உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» வாயில் ஆரம்பித்து ஆசனவாய் வரை உருவாகும் 300 விதமான நோய்க்கும் சிறந்த மருந்து - "வஜ்ஜிரவல்லி"
by சக்தி18 Today at 10:49 am

» கண்டேன் கருணை கடலை
by சக்தி18 Today at 10:42 am

» நந்தவன கரையில் நட்டு வைத்த செடியில் மொட்டு விட்ட முதல் பூவை யார் பறித்தார்?
by ayyasamy ram Today at 8:25 am

» அலை கடலோரம் கோவிலில் அமர்ந்த செந்தில் குமரனே!
by ayyasamy ram Today at 6:16 am

» நட்பு !!!
by jairam Yesterday at 10:00 pm

» உ.பி.யில் தலித் வாலிபர் எரித்துக் கொலை- பாஜக அரசு மீது காங்கிரஸ் குற்றச்சாட்டு
by jairam Yesterday at 9:40 pm

» இறந்த டாக்டர் வீட்டில் 2,000க்கும் மேற்பட்ட சிசு
by சிவனாசான் Yesterday at 8:40 pm

» சிறுக, சிறுக சேமித்து கட்டிய வீடு: அரசு பள்ளிக்கு தந்த பூக்கடைக்காரர்
by சிவனாசான் Yesterday at 8:27 pm

» பறவைகளை விரட்டும் லேசர் கதிர்!
by Dr.S.Soundarapandian Yesterday at 8:11 pm

» மொக்க ஜோக்ஸ்
by Dr.S.Soundarapandian Yesterday at 8:09 pm

» கார்ட்டூன் & கருத்து சித்திரம் - தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 6:31 pm

» சேவையாற்ற ஐ.ஏ.எஸ்., பதவி அவசியமில்லை!
by T.N.Balasubramanian Yesterday at 6:28 pm

» கணித மேதை சகுந்தலா தேவியாக நடிக்கும் வித்யா பாலன்: போஸ்டர் வெளியீடு!
by ayyasamy ram Yesterday at 5:48 pm

» கதாநாயகிகளை முன்னிறுத்தி கார்த்திக் சுப்புராஜ் தயாரிக்கும் இரு படங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:45 pm

» புரட்டாசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு!
by ayyasamy ram Yesterday at 5:37 pm

» பெருமாளுக்கு உகந்த வழிபாடு!
by T.N.Balasubramanian Yesterday at 4:43 pm

» சர்ச்சைக்குள்ளான தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:07 pm

» ஆங்கில நாவல் எழுதி 14 வயது சிறுமி சாதனை
by T.N.Balasubramanian Yesterday at 3:33 pm

» கர்நாடக தகுதிநீக்க எம்.எல்.ஏ.க்கள் வழக்கு- உச்ச நீதிமன்ற நீதிபதி சந்தானகவுடர் விலகல்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:34 pm

» மோடியுடன் ட்ரம்ப் ஹூஸ்டனில் பங்கேற்பு.
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:29 pm

» கற்றாழையில் பிளாஸ்டிக் பை!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:02 pm

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:56 am

» ஏடாகூடம்! -புதிர் விளையாட்டு கருவி
by ayyasamy ram Yesterday at 4:20 am

» மூச்சு வாங்குது…!
by ayyasamy ram Yesterday at 4:19 am

» ஒன்பது ரூபாய் சவால்!
by ayyasamy ram Yesterday at 4:15 am

» சுடுகாட்டுக்கு போயிட்டு வரேன்னு சொன்னது குத்தமா?
by ayyasamy ram Yesterday at 4:08 am

» உயிர்கள் மீது காதல் வேண்டும்- பாலகுமாரன்
by ayyasamy ram Yesterday at 4:06 am

» விலை உயர்ந்த பொருள்!
by ayyasamy ram Yesterday at 4:04 am

» காலில் விழலாமா…{புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன்}
by ayyasamy ram Yesterday at 4:03 am

» டூட்டிக்கு போகும்போது எதுக்கு ஒட்டு மீசை…!!
by ayyasamy ram Yesterday at 4:00 am

» புல் பாலம்
by ayyasamy ram Yesterday at 3:59 am

» மனிதனின் ஆறு எதிரிகள்
by ayyasamy ram Yesterday at 3:58 am

» குப்புசாமிய அதிர்ஷ்டம் அடிக்கப்போகுது…!!
by ayyasamy ram Yesterday at 3:57 am

» சூடு & சொல் - கவிதை
by ayyasamy ram Yesterday at 3:54 am

» இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு
by ayyasamy ram Mon Sep 16, 2019 8:31 pm

» இன்று M .S .சுப்புலெட்சுமி பிறந்த தினம்.
by சக்தி18 Mon Sep 16, 2019 5:31 pm

» நாடு முழுவதும் நிலுவையில் கிடக்கும் பாலியல் வழக்கை விசாரிக்க 1,023 விரைவு நீதிமன்றங்கள்: அக்டோபர் 2 முதல் தொடக்கம்
by T.N.Balasubramanian Mon Sep 16, 2019 5:04 pm

» எம்.ஜி.ஆர் கதை எழுதிய ஒரே படம்...!
by சக்தி18 Mon Sep 16, 2019 3:52 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon Sep 16, 2019 1:59 pm

» சட்டம் எங்கே போனது?
by சக்தி18 Mon Sep 16, 2019 1:43 pm

» சர் விஸ்வேஸ்வரைய்யா அவர்கள் பிறந்த தினம்
by சக்தி18 Mon Sep 16, 2019 1:05 pm

» மங்கையர் திலகங்கள்
by சக்தி18 Mon Sep 16, 2019 12:49 pm

» நியூ நேஷனல் எஜுகேஷன் பாலிசி...!!!.
by ayyasamy ram Mon Sep 16, 2019 12:30 pm

» "நாட்டின் ஒரே மொழியாக இந்தி" அண்ணாவின் பேச்சை குறிப்பிட்டு வைகைசெல்வன் கருத்து
by kram Mon Sep 16, 2019 12:15 pm

» சக்தி - ரோன்டா பைர்ன் மின்நூல்
by kram Mon Sep 16, 2019 11:28 am

» மீசையை முறுக்கும், சந்தானம்!
by பழ.முத்துராமலிங்கம் Mon Sep 16, 2019 11:12 am

» 60 வயதில் அடியெடுத்து வைக்கிறது தூர்தர்ஷன்
by பழ.முத்துராமலிங்கம் Mon Sep 16, 2019 11:07 am

» சவுதியில் கச்சா எண்ணெய் உற்பத்தி நிறுத்தம்
by பழ.முத்துராமலிங்கம் Mon Sep 16, 2019 10:55 am

» காரணம் - கவிதை
by ayyasamy ram Mon Sep 16, 2019 9:38 am

Admins Online

வெள்ளெருக்கு செடி வீட்டில் வளர்க்கலாமா?

வெள்ளெருக்கு செடி வீட்டில் வளர்க்கலாமா? Empty வெள்ளெருக்கு செடி வீட்டில் வளர்க்கலாமா?

Post by சாமி on Sat May 18, 2019 4:40 pm

வணக்கம்!

(எச்சரிக்கை 1: இக்கட்டுரையை ஆரம்பம் முதல் நிறைவு வரை ஊன்றிப் படிக்கவும். எதையாவது விட்டுவிட்டீர்களேயானால் அடியேன் பொறுப்பு எடுத்துக்கொள்ளமுடியாது.)

இன்று நாம் பார்க்க இருப்பது ஓர் அற்புதமான செடி. வீட்டில் அத்தியாவசியம் வளர்க்க வேண்டிய செடிகளில் ஒன்று இது ஆகும்.

இந்தச்செடி வறண்ட பிரதேசத்திலும் வளரும். ஒரு ஆள் உயரத்திற்குக் கூட உயர்ந்து அடர்த்தியாக படர்ந்து வளரும். நிறைய கிளைகள் விட்டு நுனியில் கொத்துக் கொத்தாக மொட்டு விட்டு மலர்ந்து காய்க்கும். அடியிலை பழுத்து மஞ்சள் நிறமாக மாறி கீழே விழுந்து விடும். இச்செடியின் நுனி முதல் அடிவேர் வரை பால் போன்று நீரோட்டமிருக்கும். இந்தச் செடியின் எந்த பாகத்தை ஒடித்தாலும் பால் போல் வெளிப்படும். சில துளிகள் வெளி வந்தவுடன் தானே நின்று விடும்.

இந்தசெடி, துஷ்ட ஆவிகள் வீட்டிற்குள் நுழையாமல் தடுப்பதாகவும், பில்லி, சூனியம், செய்வினை போன்றவற்றை முடக்குவதாகவும் நம்புவதால், மேட்டூர் பகுதியை சேர்ந்த பெரும்பாலான மக்கள் வீட்டு முன் இச்செடியை வளர்க்கின்றனர். சென்னையில் கொளத்தூரின் சில பகுதிகளில் ஒவ்வொரு வீட்டிலும் இச்செடியை வளர்ப்பதை இன்றும்கூட நாம் பார்க்கலாம்.

இவ்வளவு சிறப்புகள் வாய்ந்த செடி எது தெரியுமா? அது வெள்ளெருக்கஞ்செடி ஆகும்.
எருக்கஞ்செடிகளில் நீலம், வெள்ளை, முத்து என பல்வேறு வகைகள் உள்ளது. இதில், வெள்ளை நிற பூக்கள் பூக்கும் எருக்கஞ்செடி வேரில் விநாயகர் சிலை செய்து பக்தர்கள் வழிபாடு செய்கின்றனர். மேலும், வெள்ளை எருக்கனில் லட்சுமி வாசம் செய்வதாகவும் நம்புகின்றனர்.

வெள்ளை எருக்கன் செடியை வீட்டின் முன்புறம் வளர்த்தால், வீட்டில் செல்வம் கொழிக்கும். வீட்டிற்குள் துஷ்ட ஆவிகள் நுழையாது. பில்லி, சூனியம், செய்வினை போன்றவற்றால் வீட்டில் வசிப்பவர்கள் பாதிக்காமல் தடுக்கும் என மக்கள் நம்புகின்றனர்.

புதையல், ரத்தினங்கள், சிலைகள், தங்கம் பதுக்கி வைத்திருக்கும் இடம் ஆகிய இடங்களில் மட்டுமே வெள்ளெருக்கு முளைக்கும் என விருட்ச நூல்களில் கூறப்பட்டுள்ளது. அரிதான பொருள்கள் இருக்கும் இடத்தில்தான் வெள்ளெருக்கு செடி முளைக்கும் என சங்க கால நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி பார்த்தோமேயானால் வெள்ளெருக்கு இருக்கும் இடத்தில் தெய்வீக சக்தி இருக்கிறது என்று அர்த்தம்.

வெள்ளெருக்கு சிவனாருக்கு உகந்தது என்பர், வெள்ளெருக்கு செடி வீட்டின் முன் வைப்பது விஷேசம், அதன் வளர்ச்சி, வீட்டில் செல்வச் செழிப்பை ஏற்படுத்தும். இந்த செடியை தாண்டி பாம்புகள் வராது என்பதால், வீட்டு வாசலில் வெள்ளெருக்கு கட்டாயம் வளர்க்க வேண்டும் என்பது நம் முன்னோர்களின் நம்பிக்கையாக இருந்துள்ளது. பொதுவாக வெள்ளெருக்குச் செடிக்கு தனி சக்தி உண்டு. வெள்ளெருக்கை தேவ மூலிகை அல்லது தேவவிருக்ஷம் என்றும் கூறலாம்.

(எச்சரிக்கை 2: மேலே நீங்கள் படித்தது எதுவும் என்னுடைய கருத்து கிடையாது. இவை அனைத்தும் இண்டர்நெட், வாட்ஸ் ஆப், பேஸ்புக், யூட்யூப் போன்ற சமூக ஊடகங்களில் வரக்கூடிய செய்திகளாகும்.)

(எச்சரிக்கை 3: இனிமேல் வரக்கூடிய செய்திகள் அடியேனுடையது. ஆகையால் மிகக் கவனமாக படிக்கவேண்டியது உங்களுடைய தலையாய கடமையாகிறது.)

“ஐயா வணக்கம்! வெள்ளெருக்கஞ் செடி வீட்டில் வளர்க்கலாமா? கூடாதா?”

“கூடாது!”

“வீட்டில் வளர்க்கலாம் என இண்டர்நெட்டில் வெளியிடப்பட்டுள்ள செய்திகள் சொல்கிறதே!”

“இண்டர்நெட், வாட்ஸ் ஆப், பேஸ்புக், யூட்யூப் போன்ற சமூக ஊடகங்களில் வரக்கூடிய செய்திகளை, ஏதோ தேவவாக்கு போல நம்பி விடுவதால் நீங்கள் இப்படிக் கேட்கிறீர்கள் என நினைக்கிறேன்! அந்த ஊடகங்கள் தாங்கள் வெளியிடும் செய்திகளுக்கு உண்டான ஆதாரங்கள் எதையும் காட்டுவதில்லை. வெறுமனே இது ஐதீகம், நம்முடைய முன்னோர்களின் பழக்கவழக்கங்கள் எனச் சொல்லி முடித்துவிடுவார்கள்!”

நீங்கள் சொல்வது உண்மைதான் ஐயா! உங்களுடைய கருத்துக்கள்தான் எங்களுக்கு முக்கியம். ஏன் வளர்க்கக் கூடாது என நீங்கள் சொல்லுங்கள் ஐயா!

பாழடைந்த இடத்திற்கு அடையாளமாகச் சொல்லப்படுவது சில விஷயங்கள். குட்டிச்சுவர், கரையான் புற்று, கள்ளிச்செடிகள், முட்செடிகள், பாம்பு போன்ற விஷ ஜந்துக்கள் வாழ்வதுது போன்றவை. அதில் ஒன்றுதான் இந்த வெள்ளெருக்கஞ்செடியும்! என்ன நம்பிக்கை வரவில்லையா? பாட்டி பாடுவதைக் கேளுங்கள்!

வேதாளஞ் சேருமே வெள்ளெருக்குப் பூக்குமே
பாதாள மூலி படருமே-மூதேவி
சென்றிருந்து வாழ்வளே சேடன் குடிபுகுமே
மன்றோரஞ் சொன்னார் மனை.

இது நம்ம ஒளவைப்பாட்டி பாடியருளிய ‘நல்வழி’யில் வரும் பாடலாகும். இந்தப்பாடலின் பொருளைப் பார்ப்போமா?

நீதி மன்றத்தில் பொய்சாட்சி சொல்பவர்கள் வீட்டில், பேய் பிசாசு வந்து சேருமாம், வெள்ளெருக்கம்பூ செடிகள் முளைத்து படர்ந்து மலர்விட்டு கொழிக்குமாம், துர் தேவதையாக அறியப்படும் மூதேவி வந்து வாழ்வாளாம், விஷ ஜந்தான பாம்பு வந்து குடி புகுந்து விடுமாம். இப்படி பல தண்டனைகள் நிகழுமாம்.

பாழடைந்த இடங்களில் வளரும் செடியை, வீட்டில் வளர்த்து, வாழுகின்ற வீட்டைப் பாழாக்கலாமா? சிந்திக்கவும்!
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2403
இணைந்தது : 08/08/2011
மதிப்பீடுகள் : 1250

View user profile http://arundhtamil.blogspot.in

Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை