உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» நாள் ஒன்றுக்கு முதல்வர் வீட்டுக்குத் தண்ணீர் சப்ளை எவ்வளவு தெரியுமா?- அதிர்ச்சித் தகவல்
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» தெரிஞ்சதும் தெரியாததும்
by heezulia Yesterday at 8:26 pm

» 48 மணி நேரத்தில் வடக்கு வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் - வானிலை ஆய்வு மையம்
by ayyasamy ram Yesterday at 7:23 pm

» வாடகை வீடு பால் காய்ச்ச நல்ல நாள்/நேரம்
by ayyasamy ram Yesterday at 7:12 pm

» முத்துலட்சுமி ராகவன் நூல்கள்
by Yogaja Yesterday at 7:01 pm

» ஒல்லி, கலர் கம்மி என்று கூறி தன்னம்பிக்கையை உடைத்த பெரிய இயக்குநர்கள்: மேடையில் கண்கலங்கிய நடிகை!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை குளிர்வித்த மழை
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» அமெரிக்க ஜனாதிபதி டிரம்புக்கு சிலை வைத்து வழிபடும் தெலுங்கானா விவசாயி
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» தென்மேற்கு பருவ மழை 2 நாட்களில் பெய்யும் - வேளாண் பல்கலைக்கழக துணைவேந்தர் தகவல்
by ayyasamy ram Yesterday at 6:11 pm

» என் அறிமுகம் - அருணாசலம் பூமாலை
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» டெல்லியில் பிரதமர் நடத்திய கூட்டம்- அமைச்சர் சி.வி.சண்முகத்துக்கு அனுமதி மறுப்பு
by ayyasamy ram Yesterday at 6:06 pm

» 28-ந் தேதி கூடுகிறது தமிழக சட்டப்பேரவை
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» திரைப்பட கவிஞர், வாலி
by T.N.Balasubramanian Yesterday at 5:38 pm

» திருக்குறளில் மெய்ப்பாடுகள் :
by Sudharani Yesterday at 5:00 pm

» என்னங்க….!! – அர்த்தம் பலவிதம்
by Sudharani Yesterday at 4:49 pm

» தனியார்கள் மூலம் ரெயில்களை இயக்க ரெயில்வே நிர்வாகம் அனுமதி அளிக்க முடிவு
by சிவனாசான் Yesterday at 4:29 pm

» என்ன செய்வது! தமிழகத்திற்கு காவிரி நீர் திறக்க வேண்டிய கட்டாயம் ...
by T.N.Balasubramanian Wed Jun 19, 2019 9:25 pm

» எஸ்.பி.பி. பற்றிய சில சுவாரஸ்ய குறிப்புகள்
by T.N.Balasubramanian Wed Jun 19, 2019 9:16 pm

» கருமிளகு 10 குறிப்புகள்
by கண்ணன் Wed Jun 19, 2019 5:54 pm

» சினிமா – தகவல்கள்
by heezulia Wed Jun 19, 2019 5:51 pm

» நடிகர் சங்கத் தேர்தலை நிறுத்துமாறு தென்சென்னை மாவட்ட பதிவாளர் உத்தரவு
by ayyasamy ram Wed Jun 19, 2019 2:10 pm

» உலகைச்சுற்றி...
by ayyasamy ram Wed Jun 19, 2019 2:01 pm

» தனியார்கள் மூலம் ரெயில்களை இயக்க ரெயில்வே நிர்வாகம் அனுமதி அளிக்க முடிவு
by ayyasamy ram Wed Jun 19, 2019 1:47 pm

» ஆந்திர போலீசாருக்கு இன்று முதல் வார விடுமுறை! அதிரடி காட்டும் ஜெகன் மோகன் ரெட்டி
by ayyasamy ram Wed Jun 19, 2019 1:35 pm

» நினைத்ததை நிறைவேற்றும் கணேச ஸ்தோத்திரம்
by ayyasamy ram Wed Jun 19, 2019 1:25 pm

» தெய்வம் !
by T.N.Balasubramanian Wed Jun 19, 2019 8:53 am

» ஹோலியும் ராதையும்
by ayyasamy ram Tue Jun 18, 2019 9:33 pm

» தேவை இவர்களுக்கு தொழில்பயிற்சி
by ayyasamy ram Tue Jun 18, 2019 9:29 pm

» புள்ளியெழுத்து இல்லாத வெண்பா
by M.Jagadeesan Tue Jun 18, 2019 9:17 pm

» கேம் ஓவர் - விமர்சனம் - விமர்சனம்
by T.N.Balasubramanian Tue Jun 18, 2019 8:46 pm

» மஹாராஷ்டிராவிலிருந்து வந்த நான் தமிழில் டப் செய்துள்ளேன்: நடிகை சுனைனா பெருமிதம்
by ayyasamy ram Tue Jun 18, 2019 7:50 pm

» இளைஞர் அணி செயலாளர் ஆகிறார் உதயநிதி
by ayyasamy ram Tue Jun 18, 2019 7:31 pm

» சுமித்ரா மகாஜனுடன் சபாநாயகராக பொறுப்பேற்கும் ஓம் பிர்லா சந்திப்பு
by ayyasamy ram Tue Jun 18, 2019 7:29 pm

» பாராளுமன்ற மக்களவை காங்கிரஸ் தலைவராக ஆதிர் ரஞ்சன் சவுத்ரி தேர்வு
by ayyasamy ram Tue Jun 18, 2019 7:26 pm

» நீயெல்லாம் ஒரு பேங்க் ஆபிசரா ? - ரூ.1000 பெட்!
by Sudharani Tue Jun 18, 2019 7:02 pm

» ஹை ஹீல்ஸ் செருப்பால் வந்த வினை..!
by T.N.Balasubramanian Tue Jun 18, 2019 6:10 pm

» மிருகத்துள் மிருகம்
by T.N.Balasubramanian Tue Jun 18, 2019 6:00 pm

» அப்பளமும் ஊறுகாயும்
by T.N.Balasubramanian Tue Jun 18, 2019 5:43 pm

» உள்ளம்
by T.N.Balasubramanian Tue Jun 18, 2019 5:34 pm

» திருக்குறளின் சிறப்பு
by Sudharani Tue Jun 18, 2019 3:52 pm

» காதல்
by sujatham90 Tue Jun 18, 2019 2:09 pm

» அகில உலக தந்தையர் தினம் இன்று.
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2019 11:54 am

» தமிழகத்தின் அனுமதி தேவையில்லை: குமாரசாமி
by M.Jagadeesan Tue Jun 18, 2019 11:51 am

» 24 கேள்விகள் தவறான விவகாரம்- ஐகோர்ட்டில் டி.என்.பி.எஸ்.சி. பதில்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2019 11:49 am

» மிஸ் இந்தியா - 2019 : சுமன்ராவ் தேர்வு
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2019 11:41 am

» அரசியல் துளிகள்.
by சிவனாசான் Tue Jun 18, 2019 6:11 am

» அரசியல் துளிகள்.
by சிவனாசான் Tue Jun 18, 2019 6:11 am

» நாடாளுமன்றம் இன்று கூடுகிறது: மக்களவை காங்கிரஸ் தலைவர் யார்? - குழப்பம் நீடிப்பு
by சிவனாசான் Tue Jun 18, 2019 4:59 am

» இதுதான் அரசியல் என்பதோ.
by சிவனாசான் Tue Jun 18, 2019 4:51 am

» எந்த பிளாஸ்டிக்கை பயன்படுத்தலாம்.
by சிவனாசான் Tue Jun 18, 2019 4:37 am

Admins Online

உலகுக்கே படியளக்கும் ஈசன் உமக்கு படியளக்க மாட்டாரா

 உலகுக்கே படியளக்கும் ஈசன் உமக்கு படியளக்க மாட்டாரா Empty உலகுக்கே படியளக்கும் ஈசன் உமக்கு படியளக்க மாட்டாரா

Post by T.N.Balasubramanian on Tue Jun 11, 2019 9:13 pm

🔥 உலகுக்கே படியளக்கும் ஈசன் உமக்கு படியளக்க மாட்டாரா ???
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

🍄 காலை 11 மணிக்கு ஒரு பிரபலமான நிறுவனத்தில் நேர்காணலுக்கு அழைத்து இருந்தார்கள்.

🍄  நிறுவனத்தின் பாதுகாப்பு அதிகாரியிடம் விவரத்தை கூறிவிட்டு ஹாலில் அமர்ந்து நேர்காணல் அழைப்புக்கு காத்திருந்தேன்.

🍄  சற்று நேரத்தில் முருகவேல் என்று அழைப்பு வந்தது.

🍄 உள்ளே சென்றவுடன் சில கேள்விகள் கேட்டு விட்டு உங்கள் பயோடேட்டாவில்  வயது 40 என்று இருக்கே நிஜமா ?

🍄 ஆமாம் சார் உண்மை தான்.

🍄  அப்படியா ..? எங்கள் நிறுவனத்தில் இளைஞர்களை தான் வேலைக்கு எடுக்கின்றோம். உங்கள் வயது 40 என்று சொல்கிறிர். கொஞ்சம் யோசனை செய்ய வேண்டி இருக்கும் முருகவேல் என்றார்கள்.

🍄 பரவாயில்லை சார் நான் வேலை செய்ய தயாராக இருக்கிறேன் என்று கூறினேன்.

🍄 மேலும் இதற்கு முன் வேலை செய்த நிறுவனம் நஷ்டத்தில் இயங்கியதால் திடீர் என்று மூடிவிட்டார்கள். அதனால் வேறு வேலை தேடும் சூழ்நிலை உருவாகிவிட்டது சார்..

🍄 அந்த அதிகாரி சற்று யோசிப்பது போல் பாவனை செய்து விட்டு . முருகவேல் உங்கள் பயோடேட்டாவை கொடுத்து விட்டு செல்லுங்கள் தேவைப்படும்போது அழைக்கின்றோம் என்றார்.

🍄 மிக்க நன்றி சார் என்று கூறி விட்டு வெளியே வந்தேன்.இங்கும் வேலை இல்லை.

🍄 மனம் கனத்தது கூடவே தலையும் வலித்தது. பெரும்பாலான இடங்களில் வயதை காரணம் காட்டி தவிர்த்து விடுகிறார்கள்.

 🍄இறைவா என்ன சோதனை...

🍄 அனைத்தும் நல்லபடியாக தான் போய்க்கொண்டு இருந்தது முன்பு வேலை செய்த நிறுவனம் மூடும் வரை.. அந்த வேலையை நம்பி வாங்கிய கடன்கள் கழுத்தை நெறிக்க தொடங்கியது..

🍄 ஒரே மகனின் படிப்பு செலவு , வீட்டுக்கு தேவையான செலவு மேலும்.. மேலும்.. ஐயனே ஈசனே எப்படி சமாளிக்க போகிறேன்.

🍄 தலை மேலும் வலித்தது. பேருந்துக்கு வைத்து இருக்கும் காசில் காபி சாப்பிட்டு நடந்து வீட்டுக்கு செல்லலாம் என்று முடிவு செய்து காபி சாப்பிட்டு நடக்க துவங்கினேன். வாங்கிய வண்டியும் ஒரமாக இருக்கிறது.

🍄 ஆழ்ந்த சிந்தனையில் நடந்து செல்லும்போது ரோட்டின் ஓரத்தில் ஒரு தோல் பை அனாதையாக கிடந்தது.

🍄 சின்னதாக ஒரு சபலம் எடுத்து திறந்து பார்த்தேன் . குப்பென்று வியர்த்து கொட்டியது.

🍄 பையில் கட்டு கட்டாக 2000 ரூபாய் நோட்டுகள்.. கை கால்கள் உதறல் எடுத்தது. இருப்பினும் எடுத்து வைத்து கொண்டேன்.

🍄 மனம் பலவிதமாக என்னுள் பேசியது. ஒரு பக்கம் எச்சரிக்கை செய்தது. அருகில் உள்ள காவல் நிலையத்தில் ஒப்படைத்து விடலாம் என்ற எண்ணம் தோன்றியது.

🍄 ஆனாலும் கட்ட வேண்டிய கடன்களும் , குடும்ப செலவுகளும் கண் முன்னே நின்று பயமுறுத்தியது.

🍄 வீடு வந்து சேரும் வரை மனச்சத்தங்கள் ஏராளம் , உடல் முழுவதும் வியர்வை ஊற்றியது. வீட்டில் உள்ள அலமாரியில் பணத்தை பத்திரமாக வைத்தேன்.

🍄 வெளியே சென்று திரும்பிய மனைவி என்னங்க ஒரு நடுக்கமா இருக்கறிங்க என கேட்டாள்.

🍄 வள்ளி அந்த கதவை சாத்திட்டு உள்ளே வா என்றேன்.

🍄 நடந்த விவரங்களை சொல்லி . யாராவது கேட்பார்கள் என்று திரும்பி, திரும்பி பார்த்தேன் யாரும் வரவில்லை , எனப் பொய் கூறினேன். பணத்தை எண்ணி பார்த்தேன் மொத்தமாக 12 லட்சம்.

🍄 வள்ளி சில மாதங்கள் வேலை கிடைக்கும் வரை நமக்கு கவலை இல்லை.நம் செலவுக்கு இது போதும் என்றேன்.

🍄 மனைவி அமைதியாக இருந்தாள். ஏதாவது பேசு என்றேன்.

🍄 இந்த பணம் நமக்கு வேண்டாங்க என்றாள் மனைவி.

🍄 வள்ளி என்ன பேசுற நீ இறைவனா பார்த்து தான் நமக்கு துன்பங்கள் தீர வழி காட்டி இருக்காரு..

🍄 உங்க அல்ப புத்திக்கு இறைவன் மேல் பழிபோடாதீங்க என்றாள்.

🍄 வள்ளி எனக்கு இன்னும் வேலை கிடைக்கல கட்ட வேண்டிய கடன்களும் செலவுகளும் கழுத்தை நெரிக்க ஆரம்பித்துவிட்டது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் இந்த பணம் நமக்கு எவ்வளவு உதவியாக இருக்குமே நினைத்து பார் வள்ளி.

🍄  இன்னொருவர் பணத்தில் வாழ்வது தப்புங்க. அதுக்கு பதிலா இருவருமே கஷ்டப்பட்டு சம்பாதிக்கலாம் என்றாள் மனைவி.

🍄 அப்போ வீட்டு செலவுக்கு என்னதான் நான் செய்வேன் என்று கோபமாய் குரலை உயர்த்த..

🍄 இறைவன் சோதிபாருங்க ஆன கைவிடமாட்டார். என்று கூறி டக்கென்று கழுத்திலிருந்த தாலியை கழற்றி இதை விற்று விடுங்கள் எனக்கு மஞ்சள் கயிறு போதும் என்றாள்.

🍄 வள்ளி என அதிர்ந்து விட்டேன்.

🍄 அடுத்தவங்க பணத்துல வயிற்றை நிரப்பிக் கொள்வதைவிட இது எவ்வளவோ மேலுங்க. இந்த பணம் யாருக்கு சொந்தமோ அவர்களிடம் கொடுத்து விட்டு தான் நீங்கள் வீட்டில் நுழைய வேண்டும் என்று ஓடி கதவை சாத்திக்கொண்டு அழ ஆரம்பித்தாள்.

🍄 மனைவியின் தாலி கையில் கனத்தது. பணப்பையில் ஆராய்ந்து பார்த்தேன் முகவரி இருந்தது.

🍄 அந்த பங்களாவுக்கு நான் நுழைந்த போது கோயிலில் நுழைந்த உணர்வு. மெல்லிய ஓசையில் சிவனைப் பற்றி பாடல்கள்.

🍄 அழைப்பு மணியை அடித்தேன். நெற்றி நிறைய விபூதியுடன் ஒரு பெரியவர் வந்து பார்த்தார்.

🍄 நடந்த விவரங்களை அவரிடம் கூறி பணப்பையை கொடுத்தேன். மகிழ்ந்த அவர் உள்ளே அழைத்து சென்று குளிர்பானம் கொடுத்து உபசரித்தார்.

🍄 தம்பி நிறுவனத்தில் இருந்து காரில் வரும் போது பணப்பை தவறி விழுந்தது விட்டது. திரும்பி தேடி செல்லும் போது கிடைக்கவில்லை.

🍄 உங்களை போல் நல்லவர்களும் இருக்கிறார்கள் . அதான் தவறவிட்ட பணம் திரும்ப வந்து விட்டது என்றபடி என்னை பற்றிய விவரங்களை கேட்டார்.

🍄 என்னுடைய சூழ்நிலை பற்றிய விவரங்களை கூறினேன்.

🍄 அப்படியே யோசித்து தம்பி கொஞ்சம் இருங்கள். இதே ஒரு போன் செய்து விட்டு வருகிறேன் என்று உள்ளே சென்றார்.

🍄 திரும்பி வந்தவர் தம்பி என்னோட நிறுவனத்தில் வேலை செய்ய உங்களுக்கு விருப்பமா? அடுத்த வாரம் எங்கள் மேலாளர் ஓய்வு பெறுகிறார். அவரோட இடத்தில் யாரை நியமிப்பது என நினைத்து கொண்டு இருந்தேன்.

🍄 நீங்கள் ஏன் அந்த வேலையில் சேரக்கூடாது?

🍄 நீங்கள் நாளைக்கு சேர்ந்து நிறுவனத்தில் டிரைனிங் எடுங்கள். வேலைக்கான உத்தரவு கடிதம் இன்னும் கொஞ்ச நேரத்தில் வந்து விடும்.

🍄 வேறு யாராவது உங்களுடைய சூழ்நிலையில் இருந்து இருந்தால் இந்த 12 லட்சம் பணம் திரும்ப வந்து இருக்காது.

🍄 இந்த வேலை உங்கள் நேர்மைக்கும் ஒழுக்கத்திற்கும். நான் கொடுக்கும் பரிசு என்றார்.

🍄 நமச்சிவாயா !!!  என் கண்ணில் கண்ணீர். கண்ணீரில் ஆயிரம் நன்றிகள் என் மனைவி வள்ளிக்கு...

🍄  அந்த வீட்டின் ஒலிநாடாவில் குரு உபதேசம் மெல்லியதாக கேட்டது. "மூவுலகையும் ஆளும் சிவபெருமான் சோதிப்பான் ஆனால் நம்பியோரை கைவிட மாட்டார்." என்று கேட்டது.
🍊🍊🍊🍊🍊🍊🍊🍊🍊

அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்தாற்றில் போஓய்ப் பெறுவ தெவன்.
          (குறள்)

அறநெறியில் இல்வாழ்க்கை அமைத்துக் கொண்டவர்கள் பெற்றிடும் பயனை, வேறு நெறியில் சென்று பெற்றிட முடியுமோ ???

🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎
நமசிவாயம் போற்றி...

நன்றி வாட்சப் 

ரமணியின்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 24497
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 8877

View user profile

Back to top Go down

 உலகுக்கே படியளக்கும் ஈசன் உமக்கு படியளக்க மாட்டாரா Empty Re: உலகுக்கே படியளக்கும் ஈசன் உமக்கு படியளக்க மாட்டாரா

Post by M.Jagadeesan on Tue Jun 11, 2019 9:48 pm

கதை அருமை ; ஆனால் இறுதியில் எடுத்தாண்ட  திருக்குறள்தான் , பொருத்தமில்லாமல் உள்ளது .

அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்தாற்றில்
போஓய்ப் பெறுவ தெவன்.

இக்குறளின் பொருள் : இல்லறவாழ்க்கையில் இருந்துகொண்டே எல்லா அறங்களையும்
செய்யலாம் . துறவற நெறியில் எதுவும் பெறமுடியாது . புறத்தாறு என்பது துறவற நெறி .

" இல்லறமல்லது நல்லறமன்று " என்பதே வள்ளுவர் கொள்கை .

இக்கதைக்குப் பொருத்தமான குறட்பா :

நன்றே தரினும் நடுவிகந்தாம் ஆக்கத்தை
அன்றே ஒழிய விடல் .

பொருள் : முறைதவறி வந்த பொருள் , நமக்கு நல்லது செய்தாலும் அதை நாம் விரும்பக் கூடாது .  அன்றைய தினமே  விட்டுவிட வேண்டும் .
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5236
இணைந்தது : 18/04/2015
மதிப்பீடுகள் : 2456

View user profile

Back to top Go down

 உலகுக்கே படியளக்கும் ஈசன் உமக்கு படியளக்க மாட்டாரா Empty Re: உலகுக்கே படியளக்கும் ஈசன் உமக்கு படியளக்க மாட்டாரா

Post by Dr.S.Soundarapandian on Wed Jun 12, 2019 9:16 am

 உலகுக்கே படியளக்கும் ஈசன் உமக்கு படியளக்க மாட்டாரா 3838410834 உலகுக்கே படியளக்கும் ஈசன் உமக்கு படியளக்க மாட்டாரா 3838410834
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 4915
இணைந்தது : 23/10/2012
மதிப்பீடுகள் : 2694

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

 உலகுக்கே படியளக்கும் ஈசன் உமக்கு படியளக்க மாட்டாரா Empty Re: உலகுக்கே படியளக்கும் ஈசன் உமக்கு படியளக்க மாட்டாரா

Post by T.N.Balasubramanian on Wed Jun 12, 2019 9:24 am

@M.Jagadeesan wrote:கதை அருமை ; ஆனால் இறுதியில் எடுத்தாண்ட  திருக்குறள்தான் , பொருத்தமில்லாமல் உள்ளது .

அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்தாற்றில்
போஓய்ப் பெறுவ தெவன்.

இக்குறளின் பொருள் : இல்லறவாழ்க்கையில் இருந்துகொண்டே எல்லா அறங்களையும்
செய்யலாம் . துறவற நெறியில் எதுவும் பெறமுடியாது . புறத்தாறு என்பது துறவற நெறி .

" இல்லறமல்லது நல்லறமன்று " என்பதே வள்ளுவர் கொள்கை .

இக்கதைக்குப் பொருத்தமான குறட்பா :

நன்றே தரினும் நடுவிகந்தாம் ஆக்கத்தை
அன்றே ஒழிய விடல் .

பொருள் : முறைதவறி வந்த பொருள் , நமக்கு நல்லது செய்தாலும் அதை நாம் விரும்பக் கூடாது .  அன்றைய தினமே  விட்டுவிட வேண்டும் .
மேற்கோள் செய்த பதிவு: 1299157


நன்றி ஜெகதீசன் அவர்களே.
அந்த காணொலி கனவான் கவனத்திற்கு எடுத்து செல்கிறேன். புன்னகை 
இருப்பினும் ஒரு சந்தேகம் தீர்ப்பீர்.


"அறநெறியில் இல்வாழ்க்கை அமைத்துக் கொண்டவர்கள் பெற்றிடும் பயனை", அதாவது அவரது மனைவி எடுத்து சொல்லிய அறநெறி படி பணப்பையை திருப்பி கொடுத்ததால் அடைந்த பயனாக இருக்குமோ.

ரமணியன்
@M.Jagadeesan


Last edited by T.N.Balasubramanian on Wed Jun 12, 2019 4:58 pm; edited 1 time in total (Reason for editing : additional msg)


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 24497
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 8877

View user profile

Back to top Go down

 உலகுக்கே படியளக்கும் ஈசன் உமக்கு படியளக்க மாட்டாரா Empty Re: உலகுக்கே படியளக்கும் ஈசன் உமக்கு படியளக்க மாட்டாரா

Post by பழ.முத்துராமலிங்கம் on Wed Jun 12, 2019 11:51 am

Code:

வேறு யாராவது உங்களுடைய சூழ்நிலையில் இருந்து இருந்தால் இந்த 12 லட்சம் பணம் திரும்ப வந்து இருக்காது.

🍄 இந்த வேலை உங்கள் நேர்மைக்கும் ஒழுக்கத்திற்கும். நான் கொடுக்கும் பரிசு என்றார்.

🍄 நமச்சிவாயா !!!  என் கண்ணில் கண்ணீர். கண்ணீரில் ஆயிரம் நன்றிகள் என் மனைவி வள்ளிக்கு...

🍄  அந்த வீட்டின் ஒலிநாடாவில் குரு உபதேசம் மெல்லியதாக கேட்டது. "மூவுலகையும் ஆளும் சிவபெருமான் சோதிப்பான் ஆனால் நம்பியோரை கைவிட மாட்டார்." என்று கேட்டது.


இறைவன் இருக்கிறார் என்பதற்கு அருமையான கதை.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 12524
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 2866

View user profile

Back to top Go down

 உலகுக்கே படியளக்கும் ஈசன் உமக்கு படியளக்க மாட்டாரா Empty Re: உலகுக்கே படியளக்கும் ஈசன் உமக்கு படியளக்க மாட்டாரா

Post by SK on Fri Jun 14, 2019 12:04 pm

 உலகுக்கே படியளக்கும் ஈசன் உமக்கு படியளக்க மாட்டாரா 3838410834 உலகுக்கே படியளக்கும் ஈசன் உமக்கு படியளக்க மாட்டாரா 3838410834


SK
SK
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 8067
இணைந்தது : 10/12/2010
மதிப்பீடுகள் : 1543

View user profile

Back to top Go down

 உலகுக்கே படியளக்கும் ஈசன் உமக்கு படியளக்க மாட்டாரா Empty Re: உலகுக்கே படியளக்கும் ஈசன் உமக்கு படியளக்க மாட்டாரா

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை