உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» விருது பெற்ற தமிழ்த் திரைப் பாடல்கள்
by ayyasamy ram Today at 4:41 pm

» எந்த பெண்ணிலும் இல்லாத ஒன்று...
by ayyasamy ram Today at 4:30 pm

» முகநூலில் ரசித்தவை
by ayyasamy ram Today at 4:23 pm

» இலவச காய்கறி விவசாயி தாராளம்
by ayyasamy ram Today at 4:13 pm

» துப்புரவாளருக்கு ரூபாய் மாலை
by ayyasamy ram Today at 4:11 pm

» உயிர் எழுத்துக்களில் கொரோனா கவிதை
by ayyasamy ram Today at 4:10 pm

» ஒரே மாதத்தில் 20 லட்சம்: அமெரிக்காவில் சூடு பிடிக்கும் துப்பாக்கி விற்பனை
by ayyasamy ram Today at 4:06 pm

» சீனாவில் நாளை துக்க தினம் அனுசரிப்பு
by ayyasamy ram Today at 4:02 pm

» வேலன்:-ஆடியோ பைல்களை பார்வையிட -Finetune.
by velang Today at 2:08 pm

» அமெரிக்க தடையை மீறி ஈரானுக்கு ஐரோப்பிய நாடுகள் உதவி
by சக்தி18 Today at 1:41 pm

» நடிகை ஸ்ரீதிவ்யா படங்களில் உங்களுக்கு பிடித்தது?
by சக்தி18 Today at 1:33 pm

» ஏப்ரல் 5 ஆம் தேதி இரவு 9 மணிக்கு மெழுகுவர்த்தி, செல்போன் விளக்குகளை ஒளிரவிட வேண்டும்; பிரதமர் மோடி
by சக்தி18 Today at 1:30 pm

» கொரோனா அவசரநிதி: இந்தியாவுக்கு ஒரு பில்லியன் டாலர் நிதியை வழங்குகிறது உலக வங்கி..!
by ayyasamy ram Today at 12:29 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 12:19 pm

» Can you imagine? (உங்களால் கற்பனை செய்ய முடிகிறதா?)
by Pranav Jain Today at 11:51 am

» கொரோனா தமாஷ் பாருங்கள்!
by சக்தி18 Today at 11:41 am

» கோவிலில் கூட்டுக் குடும்பம்!
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:40 am

» சமூக இடைவெளியை கடைபிடித்த குரங்குகள்.... நெகிழ்ந்து போன நடிகர்
by சக்தி18 Today at 11:39 am

» யார் இந்த சாலையோரம் பூக்கள் வைத்தது
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:36 am

» இறைவன் எங்கே? இறை தூதர்கள் எங்கே?
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:12 am

» அமெரிக்கா தனது நாட்டினரை இந்தியாவில் இருந்து அனுப்ப தொடங்குகியது - தூதரக அதிகாரி
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:00 am

» கொடுமைதான்.. கொரோனா
by பழ.முத்துராமலிங்கம் Today at 10:57 am

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
by பழ.முத்துராமலிங்கம் Today at 10:35 am

» விவேக் மீம் இணையத்தில் வைரல்! நெட்டிசன்களுக்கு அவர் வைத்த கோரிக்கை
by T.N.Balasubramanian Today at 10:19 am

» மூன்றாம் உலகப்போர் எப்படி நடக்கும்? -எழுத்ததிகாரன்
by Pranav Jain Today at 8:57 am

» கொரோனாவால் கற்ற பாடம்: நாய், பூனை இறைச்சிக்கு சீனா தடை
by பழ.முத்துராமலிங்கம் Today at 8:35 am

» 300 படங்கள் நடித்துள்ளேன்!
by பழ.முத்துராமலிங்கம் Today at 8:32 am

» இந்தியஅணி உலகக்கோப்பையை வென்ற, 2011, ஏப்ரல் 2-ம் தேதியை இந்திய ரசிகர்களால் மறக்கமுடியுமா
by ayyasamy ram Today at 8:29 am

» பல ஆண்டுகளுக்குப் பின் ஏழுமலையானுக்கு 6 மணிநேர ஓய்வு
by பழ.முத்துராமலிங்கம் Today at 8:23 am

» » » கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - ஏப்ரல் 3
by ayyasamy ram Today at 6:37 am

» மது போதைக்கு அடிமையாகி மீள முடியாத நபர்களுக்கு, 'ஆன்லைன்' மூலம் இலவசமாக மீட்பு உதவி
by ayyasamy ram Today at 6:26 am

» நண்பர்களே!!! ஒரு புளியமரத்தின் கதை நாவல் கிடைக்குமா?
by Akashgkr Yesterday at 9:06 pm

» குழந்தைகளுக்கு ‛கொரோனா', ‛லாக் டவுன்' என பெயர் சூட்டிய தம்பதியினர்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» ஏப்.,15க்கு பிறகான ரயில் முன்பதிவு: தெளிவுப்படுத்திய ரயில்வே
by ayyasamy ram Yesterday at 6:08 pm

» வேலன்:-கணிணியில் தேவையற்ற பைல்களை நீக்கிட -Wash and GO -Abelsoft
by velang Yesterday at 5:54 pm

» வேலன்:-20க்கும் மேற்பட்ட விதவிதமான ஆங்கில எழுத்துருக்கள்-English Fonts
by velang Yesterday at 5:49 pm

» வேலன்:-புகைப்படத்தில் தேவையில்லாதவற்றை நீக்கிட - PhotoScissors.
by velang Yesterday at 5:48 pm

» வீட்டுக்குறிப்புகள் -மங்கையர் மலர்
by ayyasamy ram Yesterday at 4:19 pm

» கோபுர தரிசனம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 3:58 pm

» சம்யுக்தாவின் சாகச பயிற்சி
by ayyasamy ram Yesterday at 3:55 pm

» துருக்கியில் நிகிஷா
by ayyasamy ram Yesterday at 3:54 pm

» ‘கமலி ப்ரம் நடுக்காவேரி’ ஹைடெக் பின்னணியில் ஒரு காதல் கதை
by ayyasamy ram Yesterday at 3:52 pm

» கரோனா: தமிழகம் முழுவதும் அபாயம் உள்ள பகுதியாக அறிவிப்பு!
by ayyasamy ram Yesterday at 3:43 pm

» ஏப்ரல் 2 - செய்தி சுருக்கம்)
by ayyasamy ram Yesterday at 3:30 pm

» பிறந்த தினவாழ்த்துகள் திரு மாணிக்கம் நடேசன் அய்யா அவர்கள்
by மாணிக்கம் நடேசன் Yesterday at 12:51 pm

» ஆஹா டிப்ஸ்
by மாணிக்கம் நடேசன் Yesterday at 10:33 am

» வீட்டுக்குறிப்புகள் -மங்கையர் மலர்
by ayyasamy ram Yesterday at 5:38 am

» கொரோனா தொற்று ஆய்வு பணியில் இந்திய கடற்படை
by ayyasamy ram Yesterday at 5:30 am

» » கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - ஏப்ரல் 2
by ayyasamy ram Yesterday at 5:27 am

» கொரோனாவுக்கு எதிரான போர்; சிவப்பு நிறத்தில் ஒளிரும் எம்பயர்
by ayyasamy ram Yesterday at 5:15 am

Admins Online

ஏவி.எம்., சகாப்தம் (21)- உயர்ந்த மனிதன் திரைப்படம்

ஏவி.எம்., சகாப்தம் (21)- உயர்ந்த மனிதன் திரைப்படம் Empty ஏவி.எம்., சகாப்தம் (21)- உயர்ந்த மனிதன் திரைப்படம்

Post by ayyasamy ram on Wed May 01, 2019 5:15 pm

ஏவி.எம்., சகாப்தம் (21)- உயர்ந்த மனிதன் திரைப்படம் E_1556260179
-நடிகர் திலகம் சிவாஜி கணேசனின், 125வது படம், ஏவி.எம்.,
நிறுவனத்தால் தயாரிக்கப்பட வேண்டும் என்ற விருப்பத்தை,
அப்பாவிடம் தெரிவித்திருந்தார், அவர்.

அதனால், இந்த படத்தை சிறப்பாக எடுக்கும் எண்ணத்தில்,
இயக்குனர்கள், கிருஷ்ணன் - பஞ்சு, கதாசிரியரும்,
நடிகருமான, ஜாவர் சீதாராமன் மற்றும் எங்கள்
நிறுவனத்தில் பணிபுரியும் உதவி இயக்குனர்கள்,
கதாசிரியர்களிடமெல்லாம் கலந்து ஆலோசித்தார்.

சிவாஜி நடிப்பதற்கு ஏற்ற கதை குறித்த விவாதத்தில் இருந்தார்,
அப்பா. நானும், சகோதரர்களும் உடன் இருந்தோம். அப்போது,
அப்பாவின் நெருங்கிய நண்பரான, கோல்கட்டாவை சேர்ந்த,
வி.ஏ.பி.ஐயர் வந்திருப்பதாக கூறினர். அவரையும் இந்த
விவாதத்தில் கலந்துகொள்ள செய்தார்.

எங்களின் கதை விவாதத்தில் பங்கேற்றவர், 'உத்தர் புருஷ்
என்று வங்க மொழியில் ஒரு படம் வெளியாகி, வெற்றிகரமாக
ஓடிக்கொண்டிருக்கிறது. வேண்டுமானால், அந்த படத்தின்,
பிரதியை வரவழைக்கிறேன், பாருங்கள்...' என்றார்.

உடனே, அதற்கான ஏற்பாட்டை செய்யக் கூறவே, மறுநாளே
விமானத்தில், சென்னைக்கு வந்து சேர்ந்தது, அப்படச்சுருள்.

ஏவி.எம்.,மில், 'ஏசி' தியேட்டரில், படம் ஓடிக்கொண்டிருக்கும்
போதே, வங்க மொழி வசனங்களை மொழி பெயர்த்து,
அப்பாவிடம் சொன்னார், வி.ஏ.பி.ஐயர். அதன் கதை, எங்கள்
அனைவருக்கும் பிடித்திருந்தது.

'சிவாஜி நடிப்பதற்கு ஏற்ற கதை தான். ஆனால், இதை அப்படியே
நாம் எடுக்க முடியாது. தமிழ் கலாசாரத்திற்கு ஏற்ற வகையில்,
மாற்றி படமாக்கலாம்...' என்றார், அப்பா.

அந்த பொறுப்பை, ஜாவர் சீதாராமன் ஏற்று, இயக்குனர்கள்,
கிருஷ்ணன் - பஞ்சுவின் ஆலோசனையோடு, கதையை
அருமையாக அமைத்துக் கொடுத்தார்.

எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைக்க, கேமரா மேன்,
வி.என்.சுந்தரம் என முடிவானது.

கதையை கேட்ட சிவாஜி, உடனே, 'கால்ஷீட்' கொடுத்தார்.
சவுகார் ஜானகி, வாணிஸ்ரீ, பாரதி, சிவக்குமார், அசோகன் மற்றும்
மேஜர் சுந்தர்ராஜன் ஆகியோரின், 'கால்ஷீட்'டும் வாங்கி,
படப்பிடிப்பு தேதியை முடிவு செய்தோம்.
-
-----------------------
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 54382
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12750

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஏவி.எம்., சகாப்தம் (21)- உயர்ந்த மனிதன் திரைப்படம் Empty Re: ஏவி.எம்., சகாப்தம் (21)- உயர்ந்த மனிதன் திரைப்படம்

Post by ayyasamy ram on Wed May 01, 2019 5:15 pm


கொடைக்கானலில், உயர்ந்த மனிதன் படத்தின் படப்பிடிப்பும்
ஆரம்பமானது.

வெள்ளிக் கிண்ணம் தான்... தங்க கைகளில்...
வைரச் சிலை தான்... எந்தன் பக்கத்தில்...என்று பாடியபடி
படகில் வருவது போல், சிவாஜிகணேசன், வாணிஸ்ரீ நடித்தனர்.

அடுத்து...
என் கேள்விக்கென்ன பதில்... உன் பார்வைக்கென்ன பொருள்...
என்ற பாடலை, சிவக்குமார், பாரதி பாடும்படியாக எடுத்தோம்.

பாடல் காட்சியோ, வசன காட்சியோ எடுக்கப்பட்ட உடனே,
அதை, 'எடிட்' செய்து, அப்பாவுக்கு போட்டு காட்டி, அவர்,
ஒப்புதல் சொன்ன பிறகே, அடுத்தகட்ட வேலையை
ஆரம்பிப்போம். அதன்படி, அந்த இரண்டு பாடல்களையும்
போட்டு காட்டினோம்.

'வெள்ளிக் கிண்ணம் தான்... தங்கக் கைகளில்...பாடல்
பிரமாண்டமாக வந்திருக்கிறது. ரொம்ப நல்லா இருக்கு. இதில்
ஏதும் மாற்றம் செய்யத் தேவையில்லை.

என் கேள்விக்கென்ன பதில்...பாடலை எடுத்த விதம் சரியில்லை.
எனக்கு பிடிக்கவில்லை...' என்று கூறி விட்டார்.

காரணம் கேட்டோம். 'கதைப்படி, ஏழ்மையில் இருக்கும்
ஒரு ஆணும், பெண்ணும், நவீன உடையில், மேற்கத்திய
இசைக்கேற்ப பாட்டு பாடி, நடனம் ஆடுவது பொருத்தமாக
இல்லை...' என்றதும் தான், எங்கள் தவறு புரிந்தது.

அப்பாவின் ஆலோசனைபடி, அந்த பாடல் காட்சி மீண்டும்
எடுக்கப்பட்டது.
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 54382
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12750

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஏவி.எம்., சகாப்தம் (21)- உயர்ந்த மனிதன் திரைப்படம் Empty Re: ஏவி.எம்., சகாப்தம் (21)- உயர்ந்த மனிதன் திரைப்படம்

Post by ayyasamy ram on Wed May 01, 2019 5:16 pm


ஒரு காட்சியில், மலையின் அழகை ரசித்தபடி வந்த சிவாஜி,
ஒரு இடத்திற்கு வந்ததும், காரை நிறுத்தச் சொல்வார்.

ஏன் என்று புரியாமல் காரணம் கேட்ட டிரைவர் மேஜர்
சுந்தர்ராஜனிடம், 'இந்த வழியாக நாம் சிறு வயதில் பள்ளிக்கு
செல்லும்போது நடந்த நிகழ்ச்சிகள் ஞாபகத்துக்கு வந்து
விட்டன...' எனக் கூறி, அந்த நிகழ்ச்சிகளை பற்றி மனம் விட்டுப்
பேசுவார்.

'இந்த இடத்தில் ஒரு பாடல் வந்தால் நன்றாக இருக்கும்...'
என்றார், இயக்குனர்களான, கிருஷ்ணன் - பஞ்சு.
நானும், மற்றவர்களும் அதை ஏற்றுக்கொண்டோம்.

கதையில், பாடல் தேவைப்படும் இடத்தை, இசையமைப்பாளர்,
எம்.எஸ்.விஸ்வநாதனிடம் சொல்லி, 'சிவாஜிக்கு ஏற்றார் போல்,
ஒரு நல்ல மெட்டு அமைத்துக் கொடுங்கள்...' என்றேன்.

'என்னங்க இது... நண்பர்கள் பேசிக்கொள்ளும் இடத்தில் பாடலா...
புரியவில்லையே... காதலர்கள் சந்திப்பில் ஒரு காதல் பாட்டு
என்றால் கூட, நகைச்சுவை தோன்றும்படியாக ஏதேனும்
செய்யலாம். சோகப் பாட்டு என்றால்...' என்று தயங்கினார்.

அப்போது, சபையர் தியேட்டரில், மை பேர் லேடி என்ற ஆங்கில
படம் ஓடிக்கொண்டிருந்தது. அதில் வரும் ஒரு காட்சியை,
எம்.எஸ்.வி.,யிடம் விவரித்தேன். புரிந்துகொண்டவர், 'வாலியை
வரச்சொல்லுங்கள்... பாடலை, 'கம்போஸ்' பண்ணி விடுவோம்...'
என்றார்.

'சிறு வயதில், பள்ளி சென்றதும், விளையாடியதுமான
அந்த நாள் ஞாபகங்களை, நண்பரிடம் சொல்லி பாடுகிறார்,
சிவாஜி. இடையிடையே அந்நிகழ்ச்சிகளை வசனமாகவும்
பேசுகிறார். இப்படி ஒரு பாடல் வேண்டும்.

இடையில் வரும் வசனங்களையும் நீங்கள் தான் எழுத
வேண்டும்...' என்றோம்.

இதைக் கேட்டவுடன், நாங்கள் சொன்ன முதல்
வாக்கியத்தையே முதலடியாக வைத்து... அந்த நாள் ஞாபகம்
நெஞ்சிலே வந்ததே... நண்பனே... நண்பனே... என்ற பாடலை
சொல்ல ஆரம்பித்தார், வாலி.

உடனே, எம்.எஸ்.வி., அந்த வரிகளை பாடலாக பாடி
காண்பித்தார். இப்படியாக, வாலி எழுதவும், எம்.எஸ்.வி.,
பாடவும், 'கம்போசிங்' சிறப்பாக முடிந்தது.
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 54382
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12750

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஏவி.எம்., சகாப்தம் (21)- உயர்ந்த மனிதன் திரைப்படம் Empty Re: ஏவி.எம்., சகாப்தம் (21)- உயர்ந்த மனிதன் திரைப்படம்

Post by ayyasamy ram on Wed May 01, 2019 5:16 pm

அக்காலத்தில் இப்போது போல, 'மல்டி டிராக் ரிக்கார்டிங்'
வசதி கிடையாது; 'சிங்கிள் டிராக்' தான். அதனால், ஒரே
சமயத்தில் பாடலும், அதன் நடு நடுவே வரும்
வசனங்களையும் பேசி, பதிவு செய்ய வேண்டும்.

இதற்காக, சிவாஜி, மேஜர் சுந்தர்ராஜன் இருவரையும்,
'ரிக்கார்டிங்' தியேட்டருக்கு வரவழைத்து, ஒரு மைக்கில்,
டி.எம்.எஸ்., பாட, இன்னொரு மைக்கில், சிவாஜியும், மேஜர்
சுந்தர்ராஜனும் ஜோடியாக வசனம் பேச, இந்த பாடல்
சிறப்பாக ஒலிப்பதிவு செய்யப்பட்டது.

நாளை பார்த்து... ஓடி வா நிலா... இன்று எந்தன் தலைவன்
இல்லை, சென்று வா நிலா... இந்த பாடலை, ஸ்டுடியோவில்,
கொடைக்கானல் போன்று, 'செட்' போட்டு படமாக்க முடிவு
செய்தோம். மூன்றே நாளில், அமைத்துக் கொடுத்தார்,
சேகர்.

மலை செட்டில் பனிமூட்டங்கள் பரவி வர, வானத்தில் தோன்றும்
நிலவின் வெளிச்சம் பனிமூட்டத்தில் ஊடுருவும் வகையில் மிக
அற்புதமாக, 'லைட்டிங்' அமைத்தார் கேமரா மேன், பி.என்.சுந்தரம்.

இப்பாடல் காட்சி, உண்மையிலேயே கொடைக்கானலுக்கு சென்று
எடுத்தது போலவே, வெகு அற்புதமாக இருந்தது.

இதில் இன்னொரு சிறப்பும் உண்டு. அகில இந்திய அளவில்,
திரையுலகின் பல்வேறு துறைகளில் சிறந்த கலைஞர்களை தேர்வு
செய்து, விருதுகள் வழங்கப்பட்டு வந்தாலும், பாடகர்களுக்கான
விருது, அதுவரை வழங்கப்படவில்லை.

அந்த குறையை போக்கும் விதமாக, பாடகர்களுக்கும் விருது
வழங்கப்பட வேண்டும் என்று, அப்போது தான், மத்திய அரசு முடிவு
செய்து அறிவித்திருந்தது.

அந்த அறிவிப்பு வந்ததும், அகில இந்திய அளவில், 'சிறந்த பாடகி'
ஆக தேர்வு செய்யப்பட்டார், பின்னணி பாடகி, பி.சுசீலா. அதற்கு
காரணமாக இருந்தது, ஏவி.எம்., தயாரிப்பில் உருவான, உயர்ந்த
மனிதன் படம்.

1968ல், 'அகில இந்திய சிறந்த பெண் பாடகி' என்று, பி.சுசீலாவுக்கு,
ஜனாதிபதி விருது கிடைத்தது.

உழைப்புக்கும் பரிசாக, ரசிகர்களும், மக்களும் மாபெரும்
வெற்றியை தந்தனர்.

சிவாஜியின், 125வது படத்தை வெற்றிகரமாக எடுத்து வெளியிட
வேண்டும் என்ற, எங்கள் அப்பாவின் முயற்சி வெற்றிகரமாக அ
மைந்தது.
-
---------------------------------
ஏவி.எம்.குமரன்
நன்றி- தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 54382
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12750

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஏவி.எம்., சகாப்தம் (21)- உயர்ந்த மனிதன் திரைப்படம் Empty Re: ஏவி.எம்., சகாப்தம் (21)- உயர்ந்த மனிதன் திரைப்படம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை