உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» பொருளாதார மந்தம்...10,000 ஊழியர்களை நீக்க பார்லே நிறுவனம் முடிவு?!
by பாலாஜி Today at 11:23 am

» இனிய கோகுலாஷ்டமி திருநாள் வாழ்த்துக்கள்
by ayyasamy ram Today at 10:03 am

» '74 வயதாகும் ஒருவரை சுவரேறிக் குதித்து கைதுசெய்ய வேண்டுமா?' - என்.ராம்
by ayyasamy ram Today at 9:54 am

» தலித் சடலம் பாலத்திலிருந்து இறக்கப்பட்ட விவகாரம்: தாமாக முன்வந்து உயர் நீதிமன்றம் விசாரணை
by ayyasamy ram Today at 9:45 am

» படித்ததில் வலித்தது!!
by ayyasamy ram Today at 9:29 am

» சிறந்த நடிகை விருது தாய்க்கு சமர்ப்பணம்!
by ayyasamy ram Today at 8:49 am

» கருப்புப் பண மோசடி வழக்கு: ராஜ் தாக்கரேவிடம் 8 மணி நேரம் விசாரணை
by ayyasamy ram Today at 8:37 am

» சென்னை -சேலம் 8 வழிச்சாலை திட்டம் தேசிய முக்கியத்துவம் வாய்ந்தது: உச்சநீதிமன்றத்தில் நெடுஞ்சாலை ஆணையம் வாதம்
by ayyasamy ram Today at 8:29 am

» சந்திரயான்-3 அனுப்பவும் திட்டம்: இஸ்ரோ தலைவர் சிவன் தகவல்
by ayyasamy ram Today at 8:26 am

» ஹைதராபாதில் உலகின் மிகப்பெரிய அமேஸான் வளாகம் திறப்பு
by ayyasamy ram Today at 8:23 am

» இஸ்ரோ தலைவர் சிவனுக்கு அப்துல் கலாம் விருது: முதல்வர் வழங்கினார்
by ayyasamy ram Today at 8:20 am

» மோரீசஸுக்கு பயணமாகும் எம்.ஜி.ஆர். சிலை: அடுத்த மாதம் துணை முதல்வர் திறந்து வைக்கிறார்
by ayyasamy ram Today at 8:18 am

» மூழ்கும் இந்தியா.. அதிர்ச்சி தரும் ஆராய்ச்சி முடிவுகள்.. பிரளயத்திற்கான ஒத்திகையோ?!
by ayyasamy ram Today at 8:14 am

» கங்கனாவின் சேலை விலை ரூ.600; கைப்பை ரூ.2 லட்சம்
by ayyasamy ram Today at 8:00 am

» ‘காவி ஆவி நடுவுல தேவி’ படத்தில்பேயாக நடிக்கிறார், யோகி பாபு!
by ayyasamy ram Today at 7:57 am

» கேரள அரசு துறைகளில் பெண் டிரைவர்கள்புதிய மசோதாவுக்கு மந்திரிசபை ஒப்புதல்
by ayyasamy ram Today at 7:54 am

» திறந்து வைத்த அலுவலகத்தில் உறங்கிய சிதம்பரம்
by ayyasamy ram Today at 7:33 am

» ராகுலை எதிர்த்து போட்டியிட்ட துஷார் ரூ.19 கோடி செக் மோசடி வழக்கில் கைது
by ayyasamy ram Today at 7:29 am

» அழகு வேண்டாம் நல்ல இதயம் போதும் - கவிதை
by ayyasamy ram Today at 7:16 am

» சென்னையின் 380-வது பிறந்த நாள்; மிக நீண்ட கடற்கரை; உலகின் மிக பழமையான மாநகராட்சி; 2,000 ஆண்டுகள் பழமை
by M.Jagadeesan Today at 6:10 am

» மகிமை வாய்ந்த சுதர்சன சக்கரம்
by ayyasamy ram Yesterday at 11:06 pm

» பஞ்ச கிருஷ்ண தலங்கள்
by ayyasamy ram Yesterday at 11:05 pm

» அவன் அவன் வேலையை அவன் அவன் பார்க்கனும்…!!
by ayyasamy ram Yesterday at 11:03 pm

» சூட்சுமம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» சில பொது தகவல்கள் தெரிந்துகொள்ள….
by ayyasamy ram Yesterday at 10:51 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Yesterday at 8:36 pm

» "எல்லாமே #டைமிங் தான்"
by T.N.Balasubramanian Yesterday at 8:30 pm

» சுற்றுலா நினைவாக கடற்கரை மணலை பாட்டிலில் சேகரித்த தம்பதிக்கு 6 ஆண்டு சிறை?
by T.N.Balasubramanian Yesterday at 8:23 pm

» இது இன்றைய மீம்ஸ் 22
by T.N.Balasubramanian Yesterday at 8:11 pm

» அழைத்தது நிலா: பாய்ந்தது சந்திரயான் 2
by T.N.Balasubramanian Yesterday at 8:08 pm

» நேற்றைய மீம்ஸ் - 22
by சக்தி18 Yesterday at 7:23 pm

» கார்ட்டூன் & கருத்து சித்திரம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» “பொண்டாட்டி வாயை மியூட்ல போடுற மாதிரி ரிமோட்
by T.N.Balasubramanian Yesterday at 4:45 pm

» அன்று அமித்ஷா... இன்று ப.சிதம்பரம்...: திரும்புகிறது வரலாறு
by T.N.Balasubramanian Yesterday at 4:43 pm

» வாழ்க்கை தத்துவம்- படித்ததில் பிடித்த வரிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:00 am

» எலெக்ட்ரிக் மோட்டார் சைக்கிள்
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» சென்னையில் திடீரென நீல நிறமாக மாறிய கடல் அலைகள்..
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 10:52 am

» வாழ்க்கையை ஈஸியா எடுத்துக்கோ… – தலைவர் ரஜினி சொன்ன குட்டிக்கதை
by ayyasamy ram Yesterday at 10:49 am

» பக்தி பாடல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:38 am

» சூரிய வெப்பத்தின் மூலம் இயங்கும் ஏ.சி!
by ayyasamy ram Yesterday at 10:21 am

» ‘நோ டைம் டூ டை’-ஜேம்ஸ் பாண்ட் 25 படத்தின் டைட்டில் அறிவிப்பு
by ayyasamy ram Yesterday at 6:53 am

» சிரி... சிரி...
by ayyasamy ram Yesterday at 6:44 am

» அரசியல் என்ற தலைப்பில் வாசகர்கள் எழுதிய கவிதைகள் பகுதி 1 By கவிதைமணி |
by ayyasamy ram Yesterday at 6:39 am

» ஹிந்தி, தமிழ் உள்ளிட்ட நான்கு மொழிகளில் வெளியாகவுள்ள தபாங் 3
by ayyasamy ram Yesterday at 6:33 am

» சீன அதிபர் வருகை: மல்லையில் அதிகாரி ஆய்வு
by ayyasamy ram Yesterday at 6:10 am

» மோடி உரை கேட்க 50,000 பேர் முன்பதிவு
by ayyasamy ram Yesterday at 6:07 am

» சிதம்பரம் கைது; தலைவர்கள் கருத்து
by ayyasamy ram Yesterday at 6:05 am

» கைது செய்யப்படுகிறாரா ப.சிதம்பரம்?
by ayyasamy ram Yesterday at 5:58 am

» விஷ்ணு பகவானின் 108 போற்றி
by ayyasamy ram Wed Aug 21, 2019 8:21 pm

» காத்திருந்த அமித் ஷாவும், தலைமறைவான சிதம்பரமும்...!!
by T.N.Balasubramanian Wed Aug 21, 2019 5:05 pm

Admins Online

`15 ரூபாயில் 80 கி.மீ போகலாம்!' கல்லூரி மாணவர்களின் கலக்கல் ஹைப்ரிட் கார்

`15 ரூபாயில் 80 கி.மீ போகலாம்!' கல்லூரி மாணவர்களின் கலக்கல் ஹைப்ரிட் கார் Empty `15 ரூபாயில் 80 கி.மீ போகலாம்!' கல்லூரி மாணவர்களின் கலக்கல் ஹைப்ரிட் கார்

Post by ayyasamy ram on Wed Apr 24, 2019 12:18 pm

`15 ரூபாயில் 80 கி.மீ போகலாம்!' கல்லூரி மாணவர்களின் கலக்கல் ஹைப்ரிட் கார் 155825_thumb
-
``பணக்காரர்கள் மட்டுமல்ல; நடுத்தரவர்க்கத்தினரும் காரில் போகணும்னு ஆசைப்பட்டோம். அதற்காக நாங்க உருவாக்குனதுதான் இந்த  `ஹைப்ரிட் கார்'. இதோட வடிவமைப்புச் செலவு வெறும் 50,000 ரூபாய் மட்டும்தான்.

இருவர் 80 கி.மீ வரை பயணம் செய்ய 15 ரூபாய், அதாவது 1 கி.மீ தூரத்துக்கு வெறும் 30 பைசா  செலவில் செல்லலாம்." என்கின்றனர் அரவிந்த்குமார், பாலாஜி, ராஜ்குமார், வினித், அசோக்குமார் , ரவிராகுல், தளபதி பிரபாகரன், கிருபாநிதி, நாகேந்திரன், நந்தகுமார், விஸ்வநாதன், முகமது சித்திக் ஆகிய 12 பேரும். நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறை ஏ.வி.சி. பொறியியல் கல்லூரியின் மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறை மாணவர்கள் இவர்கள். இவர்களின் உழைப்புதான் ஹைப்ரிட் கார்.

ஒவ்வோர் ஆண்டும் தமிழகத்தில் உள்ள ஏதேனும் ஒரு பொறியியல் கல்லூரியில் இம்மாதிரியான ஒரு காரை மாணவர்கள் தயாரித்தாலும் அது பொதுமக்கள் பயன்படுத்தும் சந்தைக்கு வராமல் கல்லூரியின் ஏதோ ஒரு மூலையில் காட்சிப் பொருளாக மட்டுமே வைக்கப்பட்டிருக்கும்.

ஆனால், இது அப்படி இருக்காது என்கின்றனர் இந்த மாணவர்கள். குறைந்த செலவில் சுற்றுப்புறச் சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத வகையில் சூரிய மின்சக்தி மற்றும் பேட்டரி மூலம் இயங்கும் இந்த ஹைபிரிட் காரின் ஸ்பெஷாலிட்டி குறித்து மாணவர்களிடமே கேட்டோம்.

காரை வடிவமைத்த குழுவில் உள்ள மாணவர் நாகேந்திரன் உற்சாகக் குரலில் பேசத்தொடங்கினார். ``ஒரு கார் குறைந்தது மூன்று லட்ச ரூபாய்க்கு விற்பனையாகிறது. பெட்ரோல் டீசல் விலை நாளுக்கு நாள் உயருது.

இப்படி இருந்தா நடுத்தர வர்க்கத்தினருக்கு கார் வாங்குறது வெறும் கனவாகவே போயிடுமா என யோசித்தோம். அதான் சுற்றுப்புறச் சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத வகையில் சூரிய மின்சக்தி மற்றும் பேட்டரி மூலம் இயங்கும் காரை 50,000 ரூபாய்க்கு வடிவமைத்தோம்." என்றார்.

மேலும், ``சொசைட்டி ஆப் ஆட்டோமொபைல் இன்ஜினீயரிங் என்ற அமைப்பை அடிப்படையாகக் கொண்டு சாலையின் தன்மைக்கு ஏற்ப விரைவாகச் செல்லும் வகையில் இதன் உருவத்தை வடிவமைத்துள்ளோம். காரின் அனைத்துப் பக்கங்களிலும் வெயிட் பேலன்ஸிங் சரியாக இருப்பதால் எந்த ஒரு சூழலிலும் கார் கவிழாமல் இருக்கும்." என்று நம்பிக்கை கொடுத்தார் நாகேந்திரன்.


Last edited by ayyasamy ram on Wed Apr 24, 2019 12:25 pm; edited 1 time in total
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 47484
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12267

View user profile https://rammalar.wordpress.com/

Back to top Go down

`15 ரூபாயில் 80 கி.மீ போகலாம்!' கல்லூரி மாணவர்களின் கலக்கல் ஹைப்ரிட் கார் Empty Re: `15 ரூபாயில் 80 கி.மீ போகலாம்!' கல்லூரி மாணவர்களின் கலக்கல் ஹைப்ரிட் கார்

Post by ayyasamy ram on Wed Apr 24, 2019 12:20 pm

`15 ரூபாயில் 80 கி.மீ போகலாம்!' கல்லூரி மாணவர்களின் கலக்கல் ஹைப்ரிட் கார் Hb1_17103
-
எல்லா காரிலும் இருப்பது போல் பேட்டரி இண்டிகேஷன்
சிஸ்டம், ஸ்பீடோமீட்டர் எல்லாம் கொண்ட சோலார் காரில்,
முன்பக்கம் இரு சக்கரங்களும் ஸ்டியரிங் உடன்
இணைக்கப்பட்டுள்ளது. பி.எல்.டி.சி வகை மோட்டார்
பயன்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் எந்தவகை பேட்டரி காரிலும் இல்லாதது போன்ற
மின்சாரம் வீணாவதைத் தடுக்கும் பொருட்டு மோட்டாரை
காரின் பின் சக்கரங்களில் பொருத்தியுள்ளனர்.

திடீரென மோட்டாரில் ஒன்று பழுதானால் மற்றொன்று
உடனடியாகப் பயன்படுத்தும் வகையில் அமைத்திருப்பது
காரின் ஹைலைட்.

மூன்று நபர்கள் வரை பயணம் செய்யக்கூடிய ஹைபிரிட் கார்
குறைந்தபட்சம் 200 முதல் 250 கிலோ வரை இழுக்கும் திறன்
வாய்ந்த ஹைபிரிட் காரின் மொத்த எடை 50 கிலோ மட்டுமே.
ஒரு முறை பேட்டரியை முழு சார்ஜ் செய்தால் சுமார் 80 கிலோ
மீட்டர் தூரம் வரை, 40 கிலோ மீட்டர் வேகத்தில் தடையின்றி
பயணிக்க முடியும் என்கிறார்கள் மாணவர்கள்.

இதற்கு ஆகும் செலவு 1 கிலோ மீட்டர் தூரத்திற்கு 30 பைசா.

``தற்போது காற்று மாசுபாட்டில் முதல் மாநிலமாக டெல்லி உள்ளது.
நாம் பயன்படுத்தும் வாகனங்களின் பெருக்கத்தினால் ஒவ்வொரு
மாநிலத்திலும் அசுரவேகத்தில் சுற்றுச்சூழல் மாசுபாடு வளர்ந்து
வருகிறது இதைக் கட்டுப்படுத்தும் நோக்கத்திலும், ஏழை எளிய
மற்றும் நடுத்தர மக்களின் எட்டாக்கனியாக உள்ள சொந்த கார்
கனவை பூர்த்தி செய்யும் எண்ணத்திலும்தான் இந்த காரை
வடிவமைத்து இருக்கிறோம்." என்று பெருமிதம் கொள்கிறார் மாணவர்
குழுவிலுள்ள தளபதி பிரபாகரன்.
-
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 47484
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12267

View user profile https://rammalar.wordpress.com/

Back to top Go down

`15 ரூபாயில் 80 கி.மீ போகலாம்!' கல்லூரி மாணவர்களின் கலக்கல் ஹைப்ரிட் கார் Empty Re: `15 ரூபாயில் 80 கி.மீ போகலாம்!' கல்லூரி மாணவர்களின் கலக்கல் ஹைப்ரிட் கார்

Post by ayyasamy ram on Wed Apr 24, 2019 12:23 pm

`15 ரூபாயில் 80 கி.மீ போகலாம்!' கல்லூரி மாணவர்களின் கலக்கல் ஹைப்ரிட் கார் Hb0_17589
-
காரை ஆன் செய்ததும், இண்டிகேஷன் காட்டும்.
காரில் ஆக்சிலேட்டர், பிரேக்ன்னு ரெண்டு பெடல்கள்தான்.
ஆக்சிலேட்டரை காலால் அமுக்கினால் `ரோட்டார் பொசிஷன்
சென்சார்' மூலம் பின்சக்கரங்களில் பொருத்தியுள்ள மோட்டார்
செயல்படத் தொடங்கி கார் நகரத்தொடங்கும்.

4 எலக்ட்ரிக் பேட்டரி பொருத்தப்பட்டிருக்கும் ஹைப்ரிட் காரை
சார்ஜ் செய்வதற்கு எட்டு மணிநேரம் தேவைப்படும். எட்டு
மணிநேரம் கரன்ட் மூலம் சார்ஜ் செய்து பயன்படுத்தும் இந்த
கார் சாலையில் சென்று கொண்டிருக்கும் பொழுது சார்ஜ்
குறைந்து 30 சதவிகிதத்திற்குக் கீழ் வந்தால் உடனடியாக காரின்
மேற்கூரையில் இருக்கும் சோலார் பேனலிலிருந்து சூரிய மின்சக்தி
மூலம் பேட்டரி சார்ஜ் செய்யும் வசதி ஹைப்ரிட் காரின் சிறப்பு.

12 பேர் கொண்ட மாணவர்கள் குழுவிற்கு வழிகாட்டிய
துறைத்தலைவர் முனைவர் ரவி ``ஒவ்வொரு மனிதனுக்குள்ளும்
ஏதோ ஒரு திறமை ஒளிந்துகொண்டு இருக்கத்தான் செய்யும்.
அதைச் சரியாக கண்டுணர்ந்து அவர்களின் ஆர்வம் மற்றும்
திறமைகளின் அடிப்படையில் வழிகாட்டினால் சமூகத்திற்குப்
பயனுள்ள நல்ல கண்டுபிடிப்புகள் பலவற்றை உருவாக்கமுடியும்
என்பதற்கான சான்றுதான் இந்த ஹைப்ரிட் கார்" என்றார்.

சுற்றுப்புறச் சூழலை காக்கும் தலையாய கடமை கொண்ட
சமுதாயத்தில் இருக்கும் நாம், இம்மாதிரியான சூழலுக்கு மாசற்ற
கண்டுபிடிப்புகள் பலவற்றை உருவாக்கி, ஊக்கப்படுத்தவேண்டும்.
-
ஹரீஷ்.ம
நன்றி-விகடன்


ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 47484
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12267

View user profile https://rammalar.wordpress.com/

Back to top Go down

`15 ரூபாயில் 80 கி.மீ போகலாம்!' கல்லூரி மாணவர்களின் கலக்கல் ஹைப்ரிட் கார் Empty Re: `15 ரூபாயில் 80 கி.மீ போகலாம்!' கல்லூரி மாணவர்களின் கலக்கல் ஹைப்ரிட் கார்

Post by பழ.முத்துராமலிங்கம் on Wed Apr 24, 2019 12:44 pm

வாழ்த்துக்கள்.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 12806
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 2973

View user profile

Back to top Go down

`15 ரூபாயில் 80 கி.மீ போகலாம்!' கல்லூரி மாணவர்களின் கலக்கல் ஹைப்ரிட் கார் Empty Re: `15 ரூபாயில் 80 கி.மீ போகலாம்!' கல்லூரி மாணவர்களின் கலக்கல் ஹைப்ரிட் கார்

Post by கண்ணன் on Wed Apr 24, 2019 4:05 pm

சூப்பருங்க சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி
கண்ணன்
கண்ணன்
பண்பாளர்


பதிவுகள் : 242
இணைந்தது : 17/10/2014
மதிப்பீடுகள் : 115

View user profile

Back to top Go down

`15 ரூபாயில் 80 கி.மீ போகலாம்!' கல்லூரி மாணவர்களின் கலக்கல் ஹைப்ரிட் கார் Empty Re: `15 ரூபாயில் 80 கி.மீ போகலாம்!' கல்லூரி மாணவர்களின் கலக்கல் ஹைப்ரிட் கார்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை