உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» குமரி சுற்றுச்சூழல் பூங்காவில் மலர் கண்காட்சி: அரசுக்கு தோட்டக்கலைத் துறை பரிந்துரை
by ayyasamy ram Today at 8:02 am

» ஏரி, குளங்களில் குட்டைகளை ஏற்படுத்தி நிலத்தடி நீரை செறிவூட்ட புதிய முறை
by ayyasamy ram Today at 7:59 am

» சூரியனைச் சுற்றி பிரகாசமான ஒளி வட்டம்: வானத்தில் உருவான அபூர்வ நிகழ்வு
by ayyasamy ram Today at 7:53 am

» சென்னையில் முதன்முறையாக மின்சார பஸ் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைக்கிறார்
by ayyasamy ram Today at 7:12 am

» 36 ஆண்டுகளுக்கு பின் உலக பேட்மிண்டன் தொடரில் இந்தியாவுக்கு தங்க பதக்கம்!
by ayyasamy ram Today at 7:09 am

» “காதலை தேடி ஓட வேண்டாம்” - நித்யா மேனன்
by ayyasamy ram Today at 7:03 am

» மகாத்மா காந்தி 150-வது பிறந்தநாளையொட்டி பிளாஸ்டிக்கை ஒழிக்க மக்கள் இயக்கம் - பிரதமர் மோடி அழைப்பு
by ayyasamy ram Today at 7:01 am

» ஞானிகளின் அருளை பெற வேண்டுமா -{ஞானி ரைக்வர் கதை}
by ayyasamy ram Today at 6:42 am

» சமையலறை குறிப்புகள்!
by ayyasamy ram Today at 6:33 am

» `கானாறாய்’ மாறிப் போன பாலாற்றை மீட்டெடுக்கும் இளைஞரகள்
by ayyasamy ram Today at 6:30 am

» ராக பந்தம் உள்ளவர்கள், செய்த அந்திம சடங்கு
by ayyasamy ram Today at 6:18 am

» கள்ளுண்ணாமை போராட்டத்தில் ம.பொ.சி
by ayyasamy ram Today at 6:15 am

» கார்ட்டூன் & கருத்து சித்திரம் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 6:08 am

» வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு
by ayyasamy ram Today at 6:06 am

» ஒரே சமயத்தில் மூன்று அரசு வேலைகளில்
by T.N.Balasubramanian Yesterday at 9:31 pm

» அமேசன் என்கிற ஆச்சரியம்!????????❤❤
by T.N.Balasubramanian Yesterday at 6:41 pm

» வாய்விட்டு சிரித்தால், நோய் விட்டுப் போகும்.
by T.N.Balasubramanian Yesterday at 6:08 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Yesterday at 1:00 pm

» சைரா நரசிம்மா ரெட்டி படத்தில் நடிக்கும் அனுஷ்கா
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» தைரியமும், தன்னம்பிக்கையும் கொடுத்ததுக்கு நன்றி - விக்ராந்த்
by ayyasamy ram Yesterday at 12:54 pm

» நீ மற்றவர்களுக்கு பரிசு அளிக்க விரும்பினால் ——-
by T.N.Balasubramanian Yesterday at 12:04 pm

» லஷ்கர்-இ-தொய்பாவுடன் தொடர்பு: தேடப்பட்ட வாலிபர் இளம்பெண்ணுடன் கொச்சியில் கைது
by T.N.Balasubramanian Yesterday at 11:59 am

» புன்னகை நிலவு.. பொங்கும் அழகு..
by ayyasamy ram Yesterday at 10:53 am

» ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘ரூபே’ கார்டு திட்டம்: பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்
by ayyasamy ram Yesterday at 10:43 am

» வடகொரிய தலைவர் முன்னிலையில் நடந்த மிக பெரிய ஏவுகணை லாஞ்சர் பரிசோதனை
by ayyasamy ram Yesterday at 10:41 am

» முன்னாள் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி காலமானார்
by ayyasamy ram Yesterday at 10:40 am

» அற்புத கான்டாக்ட் லென்ஸ்
by ayyasamy ram Yesterday at 9:01 am

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 9:00 am

» தழும்பை தவிர்க்கும் மஞ்சள் பிளாஸ்திரி
by ayyasamy ram Yesterday at 8:58 am

» மொக்க ஜோக்ஸ் – சிறுவர் மலர்
by ayyasamy ram Yesterday at 8:55 am

» விருப்பம் : ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:55 am

» வாய்ப்பு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தலைவர் ஏன் ஏக்கப் பெருமூச்சு விடறார்..?!
by ayyasamy ram Yesterday at 7:23 am

» லயன் காமிக்ஸ் | Free Download
by i6appar Yesterday at 7:18 am

» பழைய பாடல்கள் - காணொளி {தொடர் பதிவு}
by ayyasamy ram Yesterday at 7:00 am

» தீர காதல் காண கண்டேனே
by ayyasamy ram Yesterday at 6:53 am

» உடும்பு சிவலிங்கம்
by ayyasamy ram Yesterday at 6:39 am

» பிள்ளையார்பட்டியில் சதுர்த்தி விழா கொடியேற்றம்
by ayyasamy ram Yesterday at 6:19 am

» வலைப்பேச்சு - ரசித்தவை
by ayyasamy ram Sat Aug 24, 2019 8:45 pm

» காது – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Aug 24, 2019 8:40 pm

» கைதட்டல் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Aug 24, 2019 8:40 pm

» தும்பிகளற்ற வானம் – கவிதை
by ayyasamy ram Sat Aug 24, 2019 8:37 pm

» நீதிமன்ற ஓட்டுநராக தந்தை; நீதிபதியாகி சாதித்த மகன்
by ayyasamy ram Sat Aug 24, 2019 8:32 pm

» '74 வயதாகும் ஒருவரை சுவரேறிக் குதித்து கைதுசெய்ய வேண்டுமா?' - என்.ராம்
by கோபால்ஜி Sat Aug 24, 2019 8:04 pm

» “மம்மி”யுடன் படுத்துறங்க அரிய வாய்ப்பு
by சக்தி18 Sat Aug 24, 2019 7:41 pm

» காதல் ஜோடிகள் -இது உண்மைக் காதல்
by சக்தி18 Sat Aug 24, 2019 7:40 pm

» ரிலக்ஸ் பண்ண – பதில் சொல்ல முடிகிறதா?
by சக்தி18 Sat Aug 24, 2019 7:32 pm

» சென்னையின் 380-வது பிறந்த நாள்; மிக நீண்ட கடற்கரை; உலகின் மிக பழமையான மாநகராட்சி; 2,000 ஆண்டுகள் பழமை
by T.N.Balasubramanian Sat Aug 24, 2019 6:08 pm

» சிக்கலில் ஜெகன்! ஏழுமலையான் பஸ் டிக்கெட்டில் ஜெருசலேம் விளம்பரம்
by ayyasamy ram Sat Aug 24, 2019 5:20 pm

» திரிஷாவுக்கு உதவிய சேதுபதி
by ayyasamy ram Sat Aug 24, 2019 5:04 pm

Admins Online

என்னை நம்பியுள்ளவர்களை எப்படி ஏமாற்றுவது?” கோபால கிருஷ்ண கோகலே பிறந்தநாள் சிறப்புப் பகிர்வு!

என்னை நம்பியுள்ளவர்களை எப்படி ஏமாற்றுவது?” கோபால கிருஷ்ண கோகலே பிறந்தநாள் சிறப்புப் பகிர்வு! Empty என்னை நம்பியுள்ளவர்களை எப்படி ஏமாற்றுவது?” கோபால கிருஷ்ண கோகலே பிறந்தநாள் சிறப்புப் பகிர்வு!

Post by ayyasamy ram on Thu May 09, 2019 8:45 am

என்னை நம்பியுள்ளவர்களை எப்படி ஏமாற்றுவது?” கோபால கிருஷ்ண கோகலே பிறந்தநாள் சிறப்புப் பகிர்வு! 1_17332
-
“அழுவது எனக்குப் பிடிக்காது;
அழுவதானால் இந்த இடத்தைவிட்டுச் செல்லுங்கள்” - உடல்நிலை
மிகவும் கடுமையாகப் பாதிக்கப்பட்டு... காலன், கணக்கை முடிக்க
காத்திருந்த காலகட்டத்தில், ஆறுதல் சொல்ல வந்த நண்பர்களிடம்...
‘பாரத மணி’ என்று அழைக்கப்பட்ட கோபாலா சொன்ன
வார்த்தைகள்தான் அவை.

பெருமாளின் பெயர்களில் ஒன்றான கோபாலா என்ற பெயரை,
தன் சிறுவயதில் கொண்டிருந்த அந்தச் சிறுவன் வேறு யாருமல்ல...
பின்னாட்களில் சுதந்திரப் போராட்டக் களத்தில் உயிரைநீத்த
கோபால கிருஷ்ண கோகலேதான். அவருடைய பிறந்த தினம் இன்று.

ஆங்கிலேயர் முன் வைத்த வாதம்!

தம் பெயரான கோபாலனையும், தன் தந்தையின் பெயரான
கிருஷ்ண ராவில் உள்ள கிருஷ்ணாவையும், தம் வம்சத்தின்
பெயரான கோகலே என்பதையும் ஒன்றாக இணைத்து
கோபால கிருஷ்ண கோகலே என்று மாறினார் அந்தக் கோபாலன்.

''ஒரு துறவியின் மனநிலையுடன் எல்லாவற்றையும் துறந்து தேச
சேவையில் பலர் ஈடுபட்டு இந்தத் தேச உயர்வுக்குப் பாடுபட
வேண்டும்'' என்று எண்ணினார்; அதற்காக அல்லும்பகலும்
அயராது உழைத்தார். இந்திய - இங்கிலாந்து பொருளாதார
உறவுகளைப் பரிசீலிக்க 'வெல்பி கமிஷன்' எனும் குழு
அமைக்கப்பட்டது.

இந்தக் குழு முன், இந்தியாவில் உள்ள பொது நிறுவனங்களைச்
சாட்சியம் அளிக்க பிரிட்டிஷ் அரசு கேட்டுக்கொண்டது.
அதற்காக இங்கிலாந்து சென்று தன் வாதத்தை வைத்தார்
கோகலே. ''இந்தியாவின் வருமானத்தில் பெரும் பகுதி
ராணுவத்துக்கும், உயர் பதவி வகிப்பவர்களுக்கான சம்பளம்
மற்றும் பென்ஷன் ஆகியவற்றுக்குமே செல்கிறது.

இதனால் சுகாதாரம் மற்றும் அடிப்படைத் தேவைகளுக்குப்
பணம் செலவழிக்க முடிவதில்லை. இந்நிலை மாற வேண்டும்;
பிரிட்டிஷ் அரசு ஏழைகளாய் உள்ள அடிப்படை வசதிகளற்ற
இந்தியர்களின் நிலையை அறிய வேண்டும்; இந்நிலை மாற
வழிவகை செய்ய வேண்டும்'' என்பதுதான் அவர் வைத்த
வாதமாகும்.

இப்படி ஆங்கிலேயர் முன் அவர் அளித்த வாதத்துக்கு அன்றே
வெற்றி கிடைத்தது.

உண்மையின் உறைவிடத்துக்கு எடுத்துக்காட்டாகத் திகழ்ந்தவர்
கோபால கிருஷ்ண கோகலே. அதற்கு உதாரணமாய் அவரது
வாழ்வில் நடந்த எத்தனையோ சம்பவங்களைச் சொல்லலாம்...
அதில், சிலவற்றை இப்போது காண்போம்.

''என்னை நம்பியுள்ளவர்களை எப்படி ஏமாற்றுவது?''

தன்னுடையச் சிறுவயதில் நண்பர்களோடும்,
தன் சகோதரரோடும் விளையாடுவது வழக்கம். ஒருநாள் தம்
அண்ணன் ஓர் அணியாகவும், தான் ஓர் அணியாகவும் பிரிந்து
விளையாடிக்கொண்டிருந்தார் கோகலே.

அப்போது, இவருடைய அணி வெற்றிபெறும் தருவாயில் இருந்தது.
அந்த நேரத்தில் கோகலேயின் சகோதரரான கோவிந்தா,
கோகலேயை அழைத்து... ''உன்னைவிடப் பெரியவன் நான்;
என்னோடு நீ போட்டிபோடுவதால் உன் அணி வென்றுவிடும்போல்
உள்ளது. எனது அணி தோற்றால் எனக்கு அவமானம்;
உன் அண்ணன் தோற்பதை நீ விரும்புகிறாயா? எனவே, எனக்காக
நீ கொஞ்சம் விட்டுக்கொடுத்து விளையாடு. என் அணி தானாக
வெற்றிபெறும்'' என்றார்.

தன் சகோதரர் மீது மிகுந்த பாசம் வைத்திருந்த கோகலே
, ''அண்ணா... தாங்கள் கூறினால் இந்த விளையாட்டில் இருந்துகூட
விலகிக்கொள்கிறேன். ஆனால், என்னை நம்பியுள்ள எனது
குழுவினரை நான் எப்படி ஏமாற்றுவது... அது தவறல்லவா''
என்றார்.

உண்மையை ஒப்புக்கொண்ட கோகலே!

பால்ய பருவத்தில், அண்ணன் தம்பி இருவருமே ஒரே பள்ளியில்
படித்துவந்தனர். அப்போது, கணக்கு ஒன்றைக் கொடுத்து...
அதை வீட்டுப்பாடம் செய்துகொண்டு வரச் சொன்னார்
வகுப்பாசிரியர். மறுநாள், கோகலேயைத் தவிர வேறு எவரும்
அந்தக் கணக்கைச் செய்யவில்லை. ஆகையால், அவரைச்
சிறப்பித்தார் வகுப்பாசிரியர்.

அப்போது, கோகலேயின் கண்களிலிருந்து நீர் கசிந்தது. காரணம்
புரியாத ஆசிரியர், ''ஏன் கோபால் அழுகிறாய்? நீதான் கணக்குச்
சரியாகப் போட்டிருக்கிறாயே'' என்றார்.

அதற்கு கோகலே, ''இல்லை... ஐயா! என்னை மன்னித்துவிடுங்கள்.
இந்தக் கணக்கை நான் மட்டும் தனியாகச் செய்யவில்லை.
என் அண்ணன் உதவியுடன்தான் இதைச் செய்தேன்'' என்று
உண்மையை ஒப்புக்கொண்ட கோகலேதான், பின்னாளில் உலகம்
போற்றும் தேச பிதாவாக உயர்ந்த மகாத்மா காந்திக்குக் குருவாக
இருந்தார்.

ரானடேவைத் தடுத்து நிறுத்தினார்!

விழா ஒன்றில், அரங்கத்துக்குள் வருபவர்களை டிக்கெட்
பரிசோதனை செய்து அனுப்பும் பணியில் தீவிரமாக இருந்தார்
கோகலே. அந்தச் சமயத்தில் டிக்கெட் கொண்டுவராமல் வந்த
ஒருவரை வாசலிலேயே நிறுத்திவிட்டார் கோகலே.

அவருடைய நேர்மையையும், திறமையையும் பற்றிக் கேள்விப்பட்டு
மிகவும் வியந்துபோனார் டிக்கெட் கொண்டுவராதவர். பின்னர்,
அவரைப்பற்றி நன்கு அறிந்த ஒரு நண்பர், கோகலேயிடம் விளக்கிக்
கூறினார். அதன்பின்பே, அவரை உள்ளே அனுப்பினார் கோகலே.
உள்ளே சென்ற அந்த நபர் வேறு யாருமல்ல... குரு மகாதேவ் என்று
அழைக்கப்பட்ட மகாதேவ கோவிந்த ரானடேதான்.

இவர்தான், கோகலேயின் குருவாக இருந்தார். இந்தச் சந்திப்புதான்
அவர்களுக்குள் ஒரு நீண்டகால தொடர்பை ஏற்படுத்தியது.

''ஓய்வெடுக்க வேண்டிய இடம்!''

''என் தாய்நாடே! நீ அரசியல், சமயம், இலக்கியம், விஞ்ஞானம்,
கலை, தொழில் என எல்லா வளமும் பெற்றுத் திகழவேண்டும்.
இதுவே என் மனப்பூர்வமான ஆசை'' என்று சொன்ன கோகலேயின்
ஆசை இன்று ஓரளவு இந்தியாவில் நிறைவேறியிருந்தாலும்,
இதைவிட முழுதாக மாற வேண்டும்; முன்னேற வேண்டும்
என்பதுதான் அனைவருடைய விருப்பமாக இருக்கிறது.
-
------------------------------------------


1912-ல் அமைக்கப்பட்ட பப்ளிக் சர்வீஸ் கமிஷனில் கோகலேயின்
பணி மிகவும் முக்கியமானது. இந்தியர்கள் உயர்வான அரசுப்
பணிகளுக்குத் தகுதி உடையவர்களா, இல்லையா என ஆராய்வது
இந்தக் கமிஷனின் நோக்கம்.

இதற்கு வாக்குறுதி அளிக்க வந்தவர்களை விசாரிக்க வேண்டிய
பணி கோகலேவுடையது. இதன் ஓயாத உழைப்பு, அவருக்கு
உடல்நலக் குறைவை உண்டாக்கியது. மருத்துவர்கள்
ஓய்வெடுக்கும்படி அறிவுரை கூறினர். அவரோ, ''இது கர்ம பூமி;
ஓய்வெடுக்க வேண்டிய இடம் வேறு எங்கோ உள்ளது'' என்று
சொல்லி ஓய்வில்லாமல் உழைத்த அந்த கோகலேவை,
அவர் சொன்ன அந்த ஓய்வெடுக்க வேண்டிய இடம் அவரை
நிரந்தரமாக அழைத்துக்கொண்டது.
-
----------------------------------------
ஜெ.பிரகாஷ்
நன்றி-விகடன்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 47589
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12270

View user profile https://rammalar.wordpress.com/

Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை