உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» புத்தகம் தேவை : இறையன்பு IAS
by Sabeer ahamad Yesterday at 11:45 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:33 pm

» ஷாக் ஆகாதீங்க.. வாக்கிங் போனால் உடல் எடை குறையாதாம்!
by T.N.Balasubramanian Yesterday at 8:43 pm

» உத்தர பிரதேசம்: 3000 டன் தங்க சுரங்கம் - எப்போது அகழாய்வு? - விரிவான தகவல்கள்
by T.N.Balasubramanian Yesterday at 8:37 pm

» விளையாட்டு வினையாகலாம்!
by krishnaamma Yesterday at 8:17 pm

» மடிமீது காதல் கனா
by ayyasamy ram Yesterday at 7:37 pm

» கனகதாரா !! Short story by Krishnaamma
by krishnaamma Yesterday at 7:31 pm

» கோபுர தரிசனம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» கொரோனா வைரஸ் எதிரொலி: இந்தியர்கள் சிங்கப்பூர் செல்வதை தவிர்க்க வேண்டும்...மத்திய அரசு அறிவிப்பு
by ayyasamy ram Yesterday at 4:25 pm

» பழியை தன் மேல் ஏற்று பெருமையை பிறர்க்கு உரித்தாக்கும் பண்பு
by ayyasamy ram Yesterday at 4:22 pm

» பின் நோக்கி இழுக்கப்படும் அம்புதான் வேகத்துடன் முன்நோக்கி பாய்கிறது
by ayyasamy ram Yesterday at 4:21 pm

» இலக்கியத்தில் காதல் தேவையா?
by ayyasamy ram Yesterday at 4:11 pm

» மனசும் குழந்தைமாதிரி தான்!
by ayyasamy ram Yesterday at 4:10 pm

» பணம் பத்தும் செய்யும்
by ayyasamy ram Yesterday at 4:05 pm

» மொக்க ஜோக்ஸ்!
by ayyasamy ram Yesterday at 4:01 pm

» சிதம்பரம் நடராஜா் கோயில் நாட்டியாஞ்சலி தொடக்க விழா
by சக்தி18 Yesterday at 3:57 pm

» பிறப்பு பாகிஸ்தானாக மாற்றி பிபிசி செய்தி தந்த குழப்பம்
by சக்தி18 Yesterday at 3:50 pm

» முத்தம் கொடுப்பதால் ஏற்படும் நன்மைகள்
by சக்தி18 Yesterday at 3:40 pm

» இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 3:27 pm

» எனக்கும் இப்போ ‘சீசன்-2’ காலம்! - தொகுப்பாளினி ஆர்த்தி உற்சாக நேர்காணல்
by ayyasamy ram Yesterday at 3:05 pm

» சதம் அடிப்பதில் ஜப்பானியர்களே வல்லவர்கள்
by ayyasamy ram Yesterday at 3:00 pm

» 99 சாங்ஸ் படத்தைத் தமிழில் எடுக்காதது ஏன்?: ஏ.ஆர். ரஹ்மான் பதில்
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» ஷில்பா ஷெட்டிக்கு பெண் குழந்தை பிறந்தது
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப்- சாக்‌ஷிக்கு வெள்ளிப்பதக்கம்
by ayyasamy ram Yesterday at 2:32 pm

» காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் நடிப்பது ஏன்? - சமந்தா விளக்கம்
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» சிவராத்திரி நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட காஜல் அகர்வால்
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» சென்னையில் 6 மாதத்துக்கு குடிநீர் தட்டுப்பாடு வராது
by ayyasamy ram Yesterday at 2:20 pm

» சிவமூலிகைகளின் சிகரம் வில்வம்… இறைவன் நமக்களித்த செல்வம்!
by ayyasamy ram Yesterday at 12:27 pm

» சாலமன் பாப்பையா-பட்டிமன்ற நகைச்சுவை
by சக்தி18 Yesterday at 12:21 pm

» சமந்தாவுக்கு பிடித்த ஆண்கள்
by சக்தி18 Yesterday at 12:15 pm

» மருத்துவ குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» மனித வாழ்வில், நம்பிக்கைகள்
by ayyasamy ram Yesterday at 12:05 pm

» அந்த ரூம் கதவுல ‘களிப்பறை’ன்னு எழுதி இருக்குதே, ஏன்?
by ayyasamy ram Yesterday at 11:54 am

» வாழு வாழ விடு!
by krishnaamma Yesterday at 11:33 am

» மூட்டு வலி என்பது தேய்மானம் அல்ல!
by krishnaamma Yesterday at 10:54 am

» நடிகர்களுக்கு டாப்சியின் அறிவுரை
by ayyasamy ram Yesterday at 8:55 am

» எனக்கு பிடித்த சினிமா பாடல் வரிகள்
by ayyasamy ram Yesterday at 8:46 am

» வேலன்:-இணையம் மூலம் சொத்துவரி -குடிநீர் வரி செலுத்த-e Town Panchayat
by velang Yesterday at 8:26 am

» வேலன்:-இலவச மீடியா ப்ளேயர்-Aiseesoft Free Media Player
by velang Yesterday at 8:24 am

» இந்த வார திரைப்படம் 37 நொடிகள்
by ayyasamy ram Yesterday at 8:16 am

» ராஜாஜி சிந்தனை வரிகள் –
by ayyasamy ram Yesterday at 8:07 am

» புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
by Sabeer ahamad Yesterday at 1:34 am

» ஊழலையும், லஞ்சத்தையும் ஒரு மாவட்டத்திலிருந்து மற்றொரு மாவட்டத்திற்கு மாற்ற கூடாது...!!
by ayyasamy ram Fri Feb 21, 2020 9:35 pm

» முருகனின் மனைவி பெயர், வள்ளி எப்படி வந்தது
by ayyasamy ram Fri Feb 21, 2020 9:29 pm

» உயிர்களை காப்பதே ஆன்மிகம்!: அனுபவித்து சொல்கிறார் சாதனா ராவ்
by ayyasamy ram Fri Feb 21, 2020 9:23 pm

» சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ஒரே அடியாக அதிகரிப்பு
by ayyasamy ram Fri Feb 21, 2020 9:04 pm

» “இது நிச்சயம் தோனியின் நாய் தான்” ... கிரிக்கெட் விளையாடும் நாய் ...
by ayyasamy ram Fri Feb 21, 2020 9:01 pm

» நான் ...நானாக இருப்பேன்.
by ayyasamy ram Fri Feb 21, 2020 8:56 pm

» மகளிர் டி20 உலக கோப்பை: வெற்றியுடன் தொடங்கிய இந்திய அணி
by ayyasamy ram Fri Feb 21, 2020 8:49 pm

» நித்யானந்தாவுக்கு கைது 'வாரன்ட்'
by T.N.Balasubramanian Fri Feb 21, 2020 8:13 pm

Admins Online

விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் 185-வது திருநாமம். “ஸ்ரீநிவாஸாய நமஹ”

 விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் 185-வது திருநாமம். “ஸ்ரீநிவாஸாய நமஹ”  Empty விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் 185-வது திருநாமம். “ஸ்ரீநிவாஸாய நமஹ”

Post by ayyasamy ram on Sat Aug 24, 2019 8:13 am

 விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் 185-வது திருநாமம். “ஸ்ரீநிவாஸாய நமஹ”  Tamil-Daily-News-Paper_2019_297435939311982

185. ஸ்ரீநிவாஸாய நமஹ (Shreenivaasaaya namaha)

பாற்கடல் கடையப்பட்டபோது, அதிலிருந்து மின்னல் போலத் தோன்றினாள் மகாலட்சுமி. தாமரையில் அமர்ந்திருந்த அவள், தனது இரு கரங்களிலும் தாமரைகளை ஏந்தியிருந்தாள். முனிவர்கள் வேத மந்திரங்களாலும், கந்தர்வர்கள் இன்னிசையாலும் அவளைத் துதித்தார்கள். திக்கஜங்கள் தங்கப் பானைகளால் அவள் மேல் பன்னீர் சொரிந்தன. இந்திரன் அவளுக்குச் சிம்மாசனமும், கடலரசன் பட்டு வஸ்திரமும், வருணபகவான் மாலைகளும், விஸ்வகர்மா நகைகளும் அளித்தார்கள். இவளே அனைத்து உலகுக்கும் அரசி என்று சொன்ன தேவர்களும் ரிஷிகளும் அவளுக்குப் பட்டாபிஷேகம் செய்து வைத்தார்கள்.அங்கேயே தனது சுயம்வரத்தை நடத்த விரும்பினாள் மகாலட்சுமி. தேவர்களும் முனிவர்களும் ஆவலுடன் வரிசையில் நின்றார்கள். அவர்கள் ஒவ்வொருவரும் தன்னிடம் அனைத்து நற்பண்புகளும் இருப்பதாகவும், மகாலட்சுமி தன்னையே தேர்ந்தெடுப்பாள் என்றும் கருதினார்கள்.

முதலில் துர்வாச முனிவர் நின்று கொண்டிருந்தார். அவர் பெரிய தபஸ்வியாயினும் கோபம் மிகுந்தவர். அதனால் அவரை நிராகரித்தாள் மகாலட்சுமி. அடுத்து நின்ற சுக்ராச்சார்யார் மகா ஞானி. ஆனால் புலனடக்கம் இல்லாதவர். அடுத்து நின்ற சந்திரனோ, அளவில்லாத ஆசை உடையவர். கார்த்தவீர்யார்ஜுனன் பெரும் வீரன். ஆனால் நிலையில்லாத செல்வங்களை நிலையென எண்ணி வாழ்பவன். சனத்குமாரர் போன்றோர் எப்போதும் தவத்தில் ஈடுபட்டிருப்பதால், மனைவியைக் கவனிக்க மாட்டார்கள். இவ்வாறு ஒவ்வொரு காரணத்தைச் சொல்லி தேவர்களையும் முனிவர்களையும் நிராகரித்து வந்து மகாலட்சுமி, இறுதியாகத் திருமாலின் முன்னே வந்து நின்றாள்.

அவரிடம் அனைத்துக் கல்யாண குணங்களும் பரிபூர்ணமாக நிறைந்திருப்பதைக் கண்டாள் மகாலட்சுமி. திருமால், “திருமகளே வருக!” என்று மகாலட்சுமியைப் பார்த்துச் சொன்னார். “வருக” என்ற அந்த ஒரு வார்த்தையில் அவளது இதயத்தையே திருமால் கடைந்து விட்டார். திருமாலின் அழகாலும், நற்பண்புகளாலும், இளமையாலும், கருணையாலும், “வருக!” என்ற வார்த்தையாலும் ஈர்க்கப்பட்ட மகாலட்சுமி அவருக்கு மாலையிட்டாள். மாலையிட்டதோடு மட்டுமின்றி, அவரது மார்பில் ஏறி அமர்ந்து கொண்டாள். “டோலா தே வனமாலயா” - அது வரை திருமாலின் மார்புக்கு ஆபரணமாக இருந்த வனமாலை அன்று முதல் மகாலட்சுமிக்கு ஊஞ்சலாக மாறிவிட்டது என்று ஸ்ரீகுணரத்ன கோசத்தில் பராசர பட்டர் தெரிவிக்கிறார்.

மகாலட்சுமிக்கும் திருமாலுக்கும் திருக்கல்யாணம் நடந்த பின், தொடர்ந்து பாற்கடல் கடையப்பட்டது. அப்போது அதிலிருந்து அமிர்த கலசத்தைக் கையில் ஏந்தியபடி தன்வந்திரி பகவான் தோன்றினார். அமுதம் வருவதைக் கண்ட தேவர்கள் திருமாலிடம், “இந்த அமுதம் அசுரர்களின் கையில் கிடைக்காதபடி நீங்கள் தான் மீட்டுத்தர வேண்டும். அசுரர்கள் அமுதத்தை உண்டு விட்டால் அவர்களும் நீண்ட ஆயுள் பெற்று விடுவார்கள்!” என்று பிரார்த்தித்தார்கள்.அவர்களின் பிரார்த்தனையை ஏற்று, அசுரர்களை மயக்கும் பொருட்டு மோகினி என்னும் பெண்ணாக அவதரிக்கத் திட்டமிட்டார் திருமால். அப்போது தன் திருமார்பில் இருந்த மகாலட்சுமியிடம், “நீ இந்த மார்பிலிருந்து சற்றே விலகி இரு. நான் மோகினி வேடமணிந்து அசுரர்களை ஏமாற்றி விட்டு வருகிறேன்.

மோகினி அவதாரத்தில் நீ என் மார்பில் இருப்பது அவ்வளவு சுவாரஸ்யமாக இருக்காது!” என்றார் திருமால்.ஆனால் மகாலட்சுமியோ, “ஒரு நொடி கூட இந்த மார்பை விட்டு நான் அகலமாட்டேன். நீங்கள் பெண் வேடமிட்டாலும், ஆண் வேடமிட்டாலும் இந்த மார்பை விட்டு நான் நீங்க மாட்டேன்!” என்றாள். அதனால் திருமால் மார்பிலுள்ள மகாலட்சுமியை மேலாடையால் மறைத்துக் கொண்டு மோகினி அவதாரம் எடுத்தார்.ஏன் திருமாலின் திருமார்பை விட்டு அகல மறுத்தாள் மகாலட்சுமி? ஏனெனில், திருமாலை நாடி பக்தர்கள் வரும்போது, திருமார்பில் உள்ள மகாலட்சுமி அந்த பக்தர்களுக்கு அருள்புரியும்படித் திருமாலிடம் பரிந்துரைக்கிறாள். அவளது பரிந்துரை இல்லாவிட்டால் பக்தர்களால் திருமாலின் அருளைப் பெற முடியாமல் போய்விடும். எனவே பக்தர்களுக்குத் திருமாலின் அருளைப் பெற்றுத் தருவதற்காக “அகலகில்லேன் இறையும்” என்று அவன் திருமார்பில் திருமகள் உறைகிறாள்.

இன்றும் பெருமாள் கோயில்களில், பெருமாள் மோகினி வேடம் அணிந்து கொள்ளும் போது கூட, திருமார்பில் மகாலட்சுமி விட்டுப்பிரியாமல் இருப்பதைக் காணலாம். மகாலட்சுமிக்கு ‘ஸ்ரீ:’ என்று பெயர். அந்த ஸ்ரீ எப்போதும் திருமாலின் திருமார்பில் வசிப்பதால் திருமால் ‘ஸ்ரீநிவாஸ:’ என்றழைக்கப்படுகிறார். அதுவே விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் 185-வது திருநாமம். “ஸ்ரீநிவாஸாய நமஹ” என்று தினமும் சொல்லி வரும் பக்தர்களுக்கு எல்லாச் செல்வங்களும் நிறையும்.
-
நன்றி- அனந்தனுக்கு 1000 நாமங்கள்-
தினகரன்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 53093
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12728

https://rammalar.wordpress.com/

Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை