உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» படமும் செய்தியும் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 1:15 pm

» இந்தியாநீதித்துறை கடும் அச்சுறுத்தலுக்கு ஆளாகியுள்ளது : பாலியல் புகார் குறித்து தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் விளக்கம்!
by ayyasamy ram Today at 1:02 pm

» பூந்தி லட்டு
by ayyasamy ram Today at 12:57 pm

» உடம்புல ஒரு கரும்புள்ளி. அது என்ன?
by ayyasamy ram Today at 12:54 pm

» தாய்லாந்தில் கடலுக்குள் வீடு கட்டிய காதல் ஜோடி - மரண தண்டனைக்கு வாய்ப்பு
by ayyasamy ram Today at 12:45 pm

» நிதிஷ் ரானா, ரசல் அதிரடி வீண் - கொல்கத்தாவை 10 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி திரில் வெற்றி பெற்றது பெங்களூர்
by ayyasamy ram Today at 12:43 pm

» இந்தாண்டு 14 பொருட்களுக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது
by ayyasamy ram Today at 12:24 pm

» நாளை நிழல் இல்லா நாள்: புதுச்சேரியில் கண்டு ரசிக்க ஏற்பாடு
by ayyasamy ram Today at 12:17 pm

» சிவகார்த்திகேயன் படம்: வெளியீட்டுத் தேதியில் மாற்றம்!
by ayyasamy ram Today at 12:14 pm

» நுங்கம்பாக்கம் தொழிற்சாலையில் தீ விபத்து
by ayyasamy ram Today at 12:11 pm

» சட்டப்பேரவைத் தேர்தலை சந்திக்கத் தயார்: நடிகர் ரஜினிகாந்த்
by ayyasamy ram Today at 12:08 pm

» அமமுக பொதுச் செயலாளரானார் டிடிவி தினகரன்: கட்சியாக பதிவு செய்ய நடவடிக்கை
by ayyasamy ram Today at 12:05 pm

» இடைத்தேர்தல்: 4 தொகுதிகளுக்கான திமுக பொறுப்பாளர்கள் நியமனம்
by ayyasamy ram Today at 12:01 pm

» நாடு முழுவதும் ஒரே அவசர உதவி எண் 112 : 20 மாநிலங்களில் அமல்
by ayyasamy ram Today at 11:34 am

» புத்தகப்பிரியன்
by புத்தகப்பிாியன் Today at 6:13 am

» புத்தகப்பிரியன்
by புத்தகப்பிாியன் Today at 6:10 am

» புத்தகப்பிரியன்
by புத்தகப்பிாியன் Today at 6:06 am

» பாஜகவுக்கு வாக்களித்ததால் விரலையே வெட்டிக்கொண்ட தலித் இளைஞர்
by கோபால்ஜி Yesterday at 4:33 pm

» புன்னகைத்துப் பாருங்கள்...!!
by ayyasamy ram Yesterday at 3:51 pm

» நாட்டு நடப்பு -படமும் செய்தியும்
by ayyasamy ram Yesterday at 3:48 pm

» வாழ்க்கையை வாழும்போதே ரசித்து வாழுங்கள்...!!
by ayyasamy ram Yesterday at 3:43 pm

» கவிதை தூறல்...
by ayyasamy ram Yesterday at 2:52 pm

» குழந்தைகளுக்கு கற்றுக்கொடுக்க….(டிப்ஸ்)
by ayyasamy ram Yesterday at 2:44 pm

» கோபுர தரிசனம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:32 pm

» செய்திகள்
by சிவனாசான் Yesterday at 1:51 pm

» அக்காவும், அப்பாவும், காங்., மகனும், மருமகளும், பா.ஜ.
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாங்கள் என்ன நாற்றமடிக்கிறோமா? - பாஜக வேட்பாளர் ஹேமமாலினியைச் சாடிய விவசாயி
by ayyasamy ram Yesterday at 12:51 pm

» பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியீடு
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» சசி இயக்கும் சிவப்பு மஞ்சள் பச்சை: ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!
by ayyasamy ram Yesterday at 12:13 pm

» தேர்தல் முடிந்த பிறகு வெளியாகும் 3 தமிழ்ப் படங்கள்!
by ayyasamy ram Yesterday at 12:11 pm

» வெஜ் பேலியோ பா.ராகவன்
by kuloththungan Yesterday at 12:08 pm

» திருக்கழுக்குன்றம்:-ஒளிமயமான எதிர்காலம்.-ஜிதமிழ் தொலைக்காட்சியில்.
by velang Yesterday at 8:16 am

» பஞ்சராக்ஷரம் - திரைப்படம்
by krishnaamma Yesterday at 12:44 am

» பூரிராம் கெமர் திருவிழா, தாய்லாந்து!
by krishnaamma Thu Apr 18, 2019 10:09 pm

» கேட்டு ரசித்த பாடல்கள் - காணொளி - தொடர் பதிவு
by krishnaamma Thu Apr 18, 2019 9:47 pm

» காய்கறி ஓவியங்கள் !
by krishnaamma Thu Apr 18, 2019 9:45 pm

» கண்கவர் அந்தமான் போட்டோக்கள் ! by Krishnaamma !
by krishnaamma Thu Apr 18, 2019 9:43 pm

» சித்திரை திருவிழாவின் உச்சமாக இன்று ஸ்ரீ மதுரை மீனாட்சி - சுந்தரரேஸ்வர் திருக்கல்யாணம்
by krishnaamma Thu Apr 18, 2019 9:31 pm

» திரை விமர்சனம் - Shazam!
by krishnaamma Thu Apr 18, 2019 9:21 pm

» தமிழ் மின் புத்தகங்கள்
by krishnaamma Thu Apr 18, 2019 9:17 pm

» அனைவருக்கும் ஒரு அன்பான வேண்டுகோள்.....
by krishnaamma Thu Apr 18, 2019 9:13 pm

» ஒரே நாளில் இரு இளம் நடிகைகள் கார் விபத்தில் மரணம்... டோலிவுட் அதிர்ச்சி!
by krishnaamma Thu Apr 18, 2019 9:13 pm

» நான் ரசித்த ஒரு வாட்சப் நகைச்சுவை
by krishnaamma Thu Apr 18, 2019 9:12 pm

» வாக்களித்த பிரபலங்கள்
by krishnaamma Thu Apr 18, 2019 9:11 pm

» சித்ரா பௌர்ணமி ஸ்பெஷல்
by krishnaamma Thu Apr 18, 2019 9:09 pm

» சித்ராபவுர்ணமி விரதம்இருப்பது எப்படி?
by krishnaamma Thu Apr 18, 2019 9:07 pm

» சித்ரா பெளர்ணமியில் மா, பலா, வாழை!
by krishnaamma Thu Apr 18, 2019 9:05 pm

» வாழ்த்தலாம் வாங்க ராம் அண்ணா 44000 பதிவுகள் கடந்துவிட்டார் !
by krishnaamma Thu Apr 18, 2019 9:02 pm

» மோடி ஹெலிகாப்டரை சோதனை செய்த தேர்தல் அதிகாரி சஸ்பெண்ட்: தேர்தல் ஆணையம் கடும் நடவடிக்கை
by ayyasamy ram Thu Apr 18, 2019 7:52 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு
by ayyasamy ram Thu Apr 18, 2019 7:40 pm

Admins Online

கர்நாடகாவில் மணமகன்- மணமகள் இருவரும் தாலி கட்டிக்கொள்ளும் சமத்துவத் திருமணம்

கர்நாடகாவில் மணமகன்- மணமகள் இருவரும் தாலி கட்டிக்கொள்ளும் சமத்துவத் திருமணம் Empty கர்நாடகாவில் மணமகன்- மணமகள் இருவரும் தாலி கட்டிக்கொள்ளும் சமத்துவத் திருமணம்

Post by ayyasamy ram on Thu Mar 21, 2019 2:19 pm

கர்நாடகாவில் மணமகன்- மணமகள் இருவரும் தாலி கட்டிக்கொள்ளும் சமத்துவத் திருமணம் _106032472_94ce452b-7569-4cb7-894d-b1374af62f3b
-
கர்நாடகாவில் மணமகன்- மணமகள் இருவரும் தாலி கட்டிக்கொள்ளும் சமத்துவத் திருமணம் _106032473_527a9d23-e9dd-462c-8673-9f6d73c3e96a
-
படத்தின் காப்புரிமை BARAGUNDI பேமிலி
-
-----------------------

கர்நாடகாவின் விஜயபுரா மாவட்டத்தில் நடைபெற்ற ஒரு
திருமணத்தின் போது, மனமகனுக்கு மணப்பெண் தாலி
கட்டியது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

முத்தேபிஹல் தாலுக்காவின் நலட்வாட் கிராமத்தில் நடைபெற்ற
இந்த திருமண நிகழ்வினை அசாதாரணமான ஒன்றாக மக்கள்
பார்க்கின்றனர் என உள்ளூர் ஊடகங்கள் செய்தி
வெளியிட்டிருந்தன.

ஆனால், தங்கள் குடும்பத்திற்கு இது ஒன்றும் புதிதல்ல என்கிறார்
கர்நாடக அரசு அதிகாரியான அஷோக் பரகுன்டி.

"இதில் அசாதாரணமாக ஒன்றும் இல்லை. எங்கள் குடும்பத்தில்
இவ்வாறு பல திருமணங்கள் நடைபெற்றுள்ளன" என்று பிபிசி
இந்தியிடம் பேசிய அஷோக் தெரிவித்தார்.

திருமணத்தில் என்ன நடந்தது?

மண்டபத்தில் 12ஆம் நூற்றாண்டின் சமூக சீர்திருத்தவாதியான
பசவன்னா சிலைக்கு அருகில் இருந்த திருமண மேடையில்,
இரண்டு மணமகன்கள் மற்றும் மணமகள்கள் அமர்ந்திருந்தனர்.

அந்த சிலைக்கு அருகில், இல்கல் ஸ்ரீ மஹந்தேஷ்வரா சம்ஸ்தானா
மடத்தின் குருமஹந்த் சுவாமிஜி அமர்ந்திருந்தார்.

இரண்டு மணமகன்கள் கைகளிலும் இரண்டு விவாக முத்ராக்கள்
(ருத்ராட்சத்தினால் செய்யப்பட்டது) கொடுக்கப்பட்டன.
இது இந்தியாவின் மற்ற பகுதிகளில் கட்டப்படும் தாலிக்கு சமமானது.

மணமகன்கள் அவற்றை அவர்களுக்கான மணப்பெண்கள்
கழுத்தில் கட்டினார்கள்.

அதனைத் தொடர்ந்து. மணமகள்கள் கையிலும் விவாக முத்ராக்கள்
கொடுக்கப்பட்டன. அதை அவர்கள் மணமகன்கள் கழுத்தில்
கட்டினார்கள்.

பின்னர் மலர் மாலை மாற்றிக் கொண்ட இத்தம்பதியினர்,
சுவாமிஜியுடன் எழுந்து நின்று உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
சுவாமிஜி சொல்ல சொல்ல, அதனை இந்த தம்பதியினரும் திருப்பி
சொன்னார்கள்.
-
-----------------------
-
"இந்த திருமணம் திருமணத்துக்கான உறவு மட்டும் கிடையாது

இது இதயங்களின் அன்பும் ஆன்மீக புரிதலும்.

நாம் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு, ஒன்றுபட்டு வாழ்வோம்.

சமுதாயத்திற்கு நாம் மகிழ்ச்சியையும் ஆறுதலையும் கொண்டு
சேர்ப்போம்.

மேலும், தர்மம், தேசியம், சுற்றுச்சூழல் மற்றும் குடும்பத்தில்
அமைதி குறித்து உணர்வுடன் இருப்போம்.

பொறாமை, மூடநம்பிக்கை, குருட்டு நம்பிக்கை மற்றும் சூனியம்
ஆகியவற்றில் இருந்து தள்ளியிருப்போம்.

மற்றவர்களின் பணத்திற்கு ஆசைப்படாமல் வாழ்வோம்.

பேராசை, தவறான நடத்தை, தீய பழக்கங்கள் போன்றவற்றை
விடுத்து, நல்ல வழியை தேர்ந்தெடுப்போம்.

பசவா மற்றும் பிற மத குருக்களின் போதனைகள் படி, அறிவு,
சடங்குகள், அனுபவங்கள் ஆகியவற்றால் நிறைந்த ஒரு
வாழ்க்கையை நாம் வாழ்வோம்.

தரம்குரு பசவன்னாவுடன் மொத்த ஷரனா சமூகத்திற்கும்
முன்பாக நாம் இந்த உறுதிமொழியை ஏற்றுக் கொள்வோம்.

ஜெய் குரு பசவன்னா ஷரணு ஷர்னதி"
-
-------------------------
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 44263
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 11780

View user profile https://rammalar.wordpress.com/

Back to top Go down

கர்நாடகாவில் மணமகன்- மணமகள் இருவரும் தாலி கட்டிக்கொள்ளும் சமத்துவத் திருமணம் Empty Re: கர்நாடகாவில் மணமகன்- மணமகள் இருவரும் தாலி கட்டிக்கொள்ளும் சமத்துவத் திருமணம்

Post by ayyasamy ram on Thu Mar 21, 2019 2:19 pm

இந்த உறுதிமொழியை தொடர்ந்து, சாதாரண வழக்கம்
போல அட்சதையை தூவாமல், திருமணத்துக்கு
வந்திருந்தவர்கள் தம்பதிகள் மீது மலர்களை தூவி
ஆசிர்வதிக்கின்றனர்.

அதோடு, திருமண விழா முடிகிறது. மணமக்கள் தீயை
சுற்றிவரும் நிகழ்வெல்லாம் இல்லை. மேலும், இத்திருமணம்
நடக்க நல்ல நேரம் என்றும் ஏதுமில்லை.

பரகுன்டி மற்றும் டுடாகி குடும்பத்தினரின் இந்த வழக்கம்,
பசவன்னாவை பின்பற்றும் பெரும்பாலான பாரம்பரிய
லிங்காயத் மக்களுக்கு புதிதல்ல.

மும்பை - கர்நாடகா மற்றும் ஹைதராபாத் - கர்நாடகா
போன்ற பகுதிகளில் இந்த வழக்கத்தினை லிங்காயத்
சமூகத்தினர் பின்பற்றி வருகின்றனர்.

இல்கல் மடத்தின் மறைந்த மஹாந்த் சுவாமிகள்
சித்தரகியை பின்பற்றுபவர்கள் இதனை வழக்கமாக
கொண்டுள்ளனர்.

"அவர் வரதட்சணையை எதிர்த்து பிரச்சாரம் செய்ததோடு,
12ஆம் நூற்றாண்டில் பசவன்னாவின் போதனைகளையும்
பின்பற்றினார். பெண்களை தானமாக கொடுப்பதில்
அவருக்கு நம்பிக்கையில்லை.

அதனால், திருமணத்தில் கன்னியாதானம் என்ற சடங்கு
இருக்காது. அவ்வாறு பெண்களை தானமாக கொடுத்தால்,
அவர் மனிதர் என்ற மரியாதையை இழந்துவிடுகிறார்.

இதனால், ஆண்கள் அவர்களிடம் தவறாக நடந்து கொள்ளும்
சூழல் உருவாகிறது" என்கிறார் குருமஹன்ந் சுவாமிஜி.

"இந்த வழக்கத்தை கடந்த இரண்டு, மூன்று தசாப்தங்களாக
பின்பற்றுகிறோம். என் உறவினர்கள் அவ்வாறுதான் திருமணம்
செய்து கொண்டார்கள். என் மகள் பூஜாவும் அப்படித்தான்"
என்று அஷோக் தெரிவித்தார்.
-
--------------
மற்ற சமூகங்களில் பெண்கள் எப்போதும் திருமாங்கல்யம்
அணிவது போல, அமித் மரகுன்டி எப்போதும் இந்த விவாக
முத்ராவை அணிவாரா?

"ஆம். நான் அணிந்து கொள்வேன். ஆண் பெண் இருவரும்
சமம் என்று இந்த வழக்கம் காண்பிக்கிறது. இந்த விவாக
முத்ராவை அணிந்திருப்பதால் ஆண்களுக்கு எந்த
அழுத்தமும் கிடையாது. எல்லாம் கணவன் மனைவிக்கு
இடையே உள்ள புரிதல்தான்" என்று ஆஸ்திரேலியாவில்
மென்பொருள் பொறியாளராக உள்ள அமித் பரகுன்டி
தெரிவிக்கிறார்.

அமித் மற்றும் பிரியா ஆகியோர் வெவ்வேறு சாதியி
னர் என்றாலும், அவர்கள் காதலுக்கு பெற்றோர் சம்மதம்
கிடைத்தது.

"இது ஒரு சிறந்த அனுபவம். என் கணவரின் பெற்றோர்,
ஆண் - பெண் இருவரும் சமம்தான் என்று
நிரூபித்திருக்கிறார்கள். முதலில் பெண்கள் விவாக முத்ராவை
ஆண்களுக்கு கட்ட வேண்டும் என்ற வழக்கம் வியப்பாக
இருந்தது" என்று பரியா கூறுகிறார்.

அமித் எப்போதும் விவாக முத்ராவை அணிந்து கொள்வார்
என்பதை எப்படி உறுதி செய்யப்போகிறார் பிரியா?

"அமித் எப்போதும் அணிந்து கொள்வார். எனக்கு சத்தியம்
செய்து கொடுத்திருக்கிறார்" என்றார் பிரியா.
-
----------------------
நன்றி-பிபிசி தமிழ்


Last edited by ayyasamy ram on Thu Mar 21, 2019 8:13 pm; edited 1 time in total
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 44263
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 11780

View user profile https://rammalar.wordpress.com/

Back to top Go down

கர்நாடகாவில் மணமகன்- மணமகள் இருவரும் தாலி கட்டிக்கொள்ளும் சமத்துவத் திருமணம் Empty Re: கர்நாடகாவில் மணமகன்- மணமகள் இருவரும் தாலி கட்டிக்கொள்ளும் சமத்துவத் திருமணம்

Post by பழ.முத்துராமலிங்கம் on Thu Mar 21, 2019 5:17 pm

தாலியை புனிதமாக நினைத்து ஏற்றுக்
கொள்வது வியப்பாக உள்ளது.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 12270
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 2726

View user profile

Back to top Go down

கர்நாடகாவில் மணமகன்- மணமகள் இருவரும் தாலி கட்டிக்கொள்ளும் சமத்துவத் திருமணம் Empty Re: கர்நாடகாவில் மணமகன்- மணமகள் இருவரும் தாலி கட்டிக்கொள்ளும் சமத்துவத் திருமணம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை