உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» கழுதையின் மரணம்!
by krishnaamma Today at 7:21 pm

» கரியமாணிக்கப் பெருமாள்
by krishnaamma Today at 7:18 pm

» 'வருமான வரியை ரத்து செய்ய வேண்டும்'
by krishnaamma Today at 7:17 pm

» புதிய சட்ட திருத்த மசோதா: முடிவுக்கு வரும் ஆங்கிலோ இந்தியன் எம்.பி.க்கள் கோட்டா!
by ayyasamy ram Today at 7:00 pm

» கால்களால் விமானத்தை இயக்க உரிமம் பெற்ற முதல் பெண் விமானி ஜெசிகா..
by ayyasamy ram Today at 6:43 pm

» பிரபஞ்ச அழகியாக தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த சொசிபினி துன்சி தேர்வு
by ayyasamy ram Today at 6:39 pm

» காங்., சட்டமன்ற குழு தலைவர் பதவியை சித்தராமையா ராஜினாமா செய்தார்.
by ayyasamy ram Today at 6:30 pm

» 50 வார்த்தைக் கதைகள்
by ayyasamy ram Today at 6:17 pm

» யோகிபாபுக்கு குரல் கொடுத்த பூவையார்
by ayyasamy ram Today at 6:04 pm

» விளக்கொளி பெருமாள்
by ayyasamy ram Today at 5:57 pm

» திருவண்ணாமலை பற்றிய 30 தகவல்கள்
by ayyasamy ram Today at 5:55 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு
by ayyasamy ram Today at 5:51 pm

» குயின் வெப் சிரீஸுக்கு தடைக்கோரும் ஜெ.தீபா - கெளதம் மேனன் பதிலளிக்க உத்தரவு
by ayyasamy ram Today at 5:44 pm

» அழகுல சேலையை அடிச்சுக்க முடியாது: சொல்றது 'மயிலு' மகளுங்கோ..!
by ayyasamy ram Today at 5:41 pm

» சோனியா காந்தி பிறந்தநாள் - பிரதமர் மோடி வாழ்த்து
by ayyasamy ram Today at 5:34 pm

» பெருமை – ஒரு பக்க கதை
by ஜாஹீதாபானு Today at 3:40 pm

» பிரதமர் வீட்டு வசதி திட்டத்தில் கூடுதல் வீடுகள்
by ayyasamy ram Today at 1:15 pm

» பிறந்த குழந்தையை பேணிக்காக்கும் முறைகள்
by ayyasamy ram Today at 12:48 pm

» தற்கொலை எண்ணம் வராமல் தடுப்பது எப்படி?
by ayyasamy ram Today at 12:45 pm

» திருவண்ணாமலை சித்தர்களின் சரணாலயம்
by ayyasamy ram Today at 8:48 am

» கார்த்திகை தீபத்திருவிழாவையொட்டி திருவண்ணாமலையில் நாளை மகாதீபம்
by ayyasamy ram Today at 8:36 am

» MPN சேதுராமன், பொன்னுசாமி நாதஸ்வரத்தில் மேற்கத்திய இசையும், இனிய கர்நாடக இசையும்
by ayyasamy ram Today at 8:25 am

» பாவங்களைப் போக்கும் பரணி தீபம்!!!
by ayyasamy ram Today at 8:18 am

» 5 ஆண்டுகளில் 27 மாணவர்கள் ஐ.ஐ.டி.,க்களில் தற்கொலை
by ayyasamy ram Today at 5:06 am

» பெண்கள், குழந்தைகளுக்கு சென்னை, கோவை நகரங்கள் பாதுகாப்பானவை - ஆய்வில் தகவல்
by ayyasamy ram Today at 4:59 am

» தமிழகம் முழுவதும்: உள்ளாட்சி தேர்தலில் ஒரே சின்னத்தில் போட்டியிடுவோம் - டி.டி.வி.தினகரன் பேட்டி
by ayyasamy ram Today at 4:57 am

» 4 பேர் சுட்டுக்கொல்லப்பட்டது பற்றி சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் - சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு
by ayyasamy ram Today at 4:56 am

» பிரதமர் அலுவலகத்தில் அதிகாரங்கள் குவிந்திருப்பது நல்லதல்ல - ரகுராம் ராஜன் கருத்து
by ayyasamy ram Today at 4:52 am

» சென்னைக்கு அனுப்பப்பட்ட லாரியில் இருந்து 83 வெங்காய மூட்டைகள் திருட்டு - டிரைவர் உள்பட 5 பேர் கைது
by ayyasamy ram Today at 4:49 am

» புதுமண தம்பதிக்கு வெங்காயம் பரிசளித்த நண்பர்கள்கடும் விலை உயர்வு எதிரொலிபாகல்கோட்டை அருகே ருசிகர சம்பவம்
by ayyasamy ram Today at 4:48 am

» ஆறு வித்தியாசம் – கண்டுபிடி
by ayyasamy ram Today at 4:41 am

» எனக்கு ஹிந்தி MP3 பழைய பாடல்கள் டவுன்லோட் செய்ய லிங்க் வேண்டுமே !
by prajai Yesterday at 11:03 pm

» தொகுப்பாளினி பாவனா
by T.N.Balasubramanian Yesterday at 8:55 pm

» வெற்றிடத்தை நிரப்பிய தலைவர்…!!
by ayyasamy ram Yesterday at 8:07 pm

» பயணம் & சமையல் (கவிதை)
by ayyasamy ram Yesterday at 8:06 pm

» கையறு நிலை (கவிதை} – நாஞ்சில் நாடன்
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» தேய்த்தால் பளிச் – வீட்டுக்குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 8:04 pm

» 17-வது சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் இடம்பெறவிருக்கும் முத்தான தமிழ்ப்படங்கள் இவைதான்!
by ayyasamy ram Yesterday at 7:57 pm

» பெண் குழந்தைகளின் தாய் 12-வதாக ஆண் குழந்தை பெற்றார்
by சக்தி18 Yesterday at 7:30 pm

» "பெட்ரோல், டீசல் விலை போல நாளும் உயர்க உன் புகழ்…!!
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» மழைப்போர்வை – கவிதை
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» கொசுவை கொல்லும் 'குறுக்கு' வலை!
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» உள்ளாட்சி தேர்தலில் யாருக்கும் ஆதரவில்லை – ரஜினி மக்கள் மன்றம்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» என்கவுன்டர்: நீதி கிடைத்ததாக திரைப்பிரபலங்கள் கருத்து !
by T.N.Balasubramanian Yesterday at 6:47 pm

» இதுதான் உண்மையான "தவமாய் தவமிருந்து" : கர்ப்பிணி மனைவிக்கு இருக்கையான கணவன்...
by ayyasamy ram Yesterday at 6:35 pm

» ஒரே அறையில் திருமணம் ஆகாத ஆணும் பெண்ணும் தங்கினால் தவறா: சென்னை ஐகோர்ட்
by T.N.Balasubramanian Yesterday at 6:20 pm

» நேற்று வரை நீ யாரோ நான் யாரோ
by ayyasamy ram Yesterday at 3:50 pm

» உலகளவில் 7-ம் இடம்…. இந்திய அளவில் முதலிடம் – ரவுடி பேபி பாடல் சாதனை
by ayyasamy ram Yesterday at 1:02 pm

» திரைப்பாடல் வரிகள் - தொடர்பதிவு
by ayyasamy ram Yesterday at 12:47 pm

» நித்யா மாரியப்பன்
by சக்தி18 Yesterday at 12:33 pm

Admins Online

கஞ்சித் தொட்டி ஆஸ்பத்திரி

 கஞ்சித் தொட்டி ஆஸ்பத்திரி  Empty கஞ்சித் தொட்டி ஆஸ்பத்திரி

Post by சக்தி18 on Sun Sep 15, 2019 5:43 pm

 கஞ்சித் தொட்டி ஆஸ்பத்திரி  Stalny4-jpg_710x400xt
வண்ணாரப்பேட்டை. பஞ்சமும், போரும் மக்களை கொத்து கொத்தாக கொன்றுக்கொண்டிருந்த காலகட்டம். பசியால், பஞ்சத்தால் மடிந்து வரும் மக்களை கண்டு கலங்கி நின்ற மனிதனொருவன் கஞ்சித்தொட்டி வைத்தான். அந்த வீட்டில் எந்நேரமும் அடுப்பெரிந்து உலைக்கொதிக்க, தொட்டிகளில் ஊற்றப்படும் கஞ்சியினை அள்ளிக்குடித்து பசியாறினர் மக்கள்.வரலாறு எப்பொழுதும் கட்டிடங்களின் அழகும், கலையும் பதிவுசெய்துக்கொள்கிறதே தவிர அதன் பின் நின்று உழைத்தவர்கள் குறிப்புகளை ஒதுக்கிவைத்து விடுகிறது. அப்படியாகதான் அந்த பெரிய மனிதனின் பெயரும் வரலாற்று குறிப்புகளில் வரவு வைக்கப்படவே இல்லை.வரலாற்றை போலொன்றும் இங்கிதம் கெட்டதல்ல காலம். அது அவனை ‘மணியக்கார முதலியார்’ என்று கணக்கு வைத்திருக்கிறது.ஊருக்கே ஆக்கிப்போட, இதென்ன சத்திரமா? சாவடியா? என்கிறோமே.. அப்படிதான் தோட்டத்து வீடு ‘சத்திரம்’ என்று அழைக்கப்போய், அதுவே, ‘மணியக்கார சத்திரம் சாலை’ என்றழைக்கப்பட்டது.

சென்னையை ஐதர் அலியும், திப்பு சுல்தானும் கைப்பற்றிவிடுவார்களோ என்ற பயம் வெள்ளைக்காரர்களுக்கு இருந்தது. மெட்ராஸ்சில் வந்து பதுங்கி அவர்கள் கோட்டையைத் தாக்கக்கூடும் என அஞ்சியவர்கள் மெட்ராஸ் முழுக்க அதாவது கருப்பர் நகரம் முழுக்க இருந்த கட்டிடங்களை எல்லாம் இடித்து தரைமட்டமாக்கும் முயற்சியில் இறங்கியது பிரிட்டிஷ் அரசு.இடித்துத்தள்ள இயந்திரங்களோடு வந்து நின்ற
துரைமார்கள், மக்கள் பசி போக்க எவனோ ஒரு தனி மனிதன் செய்த சேவையின் அடையாளத்தை அழிக்க மனமின்றி திரும்பினர்.
 கஞ்சித் தொட்டி ஆஸ்பத்திரி  Stanly3-jpg

மணியக்கார சத்திரம் சாலை எனும் அழகு தமிழ் பெயர் வழக்கம் போல் ஆங்கிலேயரால் கடித்து குதறி ‘மோனிகர் சவுல்ட்ரி ரோடு' என்று சிதைக்கப் பட்டது. சவுல்ட்ரி என்றால் ஆங்கிலத்தில் சத்திரம் என்பது பொருள். சொல்லப்போனால் Choultry கூட ஆங்கில மொழிக்கு தமிழ் போட்ட பிச்சைதான். அதாவது வழிப்போக்கர்கள் தங்கும் இடத்திற்கு தமிழில் சாவடி என்று பெயர். அதைதான் ‘சவுல்ட்ரினு’ பேசி திரிகிறார்கள்.விஷியத்திற்கு வருவோம்.

அந்த மணியக்காரர் சத்திரம் ஆங்கில குறிப்புகளில் ‘மோனிகர் சவுல்ட்ரி என இருக்க, நம்மாளுங்க தமிழ் படுத்துறேன் பேர்வழினு ‘மாணிக்கர் செளத்திரி’ ஆக்கிவைச்சுட்டாங்க. இப்ப அதுக்கு எம்.சி., சாலை என்று பெயர் சரி அந்த சத்திரம் என்னாச்சு ? மணியக்காரர் சத்திரத்தில் ஒரு மருத்துவமனை ஆரம்பித்தால் என்ன? .. யோசித்த டாக்டர் அண்டர்வுட் அதனை சூட்டோடு சூட்டாக செய்தும் முடித்தார். ‘கஞ்சித் தொட்டி ஆஸ்பத்திரி’ என அழைக்கப்பட்ட அதுதான் பெயர் இப்போது.. ஸ்டான்லி மருத்துவமனை.
(சமரன் )
சக்தி18
சக்தி18
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 998
இணைந்தது : 24/12/2018
மதிப்பீடுகள் : 363

Back to top Go down

 கஞ்சித் தொட்டி ஆஸ்பத்திரி  Empty Re: கஞ்சித் தொட்டி ஆஸ்பத்திரி

Post by சக்தி18 on Sun Sep 15, 2019 5:44 pm

இது விக்கிபீடியா......

மைசூரின் ஐதர் அலிக்கும் வெள்ளையர்களுக்கும் இடையே நடந்த போரில் சென்னை மக்கள் கடுமையாக பாதிப்புக்கு ஆளாயினர். இதனால் 1782 இல் மணியக்காரர் என்று அழைக்கப்பட்ட அறச்சீலர் ராயபுரத்திலிருந்த தன்னுடைய தோட்டத்தில் போரில் காயமடைந்தவர்களுக்கு கஞ்சி வழங்குவதற்காக ஒரு சத்திரத்தை நிர்மாணித்தார். மணியக்காரர் என்பது ஆங்கிலேயர்களால் மோனிகர் என்று உச்சரிக்கப்பட்டதால் அது மோனிகர் சத்திரம் என்று அப்போது அழைக்கப்பட்டது. 1799 இல் ஜான் அண்டர்வுட் எனும் மருத்துவர் அந்தச் சத்திரத்துக்குள் ஒரு மருத்துவமனையைத் தொடங்கினார். அது அப்போது கஞ்சித்தொட்டி மருத்துவமனை என்று மக்களால் அறியப்பட்டது. 1808 இல் அந்தச் சத்திரத்தின் நிர்வாகத்தையும் மருத்துவமனையின் நிர்வாகத்தையும் சென்னை அரசு ஏற்று நடத்தத் தொடங்கியது. 1910 இல் அந்த மருத்துவமனை அரசுடைமையானதால், அதன் பெயர் ராயபுரம் மருத்துவமனை என்றானது.

ஜார்ஜ் ஃப்ரெட்ரிக் ஸ்டான்லி என்பவர் சென்னை மாகாண ஆளுநராக இருந்தபோது 1933 இல் அங்கு முதன் முதலாக ஐந்து வருட மருத்துவ படிப்பு அவரால் தொடங்கிவைக்கப்பட்டது. அதன் பிறகு அந்த மருத்துவமனையின் பெயர் ஸ்டான்லி மருத்துவமனை என 1936 சூலை 2 இல் மாற்றப்பட்டது. 1938 இல் அங்கு 72 மாணவர்கள் படித்தனர். அந்த எண்ணிக்கை 1963 இல் 150 ஆக உயர்ந்தது. 2018 ஆம் ஆண்டில் 250 மாணவர்கள் பயில்கின்றனர்.
சக்தி18
சக்தி18
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 998
இணைந்தது : 24/12/2018
மதிப்பீடுகள் : 363

Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை