உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» ரமணியன் ஐயா -பிறந்த நாள் வாழ்த்துகள்.
by T.N.Balasubramanian Today at 1:09 pm

» காணொளிகள் - பழைய பாடல்கள் {தொடர் பதிவு}
by ayyasamy ram Today at 12:24 pm

» இசையமைப்பாளராக மாறிய பாடகி ஸ்வாகதா
by ayyasamy ram Today at 12:18 pm

» டோனி நிகழ்த்திய சாதனையை நானும் நிகழ்த்துவேன்- விராட் கோலி நம்பிக்கை
by ayyasamy ram Today at 12:05 pm

» புத்தக தேவைக்கு...
by karthickkannan Today at 11:58 am

» தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் : இந்தியா பேட்டிங்
by ayyasamy ram Today at 11:58 am

» பழங்களில் ‘ஸ்டிக்கர்’ ஒட்ட சத்தீஸ்கர் அரசு தடை
by ayyasamy ram Today at 11:55 am

» குடிபோதையில் சிக்கினால் ஊருக்கே கறிவிருந்து - மதுவை ஒழிக்க வினோத தண்டனை
by ayyasamy ram Today at 11:53 am

» சங்கத்தில் பாடாத கவிதை உன் அங்கத்தில் யார் தந்தது
by ayyasamy ram Today at 11:25 am

» நந்தவன கரையில் நட்டு வைத்த செடியில் மொட்டு விட்ட முதல் பூவை யார் பறித்தார்?
by ayyasamy ram Today at 11:21 am

» சுவர் – கவிதை
by ayyasamy ram Today at 11:09 am

» ராஞ்சி டெஸ்ட்: முதல் நாள் ஆட்டத்துக்கு தோனி வருகை: இந்திய அணிக்கு பண்ணை வீட்டில் விருந்து
by ayyasamy ram Today at 8:46 am

» கார்ட்டூன் & கருத்து சித்திரம் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 8:42 am

» நீ இன்று முதல் ’பாகுபல்லி’ என்று அழைக்கப்படுவாய்...!
by ayyasamy ram Today at 6:42 am

» அவரோட மாமியாரை நல்லா கவனிச்சுப்பேன்...!
by ayyasamy ram Today at 6:39 am

» காக்கா கத்தினா…!
by ayyasamy ram Today at 6:36 am

» டீக்கு எத்தனை விசில் வைக்கணும்னு கேக்குறா...?
by ayyasamy ram Today at 6:30 am

» பாப்கார்ன் பக்கங்கள்
by ayyasamy ram Today at 6:17 am

» காமராஜரின் அனுபவ பாடம்
by ayyasamy ram Today at 6:08 am

» 100 % காதல் - திரைப்பட விமரிசனம்
by ayyasamy ram Today at 5:59 am

» அசுரன் - திரைப்பட விமரிசனம்
by ayyasamy ram Today at 5:57 am

» மாணவர்களுடன் கிரிக்கெட் விளையாடி ராகுல் ஜாலி
by ayyasamy ram Today at 5:53 am

» சாதனை படைத்த ரிலையன்ஸ்: சந்தை மதிப்பு ரூ.9 லட்சம் கோடியை எட்டியது
by ayyasamy ram Today at 5:50 am

» கல்லூரி, பல்கலை.,களில் மொபைல் போன் தடை: உ.பி., உத்தரவு
by ayyasamy ram Today at 5:47 am

» வீடு புகுந்து அத்துமீறிய வழக்கில்: டில்லி சபாநாயகருக்கு 6 மாதம் சிறை
by ayyasamy ram Today at 5:45 am

» கோகுல் சேஷாத்ரி-பைசாசம்
by sethu756 Today at 12:38 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:13 pm

» சிரிக்க...சிரிக்க...!!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Yesterday at 8:10 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:06 pm

» வெள்ளரிக்காய் கூட்டு & வரகரிசி ஆனியன் அடை
by ayyasamy ram Yesterday at 7:58 pm

» மழைக்கால பாதுகாப்பு
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» நினைவுகள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 4:47 pm

» முதுமை போற்றுதும் – கவிதை
by ayyasamy ram Yesterday at 4:45 pm

» வெடிக்க விட்டால் சிதறாது! – வீட்டுக் குறிப்புகள்
by ஜாஹீதாபானு Yesterday at 4:28 pm

» எல்லோரும் ஏன் ஓடி வந்துவிட்டீர்கள்?
by T.N.Balasubramanian Yesterday at 4:06 pm

» I want srikala novels..
by Madheswari om prakash Yesterday at 3:25 pm

» ரூ. 275 கோடி: அதிகம் வசூலித்த ஹிந்திப் படங்களின் பட்டியலில் இடம் பெற்ற ‘வார்’!
by ayyasamy ram Yesterday at 10:37 am

» இன்று பிறந்த நாளைக் கொண்டாடும் கீர்த்தி சுரேஷுக்கு பரிசளித்த கார்த்தி சுப்பராஜ்
by ayyasamy ram Yesterday at 10:34 am

» உள்ளம் இனிதானால் உலகமே இனிதாகும்...!
by ayyasamy ram Yesterday at 8:49 am

» 14 அணிகள் பங்கேற்கும் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தகுதி சுற்று இன்று தொடக்கம்
by ayyasamy ram Yesterday at 6:54 am

» மகனை கதாநாயகனாக ஆக்கியது ஏன்? தங்கர் பச்சான் பேட்டி
by ayyasamy ram Yesterday at 6:47 am

» தியேட்டர்கள் குறைவாக இருப்பதால் 400 படங்கள் திரைக்கு வராமல் முடக்கம் - சங்க பொதுச்செயலாளர் பன்னீர் செல்வம்
by ayyasamy ram Yesterday at 6:31 am

» சிங்கப்பூரில் மதுபோதையில் போலீஸ் அதிகாரியை கடித்த பெண்ணுக்கு சிறை
by ayyasamy ram Yesterday at 6:22 am

» துருக்கியில் அமெரிக்க அணு ஆயுதங்கள்: உளறிக் கொட்டிய டிரம்ப்
by ayyasamy ram Yesterday at 6:15 am

» குரோர்பதியில் ரூ. 7 கோடியை தவறவிட்ட போட்டியாளர்
by ayyasamy ram Yesterday at 6:10 am

» காவல்துறை, பாதுகாப்புப்படை அலுவலகங்களில் படேல் படம் வைக்க உத்தரவு
by ayyasamy ram Yesterday at 6:04 am

» தமிழக அரசு ஊழியர்களுக்கு 5 சதவீதம் அகவிலைப்படி உயர்வு
by ayyasamy ram Yesterday at 5:59 am

» Downloading
by prajai Thu Oct 17, 2019 11:41 pm

» வேலன்:- போட்டோ ஸ்டுடியோ.
by velang Thu Oct 17, 2019 9:40 pm

Admins Online

வாழ்வென்பது பெருங்கனவு!

வாழ்வென்பது பெருங்கனவு! Empty வாழ்வென்பது பெருங்கனவு!

Post by ayyasamy ram on Wed Jun 26, 2019 5:13 pm

வாழ்வென்பது பெருங்கனவு! 6
-
கண்ட கனவுகளும் நிஜமாகியவையும்…

– சுதா செல்வக்குமார்

நம்முடைய லட்சியக் கனவுகளை நிறைவேற்றிக்கொள்ள விரும்புவோமானால், முதலில் நாம் செய்யவேண்டியது விழித்துக்கொள்ள வேண்டும். பிறகு நம்முடைய கனவு நிறைவேறும்வரை தொடர்ந்து முயற்சி செய்துகொண்டே இருக்க வேண்டும். ஒவ்வொரு செயலை செய்யும்போதும் கட்டாயம் நம்மிடத்தில் ஒரு ‘திசைகாட்டி’ இருக்க வேண்டும். ஏனென்றால், செல்லும் திசை தெரியாமல் இருந்தால் வேறு எங்கேயாவது முட்டிக்கொண்டு நிற்க வேண்டிய நிலைமை வந்துவிடும்.

நம்முடைய திறமையின் அளவை கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டும். ஆனால் அதற்குமேலும் செல்லும் முயற்சியை எப்போதும் நிறுத்திவிடக்கூடாது என்று சொல்லும் தொழில்முனைவோர் சுதா செல்வக்குமார் தனது வாழ்வின் பெருங்கனவை நம்முடன் பகிர்ந்து கொண்டார்.

‘‘என்னுடைய சொந்த ஊர் கோயில் நகரம் என்று பெருமையாக அழைக்கப்படும் கும்பகோணம். கல்லூரி படிக்கும் காலங்களில் பொழுதுபோகவில்லை என கற்றுக்கொண்ட கலை இப்போது பொழுதே போதவில்லையே எனச் சொல்லும் அளவிற்கு என்னை வளர்த்துவிட்டுள்ளது. என் படிப்புக்கும் வேலைக்கும் சம்பந்தமில்லை. வணிகவியல் பட்டதாரியான நான், ஆசிரியர் வேலைக்குச் செல்ல வேண்டும் என அம்மா ஆசைப்பட, வங்கி பணிகளுக்கான தேர்வுகளை எழுதச் சொல்லி அப்பா வற்புறுத்த, எனக்கோ கலை தொடர்பான பணிகளில் ஈடுபடுவதிலேயே ஆர்வம்
இருந்தது.

என்னுடைய நெருங்கிய தோழி ஆசிரியையாக பணிபுரிந்தாள். அவள் என்றாவது அவளுடைய ட்யூஷன் வகுப்புகளை என்னை நடத்துமாறு கேட்டுக்கொள்ளும் நாட்களில், நான் முயன்றும் முடியாமல், இன்று ட்யூஷன் விடுமுறை என்று போர்டு எழுதி போட்டுவிடுவேனே தவிர, ஒருமுறை கூட அவளுக்காக வகுப்பு எடுத்ததில்லை.

ஆனால், கலை தொடர்பான வகுப்புகளை இன்று மிகுந்த ஆர்வத்துடன் எடுக்கிறேன். பள்ளி, கல்லூரிகளில் நடக்கும் சிறப்பு வகுப்புகளுக்கும், மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கும், நானே நடத்தும் கிராஃப்ட் இன்ஸ்டிடியூட்டிலும், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சொல்லித் தருகிறேன். என் அம்மாவை பொறுத்தவரை நான் பொறுமை அற்றவள். ஆனால் கலை மற்றும் அது தொடர்பான வகுப்புகள் எடுக்க மிகவும் பொறுமை அவசியம். அதுவுமே சலிப்பில்லாமல் ரசித்து செய்யும்போது மட்டுமே சாத்தியம்.

ஆடிட்டராக வேண்டும் என்பதே கனவாக இருந்தது. தற்செயலாக, பொழுது போக்காக கற்றுக்கொண்டதுதான் கைவினைப் பயிற்சி. தொடர் செயல்பாட்டின் பலனாக, ‘மகளிர் தொழில் முனைவோர்’ விருதும் பிரபல நிறுவனத்தின் சிறப்பு பயிற்சியாளர் அந்தஸ்தும் கிடைத்தது. இது போன்ற அங்கீகாரங்கள் எனது பொறுப்பை அதிகரித்தன.
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 49098
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12683

https://rammalar.wordpress.com/

Back to top Go down

வாழ்வென்பது பெருங்கனவு! Empty Re: வாழ்வென்பது பெருங்கனவு!

Post by ayyasamy ram on Wed Jun 26, 2019 5:13 pm

மதுபானி ஓவியம், பட்டச்சித்ரா, வார்லி, தஞ்சை ஓவியம் உட்பட பலவித ஓவியங்கள், ம்யூரல், ஆரத்தித்தட்டு அலங்காரம், மெழுகு உருவங்கள், களிமண் உருவங்கள், சணல் அலங்காரம், நகை வடிவமைத்தல், மெகந்தி, மினியேட்சர் போன்ற பல்வேறு கலைகளை கற்றுக்கொண்டேன். இன்னும் புதிய கலைகளை கற்றுக்கொண்டும் இருக்கிறேன். இந்தத் துறைக்கு எல்லை என்பதில்லை. இவற்றை ஒவ்வொன்றும் வேறு வேறு ஊர்களில், வேறு வேறு ஆசிரியர்களிடம் கற்றுக்கொண்டேன். அதனாலேயே எல்லா கைவினைகளையும் ஒரே இடத்தில் சொல்லித்தர வேண்டும் என முடிவெடுத்தேன். அப்படி ஆரம்பிக்கப்பட்டதுதான் என்னுடைய கலைக்கூடம்.

என்னிடம் உள்ள சிறப்பு பத்து ரூபாய் முதல் பத்தாயிரம் ரூபாய் வரை கைவினை பரிசுப் பொருட்கள் இருப்பதுதான். நவராத்திரி, முகூர்த்த நாட்களில் ஆர்டர் அதிகமாகும். முன்பு நிறைய செய்து வைத்திருப்பேன். இப்போது ஆர்டரின் பேரில் செய்து தருகிறேன். டிஸைன் ஒரே மாதிரி இல்லாமல் சிறுசிறு வித்தியாசம் கற்பனைக்கு ஏற்ப செய்து தருவது அதிக வரவேற்பை பெற்றுத்தருகிறது.

கல்யாணம் ஆன புதிதில் என் கணவரின் அலுவலகத்தில் பணிபுரிந்தேன், அதனால் ஒரு வருடம் கலைப்பொருட்கள் செய்யும் பக்கமே போகலை. இயந்திரத்தனமான வாழ்க்கை. எதையோ மிஸ் செய்வது மாதிரியான உணர்வு. வேலையை விட்டு விட்டேன். ஒரு நாள் கைவினை பொருட்கள் விற்கும் கடையில் பொருட்கள் வாங்கச் சென்றபோது அங்கு என் குரு வசந்தா விஜயராகவன் அவர்களைப் பார்த்தேன். அப்போது அவர் எல்லா தொலைக்காட்சி, பத்திரிகைகளிலும் சமையல் மற்றும் கைவினைப் பொருட்கள் செய்து காட்டுவார்.

இப்போது காலமாகி விட்டார். அவரிடம் ஆலோசனை கேட்டேன். உடனே பிரபல பத்திரிகைக்கு போன் செய்தார். அப்போது தான் பெண்கள் பத்திரிகை பரவலாக வெளிவர ஆரம்பித்த நேரம். அந்தப் பத்திரிகையிலிருந்து என்னை பேட்டி எடுக்க வீட்டிற்கே வந்துவிட்டனர். அதைப் பார்த்து பிரபல தொலைக்காட்சியில் என் பேட்டியும், கைவினைப் பொருட்கள் செய்முறையும் ஒலிபரப்பானது.

அதைப் பார்த்தவர்கள் அக்கலை வேலையைச் சொல்லித்தர சொல்லி கேட்டனர். வகுப்புகளில் நிறைய பேர் சேர்ந்தனர். ஒரே பாட்டுல நம்ம சூப்பர் ஸ்டார் பெரிய ஆளா ஆகிவிடுற மாதிரி என் நல்ல நேரம் பல தரப்பிலிருந்தும் வாய்ப்புகள் வந்தன. காற்றுள்ள போதே தூற்றிக்கொள் என்பதை வேதவாக்காக எடுத்துக்கொண்டு செயல்பட ஆரம்பித்தேன்.

என் கணவர் மிகவும் உறுதுணையாக இருந்தார். சின்னச் சின்ன தவறுகளைக் கண்டுபிடித்து திருத்தங்கள் செய்து தருவார். நெட்ல பார்த்து ஐடியா கொடுப்பார். யூ டியூப் சொந்த சேனலில் என் கைவேலைப்பாடு, சமையல் வீடியோவை அப்லோடு செய்ய சொல்வார். எனக்கு ஒரு ஆண், பெண் குழந்தை. 15 வருடத்திற்கு மேல் கைவேலைப்பாடு செய்தாலும், கடந்த 5 வருடங்களாக பல வித சமையல் செய்வதிலும் ஆர்வம் காட்டி வருகிறேன்.

கைவேலையோடு சேர்ந்து சமையலும் பல பத்திரிகை, தொைலக்காட்சிக்கு செய்து காண்பிப்பதோடு வகுப்புகளும் எடுக்கிறேன்.கை
வேலைப்பாடு, சமையல் நிகழ்ச்சிக்கு நடுவராக சென்று வருகிறேன். வி.ஐ.பி வீடுகளில் என் பெயிண்டிங் மற்றும் கலைப்பொருட்கள் அலங்கரிப்பது எனக்குப் பெருமையே.

எதுவுமே அனுபவம் தாண்டி எத்தனை வருடம் செய்கிறோம் என்பது முக்கியமில்லை.. எப்படி ஈடுபாட்டுடன் திருத்தமாக செய்கிறோம் என்பதே முக்கியம்.. இதைக் கடைப்பிடித்து மனதிற்கு பிடித்த வேலையைச் செய்தால் வாழ்க்கையில் மகிழ்ச்சியே’’ என நிறைவாக முடித்தார்.

தோ.திருத்துவராஜ்

நன்றி- குங்குமம் தோழி

ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 49098
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12683

https://rammalar.wordpress.com/

Back to top Go down

வாழ்வென்பது பெருங்கனவு! Empty Re: வாழ்வென்பது பெருங்கனவு!

Post by T.N.Balasubramanian on Wed Jun 26, 2019 8:11 pm

"எதுவுமே அனுபவம் தாண்டி எத்தனை வருடம் செய்கிறோம் என்பது முக்கியமில்லை.. எப்படி ஈடுபாட்டுடன் திருத்தமாக செய்கிறோம் என்பதே முக்கியம்.. இதைக் கடைப்பிடித்து மனதிற்கு பிடித்த வேலையைச் செய்தால் வாழ்க்கையில் மகிழ்ச்சியே’’ 


மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சிரமணியன் 


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 25392
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9207

Back to top Go down

வாழ்வென்பது பெருங்கனவு! Empty Re: வாழ்வென்பது பெருங்கனவு!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை