உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» சிங்கை…மதியழகன் கவிதைகள்(நன்றி-உதயசூரியன்- காலாண்டிதழ்)
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:43 am

» மசூதியில் பெண்களை அனுமதிக்க சுப்ரீம் கோர்ட்டில் மனு
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:36 am

» ஒரு வாரத்துக்குள் அமைகிறது ராமர் கோவில் அறக்கட்டளை
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:29 am

» சினிமாவில் நிலைக்கும் ரகசியம் -நடிகை ஸ்ரேயா
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:26 am

» உங்க ஊருல தோசை எதுல ஊத்துவாங்க
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:24 am

» பட்டமளிப்பு விழாவில் ரகளை; வெளியேறினார் மே.வங்க கவர்னர்
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:20 am

» 6 அடி உயர தக்காளி, 'மரம்'
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:16 am

» அடுத்த மாதம் 25 படங்கள் ரிலீஸ்
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:13 am

» பாரதிராஜா இயக்கும் 3 படங்கள்
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:10 am

» பொன்னியின் செல்வன் திரைப்படம்
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:06 am

» இஸ்ரேலில் சொட்டு தண்ணீர் வீணாகாது!
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:03 am

» முதல் ஓவரில் 'ஹாட்ரிக்'; இந்திய வீரர் உலக சாதனை
by பழ.முத்துராமலிங்கம் Today at 10:58 am

» கோபுர தரிசனம் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 9:24 am

» பாகிஸ்தானில் வாசனை திரவிய தொழிற்சாலையில் பயங்கர தீவிபத்து: 11 பேர் உடல் கருகி சாவு
by ayyasamy ram Today at 5:52 am

» அரியலூர், கள்ளக்குறிச்சியில் புதிய மருத்துவ கல்லூரிகள் மத்திய அரசு அனுமதி
by ayyasamy ram Today at 5:50 am

» புற்றுநோய் நோயாளிகளுக்கு சேவை: பத்மஸ்ரீ விருது பெற்ற தமிழக டாக்டர்
by ayyasamy ram Today at 5:36 am

» அமெரிக்க தூதராக தரன்ஜித் சிங் சந்து நியமனம்
by ayyasamy ram Today at 5:32 am

» 10 எளிமையான வீட்டுக் குறிப்புகள்!
by T.N.Balasubramanian Yesterday at 8:18 pm

» பாவம் முதியவர்கள் -தவிக்க விடும் தரம் கெட்டோர்
by T.N.Balasubramanian Yesterday at 8:08 pm

» மில்க்மெய்டு சேர்த்து சர்க்கரை பொங்கல் தயாரித்தால் - (வீட்டுக் குறிப்புகள்)
by ஜாஹீதாபானு Yesterday at 6:43 pm

» கடவுளுக்கு ஏற்றும் விளக்கை குளிர வைக்கும் முறை
by ayyasamy ram Yesterday at 6:05 pm

» பழுப்பு இல்லை, பளீச்!- வீட்டுக் குறிப்புகள்
by மாணிக்கம் நடேசன் Yesterday at 2:57 pm

» 40 நாள் போருக்கு ஆயுதங்களை தயாா்படுத்துகிறது ராணுவம்!
by சக்தி18 Yesterday at 2:29 pm

» தஞ்சை பெரிய கோவிலில் தமிழ், சமஸ்கிருதத்தில் குடமுழுக்கு நடத்தப்படும் - தமிழக அரசு
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» பத்மஸ்ரீ விருது பெற்ற ஆரஞ்சு பழ வியாபாரி - சுவாரசிய தகவல்
by ayyasamy ram Yesterday at 2:06 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு
by ayyasamy ram Yesterday at 1:58 pm

» சீனாவில் தவிக்கும் இந்தியர்களை அழைத்து வர சிறப்பு விமானம் தயார்
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கலாமின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 1:48 pm

» ஜனவரி 31, பிப். 1-இல் வங்கி ஊழியா் வேலை நிறுத்தம்: அகில வங்கி ஊழியா்கள் சங்கம் அறிவிப்பு
by ayyasamy ram Yesterday at 12:13 pm

» இந்த வாரம் வெளியாகவுள்ள ஆறு தமிழ்ப் படங்கள்!
by ayyasamy ram Yesterday at 12:08 pm

» இரண்டாயிரம் பெண்கள் பங்கேற்ற பிரம்மாண்ட பரதநாட்டியம்: இந்திய மொழிகளின் பாடல்களுக்கு நடனமாடினா்
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» உலக அழகிப் போட்டி
by ayyasamy ram Yesterday at 11:48 am

» 'ஆக்ஸ்போர்டு' அகராதியில் இடம்பிடித்த, 'ஆதார்'
by ayyasamy ram Yesterday at 7:11 am

» உள்நாட்டு விவகாரத்தில் தலையிடுவதா: ஐரோப்பிய யூனியனுக்கு இந்தியா சூடு
by ayyasamy ram Yesterday at 7:09 am

» வேலன்:-உங்கள் ;பாஸ்வேர்டின் உறுதி தன்மை அறிந்துகொள்ள-Passwordium
by velang Yesterday at 7:07 am

» ஆந்திராவில் மேல்சபை கலைக்கப்படும்:அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றம்
by ayyasamy ram Yesterday at 7:07 am

» 'ஐ.என்.எஸ்., கவரட்டி' போர்க்கப்பல்:விரைவில் இந்திய கடற்படையில் சேர்ப்பு
by ayyasamy ram Yesterday at 7:04 am

» கவர்னர் சமாதானம்: மம்தா நிராகரிப்பு
by ayyasamy ram Yesterday at 7:01 am

» புத்தகம் தேவை : இறையன்பு IAS
by nahoor Mon Jan 27, 2020 9:54 pm

» முத்துலட்சுமி ராகவன் நாவல்கள்
by nahoor Mon Jan 27, 2020 9:50 pm

» வெற்றி உங்களுக்கே - பக்தி கதை
by ayyasamy ram Mon Jan 27, 2020 9:15 pm

» வடிவேலு -கைப்புள்ள உருவான விதம்
by T.N.Balasubramanian Mon Jan 27, 2020 9:14 pm

» கீதை காட்டும் பாதை
by ayyasamy ram Mon Jan 27, 2020 9:13 pm

» ஆன்மிகம் - கேளுங்க சொல்கிறோம் - தொடர் பதிவு
by ayyasamy ram Mon Jan 27, 2020 8:44 pm

» நாராயணா என்னும் நாமம், நாவால் சொன்னால் வரும் ஷேமம்
by ayyasamy ram Mon Jan 27, 2020 8:17 pm

» குயிலே, குமரன் வரக் கூவுவாய்..! - எம்.எல் வசந்தகுமாரி பாடியது
by ayyasamy ram Mon Jan 27, 2020 8:10 pm

» பிறகேன் இத்தனை வாதம்?
by T.N.Balasubramanian Mon Jan 27, 2020 4:50 pm

» ஒரு வெட்டுக்கு இது இரண்டு கிடைக்கும் – குறுக்கெழுத்துப் போட்டி
by சக்தி18 Mon Jan 27, 2020 3:07 pm

» மூளை…முடுக்கு!- விடை சொல்லுங்கள்
by ayyasamy ram Mon Jan 27, 2020 2:51 pm

» சினிமா- பழைய பாடல்கள்- காணொளிகள்
by ayyasamy ram Mon Jan 27, 2020 12:20 pm

Admins Online

கிழவனுக்கு ஒரு போர்வை! – சிறுகதை

கிழவனுக்கு ஒரு போர்வை! – சிறுகதை Empty கிழவனுக்கு ஒரு போர்வை! – சிறுகதை

Post by ayyasamy ram on Mon Jul 08, 2019 7:27 pm

கிழவனுக்கு ஒரு போர்வை! – சிறுகதை E_1562318154
-
அந்த கிழவனை, பார்க்கப் பார்க்க, மனம் நெகிழ்ந்தது.
எண்ணெய் கண்டிராத தலை, குளித்து நிச்சயம், ஒரு
மாதமாவது ஆகியிருக்கும். ஒரு அழுக்கு வேட்டியே
மானம் காக்கவும், குளிர் காலத்தில் போர்வையாகவும்,
ன்றாவது தலை குளித்தால், துண்டாகவும் பயன்
பட்டிருக்க வேண்டும் என்று தோன்றியது.

அவன் பக்கத்தில், ஒரு அலுமினியக் குவளை மற்றும்
விரிசலாக இருந்த எவர்சில்வர் பாத்திரத்தில், மஞ்சள்
பூத்த பழைய சோறு. அந்த இடத்தை கடக்கும் போது,
கிழவனின் உடல் மேல் ஒரு வீச்சம் எல்லாம் சேர்ந்து,
குடலைப் புரட்டியது.

ஆனாலும், இத்தனை வறுமையிலும் அவனுக்கு
உழைத்துச் சாப்பிட வேண்டும் என்ற நம்பிக்கை;
தன்னம்பிக்கை.

ஒரு சிறிய ரம்பம், மரக்கட்டை; இதுவே அவன் சொத்து. க
ண்ணருகில் எடுத்து சென்று சிரத்தையாய், அந்த
மரக்கட்டையை ராவி, ஈருளி செய்யும் சாதுர்யம், வியக்க
வைத்தது.

இதில், இவன், என்ன சம்பாதித்து, எதைச் சாப்பிட முடியும்...
அதிலும், பேரம் பேசும் சிலரைப் பார்த்தால், எரிச்சல் தான்
தோன்றும். ஆனாலும், அவன் மனம் தளராமல் ஈருளி
செய்தபடி இருப்பான்.

இன்று, அவன் மனதில் உறுதியாய் ஒன்று தோன்றியது.
வீட்டில் ஐந்து கம்பளிகள், அது தவிர, நிறையப்
போர்வைகள் இருக்கின்றன. ஏதாவது, ஒரு போர்வையைக்
கொடுத்தால் நன்றாக இருக்கும்.

பக்கத்தில் இருந்த கடையில், ஒரு சீப்பு பழம் வாங்கி,
அதில் இரண்டு பிய்த்து, கிழவனிடம் கொடுத்ததும்,
இடுங்கிய கண்களால் அவனை கூர்ந்து நோக்கினான்.

''என்ன சாமி... எதுக்கு பழம்?''

''சாப்பிடுங்க... தாத்தா!''

பையைக் குடைந்து, ஒரு பேன் சீப்பை எடுத்து,
''இந்தாங்க... இது, கொய்யாக் கட்டைல செஞ்சது...
ஆனாலும், நல்லா பேன் எடுக்கும்.''

''வேணாம், பெரியவரே... இது, என்ன பண்டமாத்தா?''

''இல்லை சாமி... நீங்க, யாருன்னு எனக்குத் தெரியாது.
நான், யாருன்னு உங்களுக்குத் தெரியாது. நீங்க,
அன்பால் செய்யலாம். நான் செய்யக் கூடாதா... ஏதோ
என்னால முடிஞ்சது,'' என்றதும், ஒரு கணம், அவன்
உடல் சிலிர்த்தது.

வீடு சென்றதும், படுக்கையறைக்கு நுழைந்தவன்
அதிர்ந்தான்.

'ஏய், நந்தினி... இங்கே இருந்த சால்வை எங்கே?''

''அதுவா... எங்கப்பா, ரொம்ப நாளா கேட்டுட்டு இருந்தார்.
நேத்து தான், தம்பி கொடுத்துட்டு வந்தான்,'' என்றாள்.

''அது போகட்டும்... நிறைய போர்வை இருந்ததே...''

''போங்க நீங்க... அவ்வளவும் எதுக்குன்னு, நமக்கு
வேண்டியதை மட்டும் வெச்சுட்டு, மிச்சத்தை பரண்லே
கட்டிப் போட்டேன். எதுக்கு, இவ்வளவு விசாரணை?''
என்றாள், நந்தினி.

''ஒண்ணுமில்லை,'' என்றவாறு, பரணை பார்த்தான்.
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 52327
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12710

https://rammalar.wordpress.com/

Back to top Go down

கிழவனுக்கு ஒரு போர்வை! – சிறுகதை Empty Re: கிழவனுக்கு ஒரு போர்வை! – சிறுகதை

Post by ayyasamy ram on Mon Jul 08, 2019 7:27 pm

'அதில், ஏறுவது பிரம்ம பிரயத்தனம். நடை வண்டி
துவங்கி, உடைந்து போன, 'ஈசி சேர்' வரை இருக்கும்.
காலை வைத்தால், வெண்கலக் கடையில் புகுந்த
யானை தான். அந்த சாமான் குவியலில் எங்கே
தேடுவது?'

'உஸ்...' என, பெருமூச்சு விட்டான்.

''என்ன பெருமூச்சு?'' என்றாள், நந்தினி.
-
-------------------

''நந்தினி... வழியில, ஒரு கிழவன், பாவமா இருக்கு,''
என, அவனை பற்றி கூறினான்.

''க்கும்... நீங்க கொடுத்து தான் விடியப் போறதா?
இன்று தருவீங்க... நாளைக்கு?'' என்றாள்.

கம்பளியைப் பற்றி பேச முடியாது. அவள் அப்பா
கேட்டதற்கே, தர முடியாது என்று சொல்லி விட்டாள். வீ
ட்டு நிர்வாகம் அவள் கையில். அவளை பகைத்துக்
கொள்ள முடியுமா?

துாக்கம் வர மறுத்தது. நாம் சொகுசாய் இங்கு படுத்துக்
கொண்டிருக்க, பாவம், அந்தக் கிழவன் மட்டும் குளிரில்
நடுங்க மாட்டானா?

''நந்தினி... துாங்கிட்டியா?'' என்றபடியே, விளக்கை
போட்டான்.

''என்னாச்சு,'' என்றாள், சற்றே துாக்கம் கலைந்த
எரிச்சலுடன்.

''மனச்சாட்சி வேண்டாமா... நாம மட்டும், 'ஹீட்டர்'
போட்டுக்கறோம்... போர்வை போத்திட்டு துாங்கறோம்...
அந்த கிழவன்,'' என்றதும், முறைத்தாள்.

''இங்கு பாருங்க... அவங்கவங்க செஞ்ச பாவ
புண்ணியத்துக்குத் தான், பலன். நாம நல்ல ஜென்மம்
எடுத்திருக்கோம்; சந்தோஷமா இருக்கோம். போவீங்களா...
என்னை போட்டுக் குழப்பாதீங்க,'' என்றாள்.

''ம்ஹும்... தத்துவம் பேசறே,'' என்றான்.

மறுநாள் காலையில், பரணில் ஏறினான்.
அரை மணி நேரம் முனைந்து, ஒரு போர்வையை எ
டுத்தே விட்டான்.

''உங்களுக்கு, கழண்டு தான் போச்சு,'' என்று கேலி
பேசிய, நந்தினியை பொருட்படுத்தாமல் கிளம்பினான்.

அந்த கிழவனை, கண்கள் தேட, துாரத்தில் ஒரே கூட்டம்...

'கிழவன் மண்டையை போட்டிருப்பானோ...
டே... தானம் கொடுத்தா, ஒழுங்காக் கொடுக்கணும்...'
என, முணு முணுத்தவனாய் நகர்ந்தான்.

நல்ல வேளை, உயிருடன் இருந்தான், கிழவன்.

போர்வையை அவனிடம் நீட்டினான்; ஏதும் பேசாமல்
வாங்கிக் கொண்டான்.

கேட்காமல் கொடுத்ததால், மதிப்பு இல்லையோ எனத்
தோன்றினாலும், அந்த போர்வையை கிழவன் போர்த்திக்
கொண்டதும், நிம்மதியுடன், ஒரு சிறு பெருமையும்
இருந்தது.

வீட்டிற்கு வந்தவனிடம், ''ப்பா... கொடுத்தாச்சா...
இல்லாட்டி, மண்டை வெடிக்சுடுமே... தாராள பிரபுவுக்கு,''
ன்றாள், நந்தினி.

''சரி... சரி... ஆபீஸ் கிளம்பணும்... சாப்பாடு ரெடியா?''
என்றான்.

ஆபீஸ் போகும்போதும், அதே கூட்டம், அங்கே
நின்றிருந்தது.

''என்னங்க... அங்கே கூட்டம்?'' என்றான்.

''தெரியாதுங்களா... ஏதோ ஒரு பொம்பளை பைத்தியம்...
செத்துடுச்சு... எவனோ லாரிக்காரன் அடிச்சுப்
போட்டுட்டான் போல,'' என்றதை, அந்த கிழவனும் காதில்
வாங்கியது தெரிந்தது.

கூட்டத்தை விலக்கி பார்த்த போது, பரிதாபமாய் இருந்தது.
சிறு பெண் தான்... முக்கால் நிர்வாணமாய், அங்கங்கு
துணி ஒட்டியிருந்தது. நிர்வாண உடலை வேடிக்கை பார்க்க,
அவ்வளவு கூட்டம்...

மனம் கனத்தது.

''டே... போங்கடா... காலிப் பசங்களா... நீங்க அக்கா, த
ங்கச்சிங்க கூட பொறக்கலை... பொண்டாட்டி இல்லை... நீங்க,
உங்க அம்மாவுக்கு பிறக்கலை... வேடிக்கை பாக்கறானுக,''
என்று சொன்னதோடு நில்லாமல், சற்றுமுன், அவன் கொடுத்த
போர்வையை போர்த்தி, அபலைப் பெண் அருகில் அமர்ந்து
அழுதான், கிழவன்.

கிழவனின் உடல், குளிரில் நடுங்கியது.

'உனக்கு என்னைத் தெரியாது... எனக்கு உன்னைத் தெரியாது...
ஆனா பாசம் தான்...' கிழவனின் வார்த்தைகள் அவனுள்
எதிரொலித்தது.

இருந்தாலும், இவ்வளவு நாளாக யோசித்து யோசித்து,
போர்வையை கொடுத்த நான் எங்கே... தனக்கு என்று
எதுவுமில்லை என்றாலும், அடுத்தவர்களின் கஷ்டத்தைப்
பொறுக்காத அவன் எங்கே...

ஒரு பாறாங்கல் நெஞ்சில் ஏறியது போல், பாரம்
அமுத்தியது!
-
----------------------------------

ரகு. பாலமுருகன்
வாரமலர்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 52327
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12710

https://rammalar.wordpress.com/

Back to top Go down

கிழவனுக்கு ஒரு போர்வை! – சிறுகதை Empty Re: கிழவனுக்கு ஒரு போர்வை! – சிறுகதை

Post by ஜாஹீதாபானு on Wed Jul 10, 2019 1:06 pm

கருத்துள்ள கதை பகிர்வுக்கு நன்றி
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 30909
இணைந்தது : 16/04/2011
மதிப்பீடுகள் : 7337

Back to top Go down

கிழவனுக்கு ஒரு போர்வை! – சிறுகதை Empty Re: கிழவனுக்கு ஒரு போர்வை! – சிறுகதை

Post by krishnaamma on Mon Dec 09, 2019 7:45 pm

@ayyasamy ram wrote:கிழவனுக்கு ஒரு போர்வை! – சிறுகதை E_1562318154
-
அந்த கிழவனை, பார்க்கப் பார்க்க, மனம் நெகிழ்ந்தது.
எண்ணெய் கண்டிராத தலை, குளித்து நிச்சயம், ஒரு
மாதமாவது ஆகியிருக்கும். ஒரு அழுக்கு வேட்டியே
மானம் காக்கவும், குளிர் காலத்தில் போர்வையாகவும்,
ன்றாவது தலை குளித்தால், துண்டாகவும் பயன்
பட்டிருக்க வேண்டும் என்று தோன்றியது.

அவன் பக்கத்தில், ஒரு அலுமினியக் குவளை மற்றும்
விரிசலாக இருந்த எவர்சில்வர் பாத்திரத்தில், மஞ்சள்
பூத்த பழைய சோறு. அந்த இடத்தை கடக்கும் போது,
கிழவனின் உடல் மேல் ஒரு வீச்சம் எல்லாம் சேர்ந்து,
குடலைப் புரட்டியது.

ஆனாலும், இத்தனை வறுமையிலும் அவனுக்கு
உழைத்துச் சாப்பிட வேண்டும் என்ற நம்பிக்கை;
தன்னம்பிக்கை.

ஒரு சிறிய ரம்பம், மரக்கட்டை; இதுவே அவன் சொத்து. க
ண்ணருகில் எடுத்து சென்று சிரத்தையாய், அந்த
மரக்கட்டையை ராவி, ஈருளி செய்யும் சாதுர்யம், வியக்க
வைத்தது.

இதில், இவன், என்ன சம்பாதித்து, எதைச் சாப்பிட முடியும்...
அதிலும், பேரம் பேசும் சிலரைப் பார்த்தால், எரிச்சல் தான்
தோன்றும். ஆனாலும், அவன் மனம் தளராமல் ஈருளி
செய்தபடி இருப்பான்.

இன்று, அவன் மனதில் உறுதியாய் ஒன்று தோன்றியது.
வீட்டில் ஐந்து கம்பளிகள், அது தவிர, நிறையப்
போர்வைகள் இருக்கின்றன. ஏதாவது, ஒரு போர்வையைக்
கொடுத்தால் நன்றாக இருக்கும்.

பக்கத்தில் இருந்த கடையில், ஒரு சீப்பு பழம் வாங்கி,
அதில் இரண்டு பிய்த்து, கிழவனிடம் கொடுத்ததும்,
இடுங்கிய கண்களால் அவனை கூர்ந்து நோக்கினான்.

''என்ன சாமி... எதுக்கு பழம்?''

''சாப்பிடுங்க... தாத்தா!''

பையைக் குடைந்து, ஒரு பேன் சீப்பை எடுத்து,
''இந்தாங்க... இது, கொய்யாக் கட்டைல செஞ்சது...
ஆனாலும், நல்லா பேன் எடுக்கும்.''

''வேணாம், பெரியவரே... இது, என்ன பண்டமாத்தா?''

''இல்லை சாமி... நீங்க, யாருன்னு எனக்குத் தெரியாது.
நான், யாருன்னு உங்களுக்குத் தெரியாது. நீங்க,
அன்பால் செய்யலாம். நான் செய்யக் கூடாதா... ஏதோ
என்னால முடிஞ்சது,'' என்றதும், ஒரு கணம், அவன்
உடல் சிலிர்த்தது.

வீடு சென்றதும், படுக்கையறைக்கு நுழைந்தவன்
அதிர்ந்தான்.

'ஏய், நந்தினி... இங்கே இருந்த சால்வை எங்கே?''

''அதுவா... எங்கப்பா, ரொம்ப நாளா கேட்டுட்டு இருந்தார்.
நேத்து தான், தம்பி கொடுத்துட்டு வந்தான்,'' என்றாள்.

''அது போகட்டும்... நிறைய போர்வை இருந்ததே...''

''போங்க நீங்க... அவ்வளவும் எதுக்குன்னு, நமக்கு
வேண்டியதை மட்டும் வெச்சுட்டு, மிச்சத்தை பரண்லே
கட்டிப் போட்டேன். எதுக்கு, இவ்வளவு விசாரணை?''
என்றாள், நந்தினி.

''ஒண்ணுமில்லை,'' என்றவாறு, பரணை பார்த்தான்.

எதுக்கு இத்தனை.... இவருக்கு ஒரு எண்ணம் இருந்தது போல அவர் மனைவிக்கு ஒரு எண்ணம் இருந்து இருக்கு....பரணை இல் இருந்து எடுத்து தானம் செய்யாக்கூடாதா என்னா?... புரியவில்லையே....ம்ம்....

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 60320
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12233

Back to top Go down

கிழவனுக்கு ஒரு போர்வை! – சிறுகதை Empty Re: கிழவனுக்கு ஒரு போர்வை! – சிறுகதை

Post by krishnaamma on Mon Dec 09, 2019 7:47 pm

@ayyasamy ram wrote:
'அதில், ஏறுவது பிரம்ம பிரயத்தனம். நடை வண்டி
துவங்கி, உடைந்து போன, 'ஈசி சேர்' வரை இருக்கும்.
காலை வைத்தால், வெண்கலக் கடையில் புகுந்த
யானை தான். அந்த சாமான் குவியலில் எங்கே
தேடுவது?'

'உஸ்...' என, பெருமூச்சு விட்டான்.

''என்ன பெருமூச்சு?'' என்றாள், நந்தினி.
-
-------------------

''நந்தினி... வழியில, ஒரு கிழவன், பாவமா இருக்கு,''
என, அவனை பற்றி கூறினான்.

''க்கும்... நீங்க கொடுத்து தான் விடியப் போறதா?
இன்று தருவீங்க... நாளைக்கு?'' என்றாள்.

கம்பளியைப் பற்றி பேச முடியாது. அவள் அப்பா
கேட்டதற்கே, தர முடியாது என்று சொல்லி விட்டாள். வீ
ட்டு நிர்வாகம் அவள் கையில். அவளை பகைத்துக்
கொள்ள முடியுமா?

துாக்கம் வர மறுத்தது. நாம் சொகுசாய் இங்கு படுத்துக்
கொண்டிருக்க, பாவம், அந்தக் கிழவன் மட்டும் குளிரில்
நடுங்க மாட்டானா?

''நந்தினி... துாங்கிட்டியா?'' என்றபடியே, விளக்கை
போட்டான்.

''என்னாச்சு,'' என்றாள், சற்றே துாக்கம் கலைந்த
எரிச்சலுடன்.

''மனச்சாட்சி வேண்டாமா... நாம மட்டும், 'ஹீட்டர்'
போட்டுக்கறோம்... போர்வை போத்திட்டு துாங்கறோம்...
அந்த கிழவன்,'' என்றதும், முறைத்தாள்.

''இங்கு பாருங்க... அவங்கவங்க செஞ்ச பாவ
புண்ணியத்துக்குத் தான், பலன். நாம நல்ல ஜென்மம்
எடுத்திருக்கோம்; சந்தோஷமா இருக்கோம். போவீங்களா...
என்னை போட்டுக் குழப்பாதீங்க,'' என்றாள்.

''ம்ஹும்... தத்துவம் பேசறே,'' என்றான்.

மறுநாள் காலையில், பரணில் ஏறினான்.
அரை மணி நேரம் முனைந்து, ஒரு போர்வையை எ
டுத்தே விட்டான்.

''உங்களுக்கு, கழண்டு தான் போச்சு,'' என்று கேலி
பேசிய, நந்தினியை பொருட்படுத்தாமல் கிளம்பினான்.

அந்த கிழவனை, கண்கள் தேட, துாரத்தில் ஒரே கூட்டம்...

'கிழவன் மண்டையை போட்டிருப்பானோ...
டே... தானம் கொடுத்தா, ஒழுங்காக் கொடுக்கணும்...'
என, முணு முணுத்தவனாய் நகர்ந்தான்.

நல்ல வேளை, உயிருடன் இருந்தான், கிழவன்.

போர்வையை அவனிடம் நீட்டினான்; ஏதும் பேசாமல்
வாங்கிக் கொண்டான்.

கேட்காமல் கொடுத்ததால், மதிப்பு இல்லையோ எனத்
தோன்றினாலும், அந்த போர்வையை கிழவன் போர்த்திக்
கொண்டதும், நிம்மதியுடன், ஒரு சிறு பெருமையும்
இருந்தது.

வீட்டிற்கு வந்தவனிடம், ''ப்பா... கொடுத்தாச்சா...
இல்லாட்டி, மண்டை வெடிக்சுடுமே... தாராள பிரபுவுக்கு,''
ன்றாள், நந்தினி.

''சரி... சரி... ஆபீஸ் கிளம்பணும்... சாப்பாடு ரெடியா?''
என்றான்.

ஆபீஸ் போகும்போதும், அதே கூட்டம், அங்கே
நின்றிருந்தது.

''என்னங்க... அங்கே கூட்டம்?'' என்றான்.

''தெரியாதுங்களா... ஏதோ ஒரு பொம்பளை பைத்தியம்...
செத்துடுச்சு... எவனோ லாரிக்காரன் அடிச்சுப்
போட்டுட்டான் போல,'' என்றதை, அந்த கிழவனும் காதில்
வாங்கியது தெரிந்தது.

கூட்டத்தை விலக்கி பார்த்த போது, பரிதாபமாய் இருந்தது.
சிறு பெண் தான்... முக்கால் நிர்வாணமாய், அங்கங்கு
துணி ஒட்டியிருந்தது. நிர்வாண உடலை வேடிக்கை பார்க்க,
அவ்வளவு கூட்டம்...

மனம் கனத்தது.

''டே... போங்கடா... காலிப் பசங்களா... நீங்க அக்கா, த
ங்கச்சிங்க கூட பொறக்கலை... பொண்டாட்டி இல்லை... நீங்க,
உங்க அம்மாவுக்கு பிறக்கலை... வேடிக்கை பாக்கறானுக,''
என்று சொன்னதோடு நில்லாமல், சற்றுமுன், அவன் கொடுத்த
போர்வையை போர்த்தி, அபலைப் பெண் அருகில் அமர்ந்து
அழுதான், கிழவன்.

கிழவனின் உடல், குளிரில் நடுங்கியது.

'உனக்கு என்னைத் தெரியாது... எனக்கு உன்னைத் தெரியாது...
ஆனா பாசம் தான்...' கிழவனின் வார்த்தைகள் அவனுள்
எதிரொலித்தது.

இருந்தாலும், இவ்வளவு நாளாக யோசித்து யோசித்து,
போர்வையை கொடுத்த நான் எங்கே... தனக்கு என்று
எதுவுமில்லை என்றாலும், அடுத்தவர்களின் கஷ்டத்தைப்
பொறுக்காத அவன் எங்கே...

ஒரு பாறாங்கல் நெஞ்சில் ஏறியது போல், பாரம்
அமுத்தியது!
-
----------------------------------

ரகு. பாலமுருகன்
வாரமலர்

ம்ம்.. தானம் என்பது இதுதான்....புன்னகை...சூப்பர் !.... கிழவனுக்கு ஒரு போர்வை! – சிறுகதை 3838410834 கிழவனுக்கு ஒரு போர்வை! – சிறுகதை 3838410834 கிழவனுக்கு ஒரு போர்வை! – சிறுகதை 3838410834

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 60320
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12233

Back to top Go down

கிழவனுக்கு ஒரு போர்வை! – சிறுகதை Empty Re: கிழவனுக்கு ஒரு போர்வை! – சிறுகதை

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!

ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.

உள் நுழை