புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Today at 3:46 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:44 pm

» மக்களின் அறியாமையை அடித்து கேட்டிருக்கிறார்.. Hats off: கங்கனாவை அறைந்த கான்ஸ்டபிளை பாராட்டிய சேரன்
by ayyasamy ram Today at 3:25 pm

» கருத்துப்படம் 07/06/2024
by mohamed nizamudeen Today at 8:10 am

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Today at 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Today at 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Yesterday at 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Yesterday at 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Yesterday at 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Yesterday at 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Yesterday at 9:22 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வாழ்நாள் முழுவதும் ஆசிரியர் தொழில் செய்தவரின் அனுபவங்கள் Poll_c10வாழ்நாள் முழுவதும் ஆசிரியர் தொழில் செய்தவரின் அனுபவங்கள் Poll_m10வாழ்நாள் முழுவதும் ஆசிரியர் தொழில் செய்தவரின் அனுபவங்கள் Poll_c10 
68 Posts - 59%
heezulia
வாழ்நாள் முழுவதும் ஆசிரியர் தொழில் செய்தவரின் அனுபவங்கள் Poll_c10வாழ்நாள் முழுவதும் ஆசிரியர் தொழில் செய்தவரின் அனுபவங்கள் Poll_m10வாழ்நாள் முழுவதும் ஆசிரியர் தொழில் செய்தவரின் அனுபவங்கள் Poll_c10 
41 Posts - 36%
mohamed nizamudeen
வாழ்நாள் முழுவதும் ஆசிரியர் தொழில் செய்தவரின் அனுபவங்கள் Poll_c10வாழ்நாள் முழுவதும் ஆசிரியர் தொழில் செய்தவரின் அனுபவங்கள் Poll_m10வாழ்நாள் முழுவதும் ஆசிரியர் தொழில் செய்தவரின் அனுபவங்கள் Poll_c10 
4 Posts - 3%
T.N.Balasubramanian
வாழ்நாள் முழுவதும் ஆசிரியர் தொழில் செய்தவரின் அனுபவங்கள் Poll_c10வாழ்நாள் முழுவதும் ஆசிரியர் தொழில் செய்தவரின் அனுபவங்கள் Poll_m10வாழ்நாள் முழுவதும் ஆசிரியர் தொழில் செய்தவரின் அனுபவங்கள் Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வாழ்நாள் முழுவதும் ஆசிரியர் தொழில் செய்தவரின் அனுபவங்கள் Poll_c10வாழ்நாள் முழுவதும் ஆசிரியர் தொழில் செய்தவரின் அனுபவங்கள் Poll_m10வாழ்நாள் முழுவதும் ஆசிரியர் தொழில் செய்தவரின் அனுபவங்கள் Poll_c10 
110 Posts - 60%
heezulia
வாழ்நாள் முழுவதும் ஆசிரியர் தொழில் செய்தவரின் அனுபவங்கள் Poll_c10வாழ்நாள் முழுவதும் ஆசிரியர் தொழில் செய்தவரின் அனுபவங்கள் Poll_m10வாழ்நாள் முழுவதும் ஆசிரியர் தொழில் செய்தவரின் அனுபவங்கள் Poll_c10 
62 Posts - 34%
mohamed nizamudeen
வாழ்நாள் முழுவதும் ஆசிரியர் தொழில் செய்தவரின் அனுபவங்கள் Poll_c10வாழ்நாள் முழுவதும் ஆசிரியர் தொழில் செய்தவரின் அனுபவங்கள் Poll_m10வாழ்நாள் முழுவதும் ஆசிரியர் தொழில் செய்தவரின் அனுபவங்கள் Poll_c10 
6 Posts - 3%
T.N.Balasubramanian
வாழ்நாள் முழுவதும் ஆசிரியர் தொழில் செய்தவரின் அனுபவங்கள் Poll_c10வாழ்நாள் முழுவதும் ஆசிரியர் தொழில் செய்தவரின் அனுபவங்கள் Poll_m10வாழ்நாள் முழுவதும் ஆசிரியர் தொழில் செய்தவரின் அனுபவங்கள் Poll_c10 
4 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாழ்நாள் முழுவதும் ஆசிரியர் தொழில் செய்தவரின் அனுபவங்கள்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82419
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Sep 05, 2019 7:25 am

டெக்கன் ஹெரால்ட் செய்தித்தாளில் நான் படித்த,
ஒரு பேராசிரியரால் எழுதப்பட்ட  ஒரு கட்டுரையை
கீழே தமிழாக்கம் செய்திருக்கிறேன்.
-
‘வாழ்நாள் முழுவதும் ஆசிரியர் தொழில் செய்து வந்த நான் இந்த ஆசிரியர்கள் தினத்தன்று எனது வாழ்க்கையை சற்றுத் திரும்பிப் பார்த்து அதன் ஏற்றத்தாழ்வுகள், லாப நஷ்டங்களை ஆராய விரும்புகிறேன்’ என்கிறார். படித்துப் பாருங்கள்:
-
இந்தக் கட்டுரையை எழுதியவர்:
திரு அலோக் ரே, முன்னாள் பொருளாதார பேராசிரியர்,
ஐஐஎம் கொல்கத்தா.

-
வாழ்நாள் முழுவதும் ஆசிரியர் தொழில் செய்து வந்த நான் இந்த ஆசிரியர்கள் தினத்தன்று எனது வாழ்க்கையை சற்றுத் திரும்பிப் பார்த்து அதன் ஏற்றத்தாழ்வுகள், லாப நஷ்டங்களை ஆராய விரும்புகிறேன். ஐம்பது வருடங்களுக்கு முன் கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் எனது ஆசிரிய பயணம் ஆரம்பித்தது. நீண்ட இந்த பயணம் இன்னும் முடியவில்லை.
-
நான் ஆசிரியப் பணியில் சேர்ந்த போது நான் ஒரு பொருளாதாரப் முதுகலைப் பட்டதாரி. அவ்வளவே. (பிறகு நான் அமெரிக்காவில் பிஎச்.டி. செய்தேன்) அப்போது எனக்கு இன்னொரு துறையை – அதாவது ஐ.ஏ.எஸ். ஐ தேர்ந்தெடுக்கும் வாய்ப்பும் இருந்தது. நன்றாகப் படிக்கும் ஒரு மாணவன் எம்.பி.ஏ படிப்பதோ தனியார் நிறுவனத்தில் வேலைக்குச் சேருவதோ அந்தக் காலத்தில் நாகரிகமாகக் கருதப்படவில்லை.

என்னுடைய பேராசிரியர் – (மிகவும் அறிவுள்ளவர்; நடைமுறைக்கு ஒத்தக் கருத்துக்களை பேசுபவர். பிற்காலத்தில் கொல்கத்தா பல்கலைக்கழகத்தின் துணை முதல்வர் ஆனவர்) எனக்குக் கிடைக்கும் வாய்ப்புகளினால் ஏற்படும் விளைவுகளைப் பற்றிச் சொன்னார்.

ஆசிரியரும் அரசாங்க அதிகாரியும்:


எனது ஆரம்ப வருமானம் – ஒரு பல்கலைக்கழக விரிவுரையாளராக நானூறு ரூபாய் (அறுபதுகளின் நடுவில்) ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரியின் வருமானமும் ஏறக்குறைய அதே அளவுதான் – அவருக்குக் கிடைக்கும் கார், பங்களா போன்றவை வசதிகளை சேர்க்காமல். அவரது வருமானம் ஒரு பல்கலைக்கழக ஆசிரியரை விட வெகு வேகமாக உயரும்.

ஆனால் அவரது வேலை முதலில் மாவட்டங்களில் ஆரம்பிக்கும். கொல்கத்தா, அல்லது டெல்லி போன்ற மாநிலங்களில் அதிகாரியாக நியமிக்கப்பட நீண்ட காலம் ஆகும்.

ஒரு பல்கலைக்கழகப் பேராசிரியர் வெளிநாடுகளில் கற்பிக்க வாய்ப்புக்கள் கிடைப்பதன் மூலம் டாலர்களில் சம்பாதிக்கலாம். ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரியால் அது இயலாத காரியம். அந்த வகையில் ஒரு ஆசிரியரின் வாழ்நாள் சம்பாத்தியம் என்பது ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரியின் வாழ்நாள்  வருமானத்தை விட அதிகம்.

வருமான விஷயத்தில் எனது ஆசிரியரின் கணிப்பு மிகச்
சரியாக இருந்தது!

வருடங்கள் செல்லச் செல்ல ஒரு பல்கலைக்கழக பேராசிரியரின் வருமானம் குறிப்பிடத் தக்க வகையில் அதிகரிக்கிறது. அதேசமயம் எங்கள் மாணவர்கள் பலர் – பெரும்பாலானவர்கள் என்று சொல்லமுடியாத போதிலும் – ஆரம்பப் பள்ளிகள் ஆகட்டும், ஐ.ஐ.டி. மற்றும் ஐ.ஐ.எம். இவற்றிலாகட்டும் எங்களை விட அதிகம் சம்பாதிக்கிறார்கள்.

இவற்றைத் தவிர என் பேராசிரியர் சொல்லாத வேறு சில விஷயங்கள்  எனது நீண்ட கால ஆசிரியப் பணி அனுபவம் எனக்குக் கற்றுக் கொடுத்தவையும் மிகவும் முக்கியமானவை.

பேச்சு சுதந்திரம்:


முதலாவது ஒரு கல்வியாளர் அரசு அதிகாரி போலல்லாது, இந்த உலகத்தில் இருக்கும் எதைப் பற்றி வேண்டுமானாலும் தனது கருத்துக்களை சுதந்திரமாகச் சொல்லலாம். உண்மை தேடுபவராக இருக்கலாம். அதற்காக எந்த அதிகாரிக்கும் அவர் பதில் சொல்லவேண்டியதில்லை.  

நம் நாட்டில் கொள்கை செயல்படுத்துதலில் அரசியல் தலையீடு என்பது பல வகையிலும் இருக்கும் சூழலில் தொழில் ரீதியாக ஒரு அரசு அதிகாரி பல சமரசங்களைச் செய்துகொள்ள வேண்டியிருக்கும். அதிகாரங்களுக்கு அடிபணியாது போனால் அரசு அதிகாரி அவமானப்படுத்தப்பட்டு, வேறு ஊர்களுக்கு மாற்றப்படுவார் அல்லது இடைக்கால நீக்கம் செய்யப்படுவார்.




ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82419
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Sep 05, 2019 7:33 am


தலைமுறை இடைவெளி
-
இரண்டாவதாக ஒரு ஆசிரியரின் வயது காலம் செல்லச்
செல்ல ஏறினாலும் அவரிடம் படிக்கும் மாணவர்களின்
வயது மாறுவதில்ல–
அவர்களின் முகங்கள் மட்டும் வருடந்தோறும் அல்லது
இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை மாறும். அதனால்
ஆசிரியர் எப்போதுமே இளைமையாகவே  இருக்கிறார்.

இளைய சமுதாயத்தினருடன் பழகக் கிடைக்கும்
வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டு, தனது கருத்துக்கள்,
வாழ்க்கையை பற்றிய தனது பார்வை ஆகியவற்றை
மாறும் காலத்திற்கேற்ப அமைத்துக் கொள்ளலாம்.

இதனால் தலைமுறை இடைவெளி என்பதை ஒரு ஆசிரியர்
வெகு சுலபமாக அணைகட்டி கடந்துவிடலாம்.

ஒரு அரசு அதிகாரி, அல்லது தனியார் நிறுவனத்தில்
உயர்பதவியில் இருப்பவர் தனது பதவிப் படிகளில் ஏற ஏற,
தன் அந்தஸ்துக்கு ஒத்தவருடனேயே பழக நேரிடும்.

அதுதான் தனது இப்போதைய மாறுபட்ட மனோபாவத்திற்கு
ஏற்றது என்று நினைக்கக்கூடும். தனக்குக் கீழ்
உள்ளவர்களுடன் பேசுவது தனது உயர் பதவிக்கு அழகல்ல
என்று கூட நினைக்கத் தோன்றும். இதிலும் சில
விதிவிலக்குகளும் உண்டு.
--

உழைப்பின் பலன் கண் முன்னே:


மூன்றாவதாக ஒரு ஆசிரியர் தனது உழைப்பின் பலனை
கண்கூடாக தன் வகுப்பில் உணரலாம். புதிய விஷயம்
ஒன்றை கற்றுக்கொண்ட  மாணவனின் முகத்தில்
உண்டாகும் ஒளி உடனடியாக அவருக்கு இதைத்
தெரிவிக்கும்.

இதற்கு நேர்மாறாக அதே வகுப்பில், சொல்லித்தரப்படும்
எந்த விஷயத்திலும் ஆர்வம் இல்லாத மாணவர்களும்
இருப்பார்கள். ஒரு பட்டம் வாங்க வேண்டும் என்ற ஒரே
குறிக்கோளுடன் அங்கு உட்கார்ந்திருக்கும் இந்த
ஆர்வமற்றவர்களில் ஒருவரையாவது தனது கற்பிக்கும்
திறமையால் ஆர்வமுள்ளவராகச் செய்வதுதான் ஒரு
ஆசிரியரின் முன் இருக்கும் சவால்.

இந்த சவாலில் வெற்றி பெறும்போது ஏதோ சாதித்ததைப்
போன்றும் தோற்கும் போது தோல்வி அடைந்த உணர்வு
வருவதையும் மறுக்க முடியாது.

துயரங்களும் உண்டு


ஒவ்வொரு வருட முடிவிலும் அந்த வகுப்பு மாணவர்கள்
அடுத்த வகுப்பிற்குச் செல்லும்போதும், படிப்பு முடிந்து
கல்லூரியை விட்டு  செல்லும்போதும் அந்தப் பிரிவு
ஆசிரியரையும் பாதிக்கிறது.

அறிந்தோ அறியாமலோ சில மாணவர்களுடன் பிரிக்க
முடியாத பந்தம் ஏற்பட்டுவிடுகிறது ஒரு ஆசிரியருக்கு.
அவர்கள் விடை பெறும்போது தனது ஒரு பகுதி தன்னை
விட்டுச் செல்வது போன்ற உணர்வு தவிர்க்க முடியாதது.

அதேபோல ஆசிரியருக்கு வயது ஏற ஏற மாணவர்கள்
அவரது நண்பர்கள் என்ற நிலை மாறி அவரது
குழந்தைகளாகிவிடுகிறார்கள். ஒருகால கட்டத்தில் பெற்ற
குழந்தைகள் சிறகு முளைத்து கூட்டை விட்டுப் பறக்கும்
போது பெற்றோர்கள் அனுபவிக்கும் துயரத்தை
ஒரு ஆசிரியர் ஒவ்வொரு வருடமும் அனுபவிக்கிறார்.

துன்பத்தில் இன்பம்


இந்தத் துயரத்தின் ஊடே ஒரு மாணவன் ஆசிரியரிடம்
வந்து, ’ஸார், நான் என் வாழ்நாள் முழுவதும் நினைவில்
வைத்திருக்கும் ஆசிரியர்களில் நீங்களும் ஒருவர்’ என்று
சொல்லும் போது ஏற்படும் பெருமிதம் வார்த்தைகளில்
விவரிக்க முடியாத ஒன்று.

சிலருடைய வாழ்க்கையை நான்  தொட்டு சில மாற்றங்களை
உண்டு பண்ணியிருக்கிறேன் என்று அந்தக் கணம்
உணருகிறேன். அதே சமயம் அவர்களிடமிருந்து நான் கற்ற
புதிய பாடங்களுக்காக நான் அவர்களுக்கு மிகவும் கடமைப்
பட்டிருக்கிறேன். பல சமயங்களில் ஒரு மாணவன் கேட்ட
கேள்விக்கு உடனடியாகப் பதில் சொல்லமுடியாமல்
போயிருக்கிறது. அதற்காக நான் படித்து, யோசனை செய்து
பதில் சொல்ல வேண்டிய கட்டாயத்தில் இருந்திருக்கிறேன்.

ஆசிரியர்கள் சாகாவரம் பெற்றவர்கள்


எனது வாழ்க்கையைத் திரும்பிப் பார்க்கும் போது நான்
சரியான முடிவையே எடுத்திருப்பதாக தோன்றுகிறது.
இந்த பணிக்கு பதிலாக வேறெந்த தொழிலையும் நான்
தேர்ந்தெடுத்திருக்க மாட்டேன். ஒரு ஆசிரியர் அவரது
மாணாக்கர்களின் எண்ணங்களின் வழியே அழிவில்லாமல்
வாழ்ந்து கொண்டிருக்கிறார். இதன் மூலம் அவர்
இறப்பின்மையை அடைகிறார்.
-------------------
நன்றி: டெக்கன் ஹெரால்ட் தினசரி/திரு அலோக் ரே
----


மனம் நிறைந்த மகிழ்ச்சியுடன்
ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்
அத்தனை ஆசிரியப் பெருமக்களுக்கும்!
-
------------------------

நன்றி- ரஞ்சனி நாராயணன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக