உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» சென்னையில் திடீரென நீல நிறமாக மாறிய கடல் அலைகள்..
by சக்தி18 Today at 6:39 pm

» 9 நர்ஸ்களும் குழந்தைகளும்
by சக்தி18 Today at 6:34 pm

» கைது செய்யப்படுகிறாரா ப.சிதம்பரம்?
by சக்தி18 Today at 6:32 pm

» ஜெயலலிதா உயிரோடு இருந்திருந்தால், என்னை அமைச்சராக்கியிருப்பார் என கருணாஸ்
by சக்தி18 Today at 6:29 pm

» எடுத்தோம் கவிழ்த்தோம்னு வேலை செய்யறான்…!!
by பழ.முத்துராமலிங்கம் Today at 4:01 pm

» வட தமிழகத்தில் மழை
by T.N.Balasubramanian Today at 4:00 pm

» பேல்பூரி - கண்டது, கேட்டது....!!
by T.N.Balasubramanian Today at 3:50 pm

» வியாபாரிகள் சங்கத்தினர் நடத்தும் இலவச மருத்துவமனை: தினமும் பயன் அடையும் 500 நோயாளிகள்
by T.N.Balasubramanian Today at 3:45 pm

» அத்திவரதர் உணர்த்தும் உண்மை...!!
by T.N.Balasubramanian Today at 3:20 pm

» எதற்கடி வலி தந்தாய் - விக்ரன் மகன் துருவ் விக்ரம் பாடிய பாடல்!
by சக்தி18 Today at 2:30 pm

» டார்லிங், ஒரு வார்த்தை சொல்லு…!!
by சக்தி18 Today at 2:15 pm

» சந்திரயான் விண்கலம் வெற்றிகரமாக பயணம்: நிலவின் சுற்றுவட்டப்பாதையை அடைந்தது
by ayyasamy ram Today at 11:21 am

» ஏடிஎம் கார்டுகள் இனி இல்லை: பணம் எடுக்க எஸ்பிஐ வங்கி புதிய திட்டம்
by ayyasamy ram Today at 11:15 am

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Today at 10:24 am

» சீரமைப்பு பணி நிறைவு: விவேகானந்தா படகு மீண்டும் இயக்கம்
by ayyasamy ram Today at 8:59 am

» கூட்டை வரைந்து விடு – கவிதை
by ayyasamy ram Today at 8:48 am

» எப்போதும் வேலை செய்....!- கபீர்தாசர்
by ayyasamy ram Today at 6:19 am

» லயன் காமிக்ஸ் | Free Download
by i6appar Today at 6:09 am

» `அன்பை வலியுறுத்தாத சமயம் சமயமில்லை' - எளிய வழியில் ஆன்மிகம் வளர்த்த கபீர்தாசர்
by ayyasamy ram Today at 5:45 am

» பழம் பெரும் ஹிந்தி இசை அமைப்பாளர் கய்யாம் மரணம்
by ayyasamy ram Today at 5:20 am

» இந்திய அணி கிரிக்கெட் வீரர்களுக்கு மிரட்டல்! பாதுகாப்பு அதிகரிப்பு
by ayyasamy ram Today at 5:15 am

» ஜார்கண்ட் மாநிலத்தில், மளிகை கடைகளில் மது விற்க பரிந்துரை
by ayyasamy ram Today at 5:13 am

» சாஹோவில் ஸ்டண்ட் காட்சிகள் சவாலாக இருந்தது- ஷ்ரத்தா கபூர்
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» சங்கடங்களைத் தீர்க்கும் மஹா சங்கடஹர சதுர்த்தியான இன்று இதைச் செய்ய மறக்காதீங்க!
by T.N.Balasubramanian Yesterday at 8:19 pm

» கல்வி, 'டிவி' வரும் 26ல் துவக்கம்
by T.N.Balasubramanian Yesterday at 6:42 pm

» வங்காளதேசத்தில் பயங்கர தீ விபத்து: 15 ஆயிரம் வீடுகள் எரிந்து சாம்பல் - 50 ஆயிரம் பேர் உடைமைகளை இழந்து தவிப்பு
by T.N.Balasubramanian Yesterday at 6:36 pm

» வாழ்க்கையும் ஒரு பாரதம்தான்….
by T.N.Balasubramanian Yesterday at 6:34 pm

» தண்ணியில்லாக் காட்டுக்கு மாத்திட்டாங்க…!!
by T.N.Balasubramanian Yesterday at 6:29 pm

» கவர்னர் மாளிகையில் கண்டுபிடிக்கப்பட்ட 15 ஆயிரம் சதுர அடி பதுங்கு குழி அருங்காட்சியகமாக மாற்றம்
by T.N.Balasubramanian Yesterday at 6:25 pm

» பிரம்மச்சரியம் மட்டுமே பீஷ்மமாகாது
by T.N.Balasubramanian Yesterday at 6:19 pm

» பீகார் முன்னாள் முதல்வர் ஜெகன்நாத் மிஸ்ரா மறைவு
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» காலம் கற்பித்த பாடம்…!
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» அத்திவரதர் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» நிம்மதி – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» எதுக்கு ரெண்டு திருஷ்டி பொம்மை..?
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» வயிற்றுப் போக்கினால் அவஸ்தையா? இது உதவும்
by ayyasamy ram Yesterday at 1:06 pm

» வீடியோ கால் லஞ்ச்
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» எல்லாமே தண்ணிதான்..!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» அழுகை – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» கருட வாகனமும் கருடக் கொடியும்:
by ayyasamy ram Yesterday at 12:09 pm

» எந்த கிழமையில் கருடனை தரிசித்தால் என்ன பலன்
by ayyasamy ram Yesterday at 12:01 pm

» இது இன்றைய மீம்ஸ்.
by ayyasamy ram Yesterday at 11:39 am

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:18 am

» பிரான்சில் நடைபெறும் சைக்கிள் போட்டி - நடிகர் ஆர்யா பங்கேற்பு
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 10:55 am

» ”இந்தியாவின் சிறந்த அக்பர்” ஐநா இந்திய தூதர் அக்பருதீனுக்கு குவியும் பாராட்டுகள்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 10:53 am

» ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சி.பி.ஐ. அதிகாரிகள் திடீர் சோதனை; முக்கிய ஆவணங்கள் சிக்கியது
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 10:41 am

» அரசு, தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 97 எம்.பி.பி.எஸ். இடங்கள் காலியாக உள்ளது - சென்டாக் ஒருங்கிணைப்பாளர் தகவல்
by ayyasamy ram Yesterday at 7:27 am

» கிறிஸ்துமஸ் பண்டிகையில் சூர்யா, சிவகார்த்திகேயன் படங்கள் மோதல்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ‘ஆர்டர்’ செய்த உணவு வர தாமதம்: ஓட்டல் ஊழியரை சுட்டுக்கொன்ற வாடிக்கையாளர்
by ayyasamy ram Yesterday at 6:57 am

» கார்ட்டூன் & கருத்து சித்திரம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 6:53 am

Admins Online

அன்புடன் சீனாவிலிருந்து

அன்புடன் சீனாவிலிருந்து   Empty அன்புடன் சீனாவிலிருந்து

Post by T.N.Balasubramanian on Thu Jul 18, 2019 6:26 pm

அன்புடன் சீனாவிலிருந்து

சீனாவில் ஒரு பெரியவர் இருந்தார். அவருக்கு மூன்று மகன்கள். முதல் இரண்டு மகன்களுக்கும் திருமணம் ஆகியிருந்தது. எப்போதும் வீடு மகிழ்ச்சியாக இருந்தது. ஆனால், மருமகள்கள் தங்கள் தாய்வீட்டுக்குச் சென்றால், விரைவில் திரும்பி வர மாட்டார்கள்.

அன்றும் மருமகள்கள் தாய்வீடு செல்ல அனுமதி கேட்டனர். பெரியவர், “போய் வாருங்கள். வரும்போது நீங்கள் எனக்கு இரண்டு பொருட்களைக் கொண்டுவர வேண்டும். கொண்டு வராவிட்டால், மீண்டும் உங்கள் அம்மா வீடு செல்ல அனுமதிக்க மாட்டேன்” என்றார்.*

சரிங்க மாமா. என்ன வேணும், சொல்லுங்கள்?” என்றனர் இரு மருமகள்களும்.*

ஒரு காகிதத்தில் கொஞ்சம் காற்றை அடைத்துக் கொண்டு வரவேண்டும்” என்று ஒரு மருமகளிடமும், “காகிதத்தில் கொஞ்சம் தீயை கட்டிக் கொண்டுவர வேண்டும்” என்று இன்னொரு மருமகளிடமும் சொன்னார் பெரியவர்.

இதைக் கேட்டு மருமகள்கள் இருவரும் திகைத்தனர்.

சரி பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று கிளம்பிவிட்டனர். தாய் வீட்டில் சந்தோஷமாகச் சில நாட்கள் இருந்தார்கள். வீடு திரும்ப வேண்டிய நாள் வந்ததும்தான் மாமனார் கேட்ட விஷயம் பற்றிய பயம் வந்தது.

இருவரும் கிளம்பினார்கள். வழியெங்கும் கவலையோடு புலம்பிக்கொண்டே நடந்தனர். அப்போது எருமை மீது சவாரி செய்துகொண்டு வந்த ஓர் இளம்பெண், உங்களுக்கு என்ன பிரச்சினை என்று கேட்டார்.

இவர்களும் தங்கள் மாமனார் கேட்டதைச் சொன்னார்கள். அந்தப் பெண், இவ்வளவுதானா, கவலைப்படாதீர்கள்” என்று சிரித்தார்.*

முதல் மருமகளைப் பார்த்து, “ஒரு காகிதத்தில் விசிறி செய்து கொடு. நீ ஒரு சிம்னி விளக்கை ஏற்றி, ஒரு காகிதத்தில் சுற்றி எடுத்துட்டுப் போ” என்றார்.

மருமகள்கள் இருவருக்கும் பிரச்சினை தீர்ந்ததில் மகிழ்ச்சி. அந்தப் பெண்ணுக்கு நன்றி சொல்லிவிட்டுக் கிளம்பினார்கள்.*

மாமனாரிடம் அந்தப் பெண் கூறியபடியே விசிறியையும், சிம்னி விளக்கையும் தந்தார்கள். அவர் ஆச்சரியப்பட்டார். இருவரும் வழியில் சந்தித்த அந்தப் பெண் பற்றிச் சொன்னார்கள்.*

இவ்வளவு புத்திசாலியான பெண்ணை, என் கடைசி மகனுக்கு மணம் முடிக்கப் போகிறேன்” என்றார் பெரியவர்.

அந்தப் பெண்ணைத் தேடிக் கண்டுபிடிக்க ஆட்களை அனுப்பினார். கண்டுபிடித்துச் சொன்னதும், சம்பந்தம் பேசினார். திருமணம் இனிதே நடந்து முடிந்தது. வீட்டில் அனைத்தையும் பொறுப்பாகச் செய்தார் கடைசி மருமகள்.

பெரியவருக்கு மகிழ்ச்சி. நிறைவான வாழ்க்கை வாழ்ந்தார். எனவே தன் வீட்டு வாசலில், ‘இது நிறைவான வீடு’ என்று ஒரு பலகையை மாட்டி வைத்தார்.*

சில காலம் கழித்து அந்த வழியே சென்ற ஒரு துறவி இந்தப் பலகையைப் படித்தார். ‘யார் இது, இவ்வளவு திமிராக எழுதி வைத்தது? இந்த வீட்டினருக்குப் பாடம் புகட்டி, திமிரை அடக்கப் போகிறேன்’ என்று முடிவு செய்தார்.*

வீட்டில் நுழைந்த அவரை, கடைசி மருமகள்தான் வரவேற்றார். துறவி, “இது நிறைவான வீடாமே… அப்படியானால் எனக்கு இந்தச் சாலையின் நீளத்துக்கு ஒரு துணியை நெய்து கொடு. இல்லாவிட்டால் சபித்து விடுவேன்” என்றார்.*

கண்டிப்பாக நெய்கிறேன். சாலையின் இரு முனைகளையும் கண்டுபிடித்து, எவ்வளவு நீளம் என்று அளந்து தாங்கள் சொன்னால், அந்த அளவுக்கு நான் துணியை நெய்து கொடுக்கிறேன்” என்றார் மூன்றாவது மருமகள்.

அவர்கள் வீடு இருந்த சாலை எங்கோ வெகு தொலைவில் இருந்த தலைநகரத்திலிருந்து நாட்டின் எல்லைவரை சென்றது. அதன் ஆரம்பமும் முடிவும் யாருக்கும் தெரியாது என்பதால் துறவிக்குப் பதில் சொல்ல முடியவில்லை.*

சரி, வேண்டாம். கிணற்று நீர் அளவு எண்ணெய் ஆட்டிக் கொண்டுவா” என்றார் துறவி.*

தாங்கள் தயவு செய்து கிணற்றில் எத்தனை ஆழாக்கு நீர் உள்ளது என்று சொன்னால், உடனே அத்தனை ஆழாக்கு எண்ணெயை ஆட்டித் தந்துவிடுகிறேன்” என்றார் மூன்றாவது மருமகள் பணிவோடு.*

துறவிக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை. சில நொடிகள் யோசித்தார். இந்தப் புத்திசாலிப் பெண்ணை மடக்குவது எளிதல்ல என்பதை உணர்ந்தார். யோசித்தபடியே, பறந்து வந்த ஒரு புறாவைச் சட்டென்று பிடித்தார்.*

நீ மிகவும் புத்திசாலியாக இருக்கிறாய். இந்தப் புறாவை நான் பறக்க விடப் போகிறேனா, இல்லை கூண்டுக்குள் அடைக்கப் போகிறேனா என்று சொல் பார்ப்போம்” என்றார் துறவி.*

புத்திசாலி மருமகள் துறவியை வணங்கி, நீங்கள் முக்காலமும் அறிந்த ஞானி. வாசலில் நிற்கும் நான் இப்போது உள்ளே செல்லப் போகிறேனா, இல்லை தெருவில் இறங்கப் போகிறேனா என்று சொல்லுங்கள். நானும் உங்கள் கேள்விக்கு விடை தருகிறேன்” என்றார்.*

துறவி அமைதியாக இருந்தார். “துறவியான தங்களுக்கே என் கேள்விக்கு விடை தெரியாதபோது, அனைத்தும் அறிந்த ஞானியான தங்களது கேள்விக்கு எனக்கு எப்படி விடை தெரியும்?” என்று கேட்டு மீண்டும் அவரை வணங்கினார் மூன்றாவது மருமகள்.*

நீ சொல்வதும் சரிதான். இந்த வீடு நிறைவான வீடுதான்” என்று சொல்லிவிட்டு, துறவி தனது பயணத்தைத் தொடர்ந்தார்.*

நன்றி வாட்சப்

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 24918
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 8986

View user profile

Back to top Go down

அன்புடன் சீனாவிலிருந்து   Empty Re: அன்புடன் சீனாவிலிருந்து

Post by ayyasamy ram on Thu Jul 18, 2019 7:03 pm

அன்புடன் சீனாவிலிருந்து   103459460
-
நல்ல கருத்துள்ள கதை-
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 47393
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12249

View user profile https://rammalar.wordpress.com/

Back to top Go down

அன்புடன் சீனாவிலிருந்து   Empty Re: அன்புடன் சீனாவிலிருந்து

Post by சக்தி18 on Thu Jul 18, 2019 7:51 pm

அன்புடன் சீனாவிலிருந்து   1571444738
நிறைவான வீடு,நிறைவான கதை. யார் அந்தப் பெண்?
சக்தி18
சக்தி18
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 527
இணைந்தது : 24/12/2018
மதிப்பீடுகள் : 155

View user profile

Back to top Go down

அன்புடன் சீனாவிலிருந்து   Empty Re: அன்புடன் சீனாவிலிருந்து

Post by T.N.Balasubramanian on Thu Jul 18, 2019 8:02 pm

@சக்தி18 wrote:அன்புடன் சீனாவிலிருந்து   1571444738
நிறைவான வீடு,நிறைவான கதை. யார் அந்தப் பெண்?
மேற்கோள் செய்த பதிவு: 1300771

நிச்சயமாக ஈகரை சகோதரியாகத்தான் இருப்பர்.

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 24918
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 8986

View user profile

Back to top Go down

அன்புடன் சீனாவிலிருந்து   Empty Re: அன்புடன் சீனாவிலிருந்து

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை