உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» லாஸ்லியாவிற்கு கிடைத்த உயரிய விருது ….!
by ayyasamy ram Today at 11:12 am

» வெங்காய ஜிமிக்கி கம்மலை மனைவிக்கு பரிசாக அளித்த நடிகர்!
by ayyasamy ram Today at 11:11 am

» பெரிய மனசு
by ayyasamy ram Today at 11:10 am

» பொறுமைதான் உண்மையான திறமை..!
by ayyasamy ram Today at 11:08 am

» சான்றாண்மை
by ayyasamy ram Today at 11:07 am

» தமிழ்ச் செம்மல்! – பாராட்டுப் பாமாலை!
by ayyasamy ram Today at 11:06 am

» ஷீரடியில் ஆள் கடத்தல்? ஓராண்டில் 88 பேர் மாயம்
by ayyasamy ram Today at 7:46 am

» பிரிட்டன் தேர்தல்: 15 இந்திய வம்சாவளி எம்.பி.,க்கள் வெற்றி
by ayyasamy ram Today at 7:44 am

» சென்னையில் மூட்டை மூட்டையாக பணம் பறிமுதல்
by ayyasamy ram Today at 7:41 am

» இந்தியாவில் தங்கம் கடத்தல் அதிகரிக்க காரணம் என்ன?
by ayyasamy ram Today at 7:38 am

» சக்திவாய்ந்த 100 பெண்கள் பட்டியலில் நிர்மலா
by ayyasamy ram Today at 7:35 am

» வேலன்:-போல்டர்களை மற்றவர்கள் காப்பி செய்வது மற்றும் டெலிட் செய்வதை தவிர்க்க-Prevent exe
by velang Today at 7:31 am

» குருவிக் கூட்டுக்கும், விதிகளுண்டு!
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» பெரியவா சரணம் !
by T.N.Balasubramanian Yesterday at 8:19 pm

» பிரிட்டனில் தனி மெஜாரிட்டி பெற்றது ஆளுங்கட்சி- போரிஸ் ஜான்சன் மீண்டும் பிரதமர் ஆகிறார்
by ayyasamy ram Yesterday at 6:00 pm

» வயிறு வாழ்த்தும்!
by krishnaamma Yesterday at 2:57 pm

» அந்திம கிரியை!
by krishnaamma Yesterday at 2:55 pm

» கேட்டு ரசித்த திரைப்பட பாடல் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:36 pm

» "வடநாட்டு மார்வாடிக்கு மகாபெரியவா இட்ட கட்டளை!"
by krishnaamma Yesterday at 2:29 pm

» திருமாலிரும் சோலை அழகர் !
by krishnaamma Yesterday at 2:17 pm

» "பேயனும், விளக்கெண்ணையும்"
by krishnaamma Yesterday at 2:04 pm

» பகீரதப் பிரயத்தனம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» மார்கழி மாதத்தின் மகத்துவம் !
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாழ்வில் உயர்வதும், தாழ்வதும் அவரவர் எண்ணத்தைப் பொறுத்ததே..!
by krishnaamma Yesterday at 1:23 pm

» 2 வருடங்கள் நிலாவையே பார்க்காமல் மறைந்து வாழ்ந்த பெண்மணி!
by krishnaamma Yesterday at 1:21 pm

» தெரிந்து கொள்வோம் {ஆன்மீகம்}
by krishnaamma Yesterday at 12:55 pm

» `அந்த விருதாவது ஞாபகமிருக்கிறதா சார்?’ -அமைச்சர் ஜெயக்குமாரை கலாய்த்த நடிகர் சித்தார்த்
by ayyasamy ram Yesterday at 12:54 pm

» விஷ்ணு தீபம் - திருவேங்கடத்தில் மற்றும் ஸ்ரீரங்கத்தில் :)
by krishnaamma Yesterday at 12:50 pm

» ஜல்லிக்கட்டு காளைகள் வளர்க்கும் மதுரை இளம்பெண்: இளங்கலை ஆங்கில இலக்கியம் படித்துவிட்டு விவசாயமும் பார்க்கிறார்
by ayyasamy ram Yesterday at 12:46 pm

» காசி விஸ்வநாதர் கோவிலின் கோடி தீபம்... photos
by krishnaamma Yesterday at 12:33 pm

» முக்தி தரும் காசி
by krishnaamma Yesterday at 12:20 pm

» ராதா பொருள் என்ன?
by krishnaamma Yesterday at 12:14 pm

» கோபுர தரிசனம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:09 pm

» கிறிஸ்துமஸ் போனஸ் ரூ.70 கோடி! இன்ப அதிர்ச்சியில் ஊழியர்கள்
by krishnaamma Yesterday at 11:38 am

» மார்கழி மாத ஆன்மீக தகவல்கள்
by krishnaamma Yesterday at 11:36 am

» திருவாதிரைக் களி
by ayyasamy ram Yesterday at 11:10 am

» சென்னை சா்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும் படங்கள்: முழுப் பட்டியல்!
by krishnaamma Yesterday at 11:08 am

» பஞ்சாப்பைக் கலக்கும் சூப்!
by krishnaamma Yesterday at 10:39 am

» கடந்த 3 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சில்லறைப் பணவீக்கம் அதிகரிப்பு!
by krishnaamma Yesterday at 10:38 am

» நேச நெஞ்சம்- சிறுகதை
by ayyasamy ram Yesterday at 10:32 am

» சினிதுளிகள்- குங்குமம்
by ayyasamy ram Yesterday at 10:28 am

» ஏழு விதமான ஆச்சரியங்கள்
by ayyasamy ram Yesterday at 10:20 am

» சுமங்கலி பெண்கள் கட்டாயம் செய்ய வேண்டிய விளக்கு பூஜை
by ayyasamy ram Yesterday at 9:15 am

» தன்னை உணர்தலே ஆத்ம பலம்! --அர்த்தமுள்ள இந்து மதம் - 63
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ஆறுமுகசாமி கமிஷன் என்ன ஆயிற்று ?
by ayyasamy ram Yesterday at 8:53 am

» நெட்டிசன் நோட்ஸ்: எனை நோக்கி பாயும் தோட்டா -அழகு
by ayyasamy ram Yesterday at 8:47 am

» அறிவியல் களஞ்சியம் அறிவியல் ஆச்சர்யம்
by ayyasamy ram Yesterday at 8:37 am

» பாலியல் வன்கொடுமை குற்றத்துக்கு 21 நாளில் தூக்கு தண்டனை: ஆந்திர அரசு சட்ட மசோதா
by ayyasamy ram Yesterday at 6:01 am

» தலைவி, குயினுக்குத் தடையில்லை: ஜெ. தீபாவின் கோரிக்கையை நிராகரித்தது உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 5:57 am

» பார்வையாளர்களிடம் தமிழில் பேசும் கவர்னர்
by ayyasamy ram Yesterday at 5:36 am

Admins Online

சோளக்கதிர்

சோளக்கதிர் Empty சோளக்கதிர்

Post by B.VENKATESAN on Sun Aug 11, 2019 3:12 pm

சோளக்கதிர்

அன்று ஞாயிற்றுக்கிழமை. மதிய உறக்கத்தை மறுத்த மனதோடு போராடிக் கொண்டிருந்தன ரவியின் இமைகள். கணினியிலிருந்து வெகுநேரமாக விலகாத பார்வை, “என்னங்க மணி அஞ்சரை ஆகப் போகுது பாருங்க. நான் கெளம்பிட்டேன்” என்ற மனைவியின் குரல் கேட்டு கடிகாரத்தை நோக்கியது. இப்போதுதான் ரவிக்கு தான் முதல்நாள் மனைவிக்கு கொடுத்த வாக்குறுதி நினைவுக்கு வந்தது. அது, இன்று திரைப்படம் செல்வது.

“சாரிடா. மறந்தே போய்ட்டேன். இதோ டூ மினிட்ஸ்...” என்றபடி விளம்பர நூடுல்ஸை விட வேகமாக தயாரானான் ரவி. சற்று நேரத்தில் அருகில் இருந்த பிரபல திரையரங்கை அவர்கள் நெருங்கினர். அங்கே சாலையில் தள்ளுவண்டியில் வந்துகொண்டிருந்த சுண்டல் வண்டியைக் கண்டதும் ரவியின் குழந்தை அது வேண்டுமென்று அடம்பிடித்தது. பெற்றோர் இருவரும் எவ்வளவோ சமாதானம் செய்தும் அது அழுகையை நிறுத்துவதாய் இல்லை. வேறு வழியின்றி ரவியும் காரை ஓரமாய் நிறுத்திவிட்டு சுண்டல் வாங்க சென்றான்.

“எவ்வளவுப்பா சுண்டல்?” என்ற ரவியின் கேள்விக்கு பத்து ரூபாய் பதிலாக இருந்தது தள்ளுவண்டிக்காரனிடம். “என்னப்பா சுண்டல் இவ்வளவு கம்மியா இருக்கு? அஞ்சு ரூபாதான் இதுக்கு கொடுப்பேன்”, - “கட்டுப்படி ஆகாது சார்”, - “அப்போ இன்னும் கொஞ்சம் சேத்து பொட்டலம் போட்டுக்கொடு” என்று பேச்சு பேரமாக முற்றியபின் ரவிக்கு கூடுதல் சுண்டல் கிட்டியது.

திரையரங்கினுள் கார் பார்க்கிங் கட்டணம் முதல் இறுதிவரை கொறித்த இடைவேளை நொறுக்குத்தீனிகள் வரை அவனது பர்ஸை விழுங்கப் பார்த்தன. ஒரு வழியாக திரைப்படம் முடிந்து திரும்புகையில் அங்கிருந்த ஷாப்பிங் மால் அவர்களை விடவில்லை. பர்ஸில் கனமில்லை. ரவிக்கு மனமும் இல்லை. கடைசி ஷாப்பிங் வெகுநாட்களுக்கு முன்பு என்பதால் காரை விட்டு கால்கள் கீழே இறங்கின. அங்கிருந்த நடைபாதை வியாபாரியின் கரடி பொம்மை ஒன்றை ரவியின் குழந்தை ஆசையாய் கேட்டது.

அதன் விலை கேட்ட பிறகு, “அறுபது ரூபாய் எல்லாம் ரொம்ப அதிகம்” என்று பொம்மையை வாங்க மறுத்தான் ரவி. “ஷாப்பிங்ல டாய்ஸ் வாங்கித் தரேன் பாப்பா” என்று குழந்தையை சமாதானப்படுத்தினான். மனைவி குழந்தையோடு ஒருபக்கம் ஷாப்பிங் செய்து கொண்டிருக்க, ரவி சிறுவர் விளையாட்டுப் பொருட்கள் பகுதிக்கு சென்று பொம்மைகள் விலையை ஸ்டிக்கர்களில் ஆராயத் தொடங்கினான்.

“வெல்கம் சார். ஆல் ஆர் இம்போர்ட்டட் பிராண்ட்ஸ்” என்று அந்த பகுதியில் இருந்த சேல்ஸ்மேன் கூறவே, வேறு வழியின்றி கெளரவத்திற்காக நூற்றி இருபத்தைந்து ரூபாய்க்கு வெளியில் விற்ற அதே மாதிரியான பொம்மையை எவ்வித பேரமுமின்றி வாங்கினான் ரவி. ஷாப்பிங் முடிந்து வீடு திரும்புகையில் ஏதோ ஒரு குழப்பம் அவனைத் தொடர்ந்தது.

மறுநாள் அலுவலகத்தில் இருக்கும்போது ரவிக்கு தொலைபேசி அழைப்பு ஒன்று வந்தது. அதில் அவனது பெயருக்கு பரிசு விழுந்திருப்பதாகவும், சந்தையில் அதிக மதிப்புள்ள சில சாதனங்களை சொற்ப தொகைக்கு அனுப்பவதாகவும் கூறி அவனது முகவரியை கேட்க, ரவியும் பேராசையில் முகவரியை கொடுத்தான். ஓரிரு நாட்களில் வந்த பார்சலை பணம்கட்டி வாங்கிய பிறகு, தான் ஏமாற்றப்பட்டதை அறிந்தான்.

மனதில் ஏதோ பாரம் தொற்றிக்கொள்ளவே, அருகில் இருந்த கோவிலுக்கு சென்றான். பிரகாரம் வலம்வந்து கோவிலை விட்டு வெளியேறும்போது மனம் கொஞ்சம் லேசானதை உணர்ந்தான் ரவி. காரை எடுப்பதற்காக உள்ளே அமர்ந்தபோது கோவிலுக்கு அருகே இருந்த சோள வியாபாரியிடம் ஒருவர் சோளக்கதிர் வாங்குவதை கவனித்தான்.

“கடைசி போனி சார். இந்தா நல்லா சாப்ட்டு போ சார்...” என்று இரண்டு சோளக்கதிர்களை சேர்த்துக் கொடுத்தார் அந்த வியாபாரி. அந்த மனிதர் சோளத்திற்கு பணம் கொடுக்கும்போது, “என்கிட்ட பாக்கி பத்து ரூபா இல்ல சார். சில்லறையா குடு சார்.” என்று பதில் வரவே, “பரவா இல்லப்பா. மீதி சில்லறைய நீயே வச்சிக்கோ” என்றார் அந்த மனிதர்.

“ரொம்ப டேங்க்ஸ் சார். நீ நல்லா இருக்கணும் சார்” என்ற வார்த்தைகளில் இருந்த உண்மையான மகிழ்ச்சியை வியாபாரியின் கண்களில் கண்டான் ரவி. மனதின் பாரம் இன்னும் குறையத் தொடங்கியது.

“ச்சே. இவ்வளவு காலம் இந்த மனிதர்களிடம் எப்படியெல்லாம் பேரம் பேசி வாங்கினோம்? இந்த ஒரு நாள் விற்பனை இவர்களுக்கு எத்தனை நாட்களுக்கு சோறுபோடும் என்பதை ஏன் யோசிக்க தவறினேன்? ஷாப்பிங் மாலில் வாங்க எத்தனையோ பணக்காரர்கள் இருக்கிறார்கள். இவர்களை ஆதரிக்க நம்மைப் போன்ற நடுத்தர வர்க்கம்தானே இருக்கிறது?!” என்று அடுத்தடுத்த கேள்விக்கணைகளை தொடுத்தவண்ணம் இருந்தது ரவியின் மனசாட்சி.

விரும்பத்தக்க மனமாற்றத்துடன், சென்ற ஞாயிறு வாங்க மறுத்த அதே அறுபது ரூபாய் பொம்மையை குழந்தையின் ஆசைக்காக வாங்க காரில் விரைந்தான் ரவி. ஆவலோடு தேடிய ரவியின் கண்களில் அந்த பொம்மைக்காரர் அங்கு தென்படவில்லை.

- பா.வெ.
B.VENKATESAN
B.VENKATESAN
பண்பாளர்


பதிவுகள் : 166
இணைந்தது : 13/04/2015
மதிப்பீடுகள் : 67

Back to top Go down

சோளக்கதிர் Empty Re: சோளக்கதிர்

Post by T.N.Balasubramanian on Sun Aug 11, 2019 6:27 pm

நல்ல கருத்து .சோளக்கதிர் 1571444738 சோளக்கதிர் 3838410834

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 25751
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9287

Back to top Go down

சோளக்கதிர் Empty Re: சோளக்கதிர்

Post by ayyasamy ram on Sun Aug 11, 2019 8:33 pm

சோளக்கதிர் 103459460 சோளக்கதிர் 3838410834
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 50812
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12694

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சோளக்கதிர் Empty Re: சோளக்கதிர்

Post by B.VENKATESAN on Sun Aug 11, 2019 10:30 pm

மிக்க நன்றி ரமணியன் ஐயா மற்றும் அய்யாசாமி ஐயா.
B.VENKATESAN
B.VENKATESAN
பண்பாளர்


பதிவுகள் : 166
இணைந்தது : 13/04/2015
மதிப்பீடுகள் : 67

Back to top Go down

சோளக்கதிர் Empty Re: சோளக்கதிர்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை