உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» ரூ. 275 கோடி: அதிகம் வசூலித்த ஹிந்திப் படங்களின் பட்டியலில் இடம் பெற்ற ‘வார்’!
by ayyasamy ram Today at 10:37 am

» இன்று பிறந்த நாளைக் கொண்டாடும் கீர்த்தி சுரேஷுக்கு பரிசளித்த கார்த்தி சுப்பராஜ்
by ayyasamy ram Today at 10:34 am

» உள்ளம் இனிதானால் உலகமே இனிதாகும்...!
by ayyasamy ram Today at 8:49 am

» 14 அணிகள் பங்கேற்கும் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தகுதி சுற்று இன்று தொடக்கம்
by ayyasamy ram Today at 6:54 am

» மகனை கதாநாயகனாக ஆக்கியது ஏன்? தங்கர் பச்சான் பேட்டி
by ayyasamy ram Today at 6:47 am

» தியேட்டர்கள் குறைவாக இருப்பதால் 400 படங்கள் திரைக்கு வராமல் முடக்கம் - சங்க பொதுச்செயலாளர் பன்னீர் செல்வம்
by ayyasamy ram Today at 6:31 am

» சிங்கப்பூரில் மதுபோதையில் போலீஸ் அதிகாரியை கடித்த பெண்ணுக்கு சிறை
by ayyasamy ram Today at 6:22 am

» துருக்கியில் அமெரிக்க அணு ஆயுதங்கள்: உளறிக் கொட்டிய டிரம்ப்
by ayyasamy ram Today at 6:15 am

» குரோர்பதியில் ரூ. 7 கோடியை தவறவிட்ட போட்டியாளர்
by ayyasamy ram Today at 6:10 am

» காவல்துறை, பாதுகாப்புப்படை அலுவலகங்களில் படேல் படம் வைக்க உத்தரவு
by ayyasamy ram Today at 6:04 am

» தமிழக அரசு ஊழியர்களுக்கு 5 சதவீதம் அகவிலைப்படி உயர்வு
by ayyasamy ram Today at 5:59 am

» Downloading
by prajai Yesterday at 11:41 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:39 pm

» ரமணியன் ஐயா -பிறந்த நாள் வாழ்த்துகள்.
by சக்தி18 Yesterday at 11:29 pm

» வேலன்:- போட்டோ ஸ்டுடியோ.
by velang Yesterday at 9:40 pm

» சை ,மோசமான ஆண்கள் ( 1 )--தொடர்
by T.N.Balasubramanian Yesterday at 7:28 pm

» தீவிரமாக பரவும் ''மெட்ராஸ் ஐ''..! கவனமாக இருங்க மக்களே...
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» ப்ரோகோலி – மக்ரோணி பாஸ்தா
by ஜாஹீதாபானு Yesterday at 6:31 pm

» கல்கி ஆசிரமங்களில் வருமான வரித் துறையினா் சோதனை
by T.N.Balasubramanian Yesterday at 6:31 pm

» வேதனை கொடுக்கின்றாய்
by illanthenralan Yesterday at 6:17 pm

» பிரபாகரன் படத்தை தோளிலும், மார்பிலும் பச்சை குத்திக்கொண்டு சட்டசபைக்கு செல்வோம்...
by T.N.Balasubramanian Yesterday at 5:55 pm

» மிஸ்டிக் செல்வம் அவர்களின் ஆன்மீக புத்தகங்கள் மின் நூல் கிடைக்குமா?
by Guest Yesterday at 5:44 pm

» மக்களே உஷார், 14 மாவட்டத்த குறி வைச்சிருச்சு மழை!
by ஜாஹீதாபானு Yesterday at 5:23 pm

» நூல் வேண்டும் .கிடைக்குமா ?
by Balki_73 Yesterday at 3:39 pm

» வெள்ளம் – முன்னெச்சரிக்கை..
by T.N.Balasubramanian Yesterday at 3:37 pm

» எளிய மருத்துவம் - தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 3:35 pm

» தலைப்பிரசவம்- நிமிடக் கதை
by ஜாஹீதாபானு Yesterday at 3:18 pm

» ஆன்மிக தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 1:59 pm

» விடாது கருப்பு நாவல் தேவை
by Guest Yesterday at 1:59 pm

» பொட்டுப்போல் இலை இருக்கும்; குச்சிபோல் காய் காய்க்கும்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 1:36 pm

» வறுமை என்னும் நோயை தீர்க்கவா...- இன்று உலக வறுமை ஒழிப்பு தினம் -
by ayyasamy ram Yesterday at 1:17 pm

» படித்ததில் பிடித்தது- பல்சுவை
by ayyasamy ram Yesterday at 1:08 pm

» எல்லோரும் ஏன் ஓடி வந்துவிட்டீர்கள்?
by ayyasamy ram Yesterday at 1:05 pm

» குத்துப் பாட்டுல ஏன் நடிக்க மாட்டேன்னு சொல்றீங்க...?
by ayyasamy ram Yesterday at 1:01 pm

» வாழ்க்கையை வழி நடத்துவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 11:31 am

» திட்டம் போட்டு திருடுற கூட்டம் - விமர்சனம் - விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:27 am

» அருவம் - திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பப்பி - திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சவுதி அரேபியாவில் நிகழ்ந்த பேருந்து விபத்தில் வெளிநாட்டை சேர்ந்த 35 பேர் பலி: 4 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை
by ayyasamy ram Yesterday at 11:10 am

» சென்னைதமிழகத்தில் இருந்து 36 ஆண்டுகளுக்கு பிறகு யாழ்ப்பாணத்திற்கு விமான சேவை:
by ayyasamy ram Yesterday at 11:08 am

» புத்தக தேவைக்கு...
by balakama Yesterday at 10:19 am

» பிறந்த நாள் வாழ்த்துகள்.(ஆதிரா)
by ayyasamy ram Yesterday at 8:01 am

» காணொளிகள் - பழைய பாடல்கள் {தொடர் பதிவு}
by ayyasamy ram Yesterday at 7:55 am

» உணா்ச்சிகளை கட்டுப்படுத்துவதில் நானும் சிறந்தவன்: தோனி
by ayyasamy ram Yesterday at 7:22 am

» தஞ்சாவூா் பெரியகோயிலில் நவ. 5,6-இல் சதய விழா
by ayyasamy ram Yesterday at 7:19 am

» சிறிய விஷயங்களை ரசிக்க பழகுங்கள்…!
by ayyasamy ram Yesterday at 7:06 am

» படித்த பெண்களைக் கட்டிய கணவன்களின் மனநிலை…!
by ayyasamy ram Yesterday at 7:02 am

» வெடிக்க விட்டால் சிதறாது! – வீட்டுக் குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» ப்ரோகோலி பூரி
by ayyasamy ram Yesterday at 6:37 am

» ப்ரோகோலி பாயசம்
by ayyasamy ram Yesterday at 6:37 am

Admins Online

மங்கையர் திலகங்கள் 6 தொடர்ச்சி--நிர்மலா ஆபீசுக்கே போறது கிடையாதாம்.. 2 வருஷமா

மங்கையர் திலகங்கள் 6 தொடர்ச்சி--நிர்மலா ஆபீசுக்கே போறது கிடையாதாம்.. 2 வருஷமா Empty மங்கையர் திலகங்கள் 6 தொடர்ச்சி--நிர்மலா ஆபீசுக்கே போறது கிடையாதாம்.. 2 வருஷமா

Post by T.N.Balasubramanian on Sun Sep 15, 2019 9:11 pm

மங்கையர் திலகங்கள்

கிருஷ்ணகிரியைச் சேர்ந்தவர் ஆறுமுகம் பெங்களூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவருக்கு வித்யா என்ற மகளும் விக்னேஷ் என்ற மகனும் உள்ளனர். சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் வித்யா நர்ஸாகப் பணியாற்றி வருகிறார். விக்னேஷ் சிறுசேரியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலைபார்த்து வருகிறார். நண்பரின் திருமணத்தில் பங்கேற்பதற்காகத் திருநள்ளாறு செல்வதாக வித்யா குடும்பத்தினரிடம் தெரிவித்துள்ளார். திருமணம் முடிந்து காரைக்காலிலிருந்து சென்னைக்கு பஸ் ஏறிவிட்டதாகத் தன் சகோதரர் விக்னேஷ்க்கு போனில் தகவல் தெரிவித்துள்ளார். சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் வந்து அழைத்துச் செல்லுமாறு கூறியுள்ளார். விக்னேஷ் அவரது செல்போன்னுக்கு தொடர்புகொள்ள முயன்றுள்ளார். ஸ்விட்ச் ஆஃப் என வந்துள்ளது.

இந்தத் தகவலை விக்னேஷ் தன் தந்தையிடம் தெரிவித்துள்ளார். சிறிது நேரத்தில் ஆறுமுகத்தின் தந்தையின் செல்போனுக்கு மர்ம நபர் ஒருவர் போன் செய்து வித்யாவைக் கடத்தி வைத்திருப்பதாகக் கூறியுள்ளார். 10 லட்சம் கொடுத்தால் உங்கள் மகளை விடுவிப்போம். போலீஸாரிடம் போனால் உங்கள் மகளை உயிருடன் பார்க்க முடியாது எனக் கூறியுள்ளார். ஆறுமுகம் தன் மகனை அழைத்து விவரத்தைக் கூறியுள்ளார். இதற்கிடையில் தொடர்ந்து ஆறுமுகத்திடம் மர்ம நபர் போனில் மிரட்டியுள்ளார். சென்னை கோயம்பேடு வந்து பணத்தைக் கொடுத்தால் உங்கள் மகளை விடுவிப்பேன் என அந்த நபர் கூறியுள்ளார். இதனால் பதறிப்போன ஆறுமுகம் சென்னை கோயம்பேடு காவல்நிலையத்தில் புகார் தெரிவித்தார்.

இதையடுத்து இணை கமிஷனர் விஜயகுமாரி மேற்பார்வையில், துணை கமிஷனர் முத்துசாமி தலைமையில் தனிப்படை அமைத்து விசாரணையில் இறங்கினர். சென்னை கோயம்பேடு பேருந்து நிறுத்தம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்த கண்காணிப்பு கேமராவை போலீஸார் ஆய்வு செய்தனர். வித்யா கோயம்பேடு பேருந்து நிலையத்தில் வந்திறங்குவது. அங்கிருந்து கிண்டி செல்லும் மாநகரப் பேருந்தில் ஏறியதும் சிசிடிவி காட்சியில் பதிவாகியிருந்தது. இதையடுத்து கிண்டி பேருந்து நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தபோது வித்யா ஒரு இளைஞருடன் புதுச்சேரி செல்லும் அரசுப் பேருந்தில் ஏறுவது தெரியவந்தது. இருவரும் நண்பர்கள் என விசாரணையில் தெரியவந்துள்ளது.

`உன்னை ஜெயிலுக்கு அனுப்ப நானே காரணமாகிவிட்டேனே'- தந்தையை ஏமாற்ற நினைத்து சிக்கிய மகள்!
செல்போன் சிக்னல் வைத்துதான் இந்த வழக்கில் துப்பு துலக்கியது. அந்த எண் காரைக்காலைச் சேர்ந்த மனோஜ் என்பவரது என்பது தெரியவந்தது. மனோஜ் புதுச்சேரியில் இருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. போலீஸார் நெருங்குவதை அறிந்த இருவரும் சென்னை வந்துள்ளனர். கோயம்பேட்டில் வைத்து இருவரையும் போலீஸார் கைது செய்தனர்

இதுகுறித்து காவல்துறை அதிகாரிகள் பேசுகையில், ``வித்யாவும் பணம் கேட்டு போன் செய்த நபரும் நண்பர்கள் என்பது விசாரணையில் தெரிந்தது. காரைக்காலில் வித்யா படித்துக்கொண்டிருந்தபோது இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. மனோஜ் கனடா செல்வதற்காக வித்யாவிடம் பணம் கேட்டுள்ளார். சமீபத்தில் தன் தந்தை விவசாய நிலத்தை விற்றதும் அதன்மூலம் கிடைத்த 13 லட்சத்தை வங்கியில் டெபாசிட் செய்ததை மனோஜிடம் கூறியுள்ளார். இருவரும் கடத்தல் நாடகத்தை அரங்கேற்றியுள்ளனர். சென்னையில் வைத்து இருவரையும் கைது செய்தோம்” என்றனர். சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின்னர் இருவரையும் சிறையில் அடைத்தனர்.

மகளிடம் பேசிய ஆறுமுகம், இப்படிச் செய்து நம் குடும்பத்தையும் உன்னையும் சங்கடப்படுத்திவிட்டாயே, உன்னை ஜெயிலுக்கு அனுப்ப நானே காரணமாகிவிட்டேனே என்று கண்ணீர் மல்க கூறியுள்ளார். அப்போது போலீஸார் வழக்கின் விவரத்தை ஆறுமுகத்திடம் கூறி நிலைமையைப் புரிய வைத்துள்ளனர். இதையடுத்து தந்தையை ஏமாற்றி பணத்தைப் பறிக்கத் திட்டமிட்ட மகள், போலீஸாரின் 12 மணி நேர தேடுதல் வேட்டையில் சிக்கிக் கொண்டார். இந்த வித்தியாசமான வழக்கு காவல்துறையினருக்கும் ஆறுமுகம் குடும்பத்தினருக்கும் மட்டுமல்ல அனைவருக்கும் ஒரு பாடம் என்றார் காவல்துறை அதிகாரி ஒருவர்.

நன்றி விகடன்

ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25386
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9202

Back to top Go down

மங்கையர் திலகங்கள் 6 தொடர்ச்சி--நிர்மலா ஆபீசுக்கே போறது கிடையாதாம்.. 2 வருஷமா Empty Re: மங்கையர் திலகங்கள் 6 தொடர்ச்சி--நிர்மலா ஆபீசுக்கே போறது கிடையாதாம்.. 2 வருஷமா

Post by சக்தி18 on Mon Sep 16, 2019 12:49 pm

மங்கையர் திலகங்கள் 6 தொடர்ச்சி--நிர்மலா ஆபீசுக்கே போறது கிடையாதாம்.. 2 வருஷமா 1571444738
3x அய்யய்யோ
மங்கையர் திலகங்களை வாழ்த்த ஓடோடி வந்த என்னை ஏமாற்றி விட்டிர்களே ஐயா!
இருப்பினும் வாழ்த்துகள்?????
சக்தி18
சக்தி18
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 876
இணைந்தது : 24/12/2018
மதிப்பீடுகள் : 333

Back to top Go down

மங்கையர் திலகங்கள் 6 தொடர்ச்சி--நிர்மலா ஆபீசுக்கே போறது கிடையாதாம்.. 2 வருஷமா Empty Re: மங்கையர் திலகங்கள் 6 தொடர்ச்சி--நிர்மலா ஆபீசுக்கே போறது கிடையாதாம்.. 2 வருஷமா

Post by T.N.Balasubramanian on Thu Sep 19, 2019 11:50 am

[b]மங்கையர் திலகம்  2 [/b]

மங்கையர் திலகங்கள் 6 தொடர்ச்சி--நிர்மலா ஆபீசுக்கே போறது கிடையாதாம்.. 2 வருஷமா Aruna-1568872976

சென்னை: அருணாவுக்கு பணத்துமேல அவ்வளவு ஆசை.. அதான் இப்படி தில்லாலங்கடி வேலை பார்த்து, கடைசியில் போலீசிடம் வசமாக சிக்கி உள்ளார். சென்னை நுங்கம்பாக்கத்தில் தனியார் நிறுவன வேலைவாய்ப்பு நிறுவனம் ஒன்று இயங்கி வந்தது. இதன் ஓனர் பெயர் ரூபன் சக்கரவர்த்தி. இதன் நிறுவன அதிகாரியாக வேலை பார்ப்பவர் அருணா என்ற இளம் பெண். ரூபனுக்கு வயசு 26, அருணாவுக்கு வயசு 25 ஆகிறது!
போன மார்ச் மாதம்தான் இந்த நிறுவனத்தை இவர்கள் ஆரம்பித்தனர். சிங்கப்பூர், மலேசியா போன்ற வெளிநாடுகளில் படித்த இளைஞர்களுக்கு கைநிறைய சம்பளத்துடன் வேலை வாங்கித்தரப்படும் என்று ஆன்லைன் மூலம் விளம்பரம் செய்யப்பட்டது. இதை பார்த்ததும், ஏராளமான இளைஞர்கள் வேலை கேட்டு விண்ணப்பித்தனர். அவர்களிடம் தலா ரூ.30 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் பணம் வசூலிக்கப்பட்டது. அந்த இளைஞர்களின் பாஸ்போர்ட்டையும் நிறுவனம் வாங்கி வைத்து கொண்டது. இதற்கு ஒரு போலி நகலையும் அந்த நிறுவனம் இளைஞர்களுக்கு தந்துள்ளது. அவ்வளவுதான்... அதோட அந்த நிறுவனம் இழுத்து மூடியாகிவிட்டது. 2 பேரும் எங்கே போனார்கள் என்றே தெரியவில்லை. இதுவரைக்கும் வேலைக்கு விண்ணப்பித்த இளைஞர்களிடம் ரூ.25 லட்சம் + பாஸ்போட்டை வாங்கி கொண்டு எஸ். ஆகியிருந்தனர். போன் வரும் என்று காத்திருந்த இளைஞர்களுக்கு ஒரு போனும் வரவில்லை. நம்பி மோசம் மோன இளைஞர்கள் 80 பேர் சென்னை ஆயிரம்விளக்கு போலீசாரிடம் புகார் தரவும் விசாரணை ஆரம்பமானது. இதையடுத்து ஆவடி பருத்திப்பட்டு பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்த அருணாவை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். ஓனர், நிரூபன் சக்ரவர்த்தி இன்னும் தலைமறைவாகவே உள்ளதால் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். நல்ல அழகு.. இனிமையான குரல்.. இதுதான் அருணாவின் மூலதனம்! "மலேசியா ஆபீசில் இருந்து பேசுறோம்.. எங்கள் கம்பெனியில் உங்களை செல்க்ட் செய்துவிட்டோம். கல்வி தகுதிக்கு ஏற்ப வேலை, சம்பளம் வழங்கப்படும், உங்களுக்கு இந்த வேலை வேண்டும் என்றால், நுங்கம்பாக்கத்தில் உள்ள எங்கள் ஆபீசில் 50 ஆயிரம் பணம் செலுத்தி உறுதிச் சான்றிதழ்களை வாங்கி கொள்ளுங்கள்" என்று இனிமையாக பேசி பேசி 25 லட்சத்தை கறந்தது அருணாதானாம்! வெளிநாடுகளில் வேலை வாங்கித்தருவதாக கூறி 80 பேரிடம், ரூ.25 லட்சம் மோசடி செய்த வழக்கில், இளம் பெண் கைது செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை தந்துள்ளது.

ரமணியன்
நன்றி தட்ஸ்தமிழ்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25386
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9202

Back to top Go down

மங்கையர் திலகங்கள் 6 தொடர்ச்சி--நிர்மலா ஆபீசுக்கே போறது கிடையாதாம்.. 2 வருஷமா Empty Re: மங்கையர் திலகங்கள் 6 தொடர்ச்சி--நிர்மலா ஆபீசுக்கே போறது கிடையாதாம்.. 2 வருஷமா

Post by சக்தி18 on Thu Sep 19, 2019 5:49 pm

மங்கையர் திலகங்கள் 6 தொடர்ச்சி--நிர்மலா ஆபீசுக்கே போறது கிடையாதாம்.. 2 வருஷமா 1571444738
பதிவு இரண்டு போதாது.............நூறை தாண்டலாம்.
சக்தி18
சக்தி18
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 876
இணைந்தது : 24/12/2018
மதிப்பீடுகள் : 333

Back to top Go down

மங்கையர் திலகங்கள் 6 தொடர்ச்சி--நிர்மலா ஆபீசுக்கே போறது கிடையாதாம்.. 2 வருஷமா Empty Re: மங்கையர் திலகங்கள் 6 தொடர்ச்சி--நிர்மலா ஆபீசுக்கே போறது கிடையாதாம்.. 2 வருஷமா

Post by T.N.Balasubramanian on Thu Sep 19, 2019 7:37 pm

என்னதொரு நம்பிக்கை !!
நம் கவனத்திற்கு வந்தால் பகிர்வோம்.
மற்றவர்களும் பகிரலாம்.

ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25386
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9202

Back to top Go down

மங்கையர் திலகங்கள் 6 தொடர்ச்சி--நிர்மலா ஆபீசுக்கே போறது கிடையாதாம்.. 2 வருஷமா Empty Re: மங்கையர் திலகங்கள் 6 தொடர்ச்சி--நிர்மலா ஆபீசுக்கே போறது கிடையாதாம்.. 2 வருஷமா

Post by சக்தி18 on Tue Sep 24, 2019 2:23 pm

45 சவரன் நகைகளுடன் தோழியோடு தலைமறைவான மனைவி.

தனது மனைவி 45 சவரன் நகைகளுடன், அவரின் தோழியுடன் தலைமறைவாகிவிட்டதாக காவல்நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார் கணவர் ஒருவர். திருமணமான எட்டே மாதத்தில், டிக்டாக் செயலியால் நடந்திருக்கிறது இந்த விபரீதம்.

தம்பதியான ஆரோக்கிய லியாவும், வினிதாவும் சிவங்கை மாவட்டம் கடம்பக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர்கள். இவர்களுக்கு 8 மாதத்திற்கு முன் தான் திருமணம் நடந்தது முடிந்தது. மணமான 3 மாதத்திலேயே தனிக்குடித்தனம் சென்ற ஆரோக்கிய லியா, மனைவியை தனியே விட்டுவிட்டு சிங்கப்பூருக்கு பணிக்கு சென்றுவிட்டார்.

தனிமையில் இருந்த வினிதா, சமூக வலைத்தளங்களில் அதிக ஆர்வமாக இருக்க ஆரம்பித்திருக்கிறார். அதில் குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால், டிக் டாக் செயலியில் சினிமா வசனங்களைப் பேசி வீடியோ பதிவிட்டிருக்கிறார் வினிதா. அதுதான் இந்த விபரீதத்தின் ஆரம்பப் புள்ளியாக இருந்திருக்கிறது. ஒருகட்டத்தில் டிக் டாக் செயலியில் மூழ்கிப்போன வினிதாவுக்கு, திருவாரூரைச் சேர்ந்த அபி என்ற பெண்ணின் அறிமுகம் கிடைத்திருக்கிறது.

டிக் டாக்கில் துளிர்விட்ட இவர்களின் நட்பு, தொலைபேசி உரையாடலில் வேர்விட்டு, அசைக்கமுடியாத ஆலமரமாகிவிட்டது. அது, அபியின் புகைப்படத்தையும், பெயரையும் கைகளில் பச்சை குத்திக் கொள்ளும் அளவுக்கு சென்றிருக்கிறது. அதிர்ந்துபோன கணவர் சிங்கப்பூரில் இருந்து வினிதாவை கண்டித்திருக்கிறார். ஆனால் வினிதா கேட்பதாக தெரியவில்லை. உடனடியாக சிவகங்கை திரும்பிய அவர், வினிதாவுக்கு அறிவுரை கூறி, அவரின் தாய் வீட்டில் விட்டுச் சென்றிருக்கிறார்.
(படங்கள் தவிர்க்கப்பட்டுள்ளது.)
(இணையம்)
1 .வெளி நாட்டில் கஷ்டப்பட்டு வேலை செய்யும் கணவன்...............
2 .டிக் டாக்..................
3.சமூகவலைத்தள அதி ஈடுபாடும் அதை முழுதும் நம்புவதும்.

ஏன்???
சக்தி18
சக்தி18
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 876
இணைந்தது : 24/12/2018
மதிப்பீடுகள் : 333

Back to top Go down

மங்கையர் திலகங்கள் 6 தொடர்ச்சி--நிர்மலா ஆபீசுக்கே போறது கிடையாதாம்.. 2 வருஷமா Empty Re: மங்கையர் திலகங்கள் 6 தொடர்ச்சி--நிர்மலா ஆபீசுக்கே போறது கிடையாதாம்.. 2 வருஷமா

Post by T.N.Balasubramanian on Tue Sep 24, 2019 5:25 pm

தங்க ம(மா)யமான மனைவி.
வெளிநாடு செல்லும் கணவர்கள் கூடவே மனைவியையும் அழைத்து சென்று விடுதல் நல்லது.
ஒரு காலத்தில் வயசு பிள்ளைகள் /பெண்கள் கேட்டு போய்விடுவார்களோ என்ற கவலை இருந்தது.
இப்போதெல்லாம் மிகவும் முன்னேறி "மனைவி" அளவுக்கு வந்துள்ளது.

ரமணியன்
@சக்தி18 ---ம. தி. 3 என்று மாற்றப்படுகிறது

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25386
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9202

Back to top Go down

மங்கையர் திலகங்கள் 6 தொடர்ச்சி--நிர்மலா ஆபீசுக்கே போறது கிடையாதாம்.. 2 வருஷமா Empty Re: மங்கையர் திலகங்கள் 6 தொடர்ச்சி--நிர்மலா ஆபீசுக்கே போறது கிடையாதாம்.. 2 வருஷமா

Post by சக்தி18 on Wed Sep 25, 2019 4:20 pm

சம்பந்தப்பட்ட பெண் வினிதா மறுத்திருக்கிறார்…………...
இதுகுறித்து வினிதா கூறுகையில், ’’திருமணத்தின்போது எனக்கு வழங்கிய நகைகளை அடகு வைத்துதான் எனது கணவரை வெளிநாட்டு வேலைக்கு அனுப்பி வைத்தேன். திருவாரூரைச் சேர்ந்த அபி என்ற பெண்ணுடன் கடந்த 4 மாதமாக நட்பு முறையில் பழக்கம் ஏற்பட்டது. இது என் கணவருக்கும் தெரியும். இந்தநிலையில், சிங்கப்பூரில் இருந்த எனது கணவர் கடந்த 18-ம் தேதி திடீரென ஊருக்கு வந்தார். என்னை அவர் சந்தேகப்பட்டு அடித்தார். இதனால், எனது காலில் காயம் ஏற்பட்டது. இதனால், நான் வீட்டை விட்டு வெளியேறி, கரூரில் உள்ள எனது மற்றொரு தோழியான சரண்யா வீட்டிற்கு சென்று தங்கியிருந்தேன்

 நான் எனது தோழி சரண்யா வழங்கிய ஆலோசனையின் பேரில் தற்போது சிவகங்கை நகர் போலீசில் ஆஜராகி நடந்த உண்மையை தெரிவித்தேன். நான் வீட்டில் இருந்து 6 பவுன் தங்க சங்கிலி மற்றும் கையில் பிரேஸ் லெட்டுடன் மட்டும்தான் சென்றேன். மற்றபடி எந்த நகையையும் எடுத்து செல்லவில்லை. தற்போது வெளியான தவறான செய்திகளால் எனது டிக்-டாக் தோழிக்கு பிரச்சினை வரக்கூடாது என்றுதான், நான் போலீசில் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளேன்’’
(இணையம்)
சக்தி18
சக்தி18
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 876
இணைந்தது : 24/12/2018
மதிப்பீடுகள் : 333

Back to top Go down

மங்கையர் திலகங்கள் 6 தொடர்ச்சி--நிர்மலா ஆபீசுக்கே போறது கிடையாதாம்.. 2 வருஷமா Empty Re: மங்கையர் திலகங்கள் 6 தொடர்ச்சி--நிர்மலா ஆபீசுக்கே போறது கிடையாதாம்.. 2 வருஷமா

Post by T.N.Balasubramanian on Wed Sep 25, 2019 4:55 pm

அப்பிடி வருதா விஷயம்.
தீர விஜாரித்தால்தான் உண்மை புலப்படும்.

ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25386
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9202

Back to top Go down

மங்கையர் திலகங்கள் 6 தொடர்ச்சி--நிர்மலா ஆபீசுக்கே போறது கிடையாதாம்.. 2 வருஷமா Empty Re: மங்கையர் திலகங்கள் 6 தொடர்ச்சி--நிர்மலா ஆபீசுக்கே போறது கிடையாதாம்.. 2 வருஷமா

Post by Dr.S.Soundarapandian on Wed Sep 25, 2019 8:30 pm

:வணக்கம்:
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 5039
இணைந்தது : 23/10/2012
மதிப்பீடுகள் : 2794

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

மங்கையர் திலகங்கள் 6 தொடர்ச்சி--நிர்மலா ஆபீசுக்கே போறது கிடையாதாம்.. 2 வருஷமா Empty Re: மங்கையர் திலகங்கள் 6 தொடர்ச்சி--நிர்மலா ஆபீசுக்கே போறது கிடையாதாம்.. 2 வருஷமா

Post by T.N.Balasubramanian on Fri Oct 11, 2019 7:44 pm

2 மருமகன்கள்.. மாமியார் விரித்த வலை.. அதிர்ச்சியில் குண்டூர்-

குண்டூர்: மருமகன்களுடன் கள்ள உறவு வைத்திருக்கும் மாமியார்தான் குண்டூரில் ஹாட் டாப்பிக்காக ஓடிக் கொண்டிருக்கிறது. ஆந்திர மாநிலம் குண்டூர் பகுதியை சேர்ந்தவர்கள் இந்த தம்பதி. 2 மகள்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு நல்லபடியாக கல்யாணமும் செய்து வைத்துள்ளனர். ஆனால், வீட்டுக்கு வந்த மாப்பிள்ளைகள் 2 பேரையும் அந்த மாமியார் கைக்குள் போட்டுக் கொண்டார். அதாவது தகாத உறவுக்கு வலை வீசியுள்ளார். அந்த மருமகன்களும் மாமியார் வீசிய வலையில் விழுந்துள்ளனர். விஷயம் கணவனுக்கு தெரிந்து மனைவியை கண்டித்துள்ளார். மாமியாரோ, மருமகன்களிடம் உறவை துண்டிக்க முடியாது என்று கறாராக சொல்லிவிட்டார். இதனால் ஒரு கட்டத்தில் கணவன் தற்கொலையே செய்து கொண்டார். இப்படி வீட்டில் திடீரென ஒரு தற்கொலை நடக்கவும்தான், சொந்தக்காரர் சீனிவாசன் என்பவர் விஷயத்தை மோப்பம் பிடித்துவிட்டார். பிறகு, அந்த மாமியாரையும், மருமகன்களையும் கூப்பிட்டு வார்ன் பண்ணினார். இதனால் மாமியார் ரொம்பவும் டென்ஷன் ஆகிவிட்டார். மருமகன்களின் உதவியுடன் சீனிவாசனை போட்டு தள்ளிவிட்டார். இந்த கொலை கடந்த ஆகஸ்ட் 9-ம் தேதி நடந்தது. இது சம்பந்தமாக சீனிவாசனின் மனைவி, தன் கணவரின் கொலைக்கு காரணம், மாமியாரும், மருமகன்களும்தான் என்று போலீசில் புகார் தந்தார். இதையடுத்து, அந்த பெண்ணையும் மாமியார் மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்தும் போலீசில் புகார் தரப்பட்டுள்ளது. தற்போது விசாரணையும் நடந்து வருகிறது. மாமியார் & மருமகன்கள் அண்ட் கோ சம்பவம்தான் குண்டூரில் பரபரப்பை தந்து வருகிறது.

நன்றி தட்ஸ்தமிழ்
ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25386
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9202

Back to top Go down

மங்கையர் திலகங்கள் 6 தொடர்ச்சி--நிர்மலா ஆபீசுக்கே போறது கிடையாதாம்.. 2 வருஷமா Empty Re: மங்கையர் திலகங்கள் 6 தொடர்ச்சி--நிர்மலா ஆபீசுக்கே போறது கிடையாதாம்.. 2 வருஷமா

Post by சக்தி18 on Fri Oct 11, 2019 9:02 pm

மங்கையர் திலகங்கள் 6 தொடர்ச்சி--நிர்மலா ஆபீசுக்கே போறது கிடையாதாம்.. 2 வருஷமா 1571444738
சக்தி18
சக்தி18
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 876
இணைந்தது : 24/12/2018
மதிப்பீடுகள் : 333

Back to top Go down

மங்கையர் திலகங்கள் 6 தொடர்ச்சி--நிர்மலா ஆபீசுக்கே போறது கிடையாதாம்.. 2 வருஷமா Empty Re: மங்கையர் திலகங்கள் 6 தொடர்ச்சி--நிர்மலா ஆபீசுக்கே போறது கிடையாதாம்.. 2 வருஷமா

Post by சக்தி18 on Fri Oct 11, 2019 9:05 pm

கேரளாவை உலுக்கிய மட்டன்சூப் கொலை - மங்கையர் திலகம்-ஜூலி

மங்கையர் திலகங்கள் 6 தொடர்ச்சி--நிர்மலா ஆபீசுக்கே போறது கிடையாதாம்.. 2 வருஷமா Jolly-murders-family-tree_16da168cea6_original-ratio

சயனைடு சூப் கொடுத்து 6 பேரை கொலை செய்த ஜூலி தாமஸ் என்பவர் கதையை மையமாக வைத்து 2 திரைப்படங்கள் உருவாகின்றன. இதில் ஒரு கதையில் மோகன் லால் நடிக்கிறார்.
கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள கூடத்தாய் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் ஜூலி தாமஸ். பெற்றோரின் கட்டாயத்தின் பேரில் ராய் தாமஸ் என்பவரை திருமணம் செய்து கொண்டார் ஜுலி. மணவாழ்க்கை கசப்பாக இருந்ததால் மாமனாரின் அண்ணன் மகன் சாஜுவை பிடித்திருந்தது ஜூலிக்கு. அவருக்கும் அதே எண்ணம் இருப்பதை அறிந்த ஜூலி, இருவரும் இணைவதற்கு தடையாக இருக்கும் குடும்பத்தை கூண்டோடு முடித்துவிட நினைத்தார்.

அதற்காக நகைப்பட்டறையில் பணிபுரியும் தனது நண்பர் சாஜுவிடம் இருந்து சயனைடு வாங்கியுள்ளார். ஜுலி குடும்பத்தில் உள்ளவர்கள் இரவு உணவுக்குப்பின் சூப் சாப்பிடுவது வழக்கம். அதைப் பயன்படுத்தி அனைவரையும் கொலை செய்ய திட்டம் தீட்டினார். ஒரே நேரத்தில் எல்லோரையும் கொலை செய்துவிட்டால் தன்மீது சந்தேகம் வரும் என்பதால் சிறிது கால இடைவெளியில் திட்டத்தை அரங்கேற்ற முடிவு செய்துள்ளார்.

யாருக்கும் சந்தேகம் ஏற்படாமல் இருந்தால்தான் சொத்துகளை தமது பெயருக்கு மாற்ற முடியும் என்பதும் அதற்கு ஒரு காரணம். முதலில் மாமியார் அன்னம்மாவுக்கு 2002ஆம் ஆண்டு மட்டன் சூப்பில் சயனைடை கலந்து கொடுத்துள்ளார். அதை குடித்ததும் வாந்தி எடுத்த அன்னம்மா சிறிது நேரத்தில் உயிரிழந்தார். 2008ஆம் ஆண்டு மாமனார் டாம் தாமஸையும் 2011ஆம் ஆண்டு கணவர் ராய் தாமஸையும் அதே பாணியில் கொலை செய்துள்ளார் ஜூலி. திட்டமிட்டபடி எல்லாம் நடந்து கொண்டி ருந்த போது அன்னம்மாவின் சகோதரர் மேத்யூவுக்கு ஜுலியின் நடவடிக்கைகள் சந்தேகத்தை ஏற்படுத்த அவர் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

ஜூலி 2014ஆம் ஆண்டு மேத்யூவுக்கும் சயனைடு மட்டன் சூப் கொடுக்க பிரச்னை முடிந்தது. தன்வீட்டில் அனைவரையும் கொலை செய்தபின் ஜூலியின் கவனம் சாஜுவின் மனைவி சிலி மற்றும் அவரது 10 மாத பெண் குழந்தையின் மீது திரும்பியது. 2016-ல் அவர்களுக்கும் சயனைடு கலந்த சூப் கொடுத்தபின் 2017ஆம் ஆண்டு ஜூலியும் சாஜுவும் திருமணம் செய்து கொண்டுள்ளனர். குடும்பத்தினரின் சொத்துகளை தன் பெயருக்கு மாற்றிக்கொண்டுள்ளார் ஜூலி. 

சாஜூவின் மனைவி இறந்து ஒராண்டுக் கூட முடியாத நிலையில் சாஜூவும், ஜூலியும் திருமணம் செய்தது உறவினர்க ளுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. அவரது முதல் கணவர் ராய் தாமஸின் சகோதரர் தனது குடும்பத்தினரின் உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதாக புகார் அளித்தார். அவர் வெளிநாட்டில் இருந்ததால் ஜூலியின் சயனைடு சூப்பில் இருந்து தப்பியிருந் தார். இதே போல் சாஜுவின் மனைவி சிலியின் உறவினர்களும் புகார் அளிக்க, உயிரிழந்தவர்களின் உடல்கள் தோண்டி எடுக்கப்பட்டு பிரதேச பரிசோதனை செய்யப்பட்டன. அதன்மூலம் உண்மை வெளிவந்தது. இதுதொடர்பாக ஜூலி, அவரது கணவர் சாஜு, நகைப்பட்டறை ஊழியர் ஆகியோரைப் பிடித்து காவல்துறையினர் விசாரணை நடத்தினர். விசாரணையில் 6 பேரையும் கொலை செய்ததை ஜூலி ஒப்புக்கொண்டதாக போலீசார் தெரிவித்தனர். 

இந்த சீரியல் கொலை சம்பவம் தொடர்பாக கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விசாரணையில் தற்போது திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
(புதியதலைமுறை)

(ஒலி வடிவில் கேட்க..)

சக்தி18
சக்தி18
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 876
இணைந்தது : 24/12/2018
மதிப்பீடுகள் : 333

Back to top Go down

மங்கையர் திலகங்கள் 6 தொடர்ச்சி--நிர்மலா ஆபீசுக்கே போறது கிடையாதாம்.. 2 வருஷமா Empty Re: மங்கையர் திலகங்கள் 6 தொடர்ச்சி--நிர்மலா ஆபீசுக்கே போறது கிடையாதாம்.. 2 வருஷமா

Post by T.N.Balasubramanian on Sat Oct 12, 2019 5:06 pm

தக்காளி மற்றும் பலப்பல சூப் ருசித்தவர் பலருண்டு
அவைகளின் ருசியை விண்டவர் சிலருண்டு.
அய்யகோ சயனைட் சூப்பை குடித்தோர்
வேறெந்த சூப்பையும் குடித்தாரில்லை.
பைபிளின் லாஸ்ட் சப்பர் போல்
இதுவும் கடைசி( soup ) சூப்பர்.

ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25386
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9202

Back to top Go down

மங்கையர் திலகங்கள் 6 தொடர்ச்சி--நிர்மலா ஆபீசுக்கே போறது கிடையாதாம்.. 2 வருஷமா Empty Re: மங்கையர் திலகங்கள் 6 தொடர்ச்சி--நிர்மலா ஆபீசுக்கே போறது கிடையாதாம்.. 2 வருஷமா

Post by T.N.Balasubramanian on Sat Oct 12, 2019 5:16 pm

சென்னை: அரை நிர்வாண கோலத்தில்.. ஆம்னி பஸ்ஸுக்குள்.. ஆண் நண்பருடன் பெண் அரசியல்வாதி ஒருவர் கையும் களவுமாக பிடிபட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை தந்துள்ளது. முன்புபோல் சாதாரண பஸ்கள் இல்லாமல், இப்போது ஆம்னி பஸ்கள் பெருக தொடங்கிவிட்டன. அதிலும் ஏசி பஸ் என்றால் சொல்லவே தேவையில்லை. மெத்தை, ஸ்க்ரீன், உட்பட ஏகபோக வசதிகளை கொண்டு உள்ளது. இது பயணிகளுக்கு சவுகரியத்தை தந்தாலும், ஒருசிலர் அநாகரீக காரியங்களிலும் இறங்கிவிடுகின்றனர்.  பஸ்ஸுக்குள்ளேயே விபச்சாரம் நடப்பதாக நிறைய புகார்களும் போலீசாருக்கு வந்த வண்ணம் உள்ளன. அதனால் ஆம்னி பஸ்கள் மீது நம் போலீசாரும் ஒரு கண் வைத்து அடிக்கடி தடாலடி சோதனைகளை நடத்தி, குற்றசெயல்களை குறைத்து வருகின்றனர். இதோ மண்ணுக்கு அடியில்தான் ஒளிச்சு வச்சிருக்கேன்.. சுட்டி காட்டிய முருகன்.. நகையை அள்ளிய போலீஸ்! அந்த வகையில், பெங்களூரில் இருந்து சென்னைக்கு ஒரு ஆம்னி பஸ் வந்துள்ளது. பிரதமரும், சீன அதிபரும் இங்கு வந்திருந்ததால், அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளும் நடந்து வந்ததால், சோதனையும் தீவிரமானது. அப்படித்தான் வந்து கொண்டிருந்த ஆம்னி பஸ்ஸை போலீசார் சோதனை செய்தனர். அப்போது அந்த பஸ்ஸின் கடைசி சீட்டில் ஒரு பெண் தமிழக அரசியல்வாதி இருந்திருக்கிறார். இவர் அடிக்கடி சோஷியல் மீடியாவில் உடல், உரிமை குறித்து நிறைய வீடியோக்களை வெளியிடும் பெண் என்கிறார்கள். 45 வயது மதிக்கத்தக்க ஒரு ஆணுடன் அரை நிர்வாண கோலத்தில் இருந்திருக்கிறார். செம போதையிலும் அந்த பெண் அரசியல்வாதி இருப்பதை கண்டு போலீசார் அதிர்ந்துள்ளனர். எனினும் 2 பேரையுமே அங்கேயே இறங்க செய்து, அந்த பஸ்ஸை அனுப்பி வைத்துள்ளனர். ஆனால், பெரிய புள்ளி அரசியல்வாதிகளிடம் டக் டக்கன போனில் பேசி, ஆண் நண்பரை அழைத்துக் கொண்டு அசால்ட்டாக வெளியே வந்துவிட்டாராம்.

நன்றி தட்ஸ்தமிழ்

ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25386
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9202

Back to top Go down

மங்கையர் திலகங்கள் 6 தொடர்ச்சி--நிர்மலா ஆபீசுக்கே போறது கிடையாதாம்.. 2 வருஷமா Empty Re: மங்கையர் திலகங்கள் 6 தொடர்ச்சி--நிர்மலா ஆபீசுக்கே போறது கிடையாதாம்.. 2 வருஷமா

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!

ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.

உள் நுழை