உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» வலைப்பேச்சு - ரசித்தவை
by ayyasamy ram Today at 8:45 pm

» காது – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:40 pm

» கைதட்டல் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:40 pm

» தும்பிகளற்ற வானம் – கவிதை
by ayyasamy ram Today at 8:37 pm

» நீதிமன்ற ஓட்டுநராக தந்தை; நீதிபதியாகி சாதித்த மகன்
by ayyasamy ram Today at 8:32 pm

» முன்னாள் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி காலமானார்
by கோபால்ஜி Today at 8:08 pm

» '74 வயதாகும் ஒருவரை சுவரேறிக் குதித்து கைதுசெய்ய வேண்டுமா?' - என்.ராம்
by கோபால்ஜி Today at 8:04 pm

» “மம்மி”யுடன் படுத்துறங்க அரிய வாய்ப்பு
by சக்தி18 Today at 7:41 pm

» காதல் ஜோடிகள் -இது உண்மைக் காதல்
by சக்தி18 Today at 7:40 pm

» ரிலக்ஸ் பண்ண – பதில் சொல்ல முடிகிறதா?
by சக்தி18 Today at 7:32 pm

» சென்னையின் 380-வது பிறந்த நாள்; மிக நீண்ட கடற்கரை; உலகின் மிக பழமையான மாநகராட்சி; 2,000 ஆண்டுகள் பழமை
by T.N.Balasubramanian Today at 6:08 pm

» சிக்கலில் ஜெகன்! ஏழுமலையான் பஸ் டிக்கெட்டில் ஜெருசலேம் விளம்பரம்
by ayyasamy ram Today at 5:20 pm

» திரிஷாவுக்கு உதவிய சேதுபதி
by ayyasamy ram Today at 5:04 pm

» குடும்ப உறவுகளை மையப்படுத்தி உருவாகும் படத்தில் அதர்வா
by ayyasamy ram Today at 5:01 pm

» விஜய் சேதுபதியை ரசிக்காதவர்களே இல்லை என்கிறார் தன்‌ஷிகா
by ayyasamy ram Today at 4:57 pm

» வாய்ப்புகளை உருவாக்கிக் கொள்- பொன்மொழிகள்!
by பழ.முத்துராமலிங்கம் Today at 4:34 pm

» பார்த்திபனை பாராட்டிய பாரதிராஜா ‘ஒத்த செருப்பு’ படத்துக்கு விருது
by பழ.முத்துராமலிங்கம் Today at 4:30 pm

» இனி ஸ்பைடர்மேன் படங்கள் வெளிவராது ரசிகர்கள் அதிர்ச்சி
by பழ.முத்துராமலிங்கம் Today at 4:28 pm

» நூலக உறுப்பினர் சேர்க்கை- கின்னஸ் சாதனை
by பழ.முத்துராமலிங்கம் Today at 4:27 pm

» குறைந்த டெஸ்ட் போட்டிகளில் 50 விக்கெட்டுகள் வீழ்த்தி இந்திய வீரர் பும்ரா சாதனை!
by பழ.முத்துராமலிங்கம் Today at 4:24 pm

» பதவியை மறைத்து நிவாரண பணிகளில் ஈடுபட்ட ஐஏஎஸ் அதிகாரி திடீர் ராஜினாமா
by பழ.முத்துராமலிங்கம் Today at 4:22 pm

» ரோஸ் நகரம்
by பழ.முத்துராமலிங்கம் Today at 4:19 pm

» சீனாவில் செயல்படும் அமெரிக்க நிறுவனங்கள் உடனே வெளியேறுமாறு அதிபர் டிரம்ப் உத்தரவு
by பழ.முத்துராமலிங்கம் Today at 4:04 pm

» படித்ததில் வலித்தது!!
by பழ.முத்துராமலிங்கம் Today at 3:54 pm

» அமேசான் காட்டுத் தீயை அணைக்க பிரேசில் நாடு ராணுவத்தை அனுப்பி உள்ளது.
by சக்தி18 Today at 3:29 pm

» அருண் ஜெட்லி மரணம்: பிரதமர்-ஜனாதிபதி மற்றும் தலைவர்கள் இரங்கல்
by M.Jagadeesan Today at 2:58 pm

» லயன் காமிக்ஸ் | Free Download
by prevel Today at 2:39 pm

» சோமேட்டோவைத் தொடர்ந்து சர்ச்சையில் சிக்கிய மெக்டொனால்டு
by சக்தி18 Today at 2:12 pm

» தமிழகத்தில் தீவிரவாதிகள் ஊடுருவல் எச்சரிக்கையை தொடர்ந்து ரயில், விமான நிலையங்களில் பலத்த சோதனைக்கு பின் அனுமதி
by சக்தி18 Today at 2:11 pm

» Rhoneda Byrne எழுதிய புத்தகம் தேவை
by prajai Today at 1:24 pm

» எண்ணங்கள் - டாக்டர் M S உதய மூர்த்தி
by prajai Today at 1:18 pm

» மாநிலங்களவை உறுப்பினராக மன்மோகன் சிங் பதவியேற்பு
by ayyasamy ram Today at 12:43 pm

» மாணவர்களுக்கு சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள உப்பு வழங்கிய விவகாரம்- 2 ஆசிரியர்கள் சஸ்பெண்டு
by ayyasamy ram Today at 12:34 pm

» ஊட்டி மலை ரெயில் தண்டவாளத்தில் செல்பி எடுத்தால் ரூ.2 ஆயிரம் அபராதம்
by ayyasamy ram Today at 12:06 pm

» திரை விமர்சனம் - கென்னடி கிளப்
by ayyasamy ram Today at 11:56 am

» கோகுலாஷ்டமி என்றால் என்ன? கிருஷ்ண ஜெயந்தி என்றால் என்ன?
by ayyasamy ram Today at 11:40 am

» விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் 185-வது திருநாமம். “ஸ்ரீநிவாஸாய நமஹ”
by ayyasamy ram Today at 8:13 am

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Today at 8:06 am

» சார்ஜிங் தொல்லைக்கு தீர்வு: டைப்-சி சார்ஜருடன் வரும் ஐபோன் 11
by ayyasamy ram Today at 7:46 am

» திருவெறும்பூரில் 4வது நாளாக வேலை நிறுத்தம் துப்பாக்கி ஆலை தொழிலாளர்கள் குடும்பத்துடன் நூதன போராட்டம்: யாகம் வளர்த்து வழிபாடு நடத்தியதால் பரபரப்பு
by ayyasamy ram Today at 7:43 am

» மூத்தோர் சொல்லும் முழுமையான ஆரோக்கியமும்
by ayyasamy ram Yesterday at 9:08 pm

» கோமாளி – திரை விமரிசனம்
by ayyasamy ram Yesterday at 9:04 pm

» தினமும் ஏன் இந்த ஓட்டம்...!!
by T.N.Balasubramanian Yesterday at 9:01 pm

» ஆரோக்கியமாக இருக்க கடைபிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Yesterday at 9:01 pm

» மருத்துவர் முதலில் நமது நாக்கைப் பார்ப்பது ஏன்
by ayyasamy ram Yesterday at 8:55 pm

» தேங்காய் போட்டு குழம்பு வைத்த மருமகள்...!!
by ayyasamy ram Yesterday at 8:32 pm

» கை வலிக்குது கைவலிக்குது மாமா
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» பொருளாதார மந்தம்...10,000 ஊழியர்களை நீக்க பார்லே நிறுவனம் முடிவு?!
by பாலாஜி Yesterday at 7:04 pm

» தமிழ்நாட்டில் பயங்கரவாதிகள்
by T.N.Balasubramanian Yesterday at 6:44 pm

» இணைப்பைக் கொடுங்கள்
by T.N.Balasubramanian Yesterday at 5:27 pm

Admins Online

கலைவாணருடன் போட்டி- சின்ன அண்ணாமலை

கலைவாணருடன் போட்டி-  சின்ன அண்ணாமலை Empty கலைவாணருடன் போட்டி- சின்ன அண்ணாமலை

Post by ayyasamy ram on Wed Apr 17, 2019 11:09 am


கலைவாணருடன் போட்டி-  சின்ன அண்ணாமலை Kadhir11
-
கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் அவர்கள் எனது நெருங்கிய
நண்பர். எனது நகைச்சுவைப் பேச்சுகள் அவரை மிகவும்
கவர்ந்திருந்தன. பல ஊர்களுக்கு அவரும் நானும் பிரயாணம்
செய்திருக்கிறோம். பல பொதுக் கூட்டங்களில் கலந்து
கொண்டிருக்கிறோம்.

மகாத்மா காந்தியடிகள் அமரரானபோது சென்னை தியாகராய
நகரிலுள்ள தக்கர் பாபா வித்யாலயத்தில் 30 நாட்கள் பிரார்த்தனைக்
கூட்டம் நடைபெற்றது. 30-ஆவது நாள் கலைவாணரும் நானும்
பேசுவதாக ஏற்பாடு.

மேற்படி கூட்டத்தில் பேசுவதற்காக இருவரும் ஒரே காரில் சென்றோம்.
அப்போது என்.எஸ்.கே. சொன்னார். "இன்று நான் பேசிய பிறகு நீங்கள்
பேச வேண்டும், முடியுமா?' என்றார்.

"முடியும்' என்றேன். "நான் பேசிவிட்டால் கூட்டம் இருக்காதே' என்றார்.
"கூட்டத்தை இருக்கும்படி செய்யலாம்' என்றேன். "தோல்வி அடைவீர்கள்'
என்றார். "பார்க்கலாம்' என்றேன்.

"நான் பேசிய பிறகு கூட்டத்தை நிறுத்தி வைத்து அரை மணி நேரம்
நீங்கள் பேசினால் ரூ.1000/- தருகிறேன்' என்றார்.

"ரூபாய் ரெடியாக இருக்கட்டும்' என்றேன்.

இருவரும் கூட்டத்திற்குச் சென்றோம். சுமார் 3000 பேர் கூடியிருந்தனர்.
பிரார்த்தனை முடிந்ததும் ஏற்கெனவே நாங்கள் திட்டமிட்டபடி
கலைவாணர் என்.எஸ்.கே. பேசினார். அரை மணி நேரம் மிக
உருக்கமாகப் பேசினார். இயற்கையாக அவருக்குள்ள நகைச்சுவையும்
ஆங்காங்கே வெளிப்பட்டது.

அவர் பேசி முடிந்ததும் கண் மூடிக் கண் திறப்பதற்குள் நான் எழுந்து
கம்பீரமான குரலில் ""சங்க நாதம் கேட்குது, சாந்த காந்தி சத்தியத்தின்
சங்க நாதம் கேட்குது'' என்று பாட ஆரம்பித்தேன்.

எதிர்பாராதவிதமாக இப்படி நான் திடீரென்று பாட ஆரம்பித்ததும்
சபை அப்படியே நிசப்தமாகி வெகு கூர்மையுடன் என் பாட்டை கேட்டுக்
கொண்டிருந்தது. பாட்டுப் பாடி முடிய பத்து நிமிடங்கள் ஆயின.
பாட்டு முடிந்ததும் பலத்த கரகோஷம், அடுத்த விநாடி மக்களைப்
பார்த்து நான் ஒரு கேள்வி கேட்டேன்.

""உங்களில் யார் யார், காந்தி பக்தர்கள் தயவுசெய்து கையைத் தூக்குங்கள்
பார்க்கலாம்'' என்றேன். அனைவரும் கை தூக்கினார்கள். ""அப்படியானால்
காந்தியடிகள் பிரார்த்தனை செய்தது போல் நாமும் கூட்டுப் பிரார்த்தனை
செய்யலாமா?'' என்று கேட்டேன்.

அனைவரும் ஒரே குரலில் ""சரி''யென்றார்கள். ரகுபதி ராகவ ராஜாராம்
பிரார்த்தனை பத்து நிமிடம் நடத்தினேன். அதன் பின்னர், மக்களிடம்
சொன்னேன்.

""கலைவாணர் என்.எஸ்.கே. அவர்கள் உங்களை மிகவும் நேசிக்கிறார்.
அதைப் போலவே நீங்களும் அவரை நேசிக்கிறீர்கள். அதனால் நான்
அவரிடம் சொன்னேன். ""நீங்கள் முதலில் பேசிவிட்டால் மக்கள் கலைந்து
விடுவார்கள். ஆகவே நான் முதலில் பேசி விடுகிறேன்'', என்று கேட்டுக்
கொண்டேன். அதற்கு அவர், ""நீங்கள் நினைப்பது தவறு. இன்று கூட்டத்திற்கு
வருபவர்கள் எனக்காகவும், உங்களுக்காகவும் வருபவர்கள் அல்ல; காந்தி
மகாத்மாவின் பக்தர்கள். ஆகவே கூட்டம் முடியும் வரையில் இருப்பார்கள்''
என்று சொன்னார்.

அவர் சொன்னதை நம்பித்தான் நானும் அவர் பேசிய பிறகு பேசிக்
கொண்டிருக்கிறேன். ""நீங்கள் கலைவாணர் சொல்லியபடி கடைசி
வரையில் இருப்பீர்களா?'' என்று கூட்டத்தைப் பார்த்துக் கேட்டேன்.

""கண்டிப்பாக இருக்கிறோம்'' என்று ஏகோபித்த குரலில் மக்கள் பதில்
கொடுத்தார்கள். உடனே என்.எஸ்.கே. எழுந்து அவருக்கும் எனக்கும்
ஏற்பட்ட பந்தயத்தைப் பற்றி மக்களிடம் விளக்கிச் சொல்லி,

""பந்தயத்தில் சின்ன அண்ணாமலை ஜெயித்து விட்டார். நான் சொன்னபடி
ரூ.1000-த்தை இப்போதே கொடுக்கிறேன்'' என்று பணத்தைக் கொடுத்தார்.
நான் அதை வாங்கி தக்கர் பாபா வித்யாலயத்திற்கு நன்கொடையாக
வழங்கினேன்.
-
-----------------------------------------------------------
சொன்னால் நம்பமாட்டீர்கள்! - 24
தினமணி கதிர்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 47544
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12267

View user profile https://rammalar.wordpress.com/

Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை