உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» வாய்மையும் பொய்மையும் - கவிதை
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» புரட்சிப்பெண் நான்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» அறமற்ற அரசு – கவிதை
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:21 pm

» QATARம் கண்ட ராஜா-பிறந்த நாளில்  வாழ்த்துவோம், வாருங்கள் .
by ayyasamy ram Yesterday at 10:08 pm

» வேலன்:-பிடிஎப் பைல்களை இமெஜ் பைல்களாக மாற்ற -Weeny Free PDF to Image Converter
by velang Yesterday at 9:29 pm

» யுவன் சங்கர் ராஜா: தமிழ் சினிமாவில் தடம் பதித்து 23 ஆண்டுகள்
by ayyasamy ram Yesterday at 8:13 pm

» 100-ஆ! ஊஹூம்!
by T.N.Balasubramanian Yesterday at 7:48 pm

» கனகதாரா !! Short story by Krishnaamma
by T.N.Balasubramanian Yesterday at 7:41 pm

» தமிழகம் முழுவதும் பறவைகள் கணக்கெடுப்பு தொடக்கம்:
by T.N.Balasubramanian Yesterday at 7:34 pm

» ஜோதிடப்பிரியரா?எப்போது திருமணம் - தெரிந்து கொள்ள ஒரு சூத்திரம்!
by T.N.Balasubramanian Yesterday at 7:29 pm

» H-1B விசாவில் அமெரிக்கா சென்ற சிங்கத்தின் கதை.
by T.N.Balasubramanian Yesterday at 7:22 pm

» வார்த்தை ஜாலங்கள்
by T.N.Balasubramanian Yesterday at 7:02 pm

» ஒப்பனை – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 5:41 pm

» ஐந்தரிசி பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:40 pm

» சொல்லும் விதத்தில் வெல்லலாம்-வார்த்தை விளையாட்டு
by ayyasamy ram Yesterday at 5:38 pm

» அடிமையும் சிங்கமும் கதை (ஒரு நிமிடம்)
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» தாலி கட்டற நேரத்திலே பொண்ணு ஓடிப்போயிட்டா...! ஆறு வித்தியசம் கண்டுபிடி
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» பருவநிலை மாற்றத்தினால் தனுஷ்கோடி வந்திருக்கும் பிளமிங்கோ வெளிநாட்டு பறவைகள்:
by ayyasamy ram Yesterday at 5:17 pm

» சர்.சி.வி.ராமன் ஆராய்ச்சி வெளியான நாள் இன்று தேசிய அறிவியல் தினம்
by ayyasamy ram Yesterday at 5:16 pm

» ஹாலிவுட்டின் ‘நடிகையர் திலகம்’ இன்று(பிப்.27) எலிசபெத் டெய்லர் பிறந்தநாள்
by ayyasamy ram Yesterday at 5:15 pm

» எங்கள் நடுவர் ஒரு முட்டாள்…!
by சக்தி18 Yesterday at 4:24 pm

» ஆன்மீக தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 3:46 pm

» உலகின் தலைசிறந்த சொல்..!!
by ayyasamy ram Yesterday at 3:45 pm

» வீட்டுக் குறிப்புகள் -10
by ayyasamy ram Yesterday at 3:44 pm

» மொய் கவரை டேபிளுக்கு அடியிலே தர்றாங்களே...!!
by ayyasamy ram Yesterday at 3:42 pm

» பிடித்த கதை – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» ஸ்டார் வேல்யூ உள்ள திருவோடு..!
by ayyasamy ram Yesterday at 3:34 pm

» பாடு மனமே…!- ரசித்த கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 3:29 pm

» பூண்டி ஏரிக்கு முதல் முறையாக ஒரே தவணையில் 6 டி.எம்.சி. கிருஷ்ணா தண்ணீர் வந்தது
by ayyasamy ram Yesterday at 3:22 pm

» உரிமையாளர்கள் ஸ்டிரைக்- கேன் குடிதண்ணீர் சப்ளை பாதிப்பு
by ayyasamy ram Yesterday at 3:19 pm

» காலம் - ஒரு வரலாற்றுச் சுருக்கம் - ஸ்டீஃபன் ஹாக்கிங் புத்தகம் இருந்தால் பகிரவும்
by ஞானமுருகன் Yesterday at 2:21 pm

» கணக்கு வாத்தியாரும் செக்கு மாடும்! குட்டிக் கதை (படிக்கும் நேரம் 2 நி.12 .வினாடிகள்)
by SK Yesterday at 10:45 am

» நான் சிரித்தால் – சினிமா விமரிசனம்
by ayyasamy ram Yesterday at 8:28 am

» கைரேகை பார்க்கத் தெரிந்த நடிகை பி.பானுமதி
by ayyasamy ram Yesterday at 8:27 am

» பீர்பால் பெருமை
by ayyasamy ram Yesterday at 8:25 am

» தவிடு தூவி வழிபாடு
by ayyasamy ram Yesterday at 8:17 am

» பதவிக்கு வயது தடையல்ல…!
by ayyasamy ram Yesterday at 8:16 am

» கோபுர தரிசனம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 6:51 am

» 24 மணி நேரத்தில் 10 லட்சம் பாலோயர்: கலக்கும் ஜூனியர் ரொனால்டோ!
by ayyasamy ram Yesterday at 6:48 am

» அரையிறுதியில் இந்திய பெண்கள் அணி: உலக கோப்பையில் அசத்தல்
by ayyasamy ram Yesterday at 6:37 am

» மூன்று ஆண்டாக பூமியை சுற்றும் 'குட்டி நிலா'
by ayyasamy ram Yesterday at 6:35 am

» பாகிஸ்தான் செல்லும் சீன வாத்துப்படை
by ayyasamy ram Yesterday at 6:33 am

» கொரோனா பரவல்: ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்
by ayyasamy ram Yesterday at 6:30 am

» ஒரு நாடு, ஒரே ரேஷன்: மேற்கு வங்கம் இணைய மறுப்பு
by ayyasamy ram Yesterday at 6:29 am

» மெக்கா, மதீனா பயணம் ரத்து! முஸ்லிம்கள் கவலை
by ayyasamy ram Yesterday at 6:27 am

» என். கணேசன் புத்தகம் pdf
by prajai Thu Feb 27, 2020 11:17 pm

» `கடலூரில் லஞ்சம் வாங்கிய பெண் அதிகாரி!'- ஓய்வுக்கு 2 நாள்கள் இருந்த நிலையில் கைது
by T.N.Balasubramanian Thu Feb 27, 2020 8:32 pm

» திருமணங்களை ஏன் முகூர்த்த நாட்களில் செய்கிறார்கள்?
by T.N.Balasubramanian Thu Feb 27, 2020 8:31 pm

» கரகோரம் நெடுஞ்சாலை -காணொளி
by சக்தி18 Thu Feb 27, 2020 6:29 pm

Admins Online

மக்களவையில் மசோதா நிறைவேறியது தனி நபரை தீவிரவாதியாக அறிவிக்கலாம்: காங்கிரஸ் உட்பட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு, வெளிநடப்பு

 மக்களவையில் மசோதா நிறைவேறியது தனி நபரை தீவிரவாதியாக அறிவிக்கலாம்: காங்கிரஸ் உட்பட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு, வெளிநடப்பு Empty மக்களவையில் மசோதா நிறைவேறியது தனி நபரை தீவிரவாதியாக அறிவிக்கலாம்: காங்கிரஸ் உட்பட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு, வெளிநடப்பு

Post by ayyasamy ram on Thu Jul 25, 2019 8:22 am

புதுடெல்லி:
தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்புடைய தனிநபரை
தீவிரவாதியாக கருதி அவரிடம் நேரடியாக விசாரிக்கவும்,
அவரது சொத்துகளையும் உடமைகளையும் மாநில
போலீசாரின் முன் அனுமதியின்றி பறிமுதல் செய்யவும்
தேசிய புலனாய்வு அமைப்புக்கு அதிகாரம் வழங்கக் கூடிய
சட்ட விரோத நடவடிக்கைகள் (உபா) தடுப்பு மசோதா
மக்களவையில் நேற்று நிறைவேறியது.

இம்மசோதாவுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள்
கடும் எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தன.

மக்களவையில், தீவிரவாத தடுப்பு சட்டமான,
‘சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்ட திருத்த மசோதா’
(உபா) நேற்று விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இந்த சட்ட திருத்தத்தின்படி, தேசிய புலனாய்வு அமைப்பானது
(என்ஐஏ), நாட்டின் எந்த பகுதியிலும், சம்பந்தப்பட்ட மாநில
போலீசாரின் முன் அனுமதி பெறாமல், தீவிரவாத எதிர்ப்பு
நடவடிக்கைகள் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ள
முடியும்.

இதன்மூலம், தீவிரவாதத்திற்கு உதவி செய்பவர், தீவிரவாத
செயல்களை ஊக்குவிப்பவர்களையும் தீவிரவாதியாக கருதி
அவரிடம் விசாரணை நடத்தவும், மாநில போலீசின் முன்
அனுமதியின்றி அவரது சொத்துக்களை பறிமுதல் செய்யவும்
முடியும். இச்சட்ட திருத்தம் என்ஐஏ.வுக்கு அதிக பலத்தை
தரக்கூடியது.

இதற்கு ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்தன.
தெலங்கானா எம்பி அசாசுதீன் ஓவைசி பேசுகையில்,
‘‘இச்சட்ட திருத்தம் முஸ்லிம்களுக்கும், தாழ்த்தப்பட்ட
மக்களுக்கும் எதிரானது. இதன் மூலம், நீதிமன்ற உரிமைகள்
மறுக்கப்படும்,’’ என்றார்.

தேசியவாத காங்கிரஸ் எம்பி சுப்ரியா சுலே பேசுகையில்,
‘‘காங்கிரஸ் ஆட்சியில் இச்சட்டம் கொண்டு வரப்பட்ட போது,
குஜராத் முதல்வராக இருந்த மோடி கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.
இது கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரான சட்ட திருத்தம் என்றார்.
இச்சட்ட திருத்தத்தால் அப்பாவி மக்கள் துன்புறுத்தப்படக் கூடும்,’’
என்றார்.

திரிணாமுல் எம்பி மொய்திரா பேசுகையில்,
‘‘இச்சட்ட திருத்தம் அரசியல் எதிரிகளை பழிவாங்க தவறாக
பயன்படுத்தப்படும். இது மக்களுக்கும், அரசியலமைப்புக்கும்
எதிரான சட்ட திருத்தம். அரசுக்கு எதிராக யார் பேசினாலும்
அவர்கள் தேச துரோகி என முத்திரை குத்தப்படுகிறார்கள்.

அரசு கொண்டு வரும் சட்டங்களை நாங்கள் எதிர்த்தாலும் இதே
போன்று முத்திரை குத்தப்படுகிறோம்,’’ என்றார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன்
பேசுகையில், ‘‘இது அரசை எதிர்ப்பவர்களை அடக்குவதற்கு
உதவும். அரசியல் களத்தில் பழிவாங்க பயன்படுத்தக் கூடும்,’’
என்றார்.

அதிமுக எம்பி ரவீந்திரநாத் குமார் ஆதரித்து பேசுகையில்,
‘‘இளைஞர்கள் தீவிரவாதத்திற்கு வழி தவறிச் சென்றுவிடாமல்
இச்சட்டம் பாதுகாக்கும்,’’ என்றார். இச்சட்ட திருத்தத்தை
ஆய்வுக்குழுவுக்கு அனுப்ப வேண்டுமென காங்கிரஸ் கோரிக்கை
விடுத்தது.
-
-----------------
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 53318
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12728

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 மக்களவையில் மசோதா நிறைவேறியது தனி நபரை தீவிரவாதியாக அறிவிக்கலாம்: காங்கிரஸ் உட்பட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு, வெளிநடப்பு Empty Re: மக்களவையில் மசோதா நிறைவேறியது தனி நபரை தீவிரவாதியாக அறிவிக்கலாம்: காங்கிரஸ் உட்பட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு, வெளிநடப்பு

Post by ayyasamy ram on Thu Jul 25, 2019 8:22 am


இதைத் தொடர்ந்து எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு பதிலளித்து
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியதாவது:

தீவிரவாதத்தின் ஆணி வேரை அகற்ற வேண்டுமெனில்,
தீவிரவாதத்துடன் தொடர்புடைய நபரையும் தீவிரவாதியாக கருதி
நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

இந்த சட்டம் தவறாக பயன்படுத்தப்படாது. தீவிரவாதத்தை
வேரறுக்க மட்டுமே பயன்படுத்தப்படும். இதை மத, இன ரீதியாக
பிரித்து பார்ப்பதும் தவறானது.உண்மையிலேயே இச்சட்டத்தில்
திருத்தம் கொண்டு வந்தது காங்கிரஸ் தலைமையிலான முந்தைய
ஐமு கூட்டணி அரசுதான்.

காங்கிரஸ் கொண்டு வந்தால் சரி, நாங்கள் கொண்டு வந்தால்
தவறா? இந்த அரசு தீவிரவாதத்திற்கு எதிராக போரிடுகிறது.
இந்த விஷயத்தில் எந்த கட்சி ஆட்சி செய்கிறது என்பது ஒரு
பொருட்டல்ல. நியாயப்படி இச்சட்ட திருத்தத்தை காங்கிரஸ்
தனது ஆட்சியில் கொண்டு வந்திருக்க வேண்டும்.

ஆனால், வாக்கு வங்கிக்கு பயந்து அமல்படுத்தவில்லை. நாங்கள்
தற்போது இதை கொண்டு வருகிறோம்.

தீவிரவாதத்திற்கு எதிராக கட்சிகளை கடந்து நாம் ஒன்று சேர
வேண்டும். சிலர் சித்தாந்தத்தின் அடிப்படையில் நகர்புற நக்சல்
தீவிரவாதத்தை பரப்பி வருகிறார்கள். கொள்கைக்காக என்றிருந்த
மாவோயிசம், பின்னாளில் பொதுமக்களை கொல்ல ஆரம்பித்தது.

அவர்கள் மீது இந்த அரசு கருணை காட்டாது. அதை வேரோடு
அழிப்பதே இந்த அரசின் நோக்கம். தீவிரவாதத்திற்கு எதிராக
கடுமையான சட்டங்கள் கொண்டு வரப்பட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.இதைத்தொடர்ந்து சட்ட திருத்த மசோதா
மீதான வாக்கெடுப்பு நடந்தது. அப்போது எதிர்க்கட்சி உறுப்பினர்கள்
ஒட்டு மொத்தமாக புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர்.

சட்ட திருத்தத்திற்கு ஆதரவாக 287 எம்பி.க்களும், எதிராக
8 பேரும் வாக்களித்தனர். இதையடுத்து, உ.பா. சட்ட திருத்த
மசோதா நிறைவேற்றப்பட்டது.
-
-----------------------
தினகரன்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 53318
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12728

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 மக்களவையில் மசோதா நிறைவேறியது தனி நபரை தீவிரவாதியாக அறிவிக்கலாம்: காங்கிரஸ் உட்பட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு, வெளிநடப்பு Empty Re: மக்களவையில் மசோதா நிறைவேறியது தனி நபரை தீவிரவாதியாக அறிவிக்கலாம்: காங்கிரஸ் உட்பட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு, வெளிநடப்பு

Post by சக்தி18 on Thu Jul 25, 2019 11:49 am

 மக்களவையில் மசோதா நிறைவேறியது தனி நபரை தீவிரவாதியாக அறிவிக்கலாம்: காங்கிரஸ் உட்பட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு, வெளிநடப்பு 1571444738
சபாஷ்.இனி போறவன் வாறவன் எல்லாம், அரசுக்கு எதிராக ஒரு வார்த்தை சொன்னாலும், தடா கோடா வில் உள்ளே போவான்.ஒரு சிலரால் பலரும் பாதிக்கப்படப் போகிறார்கள்.

சர்வாதிகாரத்தின் ஆரம்பம்.
சக்தி18
சக்தி18
தளபதி

தளபதி

பதிவுகள் : 1372
இணைந்தது : 24/12/2018
மதிப்பீடுகள் : 426

Back to top Go down

 மக்களவையில் மசோதா நிறைவேறியது தனி நபரை தீவிரவாதியாக அறிவிக்கலாம்: காங்கிரஸ் உட்பட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு, வெளிநடப்பு Empty Re: மக்களவையில் மசோதா நிறைவேறியது தனி நபரை தீவிரவாதியாக அறிவிக்கலாம்: காங்கிரஸ் உட்பட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு, வெளிநடப்பு

Post by T.N.Balasubramanian on Thu Jul 25, 2019 3:10 pm

sakthi18 wrote:சபாஷ்.இனி போறவன் வாறவன் எல்லாம், அரசுக்கு எதிராக ஒரு வார்த்தை சொன்னாலும், தடா கோடா வில் உள்ளே போவான்.ஒரு சிலரால் பலரும் பாதிக்கப்படப் போகிறார்கள்.

அப்பிடி இல்லையே. just like that யாரையும் உள்ளே போடமுடியாது. நீதி மன்றம் சென்றால் பேர் ரிப்பேர் ஆகிவிடும்.வரைமுறைகளை மீறினால் மட்டுமே தீவிரவாதி என கூறப்படுவார். முன்பு குழுவாக இருந்தது. இப்போது தனி நபரையும் அதற்குள் கொண்டுவந்துள்ளனர்.
ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 26004
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9419

Back to top Go down

 மக்களவையில் மசோதா நிறைவேறியது தனி நபரை தீவிரவாதியாக அறிவிக்கலாம்: காங்கிரஸ் உட்பட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு, வெளிநடப்பு Empty Re: மக்களவையில் மசோதா நிறைவேறியது தனி நபரை தீவிரவாதியாக அறிவிக்கலாம்: காங்கிரஸ் உட்பட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு, வெளிநடப்பு

Post by சக்தி18 on Thu Jul 25, 2019 5:38 pm

அப்படியா? அப்போ எதிர்கட்சிகள் எல்லாம் வெறி பிடித்து (அந்த வெறி இல்ல) வெளிநடப்பு செய்தார்களே!. வழக்கமான வெளிநடப்பு தானா?ஒருவேளை தளபதி-தலைவர் ட்ரெயினிங்கா இருக்குமோ?

வெளிநடப்பு செய்பவர்கள்,அவைக்கு அடிக்கடி வராமல் விடுபவர்களுக்கு சம்பளம் கட் ஆகுமா?அல்லது மொத்தமாக கொடுத்து விடுவார்களா?மக்கள் பணமாயிற்றே அதனால் கேட்டேன்.
சக்தி18
சக்தி18
தளபதி

தளபதி

பதிவுகள் : 1372
இணைந்தது : 24/12/2018
மதிப்பீடுகள் : 426

Back to top Go down

 மக்களவையில் மசோதா நிறைவேறியது தனி நபரை தீவிரவாதியாக அறிவிக்கலாம்: காங்கிரஸ் உட்பட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு, வெளிநடப்பு Empty Re: மக்களவையில் மசோதா நிறைவேறியது தனி நபரை தீவிரவாதியாக அறிவிக்கலாம்: காங்கிரஸ் உட்பட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு, வெளிநடப்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை