றனர்.

மேலும் மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு பரிந்துரை செய்து அனுப்பி வைத்தனர்.

இதற்கிடையே மகளுக்கு மது ஊற்றிக் கொடுத்த தாய் நந்தினியின் இரண்டாவது கள்ளக்காதலன் தப்பி ஓடி தலைமறைவான நிலையில், நந்தினி தனது முதல் கள்ளக்காதலுடன் மருத்துவமனைக்கே வந்து குழந்தையின் நிலைமையை அறியாமல், தள்ளாடியப்படி காவல்துறையினரின் கேள்விகளுக்கு பதிலளித்தது அங்கு இருந்தவர்களை கோபத்தின் உச்சிக்கே அழைத்து சென்றது.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த பாகலூர் போலீசார், தாயாக இருந்து பேயாக மாறிய நந்தினியிடம் விசாரணை மேற்கொண்டனர். மேலும் தப்பி ஓடிய நந்தினியின் இரண்டாவது கள்ளக்காதலனை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். பெற்றெடுத்த குழந்தைகளுக்காக உயிரை கொடுக்கும் தாய்களுக்கு மத்தியில் இப்படி ஒரு கொடூரமான தாய் இருப்பது தாய்மார்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
(சத்தியம் டிவி/ஆசியாநெட்)

சக்தி18
சக்தி18
தளபதி

தளபதி

பதிவுகள் : 1192
இணைந்தது : 24/12/2018
மதிப்பீடுகள் : 394

Back to top Go down

மங்கையர் திலகங்கள்  தொடர்ச்சி-- - Page 2 Empty Re: மங்கையர் திலகங்கள் தொடர்ச்சி--

Post by T.N.Balasubramanian on Tue Jan 21, 2020 7:00 pm

கருத்து சொல்ல பயமா? ஏன் ?
எதிர்பாராத அளவு, இப்பிடியும் இவர்களால் நடந்து கொள்ள முடியுமா என்ற ஆச்சர்யம் மேலிட
வந்த வஞ்சப்புகழ்ச்சியே மங்கையர் திலகம் என்ற தலைப்பு.
{இந்த சக்தி நம்புகிற மாதிரி ஒரு காரணம் கூறுவதற்குள் நம்ம சக்தியே காணாமல் போய்விடும் போலிருக்கு.}.

இப்பிடியும் சில சக்திகள் (இங்கு பெண்மணிகள் என்று அறியவும்) இருக்கின்றார்கள்.

தவறுதலாகக் கிடைத்த லட்சங்களைத் திருப்பியளித்த சிவகாசிப் பெண்!!

சிவசங்கரியே வந்து பணத்தைக் கொடுத்தாங்க. பிரமிச்சுப் போய்ட்டோம். எல்லோரும் அவருக்கு நன்றி தெரிவிச்சோம். இந்தக் காலத்திலும் இப்படியான மனுசங்க இருக்கத்தான் செய்யறாங்க!''
ஜவுளிக் கடையில் துணி வாங்கியபோது, அதைப் போட்டுக்கொடுக்கும் பைக்குப் பதிலாக, எட்டரை லட்சம் ரூபாய் பணம் இருந்த பையை கவனக்குறைவாகக் கொடுத்துவிட்ட கடை முதலாளியிடம் அந்தப் பணத்தைத் திருப்பிக்கொடுத்துள்ளார், சிவகாசியைச் சேர்ந்த பெண் டெய்லர் ஒருவர். வாங்கிய பணத்தையே இல்லை என ஏய்க்கும் இந்தக் காலத்தில், தன் நேர்மையால் சிகரமாக உயர்ந்திருக்கும் அவருக்குச் சமூக வலைதளங்களில் பாராட்டுக்கள் குவிந்துவருகிறது.

விருதுநகர் மாவட்டம், சிவகாசி சாச்சிபுரத்தைச் சேர்ந்தவர், சிவசங்கரி. 10 ஆண்டுகளாக டெய்லரிங் தொழிலில் உள்ளார். சிவகாசியில் உள்ள வாசன் ஜவுளிக் கடைக்குத் துணி வாங்கச் சென்றிருக்கிறார். வீட்டுக்கு வந்து பையை எடுத்துப் பார்த்தால், அதனுள் துணிக்குப் பதிலாகக் கட்டுக் கட்டாகப் பணம். மொத்தம், பணம் எட்டரை லட்சம் ரூபாய். உடனடியாகக் கடைக்குச் சென்று திருப்பிக்கொடுத்துள்ளார். அந்த நேர்மை உள்ளத்தை நேரில் சந்தித்தோம்.

“நான் வீட்டிலேயே பிளவுஸ், சுடிதார் எனத் தைத்துவருகிறேன். 9-ம் வகுப்பு வரையே படிச்சிருக்கேன். என் கணவர் கம்ப்யூட்டர் டிசைனர். எனக்கும் டிசைனிங் மீது ஆர்வம் உண்டு. அதை என் டெய்லரிங்கிலும் செய்யறேன். எனது ரெண்டு குழந்தைகள். 24-ம் தேதி, மெட்டீரியல்ஸ் வாங்கறதுக்காக, என் அண்ணன் பொண்ணைக் கூட்டிட்டுப் போனேன். நூல் கடையில் கலர் நூல்கள் வாங்கிட்டு, ஃபேன்ஸி பிளவுஸ் வாங்கறதுக்கு வாசன் ஜவுளிக் கடைக்குப் போனோம். அங்கேதான் வாடிக்கையாக மெட்டீரியல் வாங்குவேன். 3 கலர் ஃபேன்ஸி பிளவுஸ் வாங்கினேன். அப்போ, போன் வந்ததாலே கஸ்டமர்கிட்டே பேசிட்டே பையை வாங்கிட்டு வந்துட்டேன்.

வீட்டுக்கு வந்ததும் வேற வேலைகளைப் பார்த்துட்டு, அப்புறமா துணியைத் தைக்கிறதுக்காகப் பையைத் திறந்துப் பார்த்தேன். ரெண்டாயிரம் ரூபாய், 500 ரூபாய் நோட்டுக் கட்டுகள் இருந்துச்சு. அதைப் பார்த்ததும் மிரண்டுட்டேன். கையெல்லாம் நடுங்க ஆரம்பிச்சுட்டது. கடை முதலாளி தப்பா பையை மாத்திக்கொடுத்திருக்கிறது புரிஞ்சது. உடனே, என் அண்ணனோடு அந்தக் கடைக்குப் போய் திருப்பிக்கொடுத்தேன். ஏதோ ஞாபகத்தில் மாத்திக்கொடுத்துட்டதா சொன்னாங்க. `நானும் போனில் பேசிட்டே பையை வாங்கினதால கவனிக்கலை'னு சொன்னேன். அப்புறம், போலீஸில் எழுதி வாங்கிட்டு அனுப்பினாங்க. அந்தப் பணத்தைக் கடையில் ஒப்படைக்கிற வரை பெரிய பாரமாவே இருந்துச்சு. அதைக் கொடுத்த பிறகுதான் மனசு லேசு ஆச்சு. இதை அவங்க ஃபேஸ்புக்ல போட்டிருக்காங்க போல. ஆளாளுக்கு போன் பண்ணி பாராட்டுறாங்க. இதுக்கு எதுக்குங்க பாராட்டு? என் சொந்தக் காசையா தானம் பண்ணினேன். உழைச்சுச் சாப்பிடறது போதும்ங்க'' என்கிறார் வெள்ளந்தியாக...

வாழ்த்துக்கள் சகோதரி

ரமணியன்

@சக்தி18


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 25904
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9370

Back to top Go down

மங்கையர் திலகங்கள்  தொடர்ச்சி-- - Page 2 Empty Re: மங்கையர் திலகங்கள் தொடர்ச்சி--

Post by சக்தி18 on Tue Jan 21, 2020 8:50 pm

குஜராத் சூரத் -
மங்கையர் திலகங்கள்  தொடர்ச்சி-- - Page 2 MARR%20TTN

மாப்பிள்ளையின் அப்பாவுடன் ஓடிய மணமகளின் தாய்.
இதையடுத்து இளஞ்சோடியின் திருமணம் ரத்து ஆனதோடு, ஓடி போன தாய், தந்தை திரும்பி வருவதற்காக இரு குடும்பங்களும் காத்துக்கொண்டிருக்கின்றன.
(TOI /தமிழ் சமயம்)
சக்தி18
சக்தி18
தளபதி

தளபதி

பதிவுகள் : 1192
இணைந்தது : 24/12/2018
மதிப்பீடுகள் : 394

Back to top Go down

மங்கையர் திலகங்கள்  தொடர்ச்சி-- - Page 2 Empty Re: மங்கையர் திலகங்கள் தொடர்ச்சி--

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை