உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» ஐஸ் பிரியாணி- ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:28 pm

» எல்லையற்ற ஆசை எல்லையற்ற அறிவினால்தான் திருப்தியடையும்…!!
by ayyasamy ram Today at 8:27 pm

» சிவ கீதை புத்தகம்
by kuloththungan Today at 8:26 pm

» சொல்லடி அபிராமி – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:23 pm

» அம்மி அப்டி…!!
by ayyasamy ram Today at 8:22 pm

» ராணி காமிக்ஸ் புத்தகங்கள் - 02
by krissrini Today at 8:20 pm

» வீட்டுக் குறிப்புகள் – வாரமலர்
by ayyasamy ram Today at 8:09 pm

» மருத்துவம் - டிப்ஸ்
by ayyasamy ram Today at 8:08 pm

» அதுக்குன்னு இப்படியா…?!
by ayyasamy ram Today at 8:02 pm

» வெற்றி மொழிகள்
by ayyasamy ram Today at 8:01 pm

» பெரிதினும் பெரிது கேள்!
by ayyasamy ram Today at 7:58 pm

» ‘வள்ளலாரும், அருட்பாவும்’ எனும் நுாலிலிருந்து:
by ayyasamy ram Today at 7:57 pm

» ‘ஆர்.எம்.வீ., ஒரு தொண்டர்’ நுாலிலிருந்து:
by ayyasamy ram Today at 7:54 pm

» ‘தமிழ் சினிமாவின் கதை’ நுாலிலிருந்து:
by ayyasamy ram Today at 7:52 pm

» ‘சரித்திரம் திரும்பி விட்டது!’ நுாலிலிருந்து
by ayyasamy ram Today at 7:51 pm

» தரைவழி இணைப்புகளுக்கு இலவச இணையதள வசதி - பி.எஸ்.என்.எல்
by ayyasamy ram Today at 7:32 pm

» ரெய்கி பற்றி புத்தகம் தந்து உதவ வேண்டுகிறேன்
by ssk1 Today at 7:26 pm

» வீடுதோறும் இருக்கிறது கிணறு: குடிநீர் பஞ்சம் இவர்களுக்கு இல்லை
by T.N.Balasubramanian Today at 5:26 pm

» செடிவளர்ப்பு முறை ரகசியம் பற்றி சிறு விளக்கம்.. -
by T.N.Balasubramanian Today at 5:21 pm

» தாயின் அன்புதான் கவிதை, கதை, எழுத்து : கவிஞர் மு.மேத்தா
by T.N.Balasubramanian Today at 5:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Today at 5:01 pm

» ரம்மியமான காட்சிகள்…!
by T.N.Balasubramanian Today at 5:00 pm

» எல்லா ஆண்களும் தம் மனைவியிடம்"மியாவ்" என்றே கர்ஜிக்கிறார்கள்...!!!
by T.N.Balasubramanian Today at 4:57 pm

» ஆன்மிக தகவல்கள்
by ayyasamy ram Today at 2:36 pm

» வங்கி கணக்கில் எவ்வளவு பணம் உள்ளது என தகவறிய…!
by ayyasamy ram Today at 2:26 pm

» கோதுமை குழி பணியாரம்
by ayyasamy ram Today at 2:25 pm

» அரசு பள்ளிகளில் புதிய சீருடை
by ayyasamy ram Today at 2:23 pm

» மான்ஸ்டர்- சினிமா விமரிசனம்
by ayyasamy ram Today at 2:09 pm

» நட்புனா என்னானு தெரியுமா – சினிமா விமரிசனம்
by ayyasamy ram Today at 2:06 pm

» படத்திற்காக கவர்ச்சி அவதாரமெடுத்த அடா சர்மா
by ayyasamy ram Today at 2:03 pm

» வேல்ஸ் எழுதிய வாவ் ௨௦௦௦ புக் இருந்தால் தயவு செய்து தரவும்
by dharanidharan Today at 12:13 pm

» புத்தகம் request - Hi Mathan books (all parts) if available
by dharanidharan Today at 12:12 pm

» வேலன்:-பழுதான விண்ரேர் பைல்களை ஒப்பன் செய்திட -WIN RAR REPAIR TOOLAI
by aeroboy2000 Today at 11:15 am

» 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .
by dharanidharan Today at 10:50 am

» கஞ்சிக்குழிக்கு, 'சபாஷ்'
by ayyasamy ram Today at 7:09 am

» ஜியோ ரூ.399 இலவச சலுகையை நம்ப வேண்டாம்
by சிவனாசான் Yesterday at 9:32 pm

» வாட்ஸ் அப் நகைச்சுவை
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு
by ayyasamy ram Yesterday at 5:36 pm

» தாயார் இல்லத்தில் தனயன் பாதுகை
by ayyasamy ram Yesterday at 4:55 pm

» வாகன விபத்தில் பாதிக்கப் படுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 3:23 pm

» வாட்ஸ்அப் கனவு!
by ayyasamy ram Yesterday at 2:54 pm

» தட்டப் பருப்பு போண்டா
by ayyasamy ram Yesterday at 2:46 pm

» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Yesterday at 2:41 pm

» மன்னரும், சந்தன வியாபாரியும்!
by ayyasamy ram Yesterday at 2:40 pm

» அக்கா விதைத்த அழகு முத்து- விடுகதைகள்
by ayyasamy ram Yesterday at 2:36 pm

» கற்கண்டு சாதம்
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» சிரிக்கலாம் வாங்க….!
by சக்தி18 Yesterday at 2:27 pm

» என்றோ கேட்டவை....இன்றும் இனியவை (திரைப்பாடல் காணொளி)
by சக்தி18 Yesterday at 2:18 pm

» உணவு - அங்கும் இங்கும்
by ayyasamy ram Yesterday at 2:03 pm

» அமைதியில்லா என் மனமே...! - பாதாள பைரவி திரைப்படம்
by சக்தி18 Yesterday at 1:40 pm

Admins Online

மண்ணிலேயே விண்ணைக் காண்போம்!

மண்ணிலேயே விண்ணைக் காண்போம்! Empty மண்ணிலேயே விண்ணைக் காண்போம்!

Post by ayyasamy ram on Thu Apr 25, 2019 4:35 am

மண்ணிலேயே விண்ணைக் காண்போம்! Tamil_News_large_2261709
-
ஆத்திசூடி' -அகர வரிசையில் அவ்வையார் படைத்துள்ள ஓர் அற நூல். அறம், பொருள், இன்பம் என்னும் வாழ்வியல் அறத்தை 108 எளிய இரு சீர் ஓரடிச் சூத்திரங்களால் உணர்த்தும் உயரிய நுால் இது.

பாப்பா பாட்டுப் பாடிய பாரதியார் 'புதிய ஆத்திசூடி' எழுதினார். பாரதிதாசனார் ஆத்திசூடிகள் இரண்டு எழுதினார்.அவ்வையார் ஆத்திசூடியில் வலியுறுத்தியுள்ள இன்றியமையாத வாழ்வியல் அறங்களை காண்போம்.

1. அறச்செயல் செய்ய ஆசைப்படு!


எவ் வகையான அறத்தைச் செய்வதற்கும் முதலில் தேவைப்படுவது உள்ளார்ந்த விருப்பமே ஆகும். இதனைத் தெளிவுபடுத்தும் நோக்கிலேயே ஔவையார் “அறஞ்செய விரும்பு” எனத் தொடங்கியுள்ளார்.

'அறத்தைச் செய்' எனப் பொதுப்படக் கூறாமல், 'அறச்செயல் செய்ய ஆசைப்படு' என அவர் கூறியிருப்பது அடிக்கோடு இட வேண்டிய அடிப்படையான செய்தி ஆகும்.

2. செய்யும் செயல்களைச் செம்மையாகச் செய்!


அவசரப்படுவதாலோ பதறுவதாலோ ஒரு செயலில் நமக்கு வெற்றி வசப்பட்டு விடாது. செய்யும் செயல்களைச் செம்மையாக, எண்ணித் துணிந்து, திட்டமிட்டு தொலைநோக்குடன் செய்தல் வேண்டும்.

அப்போது தான் வாழ்வில் வெற்றி வாகை சூட முடியும். இதனை உணர்த்தும் 'செய்வன திருந்தச் செய்' என்னும் ஆத்திசூடி, இன்றைய மேலாண்மை இயலில் வலியுறுத்தப் பெறும் பால பாடம் ஆகும்.

3. மன வலிமையைக் கைவிடாதே!


வாழ்வில் தடம் பதிக்க விரும்புவோர் தவறாமல் பின்பற்ற வேண்டிய பொன்னான விதி உண்டு. அது எந் நிலையிலும் ஊக்கத்தினை, மன வலிமையை கைவிட்டு விடாமை ஆகும்.

இக் கருத்தினை உணர்த்தும் ஆத்திசூடியே 'ஊக்கமது கைவிடேல்' என்பதாகும்.4. எதற்கும் கலக்கம் அடையாதே!

வாழ்வில் எதற்கும் கலக்கம் அடையக்கூடாது. 'உறுதி கொண்ட நெஞ்சினாய் வா வா வா!' என்ற படி எதையும் எதிர்கொள்ளும் நெஞ்சுரத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும்;

நம்மைத் தாக்க வரும் துன்பத்திற்கும் துன்பம் தரும் ஆற்றலைப் பெருக்கிக் கொள்ள வேண்டும். 'மனந் தடுமாறேல்' என்று அவ்வையார் கூறியுள்ளார்.


Last edited by ayyasamy ram on Thu Apr 25, 2019 4:40 am; edited 1 time in total
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 45167
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12075

View user profile https://rammalar.wordpress.com/

Back to top Go down

மண்ணிலேயே விண்ணைக் காண்போம்! Empty Re: மண்ணிலேயே விண்ணைக் காண்போம்!

Post by ayyasamy ram on Thu Apr 25, 2019 4:35 am

5. துன்பத்திற்குச் சிறிதும் இடங்கொடாதே!

வாழ்வில் துன்பம் வரத்தான் செய்யும்; அதன் வருகையைத் தவிர்க்கவோ தடுக்கவோ முடியாது. ஆனால் துன்பம் நம்மைத் தாக்காமல், அதற்குச் சிறிதும் இடம் கொடுக்காமல் வாழக் கற்றுக் கொண்டால் போதும் துன்பத்தை வெற்றி கொண்டு விடலாம்.

இக் கருத்தினை உணர்த்துவதே “துன்பத்திற்கு இடங்கொடேல்” என்னும் ஆத்திசூடி. முயற்சி செய்யும் பொழுது வரும் உடம்பின் வருத்தத்திற்கு அஞ்சி நாம் அதனை விட்டுவிடல் ஆகாது. 'முயற்சி தன் மெய்வருத்தக் கூலி தரும்' என்று தானே வள்ளுவரும் வலியுறுத்தியுள்ளார்.

6. 'ங' எழுத்துப் போல் நீயும் உன் சுற்றத்தைத் தழுவு!


'ஙப்போல் வளை' என்பது சுற்றம் தழுவி வாழ வேண்டியதன் சீர்மையை உணர்த்தும் ஓர் அரிய ஆத்திசூடி. “'ங' எழுத்துப் போல் நீயும் உன் சுற்றத்தைத் தழுவு. 'ங' என்னும் எழுத்தானது தான் பயனுடையதாய் இருந்து பயன் இல்லாத ஙா முதலிய தன் வர்க்க எழுத்துகளைத் தழுவிக் கொள்ளுதல் போல, நீ பயனுடையவனாய் இருந்து உன் இனத்தார் பயன் இல்லாதவர் ஆயினும் அவரைத் தழுவிக் கொள்” என்பது பொருள் ஆகும்.

“ஒரு மனிதன் உயர வேண்டும். உயர்ந்த அத்தனை பேரிடமும் பழகி அனுபவங்களைக் கற்றுக் கற்று ஆழமாகக் கீழே இறங்கி, பணிந்து, குனிந்து உனக்குக் கீழே உள்ளவர்களையும் சேர்த்து உயரக் கொண்டு வர வேண்டும். அது தான் 'ங'. அந்த 'ங'ப் போல வளர வேண்டும்” என பொருள் காண்போரும் உள்ளனர்.

7.பொருளைப் போற்றி வாழ்வாயாக!

பண்டைத் தமிழர் பொருளின் அருமையினையும் தேவையினையும் நன்கு உணர்ந்திருந்தனர். அறம் பொருள் இன்பம் என்னும் வரிசை முறையில் பொருளுக்குத் தரப் பெற்றிருக்கும் நடு இடமும் இதனை உறுதி செய்யும். பொருள் இருந்தால் தான் ஒருவர் அறச் செயல்களை ஆற்ற முடியும்;

இன்பம் நுகர்வதற்கும் பொருள் வேண்டும். ஆனால் ஒன்று: பொருள் வரும் வழி தீது இல்லாததாக இருத்தல் வேண்டும். 'பொருள் செயல் வகை' என்னும் தலைப்பில் ஓர் அதிகாரமே படைத்துள்ள வள்ளுவர்.“அறன்ஈனும் இன்பமும்ஈனும் திறன் அறிந்துதீதின்றி வந்த பொருள்” என்றார்.

வள்ளுவரை அடியொற்றி
அவ்வையாரும் “பொருள்தனைப் போற்றி வாழ்” என ஓர் ஆத்திசூடி
எழுதியுள்ளார். 'வீண் செலவு செய்யாமல் பொருளைக் காத்துப் பெருக்கி வாழ்வாயாக!” என்பது பொருள்.


Last edited by ayyasamy ram on Thu Apr 25, 2019 4:39 am; edited 1 time in total
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 45167
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12075

View user profile https://rammalar.wordpress.com/

Back to top Go down

மண்ணிலேயே விண்ணைக் காண்போம்! Empty Re: மண்ணிலேயே விண்ணைக் காண்போம்!

Post by ayyasamy ram on Thu Apr 25, 2019 4:37 am

8. மென்துயில் புரிக!

'இலவம் பஞ்சின் துயில்' என்னும் ஆத்திசூடிக்கு 'இலவம் பஞ்சினால் செய்த மெத்தையிலே படுத்து உறங்கு' எனப் பொருள் காண்பதில் இருந்து வேறுபட்டு மகாவித்துவான் இரா.இராகவையங்கார் இச்சூடிக்கு வரைந்துள்ள பொருள் விளக்கம் மிகவும் நுட்பமானது. 'இலவம் பஞ்சு போல மெல்லத் தூங்குக' என்பதே அவ்வையார் இங்கே உணர்த்த விரும்பும் உண்மைப் பொருள்.

9. 'மனைவி சொல் கேட்டு ஆராயாமல் நடவாதே!'


'தையல் சொல் கேளேல்' என்பது மிகுந்த கருத்து வேறுபாட்டிற்கு இடம் தரும் ஓர் ஆத்திசூடி. 'பெண்டாட்டி சொல்லைக் கேட்டு ஒழுகற்க' என்றோ 'தையல் உன் சொல்லைக் கேட்குமாறு செய்' என்றோ இச் சூடிக்குப் பொருள் கூறுவது பொருத்தமாக இருக்குமா?

இச் சூடியின் சரியான பொருள் இது தானா? ஒரு பெண்பாற் புலவராக இருந்து கொண்டு அவ்வையார் இப்படிப் பாடி இருப்பாரா?

'மனைவி சொல்வதை எல்லாம் அப்படியே கேட்டு நடவாதே; ஆராயாமல் நடவாதே' என்று ஆண்மகனுக்கு வாழ்வியல் அறத்தினை உணர்த்தும் நோக்கிலேயே 'தையல் சொல் கேளேல்' என்று பாடி இருப்பார்.10. எக்காலத்தும் படித்துக் கொண்டே இரு!

உலக வரலாற்றில் சாதனை படைத்த வெற்றியாளர்கள் யாவருமே புத்தகங்களைப் படிப்பதில் மிகுந்த ஆர்வமும் அக்கறையும் கொண்டவர்களாகவே இருந்து வந்துள்ளனர். 'ஓதுவது ஒழியேல்' என்னும் ஆத்திசூடியே அவர்கள் எந்நாளும், எப்போதும்,எந்நிலையிலும் தவறாமல் பின்பற்றி வந்துள்ள முதன்மையான தாரக மந்திரம் ஆகும்.

ஆத்திசூடியில் வலியுறுத்தியுள்ள இத்தகைய உயரிய அறங்களை மனம் கலந்து, கருத்துான்றிப் பயில்வோம்; அவற்றின் வழி வாழ்வில் நடப்போம்; இம் மண்ணிலேயே விண்ணைக் காண்போம்; பாரதி போற்றும் 'தெய்வ வாழ்க்கை'யை வாழ்வோம்.

-பேராசிரியர் இரா.மோகன்எழுத்தாளர், மதுரை
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 45167
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12075

View user profile https://rammalar.wordpress.com/

Back to top Go down

மண்ணிலேயே விண்ணைக் காண்போம்! Empty Re: மண்ணிலேயே விண்ணைக் காண்போம்!

Post by Dr.S.Soundarapandian on Thu Apr 25, 2019 11:00 am

:நல்வரவு:
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 4881
இணைந்தது : 23/10/2012
மதிப்பீடுகள் : 2679

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

மண்ணிலேயே விண்ணைக் காண்போம்! Empty Re: மண்ணிலேயே விண்ணைக் காண்போம்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை