உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» நாட்டுக்காய்கறிகளின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 10:17 pm

» இணைப்பைக் கொடுங்கள்
by சக்தி18 Yesterday at 6:39 pm

» ஓட்டு போட வாருங்கண்ணே…..கள்ள ஓட்டு போட வாருங்கண்ணே.
by சக்தி18 Yesterday at 5:16 pm

» அன்று சொன்னதை இன்று செய்து காட்டிய நரேந்திர மோடி
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:08 pm

» இது இன்றைய மீம்ஸ்.
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:03 pm

» சுக்கில் இருக்கு சூட்சுமம்!
by மாணிக்கம் நடேசன் Yesterday at 3:53 pm

» நளன் அன்னப்பறவையை ஏன் தூது விட்டான்?
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 3:47 pm

» இப்படியும் காதல் இது மனிதக் காதல் அல்ல.
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 3:43 pm

» பழைய பாடல்கள் - காணொளி {தொடர் பதிவு}
by ayyasamy ram Yesterday at 2:39 pm

» ’’நான் ஆடுன பாட்டுக்காக ஸ்கிரீனை கிழிச்சாங்கன்னதும் அழுதுட்டேன்..!’’ - சாயாசிங்
by ayyasamy ram Yesterday at 2:09 pm

» `ரன்’ முதல் `டும் டும் டும்’ வரை...
by சக்தி18 Yesterday at 2:03 pm

» மக்களை கொத்துக் கொத்தாய் கொன்றவர்களுக்கு மிருகங்கள் ஒரு பொருட்டா?
by சக்தி18 Yesterday at 1:56 pm

» கறுப்பு தாஜ்மஹால்
by சக்தி18 Yesterday at 1:18 pm

» நாம் துவக்கி வைப்போம்.... இந்த மாற்றத்தை.....????
by சக்தி18 Yesterday at 12:58 pm

» தோகை விரித்தாடும் மயில்
by சக்தி18 Yesterday at 12:56 pm

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:43 pm

» தார் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை நிறுத்தம்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:02 pm

» இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 11:45 am

» பொது அறிவு தகவல் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 11:44 am

» தமிழ்நாட்டின் 32 மாவட்டங்கள் - அ முதல் ஃ வரை!
by ayyasamy ram Yesterday at 11:29 am

» திருப்பத்தூர், ராணிப்பேட்டையை தலைமையிடமாக கொண்டு தமிழகத்தில் 2 புதிய மாவட்டங்கள் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
by ayyasamy ram Yesterday at 11:19 am

» ஆபரேசன் தியேட்டரில் எதற்கு விசிலும், சங்கும்?
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 10:40 am

» கனிவும் கல்வியும்!
by ayyasamy ram Yesterday at 9:03 am

» மூன்று தேசிய விருதுகள் பெற்ற இந்தி படத்தின் ரீ மேக்கில் நடிக்கும் நடிகர் பிரசாந்த்
by ayyasamy ram Yesterday at 9:01 am

» மாமியாருக்காக ஸ்வீட் சாப்பிடறதை நிறுத்திய மருமகள்...!!
by ayyasamy ram Yesterday at 8:54 am

» கார்ட்டூன் & கருத்து சித்திரம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 5:14 am

» சிரி….சிரி….!
by ayyasamy ram Yesterday at 5:06 am

» மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 5:04 am

» பத்தாம்பசலி
by ayyasamy ram Yesterday at 5:03 am

» மூழ்கத் தயாராகும் நகரங்கள்
by ayyasamy ram Yesterday at 5:00 am

» பக்தி பாடல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Aug 16, 2019 8:45 pm

» தொரட்டி -திரை விமர்சனம்
by ayyasamy ram Fri Aug 16, 2019 8:21 pm

» பழனி பஞ்சாமிர்தத்திற்கு புவிசார் குறியீடு: தமிழகத்தில் சர்வதேச அங்கீகாரம் பெற்ற முதல் பிரசாதம்!
by சக்தி18 Fri Aug 16, 2019 7:06 pm

» இம்சை அரசன் 24-ம் புலிகேசியில் வடிவேலுக்கு பதில் யோகிபாபு?
by சக்தி18 Fri Aug 16, 2019 7:03 pm

» டில்லி பஸ்களில் பெண்கள் இலவசமாக பயணிக்கலாம்
by சக்தி18 Fri Aug 16, 2019 7:00 pm

» கோபமும் புயலும் ஒரே மாதிரிதான்…!!
by ayyasamy ram Fri Aug 16, 2019 2:19 pm

» வீட்டுக் குறிப்புகள்
by ayyasamy ram Fri Aug 16, 2019 2:18 pm

» பொண்ணு நல்லா சமைப்பா…! – ஆறு வித்தியாசம் கண்டு பிடிங்க!
by ayyasamy ram Fri Aug 16, 2019 2:13 pm

» கேள்வி – ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Aug 16, 2019 2:12 pm

» காலிபிளவர் டிக்கா
by ayyasamy ram Fri Aug 16, 2019 2:10 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Fri Aug 16, 2019 12:54 pm

» please give the link to me
by prevel Fri Aug 16, 2019 11:39 am

» 19 ஆண்டுகால கோரிக்கைக்குப் பிறகு உருவாக்கப்பட்டுள்ள முப்படைத் தளபதி பதவி!
by பழ.முத்துராமலிங்கம் Fri Aug 16, 2019 11:16 am

» பாடகரான விக்ரம் மகன்
by பழ.முத்துராமலிங்கம் Fri Aug 16, 2019 11:07 am

» வெள்ளம் சூழ்ந்த மேம்பாலத்தில் ஆம்புலன்சுக்கு வழிகாட்டிய 6-ம் வகுப்பு மாணவனுக்கு பாராட்டு
by ayyasamy ram Fri Aug 16, 2019 6:34 am

» உத்தரகாண்டில் நடந்த கல் எறியும் திருவிழாவில் 120 பேர் காயம்
by ayyasamy ram Fri Aug 16, 2019 6:10 am

» பெண் அதிகாரி ரம்யா லட்சுமிக்கு கல்பனா சாவ்லா விருது
by ayyasamy ram Fri Aug 16, 2019 6:07 am

» முன்னாள் கிரிக்கெட் வீரர் வி.பி.சந்திரசேகர் தற்கொலை
by ayyasamy ram Fri Aug 16, 2019 6:01 am

» மெக்ஸிகோ: காற்றை சுத்திகரிக்க செயற்கை மரம்!
by ayyasamy ram Fri Aug 16, 2019 5:53 am

» திரும்புகிறதா ‘2008’..
by ayyasamy ram Fri Aug 16, 2019 5:48 am

Admins Online

முதல் பார்வை: வெள்ளைப்பூக்கள்

முதல் பார்வை: வெள்ளைப்பூக்கள் Empty முதல் பார்வை: வெள்ளைப்பூக்கள்

Post by ayyasamy ram on Sun Apr 21, 2019 10:09 am

முதல் பார்வை: வெள்ளைப்பூக்கள் Vellai-pookal-10jpg
-
குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைகளுக்கு எதிராக
உரக்கப் பேசும் படமே 'வெள்ளைப்பூக்கள்'.

ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரியான விவேக் அமெரிக்காவில்
இருக்கும் மகனுடன் ஓய்வுக்காலத்தைக் கழிக்க அங்கு செல்கிறார்.
மக்கள் நடமாட்டமே இல்லாத அமைதி சூழ் உலகு அவருக்குப்
புதிதாக இருக்கிறது.

மகன் தேவ் உடன் பேசும் விவேக் மருமகள் பெய்ஜி ஹெண்டர்சனுடன்
பேசாமல் தன் வேலையை மட்டும் பார்க்கிறார். அமெரிக்காவில்
இருக்கும் மற்றொரு தமிழரான சார்லியின் அறிமுகப் படலத்துக்குப்
பிறகு அவரும் விவேக்கும் சகஜமாகப் பழகி அமெரிக்காவில் இஷ்டம்
போல் உலா வருகிறார்கள்.

இந்நிலையில் திடீரென்று விவேக்கின் பக்கத்து வீட்டுப் பெண் மோனா
கடத்தப்படுகிறாள். அதற்கடுத்த சில நாட்களில் கார்லோஸ் என்ற
பள்ளிச் சிறுவன் கடத்தப்படுகிறான். இந்தக் கடத்தலுக்கு யார் காரணம்
என்று கண்டுபிடிப்பதற்கு முன் விவேக் மகன் தேவ் கடத்தப்படுகிறார்.

இதனால் அதிர்ச்சியின் எல்லைக்கே செல்லும் விவேக் தகப்பனாகவும்,
ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரியாகவும் குற்றம் நடந்தது எப்படி?
ஏன்? யாரால்? என்பதைக் கண்டுபிடிக்கிறார்.

'வெள்ளைப்பூக்கள்' படத்தின் மூலம் அட்டகாசமான வருகையை
உறுதிப்படுத்தியுள்ளார் இயக்குநர் விவேக் இளங்கோவன்.
ஒரு க்ரைம் த்ரில்லர் படத்துக்குரிய சிறப்பான அம்சங்களில்
திரைக்கதையை உருவாக்கி ஆச்சர்யப்படுத்தியுள்ளார்.

காமெடியாகப் பார்த்தே பழக்கப்பட்ட விவேக் இதில் கதையின்
நாயகன். 'நான் தான் பாலா', 'எழுமின்' உள்ளிட்ட சில படங்களில்
கதாநாயகனாக விவேக் நடித்திருந்தாலும் 32 வருட சினிமா
கெரியரில் அவருக்குப் பேர் சொல்லி பெருமையைத் தேடித் தரும்
படமாக 'வெள்ளைப்பூக்கள் இருக்கும்'.

ஒரு வீட்டில் பெற்றோரைக் கொன்று, சிறுமியைப் பாலியல்
வன்முறை செய்து கழுத்தை நெரித்துக் கொன்ற
கொலையாளியைக் கண்டுபிடிக்கும் காவல்துறை அதிகாரியாக
அறிமுகமாகும் போது ஒரு ஜெர்க்கை ஏற்படுத்துகிறார்.

தந்தையாக மகனைக் கண்டுபிடிக்காமல் கலங்கும்போதும்,
போலீஸ் மூளையை வைத்து தனக்குள் கேள்வி கேட்டு
விடைகளைத் தேடிப் புறப்படும்போதும் விவேக்குள் இருக்கும்
நடிகனைக் கண்டுகொள்ள முடிகிறது.

சார்லி மிகச்சிறந்த உறுதுணைக் கதாபாத்திரத்தில் சிறப்பாக ந
டித்துள்ளார். விவேக்கின் மகன் அஜய் கதாபாத்திரத்தில் தேவ்,
கதாபாத்திரத்தின் தேவை அறிந்து யதார்த்தமாக நடித்துள்ளார்.

பூஜா தேவரியாவுக்குப் படத்தில் முக்கியத்துவம் இல்லை.
பெய்ஜி ஹெண்டர்சன் இருவித பரிமாணங்களில் தன் இருப்பைப்
பதிவு செய்கிறார்.

ஜெரால்டு பீட்டரின் கேமரா இதுவரை பார்க்காத
அமெரிக்காவையும், சியட்டல் நகரின் அழகையும்
கண்களுக்குள் கடத்துகிறது. ராமகோபால் கிருஷ்ணராஜின்
பின்னணி இசை கதைக்களத்துக்கு வலுவூட்டும் அம்சம்.

பிரவீன் கே.எல். விவேக்- சார்லி உரையாடலில் மட்டும் கொஞ்சம்
கத்தரி போட்டிருக்கலாம்.

அமெரிக்க வாழ் மக்களுக்கு மத்தியில் தன்னுடைய நாளை
எப்படிக் கழிப்பது என்ற சிந்தனையில் விவேக் நாட்களை
நகர்த்துகிறார். ஆனால், அது படத்தின் ஆதாரப் பிரச்சினை
அல்ல.

அடுத்தடுத்து நடக்கும் கடத்தல், கொலை மட்டுமே படத்தின்
மையம். அந்த மையத்தைத் தொட்ட பிறகும் படம் கொஞ்சம்
நிதான கதியில் செல்வது ஏன் என்று தெரியவில்லை.

கடத்தப்பட்ட கார்லோஸ் என்ன ஆனார் என்பதும் தெரியவில்லை.
ஆனால், இவை படத்துக்கு எந்த விதத்திலும் பாதகமாக
அமையவில்லை.

குற்றம் எப்படி நடந்தது? ஏன் நடந்தது? என்பதைக் கண்டுபிடித்தால்
அது யாரால் நடந்தது என்பதைக் கண்டுபிடிக்க முடியும் என்று
செல்லும் புலனாய்வுப் பாணி சுவாரஸ்யம் சேர்க்கிறது.

நிகழ்காலத்தில் நடப்பதைப் போல நடக்கும் சில காட்சிகள்
கடந்த காலத்தில் நடந்தவை என்று சொல்லும் திரைக்கதை உத்தி
அபாரம். இந்த இரண்டு அம்சங்களே படத்தைத் தாங்கிப்
பிடிக்கின்றன.

மலரும் மொட்டுகளை அழித்துவிடாதீர்கள். குழந்தைகளுக்கு
எதிரான வன்முறைகளைத் தவிர்க்க 'வெள்ளைப்பூக்கள்'
சுதந்திரமாய் பூக்கட்டும் என்று சமூக அக்கறையுடன்
சொல்லியிருக்கிறார் இயக்குநர் விவேக் இளங்கோவன்.

நல்ல தரமான சினிமா பார்க்க நினைப்பவர்களும், வித்தியாசமான
அனுபவத்துக்குத் தயாராக இருப்பவர்களும் வெள்ளைப்பூக்களை
மலரச் செய்ய திரையரங்கு செல்லலாம்.
-
---------------------------------------
உதயன்
இந்து தமிழ் திசை
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 47301
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12223

View user profile https://rammalar.wordpress.com/

Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை