உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» ஈகரையை படிக்க மட்டும் செய்பவர்கள் இங்கே செல்லலாம் -RSS
by சக்தி18 Today at 9:55 pm

» வாழ்த்தலாம் வாருங்கள் உறவுகளே, க்ரிஷ்ணாம்மா அவர்களின் பிறந்த தினம்.
by சக்தி18 Today at 9:50 pm

» கடந்த 5 ஆண்டுகளில் 2200 மத்திய ஆயுதப்படை வீரர்கள் தற்கொலை
by ayyasamy ram Today at 9:11 pm

» களத்தில் மட்டும் தான் வீரன்: கருணை காட்டிய காளை
by T.N.Balasubramanian Today at 7:48 pm

» இவை யாவும் உங்களுடன் பகிரும் இன்பம் கொடு.---- [b]மீள் பதிவு [/b]
by T.N.Balasubramanian Today at 7:05 pm

» ஆறாத் துயரம் மாறாதோ ?
by T.N.Balasubramanian Today at 7:00 pm

» கணிதப் புதிர்- தொண்ணூறிலிருந்து எழுபத்தைந்து...
by T.N.Balasubramanian Today at 6:43 pm

» அவரை பிரிந்ததால் போதைக்கு அடிமையானேன் - விஷ்ணு விஷால்
by T.N.Balasubramanian Today at 6:39 pm

» சென்னையில் புதுப்பொண்ணு……………..அன்று
by சக்தி18 Today at 2:47 pm

» இதப்படிங்க முதல்ல...(சினிமா செய்திகள்- வாரமலர்)
by சக்தி18 Today at 12:58 pm

» அச்சம் என்பது மடமையடா!
by சக்தி18 Today at 12:47 pm

» சினிமா- பழைய பாடல்கள்- காணொளிகள்
by சக்தி18 Today at 12:34 pm

» கணினி/இணைய உலகில் ஒரு சில துளி டிப்ஸ்
by சக்தி18 Today at 12:31 pm

» அருமையான வாழைப்பூ புளிக்குழம்பு
by ayyasamy ram Today at 10:38 am

» தூங்குவதும் தனி ‘டயட்’ தான்
by ayyasamy ram Today at 10:36 am

» வேலன்:-வீடியோவில் உள்ள சப் டைடிலை நீக்கிட-MKV Tool Nix
by velang Today at 7:45 am

» வேலன்:-இரண்டு தேதிகளுக்கு இடைப்பட்ட நாட்களை கணக்கிட-Calculator Days
by velang Today at 7:43 am

» இந்தியா-ஆஸ்திரேலியா மோதும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி: பெங்களூருவில் இன்று நடக்கிறது
by ayyasamy ram Today at 7:26 am

» செல்ஃபி மோகத்தால் இளம் பெண்ணுக்கு முகத்தில் 40 தையல்
by ayyasamy ram Today at 7:22 am

» யானை சிலை கோயில்
by ayyasamy ram Today at 7:13 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு
by ayyasamy ram Today at 6:59 am

» சீனாவை மிரட்டும் 'கொரனோ' வைரஸ்: கோவை விமான நிலையத்தில், 'அலர்ட்'
by ayyasamy ram Today at 6:54 am

» கார் விபத்தில் காயமடைந்த நடிகை ஷபானா ஆஸ்மி குணமடைய மோடி பிரார்த்தனை
by ayyasamy ram Today at 6:53 am

» வசூல்ராஜா பட பாணியில் தேர்வெழுத வந்த இளைஞர்
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» ஈகரையில் இந்து என்ற தலைப்பில் வந்த..........
by T.N.Balasubramanian Yesterday at 10:18 pm

» இரட்டை வேடத்தில் யோகிபாபு
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» நயன்தாராவுக்கு அண்ணன்
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» விண்ணைத்தொடும் கட்டடங்கள்
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» ஆஹா கோதுமை ரெசிப்பிகள்
by ஜாஹீதாபானு Yesterday at 5:16 pm

» கண்ணதாசன் பாடல்களில் பிடித்த சில வரிகள்
by ayyasamy ram Yesterday at 5:13 pm

» திரைப்பட பாடல் வரிகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:09 pm

» நல்லவை சூழ்ந்திருக்க அல்லாதவை அணுகுமா?
by ayyasamy ram Yesterday at 4:48 pm

» ஈசாப் கதைப் பாடல்கள் - ஜாதி நாய
by ayyasamy ram Yesterday at 4:24 pm

» நல்லவை முப்பது
by ayyasamy ram Yesterday at 4:21 pm

» தேன் தினை லட்டு
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» ஊக்கம் தரும் அறிவுரைகள்
by ayyasamy ram Yesterday at 1:04 pm

» பாலித்தீன் சூட்!
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» மகிழ வைப்பதே சிறந்த ஓவியம்!
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» உலகின் மிகச்சிறிய கின்னஸ் சாதனையாளர் காலமானார்
by ayyasamy ram Yesterday at 10:44 am

» பிரபாஸின் அடுத்த படம் பற்றிய அறிவிப்பு
by ayyasamy ram Yesterday at 10:39 am

» நல்ல நண்பர்கள் ஏன் தேவை?
by ayyasamy ram Yesterday at 7:23 am

» பாரதீய ஜனதா கட்சியின் அகில இந்திய தலைவராகிறார் ஜே.பி.நட்டா: 20-ந்தேதி தேர்தல்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» சிந்தனையாளர் முத்துக்கள்!
by ayyasamy ram Yesterday at 6:54 am

» கோழி முட்டையிலிருந்து இன்சுலின்!
by ayyasamy ram Yesterday at 6:52 am

» பாரத ரத்னா விருதை விட உயர்ந்தவர் மஹாத்மா: உச்சநீதிமன்றம் கருத்து
by ayyasamy ram Yesterday at 6:46 am

» இந்தியா அசத்தல் வெற்றி * தவான், கோஹ்லி, ராகுல் அபாரம்
by ayyasamy ram Yesterday at 6:44 am

» மோடிக்கு குடியுரிமை இருக்கா?: ஆர்டிஐ.,யில் கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:40 am

» அமெரிக்காவில் ஹிந்தி பேசுவோர் அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:38 am

» நாவல்கள் வேண்டும்
by saravanapriyaprakash Fri Jan 17, 2020 11:33 pm

» 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .
by sethu756 Fri Jan 17, 2020 8:49 pm

Admins Online

தந்தைக்குத் துணை தேடிய தனயன் - மகாபாரதம்

தந்தைக்குத் துணை தேடிய தனயன் - மகாபாரதம் Empty தந்தைக்குத் துணை தேடிய தனயன் - மகாபாரதம்

Post by ayyasamy ram on Sun Aug 18, 2019 7:37 pm

ப்ரதீபன் என்ற அரசன் பரதகண்டத்தை ஆண்டு வந்தான்.
அவன் அமைதியானவன். ஜனங்கள் மீது மிகுந்த
பிரியமுள்ளவன். யார் எது கேட்டாலும் வழங்கக்கூடியவன்.

காது கொடுத்து பிறர் குறைகளை கேட்கக்கூடியவன்,
சாதுவானவன், மஹாபிஷேகன் தேவசபையிலிருந்து
வெளியேறி ப்ரதீபனுக்கு மகனாகப் பிறந்தார்.

சாந்தமான தகப்பனுக்கு பிறந்ததால்
அவனுக்கு சாந்தனு என்று பெயர் இடப்பட்டது.
-
தந்தைக்குத் துணை தேடிய தனயன் - மகாபாரதம் 15
-
ஆனால், கங்கைக் கரையில் ப்ரதீபன் அமர்ந்திருந்தபோது
அவன் குணத்தால் ஈர்க்கப்பட்டு கங்கை மேலெழுந்து
அவனுடைய இடது தொடையில் அமர்ந்தாள். என்னை
மணம் செய்து கொள்ளுங்கள் என்று கேட்டாள்.

ப்ரதீபன் சிரித்தபடி மறுத்தான். ‘‘நீ என்னுடைய இடது
தொடையில் வந்து உட்கார்ந்து கொண்டாய்.
இது மகளுக்கும், மருமகளுக்கும் உண்டான இடம். நான்
உன்னை மணம் புரிந்துகொள்ள முடியாது. ஆனால்,
மருமகளாக ஏற்கிறேன்.

என்னுடைய மகனுக்கு நீ மனைவியாக வா. அதற்கு
இப்பொழுது காலம் இல்லை. சரியான காலத்தை புரிந்து
கொண்டு என் மகனுக்கு துணையாக வா,’’ என்று
வேண்டினான். கங்கை அவனை வணங்கி விடைபெற்றாள்.

அந்த கங்கைதான் சாந்தனு முன்பு அழகாக நடந்து வந்தாள்.
சாந்தனுவால் கவரப்பட்டு அவன் எதிரே நின்றாள். எந்த
ஒரு சந்திப்பும் தானாக நடைபெறுவதில்லை. அதற்கு
மூலகாரணங்கள் இருக்கின்றன. ஒரு மனிதனை சந்தித்து
பேசுவதும், அவரை நட்பாக்கிக் கொள்வதும், உறவாக்கிக்
கொள்வதும், முன்வினையின் பயனாகவே நடைபெறுகிறது.

இன்றளவும் அது தொடர்கிறது.நதி, பெண்ணாக வந்தால்
யாருக்கு மனம் நடுங்காது இருக்கும்? எழிலே உருவாக
இருக்கும் பெண் எதிரே வந்து சிரித்தால் யார் மயங்காது
போக முடியும்? சாந்தனு பிதற்றத் துவங்கினான்.

‘‘நீ யாராய் இருந்தால் என்ன. நீ கங்கையே ஆகுக. அல்லது
தேவகன்னிகையாகவோ, அப்ஸரசாகவோ அல்லது
தேவலோகத்து நடனமாடும் பெண்ணாகவோ இரு.

அதைப்பற்றி எனக்கு கவலையில்லை. உன் அழகு என்னை
பித்தனாக்குகிறது. உன்னை மணம் புரிய விரும்புகின்றேன்.
எனக்கு மனைவியாகிவிடு. பரதகண்டத்தின் மிகப்பெரிய
மன்னன் நான்’’ என்று தன்னைப் பற்றி சொல்லி அவளை
மணம்புரிய கெஞ்சினான்.
-
--------------------
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 52068
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12710

https://rammalar.wordpress.com/

Back to top Go down

தந்தைக்குத் துணை தேடிய தனயன் - மகாபாரதம் Empty Re: தந்தைக்குத் துணை தேடிய தனயன் - மகாபாரதம்

Post by ayyasamy ram on Sun Aug 18, 2019 7:40 pm


கங்கை அழகாக சிரித்தாள். ‘‘எனக்கும் ஆசையாகத்தான்
இருக்கிறது. ஆனால், என்னை திருமணம் செய்ய சில
நிபந்தனைகள் உண்டு.’’ ‘‘என்ன நிபந்தனையானாலும்
சொல். அதை ஏற்கிறேன்.’’

‘‘என் பிரியத்திற்கு மாறாக எதையும் செய்யக்கூடாது.’’
‘‘இது ஒரு நிபந்தனையா? எந்த புருஷன் இத்தனை அழகான
மனைவிக்கு எதிராக இருப்பான், அவள் பிரியத்தை மறுப்பான்?
இது நிபந்தனையே அல்ல.’’‘‘இல்லை. நான் எது செய்தாலும்
அதை தட்டிக் கேட்கக்கூடாது. அது நல்லதோ, தீயதோ அதை
நீங்கள் ஏற்கத்தான் வேண்டும்.’’

‘‘செய். எது வேண்டுமானாலும் செய். ஆனால், எனக்கு
மனைவியாக இருந்து விடு. என்னோடு மகிழ்ச்சியோடு உறவு
கொள்’’ என்று கெஞ்சினான். மோகம் இப்படித்தான் பேச
வைக்கும்.

பெண்ணின் அழகாலும், பேச்சாலும் கவரப்பட்ட ஆண் எந்த
நிபந்தனைக்கு வேண்டுமானாலும் அடிபணிவான். யாரை
வேண்டுமானாலும் அவள் பொருட்டு பகைத்துக் கொள்வான்.
கங்கை தன் வலக்கையை நீட்டினாள்.

அதை சாந்தனு இறுக பற்றிக் கொண்டான். அவர்கள்
கொஞ்சிக் குலாவி குடித்தனம் நடத்தினார். குள்ளக்குளிர நீரில்
அமிழ்வதும் ஒரு பெண்ணோடு கூடுவதும் சுகம்தானே!
குளிரினாலேயே உடம்பின் உஷ்ணம் அதிகமாகிறது. உடம்பின்
உஷ்ணம் அதிகமாவதாலேயே காமம் தலைக்கு ஏறுகிறது.
அந்த காமம் பெண்ணினால் தணிகிறது. பிறகு மறுபடியும்
சீறுகிறது. இது அழகான இயற்கை விளையாட்டு.

அவர்கள் விளையாடினார்கள். கங்கை கருவுற்றாள்.
கரு வளர்ந்தது. குழந்தை பிறந்தது. கங்கை எடுத்துக்கொண்டு
நதிக்கரைக்கு போனாள். வீசி எறிந்தாள். பின்னால் போன
சாந்தனு திடுக்கிட்டான். ‘‘என்ன இது’’ என்று திக்கித் திணறி
பேச ஆரம்பித்தபோது கங்கை திரும்பி பார்த்தாள்.

அவன் ‘ஒன்றும் இல்லை’ என்று அடக்கிக் கொண்டான்.
ஒன்றல்ல இரண்டல்ல. ஏழுமுறை இது நடந்தது. அஷ்டவசுக்கள்
பிறந்தார்கள். அவர்கள் சொல்படி தண்ணீரில் கங்கை எறிந்தாள்.
கடைசி குழந்தையை வீசும்போது சாந்தனுவால் தாங்க
முடியவில்லை.

‘‘வேண்டாம். இந்த குழந்தையை கொல்லாதே’’ என்று
கெஞ்சினான். கங்கை திரும்பினாள். ‘‘இல்லை. இதை
உங்களுக்காகவே கொடுக்கிறேன். உங்கள் அன்புக்காக
கொடுக்கிறேன்.

அஷ்டவசுக்களின் சாபத்தை நான் தீர்த்து வைத்தேன்.
எட்டாவதாகப் பிறந்த இந்த குழந்தை அஷ்டவசுக்களின்
ஆசீர்வாதத்தை பெற்றவன். அவர்களுடைய சக்தி முழுவதும்
இந்தக் குழந்தையின் மீது இருக்கும். என்னைவிட குழந்தையின்
பாசம் உனக்கு அதிகமாக இருப்பதால் இந்தக் குழந்தையை
உனக்கு பரிசாகத் தருகிறேன்.

எனக்கு விடை கொடு. நான் போய் வருகிறேன்.’’

‘‘என் குழந்தையை என்னிடம் கொடு,’’ மிகுந்த பாசத்தோடு
சாந்தனு கெஞ்சினான்.

‘‘இல்லை. உன்னால் இவனை வளர்க்க இயலாது. இவன்
வலிவை உன்னால் தாங்க இயலாது. இவனை நான் வளர்க்கிறேன்.
இந்த காங்கேயன் என்னிடமே இருக்கட்டும். தக்க வயது வரும்
போது உன்னிடம் அவனை அனுப்புகிறேன்.

இவனை வளர்க்க முயற்சி செய்தால் உன்னால் ராஜ்ய
காரியங்களை கவனிக்க இயலாது. எனவே, இவனை என்னிடம்
விட்டுவிடு. நிச்சயம் ஒருநாள் அவன் உன்னிடம் வருவான்.
கைக்குழந்தையோடு கங்கை நீரில் இறங்கினாள். மறைந்தாள்.

சாந்தனு துக்கித்தான். என்ன செய்வது என்று தெரியாமல்
தனக்குள்ளாகவே புலம்பிக்கிடந்தான். மெல்ல தேறினான்.
பல வருடங்கள் கடந்தன. ஒருநாள் கங்கைக்கரை ஓரம் போய்க்
கொண்டிருந்தபோது கங்கை நீர் வற்றியிருப்பதைக் கண்டான்.

என்ன காரணம் என்று தெரியாமல் கங்கை முகத்துவாரம்
நோக்கி ஓடினான். கங்கை பொங்கி வரும் இடத்தில்
ஒரு இளைஞன் அடுக்கடுக்காக அம்புவிட்டு கங்கையின்
போக்கை தடுத்துக் கொண்டிருந்தான். எங்கோ பார்த்தது
போல் இருக்கிறதே என்ற ஆவலோடு அவனை அணுக,
அவன் காங்கேயன் என்கிற கங்கதத்தன் என்பது புரிந்தது.
தன் மகன் என்பது தெரிந்தது.

பார்த்துக் கொண்டிருக்கும்போதே அந்தப் பிள்ளை
காட்டுக்குள் மறைந்து போனான். அவன் போகின்ற வேகத்தை
பார்த்தால் அவனைத் தேடுவது கடினம் என்று தெளிவாகத்
தெரிந்தது.

அவனைக் கண்ட திகைப்பு உடம்பை விட்டு நீங்காமல் இருந்தது.
சாந்தனு என்ன செய்வதென்று தெரியாமல் அந்த இளைஞன்
எய்த அம்பை பிடுங்கிப் பார்க்க அது எளிதாக இல்லை. மிக
உறுதியாக ஆழமாக அது சொருகப்பட்டிருந்தது.

சட்டென்று நதியின் போக்கு மாறியது. குளிர் காற்று வீசியது.
மெல்ல மேகம் கவிழ்ந்தது போல் பனி படர்ந்தது. நதியின் நடு
ஆழத்திலிருந்து ஒரு பெண் நடந்து வந்தாள். அவள்
அம்புகளைத் தாண்டி கரை ஏறினாள்.

கணுக்கால் ஜலத்தில் கால் வைத்து சாந்தனு இருந்த இடத்திற்கு
வந்தாள். அந்தப் பிள்ளை வில் வளைத்தான். ஒற்றை அம்பை
வேகமாக அடித்தான். அந்த அம்பு அடி ஆழத்திற்குச் சென்று
நீரின் வேகத்தை தடுத்த எல்லா அம்புகளையும் துணித்து
மறுகரைக்குப் போய் நின்றது. நதி சடேரென்று எகிறி குதித்து
அவர்களை தாண்டி போயிற்று.
-
---------------------------
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 52068
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12710

https://rammalar.wordpress.com/

Back to top Go down

தந்தைக்குத் துணை தேடிய தனயன் - மகாபாரதம் Empty Re: தந்தைக்குத் துணை தேடிய தனயன் - மகாபாரதம்

Post by ayyasamy ram on Sun Aug 18, 2019 7:44 pm


கங்கதத்தன் கரையேற அவர்கள் இருவரும் பின்
தொடர்ந்தார்கள். கங்கை கைகூப்பி வணங்கினாள்.
‘‘நான் கங்கை. நினைவு இருக்கிறதா’’ மெல்லிய
குரலில் கேட்டாள். சாந்தனு புரிந்து கொண்டான்.

‘‘ஆமாம்’’ என்றான்.‘‘மன்னரே தாங்கள் என்னிடமிருந்து
பெற்ற எட்டாவது புதல்வன் இவன்தான். இவனை நான்
வளர்த்து பெரியவனாக்கிவிட்டேன். பல்வேறு ஆயுதங்களில்
இவனுக்கு பயிற்சி இருக்கிறது. இவனை நல்லபடி நான்
வளர்த்திருக்கிறேன். இவனை நீங்கள் அழைத்துச் செல்லுங்கள்.

மிகுந்த பலசாலியான இந்த புதல்வன் வசிஷ்டரிடம்
வேதங்களை படித்து விட்டான். சாஸ்திர வித்தையிலும்
பண்டிதனாகிவிட்டான். மன்னா, இவன் போரில் இந்திரனுக்கு
நிகரானவன். இவனை தேவரும், அசுரரும் மதிக்கிறார்கள்.
நீதி சாஸ்திரத்தை தெளிவாக அறிந்தவன். பிரகஸ்பதி அறியும்
சாஸ்திரத்தை தங்கள் மகன் முழுமையாக அறிந்துள்ளான்.
ஜமதக்னியின் புதல்வன் பரசுராமன் அறிந்த அஸ்திரவித்தை
அத்தனையும் என் மகனிடம் இருக்கிறது.

இவன் ராஜதர்மத்திலும், பொருளாதாரத்திலும் பெரும்
பண்டிதனாவான். என் மகனும், மிகப் பெரிய வில்லாளியுமான
இவனை நீங்கள் வீட்டிற்கு அழைத்துச் செல்லுங்கள்.’’

அவள் தன் மகனை தழுவிக் கொண்டாள். உச்சி முகர்ந்து
விடை கொடுத்தாள். சாந்தனு தன் வலது கை நீட்டி தன் மகனை
பெற்றுக்கொண்டு தன்னுடைய தலைநகரான
அஸ்தினாபுரத்திற்கு அவனை அழைத்து வந்தார். கங்கை
அவர்கள் போகும்வரை அங்கேயே நின்று பிறகு மெல்ல நீரில்
இறங்கி மறைந்தாள்.

காங்கேயனுக்கு தாயின் பிரிவு துக்கமளித்தாலும் தனக்கு
வேறு கடமைகள் இருக்கின்றன என்ற எண்ணத்தோடு இறுகிய
முகத்தோடு தந்தையை பின் தொடர்ந்தான். உறுதியும்,
கம்பீரமும், சாகசமும் மிக்க அந்தப் பிள்ளையை வியப்போடு
பார்த்துக்கொண்டு சாந்தனு அவனை தன் தலைநகருக்கு
அழைத்து வந்து இளவரசு பட்டாபிஷேகம் செய்தார்.
ராஜ்ய விவகாரங்களிலிருந்து இனி விட்டேத்தியாக இருக்கலாம்
என்ற எண்ணத்தை அடைந்தார்.

பட்டமேற்ற நாள் முதல் அஸ்தினாபுரத்தை பம்பரமாகச் சுற்றி
பரத கண்டத்தின் பல்வேறு நகரங்களுக்கு பயணப்பட்டு
தன்னுடைய கம்பீரத்தை காங்கேயன் காட்டினான். இவர்
ஆளுமையில் தவறே செய்ய முடியாது என்ற எண்ணத்திற்கு
அதிகாரிகள் வந்தார்கள்.

நீதியோடு வாழ்வதுதான் நல்லது. அதுதான் நிம்மதி என்ற
கொள்கையை மக்கள் கடைப்பிடித்தார்கள்.அஸ்தினாபுரத்தை
தலைநகராகக் கொண்ட சாந்தனுவின் தேசம் மிகச் சிறந்த
வளர்ச்சியை காங்கேயனால் அடைந்தது. நான்கு ஆண்டுகள்
அமைதியாகக் கடந்தன.

சாந்தனு இம்முறை யமுனை நதிக்கரையை ஒட்டி தன்
பயணத்தை துவக்கியபோது திடீர் என்று ஒரு நறுமணம்
முகத்தை தாக்கியது. எங்கிருந்து வருகிறது என்று ஆவேசப்பட்டு
அதைத்தேட முற்படுகையில் யமுனையின் கரை ஓரமாக ஒரு
படகில் ஒரு அழகானப் பெண் படகு செலுத்த தயாராக இருந்தாள்.
சாந்தனு அவசரமாகப் போய் அவள் படகில் ஏறிக்கொண்டான்.

‘‘அழகியே நீ யார்? உன்னிலிருந்து அற்புதமான நறுமணம்
வீசுகிறது. பேரழகியாகவும் திகழ்கிறாய். நீ எந்த தேசத்து
இளவரசி?’’ என்று கேட்க, அவள் வாய்விட்டு சிரித்தாள்.
அந்தச் சிரிப்பில் மன்னன் மயங்கினான்.

‘‘நான் ஒரு வேடுவப்பெண். பெயர் சத்யவதி. என் தந்தையார்
நிஷாதராஜன். அவருடைய ஆணைப்படி தர்மத்திற்காக படகு
செலுத்துகிறேன். யாரிடமும் எதன் பொருட்டும் காசு
வாங்குவதில்லை.’’ அந்த பெண்ணிடம் யாசிக்க மன்னன்
மனதளவில் தயாராகி ஆனால், முடிவை மாற்றிக்கொண்டு உன்
தந்தையிடம் என்னை அழைத்துப் போ என்று கேட்க, அந்தப் பெண்
படகு செலுத்தி அவள் தந்தையை நோக்கி அழைத்துப் போனாள்.
மன்னன் கண்கொட்டாமல் அவள் பேரழகையே பார்த்துக்
கொண்டிருந்தான்.
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 52068
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12710

https://rammalar.wordpress.com/

Back to top Go down

தந்தைக்குத் துணை தேடிய தனயன் - மகாபாரதம் Empty Re: தந்தைக்குத் துணை தேடிய தனயன் - மகாபாரதம்

Post by ayyasamy ram on Sun Aug 18, 2019 7:46 pmநிஷாதராஜனை கண்டதும் கீழ் இறங்கி தான் யார் என்பதை
அறிமுகப்படுத்திக் கொண்டார்.‘‘எனக்கு உன் மகள்
வேண்டும். உடனடியாக மணம் முடித்துக்கொடு’’ என்று
அதிகாரமாய் பேசினான். தன்னை அறிமுகப்படுத்திக்
கொண்டான்.

‘‘மன்னரே நீங்கள் யார் என்பதை நான் நன்கு அறிவேன்.
நீங்களே விரும்பி என் பெண்ணை மணம்கேட்டு வந்தது
எனக்கும் என் குலத்திற்கும் மிகப்பெரிய மரியாதை.

என் பெண்ணுக்கு நல்ல வரனை முடிக்க வேண்டுமே என்ற
கவலை என் மனதில் உள்ளது. நீங்கள் நல்ல வரன் என்பதில்
எனக்கு எந்த ஐயமும் இல்லை. மிகப்பெரிய சத்தியவான்
என்பதிலும் ஐயம் இல்லை. இந்தப் பெண் வேண்டும் என்றால்
நான் சொல்லும் நிபந்தனையை ஏற்பேன் என்று சத்தியம்
செய்யுங்கள்.’’

‘‘என்ன நிபந்தனை அது.’’

‘‘இந்தப் பெண்ணுக்கு பிறக்கும் மக்களே உங்கள் அரச
பதவியை ஏற்க வேண்டும். அவர்களே அரசாள வேண்டும்.
அதற்கு சம்மதித்தால் நான் இந்தப் பெண்ணை இப்பொழுதே
மணம்புரிந்து கொடுக்க தயாராக இருக்கிறேன். இப்படி சத்தியம்
செய்ய இயலுமா’’ என்று பணிவாகக் கேட்டான்.

மிகப்பெரிய நிராசையுடன் அந்தப் பெண்ணை சாந்தனு
பார்த்தான். மனதிற்குள் கம்பீரமாக இருக்கின்ற தன் மகனை
நினைத்துக் கொண்டான். அந்த வேடுவனின் இருப்பிடம் விட்டு
மெல்ல வெளியே வந்தான். படகில் ஏறினான். வேறு சிலர் படகில்
ஏறி படகை செலுத்த, அவன் கிளம்பிய இடத்தை அடைந்தான்.
குதிரை ஏறினான்.

நாட்டிற்கு திரும்பினான். அரசன் மறுத்து திரும்பியதை அறிந்து
நிஷாதராஜன் வேதனை கொண்டான். அவன் உறவுகள்
அவனைத் தேற்றினார்கள். சத்தியவதி என்கிற அவன் மகள்
மறுபடியும் படகோட்டப் போனாள்.

குதிரைக்குப் பின்னே மன்னருடைய தேர் வந்தது. மன்னன்
அரண்மனைக்குள் புகுந்து சுருண்டு படுத்துக்கொண்டான்.
அதிக நேரம் தனிமையில் இருந்தான். காங்கேயனுக்கு எப்படி
துரோகம் செய்வது. ஒரு பெண்ணால் பட்ட துன்பம் போதும்.

நல்ல பெண்ணோடு கூடுவதற்கு தனக்கு அருகதை இல்லை.
நல்ல மனைவி இல்லாமல் வெகுகாலம் இருந்துவிட்டேன்.
மறுபடியும் ஒரு உத்தமமான பெண் வேண்டும் என்று
நினைக்கிறபோது அதற்கு பல்வேறு நிபந்தனைகள் வந்துவிட்டன.
ஒருபொழுதும் அந்த நிபந்தனையை ஏற்கமுடியாது.

ஆனால், அந்த சத்தியவதியை படகோட்டிப் பெண்ணை மறக்க
முடியவில்லை. அவன் தனக்குள் பேசினான். உரத்து மரத்தோடு
பேசினான். மல்லாக்க படுத்து கிளிகளோடு பேசினான். மேலே
விழுந்த இலைச்சருகோடு பேசினான்.அவன் அப்படி இருப்பதை
பணியாட்கள் காங்கேயனுக்குத் தெரிவித்தார்கள்.

கங்கையின் மைந்தனான அவன் தொலைவிலிருந்து மன்னனை
பார்த்தான். மெலிந்து, கருத்து தனக்குள்ளே பேசிக்கொண்டும்
தனியாக பொழுது கழிக்கும் மன்னனைப் பார்த்து துக்கப்பட்டான்.

என்ன ஆயிற்று இவருக்கு அவன் அவரை மெல்ல அணுகினான்.
‘‘தந்தையே, ஏன் மனம் கலங்கி இருக்கிறீர். எதனால் ராஜ்ய
காரியம் கவனிக்காது தனியே நடக்கிறீர். என்ன வேதனை.’’

‘‘என் வம்ச விருத்திபற்றி கவலை வந்தது.”
‘‘ஏன்?”
‘‘உன் தாய் உன்னை மட்டும் தந்துவிட்டு போய்விட்டாள்.”
‘‘அதனால் என்ன?”
‘‘தனி மரம் தோப்பாகாது. ஒருபிள்ளை பெற்றவன் பிள்ளை
பெற்றவனாக மாட்டான். பல பிள்ளைகள் ஒரு அரசனுக்கு இருப்பது
உத்தமம்.”

‘‘எனக்கு புரிகிறது தந்தையே’’ காங்கேயன் விடைபெற்றான்.
‘‘மன்னர் தேரில் சாரதியாய் போகும்போது இளைப்பார கூடாரமும்,
உணவும் கொண்டுபோனாய் அல்லவா. அவரைப் பற்றி உனக்கு
நன்கு தெரியும் அல்லவா. வெகுகாலம் அவருக்கு துணையாக
இருந்திருக்கிறாய் அல்லவா. சொல். என்ன நடந்தது.

‘‘தேரோட்டி சத்தியவதியை சந்தித்ததையும், அவள்
உடம்பிலிருந்து எழுந்த உத்தமமான வாசனையும், மன்னன்
மயங்கிப்போய் அவள் யார் என்று விசாரித்ததையும், அவள்
தந்தையிடம் அழைத்துப் போகும்படி சொன்னதையும்,
தந்தையிடம் போய் பெண் கேட்டதையும், அதற்கு அந்த
நிஷாதராஜன் நிபந்தனை விதித்ததையும், சத்தியவதியின்
குழந்தைகளே இங்கு அரசாள வேண்டும் என்று ஆவல்
தெரிவித்ததையும், அதற்கு மறுத்து சாந்தனு திரும்பியதையும்,
திரும்பும்போதே புலம்பல் ஆரம்பித்து விட்டதையும் தேரோட்டி
விளக்கிச் சொன்னான்.
-
------------------
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 52068
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12710

https://rammalar.wordpress.com/

Back to top Go down

தந்தைக்குத் துணை தேடிய தனயன் - மகாபாரதம் Empty Re: தந்தைக்குத் துணை தேடிய தனயன் - மகாபாரதம்

Post by ayyasamy ram on Sun Aug 18, 2019 7:49 pm


காங்கேயன் மெல்லச் சிரித்தான். குதிரை ஏறினான்.
தக்க மந்திரிகளுடன் யமுனை நதிக்கரையை அடைந்து
அங்கிருந்து அந்த வேடுவன் இல்லத்திற்குப் போனான்.

நிஷாதராஜன் பயத்தோடும், கலவரத்தோடும் அவர்களை
வரவேற்றான். தவறு இருந்தால் மன்னிக்கும்படி வேண்டினான்.
எடுத்தவுடன் பணிவாகப் பேசிய வேடுவராஜனைக் கண்டு
காங்கேயன் வருத்தப்பட்டான்.

‘‘என்ன பயம் உங்களுக்கு, சாந்தனு ராஜ்யத்தில் எதற்கு
கவலை. உங்களை யார் என்ன செய்து விடுவார்கள். அரசர்
பெண் கேட்டு வந்தார். நீங்கள் நிபந்தனை விதித்தீர்கள்.
அது சரியாகத்தான்படுகிறது.

அரசருக்காக நான் பெண் கேட்டு வந்திருக்கிறேன். அவருடைய
மகனான நான் அவருக்காக அவர் நலனுக்காக உங்களிடம்
வந்திருக்கிறேன். சத்தியவதிக்கு பிறக்கும் பிள்ளைகளே
அஸ்தினாபுரத்தின் அரசாட்சியில் அமருவார்கள்.

நான் அவர்களுக்கு துணையாக இருப்பேன். இது சத்தியம்’’
என்று கை தூக்கிச் சொன்னான். மந்திரிகள் திடுக்கிட்டார்கள்.
அந்த நிஷாதராஜன் காலில் விழுந்தான்.

“எப்பேர்ப்பட்ட சத்தியத்தை செய்கிறீர்கள்.
எவ்வளவு எளிதாக உங்கள் தந்தைக்காக அரச பதவியை
உதறி விட்டீர்கள். இளவரசன் என்ற பட்டம் சூட்டிய போதும்,
அதற்குண்டான எல்லா தகுதியிருந்த போதும் தகப்பனே
முக்கியம் என்று உங்களுக்கு எப்படி தோன்றியது. ஆனாலும்,
உங்கள் சத்தியத்தின்பால் எனக்கு சந்தேகம் இருக்கிறது.
மற்ற மந்திரிகள் கோபத்துடன் சீற, பொறுமையாக
இருக்கும்படி காங்கேயன் அவர்களிடம் சொன்னான்
.“என்ன சந்தேகம்?’’

“இந்த பிள்ளைகள் அரசாள்வார்கள்.
அவர்களுக்குப் பிறகு? உங்களுக்கு பிறக்கும் பிள்ளைகள்
இதை கட்டுப்படுத்துமா, யாரோ யாருக்கோ வாக்கு
கொடுத்தார்கள். எனக்கென்ன என்று உங்கள் பிள்ளைகள்
சீற மாட்டார்களா? இந்தப் பதவி எனக்கு வேண்டும் என்று
வாள் உருவி வரமாட்டார்களா?

செம்பட குலத்தில் பிறந்த சத்தியவதியின் பிள்ளைகள்
எங்கே, உங்களுக்குப் பிறக்கும் பிள்ளைகள் எங்கே?
அவர்களுக்கு முன் எங்கள் குலத்து பிள்ளைகள் நிற்க முடியுமா?
எனவே, எங்கள் குலத்து பிள்ளைகளும் தொடர்ந்து அரசாள
வேண்டும். இதற்கு என்ன செய்யப்போகிறீர்கள்.”

“வெகு எளிது. வெகு எளிது.” எல்லோருக்கும் திகைத்து
கங்கதத்தன் என்கிற காங்கேயனை பார்க்க, அவன் வலது
கையை தூக்கினான்.“இந்த உலகம் முழுவதும் கேட்கும்படியான
ஒரு சத்தியத்தை உங்களுக்குச் சொல்கிறேன்.

என் தந்தையின் பொருட்டு சத்தியவதியின் பிள்ளைகள்
அஸ்தினாபுரத்து ஆட்சியில் அமரும் பொருட்டு அவளுக்கு
பிறக்கும் பேரப்பிள்ளைகளே வம்சாவளியினரே தொடர்ந்து
ஆட்சி செய்யும்பொருட்டு காங்கேயனான நான்
என் தந்தைக்காக கடும் பிரம்மச்சாரிய விரதத்தை மேற்
கொள்வேன்.

எந்த மாதரையும் மனதாலும் தீண்டேன். எனக்கு அரச பதவியும்
வேண்டாம். இல்லற சுகமும் வேண்டாம். எனக்கு வம்சம் இராது.
நான் நித்ய பிரம்மச்சாரியாக என் வாழ்நாள் முழுவதும் இருப்பேன்”
என்று உரக்கச் சொன் னான்.

பூமி மெல்ல அதிர்ந்தது. பல மரக்கிளைகள் முறிந்து விழுந்தன.
சில மரங்கள் வேரோடு சாய்ந்தன. சுற்றியுள்ள கந்தர்வர்களும்,
தேவர்களும் இந்த அதிர்ச்சி தாங்காது ஓலமிட்டார்கள். தேவர்கள்
சட்டென்று கூடினார்கள்.

“என்ன இது. எவ்வளவு பெரிய சத்தியத்தை செய்கிறான்.
காங்கேயனுடைய வரலாறு பூமியில் நிச்சயம் பேசப்படும்.
பூமி இருக்கும் வரை காங்கேயனுடைய வாழ்க்கை சொல்லப்படும்.
இனி இவன் காங்கேயன் அல்ல.

செயற்கரிய செயலை செய்தவன். பீஷ்மன். பீஷ்மன் அந்த இடம்
முழுவதும் பீஷ்ம பீஷ்ம என்ற குரல் எழும்பியது.
அவரின் கழுத்தில் யார் கண்ணுக்கும் தெரியாத மலர் மாலைகள்
விழுந்தன. நிஷாதராஜன் மண்டியிட்டு தேம்பித் தேம்பி அழத்
துவங்கினான்.
-
----------------
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 52068
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12710

https://rammalar.wordpress.com/

Back to top Go down

தந்தைக்குத் துணை தேடிய தனயன் - மகாபாரதம் Empty Re: தந்தைக்குத் துணை தேடிய தனயன் - மகாபாரதம்

Post by ayyasamy ram on Sun Aug 18, 2019 7:52 pm


“உங்கள் மகளை அனுப்புங்கள். எங்கள் வீட்டு மருமகளை
அனுப்புங்கள்” என்று சொல்ல, சத்திய வதி தானே முன்வந்து
தன் மகனை வணங்கினாள்

.“நீங்கள் வணங்கக்கூடாது தாயே. நீங்கள் எனக்கு அன்னைக்கு
சமமானவர். தயவு செய்து என்னோடு தேரில் ஏறுங்கள்.
உங்களை என் தந்தையாரிடம் சேர்ப்பேன்” என்று சொல்ல,
அவள் மூடிய புடவையோடு மௌனமாக தேரில் அமர்ந்து
கொண்டாள். தந்தைக்கும், தாய்க்கும் கைகூப்பி விடை கொடுத்தாள்.
தேரை கங்கதத்தன் என்ற காங்கேயன் என்கிற பீஷ்மன்
அஸ்தினாபுரம் நோக்கி செலுத்தினான்.

மகாபாரதக் கதையில் இது ஒரு முக்கியமான திருப்பம்.

என்ன இது. எவ்வளவு பெரிய சத்தியத்தை செய்கிறான்.
காங்கேயனுடைய வரலாறு பூமியில் நிச்சயம் பேசப்படும்.
பூமி இருக்கும் வரை காங்கேயனுடைய வாழ்க்கை சொல்லப்படும்.
இனி இவன் காங்கேயன் அல்ல. செயற்கரிய செயலை செய்தவன்.
பீஷ்மன்.
-
------------------------------
பாலகுமாரன்
நன்றி- ஆன்மிகம்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 52068
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12710

https://rammalar.wordpress.com/

Back to top Go down

தந்தைக்குத் துணை தேடிய தனயன் - மகாபாரதம் Empty Re: தந்தைக்குத் துணை தேடிய தனயன் - மகாபாரதம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை