உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 11:37 am

» இளைய வயது; பெரிய மனசு!
by ayyasamy ram Today at 11:29 am

» லாஸ்லியாவிற்கு கிடைத்த உயரிய விருது ….!
by ayyasamy ram Today at 11:12 am

» வெங்காய ஜிமிக்கி கம்மலை மனைவிக்கு பரிசாக அளித்த நடிகர்!
by ayyasamy ram Today at 11:11 am

» பெரிய மனசு
by ayyasamy ram Today at 11:10 am

» பொறுமைதான் உண்மையான திறமை..!
by ayyasamy ram Today at 11:08 am

» சான்றாண்மை
by ayyasamy ram Today at 11:07 am

» தமிழ்ச் செம்மல்! – பாராட்டுப் பாமாலை!
by ayyasamy ram Today at 11:06 am

» ஷீரடியில் ஆள் கடத்தல்? ஓராண்டில் 88 பேர் மாயம்
by ayyasamy ram Today at 7:46 am

» பிரிட்டன் தேர்தல்: 15 இந்திய வம்சாவளி எம்.பி.,க்கள் வெற்றி
by ayyasamy ram Today at 7:44 am

» சென்னையில் மூட்டை மூட்டையாக பணம் பறிமுதல்
by ayyasamy ram Today at 7:41 am

» இந்தியாவில் தங்கம் கடத்தல் அதிகரிக்க காரணம் என்ன?
by ayyasamy ram Today at 7:38 am

» சக்திவாய்ந்த 100 பெண்கள் பட்டியலில் நிர்மலா
by ayyasamy ram Today at 7:35 am

» வேலன்:-போல்டர்களை மற்றவர்கள் காப்பி செய்வது மற்றும் டெலிட் செய்வதை தவிர்க்க-Prevent exe
by velang Today at 7:31 am

» குருவிக் கூட்டுக்கும், விதிகளுண்டு!
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» பெரியவா சரணம் !
by T.N.Balasubramanian Yesterday at 8:19 pm

» பிரிட்டனில் தனி மெஜாரிட்டி பெற்றது ஆளுங்கட்சி- போரிஸ் ஜான்சன் மீண்டும் பிரதமர் ஆகிறார்
by ayyasamy ram Yesterday at 6:00 pm

» வயிறு வாழ்த்தும்!
by krishnaamma Yesterday at 2:57 pm

» அந்திம கிரியை!
by krishnaamma Yesterday at 2:55 pm

» கேட்டு ரசித்த திரைப்பட பாடல் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:36 pm

» "வடநாட்டு மார்வாடிக்கு மகாபெரியவா இட்ட கட்டளை!"
by krishnaamma Yesterday at 2:29 pm

» திருமாலிரும் சோலை அழகர் !
by krishnaamma Yesterday at 2:17 pm

» "பேயனும், விளக்கெண்ணையும்"
by krishnaamma Yesterday at 2:04 pm

» பகீரதப் பிரயத்தனம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» மார்கழி மாதத்தின் மகத்துவம் !
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாழ்வில் உயர்வதும், தாழ்வதும் அவரவர் எண்ணத்தைப் பொறுத்ததே..!
by krishnaamma Yesterday at 1:23 pm

» 2 வருடங்கள் நிலாவையே பார்க்காமல் மறைந்து வாழ்ந்த பெண்மணி!
by krishnaamma Yesterday at 1:21 pm

» தெரிந்து கொள்வோம் {ஆன்மீகம்}
by krishnaamma Yesterday at 12:55 pm

» `அந்த விருதாவது ஞாபகமிருக்கிறதா சார்?’ -அமைச்சர் ஜெயக்குமாரை கலாய்த்த நடிகர் சித்தார்த்
by ayyasamy ram Yesterday at 12:54 pm

» விஷ்ணு தீபம் - திருவேங்கடத்தில் மற்றும் ஸ்ரீரங்கத்தில் :)
by krishnaamma Yesterday at 12:50 pm

» ஜல்லிக்கட்டு காளைகள் வளர்க்கும் மதுரை இளம்பெண்: இளங்கலை ஆங்கில இலக்கியம் படித்துவிட்டு விவசாயமும் பார்க்கிறார்
by ayyasamy ram Yesterday at 12:46 pm

» காசி விஸ்வநாதர் கோவிலின் கோடி தீபம்... photos
by krishnaamma Yesterday at 12:33 pm

» முக்தி தரும் காசி
by krishnaamma Yesterday at 12:20 pm

» ராதா பொருள் என்ன?
by krishnaamma Yesterday at 12:14 pm

» கோபுர தரிசனம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:09 pm

» கிறிஸ்துமஸ் போனஸ் ரூ.70 கோடி! இன்ப அதிர்ச்சியில் ஊழியர்கள்
by krishnaamma Yesterday at 11:38 am

» மார்கழி மாத ஆன்மீக தகவல்கள்
by krishnaamma Yesterday at 11:36 am

» திருவாதிரைக் களி
by ayyasamy ram Yesterday at 11:10 am

» சென்னை சா்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும் படங்கள்: முழுப் பட்டியல்!
by krishnaamma Yesterday at 11:08 am

» பஞ்சாப்பைக் கலக்கும் சூப்!
by krishnaamma Yesterday at 10:39 am

» கடந்த 3 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சில்லறைப் பணவீக்கம் அதிகரிப்பு!
by krishnaamma Yesterday at 10:38 am

» நேச நெஞ்சம்- சிறுகதை
by ayyasamy ram Yesterday at 10:32 am

» சினிதுளிகள்- குங்குமம்
by ayyasamy ram Yesterday at 10:28 am

» ஏழு விதமான ஆச்சரியங்கள்
by ayyasamy ram Yesterday at 10:20 am

» சுமங்கலி பெண்கள் கட்டாயம் செய்ய வேண்டிய விளக்கு பூஜை
by ayyasamy ram Yesterday at 9:15 am

» தன்னை உணர்தலே ஆத்ம பலம்! --அர்த்தமுள்ள இந்து மதம் - 63
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ஆறுமுகசாமி கமிஷன் என்ன ஆயிற்று ?
by ayyasamy ram Yesterday at 8:53 am

» நெட்டிசன் நோட்ஸ்: எனை நோக்கி பாயும் தோட்டா -அழகு
by ayyasamy ram Yesterday at 8:47 am

» அறிவியல் களஞ்சியம் அறிவியல் ஆச்சர்யம்
by ayyasamy ram Yesterday at 8:37 am

» பாலியல் வன்கொடுமை குற்றத்துக்கு 21 நாளில் தூக்கு தண்டனை: ஆந்திர அரசு சட்ட மசோதா
by ayyasamy ram Yesterday at 6:01 am

Admins Online

அமமுக பொதுச் செயலாளரானார் டிடிவி தினகரன்: கட்சியாக பதிவு செய்ய நடவடிக்கை

அமமுக பொதுச் செயலாளரானார் டிடிவி தினகரன்: கட்சியாக பதிவு செய்ய நடவடிக்கை Empty அமமுக பொதுச் செயலாளரானார் டிடிவி தினகரன்: கட்சியாக பதிவு செய்ய நடவடிக்கை

Post by ayyasamy ram on Sat Apr 20, 2019 12:05 pm


அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தை அரசியல் கட்சியாக பதிவு செய்யும் நடவடிக்கைகளை அந்தக் கட்சி தொடங்கியுள்ளது. இதற்காக கட்சியின் பொதுச் செயலாளராக டிடிவி தினகரன் வெள்ளிக்கிழமை தேர்வு செய்யப்பட்டார்.

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் நிர்வாகிகள் கூட்டம் சென்னை அசோக் நகரிலுள்ள அந்தக் கட்சியின் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை காலை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. அதுகுறித்து, கட்சியின் செய்தித் தொடர்பாளர் சி.ஆர்.சரஸ்வதி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:-
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தை கட்சியாக பதிவு செய்யும் நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளோம்.

கட்சியின் தலைவராக வி.கே.சசிகலா சென்னை வந்தவுடன் பணியாற்றுவார். அதேசமயம், அதிமுக தொடர்பான வழக்கை சசிகலா தொடர்வார். அமமுகவின் பொதுச் செயலாளராக டிடிவி தினகரன் செயல்படுவார். இதன்மூலம், அமைப்பாக இருந்த நாங்கள் கட்சியாக மாற உள்ளோம்.

அதிமுக விவகாரம்: அதிமுக பொதுச் செயலாளராக சசிகலா ஏற்கெனவே முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்டார். இதன்பின்பு, கட்சி, சின்னம் தொடர்பான வழக்கு விவகாரத்தில் இரண்டையும் தேர்தல் ஆணையம் எங்களுக்கு வழங்கவில்லை. இந்த விவகாரத்தில் மேல்முறையீட்டை சசிகலா மேற்கொள்வார்.

அதிமுகவில் பொதுச் செயலாளருக்கே அதிகாரம் உள்ளது. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற பதவிகளே கிடையாது. எங்களது அமமுக, ஜெயலலிதா பெயரிலேயே உள்ளது. இதுதான் உண்மையான அதிமுக. எங்களுடைய கட்சியைப் பொறுத்தவரை அதிமுகவின் பெயரை நாங்கள் மாற்றி அழைக்கிறோம்.

பாஜக மீது மிகப்பெரிய அளவுக்கு கோபம் உள்ளது. அந்த வகையில், அதிமுக-பாஜக என பொருந்தாத கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. அதிமுகவில் இருக்கக் கூடிய சிறிய அளவிலான தொண்டர்களும் கூட கூட்டணியை விரும்பவில்லை. இதனை தேர்தல் முடிவுகள் நிச்சயம் காட்டும் என்றார் சி.ஆர்.சரஸ்வதி.

அமமுக எப்போது தொடக்கம்: ஆர்.கே.நகரில் கடந்த 2017-ஆம் ஆண்டு நடந்த சட்டப் பேரவை இடைத் தேர்தலில் சுயேச்சையாகப் போட்டியிட்டு வெற்றி பெற்றார், டிடிவி தினகரன்.

இதன்பின்பு கடந்த 2018-ஆம் ஆண்டு மார்ச் மாதம் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் எனும் புதிய அரசியல் அமைப்பை அவர் தொடங்கினார். அதிமுக மற்றும் இரட்டை இலைச் சின்னம் மீட்கப்படும் வரை தனக்கென ஒரு அடையாளம் வேண்டும் என்பதால் அமைப்பைத் தொடங்கியதாகக் கூறியிருந்தார்.

இந்த நிலையில், அமமுகவுக்கு சின்னம் பெறுவது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் கடந்த மாதம் நடந்தது. அதில், அமமுகவை கட்சியாகப் பதிவு செய்யத் தயாராக இருப்பதாக டிடிவி தினகரன் தரப்பில் வாதிடப்பட்டது.

பல்வேறு தரப்பு வாதங்களைக் கேட்ட நீதிமன்றம், அமமுகவை சுயேச்சையாகக் கருதியும் அதேசமயம் பொதுச் சின்னம் வழங்கவும் உத்தரவிட்டது. மக்களவை, 18 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கான தேர்தல் முடிவடைந்த நிலையில் அமமுகவை கட்சியாகப் பதிவு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஒரு மாதத்தில் சின்னம் கிடைக்குமா: கட்சியாகப் பதிவு செய்து ஒரு மாதம் கழித்த பிறகே பொதுவான சின்னம், நட்சத்திர பேச்சாளர்களுக்கு சலுகைகள் போன்றவை கிடைக்கப் பெறும். அந்த வகையில், உடனடியாக அமமுகவை கட்சியாகப் பதிவு செய்தாலும் நிரந்தர சின்னம் என்பது மே 19-ஆம் தேதிக்குப் பிறகே கிடைக்க வாய்ப்புகள் இருக்கின்றன.

திருப்பரங்குன்றம், சூலூர், அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம் ஆகிய தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் வரும் மே 19-இல் நடைபெறுகிறது. இந்தத் தேர்தலுக்கு முன்னதாக அமமுகவுக்கு பொதுச் சின்னம் கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இல்லாவிட்டால் சின்னத்துக்காக மீண்டும் அமமுக நீதிமன்றத்தை நாடும் சூழ்நிலை எழும்.
-
தினமணி
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 50817
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12694

https://rammalar.wordpress.com/

Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை