உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» மங்கையர் திலகங்கள் 2 (தொடர்ந்தாலும் தொடரலாம் )
by சக்தி18 Today at 2:23 pm

» திரை இசையில் முருகன் பக்தி பாடல்கள்
by ayyasamy ram Today at 2:01 pm

» முகப்பில் தெரியா பிறந்த நாள்
by ஞானமுருகன் Today at 2:00 pm

» அப்பாவுக்கு மக்கள் வைத்த செக்.
by ayyasamy ram Today at 1:36 pm

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
by பழ.முத்துராமலிங்கம் Today at 12:56 pm

» Request
by vinotkannan Today at 12:48 pm

» வைரலாகும் மேக்கப் டெஸ்ட் புகைப்படம்: ஜெயலலிதாவாக மாறும் கங்கனா
by பழ.முத்துராமலிங்கம் Today at 12:36 pm

» 8 மாதமாக பேசாமல் கோபித்துக்கொண்டிருந்த மகளிடம் பேசுவதற்காக குளத்தை சுத்தம் செய்த தந்தை
by பழ.முத்துராமலிங்கம் Today at 12:33 pm

» பருவநிலை மாநாட்டை தவிர்த்தபோதும் மோடியின் உரையை கேட்பதற்காக ஐ.நா.வுக்கு வந்த டிரம்ப்
by பழ.முத்துராமலிங்கம் Today at 12:27 pm

» ராமராக ஹிருத்திக் ரோஷன், சீதையாக தீபிகா: 3 மொழிகளில் படமாகும் ராமாயணம்
by பழ.முத்துராமலிங்கம் Today at 12:25 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு
by ayyasamy ram Today at 10:12 am

» பாப் பாடகி சகோதரிகள் விமானத்தில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றம்
by ayyasamy ram Today at 10:09 am

» பழைய பாடல்கள் - காணொளி {தொடர் பதிவு}
by ayyasamy ram Today at 6:51 am

» என்னைத் தொட்டு அள்ளிக் கொண்ட மன்னன் பேரும் என்னடி
by ayyasamy ram Today at 6:38 am

» என்னாச்சு ayyasami ram
by சக்தி18 Yesterday at 9:31 pm

» சுபஸ்ரீ மரணம்
by T.N.Balasubramanian Yesterday at 6:21 pm

» நான்தான் லோக்கல்னு சொல்றேன்ல
by T.N.Balasubramanian Yesterday at 6:18 pm

» போட்டுத் தாக்கப் போகும் மிகக் கனமழை - வானிலை மையம் எச்சரிக்கை!
by T.N.Balasubramanian Yesterday at 5:50 pm

» இன்னும் மூணு நாள்ல வெங்காயம் விலை குறையுலன்னா என்னனு கேளுங்க... அமைச்சர் சவால்
by T.N.Balasubramanian Yesterday at 5:16 pm

» பூரிக்குள்ளே சின்னதா இரண்டு முட்டை இருக்குதே...!!
by T.N.Balasubramanian Yesterday at 4:36 pm

» டீச்சர் அம்மா - கவிதை
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» இது ரொம்ப ஆழமான ஏரி சார்...!!
by ayyasamy ram Yesterday at 2:00 pm

» சுயநல உலகம் நம்மை பார்த்துக் கேட்கும் ஒற்றைக் கேள்வி....!!
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» அதிக முறை சூடேற்றி சாப்பிடக்கூடாத உணவுகள்!
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» `ராமுவோடு ஜோடி சேர்ந்த ரைன்’!- வண்டலூரில் உலக காண்டாமிருக தினம் கொண்டாட்டம்
by ayyasamy ram Yesterday at 1:13 pm

» ஸ்ரீநகர் நீதிமன்றத்தில் 250 கேபியஸ் கார்பஸ் மனுக்கள் – விரைவில் தொடங்கும் விசாரணை !
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:31 pm

» நடிகை ராஷ்மிகா மந்தன்னா
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:27 pm

» அமெரிக்கா, கடலுக்கு அடியில், காதல், சொன்னவர், நீரில் மூழ்கி பலி
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:22 pm

» வயசென்ன வயசு… டோன்ட் கேர் ஜெனிலியா ரீஎன்ட்ரிக்கு திட்டம்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:18 pm

» சென்ட்ரல் ரயில் நிலையத்தின் மேற்கூரையில் சூரிய சக்தி மூலம் 2,400 யூனிட் மின்சாரம் உற்பத்தி: ஒரு நாளைக்கு 10 ஆயிரம் வரை சேமிப்பு
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:14 pm

» ஐ.ஏ.எஸ்., தேர்வில் சர்ச்சைக்குரிய கேள்வி
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:13 pm

» ஒரே நாள்... 2 லட்சம் பனைவிதைகள்... இயற்கை பாதுகாப்பில் பிரமாண்டம் காட்டிய இளைஞர்கள்!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:43 am

» "ஊக்கம்தான் வெற்றியின் முதல் படிக்கட்டு!" - அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:41 am

» Howdy Modi – மோடி நலமா
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:40 am

» முதலாம் உலகப் போரின் போது: ‘எம்டன்’ கப்பல் சென்னையில் குண்டு வீசி 105 ஆண்டுகள் நிறைவு - நினைவு கல்வெட்டில் மலர் தூவி மரியாதை
by சக்தி18 Yesterday at 11:01 am

» 20வது சர்வதேச இந்திய திரைப்பட விருது விழா
by ayyasamy ram Yesterday at 6:34 am

» 'காற்றின் மொழி' புரிகிறதே...
by ayyasamy ram Yesterday at 6:08 am

» கிலோ ரூ.70 ஆக உயர்வு: வெங்காய விலை உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை
by ayyasamy ram Yesterday at 5:56 am

» அமெரிக்காவில் இருந்து 50 லட்சம் டன் எரிவாயு இறக்குமதிக்கு ஒப்பந்தம் - பிரதமர் மோடி முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்து
by ayyasamy ram Yesterday at 5:51 am

» Howdy Modi
by ayyasamy ram Yesterday at 5:49 am

» சினி துளிகள்!
by ayyasamy ram Sun Sep 22, 2019 8:03 pm

» நடிகை அசினை விரைவில் ஹிந்திப் படத்தில் பார்க்கலாம்
by ayyasamy ram Sun Sep 22, 2019 8:00 pm

» தெரிஞ்சாயாராச்சும்சொல்லுங்களேன்...
by ayyasamy ram Sun Sep 22, 2019 6:55 pm

» பெரும் சப்தத்துடன் டமால் டுமீல் மழை பெய்யும்
by T.N.Balasubramanian Sun Sep 22, 2019 5:15 pm

» சிறுமியின் நெற்றியில் முத்தமிட்ட பைத்தான் வகை பாம்பு; வைரலான வீடியோ
by ayyasamy ram Sun Sep 22, 2019 4:05 pm

» காங்கிரஸ் கட்சியின் புதிய தலைமை அலுவலகம் இந்திரா பவன்; டிசம்பர் 28ல் திறப்பு விழா
by ayyasamy ram Sun Sep 22, 2019 4:00 pm

» ரூ.300 கோடி போதைப்பொருளுடன் வந்த படகை சுற்றிவளைத்த கடற்படை - மியான்மரை சேர்ந்த 6 பேர் கைது
by ayyasamy ram Sun Sep 22, 2019 3:57 pm

» சூர்யாவின் ‘காப்பான்’ - திரை விமரிசனம்
by சக்தி18 Sun Sep 22, 2019 2:18 pm

» பிரபாஸின் சாஹோ: திரை விமரிசனம்
by சக்தி18 Sun Sep 22, 2019 2:14 pm

» தணிக்கையில் யு சான்றிதழ்: செப்.27-ம் தேதி வெளியாகிறது நம்ம வீட்டுப் பிள்ளை
by ayyasamy ram Sun Sep 22, 2019 1:17 pm

Admins Online

`அன்பை வலியுறுத்தாத சமயம் சமயமில்லை' - எளிய வழியில் ஆன்மிகம் வளர்த்த கபீர்தாசர்

`அன்பை வலியுறுத்தாத சமயம் சமயமில்லை' - எளிய வழியில் ஆன்மிகம் வளர்த்த கபீர்தாசர் Empty `அன்பை வலியுறுத்தாத சமயம் சமயமில்லை' - எளிய வழியில் ஆன்மிகம் வளர்த்த கபீர்தாசர்

Post by ayyasamy ram on Tue Aug 20, 2019 5:38 am

கபீரின் போதனைகள் இந்து, இஸ்லாமிய மதங்களைக்
கடந்து சீக்கிய மதத்திலும் இடம் பெற்றன. சீக்கியர்களின்
தெய்வமும் புனித நூலுமான 'குருகிரந்த சாஹிப்'பில்
இடம் பெற்றிருக்கின்றன.

ஆக, மூன்று மதங்களும் போற்றும் மகத்தான ஞானியாக
அருள்புரிகிறார்.
-
`அன்பை வலியுறுத்தாத சமயம் சமயமில்லை' - எளிய வழியில் ஆன்மிகம் வளர்த்த கபீர்தாசர் Vikatan%2F2019-05%2Fc5c71ed0-0f5e-4d4d-a68c-7ffe59700386%2F131237_thumb
-
இந்திய தேசம் கண்ட மகா ஞானிகளில் ஒருவர்
கபீர்தாசர். எல்லா உயிர்களிலும் இறைவன் ஒளிர்கிறான்
என்பதை பல இடங்களில் மெய்ப்பித்த அவதாரப் புருஷர்.

1440-ம் ஆண்டு (1398-ம் ஆண்டு என்ற கருத்தும் உண்டு)
வாரணாசியில் கங்கைக்கரையில் பிறந்தவர் என்றும்,
இவரை தமால், ஜீஜா பீபி என்ற இஸ்லாமிய தம்பதிகள்
வளர்த்தனர் என்றும் இவரது சரிதை கூறுகிறது.

திருக்குரானைத் திறந்து பார்த்ததும் தென்பட்ட 'கபீர்'
என்ற சொல்லே இவருக்குப் பெயராகச் சூட்டப்பட்டது
. `கபீர்’ என்றால் `பெரிய’ என்று பொருள்.
ஸ்ரீமன் நாராயணரின் ஆணைப்படி ஸ்ரீசுகப்பிரம்மமே
கபீராக அவதரித்தார் என்றும் கூறப்படுகிறது.

நெசவாளி குடும்பத்தில் வளர்ந்த கபீர், இறையருளால்
நல்ல குரல் வளமும் பாடும் திறமையும் பெற்று
இறைவனைப் பாடி வளர்ந்துவந்தார். பாடுவதில் பெரு
விருப்பம் கொண்டிருந்ததால், நெசவு செய்வதில் சற்றும்
விருப்பமின்றி இருந்தார்.

இரவில் இவர் ஒரு முழம் நெய்தால், இவரது பாடலைக்
கேட்டபடியே இறைவன் ஒரு முழம் நெய்வாராம்.கபீருக்கு குருவென்று ஒருவரும் இல்லை. இதனால்
இவருக்கு எழுதவும் படிக்கவும் தெரியாமல்போனது.
ஆனாலும், ஞானம் வளர்ந்தபடியே இருந்தது. தக்க
வயதில் இவருக்குத் திருமணமாகி மகனும் மகளும்
பிறந்தார்கள்.

குடும்ப வாழ்வில் ஈடுபட்டாலும், இவருடைய மனம் ஆன்ம
ஞானத்தைத் தேடியபடி இருந்தது. அந்தத் தேடல் அவர்
இயற்றிய பாடல்களிலும் பிரதிபலித்தது. இஸ்லாமிய
முறைப்படி வளர்ந்தாலும், ராமரின்மீது பக்தி கொண்டு
வாழ்ந்தார்.

இரு மதங்களிலும் நிலவிய மூட நம்பிக்கைகளைக்
கண்டித்தார். இதனால் ஊர் மக்களால் தண்டிக்கப்பட்டார்.
இருந்தும் தன் நிலையிலிருந்து மாறவே இல்லை.

மகான் ராமானந்த தீர்த்தரின் சீடனாக ஆசைப்பட்டு அவரை
அணுகினார். ஆனால், தீர்த்தரின் சீடர்கள் அவரை உள்ளே
அனுமதிக்காமல் அனுப்பிவிட்டனர்.

அன்றிரவே ஸ்ரீராம, லட்சுமணர்கள் அந்த மடத்தைவிட்டுக்
கோபித்துக்கொண்டு போவதைப்போல தீர்த்தர் கனவு
கண்டார். உடனே அலறிக்கொண்டு, 'அவரை ஏன்
விரட்டினீர்கள்' என்று கங்கைக்கரை நோக்கி ஓடினார்.

ஓடிவரும் வழியில் படுத்துக்கொண்டிருந்த கபீரை மிதித்து
விட்டார் தீர்த்தர். அப்போது 'ராம ராம' என்று ஜபித்த
திருநாமமே கபீருக்கு முதல் வேத பாடமானது. ஒருமுறை
ராமானந்த தீர்த்தரை வாதத்துக்கு அழைத்தார் கோரக்கர்.
தனது ஆழ்ந்த குருபக்தியின் துணையுடன் கோரக்கரை
வாதத்தில் வெற்றிகொண்டார் கபீர்.

குருநாதர் மெச்சும் சீடனாக அவர் விளங்கினார்.
-
--------------------------
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 48494
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12398

View user profile https://rammalar.wordpress.com/

Back to top Go down

`அன்பை வலியுறுத்தாத சமயம் சமயமில்லை' - எளிய வழியில் ஆன்மிகம் வளர்த்த கபீர்தாசர் Empty Re: `அன்பை வலியுறுத்தாத சமயம் சமயமில்லை' - எளிய வழியில் ஆன்மிகம் வளர்த்த கபீர்தாசர்

Post by ayyasamy ram on Tue Aug 20, 2019 5:41 amநெய்த துணிகளை விற்று வந்தால்தானே குடும்பத்தைப்
பராமரிக்க முடியும்? எனவே, கபீர்தாசர் தான் நெய்த
துணியை விற்கச் செல்வது வழக்கம். அப்படி ஒருநாள்
சென்றபோது மாயக் கண்ணனின் லீலையால் ஒரு
பெரியவர் அவரிடம் வந்து துணியை விலைக்குக்
கொடுக்கும்படி கேட்டார்.

விலை பேசிக்கொண்டிருந்தபோதே, அந்தப் பெரியவர்
துணியைப் பிடுங்கிக்கொண்டு செல்ல, அவரைத்
தொடர்ந்து ஓடிய கபீர், ''ஐயா, துணிக்கு விலை
கொடுங்கள்'' என்று கேட்டார். பெரியவர் பணம் கொடுக்க
மறுத்ததும், கபீர் பெரியவரிடமிருந்த துணியைப்
பிடுங்கினார்.

துணி இரண்டாகக் கிழிந்து ஒரு பாதி பெரியவரின்
கையிலும், மறு பாதி கபீரின் கையிலும் வந்துவிட்டது.
பெரியவரின் கையில் இருக்கும் துணிக்கான விலையை
மட்டுமாவது கொடுக்கும்படி கபீர் கேட்டார்.

அந்தப் பெரியவரோ, ''நான் இந்த வஸ்திரத்தை
கண்ணனுக்காகக் கேட்கிறேன். இதற்குப் பணம் கேட்காதே''
என்ற பெரியவர், கண்ணனின் பெருமைகளை விளக்கிக்
கூறியதுடன், ''இனி யார் வந்து கண்ணனின் பெயரைச்
சொல்லிக் கேட்டாலும் அவர்களுக்குத் துணியைக் கொடுத்து
விடு'' என்று கூறினார்.

கபீர் நெய்த துணிகளை விற்கச் செல்லும்போதெல்லாம்,
கண்ணனின் லீலையின் காரணமாக யாரேனும் ஒருவர்
வந்து கண்ணனின் பெயரைச் சொல்லி, துணியை வாங்கிச்
செல்வது வழக்கமாகிவிட்டது. இதனால் கபீருக்கு வருமானம்
இல்லாமல் குடும்பம் வறுமையில் தவித்தது.


ஒருமுறை கபீரின் வீட்டுக்கு இறைவனடியார்கள்
100 பேர் உணவு வேண்டி வந்தனர். வறுமையில் வாடிய கபீர்,
அவர்களின் பசியை எப்படியும் போக்க வேண்டும் என்று
எண்ணினார். எனவே, தன் மனைவியை ஒரு செல்வந்தரின்
வீட்டில் வீட்டு வேலை செய்வதற்கு ஒப்படைத்துவிட்டு,
அதன் மூலம் பெற்ற பணத்தைக்கொண்டு
இறைவனடியார்களுக்கு உணவிட்டார்.

அன்று இரவே ஓர் அரசு அதிகாரி, அந்தச் செல்வந்தரின்
வீட்டுக்குச் சென்று கபீரின் மனைவியை மீட்டு வந்து வீட்டில்
சேர்ப்பித்தார். மனைவி திரும்பி வந்ததைக் கண்டு கோபம்
கொண்ட கபீர், மனைவியை அடிக்கக் கையை ஓங்கினார்.

அப்போது அந்த அதிகாரி, ''நான்தான் உன் மனைவியை
மீட்டு வந்தேன். வேண்டுமானால் என்னை அடி'' என்று
கூறினார். கபீர் அவரை அடிக்கக் கையை ஓங்கியபோது,
அங்கே அந்த அதிகாரி காணவில்லை.

மாறாக ஶ்ரீராமர் காட்சி தந்தார். இறைவனின் தரிசனம்
கண்ட கபீர் கலங்கிப்போய் ராமனைத் தொழுது பாடல்கள்
புனைந்தார். இப்படி கபீரின் வாழ்வில் ஆயிரம் ஆயிரம்
சம்பவங்கள் இறையருளால் நடைபெற்றுக்கொண்டு
இருந்தன.

இதனால் பழுத்த ஆன்ம ஞானியாக விளங்கினார்
கபீர்தாசர். `எல்லா உயிரிலும் ஆண்டவன் உறைகிறான்;
அவன் எந்த ஆலயத்திலும் இல்லை' என்று உபதேசித்தார்.

கபீரின் மகன் கமாலும் சிறந்த ஞானியாக விளங்கினார்.
எழுதப் படிக்கத் தெரியாத கபீரின் பாடல்கள் மக்களின்
மனங்களில் ஆழப் பதிந்துவிட்டன.

வாரணாசியில் ஏழை எளிய மக்கள் இவருடைய பாடல்களை
மனப்பாடம் செய்துகொண்டார்கள். அதுவே பின்னாளில்
நூலாக வெளிவர உதவியது.

500 ஆண்டுகளுக்கு முன்னரே பல புரட்சிகரக் கருத்துகளைக்
கூறிய மகான் கபீர்தாசர். சீதா, ராம திவ்ய தரிசனத்தைப்
பலமுறை கண்டவர்.
-
----------------
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 48494
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12398

View user profile https://rammalar.wordpress.com/

Back to top Go down

`அன்பை வலியுறுத்தாத சமயம் சமயமில்லை' - எளிய வழியில் ஆன்மிகம் வளர்த்த கபீர்தாசர் Empty Re: `அன்பை வலியுறுத்தாத சமயம் சமயமில்லை' - எளிய வழியில் ஆன்மிகம் வளர்த்த கபீர்தாசர்

Post by ayyasamy ram on Tue Aug 20, 2019 5:45 am


``ஜபமாலையை உருட்டுகிறாய்
நெற்றி நிறைய விபூதியைப் பூசிக்கொள்கிறாய்.
கற்றைச் சடாமுடியைக் கட்டிக்கொள்கிறாய்.
என்ன செய்தால் என்ன? உன் நெஞ்சில் ஈரம் இல்லை.
அன்பு இல்லை. நீ எப்படி இறைவனை அடைவாய்?’

---

என்று போலியான மதவாதிகளைக் கண்டித்து
பாடினார்.

1518-ம் ஆண்டு இவர் இறைவனைத் துதித்தவாறே
மறைந்தார். இருந்தபோது இவரைக் கொண்டாடாத
இந்து, இஸ்லாமிய மக்கள், இவரின் இறந்த உடல்
தங்களுக்கே சொந்தம் என உரிமை கொண்டாடினர்.

ஒரு பெரியவர், ''ஏன் வீணாகச் சண்டையிட்டுக்
கொள்கிறீர்கள்? நீங்கள் இருவரும் தலா ஒரு
போர்வையைக் கொண்டு உடலைப் போர்த்திவிட்டுச்
செல்லுங்கள். இரண்டு நாள்கள் பொறுத்து வந்து
பாருங்கள்'' என்று கூறினார்.

அதன்படி இரு தரப்பினரும் உடலின் வலப் பகுதியையும்
இடப் பகுதியையும் போர்வை கொண்டு போர்த்தி
விட்டுச் சென்றனர். இரண்டு நாள்கள் கழித்து அவரது
திருவுடலை எடுத்துச் செல்ல வந்தனர்.

போர்வையை எடுத்ததும் அவர்கள் கண்ட காட்சி
ஆச்சர்யமூட்டுவதாக இருந்தது. ஆம். கபீரின் உடல்
மறைந்து, அங்கே புத்தம் புது மலர்கள் இருந்தன.

ஆம், இறைவனுக்காகப் பாமாலைகள் பாடிப் பாடிப்
பரவசமடைந்த அவரது திருமேனி பூக்களாக உருமாறி
இருந்தன. இரு தரப்பினரும் மலர்களைக் கொண்டு
சென்றனர்.

கபீரின் போதனைகள் இந்து, இஸ்லாமிய மதங்களைக்
கடந்து சீக்கிய மதத்திலும் இடம் பெற்றன. சீக்கியர்களின்
தெய்வமும் புனித நூலுமான 'குருகிரந்த சாஹிப்'பில்
இடம்பெற்றிருக்கின்றன. ஆக, மூன்று மதங்களும்
போற்றும் மகத்தான ஞானியாக அருள்புரிகிறார்.

இவரது பாடல்கள் இன்றும் இந்திய தேசமெங்கும்
பாடப்படுகின்றன. எளிமையான ஆன்மிக கருத்துகளைக்
கொண்ட இவருடைய பாடல்கள் ரவீந்திரநாத் தாகூர்,
மகாத்மா காந்தி போன்ற பலரையும் கவர்ந்திழுத்தது.
கபீரின் வழியொற்றி வாழ்ந்த மக்கள் 'கபீர் பந்திக்கள்'
என்று வடக்கே வாழ்கிறார்கள்.

"நெசவு என்ன; பாவு என்ன?
போர்வை நெய்யும் நூல்கள்தான் என்ன?
எட்டு கமலங்கள், ஈரைந்து ராட்டினங்கள்!
ஐந்து மூலப் பொருள்கள். மூன்று போர்வை குணங்கள்.
எல்லாம் சேர்த்து பரமன் போர்வை செய்ய பத்து மாதங்கள்"


என்ற இவருடைய தத்துவப் பாடல் காந்தியைப் பெரிதும்
கவர்ந்த ஒன்று. சூபியிசம், சித்தர் பாடல்களைப்போலவே
பல பாடல்களை இயற்றி, ஆன்மிகம் தழைக்கச்
செய்ததுடன் மக்களின் மனங்களில் பேதங்களைக்
களைந்தவர் மகான் கபீர்தாசர்.

இந்த மகானைப் போற்றும் வகையில், மத்திய அரசின்
ஜவுளித்துறை சிறந்த நெசவாளருக்கான 'சந்த் கபீர்' விருதை
ஆண்டுதோறும் வழங்கி வருகிறது. 'அன்பை வலியுறுத்தாத
சமயம் சமயமில்லை' என்று போதித்த மகா ஞானி கபீர்
அமரத்துவம் அடைந்த 500 வது ஆண்டு இது. அவருடைய
வாழ்வை, கருத்துகளை நெஞ்சில் ஏந்தி சக உயிர்களை
நேசிக்க வேண்டும் என்பதே அந்த ஞானியின் வாழ்க்கை
சொல்லும் பாடம்!
-
------------------------------------
மு.ஹரி காமராஜ்
நன்றி-விகடன்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 48494
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12398

View user profile https://rammalar.wordpress.com/

Back to top Go down

`அன்பை வலியுறுத்தாத சமயம் சமயமில்லை' - எளிய வழியில் ஆன்மிகம் வளர்த்த கபீர்தாசர் Empty Re: `அன்பை வலியுறுத்தாத சமயம் சமயமில்லை' - எளிய வழியில் ஆன்மிகம் வளர்த்த கபீர்தாசர்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை