உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» இந்த தேச துரோகியை இல்லையில்லை பிரபஞ்ச துரோகி என்ன செய்யலாம்.?
by T.N.Balasubramanian Today at 4:35 pm

» மூன்றாம் உலகப் போர்
by M.M.SENTHIL Today at 3:20 pm

» தாடி இல்லாத தாகூர்; மீசை இல்லா பாரதி - கண்ணதாசன் குறித்து முனைவர் இரா.மோகன்
by ayyasamy ram Today at 2:13 pm

» கொரோனாவை எதிர்த்து போராட இந்தியாவுக்கு நிதி ஒதுக்கிய அமெரிக்கா
by ayyasamy ram Today at 2:00 pm

» 48 மணி நேரத்தில் வென்டிலேட்டர் ப்ரோடோடைப் உருவாக்கி மஹிந்திரா
by ayyasamy ram Today at 1:34 pm

» கொரோனா வைரஸ் எதிரொலி - வேளாங்கண்ணி பேராலயத்தில் ஈஸ்டர் பண்டிகை ரத்து
by ayyasamy ram Today at 1:30 pm

» கண்ணதாசன் (காவியத் தாயின் இளைய மகன்) ‘தனிப்பாடலகள்’
by ayyasamy ram Today at 1:11 pm

» வணங்குவோம் திரு காதர் அவர்களை.
by T.N.Balasubramanian Today at 12:35 pm

» மக்களின் கோரிக்கையை ஏற்று ராமாயணம் தொடர் மீண்டும் ஒளிபரப்பு: மத்திய அரசு அறிவிப்பு
by T.N.Balasubramanian Today at 12:25 pm

» 'கொரோனா' தாக்கம் எப்போது தணியும்? பிரபல ஜோதிடர் பரணிதரன் கணிப்பு
by T.N.Balasubramanian Today at 11:08 am

» » கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - மார்ச் -28
by ayyasamy ram Today at 11:04 am

» கரோனா சிகிச்சை: 500 படுக்கைகளுடன் கூடிய மருத்துவமனை சென்னையில் தொடக்கம்
by ayyasamy ram Today at 11:00 am

» மளிகைக் கடைகள் - பெட்ரோல் நிலையங்களுக்கு நேரக் கட்டுப்பாடு
by ayyasamy ram Today at 10:56 am

» வேலன்:- பாஸ்போர்ட்.விசா.ஐடிபோட்டோ நொடியில் ரெடிசெய்ய -ID Photos Pro.
by velang Today at 9:06 am

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
by பழ.முத்துராமலிங்கம் Today at 8:42 am

» கொரானா ஆத்திசூடி
by பழ.முத்துராமலிங்கம் Today at 7:54 am

» இயக்குநர் இமயம் பாரதிராஜா பதில்கள்
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» பெத்த மனம் கல்லு (கிகுஜிரோ) - சினிமா
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» கொலுசிலிருந்து எழும் அழுகுரல் – கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» கேஸ் தோத்தும் வக்கீல் சந்தோஷமா போறாரே…!
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குற்றவாளியின் குழந்தையை தத்தெடுத் காவல்துறை அதிகாரி
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» கும்மிடிப்பூண்டி அருகே எண்ணெய்த் தொழிற்சாலை ஒன்றில் தீவிபத்து ஏற்பட்டது.
by ayyasamy ram Yesterday at 9:15 pm

» கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - மார்ச் -26
by ayyasamy ram Yesterday at 7:23 pm

» மதுக்கடைகள் மூடல்: கேரளாவில் இளைஞர் தூக்கிட்டுத் தற்கொலை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஓய்வூதியர்கள் இருப்புச் சான்றிதழ் சமர்ப்பிக்க செப். இறுதி வரை அவகாசம்
by ayyasamy ram Yesterday at 7:18 pm

» தமிழில் களமிறங்கிய அமெரிக்காவின் யூனிவர்செல் லைவ் ரேடியோ…
by சக்தி18 Yesterday at 6:57 pm

» மன்மதனின் மனைவி பெயர்? – குறுக்கெழுத்துப் போட்டி
by சக்தி18 Yesterday at 6:54 pm

» ரமணிசந்திரன் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக
by Guest Yesterday at 4:27 pm

» திருக்கழுக்குன்றம்:-மலையாள மக்கள் பார்வையில் -திருக்கழுக்குன்றம்.
by velang Yesterday at 4:11 pm

» அம்மாவின் தொடல் - கவிதை
by ayyasamy ram Yesterday at 3:17 pm

» மீம்ஸ் "கரோனா " பற்றியது .....
by ayyasamy ram Yesterday at 3:08 pm

» அசுரகுரு ஜெகன்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:49 pm

» உலகின் சிறந்த அம்மா ஓர் ஆண்!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:46 pm

» செம்மறி ஆடு கஃபே
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:43 pm

» கையெடுத்துக் கும்பிட்டு
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:40 pm

» கோபுர தரிசனம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:37 pm

» நடிகர் சேதுராமன் மாரடைப்பால் காலமானார்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:32 pm

» அங்காடித் தெரு வெளிவந்து 10 ஆண்டுகள்: ரங்கநாதன் தெருவின் வலி!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:30 pm

» 20 நொடிகளில் 'கொரோனா'பாதிப்பு அறியலாம்! கோவை நிறுவனம் கண்டறிந்த புதிய தொழில்நுட்பம்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:28 pm

» சளி, இருமலுக்கு இதம் தரும் பூண்டு மிளகு சாதம்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:09 pm

» கொசுக்கள் மூலம் கொரோனா பரவாது - மத்திய அரசு விளக்கம்
by ayyasamy ram Yesterday at 8:01 am

» தமிழகத்தில் ஓட்டல்கள், மளிகைக் கடைகள் 24 மணி நேரமும் இயங்கும் - மாநில அரசு அறிவிப்பு
by ayyasamy ram Yesterday at 7:59 am

» வேலன்:-புளுரே ப்ளேயர்-VideoSolo Blu-ray Player
by velang Yesterday at 7:21 am

» கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - மார்ச் -26
by ayyasamy ram Thu Mar 26, 2020 8:02 pm

» நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். அறிவிப்பு
by ayyasamy ram Thu Mar 26, 2020 6:03 pm

» பூங்காற்றே பூங்காற்றே பூவிடம் நீ செல்லு
by ayyasamy ram Thu Mar 26, 2020 5:28 pm

» நா.முத்துக்குமாரின் பாடலில் பிடித்த வரிகள்
by ayyasamy ram Thu Mar 26, 2020 5:20 pm

» இயக்குநர் ஏ.சி. திரிலோகசந்தரின் பேத்தி இப்ப ஹீரோயின்!
by ayyasamy ram Thu Mar 26, 2020 4:50 pm

» மகிழ்ச்சி
by ayyasamy ram Thu Mar 26, 2020 4:45 pm

» அடிக்கடி சிறுநீர்… தடுப்பது எப்படி?
by ayyasamy ram Thu Mar 26, 2020 4:43 pm

Admins Online

பொருளாதார மந்தம்...10,000 ஊழியர்களை நீக்க பார்லே நிறுவனம் முடிவு?!

பொருளாதார மந்தம்...10,000 ஊழியர்களை நீக்க பார்லே நிறுவனம் முடிவு?! Empty பொருளாதார மந்தம்...10,000 ஊழியர்களை நீக்க பார்லே நிறுவனம் முடிவு?!

Post by பாலாஜி on Thu Aug 22, 2019 1:57 pm

`அரசு இந்த விஷயத்தில் எங்களுக்குச் சாதகமாக முடிவெடுக்கவில்லை எனில், 8000 - 10,000 பணியாளர்களை நீக்கவேண்டிய நிலைக்கு தள்ளப்படுவோம்’.
பொருளாதார மந்தம்...10,000 ஊழியர்களை நீக்க பார்லே நிறுவனம் முடிவு?! Vikatan%2F2019-08%2Fe8b2d575-3c66-4c71-88ef-e71e2500dbf1%2Fparle_

இந்தியாவில் ஏற்பட்டுள்ள பொருளதார மந்தநிலை படிப்படியாக அனைத்து துறைகளையும் பாதிக்கத் தொடங்கியுள்ளது. ஆட்டோமொபைல் துறையில் பெரும் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. நிசான், டாடா, அசோக் லேலண்ட் போன்ற நிறுவனங்கள் ஆள் குறைப்பில் ஈடுபட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பொருளாதார மந்தம்...10,000 ஊழியர்களை நீக்க பார்லே நிறுவனம் முடிவு?! Vikatan%2F2019-08%2F91358faf-41b8-4912-9755-25c2269a332b%2Fparle_1_

இந்தியாவின் மிகப் பெரிய பிஸ்கட் உற்பத்தி நிறுவனமான பார்லேவும் பொருளாதார மந்தநிலையால் பாதிப்படைந்துள்ளது. இதனால், ஆயிரக்கணக்கான ஊழியர்களைப் பணிநீக்கம் செய்ய முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து பார்லே நிறுவனத்தின் அதிகாரி மாயங்க் ஷா கூறுகையில், ''சேவை வரியைக் குறைக்க மத்திய அரசிடம் நாங்கள் கோரிக்கை வைத்திருக்கிறோம். அரசு இந்த விஷயத்தில் எங்களுக்கு சாதகமாக முடிவெடுக்கவில்லை எனில், 8000 - 10,000 பணியாளர்களை நீக்கவேண்டிய நிலைக்கு தள்ளப்படுவோம்'' என்றார் வேதனையுடன்.

பார்லே நிறுவனம், மும்பையைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்குகிறது. பார்லே நிறுவனத்துக்கு நாடு முழுவதும் 10 பிளான்ட்டுகள் உள்ளன. ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிகின்றனர். ஆண்டுக்கு ரூ.10,000 கோடிக்கு வர்த்தகம் நடக்கிறது. முன்னதாக, 100 கிலோ கிராம் பிஸ்கட் பாக்கெட்டுக்கு 12 சதவிகித சேவை வரி விதிக்கப்பட்டது. ஜி.எஸ்.டி அறிமுகம் செய்த பிறகு, 18 சதவிகிதமாக வரி வசூலிக்கப்படுகிறது.

ஜி.எஸ்.டி வரிவிதிப்பில் பிரீமியம் ரக பிஸ்கட்டுகளுக்கு 12 சதவிகித வரியும் குறைந்த விலைகொண்ட பிஸ்கட்டுகளுக்கு 5 சதவிகித வரியும் விதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், 18 சதவிகித வரி விதிக்கப்பட்டதால், வேறு வழியில்லாமல் 5 சதவிகிதம் விலையை உயர்த்தியது பார்லே நிறுவனம். விலை உயர்வும் பிஸ்கட் விற்பனை சரிவதற்குக் காரணமாக அமைந்துவிட்டது.

பார்லே நிறுவனம், பார்லே ஜி மற்றும் மாரி ரக பிஸ்கட்டுகளை விற்பனைசெய்கிறது.

பார்லே நிறுவனத்தைப் போல, மற்றொரு பிஸ்கட் தயாரிப்பு நிறுவனமான பிரிட்டானியாவும் பாதிக்கப்பட்டுள்ளது. அந்த நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் வருண் பெரி, '' இந்தியப் பொருளாதாரத்தில் ஏதோ சீரயஸாக எடுத்துக்கொள்ளக்கூடிய தொய்வு ஏற்பட்டுள்ளது. 5 ரூபாய் பிஸ்கட்டை வாங்கக்கூட வாடிக்கையாளர்கள் ஒருமுறைக்கு இருமுறை யோசிக்கின்றனர்'' எனக் கவலை தெரிவித்திருக்கிறார்.

நன்றி -விகடன்
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19851
இணைந்தது : 30/07/2009
மதிப்பீடுகள் : 4009

http://varththagam.lifeme.net/

Back to top Go down

பொருளாதார மந்தம்...10,000 ஊழியர்களை நீக்க பார்லே நிறுவனம் முடிவு?! Empty Re: பொருளாதார மந்தம்...10,000 ஊழியர்களை நீக்க பார்லே நிறுவனம் முடிவு?!

Post by பாலாஜி on Thu Aug 22, 2019 2:19 pm

5 ரூபாய் பிஸ்கட் பாக்கெட் கூட விற்கவில்லை.. கவலை அளிக்கும் இந்தியாவின் பொருளாதார மந்தநிலை

எந்த துறை எடுத்தாலும் மந்தம், வீழ்ச்சி, வேலையிழப்பு என பல செய்திகள் வெளியாகி வருகின்றன. அதிலும் ஆட்டோமொபைல் துறையில் பல லட்சம் பேர் வேலையை இழந்துள்ளதாகவும் தொடர்ந்து செய்திகள் வெளியாகி வருகின்றன.

இந்த நிலையில் இதற்கு அடுத்தாற்போல் உணவு சார்ந்த நுகர்வோர் பொருட்கள் உற்பத்தி நிறுவனங்களிலும் இதன் தாக்கம் இருப்பதாகக் கூறப்படுகிறது.

பொருளாதார மந்தம்...10,000 ஊழியர்களை நீக்க பார்லே நிறுவனம் முடிவு?! Britaniya-1566276318

பிரிட்டானியா கவலை

சில்லறை விற்பனை நாளுக்கு நாள் சரிய தொடங்கியது. 5 ரூபாய் பிஸ்கெட் பாக்கெட் கூட விற்பனை ஆகவில்லை என் பிரிட்டானியா நிறுவனம் பொருளாதார மந்த நிலை குறித்து தனது கவலையை வெளிப்படுத்தி உள்ளது.

பொருளாதார மந்தம்...10,000 ஊழியர்களை நீக்க பார்லே நிறுவனம் முடிவு?! Vijay-textiles--sector-20d-chandigarh-textile-retailers-4l38zea-1566276325

துணிகள் தேங்குவதாக தகவல்

பொதுமக்கள் வாங்குவதை குறைத்துக்கொள்ள ஆரம்பித்ததால் டெக்ஸ்டைல்ஸ் ஜவுளிதுறையும் பாதிக்ப்பட்டுள்ளது. விதவிதமான நவீனபேஷனில் துணிகளை இறக்கிய ஜவுளி அதிபர்கள் துணிகள் விற்பனை ஆகாமல் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறுகிறார்கள்.

பொருளாதார மந்தம்...10,000 ஊழியர்களை நீக்க பார்லே நிறுவனம் முடிவு?! Home3-15-1566276189

பாதிப்பை ஏற்படுத்தும்

நாடு முழுவதும் 30 நகரங்களில் 12லட்சத்து 28 ஆயிரம் வீடுகள் கட்டப்பட்டு விற்பனையாகாமல் தேங்கிகிடக்கிறது என்று ரியல் எஸ்டேட் துறை புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இவற்றை விற்பனை செய்ய இன்றும் குறைந்தது 3.5 ஆண்டுகள் ஆகும் என்கிறார்கள். பிரதமர் மோடியின் வீடுகளுக்கு மானியம் அளிக்கும் திட்டம், குறைந்த ஜிஎஸ்டி போன்றவை ஓரளவு கைகொடுத்தாலும் என்பிஎப்சி எனப்படும் வங்கி சாராத நிதி நிறுவனங்களில் பண புழக்கம் குறைவாக இருப்பதால் எந்த நேரம் பாதிப்பை ஏற்படுத்தும்.

கடும் சவால்

பொருளாதார மந்தம்...10,000 ஊழியர்களை நீக்க பார்லே நிறுவனம் முடிவு?! Worker6723-1566276156

ரியஸ் எஸ்டேட் துறையில் நிலவும் பாதிப்பு இரும்பு விற்பனையாளர்களையும் விட்டு வைக்கவில்லை. , டாடா ஸ்டீல் மற்றும் ஜே.எஸ்.டபிள்யூ ஸ்டீல் போன்ற நிறுவனங்கள் சுமார் ரூ .100 லட்சம் கோடி உள்கட்டமைப்பு முதலீடுகளை வைக்க வேண்டிய சவால்களை சந்தித்து வருகின்றன. இரும்பின்தேவை இந்த ஆண்டு 7 முதல் 7.5 சதவீதம் இந்த ஆண்டு வளர வேண்டும் என எதிர்பார்பபதாக ஜே.எஸ்.டபிள்யூ ஸ்டீலின் இணை எம்.டி. சேஷகிரி ராவ் கூறினார்

வேலை பறிபோகும்

பொருளாதார மந்தம்...10,000 ஊழியர்களை நீக்க பார்லே நிறுவனம் முடிவு?! Car-auto-manufacturing-720-770x433-1566276167

இதேபோல் ஆட்டோ மொபைல்துறையில் மிகப்பெரிய சரிவு ஏற்பட்டுள்ளதால் பல லட்சம் பேர் வேலைஇழக்கும் அபாயத்தில் உள்ளன. வாகனங்கள் விற்பனை மந்தம் காரணமாக உற்பத்தி குறைந்த வேலையும் பறிபோகும் நிலை உருவாகியுள்ளது.

Goodreturns
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19851
இணைந்தது : 30/07/2009
மதிப்பீடுகள் : 4009

http://varththagam.lifeme.net/

Back to top Go down

பொருளாதார மந்தம்...10,000 ஊழியர்களை நீக்க பார்லே நிறுவனம் முடிவு?! Empty Re: பொருளாதார மந்தம்...10,000 ஊழியர்களை நீக்க பார்லே நிறுவனம் முடிவு?!

Post by T.N.Balasubramanian on Thu Aug 22, 2019 5:21 pm

வாங்க பாலாஜி நலமா?வீட்டில் யாவரும் நலமா?
நீண்ட நாட்களாக காணவில்லையே?

பொருளாதாரத்தை பற்றிய தகவல்களுக்கு உங்களை விட சிறந்தவர் யார்?
இருப்பினும் விகடன் செய்திகள் ஒரு பட்சமாக இருக்கிறதோ என்ற சந்தேகம் அடிக்கடி எழுவதுண்டு!

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 26158
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9458

Back to top Go down

பொருளாதார மந்தம்...10,000 ஊழியர்களை நீக்க பார்லே நிறுவனம் முடிவு?! Empty Re: பொருளாதார மந்தம்...10,000 ஊழியர்களை நீக்க பார்லே நிறுவனம் முடிவு?!

Post by சக்தி18 on Thu Aug 22, 2019 7:25 pm

பொருளாதார மந்தம்...10,000 ஊழியர்களை நீக்க பார்லே நிறுவனம் முடிவு?! 69589429_2516081535109466_7035631372626558976_n.jpg?_nc_cat=109%26_nc_oc=AQkZ_FZaGZD0KRXrXwaOrPoXtFL6HPRwYnH76zuXaMac9XeE6woGq2qyDJp9qebXfIY%26_nc_ht=scontent-frt3-2
சக்தி18
சக்தி18
தளபதி

தளபதி

பதிவுகள் : 1501
இணைந்தது : 24/12/2018
மதிப்பீடுகள் : 464

Back to top Go down

பொருளாதார மந்தம்...10,000 ஊழியர்களை நீக்க பார்லே நிறுவனம் முடிவு?! Empty Re: பொருளாதார மந்தம்...10,000 ஊழியர்களை நீக்க பார்லே நிறுவனம் முடிவு?!

Post by பாலாஜி on Fri Aug 23, 2019 11:23 am

@T.N.Balasubramanian wrote:வாங்க பாலாஜி நலமா?வீட்டில் யாவரும் நலமா?
நீண்ட நாட்களாக காணவில்லையே?

பொருளாதாரத்தை பற்றிய தகவல்களுக்கு உங்களை விட சிறந்தவர் யார்?
இருப்பினும் விகடன் செய்திகள் ஒரு பட்சமாக இருக்கிறதோ என்ற சந்தேகம் அடிக்கடி எழுவதுண்டு!

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1302710

அனைவரும் நலம்,
விகடன் செய்திகளில் எப்பொழுதும் ஒரு நம்பக தன்மை உண்டு ,
இப்பொழுது தினசரிகளில் அதிக இடம் பெறும் செய்தி என்றால் ஆள்குறைப்பு அனைத்து நிறுவனத்திலும் , நிறுவனம் மூடல் போன்ற செய்திகள் தான் அதிகம்.

வேலை வாய்ப்பு ,வேலை இழப்பு போன்றவற்றால் பணப்புழக்கம் குறையும் , பணப்புழக்கம் குறைந்தால் நுகர்வு குறையும் , நுகர்வு குறைந்தால் உற்பத்தி குறையும் , உற்பத்தி குறைந்தால் கடன் திருப்பி செலுத்துவது குறையும் , அப்படி என்றால் வங்கிகளில் வராக்கடன் அதிகரிக்கும் , வங்கி புதிய திட்டங்களுக்கு கடன் அளிப்பது குறையும் இதனால் ஒரு தேக்கம் ஏற்படும் .

இன்னும் ஆறு மாதங்களில் சில மாற்றங்களை மத்திய அரசு கொண்டுவர வேண்டும் . அப்படி இல்லை என்றால் நிலைமை இன்னும் மோசமாகும் என்பதே நிபுணர்களின் கருத்து .......


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19851
இணைந்தது : 30/07/2009
மதிப்பீடுகள் : 4009

http://varththagam.lifeme.net/

Back to top Go down

பொருளாதார மந்தம்...10,000 ஊழியர்களை நீக்க பார்லே நிறுவனம் முடிவு?! Empty Re: பொருளாதார மந்தம்...10,000 ஊழியர்களை நீக்க பார்லே நிறுவனம் முடிவு?!

Post by T.N.Balasubramanian on Fri Aug 23, 2019 5:18 pm

புரிந்தது பாலாஜி .
cascading effect என்பார்களே அது போல்.
ஒரு காலத்தில் கை தொழில்களெல்லாம் நசிந்து தொழில் புரட்சி உண்டானது.
சமீப காலங்களில் Artificial Intelligence மூலம் வேலை வாய்ப்பை இழந்தவர்களும்
அதிகமாகி வருகிறது. ஜனத்தொகை அதிகமாகவும் போது அதற்கு தக்கபடி
வேலைவாய்ப்பும் அதிகமாகவேண்டும்.

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 26158
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9458

Back to top Go down

பொருளாதார மந்தம்...10,000 ஊழியர்களை நீக்க பார்லே நிறுவனம் முடிவு?! Empty Re: பொருளாதார மந்தம்...10,000 ஊழியர்களை நீக்க பார்லே நிறுவனம் முடிவு?!

Post by பாலாஜி on Fri Aug 23, 2019 7:04 pm

ஜிஎஸ்டி வரி விதிப்பு முறை விரைவில் எளிமையாக்கப்படும்: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

வங்கி வட்டி விகிதங்கள் குறையும்..! இ எம் ஐ குறையும்..

விற்பனையை அதிகரிக்க வியூகம்.. கார், வீடுகள் விலை குறைகிறது.. நிர்மலா சீதாராமன் அதிரடி அறிவிப்பு

தொழில்துறைக்கான மூலதன நிதி திரட்டும் முறைகள் எளிதாக்கப்படும். பொதுத்துறை வங்கிகளின் மூலதன ஊக்கத்திற்காக ரூ.70000 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19851
இணைந்தது : 30/07/2009
மதிப்பீடுகள் : 4009

http://varththagam.lifeme.net/

Back to top Go down

பொருளாதார மந்தம்...10,000 ஊழியர்களை நீக்க பார்லே நிறுவனம் முடிவு?! Empty Re: பொருளாதார மந்தம்...10,000 ஊழியர்களை நீக்க பார்லே நிறுவனம் முடிவு?!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை