உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» புத்தக தேவைக்கு...
by Guest Yesterday at 11:23 pm

» ரகசியம் புத்தகம் PDF வடிவில் - The Secret Tamil Ebook
by prajai Yesterday at 11:10 pm

» அப்பாவி – ஒரு பக்க கதை
by T.N.Balasubramanian Yesterday at 8:23 pm

» டிகிரி யானை
by ஜாஹீதாபானு Yesterday at 6:32 pm

» ஆவாரைக் கூட்டு
by ஜாஹீதாபானு Yesterday at 6:31 pm

» சீரியல் - ஒரு பக்க கதை
by ஜாஹீதாபானு Yesterday at 6:30 pm

» கடைசியில் பூனை வாங்கின சாமியார் கதைதான்..!
by ஜாஹீதாபானு Yesterday at 6:28 pm

» ஒரு கதை
by ஜாஹீதாபானு Yesterday at 6:25 pm

» காலிஃப்ளவர் பஜ்ஜி
by ஜாஹீதாபானு Yesterday at 6:23 pm

» பொறுப்பு – ஒரு பக்க கதை
by ஜாஹீதாபானு Yesterday at 6:23 pm

» ஆறு வித்தியாசம்
by ஜாஹீதாபானு Yesterday at 6:21 pm

» அல்பம் – ஒரு பக்க கதை
by ஜாஹீதாபானு Yesterday at 6:19 pm

» மகளதிகாரம்.
by ஜாஹீதாபானு Yesterday at 6:18 pm

» படித்த பெண்களைக் கட்டிய கணவன்களின் மனநிலை...!
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» ஃபிஷ்னஸ்..!
by ayyasamy ram Yesterday at 4:47 pm

» சிந்தனை துளிகள்
by ayyasamy ram Yesterday at 4:29 pm

» அதிர்ஷ்டம் தரும் அபிஜித்... கோதூளி முகூர்த்தம் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:16 am

» காத்திருக்கப் பழகினால்........ வாழப் பழகுவாய்.
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:10 am

» மாங்கல்யம் தந்துனானே – விளக்கம்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:07 am

» மன நிம்மதி தரும் கோவில்!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:05 am

» எலக்ட்ரிக் 'ஏர் டாக்சி'
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:01 am

» சமந்தா, ஹன்சிகா, காஜல் உள்பட வெப் தொடருக்கு மாறும் நடிகைகள்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 10:59 am

» பாதாமி பயணம்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 10:57 am

» வெள்ளித்திரையில்...: தமிழ்ப் படத்தில் நடிக்கும் ஹர்பஜன் சிங்!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 10:56 am

» கார்ட்டூன் & கருத்து சித்திரம் - தொடர் பதிவு
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 10:51 am

» இந்தியப் பொருளாதாரத்தின் நிலை மோசமாகச் செல்கிறது: நோபல் பரிசு வென்ற இந்தியர் அபிஜித் பானர்ஜி கருத்து
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 10:46 am

» அமேசானுக்கு போட்டியாக களமிறங்கும் பிளிப்கார்ட்: உணவு சந்தையிலும் கால் பதிக்கிறது
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 10:44 am

» நகைச்சுவை தோரணங்கள்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 10:41 am

» தீபாவளி: சிறப்பு ரயில்கள் அறிவிப்பு
by ayyasamy ram Yesterday at 6:10 am

» அக்.,17 முதல் துவங்குது வடகிழக்கு பருவமழை!
by ayyasamy ram Yesterday at 5:49 am

» Downloading
by mani2871967 Tue Oct 15, 2019 7:39 pm

» எண்ணங்கள் உணர்வுகள்
by ayyasamy ram Tue Oct 15, 2019 6:37 pm

» ரூ.141 கோடி மதிப்பு கொண்டது : புர்ஜ் கலீபா கட்டிட உருவமைப்பில் தயாரான ‘தங்க செருப்பு’
by பழ.முத்துராமலிங்கம் Tue Oct 15, 2019 4:18 pm

» ஐ.ஏ.எஸ்., அதிகாரியாகி சாதித்த பார்வையற்ற பெண்
by பழ.முத்துராமலிங்கம் Tue Oct 15, 2019 4:16 pm

» ஜெயம் ரவி நடிக்கும் பூமி!
by பழ.முத்துராமலிங்கம் Tue Oct 15, 2019 4:11 pm

» நீ இருக்கும் இடத்தை சந்தோஷமாக்கு…!
by பழ.முத்துராமலிங்கம் Tue Oct 15, 2019 4:00 pm

» உயிர் – ஒரு பக்க கதை
by பழ.முத்துராமலிங்கம் Tue Oct 15, 2019 3:59 pm

» சுப்ரமணி – நகைச்சுவை
by பழ.முத்துராமலிங்கம் Tue Oct 15, 2019 3:56 pm

» டாக்டர் நினைச்சதுல ஒண்ணுகூட நடக்கல…! –
by பழ.முத்துராமலிங்கம் Tue Oct 15, 2019 3:55 pm

» நாக்கறுந்த மணி – கவிதை
by பழ.முத்துராமலிங்கம் Tue Oct 15, 2019 3:53 pm

» எல்லாப் பணிப்பெண்களுக்கும் ‘டாப்சும், லெக்கின்சும்’ எடுத்துக் கொடுத்திருக்காரு....!!
by பழ.முத்துராமலிங்கம் Tue Oct 15, 2019 3:50 pm

» நெப்போலியன் ஆட்சியா மலர வைக்கப்போகிறாராம்...!!
by பழ.முத்துராமலிங்கம் Tue Oct 15, 2019 3:47 pm

» உலக மகளிர் குத்துச்சண்டை: வெள்ளி வென்றார் மஞ்சுராணி
by பழ.முத்துராமலிங்கம் Tue Oct 15, 2019 3:44 pm

» ஆவாரம்பூ காபி
by பழ.முத்துராமலிங்கம் Tue Oct 15, 2019 3:43 pm

» மழையும் மஞ்சளும்
by பழ.முத்துராமலிங்கம் Tue Oct 15, 2019 3:41 pm

» அதென்னடி ஆர்கானிக் லிப்ஸ்டிக்...?
by பழ.முத்துராமலிங்கம் Tue Oct 15, 2019 3:38 pm

» ஆவாரை - தேநீர்
by பழ.முத்துராமலிங்கம் Tue Oct 15, 2019 3:37 pm

» ஆவாரம்பூ சட்னி
by பழ.முத்துராமலிங்கம் Tue Oct 15, 2019 3:36 pm

» கடல் புறா - சாண்டில்யன் - ஒலிப்புத்தகம் - பாகம் 1
by ackashok Tue Oct 15, 2019 11:41 am

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
by பழ.முத்துராமலிங்கம் Tue Oct 15, 2019 11:19 am

Admins Online

பேனர் விழுந்து இளம்பெண் பலி

பேனர் விழுந்து இளம்பெண் பலி Empty பேனர் விழுந்து இளம்பெண் பலி

Post by T.N.Balasubramanian on Fri Sep 13, 2019 5:17 pm

பேனர் விழுந்து இளம்பெண் பலி

சென்னை: சென்னையில் சட்டவிரோத பேனர் விழுந்து இளம்பெண் பலியானது தொடர்பாக அதிகாரிகள் அலட்சியமாக உள்ளனர், இன்னும் எத்தனை உயிர்ப்பலிகளை எதிர்பார்க்கிறீர்கள் என சென்னை ஐகோர்ட் நீதிபதிகள் சரமாரியான கேள்விகளை எழுப்பினர்.
சென்னை பள்ளிக்கரணை ரேடியல் சாலையில், வைக்கப்பட்ட திருமண பேனர் பைக்கில் சென்ற சுபஸ்ரீ என்ற பெண் மீது விழுந்தது. இதில், கீழே விழுந்த அப்பெண் மீது லாரி ஏறியதில், பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக லாரி டிரைவரை போலீசார் கைது செய்தனர். பேனர், அச்சடித்த அச்சகத்திற்கு சீல் வைக்கப்பட்டது. பேனர் வைத்த அதிமுக கவுன்சிலர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.


இந்நிலையில், இந்த விவகாரத்தை தாமாக முன்வந்து விசாரணை நடத்த வேண்டும் என லட்சுமி நாராயணன் என்ற வழக்கறிஞர் சென்னை ஐகோர்ட்டில் முறையிட்டார்.

விஐபிக்கள் வருவார்களா ?

இந்த விசாரணையில் நீதிபதிகள் கடும் கண்டனம் தெரிவித்ததுடன், பல்வேறு கேள்விகளை எழுப்பினர். ஒரு மனித உயிருக்கு மதிப்பு இல்லாமல் போனது உயிரின் மதிப்பு அதிகாரிகளுக்கு தெரியவில்லையா ? அதிகாரிகள் இந்த அளவுக்கு மெத்தனமாக ஏன் இருந்தனர். இன்னும் எத்தனை லிட்டர் ரத்தத்தை குடிக்க அதிகாரிகள் விரும்புகின்றனர். இன்னும் எத்ததை உயிர்களை பலி வாங்க துடிக்கின்றனர். சட்டவிரோத பேனரில் எத்தனை உத்தரவுகள் பிறப்பித்தாலும் இன்னும் இது போன்றுதான் தொடர்கிறது.
பேனர் வைத்தால்தான் விஐபிக்கள் வருவார்களா ? சென்னையில் மெரினா உள்ளிட்ட முக்கிய இடங்களில் அரசியல் கட்சிகளின் கொடிக்கம்பங்களை அகற்றுங்கள். கோர்ட் உத்தரவுகளை அரசு நிறைவேற்றும் என்ற நம்பிக்கையை இழந்து விட்டோம். உத்தரவு பிறப்பிக்கும் கோர்ட்டுக்கு செயல்படுத்த முடியாது என நினைக்றீர்களா ? பேனர் வைக்க மாட்டோம் என முதல்வரே அறிக்கை விடலாமே !
எந்த கட்சி, ஆட்சிக்கு வந்தாலும், பேனர் வைப்பதில் விதிமீறல்கள் தொடர்கின்றன. விதிமீறி பேனர் வைப்பதும், அதனால் உயிரிழப்பு ஏற்படுவதும் எல்லாம் அரசியல் ஆக்கப்படுகிறது. அரசியல் கட்சியினருக்கு விஸ்வாசமாக அதிகாரிகள் செயல்படுகின்றனர். உயிரிழப்புக்கு ரூ.2 லட்சம் கருணை தொகை தந்தால் பிரச்னை தீர்ந்து விடுவதாக நினைக்கின்றனர்.
இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.

மதியத்திற்குள் அரசு தரப்பில் அதிகாரிகள் ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்தனர்.
தொடர்ந்து மதியம் நடந்த விசாரணையில், பேனர் தொடர்பாக அரசு தரப்பில் என்ன நடவடிக்கை எடுத்துள்ளீர்கள், உயிர்பலி கொடுத்தால் தான் அரசு நிர்வாகம் செயல்படுமா என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.


அதிகாரிகள் பாரபட்சம்
இதற்கு பதிலளித்த அரசு கூடுதல் வழக்கறிஞர், பேனர் வைக்க கூடாது என அரசு மற்றும் பிற கட்சிகள் சார்பாக அறிக்கை அளித்துள்ளனர். விபத்து ஏற்படுத்திய லாரி டிரைவர் மற்றும் பேனர் வைத்தவர்கள் மீது வழக்கு தொடரப்பட்டது, என கூறினார்.
நீதிபதிகள், பேனர் வைக்கக்கூடாது என அரசியல் கட்சியினர் முன்பே முடிவெடுத்திருந்தால் உயிர் பலி நிகழ்ந்திருக்காது. இனி எந்த நிகழ்ச்சிக்கும் பேனர் வைக்கமாட்டோம் என அரசியல் கட்சிகள் உறுதியளிக்க வேண்டும். இதுவரை விவகாரத்திற்கு மட்டும் தான் பேனர் வைக்கவில்லை. அனைத்து விசேஷங்களுக்கும் பேனர் வைத்தால் தான் அமைச்சர்கள் வருவார்களா?
2 மணி அளவில் நடந்த விபத்திற்கு 6 மணிக்கு வழக்கு பதியப்பட்டுள்ளது. இவ்வளவு அலட்சியம் ஏன். பேனரில் உள்ள வண்ணங்கள் நடவடிக்கை எடுக்க விடாமல் தடுக்கிறதா? பேனர் விவகாரத்தில் அதிகாரிகள் பாரபட்சமாக நடந்து கொண்டது வெளிப்படையாக தெரிகிறது.
சுபஸ்ரீ குடும்பத்திற்கு இழப்பீடு தொகையை சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் ஊதியத்தில் இருந்து பிடித்தம் செய்ய வேண்டும். மேலும் அந்த அதிகாரிகளின் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பேனர் விவகாரம் தொடர்பான வழக்கை நீதிமன்றம் தொடர்ந்து கண்காணிக்கும். அனுமதி அளித்த அதிகாரிகளின் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும், பணியில் கவனக்குறைவாக இருந்தது குறித்து அறிக்கை தாக்கல் செய்யவும் மாநகராட்சி கமிஷனருக்கு உத்தரவிடுகிறேன். கமிஷனர் எடுக்கும் நடவடிக்கை குறித்து தலைமைச் செயலர் கண்காணித்து அறிக்கை தர வேண்டும். மேலும் சுபஸ்ரீ குடும்பத்தினருக்கு ரூ. 5 லட்சம் இழப்பீடாக வழங்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

நன்றி தினமலர்

ரமணியன்* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 25373
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9202

Back to top Go down

பேனர் விழுந்து இளம்பெண் பலி Empty Re: பேனர் விழுந்து இளம்பெண் பலி

Post by T.N.Balasubramanian on Fri Sep 13, 2019 5:31 pm

வருத்தப்படவேண்டிய
வெட்கப்படவேண்டிய கலாச்சாரம்.
எப்போது ஆரம்பித்ததோ ?
முந்தைய ஆட்சியில் ஒரு மினிஸ்டரின் சகோதரன் விளம்பர பலகைகள் வைக்கிறேன் என்று விளையாடியது உண்டு.சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் தவித்த அரசு.
இது மட்டுமா பொதுக்கூட்டங்களுக்கு கொடுக்கப்படும் மின்சாரம் எந்த கணக்கிலும் வராது.
EB எலெக்ட்ரிசியன் பையில் பணம் கொட்டும்.
ஆக மொத்தம் ஊழலை வளர்க்கவே பாடுபடுகின்றன இந்த அரசியல் கட்சிகள்.

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 25373
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9202

Back to top Go down

பேனர் விழுந்து இளம்பெண் பலி Empty Re: பேனர் விழுந்து இளம்பெண் பலி

Post by சக்தி18 on Fri Sep 13, 2019 5:41 pm

பேனர் விழுந்து இளம்பெண் பலி 1571444738
சட்டங்களை உருவாக்கும் அரசுகளே விதிமீறல்களை செய்கிறார்கள்.
எத்தனை சட்டங்கள் உருவாக்கப்பட்டன.காணாமல் போயின.
ஒரு பிரச்சனை வரும்,அடுத்த பிரச்சனை வரும் போது முதல் பிரச்சனை காணாமல் போய்விடும்.
இழப்பீடுகள் உயிரை திருப்பித்தருமா? நீதி மன்றங்கள் தொடர்ந்து கண்காணிக்குமா?
எல்லாம் சில நாட்கள் தான்.மீன்டும் வரும்,உயிர்பலி தடுக்க முடியாதது.மாறி மாறி வரும் ஆட்சி,அரசியல்வாதிகள் மாறாத வரை...............
சக்தி18
சக்தி18
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 874
இணைந்தது : 24/12/2018
மதிப்பீடுகள் : 333

Back to top Go down

பேனர் விழுந்து இளம்பெண் பலி Empty Re: பேனர் விழுந்து இளம்பெண் பலி

Post by சக்தி18 on Fri Sep 13, 2019 6:22 pm

சுபஸ்ரீயின் தந்தை ரவி, ’'சுபஸ்ரீ எனக்கு ஒரே பொண்ணு. அவளை மிகவும் ஆசையாக வளர்த்தேன். அவள் விருப்பப்படியே பி.டெக் படிக்க வைத்தேன். அவளுக்கு கனடா சென்று மேற்படிப்பு படிக்க வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசை. அதற்காக தேர்வும் எழுதி இருந்தாள். விரைவில் கனடா செல்ல இருந்த ஆசை மகளுக்கு இப்படி ஒரு துயரம் வரும் என கனவிலும் நினைக்கவில்லை. பேனர் தான் எனது மகளின் உயிரை பறித்து விட்டது. எனது மகளின் உயிரே கடைசியாக இருக்கட்டும்'' என கண்ணீர் மல்க கூறியுள்ளார்.

CCTV பார்க்க பரிதாபமா இருக்கு.
சக்தி18
சக்தி18
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 874
இணைந்தது : 24/12/2018
மதிப்பீடுகள் : 333

Back to top Go down

பேனர் விழுந்து இளம்பெண் பலி Empty Re: பேனர் விழுந்து இளம்பெண் பலி

Post by T.N.Balasubramanian on Fri Sep 13, 2019 8:40 pm

இந்த அரசியல் கட்சிகளுக்கு பணம் பணம் பதவி பதவி .
இந்த கேடு கெட்டவர்கள் மண்டையை போடும்போது
பணத்தை கொண்டா போவார்கள்?
பெயர்/ பதவி/ தலைமை / மற்றவர்கள் தலை வணங்கி
கைகூப்பி தன் புகழ் பாடவேண்டும் என்ற கொள்கை
அரசியல் தலைகள் மட்டுமில்லை சமூகத்தில்
அதிக பேர்களிடம் உள்ளது என்பதுதான் நிதரிசனம்.

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 25373
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9202

Back to top Go down

பேனர் விழுந்து இளம்பெண் பலி Empty Re: பேனர் விழுந்து இளம்பெண் பலி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை