உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» கருத்துக் கணிப்புகளை எப்போது வெளியிடலாம்: தமிழக தேர்தல் துறை தகவல்
by சிவனாசான் Today at 9:43 pm

» வயதாகும்போது கண்ணும் காதும் முதலில் செயலிழப்பது ஏன்?
by Dr.S.Soundarapandian Today at 7:49 pm

» தொப்புளில் எண்ணை போடுங்கள்!
by Dr.S.Soundarapandian Today at 7:48 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு
by Dr.S.Soundarapandian Today at 7:45 pm

» உலகைச் சுற்றி...
by Dr.S.Soundarapandian Today at 7:43 pm

» மருத்துவ குறிப்புகள் - தொடர் பதிவு
by Dr.S.Soundarapandian Today at 7:42 pm

» ‘குஞ்சுண்ணி’ எழுதிய இரண்டு கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 7:41 pm

» மைக்ரோ கதை
by Dr.S.Soundarapandian Today at 7:39 pm

» பேல்பூரி - தினமணி கதிர்
by ayyasamy ram Today at 2:47 pm

» மணமகனுக்கு தர்மசங்கடம்: ரூ.80 ஆயிரம் இழப்பீடு தருகிறது ரெய்மண்ட் துணிக்கடை
by ayyasamy ram Today at 11:29 am

» ஐபிஎல் 2019 : தில்லியை வெல்லுமா சென்னை? இன்று மோதல்
by ayyasamy ram Today at 10:48 am

» பஞ்சாப் வெற்றி: கெயில் அதிரடி 79
by ayyasamy ram Today at 10:45 am

» உணர்வுகளும் நினைவுகளும் புத்தகம் தேவை
by Guest Today at 10:06 am

» மன்கட் முறையில் அவுட்டான பட்லர் - அஸ்வின் செய்தது சரியா... ஐசிசி விதி சொல்வது என்ன?
by ayyasamy ram Today at 9:28 am

» இ-சிகரெட்டுகளுக்கு நிரந்த தடை கோரி பிரதமர் மோடிக்கு 1000 டாக்டர்கள் கடிதம்
by ayyasamy ram Today at 8:55 am

» பிரபஞ்சத்தில் அணுக்களின் நிறை என்ன?
by ayyasamy ram Today at 8:44 am

» #திருக்கழுக்குன்றம்:-#அருள்மிகு #வீரபத்திரருக்கு அமைந்துள்ள கோயில்கள்.
by velang Today at 7:40 am

» வேலன்:-எம்பி3 பாடல்களை வெட்ட.சேர்க்க Ablessoft -MP3 Cutter
by velang Today at 7:37 am

» ஒற்றுமையாய் வாழ்வதாலே உண்டு நன்மையே- சினிமா பாடல் காணொளி
by ayyasamy ram Yesterday at 3:56 pm

» சிறிய இடைவேளைக்குப் பின் - குறும்படம்- காணொளி
by ayyasamy ram Yesterday at 3:00 pm

» தினத்தந்தி ஆதிச்சநல்லூர்
by kuloththungan Yesterday at 1:25 pm

» தமிழ் ஈ பப் புத்தகங்கள் ஈகரை வெப் இல் எப்படி டவுன்லோட் செய்வது என்று தயவுசெய்து கூறுங்கள்
by aeroboy2000 Yesterday at 11:28 am

» யாரோவாகிப் போன அவள்..கவிதை-(பிரியா ஸ்ரீதர் )
by aeroboy2000 Yesterday at 10:52 am

» ஐ.பி.எல். கிரிக்கெட்: மும்பையை வீழ்த்தியது டெல்லி ரிஷாப் பான்ட் 18 பந்தில் அரைசதம் விளாசினார்
by ayyasamy ram Yesterday at 9:34 am

» கேள்வியும் நானே .. பதிலும் நானே . -வெ.இறையன்பு
by ayyasamy ram Yesterday at 9:27 am

» காலச்சக்கரம் நரசிம்மா எழுதிய 'அத்திமலைத்தேவன்'
by HariSkumar Yesterday at 9:19 am

» யாரோவாகிப் போன அவள்..கவிதை
by ayyasamy ram Yesterday at 9:04 am

» “தமிழனின் அன்பாலும், ஆசியாலும் கண்கலங்கினேன்” சென்னை பவுலர் ஹர்பஜன்சிங் உருக்கம்
by ayyasamy ram Yesterday at 9:01 am

» காங்கிரஸ் சார்பில் சிவகங்கை தொகுதியில் கார்த்தி சிதம்பரம் போட்டி
by ayyasamy ram Yesterday at 8:43 am

» இந்தியாவின் மூத்த வாக்காளர் விளம்பர துாதராக நியமனம்
by ayyasamy ram Yesterday at 8:01 am

» Dr. கவிதாசன் - புத்தகம் தேவை
by ManiThani Sun Mar 24, 2019 9:46 pm

» சுடுகாட்டில் தியானம் செய்தோ, கிளி ஜோசியத்தை நம்பியோ நான் அரசியல் செய்யவில்லை -ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்
by ayyasamy ram Sun Mar 24, 2019 5:40 pm

» வாரணாசி நாடாளுமன்ற தொகுதியில் மோடியை எதிர்த்து 111 தமிழக விவசாயிகள் போட்டி
by ayyasamy ram Sun Mar 24, 2019 5:38 pm

» அஜித் பட பாணியில் சிஎஸ்கே அணியினர் ! வைரலாகும் மாஸ் புகைப்படம்
by ayyasamy ram Sun Mar 24, 2019 1:25 pm

» மதுக்கடைகளை 3 நாள் மூட உத்தரவு: குடிமகன்கள் அதிர்ச்சி
by ayyasamy ram Sun Mar 24, 2019 1:22 pm

» அதிக கட்டண வசூலில் சென்னை விமான நிலைய மெட்ரோ ரயில் நிலையம் முதலிடம்
by ayyasamy ram Sun Mar 24, 2019 1:12 pm

» இது ஆந்திரா அக்கப்போர்! ரூ.895 கோடி சொத்து உள்ள வேட்பாளருக்கு சொந்தமாக ஒரு கார் கூட இல்லையாம்.. -
by ayyasamy ram Sun Mar 24, 2019 1:10 pm

» வெற்றியுடன் தொடங்கியது சென்னை சூப்பர் கிங்ஸ் ஐ.பி.எல். கிரிக்கெட்: பெங்களூருவை 70 ரன்னில் சுருட்டியது
by ayyasamy ram Sun Mar 24, 2019 12:33 pm

» வந்து விட்டது, 'ஹெலி டூரிசம்!'
by சக்தி18 Sun Mar 24, 2019 12:17 pm

» புள்ளிகளால் ஆன ஏரி!
by சக்தி18 Sun Mar 24, 2019 12:09 pm

» அப்படி என்ன இருக்கிறது இலக்கம் 11 இல்?
by சக்தி18 Sun Mar 24, 2019 12:04 pm

» ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2019 10:33 am

» அட்சயபாத்திரம் எப்படி செயல்படுகிறது?
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2019 10:32 am

» பாலைவனச் சோலை!
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2019 10:27 am

» தண்டனை! - கவிதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2019 10:25 am

» காரைக்கால் அம்மையார் கோயிலில் ஐக்கியப் பெருவிழா
by ayyasamy ram Sun Mar 24, 2019 9:55 am

» ஏப்ரல் மாதம் திருப்பதிக்கு செல்வோரின் கவனத்திற்கு!
by ayyasamy ram Sun Mar 24, 2019 9:48 am

» 2019-ல், அதிக முதல் நாள் வசூலைக் கண்ட ஹிந்திப் படம்!
by ayyasamy ram Sun Mar 24, 2019 9:44 am

» விவேக் கதாநாயகனாக நடிக்கும் வெள்ளைப்பூக்கள்: ஏப்ரல் வெளியீடு!
by ayyasamy ram Sun Mar 24, 2019 9:40 am

» உடலின் பாதிப்புக்கு கை விரல் வைத்தியம்!
by ayyasamy ram Sun Mar 24, 2019 6:06 am

Admins Online

நான்காம் விதி என்ற குறும்படத்தின் விமர்சனம்.

நான்காம் விதி என்ற குறும்படத்தின் விமர்சனம்.

Post by ayyasamy ram on Sun Feb 17, 2019 3:49 pm


-
நான்காம் விதி என்ற குறும்படத்தின் விமர்சனம்.

இரண்டரை மணி நேரமாக விரித்துச் சொல்ல
வேண்டிய படத்தை நறுக்கெனக் குறள் போல
படைத்திருக்கிறார்கள்.

மெகா பட்ஜெட் கமர்ஷியல் திரைப்படங்கள் ஓடும் சத்யம்
திரையரங்கில் ஒரு குறும்படமும் வெளியிடப்படுகிறது'
என்கிற தகவலைக் கேட்டதும், ஆஜர் ஆனோம்.

இந்த ‘நான்காம் விதி’ என்கிற குறும்படத்தை
இயக்கியிருக்கிறார், அனுசத்யா.

`காதலுக்காகக் காதலியையே இழக்கலாம்' என்ற
கல்யாணப் பரிசு காலத்துக் கதைதான், `நான்காம் விதி'.
ஆனால், அதைச் சொல்லியிருக்கும் விதம் நச்!

மிக நேர்த்தியான திரைக்கதையால் பின்னப்பட்டிருக்கிறது
படம். ஓர் இளைஞர், ஒரு மாற்றுத்திறனாளி, ஒரு திருநங்கை,
ஒரு பெண் நிருபர்... இவர்களுக்கு அவ்வப்போது வரும்
கனவுத் துணுக்குகள் ஒரு சங்கிலி போல் இணைந்து,
ஒரு விபரீதம் நிகழவிருப்பதை சூசகமாகச் சுட்டிக் காட்டுகிறது.

அந்த விபரீதத்தைத் தடுக்க அந்த நால்வரும் இணைகிறார்கள்.
இவர்களுடன் ஐந்தாவதாக ஒரு புகைப்படக் கலைஞரும்
யதேச்சையாக இணைந்துகொள்ள, படம் வேகமெடுக்கிறது.

கனவின் க்ளைமாக்ஸாகத் தோன்றும் ஒரு கொலையும்,
தற்கொலையும் தடுக்கப்படுகிறதா என்பதே இந்தப் படத்தின்
க்ளைமாக்ஸ்.
-
-----------------------------
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 43743
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 11766

View user profile https://rammalar.wordpress.com/

Back to top Go down

Re: நான்காம் விதி என்ற குறும்படத்தின் விமர்சனம்.

Post by ayyasamy ram on Sun Feb 17, 2019 3:53 pmவெறும் ஆக்‌ஷன் த்ரில்லர் என்றோ, அறிவியல் புனைவுப்
படம் என்றோ மட்டும் எண்ணிவிடாமல், படத்தின்
ஊடாக இடம்பெறும் ஓர் அழகிய காதலும், எது நல்ல காதல்
என்று இறுதியில் வைக்கப்படும் ஒரு மெசேஜும் படத்தைத்
தூக்கி நிறுத்துகின்றன.

தினந்தோறும் வெளியாகும் ஒருதலைக் காதல் தொடர்பான
கொலை மற்றும் தற்கொலைச் செய்திகள், பயத்தையும்
சமுதாயம் குறித்த கவலையையும் உருவாக்கி வரும் சூழலில்
இது போன்ற ஒரு படம் காலத்தின் தேவை!

இரண்டரை மணி நேரமாக விரித்துச் சொல்ல வேண்டிய
படத்தை நறுக்கெனக் குறள் போல ரத்தினச் சுருக்கமாகத்
தந்த இந்தப் படத்தின் குழுவுக்கு, படம் முடிந்ததும்
ஆடியன்ஸ் அத்தனை பேரும் எழுந்து நின்று வாழ்த்து
தெரிவித்தது, படத்தின் சிறப்புக்கு அத்தாட்சி!
-

`இரும்புத்திரை'  படத்தை வழங்கிய இயக்குநர் மித்ரனிடம்
அசிஸ்டென்ட்டாக இருக்கிறார் இந்தக் குறும்படத்தை கதை,
திரைக்கதை, வசனம் எழுதி இயக்கிய அனுசத்யா. இயக்குநர்
மித்ரன் பேசும்போது, ``இந்தப் படத்தை நானே இப்போதுதான்
பார்க்கிறேன். என்னிடம் சின்னச் சின்ன நோட்ஸ் எடுத்துக்
கொடுக்கிறார் என்ற அளவில்தான் அவரைத் தெரிந்து
வைத்திருந்தேன்.

இந்தப் படத்தைப் பார்த்தபிறகுதான் அனுசத்யாவின் முழுத்
திறமையைப் புரிந்துகொண்டேன். தொடர்ந்து இந்தக்
குழுவினர் கமர்ஷியல் படங்கள் எடுத்து வெற்றிபெற
வேண்டும்" என்று மனம் திறந்து பாராட்டினார்.
-
-----------------
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 43743
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 11766

View user profile https://rammalar.wordpress.com/

Back to top Go down

Re: நான்காம் விதி என்ற குறும்படத்தின் விமர்சனம்.

Post by ayyasamy ram on Sun Feb 17, 2019 3:56 pm


நான்காம் விதி

இயக்குநர் ரா.பார்த்திபன் பேசும்போது, ``இந்தப் படம் எனக்குப் பெரிய சர்ப்ரைஸிங்கா இருந்தது. ரொம்ப பிரில்லியன்ட்டான ஸ்க்ரீன் ப்ளே. இதுல எல்லா கேரக்டரைசேஷனுமே அற்புதமா இருந்தது. ஒரு பெண் வெற்றி பெற்றால் எனக்குப் பிடிக்கும்; ஏன்னா, ஒரு பெண் வெற்றி பெற்றால் ஒரு சமுதாயமே வெற்றி பெற்ற மாதிரி. அனுசத்யா மேலும் பல வெற்றிகளைப் பெற வேண்டும்" என வாழ்த்தினார்.

``உலகத்துல எந்த மொழியில எடுத்தாலும் ஜெயிக்கக்கூடிய கதை இது. இன்னும் சில ட்ரீட்மென்ட்டுகளோட இதை இரண்டரை மணி நேரப் படமா எடுத்தா பெரிய வெற்றிப் படமா அமையும்" என்று பாராட்டினார் நடிகர் மதன்பாப்.

எழுத்தாளர் பாலா (சுபா) பேசும்போது, ``நைஜீரியாவில் குறைந்த முதலீட்டில், உலகளாவிய தரத்தில், நல்ல லாபகரமான முறையில் சினிமாக்கள் உருவாகின்றன" என்று குறிப்பிட்டு அது பற்றி விளக்கியவர், ``தமிழிலும் அப்படிப் படங்கள் வெளியானால் தமிழ்த் திரையுலகம் நன்றாக இருக்குமே என்று பலமுறை எண்ணியுள்ளேன். இந்த `நான்காம் விதி' படம் எனக்கு அந்த நம்பிக்கையைத் தந்துள்ளது" என்று குறிப்பிட்டார்.

``துண்டுத் துண்டுக் கனவுகளைத் தொடர்ச்சியாகக் கோத்து ஒரு புள்ளியில் இணைக்கிறதென்பது ஒரு நல்ல எழுத்தாளருக்கு மட்டுமே கைவந்த கலை. அதை அனுசத்யா இந்தப் படத்துல அருமையாச் செய்திருக்காங்க. குறையே கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு இந்தப் படம் வெளியாகியுள்ளது. இதன் தொடர்ச்சியாக அவர் மேலும் பல வெற்றிப் படங்களை அளிக்க வேண்டும்" என்று வாழ்த்தினார், சமீபத்தில் சாகித்ய அகாடமி விருது பெற்ற எஸ்.ராமகிருஷ்ணன். தனக்கான முதல் பாராட்டு விழாவாகவும் இந்தக் குறும்பட விழா மேடை அமைந்ததை நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.

``இதில் நடித்திருக்கும் அனைவருமே நடித்திருக்கிறார்கள் என்று சொல்ல முடியாது; வாழ்ந்திருக்கிறார்கள் என்றே சொல்ல வேண்டும். இந்தப் படக்குழுவினரின் வெற்றி, வருங்கால சினிமா மாணவர்களுக்கான பாதையாக அமையட்டும்" என வாழ்த்தினார், ஆயிரம் படங்களுக்கு மேல் சண்டைக் காட்சிகளை அமைத்திருக்கும் ஸ்டன்ட் இயக்குநர் ஜாக்குவார் தங்கம்.


Last edited by ayyasamy ram on Sun Feb 17, 2019 4:01 pm; edited 2 times in total
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 43743
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 11766

View user profile https://rammalar.wordpress.com/

Back to top Go down

Re: நான்காம் விதி என்ற குறும்படத்தின் விமர்சனம்.

Post by ayyasamy ram on Sun Feb 17, 2019 3:59 pm``இந்தப் படத்தின் இயக்குநர் அனுசத்யாவையும், அவருக்கு
பக்கபலமாக இருந்த ஷைலஜாவையும் அவர்கள் கல்லூரியில்
படிக்கிற காலத்திலிருந்தே எனக்குத் தெரியும்" என்று
குறிப்பிட்ட மன நல மருத்துவர் டாக்டர் அபிலாஷா,
``சினிமாவுக்காக இதில் அங்கங்கே கொஞ்சம் கொஞ்சம்
மசாலா சேர்த்திருந்தாலும், கனவு தொடர்பாக இந்தப்
படத்தில் சொல்லப்பட்டிருக்கும் அத்தனை அடிப்படையான
விஷயங்களும் சாத்தியமே" என்று சான்று வழங்கினார்.
-
நடிகரும் நடன இயக்குநருமான ராம்ஜியின் பேச்சு நெகிழ்ச்சியாக
அமைந்திருந்தது. இந்தப் படத்தை எடுத்து முடிப்பதற்குள்
இயக்குநர் அனுசத்யா சந்தித்த சவால்களையும், மனம் தளராமல்
போராடி ஜெயித்ததையும் அவர் விவரித்தார்.

இந்தப் படத்தில் கனவு காணும் நால்வரையும் ஒருங்கிணைக்கும்
முக்கிய கதாபாத்திரமான சைக்காலஜிஸ்ட் கதாபாத்திரத்தில்,
செம ஸ்டைலான லுக்கில் பிரமாதப்படுத்தியிருந்தார்.

"அனுசத்யா என்னிடம் சொன்ன வித்தியாசமான கதைதான்
என்னை எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் உடனே ஒப்புக்கொண்டு ந
நடிக்க வைத்தது. படப்பிடிப்பு முடிந்து, எல்லாக் காட்சிகளும்
பதிவான ஹார்டு டிஸ்க் பழுதாகிப்போக இந்தக் குழுவினரின்
அத்தனை கனவுகளும் ஏறக்குறைய நொறுங்கிப்போனது என்றே
சொல்ல வேண்டும்.

ஆனால், விதியை எண்ணி நொந்து போகாத இவர்கள், இந்த
`நான்காம் விதி'யைப் போராடி, திரும்பவும் மீட்டெடுத்தார்கள்.
ஆமாம், பழுதான ஹார்டு டிஸ்க்கின் தலைமை நெதர்லாந்து
கம்பெனி வரை பேசிப் பேசி, ஆறு மாதங்களாகப் போராடி
காட்சிகளை மீட்டெடுத்தார்கள்.

அனுசத்யாவின் இந்தப் போராட்டக் குணத்தைப் பார்த்ததும்,
அப்போதே தெரிந்துகொண்டுவிட்டேன், இவர் எதிர்காலத்தில்
இன்னும் பல பெரிய வெற்றிகளை அடைவார்" என்று ராம்ஜி
பேசி முடித்ததும், அரங்கமே கைதட்டி ஆர்ப்பரித்தது.

கண்ணை உறுத்தாத சுபாஷ் மணியனின் கேமரா, குமரேஷின்
கச்சிதமான எடிட்டிங், கதையின் `பேக் போனாக' இருந்து
அழகாக நகர்த்திச் செல்லும் ஜோன்ஸ் ராபர்ட்டின் அற்புதமான
பின்னணி இசை என, படத்தின் அத்தனை தொழில்நுட்பக்
கலைஞர்களின் பங்களிப்பும் அசாத்தியமானது.
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 43743
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 11766

View user profile https://rammalar.wordpress.com/

Back to top Go down

Re: நான்காம் விதி என்ற குறும்படத்தின் விமர்சனம்.

Post by ayyasamy ram on Sun Feb 17, 2019 4:00 pm


எங்கேயோ, யாரோ ஐந்து பேர் சேர்ந்து கண்ணுக்கு எதிரே
நடக்கவிருக்கும் ஒரு கொலையைத் தடுக்கிறார்கள்
என்பதைச் சொல்லும் படமாக மட்டும் இந்த `நான்காம்
விதி'யை எடுத்துக்கொள்ள முடியாது. காதல் என்ற
பெயரில் வெறும் இனக்கவர்ச்சியால் உந்தப்பட்டு,
ஏமாற்றிவிட்டாள் என்ற காரணத்தைச் சொல்லி,
நுங்கம்பாக்கம் ரயில் நிலையம், கல்லூரி வாசல் என
எங்கெங்கும் ஒரு தலைக் காதல் கொலைகள் தொடர்ந்து
கொண்டிருக்கின்றன.

இப்படியான கொடுமைகளை அந்த இடத்தில் இருக்கும்
அனைவருமே தடுக்க வேண்டும்; தடுக்க முடியும்.
மனமிருந்தால் மார்க்கமுண்டு என்பதை மனதில்
ஆழமாகப் பதிய வைக்கிறது இந்தப் படம்.

இந்தப் படத்துக்கு `நான்காம் விதி' என்ற தலைப்பு ஏன்?
இந்தக் கேள்வி பார்வையாளர்கள் அனைவரின் மனதிலும்
ஓடிக்கொண்டிருந்தது. அதற்குத் தனது நன்றியுரையின்
போது விளக்கமளித்தார் அனுசத்யா.

``நியூட்டனின் மூன்றாம் விதி என்று கேள்விப்பட்டிருப்போம்.
அவர் ஐந்து ஃபிலாஸபி சொன்னார். அதுல நான்காம்
ஃபிலாஸபி என்னன்னா, இதுதான் இப்படித்தான் நடக்கும்னு
எதையும் நம்மால திட்டமிட்டுச் சொல்ல முடியாது; அதையும்
தாண்டி நாம எதிர்பார்க்காததும் நடக்கும்கிற அந்த
ஃபோர்த் ரூல். இது ஒரு ஹைப்பதெடிகல் ஃபிலாஸபி.
அதைத்தான் படத்துக்கு வெச்சேன்" என்றவர் மறக்காமல்
இந்தப் படத்துக்காக ஒத்துழைத்த அனைவருக்கும் மனம்
நெகிழ நன்றி சொன்னார்.
-
-------------------------
நன்றி-விகடன்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 43743
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 11766

View user profile https://rammalar.wordpress.com/

Back to top Go down

Re: நான்காம் விதி என்ற குறும்படத்தின் விமர்சனம்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை