உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» ஊழலையும், லஞ்சத்தையும் ஒரு மாவட்டத்திலிருந்து மற்றொரு மாவட்டத்திற்கு மாற்ற கூடாது...!!
by ayyasamy ram Today at 9:35 pm

» சாலமன் பாப்பையா-பட்டிமன்ற நகைச்சுவை
by ayyasamy ram Today at 9:32 pm

» முருகனின் மனைவி பெயர், வள்ளி எப்படி வந்தது
by ayyasamy ram Today at 9:29 pm

» உயிர்களை காப்பதே ஆன்மிகம்!: அனுபவித்து சொல்கிறார் சாதனா ராவ்
by ayyasamy ram Today at 9:23 pm

» சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ஒரே அடியாக அதிகரிப்பு
by ayyasamy ram Today at 9:04 pm

» “இது நிச்சயம் தோனியின் நாய் தான்” ... கிரிக்கெட் விளையாடும் நாய் ...
by ayyasamy ram Today at 9:01 pm

» நான் ...நானாக இருப்பேன்.
by ayyasamy ram Today at 8:56 pm

» மகளிர் டி20 உலக கோப்பை: வெற்றியுடன் தொடங்கிய இந்திய அணி
by ayyasamy ram Today at 8:49 pm

» நித்யானந்தாவுக்கு கைது 'வாரன்ட்'
by T.N.Balasubramanian Today at 8:13 pm

» நீ . . .நீயாக இரு !
by T.N.Balasubramanian Today at 7:39 pm

» உலகில் அதிகம் வரி விதிக்கும் நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது ; டிரம்ப் விமர்சனம்
by T.N.Balasubramanian Today at 7:30 pm

» ஷாக் ஆகாதீங்க.. வாக்கிங் போனால் உடல் எடை குறையாதாம்!
by T.N.Balasubramanian Today at 7:14 pm

» நாவல்கள் வேண்டும்
by mani2871967 Today at 7:08 pm

» இந்தியன் 2 படப்பிடிப்பில் பணியாற்றிய கிரேன் ஆபரேட்டர் ராஜன் கைது
by T.N.Balasubramanian Today at 7:01 pm

» வருங்கால மங்கையர் திலகங்கள்
by T.N.Balasubramanian Today at 6:53 pm

» ஹாலிவுட் கதாநாயகர்கள் : சோபியா லோரன்
by ayyasamy ram Today at 5:16 pm

» 10,11,12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு: மாணவிகளை சோதனை செய்ய தடை
by ayyasamy ram Today at 5:04 pm

» இடத்தை காலி செய்யுங்கள்
by சக்தி18 Today at 4:11 pm

» அப்துல் கலாம் கவிதைகள்
by ayyasamy ram Today at 3:53 pm

» வேலன்:-இலவச மீடியா ப்ளேயர்-Aiseesoft Free Media Player
by மாணிக்கம் நடேசன் Today at 10:16 am

» மகா சிவராத்திரியன்று தரிசிக்க வேண்டிய சிதம்பரம திருக்கோயில் மற்றும் சுற்றியுள்ள சிவாலயங்கள்
by ayyasamy ram Today at 6:47 am

» நடப்பதெல்லாம் நன்மைக்கே…!
by ayyasamy ram Today at 6:46 am

» அழகான வரிகள் பத்து.
by ayyasamy ram Today at 6:44 am

» இதயத்தை தொடும் தாய்மொழி!இன்று சர்வதேச தாய்மொழி தினம்
by ayyasamy ram Today at 6:13 am

» 16 நாட்டு ராணுவத்தில் உயர் பதவியில் பெண்கள்
by ayyasamy ram Today at 6:05 am

» அமித் ஷாவின் அருணாச்சல் பயணம்; சீனா 'பூச்சாண்டி'
by ayyasamy ram Today at 6:02 am

» மெகா காமெடிடா சாமி...!
by ayyasamy ram Yesterday at 9:08 pm

» சிவன் என்ற சீவனை வழிபடுங்கள்
by T.N.Balasubramanian Yesterday at 9:02 pm

» ஒப்பிலியப்பன் திருக்கோவில், 108 திவ்ய தேசங்களில் 13-வது திவ்ய தேசமாகும்.
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» கடலுக்குள் ஒரு சிவன் கோயில்!
by T.N.Balasubramanian Yesterday at 8:51 pm

» இஷ்ட தெய்வத்திடம் சரணாகதி
by ayyasamy ram Yesterday at 8:40 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு
by ayyasamy ram Yesterday at 8:34 pm

» கமல் படப்பிடிப்பில் விபத்து; 3 பேர் பலி
by ayyasamy ram Yesterday at 8:12 pm

» கோபுர தரிசனம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:58 pm

» சடாரி சாற்றுவதில் உள்ள தத்துவம்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» உலகின் 100 சிறந்த பல்கலைகளில் 11 இந்திய நிறுவனங்கள்
by சக்தி18 Yesterday at 7:24 pm

» ராணுவ வீரரின் வீடு என தெரியாமல் பூட்டை உடைத்துவிட்டேன் - சுவரில் மன்னிப்பு வாசகம் எழுதிய திருடன்
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» யாழ்ப்பாணத்துக்கு புதுச்சேரியிலிருந்து ஆரம்பமாகும் கப்பல் போக்குவரத்து!
by T.N.Balasubramanian Yesterday at 7:00 pm

» *ஒரு குட்டி கதை
by சக்தி18 Yesterday at 6:50 pm

» வில்லி - ஒரு பக்க கதை
by ஜாஹீதாபானு Yesterday at 5:36 pm

» மஞ்சள் நிற கோடு
by ஜாஹீதாபானு Yesterday at 5:34 pm

» விளக்கேற்றிய வீடு வீண் போகாது.
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:46 pm

» மாப்பிள என்ன வேலை பார்க்கிறாரு..?
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:43 pm

» அமெரிக்க நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக தமிழர்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:40 pm

» சீனாவில் கொரோனா வைரஸ் தொற்றுள்ள பணத்தை எரிக்க முடிவு
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:39 pm

» திறமையை வெளிப்படுத்த வாய்ப்பு
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:35 pm

» சண்டை போட்டுக்கிட்டு இருந்ததை பாரத்து கணவன்,மனைவின்னு நம்பிட்டாங்க!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:34 pm

» சுய அறிமுகம்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:33 pm

» விலங்குகளை அறிந்து படம் எடுங்க...!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:30 pm

» அக்கறை - ஒரு பக்க கதை
by ஜாஹீதாபானு Yesterday at 4:27 pm

Admins Online

ஒரு நாளில் ஒருவரின் வாழ்க்கை மாறுமா?

ஒரு நாளில் ஒருவரின் வாழ்க்கை மாறுமா? Empty ஒரு நாளில் ஒருவரின் வாழ்க்கை மாறுமா?

Post by சக்தி18 on Thu Aug 15, 2019 11:05 am

ஒரு நாளில் ஒருவரின் வாழ்க்கை மாறுமா? Ranu1565674728997

மாறியது.காலையில் மேற்கு வங்காளத்தில் ரனகாட் ரயில் நிலைய பிளாட்பாரத்தில் பிச்சை எடுத்துக் கொண்டிருந்த ரானு மரியா மண்டல் என்ற பாட்டி மாலையில் ஒருவரால் கண்டு பிடிக்கப்பட்டு, பிரபல தொலைக்காட்சியில் ரியலிட்டி ஷோவில் பாட அழைக்கப்பட்டார்.

சிறு வயதில் இருந்தே பாடல்களைக் கேட்டு வந்த அவர் பாடியே பிச்சை எடுக்கத் தொடங்கினார். அவரை சமூக வலைத் தளங்கள் பிரபலமாக்கியது.இதேபோல் தமிழ் நாட்டில் வீட்டு வேலை செய்து வந்த ரமணி அம்மாள் பாட்டி (சென்னை) பிரபலமாகி ராக் ஸ்டார் ரமணி அம்மாள் என அழைக்கப்பட்டார்.இவர் இறுதிச் சுற்றில் இரண்டாவது பரிசை வென்றார்.சில வெளி நாடுகளுக்கும் சென்று வந்தார். சில படங்களிலும் பாடினார்.
ஆனா….…………………?
சொல்லப்பட்ட பரிசுத் தொகை கிடைத்ததா?தொலைக்காட்சிகளில் போட்டியிட்டால் என்ன நடக்கும்? தொடக்கத்தில் எதுவும் சொல்லாமல் முடிந்ததும் நிபந்தனைகள் போடுவது ஏன்? ஐந்து லட்சம் + நிலம் வென்ற அவர் இப்போதும் பாத்திரம் கழுவுறாராம்.(இணையம்)
ஒரு நாளில் ஒருவரின் வாழ்க்கை மாறுமா? Ramani-Ammal-696x392
சக்தி18
சக்தி18
தளபதி

தளபதி

பதிவுகள் : 1322
இணைந்தது : 24/12/2018
மதிப்பீடுகள் : 421

Back to top Go down

ஒரு நாளில் ஒருவரின் வாழ்க்கை மாறுமா? Empty Re: ஒரு நாளில் ஒருவரின் வாழ்க்கை மாறுமா?

Post by மாணிக்கம் நடேசன் on Thu Aug 15, 2019 2:17 pm

விஜய் தொலைக்காட்சி ஒரு ஏமாற்று நிறுவனம், சொல்லுவானுங்க ஆனா தர மாட்டானுங்க. நாசமாப் போனவனுங்க.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4367
இணைந்தது : 14/12/2009
மதிப்பீடுகள் : 1319

Back to top Go down

ஒரு நாளில் ஒருவரின் வாழ்க்கை மாறுமா? Empty Re: ஒரு நாளில் ஒருவரின் வாழ்க்கை மாறுமா?

Post by ayyasamy ram on Thu Aug 15, 2019 4:27 pm


-
ஜீ தமிழ் சேனலின் சரிகமப நிகழ்ச்சியில் ராக் ஸ்டார் ரமணியம்மாள்
என்றொரு பாட்டி சும்மா கலக்கு, கலக்கு என்று கலக்கிக் கொண்டிருந்தார்.
இந்த நிகழ்ச்சியைப் பொருத்தவரை உலகம் முழுதுமே ரமணியம்மாளுக்கென
தனியாக ஒரு ரசிகர் பட்டாளமே இருக்கிறதென்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

சென்னை மேற்கு மாம்பலத்தைச் சேர்ந்த இந்த ராக் ஸ்டார் ரமணியம்மாள்
பிறந்தது 1954 ஆம் வருடம். தற்போது 64 வயதாகும் ரமணியம்மாள் படித்தது
அந்தக் கால எஸ்.எஸ்.எல்.சி. சுமாராக ஆங்கிலம் பேச வரும்.

அவருக்குப் படிப்பில் ஆர்வம் இருந்தும், குடும்பச் சூழல் காரணமாக படிப்பைத் தொடரமுடியாமல் வீட்டு வேலை செய்து குடும்பம் நடத்த வேண்டியதாகி விட்டது. ரமணியம்மாளுக்குத் திருமணமான புதிதில் அவரது கணவர் பொறுப்புடன் இருந்திருக்கிறார்.

ஆனால், நாட்கள் செல்லச் செல்ல கணவர் குடிப்பழக்கத்துக்கு அடிமையானதில் வீட்டின் பொருளாதாரச் சுமை மொத்தமும் ரமணியம்மாளின் தோளில் இறக்கி வைக்கப்பட்டிருக்கிறது. நாள் முழுதும் உழைத்து விட்டு வீடு திரும்பும் ரமணியம்மாளிடம் இருந்து அவர் சம்பாதித்து வரும் தொகையை வாங்கிச் சென்று குடிப்பதற்காக அவரது கணவர் காத்திருப்பாராம்.

அப்படி இருந்தும் ரமணியம்மாளால் ஏனோ தனது கணவரை குறைத்து மதிப்பிட முடியவில்லை. இன்று அவர் உயிருடன் இல்லாவிட்டாலும் மேலிருந்து நான் பாடுவதைக் கண்டு ரசித்துக் கொண்டே தான் இருப்பார் என்று கணவரைப் பற்றி நல்லவிதமாகவே குறிப்பிட விரும்புகிறார்.

ஏனென்றால், மனைவி சம்பாத்தித்துக் கொண்டு வரும் காசில் குடித்து விட்டு வரும் பொறுப்பில்லாத கணவராக இருந்த போதும் இவர்கள் இருவருக்குமிடையிலான அன்பில் அணுவளவும் குறையிருந்ததாகத் தெரியவில்லை. குடும்ப வறுமை காரணமாக பல வீடுகளில் வீட்டு வேலை செய்து விட்டு நடந்தே வீடு திரும்பக் கூடியவரான ரமணியம்மாளுக்காக இரவுகளில் வீட்டு வாசலிலேயே காத்திருப்பாராம் அவரது கணவர்.

அதற்கு... எவ்வளவு தாமதமானாலும் சரி, மனைவி வீடு திரும்பிய பிறகு அவரது கையால் உணவருந்த வேண்டும் என்ற விருப்பம் தான் காரணமாம். அந்த அன்பின் காரணமாகவே ரமணியம்மாளுக்குத் தன் கணவர் குடிப்பழக்கம் கொண்டவராக இருந்த போதும் அவரை வெறுக்கத் தோன்றியதில்லை என்கிறார்.

இளமையில் அவருக்கு மிகவும் பிடித்த ஹீரோ என்றால் அது எம்ஜிஆர்... இப்போதும் கூட இன்றையை ஹீரோக்களைக் காட்டிலும் எம்ஜிஆர் மட்டுமே தான் ரமணியம்மாளின் மனம் கவர்ந்த ஒரே ஹீரோ.

அது போலவே ரமணியம்மாளுக்குப் பிடித்த பாடல்கள் என்றால் அது கவிஞர் கண்ணதாசன் எழுதியவையே. வேலைக்குச் செல்லும் போது இடையில் கண்ணதாசன் பாடல்களைக் கேட்டால், நின்று பாடல்வரிகளைக் கேட்டு ரசித்து நன்றாக உள்வாங்கி கொண்டு முழுமையாக அந்தப் பாடலைக் கேட்டு விட்டுத்தான் செல்வாராம்.

அந்த அளவுக்கு கண்ணதாசன் பாடல்களின் பரம ரசிகை இவர். ரமணியம்மாளுக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். அவர்களது உதவியுடன் தான் தனது 63 வது வயதில் ஜீ தமிழின், சரிகமப நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கிறார். இந்த வயதிலும் பல மைல் தூரம் நடந்து வந்து வீட்டு வேலைகள் செய்யும் ரமணியம்மாளுக்கு ஒரு நிமிடம் கூட சோம்பி உட்காரப் பிடிக்காதாம். எல்லா நேரங்களுலும் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருக்கவே தனக்கு மிகவும் விருப்பம் என்கிறார்.

ரமணியம்மாள். 2013 ஆம் ஆண்டில் விஜய் ஆண்டனி இசையில் வெளிவந்த ஹரிதாஸ் திரைப்படத்தில் வெள்ளக்குதிரை என்றொரு பாடலைப் பாடியிருக்கிறார். ஆனால், அதற்குப் பிறகு அவருக்கு பெரிதாகப் பாடல் வாய்ப்புகள் வராததால் மீண்டும் வீட்டு வேலைகளைச் செய்து வருமானம் ஈட்டி அதில் வாழ்க்கை நடத்தும் நிலையைத் தான் தொடர்ந்திருக்கிறார்.

குடும்பச் சூழல் காரணமாக வீட்டு வேலை செய்தாலும் ரமணியம்மாளுக்கு இசையின் மீது தீவிர ஈடுபாடு இருந்த காரணத்தால் கல்யாணக் கச்சேரிகளுக்குச் சென்று பாடுவதை வழக்கமாக வைத்திருந்திருக்கிறார்.

கடவுள் ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு விதமாகத் தனது இருப்பை உணர்த்துவார். இப்போது ரமணியம்மாளுக்கு ஜீ தமிழ் சேனலின் சரிகமப இசைப் போட்டி மூலம் உணர்த்தியிருக்கிறார் போலும். ரமணியம்மாளின் திறமையை உலகம் முழுக்க கொண்டு சேர்த்த பெருமை அந்தச் சேனலைத்தான் சேரும்.

ரமணியம்மாளிடம் இருக்கும் மற்றொரு ஈர்க்கத் தக்க அம்சம்... அவரிடம் சொந்தமாக இட்டுக் கட்டிப் பாடும் திறமையும் நிறையவே இருக்கிறது. நடுவர்களைக் குறித்தோ, அல்லது உலகம் முழுக்க இவருக்கென பிரத்யேகமாக உருவாகி விட்ட ரசிகர்களுக்காகவோ ஃபேஸ்புக் லைவ் அல்லது இசைப்போட்டியின் ஊடாக ஏதாவது பாடுங்களேன் அம்மா என்று கேட்டால் போதும் தனக்குப் பிடித்த பழம் பாடல்களின் வரிகளை சூழலுக்கு ஏற்றார் போல் மாற்றிப் போட்டு இட்டுக் கட்டி சிறப்பாகப் பாடி முடித்து விடுகிறார். அதாவது எள் எனும் முன் எண்ணெயாக நிற்பது என்றொரு பழமொழி ரமணியம்மாளுக்குத் தான் பொருத்தம்.

அதோடுகூட தான் கலந்து கொள்ளும் நிகழ்ச்சியை கொஞ்சமும் மேடைக் கூச்சம் இன்று மிக அருமையாக எண்டர்டெயின் திறமையும் அதாவது நடுவர்கள், பார்வையாளர்கள், நிகழ்ச்சித் தொகுப்பாளர் உட்பட நிகழ்ச்சியில் பங்கேற்கும் ஒட்டுமொத்த நபர்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தும் வகையில் சிறப்பாகச் செயல்படவும் அவரால் முடிகிறது.

அந்த வகையில் ராக் ஸ்டார் ரமணியம்மாள் இன்றைய பெண்கள் முன்மாதிரியாகக் கொண்டாட வேண்டிய ஒருவரே!

ரமணி அம்மாவுக்கு சொத்து அவங்க பசங்கதான் அதுமட்டும் இல்லாமல் இந்த உலகங்களில் வாழும் தமிழ் நெஞ்சங்கலீல் மறக்கமுடியாத இடம்பித்ததுதான் ரமணி அம்மாவுக்கு மிக பெரிய சொத்து!
-
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 53045
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12728

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஒரு நாளில் ஒருவரின் வாழ்க்கை மாறுமா? Empty Re: ஒரு நாளில் ஒருவரின் வாழ்க்கை மாறுமா?

Post by சக்தி18 on Thu Aug 15, 2019 5:58 pm

மேலதிக விபரங்களுக்கு

ஒரு நாளில் ஒருவரின் வாழ்க்கை மாறுமா? 1571444738
சக்தி18
சக்தி18
தளபதி

தளபதி

பதிவுகள் : 1322
இணைந்தது : 24/12/2018
மதிப்பீடுகள் : 421

Back to top Go down

ஒரு நாளில் ஒருவரின் வாழ்க்கை மாறுமா? Empty Re: ஒரு நாளில் ஒருவரின் வாழ்க்கை மாறுமா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை