உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» பட்டாம்பூச்சியின் இருப்பிடத்துக்கே சென்றுவிடுவேன்!- வன உயிரிகளின் ஓவியன் லெனின் ஷேரிங்ஸ்
by ayyasamy ram Today at 3:43 pm

» தாஜ்மஹாலில்
by ayyasamy ram Today at 3:40 pm

» “ஆஞ்சநேயரை வணங்கும்போது கிடைக்கிற பலமே தனிதான்…!”- வானதி சீனிவாசன் உற்சாகம்
by ayyasamy ram Today at 3:36 pm

» பாட்டொன்று கேட்டேன் பரவசமானேன் நானதைப் பாடவில்லை
by ayyasamy ram Today at 3:31 pm

» துள்ளி ஆடும் முயல் !
by ayyasamy ram Today at 3:28 pm

» விக்ரமின் 58-வது படம்: அதிகாரபூர்வ அறிவிப்பு!
by ayyasamy ram Today at 3:27 pm

» தனுஷ் நடித்த ஆங்கிலப் படம்: வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!
by ayyasamy ram Today at 3:25 pm

» மருத்துவரானாலும் நடலாம் மரக்கன்று!
by ayyasamy ram Today at 3:24 pm

» சமோசா தெரியுமா?
by ayyasamy ram Today at 3:22 pm

» நேர்மை – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 2:55 pm

» என்னைப்பார் யோகம் வரும் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 2:54 pm

» இரட்டையர் – கவிதை
by ayyasamy ram Today at 2:15 pm

» பூண்டு ஈஸியா உரிக்க சில டிப்ஸ்!
by ayyasamy ram Today at 2:13 pm

» வீட்டை சுத்தமாக பராமரிக்க சில எளிய வழிகள்!
by ayyasamy ram Today at 2:12 pm

» பற்களில் கறையா? இதைச் செய்து பாருங்கள்
by ayyasamy ram Today at 2:11 pm

» இரட்டையர் – கவிதை- செங்கை, மனோ
by ayyasamy ram Today at 2:08 pm

» இரட்டையர் – கவிதை -கண்டம்பாக்கத்தான்
by ayyasamy ram Today at 2:07 pm

» “பழைய ஸ்கூலை ரொம்பவே மிஸ் பண்றேன்!” – `சூப்பர் சிங்கர்’ ப்ரித்திகா
by ayyasamy ram Today at 2:06 pm

» எஸ்கேப்லேட்டர்…! – நகைச்சுவை
by ayyasamy ram Today at 2:03 pm

» இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 9:51 am

» எம்.பி-யாகும் நான்கு எழுத்தாளர்கள்!
by பழ.முத்துராமலிங்கம் Today at 9:50 am

» பெண் எம்.பி.,க்களில் 28 பேர் மீண்டும் வெற்றி
by பழ.முத்துராமலிங்கம் Today at 9:46 am

» இந்திய நாடாளுமன்றம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 9:45 am

» சிங்கத்தை கோட்டையில் சாய்த்த வீராங்கனை!
by பழ.முத்துராமலிங்கம் Today at 9:44 am

» சென்னை - செங்கல்பட்டு குளுகுளு பயணத்திற்கு ரெடியா?
by பழ.முத்துராமலிங்கம் Today at 9:41 am

» இடைத்தேர்தல் பரபரப்பு முடிவுக்கு வந்தது: தேவையான இடங்களில் வெற்றி பெற்றதால்அ.தி.மு.க. ஆட்சிக்கு ஆபத்து இல்லை
by ayyasamy ram Today at 8:19 am

» பா.ஜனதா 302 தொகுதிகளில் வெற்றி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி : மோடி மீண்டும் பிரதமர் ஆகிறார்
by ayyasamy ram Today at 8:17 am

» தேனி லோக்சபா தொகுதியில் ஓபிஸ் மகன் வெற்றி
by ayyasamy ram Today at 8:10 am

» பா.ம.க.,வுக்கு எம்.பி., பதவி, 'டவுட்'
by ayyasamy ram Today at 8:08 am

» அஞ்சல் அட்டைக் கவிதைகள் - குமுதம்
by ayyasamy ram Yesterday at 11:41 pm

» மோர் பளபளப்பு -வீட்டுக்குறிப்புகள் 10
by ayyasamy ram Yesterday at 11:38 pm

» ரௌடி பேபி மாடல் வளையலுங்க...!!
by ayyasamy ram Yesterday at 11:34 pm

» வாட்ஸ் அப் மினி கதைகள்
by ayyasamy ram Yesterday at 11:31 pm

» குழந்தை - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 10:51 pm

» திருடன் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» உனக்கு 22, எனக்கு 18!- வளர்ந்து நிற்கும் பா.ஜ.கவால் அதிர்ச்சியில் மம்தா
by சிவனாசான் Yesterday at 7:55 pm

» ஒரே காவி மையம்...
by சிவனாசான் Yesterday at 7:51 pm

» ‘கிங் மேக்கர்’ ஆக ஆசைப்பட்ட மாநில கட்சி தலைவர்கள் ஆசை நிராசையானது
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» முடிவு – ஒரு பக்க கதை
by ஜாஹீதாபானு Yesterday at 4:16 pm

» ரமலான் சிந்தனைகள்
by ஜாஹீதாபானு Yesterday at 4:12 pm

» சிரி… சிரி… சிரி… சிரி…
by ஜாஹீதாபானு Yesterday at 4:11 pm

» ராப்பிச்சை ஸ்டிக்கர்...!!
by ஜாஹீதாபானு Yesterday at 4:10 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:47 pm

» கற்றதும்... பெற்றதும்.. சுஜாதா
by பா. சதீஷ் குமார் Yesterday at 6:49 am

» ரெய்கி பற்றி புத்தகம் தந்து உதவ வேண்டுகிறேன்
by புத்தகப்பிாியன் Wed May 22, 2019 1:32 pm

» தள்ளினால் தளராதே, துள்ளியெழு!
by ayyasamy ram Wed May 22, 2019 11:52 am

» இளம் நடிகருக்கு பயிற்சி கொடுத்த அஞ்சலி
by ayyasamy ram Wed May 22, 2019 11:51 am

» தேர்தல் முடிவுக்குப் பிறகு வெளியாகவுள்ள ஐந்து தமிழ்ப் படங்கள்!
by ayyasamy ram Wed May 22, 2019 11:48 am

» “`ஆண்டிப்பட்டி கனவா காத்து’ பாடலைப் பாடினது நான்தான் யாருக்குத் தெரியும்?!” – பாடகி சுர்முகி
by ayyasamy ram Wed May 22, 2019 11:43 am

» குறியீடு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Wed May 22, 2019 10:37 am

Admins Online

நாட்டின் மிக நீண்ட சுற்றுவட்டப் பாதையில் சர்க்குலர் ரயில் பயணம் தொடங்கியது

நாட்டின் மிக நீண்ட சுற்றுவட்டப் பாதையில் சர்க்குலர் ரயில் பயணம் தொடங்கியது Empty நாட்டின் மிக நீண்ட சுற்றுவட்டப் பாதையில் சர்க்குலர் ரயில் பயணம் தொடங்கியது

Post by ayyasamy ram on Wed Apr 24, 2019 4:54 pm

நாட்டின் மிக நீண்ட சுற்றுவட்டப் பாதையில் சர்க்குலர் ரயில் பயணம் தொடங்கியது Train
-
சென்னை புறநகர் மக்களின் 20 ஆண்டுகால கோரிக்கையான நாட்டின் மிக நீண்ட சுற்றுவட்டப் பாதையான சென்னை கடற்கரை, அரக்கோணம், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தாம்பரம் வழியாக மீண்டும் சென்னை கடற்கரையை அடையும் பாதையில் எதிரெதிர் திசைகளில் இரு சர்க்குலர் ரயில் சேவைகள் செவ்வாய்க்கிழமை தொடங்கின. இதனை பயணிகள் மிகுந்த ஆரவாரத்துடன் வரவேற்றனர்.

அரக்கோணம் - செங்கல்பட்டு அகலப்பாதை மின்மயமாக்கல் பணி துவங்கியபோது அரக்கோணம் ஐஎன்எஸ் ராஜாளி கடற்படை விமானதள நிர்வாகத்தினர் இப்பணிகள் தங்களது விமான இயக்கத்தை பாதிக்கும் எனக்கூறி இப்பணிக்குத் தடை கோரினர். இதைத் தொடர்ந்து தக்கோலம் முதல் செங்கல்பட்டு வரை மின்மயமாக்கல் பணிகள் நடைபெற்றன. இப்பணியை மாற்றுப்பாதையில் மேற்கொண்டால் ஆகும் செலவுக்காக ரூ.54 கோடியை இரு தவணைகளாக ரயில்வே நிர்வாகத்திடம் பாதுகாப்புத்துறையினர் அளித்தனர்.

தெற்கு ரயில்வே நிர்வாகம் இப்பாதையில் கல்லாற்றில் இருந்து மேல்பாக்கம் வழியே அரக்கோணம் ரயில் நிலையம் வரை 9.5 கி.மீ. தூரத்திற்கு புதிய பாதையை அமைத்தது. இப்பாதை அமைக்கும் பணிகள் கடந்த டிசம்பரில் நிறைவடைந்தன. இப்பாதையை அரக்கோணம் ரயில் நிலையத்தோடு இணைக்கும் சிக்னல்கள் அமைக்கும் பணிகள் ஏப்ரல் 4-ஆம் தேதி முதல் 15-ஆம் தேதி வரை நடைபெற்றது.

இதனிடையே கல்லாற்றில் இருந்து பெருமூச்சி வழியாக அரக்கோணம் வரையில் இருந்த பழைய பாதையும் துண்டிக்கப்பட்டது. இப்பணிகள் முடிவடைந்த நிலையில் ஏப்ரல் 15-ஆம் தேதி முதல் அரக்கோணம் - செங்கல்பட்டு இடையே புதிய பாதையில் அரக்கோணம் - தக்கோலம், புதுச்சேரி - திருப்பதி பயணிகள் ரயில்கள், மதுரை - குர்லா விரைவு ரயில், நாகர்கோயில் - மும்பை விரைவு ரயில்கள் டீசல் என்ஜின் இணைக்கப்பட்டு இயக்கப்பட்டன. இந்நிலையில் சுற்றுவட்டப்பாதையில் இரு சர்க்குலர் ரயில்கள் எதிரெதிர் திசையில் செவ்வாய்க்கிழமை முதல் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே நிர்வாகம் திங்கள்கிழமை அறிவித்தது
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 45300
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12075

View user profile https://rammalar.wordpress.com/

Back to top Go down

நாட்டின் மிக நீண்ட சுற்றுவட்டப் பாதையில் சர்க்குலர் ரயில் பயணம் தொடங்கியது Empty Re: நாட்டின் மிக நீண்ட சுற்றுவட்டப் பாதையில் சர்க்குலர் ரயில் பயணம் தொடங்கியது

Post by ayyasamy ram on Wed Apr 24, 2019 4:54 pmசர்க்குலர் ரயில்கள் இயக்கம்: செவ்வாய்க்கிழமை காலை 9.50 மணி அளவில் நாட்டின் மிக நீண்ட சுற்றுவட்டப் பாதையில் தனது முதல் பயணத்தை சர்க்குலர் ரயில் சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம் பாதையில் துவக்கியது.

இதனையடுத்து எதிர்திசையில் இரண்டாம் சர்க்குலர் ரயில் சென்னை கடற்கரையில் இருந்து காலை 10.30 மணிக்கு அரக்கோணம் வழியே துவங்கியது. அரக்கோணம் ரயில் நிலையத்திற்கு அறிவிக்கப்பட்ட நேரமான மதியம் 12.30க்கு பதில் 35 நிமிட தாமதத்துடன் 1.05க்கு அரக்கோணம் ரயில்நிலையத்திற்கு ரயில் வந்தது.

சுற்றுவட்டப் பாதையில் செல்ல இருக்கும் நிலையில் சென்னையில் இருந்து வந்த எம்இஎம்யு ( மெயின் லைன் எலெக்ட்ரிக் மோட்டார் யுனிட்) ரயிலை அரக்கோணத்தில் அரக்கோணம் ரயில்பயணிகள் சங்க தலைவர் நைனா மாசிலாமணி, செயலர் ரகுநாதன், அதிமுக பொதுக்குழு உறுப்பினர் கிருஷ்ணமூர்த்தி, நிர்வாகிகள் பிரபாகரன், சரவணன் உள்ளிட்ட பலர் வரவேற்றனர்.

இந்த ரயிலை இயக்கி வந்த ஓட்டுநர் ராமகிருஷ்ணனுக்கு பொன்னாடைகள் போர்த்தப்பட்டு இனிப்புகள் வழங்கப்பட்டன. தொடர்ந்து இந்த ரயில் புதியபாதையில் 1.10க்கு தனது பயணத்தை அரக்கோணத்தில் இருந்து துவங்கியது. இதில் ரயிலில் பயணிகள் சங்க நிர்வாகிகளும் முக்கியப் பிரமுகர்களும் பயணிகளோடு பயணமாயினர்.

இதையடுத்து எதிர்திசையில் சென்னை கடற்கரையில் காலை 9.50க்கு புறப்பட்ட செங்கல்பட்டில் இருந்து 12 பெட்டிகள் கொண்ட மின்சார ரயில் திருமால்பூர் ரயில்நிலையத்திற்கு வந்தநிலையில் அங்கு பயணிகள் சார்பிலும், ரயில்வே பணியாளர்கள் சார்பிலும் புதியபாதையில் முதலில் பயணத்தை துவக்க இருந்த மின்சார ரயிலுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.

இதையடுத்து அங்கு புறப்பட்ட இந்த மின்சார ரயில் அரக்கோணம் ரயில்நிலையத்தை பிற்பகல் 2.25க்கு அடைந்து தொடர்ந்து 2.30க்கு சென்னை கடற்கரைக்கு புறப்பட்டு சென்றது.

இரண்டு ரயில்களின் சேவை ரத்து: சுற்றுவட்டப் பாதையில் ரயில் சேவை தொடங்கிய நிலையில், கடற்கரை-திருமால்பூர்-சென்னை கடற்கரை சென்று வரும் (ரயில் எண் 66041-66042) ரயில் சேவையும், கடற்கரை-அரக்கோணம்-திருவள்ளூர்-சென்னை கடற்கரை ரயில் சேவையும் தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த சேவைக்குக் கிடைக்கும் வரவேற்பைப் பொருத்து மேலும் 6 சேவைகள் தொடங்கப்படவுள்ளன.

கட்டணம் மிக மிகக் குறைவு

பஸ் பயணத்தில் கட்டணம் மிக உயர்வு என்பது மட்டுமல்லாமல் பயண நேரமும் மிகவும் அதிகமாகிறது. இதனால் பெரும்பாலானவர்கள் ரயில் பயணத்தைத்தான் விரும்புகின்றனர்.

உதாரணமாக அரக்கோணத்தில் இருந்து காஞ்சிபுரம் வரை செல்வதற்கு பேருந்தில் ரூ.20 முதல் ரூ.25 வரை கட்டணம். ஆனால் பயணிகள் ரயிலில் கட்டணம் ரூ.10 மட்டுமே.

பொதுவாக அலுவலகங்களுக்குச் செல்வோரும், பிற பணிகளுக்குச் செல்வோரும் சீசன் டிக்கெட் எடுத்துக் கொண்டால் ரயில் கட்டணம் மிக, மிகக் குறைவு. அரக்கோணத்தில் இருந்து செங்கல்பட்டுக்கு ரயிலில் ரூ.15 மட்டுமே. சீசன் டிக்கெட் எடுத்துக் கொண்டால் மாதத்துக்கு ரூ.270 மட்டுமே. ஆனால் பேருந்தில் கட்டணம் அரக்கோணத்தில் இருந்து செங்கல்பட்டுக்கு ரூ.55.

விரைவுபடுத்தக் கோரிக்கை

தற்போது, தொடங்கப்பட்டுள்ள இச்சேவையில் கடற்கரையிலிருந்து மீண்டும் கடற்கரைக்குச் செல்ல சுமார் 6 மணி நேரம் ஆகிறது. எனவே, பயணிகள் சிரமத்துக்குள்ளாக நேரிடும் என்பதால், அரக்கோணத்திலிருந்து சென்னை கடற்கரைக்கும், செங்கல்பட்டிலிருந்து சென்னை கடற்கரைக்குமான இச்சேவையை விரைவு ரயில்சேவையாக மாற்றவேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

காஞ்சிபுரம் மக்கள் வரவேற்பு

தற்போது தொடங்கப்பட்டுள்ள இந்த ரயில் சேவையால் காஞ்சிபுரம் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். குறிப்பாக, காஞ்சிபுரம், செங்கல்பட்டிலிருந்து மேற்கு மாவட்டங்களான தருமபுரி, சேலம், ஈரோடு, கோவை, மாவட்டங்களுக்கும் கேரளம் உள்ளிட்ட பிற மாநிலங்களுக்கு இனி காஞ்சிபுரத்திலிருந்து அரக்கோணம் சென்று அங்கிருந்து செல்லலாம்.

அதுபோல், அரக்கோணம், திருவள்ளூர், திருநின்றவூர், ஆவடி,பெரம்பூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு காஞ்சிபுரம், செங்கல்பட்டிருந்து அரக்கோணம் மார்க்கமாக செல்லலாம். மேலும், அரக்கோணத்திலிருந்து தாம்பரம், செங்கல்பட்டு உள்பட தென்மாவட்டங்களுக்கு இனி எளிதாக பயணிக்கலாம்.

அதுபோல், கட்டடத்தொழிலாளர்கள், அரசு அலுவலர்கள், பெருநிறுவன ஊழியர்கள்,சுற்றுலாப் பயணிகள் உள்ளிட்டோருக்கு பெரிதும் உதவிடும் வகையாக இந்த வட்ட வழித்தட ரயில் சேவை திட்டம் அமைந்துள்ளது.
-
தினமணி
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 45300
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12075

View user profile https://rammalar.wordpress.com/

Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை