5>
உறவுகளின் வலைப்பூக்கள்
புதிய இடுகைகள்
» இளைய வயது; பெரிய மனசு!by ayyasamy ram Today at 11:29 am
» லாஸ்லியாவிற்கு கிடைத்த உயரிய விருது ….!
by ayyasamy ram Today at 11:12 am
» வெங்காய ஜிமிக்கி கம்மலை மனைவிக்கு பரிசாக அளித்த நடிகர்!
by ayyasamy ram Today at 11:11 am
» பெரிய மனசு
by ayyasamy ram Today at 11:10 am
» பொறுமைதான் உண்மையான திறமை..!
by ayyasamy ram Today at 11:08 am
» சான்றாண்மை
by ayyasamy ram Today at 11:07 am
» தமிழ்ச் செம்மல்! – பாராட்டுப் பாமாலை!
by ayyasamy ram Today at 11:06 am
» ஷீரடியில் ஆள் கடத்தல்? ஓராண்டில் 88 பேர் மாயம்
by ayyasamy ram Today at 7:46 am
» பிரிட்டன் தேர்தல்: 15 இந்திய வம்சாவளி எம்.பி.,க்கள் வெற்றி
by ayyasamy ram Today at 7:44 am
» சென்னையில் மூட்டை மூட்டையாக பணம் பறிமுதல்
by ayyasamy ram Today at 7:41 am
» இந்தியாவில் தங்கம் கடத்தல் அதிகரிக்க காரணம் என்ன?
by ayyasamy ram Today at 7:38 am
» சக்திவாய்ந்த 100 பெண்கள் பட்டியலில் நிர்மலா
by ayyasamy ram Today at 7:35 am
» வேலன்:-போல்டர்களை மற்றவர்கள் காப்பி செய்வது மற்றும் டெலிட் செய்வதை தவிர்க்க-Prevent exe
by velang Today at 7:31 am
» குருவிக் கூட்டுக்கும், விதிகளுண்டு!
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» பெரியவா சரணம் !
by T.N.Balasubramanian Yesterday at 8:19 pm
» பிரிட்டனில் தனி மெஜாரிட்டி பெற்றது ஆளுங்கட்சி- போரிஸ் ஜான்சன் மீண்டும் பிரதமர் ஆகிறார்
by ayyasamy ram Yesterday at 6:00 pm
» வயிறு வாழ்த்தும்!
by krishnaamma Yesterday at 2:57 pm
» அந்திம கிரியை!
by krishnaamma Yesterday at 2:55 pm
» கேட்டு ரசித்த திரைப்பட பாடல் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:36 pm
» "வடநாட்டு மார்வாடிக்கு மகாபெரியவா இட்ட கட்டளை!"
by krishnaamma Yesterday at 2:29 pm
» திருமாலிரும் சோலை அழகர் !
by krishnaamma Yesterday at 2:17 pm
» "பேயனும், விளக்கெண்ணையும்"
by krishnaamma Yesterday at 2:04 pm
» பகீரதப் பிரயத்தனம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 1:29 pm
» மார்கழி மாதத்தின் மகத்துவம் !
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாழ்வில் உயர்வதும், தாழ்வதும் அவரவர் எண்ணத்தைப் பொறுத்ததே..!
by krishnaamma Yesterday at 1:23 pm
» 2 வருடங்கள் நிலாவையே பார்க்காமல் மறைந்து வாழ்ந்த பெண்மணி!
by krishnaamma Yesterday at 1:21 pm
» தெரிந்து கொள்வோம் {ஆன்மீகம்}
by krishnaamma Yesterday at 12:55 pm
» `அந்த விருதாவது ஞாபகமிருக்கிறதா சார்?’ -அமைச்சர் ஜெயக்குமாரை கலாய்த்த நடிகர் சித்தார்த்
by ayyasamy ram Yesterday at 12:54 pm
» விஷ்ணு தீபம் - திருவேங்கடத்தில் மற்றும் ஸ்ரீரங்கத்தில் :)
by krishnaamma Yesterday at 12:50 pm
» ஜல்லிக்கட்டு காளைகள் வளர்க்கும் மதுரை இளம்பெண்: இளங்கலை ஆங்கில இலக்கியம் படித்துவிட்டு விவசாயமும் பார்க்கிறார்
by ayyasamy ram Yesterday at 12:46 pm
» காசி விஸ்வநாதர் கோவிலின் கோடி தீபம்... photos
by krishnaamma Yesterday at 12:33 pm
» முக்தி தரும் காசி
by krishnaamma Yesterday at 12:20 pm
» ராதா பொருள் என்ன?
by krishnaamma Yesterday at 12:14 pm
» கோபுர தரிசனம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:09 pm
» கிறிஸ்துமஸ் போனஸ் ரூ.70 கோடி! இன்ப அதிர்ச்சியில் ஊழியர்கள்
by krishnaamma Yesterday at 11:38 am
» மார்கழி மாத ஆன்மீக தகவல்கள்
by krishnaamma Yesterday at 11:36 am
» திருவாதிரைக் களி
by ayyasamy ram Yesterday at 11:10 am
» சென்னை சா்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும் படங்கள்: முழுப் பட்டியல்!
by krishnaamma Yesterday at 11:08 am
» பஞ்சாப்பைக் கலக்கும் சூப்!
by krishnaamma Yesterday at 10:39 am
» கடந்த 3 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சில்லறைப் பணவீக்கம் அதிகரிப்பு!
by krishnaamma Yesterday at 10:38 am
» நேச நெஞ்சம்- சிறுகதை
by ayyasamy ram Yesterday at 10:32 am
» சினிதுளிகள்- குங்குமம்
by ayyasamy ram Yesterday at 10:28 am
» ஏழு விதமான ஆச்சரியங்கள்
by ayyasamy ram Yesterday at 10:20 am
» சுமங்கலி பெண்கள் கட்டாயம் செய்ய வேண்டிய விளக்கு பூஜை
by ayyasamy ram Yesterday at 9:15 am
» தன்னை உணர்தலே ஆத்ம பலம்! --அர்த்தமுள்ள இந்து மதம் - 63
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ஆறுமுகசாமி கமிஷன் என்ன ஆயிற்று ?
by ayyasamy ram Yesterday at 8:53 am
» நெட்டிசன் நோட்ஸ்: எனை நோக்கி பாயும் தோட்டா -அழகு
by ayyasamy ram Yesterday at 8:47 am
» அறிவியல் களஞ்சியம் அறிவியல் ஆச்சர்யம்
by ayyasamy ram Yesterday at 8:37 am
» பாலியல் வன்கொடுமை குற்றத்துக்கு 21 நாளில் தூக்கு தண்டனை: ஆந்திர அரசு சட்ட மசோதா
by ayyasamy ram Yesterday at 6:01 am
» தலைவி, குயினுக்குத் தடையில்லை: ஜெ. தீபாவின் கோரிக்கையை நிராகரித்தது உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 5:57 am
Admins Online
அப்பாவுக்குக் கால்முறிந்த அடுத்தநாளே விவசாயத்தில் குதித்த மகள்... தேடி வந்த விருது!

-
துப்பாக்கி’ திரைப்படத்தில் ஒரு காட்சியில், "அவன் செத்த 14-வது நாள் அவன் தம்பி வந்துட்டாண்டா மிலிட்டரிக்கு!' என ஒரு வசனம் வருமே. அதேபோல நிஜத்தில், மகாராஷ்ட்ராவில் தந்தைக்கு விபத்து நடந்த அடுத்த நாளே அவரது 12 வயதான மகள் விவசாயத்துக்கு வந்து, இப்போது விருது வாங்கிச் சாதித்திருக்கும் சம்பவம் நடந்திருக்கிறது.
மகாராஷ்ட்ரா மாநிலம், நாசிக் மாவட்டத்தில் உள்ள லோன்வாடி கிராமத்தைச் சேர்ந்த விஜய் தாவுந்த் ஒரு வழக்கறிஞராக விரும்பினார். ஆனால், குடும்பச்சூழல் காரணமாகத் தனது திராட்சைத் தோட்டத்தைக் கவனிக்கப் போய்விட்டார்.
அவரின் மனைவி லதாவும் மருத்துவராக ஆசைப்பட்டார். ஆனால், குடும்பச்சூழல் காரணமாக 12-ம் வகுப்புடன் நிறுத்திக்கொண்டார். இருவரும் சமாதானம் செய்துகொண்டாலும், தன் பிள்ளைகளைப் படிக்கவைத்து, வேலை வாங்கிக் கொடுத்துவிட வேண்டும் என்ற முடிவோடு வாழ்ந்து வந்தனர்.
என்னதான் திட்டங்கள் தீட்டினாலும் வாழ்க்கை எப்போதுமே ஒரே நேர்கோட்டில் பயணிப்பதில்லை. ஆம், இவர்களின் மகளான ஜியோத்சனா (Jyotsna) இப்போது தந்தையின் விவசாயத்தைக் கவனித்துக்கொண்டிருக்கிறார்.
-

-
விருது வாங்கிய விவசாய பெண்
-------------------------------------------------------
1998-ம் ஆண்டு ஜியோத்சனாவுக்கு 6 வயது, அவரது தம்பிக்கு ஒரு வயது. அப்போது அவரின் தந்தை ஒரு விபத்தில் சிக்கினார். அதனால் அவர் 7 மாதங்கள் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக்கொண்டார். அவரின் மனைவி லதா குடும்பப் பொறுப்பையும் பண்ணைப் பொறுப்பையும் எடுத்துக்கொண்டார்.
அப்போது லதாவுடன் சேர்ந்து ஜியோத்சனாவும் பண்ணையைக் கவனிக்க ஆரம்பித்தார். 7 மாதங்களுக்குப் பின்னர் அவரின் தந்தை மெல்ல நடக்க ஆரம்பித்தார். அதன் பின்னர், விஜய் தாவுந்த் பண்ணை வேலையைக் கவனிக்க வரும்போது அதிக சிரமப்பட்டார்.
அதனால் அவரின் மனைவி லதாவும் மகள் ஜியோத்சனாவும் பண்ணை வேலைகளைத் தொடர்ச்சியாகக் கவனித்து வந்தனர். ஜியோத்சனாவுக்கு 12 வயதாகும்போதே விவசாயத்தைப் பற்றி பெரும்பாலானவற்றை அறிந்து வைத்திருந்தார்.
Re: அப்பாவுக்குக் கால்முறிந்த அடுத்தநாளே விவசாயத்தில் குதித்த மகள்... தேடி வந்த விருது!

-
பள்ளிப்படிப்பின்போதே பண்ணையைக் கவனித்துக்கொண்டே படித்தார் ஜியோத்சனா. தேர்வு நேரங்களில்கூட பண்ணையில்தான் படிப்பார். தன் தாய் தனி ஆளாகக் கஷ்டப்படுவதைப் பார்க்க முடியாமல்தான் பல நேரங்களில் விவசாய வேலைகளைத் தொடர்ந்திருக்கிறார்.
2005-ம் ஆண்டு விஜய்யால் நடக்க முடிந்தது. இப்போது முழுமையாக மனைவி மற்றும் மகளுக்கு ஓய்வு கொடுத்து நிலத்தைப் பார்த்துக் கொண்டார். அதன் பின்னர், ஜியோத்சனா கல்லூரியில் இளங்கலை பொறியியல் படித்துவந்தார். அந்த நேரம், 2010-ம் ஆண்டு திராட்சை அறுவடை செய்ய தயாராக இருந்தது.
அப்போது லோன்வாடி பகுதியில் கனமழை வெளுத்து வாங்கியது. அதனால், விவசாயம் முற்றிலும் சேதத்தை மகசூலாகக் கொடுத்தது.
இந்த சமயத்தில் ஒருநாள் உரம் வாங்கச் சென்றார் விஜய். உரத்தை வாங்கிக்கொண்டு கடையின் மாடியில் இருந்து இறங்கினார். அப்போது கால்தடுக்கி மாடிப்படிக்கட்டிலிருந்து உருண்டு விழுந்துவிட்டார்.
இம்முறை அவரது கால் நிரந்தரமாக முடங்கிவிட்டது. இனி எழுந்து நடக்க முடியாத சூழல். உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தன் மனைவியிடம் உரத்தைக் கொடுத்து தோட்டத்தில் தெளிக்கச் சொல்லியிருக்கிறார். அதன் பின்னர், மனைவி கணவரை கவனித்துக்கொள்ள நேர்கிறது.
அடுத்த நொடியே யோசிக்காமல் பண்ணையை நான் பார்த்துக்கொள்கிறேன் என்று சொல்லிவிட்டார் ஜியோத்சனா. கணினிப் பொறியாளராக விரும்பிய அவரின் மகள், பி.எஸ்ஸி கணினி அறிவியல் படிப்பைத் தேர்வு செய்தார்.
அப்போதுதான் பண்ணைக்கு நேரம் ஒதுக்கி வேலை செய்ய முடியும்
என்பதுதான் அதற்குக் காரணம்.
Re: அப்பாவுக்குக் கால்முறிந்த அடுத்தநாளே விவசாயத்தில் குதித்த மகள்... தேடி வந்த விருது!

-
லோன்வாடி ஒரு சிறிய கிராமம். ஜியோத்சனா கல்லூரிக்குத் தினமும் 18 கி.மீ தொலைவில் இருக்கும் பிம்பல்கான் (Pimpalgaon) கல்லூரி சென்று படிக்க வேண்டியிருந்தது. ஒவ்வொரு நாளும் அதிகாலையில் எழுவார். பண்ணையில் வேலைகளை முடித்துவிட்டு, கல்லூரிக்குச் செல்வார். மாலையில் திரும்பியவுடன் மீண்டும் அவர் பண்ணைக்குச் செல்வார். விஜய் மருத்துவமனையில் இருந்துகொண்டே ஜியோத்சனாவுக்கு டிராக்டர் ஓட்டக் கற்றுக்கொடுத்தார். அதை முறையாகக் கேட்டு தனது பண்ணையில் இருந்த டிராக்டரை ஓட்டினார்.
முதுகலைப் படிப்பை முடித்த நிலையில் நாசிக் பகுதியில் இருக்கும் மென்பொருள் நிறுவனத்துக்கு வேலைக்குச் சேர்ந்தார். அதன் பின்னரும் அவருக்கு, யாரும் கவனிக்காமல் தனது பண்ணை எப்படி இருக்குமோ என்பது பற்றிய கவலை அதிகமாகத் தொடங்கியது.
இப்போது பண்ணையைக் கவனிக்க ஆள் இல்லை. தொடர்ந்து ஒரு வருடம் அந்த நிறுவனத்தில் வேலை செய்தவர், 2017-ம் ஆண்டு வேலையை உதறிவிட்டு, மீண்டும் தன் பண்ணைக்கு வந்துவிட்டார். அந்த ஒரு வருடத்தில் தனக்குத் தேவையான பணத்தைச் சேமித்த ஜியோத்சனா, தன் தம்பியின் படிப்பு செலவுக்கும் வீட்டுச் செலவுக்கும் வைத்துக்கொண்டார்.
அடுத்த 6 மாதம் தனது பண்ணைக்கு முக்கியத்துவம் கொடுத்து உழைத்தார். சில நாள்கள் இரவிலும் பண்ணையில் தங்கி வேலை பார்த்தார். அவரது பண்ணைக்கு மின்சாரம் எப்போது வரும், போகும் எனச் சொல்ல முடியாது. அதனால் பண்ணையில் மின்சாரம் இருக்கும் நேரங்களில் மட்டுமே தண்ணீர் பாய்ச்ச முடியும்.
இங்கே ஒரு விஷயத்தைக் குறிப்பிட வேண்டும். அவரின் தந்தை நிரந்தரமாகக் கால்களை இழந்த பின்னர், அன்றிலிருந்து, இன்று வரைக்கும் இவர்தான் விவசாயத்தைக் கவனித்து, குடும்பப் பொறுப்புகளையும் எடுத்து நடத்தி வருகிறார்.

விருது வாங்கும் பெண்
Images Courtesy - TheBetterindia.Com
ஜியோத்சனாவின் உழைப்புக்குப் பலனாக ஆறு மாதங்களில் திராட்சைக் கொடிகள் நன்றாக வளர்ந்திருந்தன. அப்போது வேலை அதிகமாக இல்லாமல் ஜியோத்சனாவுக்கு நேரமும் கூடுதலாகக் கிடைக்க ஆரம்பித்தது.
தனால் அருகில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக வேலைக்குச் சேர்ந்தார். அதன் பின்னரும் பண்ணையைக் கவனிக்கத் தொடங்கினார். அந்த நேரம் திராட்சை சீஸனில் விளைச்சல் அதிகமாகக் கொடுக்க ஆரம்பித்தது.
இதன் காரணமாக 2018-ம் ஆண்டின் கிருஷிதோன் அமைப்பின் சிறந்த பெண் விவசாயி விருது (Krishithon - Best Woman farmer award) ஜியோத்சனாவுக்குக் கிடைத்தது. இப்போது ஆசிரியை, விவசாயி என இரண்டு வேலைகளைக் கைவசம் வைத்துக் கொண்டு பயணித்துக்கொண்டிருக்கிறார் ஜியோத்சனா.
-
துரை நாகராஜன்
நன்றி-விகடன்
Re: அப்பாவுக்குக் கால்முறிந்த அடுத்தநாளே விவசாயத்தில் குதித்த மகள்... தேடி வந்த விருது!
வாழ்த்துக்கள்.. வாழ்த்துக்கள்







பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 13253
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3234
பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க
ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்
உறுப்பினராக இணையுங்கள்
உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!
ஈகரையில் உறுப்பினராக இணைய
|
|