உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» இதுதான் அரசியல் என்பதோ.
by T.N.Balasubramanian Today at 6:42 pm

» வணக்கம்
by T.N.Balasubramanian Today at 6:38 pm

» பிரதமர் மோடியுடன் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி சந்திப்பு
by பழ.முத்துராமலிங்கம் Today at 12:50 pm

» மீண்டும் பாலகிருஷ்ணாவை இயக்கும் கே.எஸ்.ரவிகுமார்.
by பழ.முத்துராமலிங்கம் Today at 12:48 pm

» ஆரஞ்சு டீ
by பழ.முத்துராமலிங்கம் Today at 12:47 pm

» ஐந்தாவது முறையாக அரியணை ஏறும் நவீன் பட்நாயக்: 29ம் தேதி பதவியேற்பு
by பழ.முத்துராமலிங்கம் Today at 12:46 pm

» சாண்டில்யனின் புகழ் பெற்ற 50 சரித்திர நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய ..
by சிவரூபன் Today at 8:39 am

» தமிழ் புத்தகம் தேவை
by aravindhansundhararaj Today at 8:32 am

» புத்தக வேண்டுகோள்
by saravanan1992 Today at 12:57 am

» பழமொன்ரியுக்கள்
by raju arockiasamy Yesterday at 11:07 pm

» சைவ, வைணவ, துவைத புத்தகங்கள்
by புத்தகப்பிாியன் Yesterday at 9:37 pm

» MGR, கலைஞர், ஜெயலலிதா புத்தகங்கள்
by புத்தகப்பிாியன் Yesterday at 9:36 pm

» வேதங்கள் தமிழில்
by புத்தகப்பிாியன் Yesterday at 9:35 pm

» ஈழத்து புத்தகங்கள்
by புத்தகப்பிாியன் Yesterday at 9:34 pm

» ஸ்மிரிதி இரானியின் ஆதரவாளர் சுட்டுக்கொலை - அமேதியில் துணிகரம்
by ayyasamy ram Yesterday at 3:11 pm

» அன்னை மொழி
by ayyasamy ram Yesterday at 3:07 pm

» சகுந்தலா தேவி வேடத்தில் வித்யா பாலன் நடிக்கிறார்.
by ayyasamy ram Yesterday at 1:50 pm

» “கொச்சின் ஷாதி அட் சென்னை 03′
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சிம்பு தேவன் இயக்கியுள்ள படத்தில் யுவன், சந்தோஷ் நாராயணன் உள்ளிட்ட 6 இசையமைப்பாளர்கள்!
by ayyasamy ram Yesterday at 1:39 pm

» கீ – திரைப்பட விமரிசனம்
by ayyasamy ram Yesterday at 1:36 pm

» அயோக்யா- திரைப்பட விமரிசனம்
by ayyasamy ram Yesterday at 1:36 pm

» இது சீரியல் டைம்…!!
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» “கைதி’ படத்தை இயக்கும் லோகேஷ் கனகராஜ்
by ayyasamy ram Yesterday at 11:13 am

» கரண் ஜோஹர் தயாரிப்பில் உருவாகி வரும் படம் “கலன்க்’
by ayyasamy ram Yesterday at 11:12 am

» டர்டாய்ஸ்க்கும் டர்ட்டிலுக்கும் என்ன வித்தியாசம்
by ayyasamy ram Yesterday at 11:11 am

» நான் சந்தோஷமா இருந்தா என் மனைவிக்குப் பிடிக்காது''..!!
by ayyasamy ram Yesterday at 9:41 am

» தமிழகத்துக்கு நீர் கிடைக்க கோதாவரி-காவிரி இணைப்பு முதல் பணி: நிதின் கட்கரி
by ayyasamy ram Yesterday at 9:37 am

» சிம்பு தேவன் இயக்கியுள்ள படத்தில் யுவன், சந்தோஷ் நாராயணன் உள்ளிட்ட 6 இசையமைப்பாளர்கள்!
by ayyasamy ram Yesterday at 9:27 am

» நாட்டு நடப்பு -படமும் செய்தியும்
by ayyasamy ram Yesterday at 9:19 am

» குழந்தைக்கு மோடி பெயர் சூட்டி மகிழ்ந்த முஸ்லிம் தம்பதி
by ayyasamy ram Yesterday at 9:12 am

» ராஜ்யசபாவில் தே.ஜ கூட்டணிக்கு பெரும்பான்மை
by ayyasamy ram Yesterday at 9:10 am

» பதுக்கிய 2000 ரூபாய் நோட்டுகள் மீண்டும் புழக்கம்
by ayyasamy ram Yesterday at 9:08 am

» எம்.பி-யாகும் நான்கு எழுத்தாளர்கள்!
by ஞானமுருகன் Yesterday at 12:08 am

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Sat May 25, 2019 10:48 pm

» தேங்காய் பர்பி!
by ayyasamy ram Sat May 25, 2019 7:53 pm

» “எங்கள் வீட்டின் ஒரு நல்ல பழக்கம் இதுதான் !” – சேத்தன் !
by ayyasamy ram Sat May 25, 2019 7:51 pm

» இடுப்பு வேட்டி அவிழ…
by ayyasamy ram Sat May 25, 2019 7:47 pm

» ஒருவனுக்கு ஒருத்தி!
by ayyasamy ram Sat May 25, 2019 7:46 pm

» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Sat May 25, 2019 7:44 pm

» பொன் மொழிகள்
by ayyasamy ram Sat May 25, 2019 7:43 pm

» பொருத்துக…
by ayyasamy ram Sat May 25, 2019 7:40 pm

» நெல்லை; 8 அணைகள் வறண்டன
by ayyasamy ram Sat May 25, 2019 7:27 pm

» காஞ்சி பெரியவா அறவுரை
by ayyasamy ram Sat May 25, 2019 7:16 pm

» நினைவுச் சுடர் ! பெருந்தன்மை
by ayyasamy ram Sat May 25, 2019 7:11 pm

» அம்மாவைத் தேடிய குழந்தை!
by ayyasamy ram Sat May 25, 2019 7:09 pm

» பேல்பூரி – தினமணி கதிர்
by ayyasamy ram Sat May 25, 2019 7:07 pm

» அவசியம் கடைபிடிக்க வேண்டிய ஆரோக்கிய குறிப்புகள்..
by ayyasamy ram Sat May 25, 2019 6:59 pm

» மருத்துவ குறிப்புகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2019 6:58 pm

» மகத்தான மகளிர் – கவிதை
by ayyasamy ram Sat May 25, 2019 6:56 pm

» வாஜ்பாய் வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்த போது…
by ayyasamy ram Sat May 25, 2019 6:55 pm

Admins Online

அச்சத்தில் இந்திய ராணுவம்!

அச்சத்தில் இந்திய ராணுவம்! Empty அச்சத்தில் இந்திய ராணுவம்!

Post by ayyasamy ram on Wed May 15, 2019 3:44 pm


நடைபெறும் மக்களவைத் தேர்தலில் அரசியல் கட்சிகள்
நமது ராணுவ வீரர்களின் தியாகத்தைத் தேர்தல் பிரச்னையாக
மாற்றியிருப்பது கடும் கண்டனத்துக்குரியது.

ஒருபுறம் பாலாகோட் துல்லியத் தாக்குதலை ஆளும் பாரதிய
ஜனதா கட்சி தனது சாதனையாக மார்தட்டிக் கொள்ள
முற்படுவதும், இன்னொருபுறம் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்
கட்சிகள் இந்திய விமானப் படையின் துல்லியத் தாக்குதலையே
கேள்வி கேட்க முற்பட்டிருப்பதும் எந்த அளவுக்கு இந்திய
ராணுவத்தைப் பாதித்திருக்கும் என்பது குறித்து யாருமே
கவலைப்பட்டதாகத் தெரியவில்லை.
-
ஏற்கெனவே தாங்கள் விவாதப்பொருளாக்கப்பட்டிருப்பதில்
வருத்தமடைந்திருக்கும் பாதுகாப்புப் படையினரை
இன்னொரு சோதனையும் எதிர்கொள்கிறது. இந்தியாவில்
41 ராணுவ தளவாடத் தொழிற்சாலைகள் அரசால்
நடத்தப்படுகின்றன.

இந்திய ராணுவத்திற்கு வழங்கப்படும் அடிப்படைத்
தளவாடங்களும், தாக்குதலுக்குப் பயன்படும் குண்டுகளும்
அந்த அரசு ராணுவ தளவாட நிறுவனங்களில்தான் தயாரிக்கப்
படுகின்றன.

இந்திய ராணுவம் தங்களுக்கு வழங்கப்படும் ரவைகளும்
குண்டுகளும் மிகவும் தரம் குறைந்ததாக இருப்பதாகவும்,
அதனால் அதிக அளவில் விபத்துகள் நடைபெறுவதாகவும்
பாதுகாப்பு அமைச்சகத்துக்குத் தெரிவித்திருப்பது
அபாயகரமான நிலைமையை வெளிப்படுத்துகிறது.

-
அரசின் ராணுவ தளவாட தொழிற்சாலைகளில் தயாரிக்கப்படும்
ரவைகள், குண்டுகள் தொடர்பான விபத்துகள் அதிகரிப்பது
ராணுவ வீரர்கள் மத்தியில் நம்பிக்கைக் குறைவை ஏற்படுத்தி
இருக்கிறது.

கடந்த ஐந்து ஆண்டுகளில் டாங்குகளில் பயன்படுத்தப்படும்
125 எம்எம் அதிதிறன் கொண்ட குண்டுகளின் பயன்பாட்டில்
40-க்கும் மேற்பட்ட விபத்துகள் நேர்ந்திருக்கின்றன.

அது மட்டுமல்லாமல் எல்-70 என்கிற விமானங்களைத் தாக்கும்
பீரங்கிகளில் பயன்படுத்தப்படும் அதிதிறன் கொண்ட 40 எம்எம்
குண்டுகளை ராணுவ வீரர்களின் பயிற்சியின்போது பயன்
படுத்துவது அறவே நிறுத்தப்பட்டுவிட்டது.

அதற்குக் காரணம், இதனால் ஏற்பட்ட எதிர்பாராத விபத்துகளால்
பல ராணுவ வீரர்கள் பயிற்சின்போது காயமடைந்தார்கள்
என்பதுதான்.

சில குண்டுகள் வெடிக்காமல் போவதும், வேறுசில பயன்
படுத்துவதற்கு முன்பே வெடித்து விடுவதும், இன்னும் சில
தாமதமாக வெடிப்பதும் ராணுவ வீரர்கள் மத்தியில் பீதியை
ஏற்படுத்தியிருக்கின்றன.

தரமில்லாத தயாரிப்பாலும், முறையான பாதுகாப்புடன்
வழங்கப்படாததாலும் விரைவிலேயே அவை செயலிழந்து
விடுகின்றன என்கிறது ராணுவம்.

ராணுவ தளவாடங்களில் மட்டுமல்ல, நமது விமானப் படையும்
பல சவால்களை எதிர்கொள்கிறது. பாலாகோட் தாக்குதல்
இந்திய விமானப் படையின் பலவீனத்தை வெளிச்சம் போட்டதை
நாம் உணர வேண்டும்.

பாகிஸ்தானின் எஃப்-16 போர் விமானங்களுக்கு நமது பழைமையான
மிக்-21 போர் விமானங்களால் ஈடுகொடுக்க முடியவில்லை.
அதையும் மீறித்தான் நமது விமானப் படையினர் பாலாகோட்டில்
துல்லியத் தாக்குதல் நடத்தியிருக்கிறார்கள் என்பதை நாம் மறந்து
விடக் கூடாது.

பாகிஸ்தானிலிருந்து செயல்படும் பயங்கரவாத முகாம்கள் மீது
நாம் தற்காப்புத் தாக்குதல் நடத்த வேண்டுமென்றால்,
நமது பாதுகாப்பு குறித்து மீள்பார்வை பார்க்க வேண்டிய அவசியம்
ஏற்பட்டிருக்கிறது.

பாகிஸ்தானிடம் அதிநவீன ரக போர் விமானங்கள் இருக்கும் நிலையில்,
நம்முடைய பழைய தொழில்நுட்பத்துடன் கூடிய விமானங்களால்
அவற்றை எதிர்கொள்ள முடியாது என்கிற உண்மையை நாம் ஏற்றுக்
கொண்டாக வேண்டும்.

இந்தியாவின் ரஃபேல் போர் விமான கொள்முதல் விவாதப் பொருளாகி
இருப்பது, இந்திய ராணுவத்தைக் கவலைக்குள்ளாக்கியிருக்கிறது.

ரஃபேல் போர் விமானம் வாங்குவதில் ஊழல் நடந்திருப்பதாக குற்றம்
சாட்டுவதன் மூலம், காங்கிரஸ் கட்சியின் மீதான போஃபர்ஸ்
களங்கத்தை துடைக்க நினைக்கும் காங்கிரஸ் கட்சியின் தலைவர்
ராகுல் காந்தியின் விமர்சனங்களைப் பல முன்னாள் ராணுவ,
விமானப் படை அதிகாரிகள் கண்டித்திருப்பதில் நியாயமிருக்கிறது.

காரணம், இதற்கு முன்னால் போஃபர்ஸ் வாங்கியது விவாதப்
பொருளாக்கப்பட்டாலும், 1999 கார்கில் போரில் பாகிஸ்தானிய
ஊடுருவிகளை அகற்ற அந்த பீரங்கிகள்தான் பயன்பட்டன என்பதை
அவர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.

விமர்சனங்களை எழுப்பி ரஃபேல் போன்ற அதிநவீன போர் விமானங்களை
வாங்குவது தடுக்கப்பட்டால், அதனால் இந்தியாவின் பாதுகாப்பு
பேராபத்தை எதிர்கொள்ளும் என்று அவர்கள் எச்சரிக்கிறார்கள்.

ராணுவ தளவாடங்களை இந்தியாவில் தயாரிப்பது என்கிற
நரேந்திர மோடி அரசின் முயற்சி பெரிய அளவில் வெற்றி பெறவில்லை.

உலகிலேயே மிக அதிகமாக ராணுவ தளவாடங்களை இறக்குமதி
செய்யும் நாடு இந்தியாதான் என்பதால், தளவாட உற்பத்தியில்
முன்னணியில் இருக்கும் வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில்
தங்களது தொழிற்சாலைகளை அமைக்க முன்வரவில்லை.

இந்திய ராணுவத்தின் ராணுவ தளவாட கொள்முதல் கொள்கை மிகவும்
கடினமானதும், காலதாமதம் ஏற்படுத்துவதாகவும் இருப்பதால் தனியார்
துறையினர் இதில் ஆர்வம் காட்டுவதில்லை.

உத்தரவாதமும், தொடர்ந்து ஆதரவும் இல்லாதபோது தனியார்
நிறுவனங்கள் ஆர்வம் காட்டாததில் வியப்பும் இல்லை.
-
--------------------------------------
முறையான, உறுதியான ராணுவ தளவாட கொள்முதல் கொள்கை
இல்லாமல் இருப்பதும், அரசின் ராணுவ தளவாட தொழிற்சாலைகளில்
தரமான தளவாடங்களைத் தயாரிக்காமல் இருப்பதும் இந்தியாவின்
பாதுகாப்புக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறியிருக்கின்றன.

இது குறித்து யாருமே கவலைப்படுவதாகத் தெரியவில்லை.
-
----------------------------------------------
By ஆசிரியர் - தினமணி
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 45376
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12099

View user profile https://rammalar.wordpress.com/

Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை