உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» எம்.எல்.ஏ., தொகுதி நிதி ரூ.3 கோடியாக உயர்வு
by ayyasamy ram Today at 7:10 pm

» நிர்மலா சீதாராமன் அறிவுரை: விழித்தது தமிழக அரசு
by ayyasamy ram Today at 7:03 pm

» மெர்சல் என்றால் என்ன?
by சக்தி18 Today at 6:32 pm

» நடிகர் ரஜினிகாந்த் மனைவி வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ
by T.N.Balasubramanian Today at 3:55 pm

» நான் ரெடி நீங்க ரெடியா?
by T.N.Balasubramanian Today at 3:42 pm

» ஈகரையில் நெரிசல்
by T.N.Balasubramanian Today at 3:37 pm

» 14 வருடங்கள் கதாநாயகியாக நீடிக்கும் அனுஷ்கா
by சக்தி18 Today at 2:42 pm

» கடாரம் கொண்டான் - திரை விமரிசனம்
by ayyasamy ram Today at 6:41 am

» சென்னையில் 1,200 சதுர அடிக்குக் குறைவான இடங்களில் கட்டடம் கட்ட 30 நாள்களில் திட்ட அனுமதி
by ayyasamy ram Today at 6:31 am

» தியாகராஜ பாகவதருக்கு திருச்சியில் மணிமண்டபம்: முதல்வர் பழனிசாமி
by ayyasamy ram Today at 6:28 am

» ஆபாச பட சர்ச்சை நடிகை ராதிகா ஆப்தே விளக்கம்
by ayyasamy ram Today at 6:22 am

» கதாநாயகன் ஆகிறார், தங்கர்பச்சான் மகன்
by ayyasamy ram Today at 6:20 am

» பணபிரச்சினையால் சிக்கல்அமலாபாலின் ‘ஆடை’ படம் வெளியாகவில்லை
by ayyasamy ram Today at 6:19 am

» அமெரிக்காவில் நடிகை ஒருவர் தனது கவர்ச்சி உடையால் திருமண விழாவை கலகலக்க வைத்தார்.
by ayyasamy ram Today at 6:13 am

» ஈரான் சிறைபிடித்த இங்கிலாந்து கப்பலில் சென்ற 23 மாலுமிகளில் 18 பேர் இந்தியர்கள் - பத்திரமாக மீட்க மத்திய அரசு நடவடிக்கை
by ayyasamy ram Today at 6:09 am

» 3 முறை டெல்லி முதல்-மந்திரியாக இருந்தவர் ஷீலா தீட்சித் மரணம்: ஜனாதிபதி, பிரதமர் மோடி, ராகுல் காந்தி இரங்கல்
by ayyasamy ram Today at 6:07 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு
by ayyasamy ram Today at 6:05 am

» 6 மாநில கவர்னர்கள் அதிரடி மாற்றம்
by ayyasamy ram Today at 6:02 am

» நான் தாதா இல்லை தாத்தா - ரவுடி வரிச்சியூர் செல்வம் பேட்டி
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 8:54 pm

» இந்திய பட்ஜெட் நிகழ்வு - வரலாற்றை மாற்றி அமைத்த நிர்மலா சீதாராமன்.
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 8:45 pm

» கிரகண ஒளியில் தில்லை நடராஜர் திருக்கோயில்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 8:42 pm

» என்ன மனிதனையா நீ?
by T.N.Balasubramanian Yesterday at 8:27 pm

» கண்கவர் பூக்கள்
by சக்தி18 Yesterday at 7:46 pm

» 'ஏர்டெல்'லை பின்னுக்கு தள்ளிய 'ரிலையன்ஸ் ஜியோ'
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 3:46 pm

» 'பேங்க் ஆப் இங்கிலாந்து' கவர்னர் பதவிக்கு ரகுராம் ராஜன் விண்ணப்பம்?
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 3:44 pm

» கதிர்ஆனந்த், ஏ.சி.சண்முகம் மனு ஏற்பு
by T.N.Balasubramanian Yesterday at 1:30 pm

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:22 am

» உலகைச்சுற்றி...
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ரஷியாவில் சாலையில் உலாவிய புலியால் பரபரப்பு
by ayyasamy ram Yesterday at 7:53 am

» வேலன்:-யூடியூப் வீடியோவினை எம்பி3 பார்மெட்டுக்கு மாற்றிட -Youtube to mp3 Converter
by velang Yesterday at 7:37 am

» ஸ்பெயினில் வரிக்குதிரை போல் வண்ணம் பூசப்பட்ட கழுதைகள் - சமூக வலைத்தளத்தில் வைரலாகிய புகைப்படம்
by ayyasamy ram Yesterday at 7:03 am

» துருக்கி விமான நிலையத்தில் ருசிகர சம்பவம்: முதல் விமான பயணத்தில் பெண்ணின் செயலால் சிரிப்பலை
by ayyasamy ram Yesterday at 6:49 am

» அனைத்து விவசாயிகளின் கடன் தள்ளுபடி தொடர்பான வழக்கு: ஆவணங்களை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
by ayyasamy ram Yesterday at 6:45 am

» மக்களவையில் தகவல் அறியும் உரிமை சட்டதிருத்த மசோதா தாக்கல் - காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் கடும் எதிர்ப்பு
by ayyasamy ram Yesterday at 6:42 am

» அரசு விழாக்களில்தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுக்கு ஏன் அழைப்பு விடுக்கவில்லை?மு.க.ஸ்டாலின் கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:41 am

» கெடு மேல் கெடு: நடக்கவில்லை ஓட்டெடுப்பு
by ayyasamy ram Yesterday at 6:36 am

» கேரள எம்பிக்களிடம் கற்க வேண்டும் பாலபாடம்
by ayyasamy ram Yesterday at 6:28 am

» சபைக்கு வராத மத்திய அமைச்சருக்கு வெங்கையா கண்டிப்பு
by ayyasamy ram Yesterday at 6:24 am

» பெண்ணின் முகத்தில் அறைந்த யானை
by ayyasamy ram Fri Jul 19, 2019 10:42 pm

» குண்டக்க மண்டக்க கேள்விகள்.
by T.N.Balasubramanian Fri Jul 19, 2019 9:08 pm

» சிவனின் உடலில் இருந்து தோன்றிய வீரபத்திரர்
by ayyasamy ram Fri Jul 19, 2019 8:59 pm

» ஒளிமயமான வாழ்வு தரும் சுசீந்திரம் தாணுமாலயன் கோவில்
by ayyasamy ram Fri Jul 19, 2019 8:56 pm

» பிரபல இளம் ஜோதிடருடன் ஸ்டாலின் மனைவி ஆலோசனை
by சக்தி18 Fri Jul 19, 2019 7:15 pm

» சச்சின் டெண்டுல்கருக்கு ஹால் ஆஃப் பேம் கவுரவம் வழங்கியது ஐசிசி
by T.N.Balasubramanian Fri Jul 19, 2019 5:57 pm

» டென்வர் விமான நிலையம் - இது நல்லா இருக்கே!
by T.N.Balasubramanian Fri Jul 19, 2019 5:21 pm

» சேப்பியன்ஸ்: மனிதகுலத்தின் ஒரு சுருக்கமான வரலாறு
by T.N.Balasubramanian Fri Jul 19, 2019 4:35 pm

» நட்பே துணை இயக்குநர் பார்த்திபன் தேசிங்கு
by ayyasamy ram Fri Jul 19, 2019 12:40 pm

» தனுஷ் தயாரிக்க விரும்பிய படம்! வெள்ளை யானை சுவாரஸ்யங்கள்
by ayyasamy ram Fri Jul 19, 2019 12:25 pm

» இரவில் துளசி டீ குடிக்கலாம்!
by T.N.Balasubramanian Fri Jul 19, 2019 11:35 am

» ‛தங்கத்தாலி இனி கனவாகிவிடுமே'; லோக்சபாவில் தமிழச்சி கவலை
by பழ.முத்துராமலிங்கம் Fri Jul 19, 2019 11:30 am

Admins Online

விழிப்புணர்வு பிரச்சாரங்கள் செய்தும் சென்னையில் வாக்குப்பதிவு குறைந்தது: கடைசி இடத்துக்கு சென்ற மயிலாப்பூர் பேரவைத் தொகுதி

விழிப்புணர்வு பிரச்சாரங்கள் செய்தும் சென்னையில் வாக்குப்பதிவு குறைந்தது: கடைசி இடத்துக்கு சென்ற மயிலாப்பூர் பேரவைத் தொகுதி Empty Re: விழிப்புணர்வு பிரச்சாரங்கள் செய்தும் சென்னையில் வாக்குப்பதிவு குறைந்தது: கடைசி இடத்துக்கு சென்ற மயிலாப்பூர் பேரவைத் தொகுதி

Post by ayyasamy ram on Sun Apr 21, 2019 9:37 am


சென்னை மாவட்டத்தில் 100 சதவீதம் வாக்குப்பதிவு நடைபெற பல்வேறு விழிப்புணர்வு பிரச்சாரங்கள் செய்தும் சென்னையில் உள்ள சட்டப்பேரவைத் தொகுதிகளில்தான் மிகக் குறைவான வாக்குகள் பதிவாகியுள்ளன. மாநில அளவில் மயிலாப்பூர் சட்டப்பேரவைத் தொகுதி கடைசி இடத்துக்குச் சென்றுள்ளது.

ஒவ்வொரு மக்களவைத் தொகுதியிலும் 6 சட்டப்பேரவைத் தொகுதிகள் இடம்பெற்றுள்ளன. ஒரு மக்களவைத் தொகுதிக்கு ஒரு தேர்தல் நடத்தும் அலுவலரும், எளிமையான நிர்வாகத்துக்காக மக்களவைத் தொகுதியில் இடம்பெற்றுள்ள ஒவ்வொரு சட்டப்பேரவைத் தொகுதிக்கும் ஓர் உதவி தேர்தல் நடத்தும் அலுவலரும் நியமிக்கப்படுகின்றனர்.

தேர்தல் பயிற்சி, பணியாளர் களுக்கு தேர்தல் பணி ஒதுக்கீடு, வாக்குப்பதிவு இந்திரங்களை அனுப்புதல், வாக்குகளை எண்ணுதல் ஆகியவை சட்டப்பேரவைத் தொகுதி அளவில் மேற்கொள்ளப்பட்டு, மக்களவைத் தொகுதி அளவில் ஒன்றிணைக்கப்படுகிறது.

56.34 சதவீத வாக்குகள்


நடந்து முடிந்த மக்களவை வாக்குப்பதிவில் தமிழகத்தில் உள்ள மக்களவைத் தொகுதிகளில் தென் சென்னையில்தான் மிகக் குறைந்த அளவாக 56.34 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

அந்த மக்களவைத் தொகுதியில் இடம்பெற்றுள்ள சட்டப்பேரவை தொகுதி அளவில் பார்க்கும்போது, மாநில அளவில் 54.78 சதவீத வாக்குகளுடன் மயிலாப்பூர் சட்டப்பேரவைத் தொகுதி கடைசி இடத்தைப் பிடித்துள்ளது.

முதல் 10 தொகுதிகள்


குறைவான வாக்குகள் பதிவான முதல் 10 தொகுதிகளில் மயிலாப்பூர் முதலிடத்திலும், சோழிங்கநல்லூர் தொகுதி 2-ம் இடத்திலும், சைதாப்பேட்டை தொகுதி 4-ம் இடத்திலும், தியாகராயநகர் தொகுதி 9-வது இடத்திலும், விருகம்பாக்கம் தொகுதி 10-வது இடத்திலும் உள்ளன.

அறிவுஜீவிகள் பகுதியாக அறியப்படும் மயிலாப்பூர் தொகுதியில் வாக்குப்பதிவு சதவீதம் குறைவாக இருப்பது அந்தத் தொகுதிக்கே அவமானத்தை ஏற்படுத்தியுள்ளது. அத்தொகுதியில் வாக்குப்பதிவு சதவீதம் குறைந்திருப்பது குறித்து, அத்தொகுதி முன்னாள் எம்எல்ஏ எஸ்.வி.சேகர் கூறும்போது, “ஏழை,எளிய மக்களிடம் உள்ள விழிப்புணர்வு, படித்த மற்றும் மேல்தட்டு மக்களிடம் இருப்பதில்லை.

மேலும் அத்தொகுதியில் 1 லட்சத்து 50 ஆயிரம் பிராமணர்கள் உள்ளனர். அவர்களைக் கவரும் வேட்பாளரை தென் சென்னையில் நிறுத்தாததும் அவர்களைக் கவரும்பேச்சாளர்களை பிரச்சாரத்தில் ஈடுபடுத்தாததும் வாக்குப்பதிவு குறைந்ததற்கு முக்கிய காரணமாகும்” என்றார்.

மறுகுடியேற்றம்


மயிலாப்பூர் தொகுதி எம்எல்ஏ ஆர்.நட்ராஜ் கூறும்போது,
“இத்தொகுதியில் 262 வாக்குச்சாவடிகள் உள்ளன. நான் போட்டியிட்டு வென்றபோது 59 சதவீதம் வாக்குகள் பதிவாயின. இத்தொகுதியில் சீனிவாசபுரம் மற்றும் பக்கிங்ஹாம் கால்வாய் கரையோரப் பகுதிகளில் வசித்தோர் பலர் கண்ணகிநகர், செம்மஞ்சேரி பகுதிகளுக்கு மறுகுடியேற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

ஆனால் அவர்களதுஓட்டுரிமை இன்றும் இத்தொகுதியில் உள்ளது. பலர் வீடு மாறி சென்றுள்ளனர். அவர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கவில்லை. அதை முறையாக செய்தால்தான் சரியான வாக்குப்பதிவு சதவீதம் கிடைக்கும்” என்றார்.

மயிலாப்பூர் தொகுதியில் குறைவான வாக்குகள் பதிவாகி இருப்பது தொடர்பாக மயிலாப்பூர் மக்கள் நலச் சங்க செயலர் கே.விஸ்வநாதன் கூறியதாவது:இத்தொகுதியில் அபிராமபுரம், மத்திய அபிராமபுரம், ஜெத்நகர், சி.பி.ராமசாமி சாலை, லஸ்அவென்யூ உள்ளிட்ட பகுதிகளில்குறைவானவர்களே வாக்களிக்கவந்தனர்.

அது குறித்து விசாரித்தபோது, பலர் வாக்களிக்க வராமல் இருந்ததும், பல குடும்பங்கள் அப்பகுதியில் வாக்காளர் அட்டை வைத்துக்கொண்டு, வெளியூருக்கு குடிபெயர்ந்து இருப்பதும் தெரியவந்துள்ளது.

நடவடிக்கை எடுக்க வேண்டும்


வாக்களிப்பது நமது உரிமை, நமது பெருமையும் கூட. அதை செய்யத் தவறுகிறவர்கள் மீது, ஆதார் அட்டை ரத்து போன்ற கடும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

6 மாதங்களுக்கு ஒரு முறை, கணக்கெடுத்து, குறிப்பிட்ட வீடுகளில் வசிக்காதோரை, எத்தகைய பலம் மிக்கவராக இருந்தாலும் வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர்களை நீக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் என்.கோபால்சாமி கூறும்போது, “வாக்களிப்பதற்கான வசதியைத்தான் தேர்தல் ஆணை யம் செய்துக்கொடுக்கும். அவர்கள் வராவிட்டால், தேர்தல் ஆணையம் எதுவும் செய்ய முடியாது.

எந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி களாலும் வாக்காளர்களின் மனதை மாற்ற முடியாது. அவர்களின் உரிமையை உணர்ந்து, அவர்களாக வாக்களிக்க முன்வர வேண்டும்” என்றார்.

மாநில தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ கூறும்போது, “வாக்காளர்கள் வாக்களிக்கவராதது குறித்து பல்வேறு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சொகுசாக இருப்பவர்கள்தான் வாக்களிக்க வருவதில்லை.

வாக்குப்பதிவு குறைவான பகுதிகளில் விழிப்புணர்வு நடவடிக்கைகளை அதிகப்படுத்த இருக்கிறோம். இது ஜனநாயக நாடு. வாக்களிக்காதோர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது” என்றார்.
-
இந்து தமிழ் திசை
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 46439
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12195

View user profile https://rammalar.wordpress.com/

Back to top Go down

விழிப்புணர்வு பிரச்சாரங்கள் செய்தும் சென்னையில் வாக்குப்பதிவு குறைந்தது: கடைசி இடத்துக்கு சென்ற மயிலாப்பூர் பேரவைத் தொகுதி Empty Re: விழிப்புணர்வு பிரச்சாரங்கள் செய்தும் சென்னையில் வாக்குப்பதிவு குறைந்தது: கடைசி இடத்துக்கு சென்ற மயிலாப்பூர் பேரவைத் தொகுதி

Post by பழ.முத்துராமலிங்கம் on Mon Apr 22, 2019 11:18 am

மேற்கோள் செய்த பதிவு: 1296889
மேற்கோள் செய்த பதிவு: 1296889
அதிகம் படித்தவர்கள் வாழும் மயிலை
படித்தவர்கள் அரசியல் என்பது அவர்களுக்கு தேவையற்றது என்று
நினைக்கிறார்கள்.
ஒரு நாட்டில் அரசியல் கட்டமைப்பு சரியில்லை எனில்
அனைவருக்கும் பிரச்சனை தான்
இதில் படித்தவர்கள், பணக்காரர்கள், ஏழைகள் என்ற பாகுபாடில்லை.
எனவே நல்லதொரு ஜனநாயகம் காக்க ஒவ்வொரு நபரும் பொறுப்புணர்ந்து
ஓட்டு போட வேண்டும், இதில் படித்தவர்கள் இதை தட்டிக் கழிப்பது மன்னிக்க
முடியாத குற்றம்.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 12612
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 2916

View user profile

Back to top Go down

விழிப்புணர்வு பிரச்சாரங்கள் செய்தும் சென்னையில் வாக்குப்பதிவு குறைந்தது: கடைசி இடத்துக்கு சென்ற மயிலாப்பூர் பேரவைத் தொகுதி Empty Re: விழிப்புணர்வு பிரச்சாரங்கள் செய்தும் சென்னையில் வாக்குப்பதிவு குறைந்தது: கடைசி இடத்துக்கு சென்ற மயிலாப்பூர் பேரவைத் தொகுதி

Post by பழ.முத்துராமலிங்கம் on Mon Apr 22, 2019 11:18 am


மேற்கோள் செய்த பதிவு: 1296889
அதிகம் படித்தவர்கள் வாழும் மயிலை
படித்தவர்கள் அரசியல் என்பது அவர்களுக்கு தேவையற்றது என்று
நினைக்கிறார்கள்.
ஒரு நாட்டில் அரசியல் கட்டமைப்பு சரியில்லை எனில்
அனைவருக்கும் பிரச்சனை தான்
இதில் படித்தவர்கள், பணக்காரர்கள், ஏழைகள் என்ற பாகுபாடில்லை.
எனவே நல்லதொரு ஜனநாயகம் காக்க ஒவ்வொரு நபரும் பொறுப்புணர்ந்து
ஓட்டு போட வேண்டும், இதில் படித்தவர்கள் இதை தட்டிக் கழிப்பது மன்னிக்க
முடியாத குற்றம்.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 12612
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 2916

View user profile

Back to top Go down

விழிப்புணர்வு பிரச்சாரங்கள் செய்தும் சென்னையில் வாக்குப்பதிவு குறைந்தது: கடைசி இடத்துக்கு சென்ற மயிலாப்பூர் பேரவைத் தொகுதி Empty Re: விழிப்புணர்வு பிரச்சாரங்கள் செய்தும் சென்னையில் வாக்குப்பதிவு குறைந்தது: கடைசி இடத்துக்கு சென்ற மயிலாப்பூர் பேரவைத் தொகுதி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை