உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» மெகா காமெடிடா சாமி...!
by ayyasamy ram Today at 9:08 pm

» சிவன் என்ற சீவனை வழிபடுங்கள்
by T.N.Balasubramanian Today at 9:02 pm

» ஒப்பிலியப்பன் திருக்கோவில், 108 திவ்ய தேசங்களில் 13-வது திவ்ய தேசமாகும்.
by ayyasamy ram Today at 8:52 pm

» கடலுக்குள் ஒரு சிவன் கோயில்!
by T.N.Balasubramanian Today at 8:51 pm

» இஷ்ட தெய்வத்திடம் சரணாகதி
by ayyasamy ram Today at 8:40 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு
by ayyasamy ram Today at 8:34 pm

» கமல் படப்பிடிப்பில் விபத்து; 3 பேர் பலி
by ayyasamy ram Today at 8:12 pm

» கோபுர தரிசனம் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 7:58 pm

» சடாரி சாற்றுவதில் உள்ள தத்துவம்
by ayyasamy ram Today at 7:25 pm

» உலகின் 100 சிறந்த பல்கலைகளில் 11 இந்திய நிறுவனங்கள்
by சக்தி18 Today at 7:24 pm

» ராணுவ வீரரின் வீடு என தெரியாமல் பூட்டை உடைத்துவிட்டேன் - சுவரில் மன்னிப்பு வாசகம் எழுதிய திருடன்
by ayyasamy ram Today at 7:20 pm

» யாழ்ப்பாணத்துக்கு புதுச்சேரியிலிருந்து ஆரம்பமாகும் கப்பல் போக்குவரத்து!
by T.N.Balasubramanian Today at 7:00 pm

» *ஒரு குட்டி கதை
by சக்தி18 Today at 6:50 pm

» வில்லி - ஒரு பக்க கதை
by ஜாஹீதாபானு Today at 5:36 pm

» மஞ்சள் நிற கோடு
by ஜாஹீதாபானு Today at 5:34 pm

» விளக்கேற்றிய வீடு வீண் போகாது.
by பழ.முத்துராமலிங்கம் Today at 4:46 pm

» மாப்பிள என்ன வேலை பார்க்கிறாரு..?
by பழ.முத்துராமலிங்கம் Today at 4:43 pm

» அமெரிக்க நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக தமிழர்
by பழ.முத்துராமலிங்கம் Today at 4:40 pm

» சீனாவில் கொரோனா வைரஸ் தொற்றுள்ள பணத்தை எரிக்க முடிவு
by பழ.முத்துராமலிங்கம் Today at 4:39 pm

» திறமையை வெளிப்படுத்த வாய்ப்பு
by பழ.முத்துராமலிங்கம் Today at 4:35 pm

» சண்டை போட்டுக்கிட்டு இருந்ததை பாரத்து கணவன்,மனைவின்னு நம்பிட்டாங்க!
by பழ.முத்துராமலிங்கம் Today at 4:34 pm

» சுய அறிமுகம்
by பழ.முத்துராமலிங்கம் Today at 4:33 pm

» விலங்குகளை அறிந்து படம் எடுங்க...!
by பழ.முத்துராமலிங்கம் Today at 4:30 pm

» அக்கறை - ஒரு பக்க கதை
by ஜாஹீதாபானு Today at 4:27 pm

» தேன் துளியாய் காதில் பாயும் பி.பி ஸ்ரீனிவாஸ் மற்றும் பி. சுசிலா இருவரின் முத்தான பாடல்கள்.....
by ayyasamy ram Today at 2:03 pm

» உழைப்பே உயர்வு
by ayyasamy ram Today at 1:14 pm

» பாட்டு வந்ததும் விதை முளைத்தது
by ayyasamy ram Today at 1:11 pm

» வில்வம் கீர் - குமுதம்
by ayyasamy ram Today at 1:05 pm

» ஐம்பதிலும் அசத்தும் ஜெனிபர்
by ayyasamy ram Today at 12:55 pm

» பான் அட்டையின் ஸ்டேட்டஸ் Active-ஆக இருக்கிறதா என்பதை தெரிந்து கொள்வது எப்படி?
by ayyasamy ram Today at 8:41 am

» வேலன்:-ஒன்றுக்கும் மேற்பட்ட பிடிஎப் பைல்களை இணைக்க-Weeny Free PDF Merger
by velang Today at 8:08 am

» ஒரே நாளில் ரிலீசாகும் தனுஷ் - சிவகார்த்திகேயன் படங்கள்
by ayyasamy ram Today at 6:59 am

» திருத்தணி முருகன் கோயிலில் பிப்.27-ல் மாசி பிரம்மோற்சவ விழா தொடக்கம்
by ayyasamy ram Today at 6:51 am

» சாமுண்டிமலையில் உள்ள ஒரே கல்லிலான 15 அடி உயர நந்தி சிலையில் விரிசல்? தொல்லியல் துறையினர் ஆய்வு
by ayyasamy ram Today at 6:45 am

» அமைச்சருக்கு எதிரான புகாரை கைவிடும் முடிவை முன்பே தெரிவிக்காதது ஏன்? - தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு கேள்வி
by ayyasamy ram Today at 6:41 am

» கொரோனா வைரசால் கடும் தட்டுப்பாடு; ஜப்பான் ஆஸ்பத்திரியில் 6 ஆயிரம் முகக்கவசங்கள் திருட்டு
by ayyasamy ram Today at 6:35 am

» சசிகலா பினாமி சொத்துகள் முடக்கம் ஆதாரம் உள்ளதாக வரித்துறை விளக்கம்
by ayyasamy ram Today at 6:31 am

» இந்தியா வல்லரசாக சுப்பிரமணியன் சுவாமி ஐடியா
by ayyasamy ram Today at 6:27 am

» நித்யானந்தாவுக்கு கைது 'வாரன்ட்'
by ayyasamy ram Today at 6:21 am

» பிரான்சின் மிக பழமையான அணு ஆலை மூடப்படுகின்றது..!!
by ayyasamy ram Yesterday at 8:50 pm

» வெற்றியை பாதிக்கும் பதற்றத்தைத் தவிர்க்கலாம்! தென்கச்சி சுவாமிநாதனின் குட்டிக்கதை
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» வயிறு சம்பந்தமான வியாதிகள் நீங்க அருமையான முத்திரை
by T.N.Balasubramanian Yesterday at 6:42 pm

» இவரல்லவோ தமிழறிஞர் - கவிதை
by T.N.Balasubramanian Yesterday at 6:31 pm

» இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:19 pm

» மருத்துவ பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» சொர்க்கத்தில் இருப்பது போல பூமியில் வாழ்
by ayyasamy ram Yesterday at 2:14 pm

» ஓ பட்டர் ஃபிளை… ! ஓ பட்டர் ஃபிளை ..! டாப்ஸியின் ரிசண்ட் போட்டோஷூட்
by ayyasamy ram Yesterday at 2:02 pm

» குட்டி ரேவதி கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 1:59 pm

» உறங்கிக்கொண்டிருக்கும் இரவு - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:59 pm

» குழந்தைகளுக்கான புத்தகங்கள் - குட்டி ரேவதி
by ayyasamy ram Yesterday at 1:57 pm

Admins Online

நிழல் காந்தியின் நிஜ முகவரி

நிழல் காந்தியின் நிஜ முகவரி Empty நிழல் காந்தியின் நிஜ முகவரி

Post by ayyasamy ram on Tue Jul 23, 2019 8:43 am

நிழல் காந்தியின் நிஜ முகவரி Gandhi
-


காந்தியாகத் திரைப்படங்களில் நடிப்பவர் மட்டுமல்ல
காந்தி நெறிகளைப் பின்பற்றி வாழ்பவர் கனகராஜ்.
இது தவிர மொழி பெயர்ப்பாளர், எழுத்தாளர் என பல
முகங்களுக்குச் சொந்தக்காரர்.

நிஜ வாழ்க்கையில் யார் இந்த கனகராஜ்?
அவரிடம் கேட்டோம்:

"நான் மதுரை அருகேயுள்ள அருப்புக்கோட்டை பகுதியைச்
சேர்ந்தவன். பொம்மக்கோட்டை என்ற கிராமம் தான் பிறந்து
வளர்ந்த ஊர். 3 வயதில் புத்தர் வேடமிட்டு நடித்தது தான்
மேடையேறிய முதல் அனுபவம்.

பள்ளியில் படிக்கும் போதே நாடகங்களில் நடித்த அனுபவம்
உண்டு. பள்ளிப்படிப்பை முடித்ததும், மதுரை அமெரிக்கன்
கல்லூரியில் பி.எஸ்சி படித்தேன். விடுதியில் தங்கி படித்தேன்.
அதனால் ஆண்டுதோறும் விடுதி நாள் வந்தால், மாணவர்கள்
சேர்ந்து நாடகம் தயாரித்து நடிப்போம்.

அப்போது கல்லூரியில் ஆண்டு விழா வந்தது. அதில்
பங்கேற்பதற்கு வாய்ப்புக் கேட்டேன். இல்லை என்று சொல்லி
விட்டார்கள். எனது நண்பர்களிடம் வந்து சொன்னேன்.
"உனக்கே வாய்ப்பு இல்லை என்று சொல்லிவிட்டார்களா?
கவலைப்படாதே நாமே ஒரு நாடகம் போடலாம்' என்றார்கள்.

1966-ஆம் ஆண்டு கலைஞரின் தாக்கம் அதிகம். கலைஞர்
எழுதிய "நச்சுக்கோப்பை' நாடகத்தைப் போடுவது என முடிவு
செய்தோம். அதில் அனைத்துக் கதாபாத்திரங்களுக்கும்
நபர்கள் சரியாக இருந்தார்கள்.

சாந்தா என்ற பெண் கதாபாத்திரத்துக்கு மட்டும் ஆள் இல்லை.
உடனே என்னை பெண் வேடமிட்டு நடிக்கச் சொன்னார்கள்.
சரி, என்று நடித்தேன். அனைத்து தரப்பில் இருந்தும்
பாராட்டுகள் குவிந்தன. பேராசிரியர்களே என்னுடன் போட்டோ
எடுக்க போட்டி போட்டனர்.

அதனைத் தொடர்ந்து கண்ணதாசன் தலைமையேற்ற
நாடகத்திலும் பெண் வேடத்தில் நடித்தேன். அவரும் என்னைப்
பாராட்டினார்.

படிப்பை முடித்ததும் சினிமாவில் இயக்குநராகவோ,
கவிஞராகவோ ஆக வேண்டும் என்று ஆசைபட்டேன்.
நடிகராக ஆர்வமில்லை. ஆனால் வாழ்வாதாரம் வேண்டுமே.
சென்னைக்கு வந்தேன். மருத்துவ பிரதிநிதியாக
பணியாற்றினேன்.

ஆங்கிலம் சரளமாக பேச கற்றுக் கொண்டேன். இயக்குநர்
ஒருவரின் நட்பு கிடைத்தது. 10 ஆண்டுகள் மருத்துவ பிரநிதியாக
பணியாற்றிய என்னை வேறு இடத்திற்கு மாறுதல் செய்வது
என முடிவு எடுத்தார்கள்.

வேலையை விட்டுவிட்டேன். "ஹிக்கின்பாதம்ஸ்' நிறுவனத்தில்
பணியாற்றினேன். ஆனால் சினிமாவிற்குள் நுழைந்து விட
வேண்டும் என்ற முயற்சி ஒருபுறம் தொடர்ந்து கொண்டே
இருந்தது.
--------------
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 53015
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12728

https://rammalar.wordpress.com/

Back to top Go down

நிழல் காந்தியின் நிஜ முகவரி Empty Re: நிழல் காந்தியின் நிஜ முகவரி

Post by ayyasamy ram on Tue Jul 23, 2019 8:47 am

நிழல் காந்தியின் நிஜ முகவரி Gandhi1
-
நிழல் காந்தியின் நிஜ முகவரி Gandhi2
-

அப்போது பிரபலமான செய்தி வாசிப்பாளரான
ஷோபனா ரவியின் மாமனார் பேராசிரியர் விஸ்வம்,
வீடியோ நாடகம் எடுத்தார். அதில் நடித்தேன். மேலும்
ரகு என்பவர் ஆண்டு தோறும் நாரத கான சபாவில்
நாடக விழா நடத்துவார்.

அதில், காசி நாத சாஸ்திரி வேடம் கொடுத்து நடிக்கச்
சொன்னார். இதற்கிடையே என்னோடு நட்பாக இருந்த
இயக்குநர் மரணமடைந்துவிட்டார். கவிஞர்
கண்ணதாசனும் இறந்துவிட்டார். எப்படியும் கவிஞர்
ஆகிவிட வேண்டும் என்ற ஆசை உண்டானது. ஆனால்,
இன்று வரை கவிஞர் ஆகும் வாய்ப்புக் கிட்டவில்லை.
ஆனால் நடிப்பதற்கு மட்டும் தொடர்ந்து வாய்ப்புகள்
கிடைத்தன.

ராடான் நிறுவனம் தயாரித்த "சித்தி', "சின்னப் பாப்பா,
பெரியபாப்பா' தொடர்களில் நடித்தேன். அதனைத்
தொடர்ந்து நண்பர் ஒருவர் ரமணா கம்யூனிகேசன்ஸ்
நிறுவனத்திற்கு என்னை அழைத்துச் சென்றார்.

என்னைப் பார்த்த இயக்குநர் பாலகிருஷ்ணன் "நீங்கள்
காந்தி வேடத்துக்கு மிகவும் பொருத்தமாக இருப்பீர்கள்'
என்றார். அவர் இயக்கிய காமராஜர் படத்தில் என்னை
காந்தியாக நடிக்க வைத்தார். அடுத்து "முதல்வர் மகாத்மா'
படம் எடுத்தார். இதில் அனுபம்கேர் உடன் நடிக்கும்
வாய்ப்புக் கிடைத்தது.

காந்தியாக நடிக்க ஆரம்பித்த பிறகு காந்தி பற்றித் தெரிந்து
கொள்ளும்படி, இயக்குநர் பாலகிருஷ்ணன் சொன்னார்.
அதனால் காந்தி பற்றிப் படிக்க ஆரம்பித்தேன். அவருடைய
வாழ்க்கை, கொள்கை பற்றி முழுமையாகத் தெரிந்து
கொண்டேன். இன்றும் உலகம் ஏராளமானப் பிரச்னைகளில்
சிக்கி கிடக்கிறது. இதற்கு காந்திய வழியில் நிச்சயம் தீர்வு
காண முடியும்.

தற்போது நண்பர்களோடு இணைந்து "உன்னத இந்தியா
இயக்கத்தை' ஆரம்பித்துள்ளோம். அப்துல்கலாமும், காந்தியும்
சொன்ன விஷயங்களை மக்களுக்குப் பயன்படும்படி செய்ய
வேண்டும் என்பதே எங்களுடைய நோக்கம்.

தூய்மை இந்தியா, பசுமை இந்தியா, ஆரோக்கிய இந்தியா,
வளமான இந்தியா, அமைதி இந்தியா உருவாக முயற்சி
எடுத்துக் கொண்டு இருக்கிறோம்.

இந்த அமைப்பை நடத்துவற்கு யாரிடமும் நன்கொடை
கேட்பதில்லை. அடுக்குமாடி குடியிருப்பு, பள்ளிகளில்
கிடைக்கும் பயன்படுத்த முடியாத பொருட்களை மறு சுழற்சி
செய்து அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தில் இந்த
அமைப்பு செயல்பட்டு வருகிறது.

என்னுடைய அப்பா ஆசிரியர். அம்மா இல்லத்தரசி. எங்கள்
ஊரில் சுதந்திர போராட்ட வீரர்கள் அதிகம். நாட்டு பற்றுள்ள
மண். என்னுடைய அம்மா நிறையப் புத்தகங்கள் படிப்பார்.

அப்போது சொல்வார் "என்னுடைய குழந்தைகள் பெரிய
பணக்காரனாக வரணும்னு ஆசைப்படல. காந்தி மாதிரி
விவேகானந்தர் மாதிரி வரணும்' என்பார்.

அவருடைய ஆசையை நான் நிறைவேற்றி இருக்கிறேன்
என நினைக்கிறேன் என்று சொல்லும், கனகராஜின்
கண்களில் நீர் கோர்க்கிறது.

நான் அதிகம் பணம் சம்பாதிக்கவில்லை. ஆனால், நல்ல
மனங்களில் இடம் பிடித்து இருக்கிறேன். இதுவே காந்தி
தந்த பரிசு என்கிறார் "நிழல் காந்தி'யான கனகராஜ்!
-
------------------------

- வனராஜன்
நன்றி- தினமணி

ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 53015
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12728

https://rammalar.wordpress.com/

Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை