உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» ஒல்லி, கலர் கம்மி என்று கூறி தன்னம்பிக்கையை உடைத்த பெரிய இயக்குநர்கள்: மேடையில் கண்கலங்கிய நடிகை!
by ayyasamy ram Today at 6:31 pm

» சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை குளிர்வித்த மழை
by ayyasamy ram Today at 6:26 pm

» வாடகை வீடு பால் காய்ச்ச நல்ல நாள்/நேரம்
by T.N.Balasubramanian Today at 6:26 pm

» அமெரிக்க ஜனாதிபதி டிரம்புக்கு சிலை வைத்து வழிபடும் தெலுங்கானா விவசாயி
by ayyasamy ram Today at 6:14 pm

» தென்மேற்கு பருவ மழை 2 நாட்களில் பெய்யும் - வேளாண் பல்கலைக்கழக துணைவேந்தர் தகவல்
by ayyasamy ram Today at 6:11 pm

» என் அறிமுகம் - அருணாசலம் பூமாலை
by ayyasamy ram Today at 6:07 pm

» டெல்லியில் பிரதமர் நடத்திய கூட்டம்- அமைச்சர் சி.வி.சண்முகத்துக்கு அனுமதி மறுப்பு
by ayyasamy ram Today at 6:06 pm

» 28-ந் தேதி கூடுகிறது தமிழக சட்டப்பேரவை
by ayyasamy ram Today at 5:57 pm

» திரைப்பட கவிஞர், வாலி
by T.N.Balasubramanian Today at 5:38 pm

» முத்துலட்சுமி ராகவன் நூல்கள்
by sukumaran Today at 5:19 pm

» திருக்குறளில் மெய்ப்பாடுகள் :
by Sudharani Today at 5:00 pm

» என்னங்க….!! – அர்த்தம் பலவிதம்
by Sudharani Today at 4:49 pm

» தனியார்கள் மூலம் ரெயில்களை இயக்க ரெயில்வே நிர்வாகம் அனுமதி அளிக்க முடிவு
by சிவனாசான் Today at 4:29 pm

» என்ன செய்வது! தமிழகத்திற்கு காவிரி நீர் திறக்க வேண்டிய கட்டாயம் ...
by T.N.Balasubramanian Yesterday at 9:25 pm

» எஸ்.பி.பி. பற்றிய சில சுவாரஸ்ய குறிப்புகள்
by T.N.Balasubramanian Yesterday at 9:16 pm

» கருமிளகு 10 குறிப்புகள்
by கண்ணன் Yesterday at 5:54 pm

» சினிமா – தகவல்கள்
by heezulia Yesterday at 5:51 pm

» நடிகர் சங்கத் தேர்தலை நிறுத்துமாறு தென்சென்னை மாவட்ட பதிவாளர் உத்தரவு
by ayyasamy ram Yesterday at 2:10 pm

» உலகைச்சுற்றி...
by ayyasamy ram Yesterday at 2:01 pm

» தனியார்கள் மூலம் ரெயில்களை இயக்க ரெயில்வே நிர்வாகம் அனுமதி அளிக்க முடிவு
by ayyasamy ram Yesterday at 1:47 pm

» ஆந்திர போலீசாருக்கு இன்று முதல் வார விடுமுறை! அதிரடி காட்டும் ஜெகன் மோகன் ரெட்டி
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» நினைத்ததை நிறைவேற்றும் கணேச ஸ்தோத்திரம்
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» தெய்வம் !
by T.N.Balasubramanian Yesterday at 8:53 am

» ஹோலியும் ராதையும்
by ayyasamy ram Tue Jun 18, 2019 9:33 pm

» தேவை இவர்களுக்கு தொழில்பயிற்சி
by ayyasamy ram Tue Jun 18, 2019 9:29 pm

» புள்ளியெழுத்து இல்லாத வெண்பா
by M.Jagadeesan Tue Jun 18, 2019 9:17 pm

» கேம் ஓவர் - விமர்சனம் - விமர்சனம்
by T.N.Balasubramanian Tue Jun 18, 2019 8:46 pm

» மஹாராஷ்டிராவிலிருந்து வந்த நான் தமிழில் டப் செய்துள்ளேன்: நடிகை சுனைனா பெருமிதம்
by ayyasamy ram Tue Jun 18, 2019 7:50 pm

» இளைஞர் அணி செயலாளர் ஆகிறார் உதயநிதி
by ayyasamy ram Tue Jun 18, 2019 7:31 pm

» சுமித்ரா மகாஜனுடன் சபாநாயகராக பொறுப்பேற்கும் ஓம் பிர்லா சந்திப்பு
by ayyasamy ram Tue Jun 18, 2019 7:29 pm

» பாராளுமன்ற மக்களவை காங்கிரஸ் தலைவராக ஆதிர் ரஞ்சன் சவுத்ரி தேர்வு
by ayyasamy ram Tue Jun 18, 2019 7:26 pm

» நீயெல்லாம் ஒரு பேங்க் ஆபிசரா ? - ரூ.1000 பெட்!
by Sudharani Tue Jun 18, 2019 7:02 pm

» ஹை ஹீல்ஸ் செருப்பால் வந்த வினை..!
by T.N.Balasubramanian Tue Jun 18, 2019 6:10 pm

» மிருகத்துள் மிருகம்
by T.N.Balasubramanian Tue Jun 18, 2019 6:00 pm

» அப்பளமும் ஊறுகாயும்
by T.N.Balasubramanian Tue Jun 18, 2019 5:43 pm

» உள்ளம்
by T.N.Balasubramanian Tue Jun 18, 2019 5:34 pm

» திருக்குறளின் சிறப்பு
by Sudharani Tue Jun 18, 2019 3:52 pm

» காதல்
by sujatham90 Tue Jun 18, 2019 2:09 pm

» அகில உலக தந்தையர் தினம் இன்று.
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2019 11:54 am

» தமிழகத்தின் அனுமதி தேவையில்லை: குமாரசாமி
by M.Jagadeesan Tue Jun 18, 2019 11:51 am

» 24 கேள்விகள் தவறான விவகாரம்- ஐகோர்ட்டில் டி.என்.பி.எஸ்.சி. பதில்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2019 11:49 am

» மிஸ் இந்தியா - 2019 : சுமன்ராவ் தேர்வு
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2019 11:41 am

» அரசியல் துளிகள்.
by சிவனாசான் Tue Jun 18, 2019 6:11 am

» அரசியல் துளிகள்.
by சிவனாசான் Tue Jun 18, 2019 6:11 am

» நாடாளுமன்றம் இன்று கூடுகிறது: மக்களவை காங்கிரஸ் தலைவர் யார்? - குழப்பம் நீடிப்பு
by சிவனாசான் Tue Jun 18, 2019 4:59 am

» இதுதான் அரசியல் என்பதோ.
by சிவனாசான் Tue Jun 18, 2019 4:51 am

» எந்த பிளாஸ்டிக்கை பயன்படுத்தலாம்.
by சிவனாசான் Tue Jun 18, 2019 4:37 am

» A First Lab in Circuits and Electronics
by சக்தி18 Mon Jun 17, 2019 9:40 pm

» பழைய தமிழ் திரைப்படங்கள்
by T.N.Balasubramanian Mon Jun 17, 2019 9:19 pm

» தண்ணீர் பிரச்சனை: குடிக்க நீரின்றி #தவிக்கும்தமிழ்நாடு - தமிழில் டிரெண்டாகும் ஹாஷ்டேக்
by Sudharani Mon Jun 17, 2019 5:44 pm

Admins Online

கண்டெடுப்பின் காலக்குறிப்புகள் வாசகர் கவிதை பகுதி 1

கண்டெடுப்பின் காலக்குறிப்புகள் வாசகர் கவிதை பகுதி 1 Empty கண்டெடுப்பின் காலக்குறிப்புகள் வாசகர் கவிதை பகுதி 1

Post by ayyasamy ram on Thu Jun 06, 2019 8:44 pm

By கவிதைமணி |
-
கண்டெடுப்பின் காலக்குறிப்புகள் வாசகர் கவிதை பகுதி 1 1_5
-
அர்த்தப் பின்னனியில் துடிப்புகளற்று போய்விடுவதன்
தரவரிசையை சரி செய்கிறது
தரவு

துல்லியமின்மையின் மேல் உட்கார்ந்து கொண்ட
பயணம்
திரும்பி வரும் வழியை மறந்திருப்பதின்
புகாரை வாசிக்கத் தொடங்குகிறாய்

அதர பழசான
நம் ஆரம்பத்தை இப்போதும்
இழுத்து வருகிறேன்

அது அத்தனை முக்கியமற்றது
என்பதைப் போல் அடுக்கத் தொடங்குகிறாய்
சமன் குலைந்த சொற்களின் விடுபடல்களால்

அதைக் கோர்த்துக் கொண்டே வந்தடைகிறேன்
பெரிதும் சிறிதுமான
நம் முரண்களிடத்தில்

மன்னிப்புகள் மேல் விழுந்துகிடக்கும்
மடிப்புகளை
காலப் பின்னனியில் சரி செய்ய
சரியென்ற ஒப்புதல்களை மறந்துவிட்டிருந்த
ஒரு தரப்பு நியாயம் தான்
உன்னை அரங்கேற்றிக் கொண்டிருக்கிறது

கச்சிதமாக்கப்பட்ட மெளனத்தை
பலவாறாய் நறுக்கி
பொடி தூவி பரிமாறுகிறாய்
யாவருக்குமான சிறுபசிக்கு

என் பங்கிற்கான
மெளனத்தின் காட்டத்தை
சொற்களைக் கொண்டு பொருள் சேர்க்கிறேன்

கடந்து விட்டேன்
என்பதாய்
வந்து நிற்கிறது அதன் அர்த்தம்

பின்னனியை
இசையொன்று அசைக்கத் தொடங்குகிறது

– ரேவா, மதுரை
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 45729
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12180

View user profile https://rammalar.wordpress.com/

Back to top Go down

கண்டெடுப்பின் காலக்குறிப்புகள் வாசகர் கவிதை பகுதி 1 Empty Re: கண்டெடுப்பின் காலக்குறிப்புகள் வாசகர் கவிதை பகுதி 1

Post by ayyasamy ram on Thu Jun 06, 2019 8:45 pm

நாம் எல்லாருமே கண்டெடுக்கப்பட்டவர்தாம்.
பிரமன் படைத்த இம்மானுடத்தைக்
கண்டெடுத்த அம்மனுக்கும் அப்பனுக்கும்
நன்றி சொல்லத்தான் வேண்டும்.
-
மழைத்துளி சிப்பியில் விழுந்து
முத்தாவது போல
நல்லவரால் கண்டெடுக்கப்பட்டவர்
நல்முத்தாகலாம்.
-
முத்தா அல்லது மூடமா
என்பதைக் காலம்தான்
நிர்ணயிக்க வேண்டும்
காலக்குறிப்புகள் தாம்
ஒருவரின் விதியைத்
தூண்டில் போட்டு இழுக்கும்.
-
குறிப்புகள்தாம் வழிகாட்டுதல்கள்.
அவற்றைப் படிக்கட்டுகள்
என எண்ணி வசப்படுத்தினால்
காலத்தை நாம் நடத்தி செல்லலாம்.
இல்லையேல் காலம் நம்மை
அதன் போக்கில் நடத்தும்.
முடிவு செய்வோம்
காலக்குறிப்புகளைக் கடைப்பிடிப்போம்.

– வளவ. துரையன்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 45729
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12180

View user profile https://rammalar.wordpress.com/

Back to top Go down

கண்டெடுப்பின் காலக்குறிப்புகள் வாசகர் கவிதை பகுதி 1 Empty Re: கண்டெடுப்பின் காலக்குறிப்புகள் வாசகர் கவிதை பகுதி 1

Post by ayyasamy ram on Thu Jun 06, 2019 8:46 pm


கண்டெடுப்பின் காலக்குறிப்புகள் உரைப்பது
கன்னித் தமிழே உலகின் முதல்மொழி என்பது !
சிந்து சமவெளி நாகரிகம் உரைத்தது என்னவோ
சங்கத்தமிழ் உரைத்த தமிழ் நாகரிகமே முதன்மை!

வட இந்தியாவிலும் தெருப்பெயர்களில் தமிழ்
வண்டமிழ் பரவி உள்ளது உலகம் முழுமையும்!
ஆங்கிலத்திற்கு அடுத்தபடியாக தமிழே
ஆட்சிமொழியாக பல நாடுகளில் உள்ளது!

கீழடி அகழாய்வு உரைத்தது என்னவோ
கற்கண்டு தமிழ் எழுத்து பொறித்து இருந்தது!
மாபெரும் நகரமே மூழ்கி உள்ளது
மண்ணை ஆய்ந்தால் உண்மை புரியும்!

அணிகலன்கள் செய்வதில் சிறப்பானவன் தமிழன்
அன்னைத் தமிழ் எழுத்துக்களையும் பதித்து உள்ளான்!
உலகின் முதல்மொழி தமிழ் உணர்ந்திடுக
உலகின் முதல் மனிதன் தமிழன் அறிந்திடுக!

– கவிஞர் இரா .இரவி
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 45729
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12180

View user profile https://rammalar.wordpress.com/

Back to top Go down

கண்டெடுப்பின் காலக்குறிப்புகள் வாசகர் கவிதை பகுதி 1 Empty Re: கண்டெடுப்பின் காலக்குறிப்புகள் வாசகர் கவிதை பகுதி 1

Post by ayyasamy ram on Thu Jun 06, 2019 8:47 pm


அன்ன உருவம் வைத்த சரஸ்வதி விளக்கு
அண்ணாமலையின் உயர்ந்த ஜோதி விளக்கு
அஷ்ட லக்ஷ்மி கூடிய காமாட்சி விளக்கு
ஐந்து முகத்துடன் திரிசூலக் குத்து விளக்கு

முகமொன்றும் இல்லா வாழைப்பூ விளக்கு
மயில் தோகை விரித்த குமரனின். விளக்கு
சூரிய சந்திரன் கூடிய பட்டை நாம, நாகவிளக்கு
பிளிறும் யானையின் முதுகினில் மற்றும்

பாவையின் கரத்திலும் ஏந்திய விளக்கென
பலவகை விளக்குகள் இதுபோலுண்டு
ஆயினும் ஆதி முதல் விளக்கு என்பது
இருளை அகல்விக்கும் அகல் விளக்கேயாம்

கற்கால மனிதனின் படுக்கைப். பாறையில்
குழிகள் செதுக்கி மாமிசக் கொழுப்பில்
நார் திரியிட்டு, ஏற்றிய தீபம் என்பதே நாம்
கண்டெடுப்பின் காலக்குறிப்புகள் .

– திருமதி ராணி பாலகிருஷ்ணன்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 45729
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12180

View user profile https://rammalar.wordpress.com/

Back to top Go down

கண்டெடுப்பின் காலக்குறிப்புகள் வாசகர் கவிதை பகுதி 1 Empty Re: கண்டெடுப்பின் காலக்குறிப்புகள் வாசகர் கவிதை பகுதி 1

Post by ayyasamy ram on Thu Jun 06, 2019 8:47 pm

**
மன்னர் ஆண்ட காலம்
பொற்காலம் என
சொற்குறிப்புகள் கொடுத்த
காலக்குறிப்புகள் தேடினால்
ஜாலமின்றி கிடைக்கும் கண்டெடுப்பில்!

அக்கால ஆட்சிக்கும்
இக்கால ஆட்சிக்கும் உள்ள
மாட்சிமைப் பற்றி சொல்லும்
சாட்சிதான் “கண்டெடுப்பின் காலக்குறிப்புகள்”

மாதம் மும்மாரி பெய்து
சாதகமாக இருந்த இயற்கை இன்று
பாதகம் விளைவிக்கும் சீற்றமாக
மாறிருப்பதை உணர்த்தும்
சாட்சிதான் “கண்டெடுப்பின் காலக்குறிப்புகள்!

அகழியை தோண்டினால்
புகழ் பெற்ற மன்னன் குறிப்புகளும்
திக் விஜயம் செய்து வெற்றி பெற்ற
மன்னன் பற்றியும் அறிய உதவும்
சாட்சிதான் “கண்டெடுப்பின் காலக்குறிப்புகள்!”

– உஷாமுத்துராமன், திருநகர்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 45729
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12180

View user profile https://rammalar.wordpress.com/

Back to top Go down

கண்டெடுப்பின் காலக்குறிப்புகள் வாசகர் கவிதை பகுதி 1 Empty Re: கண்டெடுப்பின் காலக்குறிப்புகள் வாசகர் கவிதை பகுதி 1

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை