உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» இளைய வயது; பெரிய மனசு!
by ayyasamy ram Today at 11:29 am

» லாஸ்லியாவிற்கு கிடைத்த உயரிய விருது ….!
by ayyasamy ram Today at 11:12 am

» வெங்காய ஜிமிக்கி கம்மலை மனைவிக்கு பரிசாக அளித்த நடிகர்!
by ayyasamy ram Today at 11:11 am

» பெரிய மனசு
by ayyasamy ram Today at 11:10 am

» பொறுமைதான் உண்மையான திறமை..!
by ayyasamy ram Today at 11:08 am

» சான்றாண்மை
by ayyasamy ram Today at 11:07 am

» தமிழ்ச் செம்மல்! – பாராட்டுப் பாமாலை!
by ayyasamy ram Today at 11:06 am

» ஷீரடியில் ஆள் கடத்தல்? ஓராண்டில் 88 பேர் மாயம்
by ayyasamy ram Today at 7:46 am

» பிரிட்டன் தேர்தல்: 15 இந்திய வம்சாவளி எம்.பி.,க்கள் வெற்றி
by ayyasamy ram Today at 7:44 am

» சென்னையில் மூட்டை மூட்டையாக பணம் பறிமுதல்
by ayyasamy ram Today at 7:41 am

» இந்தியாவில் தங்கம் கடத்தல் அதிகரிக்க காரணம் என்ன?
by ayyasamy ram Today at 7:38 am

» சக்திவாய்ந்த 100 பெண்கள் பட்டியலில் நிர்மலா
by ayyasamy ram Today at 7:35 am

» வேலன்:-போல்டர்களை மற்றவர்கள் காப்பி செய்வது மற்றும் டெலிட் செய்வதை தவிர்க்க-Prevent exe
by velang Today at 7:31 am

» குருவிக் கூட்டுக்கும், விதிகளுண்டு!
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» பெரியவா சரணம் !
by T.N.Balasubramanian Yesterday at 8:19 pm

» பிரிட்டனில் தனி மெஜாரிட்டி பெற்றது ஆளுங்கட்சி- போரிஸ் ஜான்சன் மீண்டும் பிரதமர் ஆகிறார்
by ayyasamy ram Yesterday at 6:00 pm

» வயிறு வாழ்த்தும்!
by krishnaamma Yesterday at 2:57 pm

» அந்திம கிரியை!
by krishnaamma Yesterday at 2:55 pm

» கேட்டு ரசித்த திரைப்பட பாடல் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:36 pm

» "வடநாட்டு மார்வாடிக்கு மகாபெரியவா இட்ட கட்டளை!"
by krishnaamma Yesterday at 2:29 pm

» திருமாலிரும் சோலை அழகர் !
by krishnaamma Yesterday at 2:17 pm

» "பேயனும், விளக்கெண்ணையும்"
by krishnaamma Yesterday at 2:04 pm

» பகீரதப் பிரயத்தனம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» மார்கழி மாதத்தின் மகத்துவம் !
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாழ்வில் உயர்வதும், தாழ்வதும் அவரவர் எண்ணத்தைப் பொறுத்ததே..!
by krishnaamma Yesterday at 1:23 pm

» 2 வருடங்கள் நிலாவையே பார்க்காமல் மறைந்து வாழ்ந்த பெண்மணி!
by krishnaamma Yesterday at 1:21 pm

» தெரிந்து கொள்வோம் {ஆன்மீகம்}
by krishnaamma Yesterday at 12:55 pm

» `அந்த விருதாவது ஞாபகமிருக்கிறதா சார்?’ -அமைச்சர் ஜெயக்குமாரை கலாய்த்த நடிகர் சித்தார்த்
by ayyasamy ram Yesterday at 12:54 pm

» விஷ்ணு தீபம் - திருவேங்கடத்தில் மற்றும் ஸ்ரீரங்கத்தில் :)
by krishnaamma Yesterday at 12:50 pm

» ஜல்லிக்கட்டு காளைகள் வளர்க்கும் மதுரை இளம்பெண்: இளங்கலை ஆங்கில இலக்கியம் படித்துவிட்டு விவசாயமும் பார்க்கிறார்
by ayyasamy ram Yesterday at 12:46 pm

» காசி விஸ்வநாதர் கோவிலின் கோடி தீபம்... photos
by krishnaamma Yesterday at 12:33 pm

» முக்தி தரும் காசி
by krishnaamma Yesterday at 12:20 pm

» ராதா பொருள் என்ன?
by krishnaamma Yesterday at 12:14 pm

» கோபுர தரிசனம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:09 pm

» கிறிஸ்துமஸ் போனஸ் ரூ.70 கோடி! இன்ப அதிர்ச்சியில் ஊழியர்கள்
by krishnaamma Yesterday at 11:38 am

» மார்கழி மாத ஆன்மீக தகவல்கள்
by krishnaamma Yesterday at 11:36 am

» திருவாதிரைக் களி
by ayyasamy ram Yesterday at 11:10 am

» சென்னை சா்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும் படங்கள்: முழுப் பட்டியல்!
by krishnaamma Yesterday at 11:08 am

» பஞ்சாப்பைக் கலக்கும் சூப்!
by krishnaamma Yesterday at 10:39 am

» கடந்த 3 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சில்லறைப் பணவீக்கம் அதிகரிப்பு!
by krishnaamma Yesterday at 10:38 am

» நேச நெஞ்சம்- சிறுகதை
by ayyasamy ram Yesterday at 10:32 am

» சினிதுளிகள்- குங்குமம்
by ayyasamy ram Yesterday at 10:28 am

» ஏழு விதமான ஆச்சரியங்கள்
by ayyasamy ram Yesterday at 10:20 am

» சுமங்கலி பெண்கள் கட்டாயம் செய்ய வேண்டிய விளக்கு பூஜை
by ayyasamy ram Yesterday at 9:15 am

» தன்னை உணர்தலே ஆத்ம பலம்! --அர்த்தமுள்ள இந்து மதம் - 63
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ஆறுமுகசாமி கமிஷன் என்ன ஆயிற்று ?
by ayyasamy ram Yesterday at 8:53 am

» நெட்டிசன் நோட்ஸ்: எனை நோக்கி பாயும் தோட்டா -அழகு
by ayyasamy ram Yesterday at 8:47 am

» அறிவியல் களஞ்சியம் அறிவியல் ஆச்சர்யம்
by ayyasamy ram Yesterday at 8:37 am

» பாலியல் வன்கொடுமை குற்றத்துக்கு 21 நாளில் தூக்கு தண்டனை: ஆந்திர அரசு சட்ட மசோதா
by ayyasamy ram Yesterday at 6:01 am

» தலைவி, குயினுக்குத் தடையில்லை: ஜெ. தீபாவின் கோரிக்கையை நிராகரித்தது உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 5:57 am

Admins Online

அரசியல் துளிகள்.

அரசியல் துளிகள். - Page 2 Empty அரசியல் துளிகள்.

Post by சிவனாசான் on Thu Feb 14, 2019 7:46 pm

First topic message reminder :

மதுரை : லோக்சபா மற்றும் சட்டசபை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், வேட்புமனு தாக்கலின் போதே தேர்தல் வாக்குறுதியை பிரமாண பத்திரமாக தாக்கல் செய்ய வேண்டும் எனக்கோரி ஐகோர்ட் மதுரை கிளையில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் பிப்.,28 க்குள் அதிமுக, திமுக, பா.ஜ., உள்ளிட்ட அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் பதிலளிக்க கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4325
இணைந்தது : 26/07/2014
மதிப்பீடுகள் : 1205

Back to top Go down


அரசியல் துளிகள். - Page 2 Empty Re: அரசியல் துளிகள்.

Post by சிவனாசான் on Sat Feb 16, 2019 7:46 pm

யவத்மல்: காஷ்மீரில் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க பாதுகாப்பு படையினருக்கு சுதந்திரம் வழங்கியுள்ளதாக கூறியுள்ள பிரதமர் மோடி, பாகிஸ்தான் என்றாலே பயங்கரவாதம் மஹாராஷ்டிரா மாநிலம், யவத்மால் மாவட்டத்தில் நடந்த விழாவில் பேசிய பிரதமர் மோடி, பிரிவினைக்கு பின்னர் உருவான நாடு (பாகிஸ்தான்) பயங்கரவாத செயல்களை ஊக்குவித்து வருகிறது. தற்போது திவாலாகும் நிலையில், இருக்கும் அந்த நாடு, பயங்கரவாதத்திற்கு பெயர் பெற்றுள்ளது. புல்வாமாவில், வீரமரணம் அடைந்த வீரர்களின் தியாகம் வீண்போகாது.தான் எனக்கூறினார்.குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க பாதுகாப்பு படையினருக்கு சுதந்திரம் கொடுக்கப்பட்டு உள்ளது. பயங்கரவாதத்திற்கு இன்னொரு பெயர பாகிஸ்தான். இந்த நேரத்தில், பாதுகாப்பு படையினர் மீது நம்பிக்கை வைத்து மக்கள் அமைதியாக இருக்க வேண்டும். குற்றச்செயலில் ஈடுபட்டவர்கள் மீது எங்கு, எப்போது நடவடிக்கை எடுப்பது என்பது பற்றி பாதுகாப்பு படையினர் முடிவு செய்வார்கள் .வீரமரணம் அடைந்த வீரர்களின் குடும்பத்தினரின் வேதனை மற்றும் உங்களின் கோபத்தை நாங்கள் புரிந்து கொண்டுள்ளோம். இவ்வாறு அவர் பேசினார்.


சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4325
இணைந்தது : 26/07/2014
மதிப்பீடுகள் : 1205

Back to top Go down

அரசியல் துளிகள். - Page 2 Empty Re: அரசியல் துளிகள்.

Post by சிவனாசான் on Sat Feb 16, 2019 7:48 pm

ஜெய்ஷ் - இ - முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவன், மசூத் அசாருக்கு, அல் - குவைதா பயங்கரவாத அமைப்பின் தலைவன், ஒசாமா பின்லேடனுக்கு நேர்ந்த கதியே ஏற்படும். இந்தியாவுக்குள் ஊடுருவிஉள்ள எல்லா பயங்கரவாதிகளையும், கொன்று குவிக்க வேண்டும்.
ராம்தேவ், யோகா குருசம்பிரதாயங்களை மதிக்கலாமே!மத சம்பிரதாயங்கள் மதிக்கப்பட வேண்டும். தங்களை பிரபலப்படுத்த, மத சம்பிரதாயங்களை மீறுவோரால், நாட்டின் ஒற்றுமைக்கு தீங்கு ஏற்படுகிறது. பார்சி மதத்தவரை திருமணம் செய்த நான், அக்னி கோவிலுக்குள் செல்லக் கூடாது. சம்பிரதாயங்களை மதித்து, கோவிலுக்கு செல்லாமல் இருக்கிறேன். இதற்காக, நீதிமன்ற படிகளில் ஏறும் எண்ணம் இல்லை.ஸ்மிருதி இரானி, மத்திய ஜவுளி அமைச்சர், பா.ஜ.,நடந்ததை எல்லாரும் அறிவர்!நரேந்திர மோடி, பிரதமர் பதவிக்கு வரும் முன், அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங், 'பயங்கரவாதிகள் விஷயத்தில், பாக்.,கிற்கு பாடம் கற்பிக்க தவறி விட்டார்' என, குற்றஞ் சாட்டினார். 56 அங்குல மார்பு உள்ளோரால் தான், பாக்.,கிற்கு பாடம் புகட்ட முடியும் என்றும், அவர் கூறினார். ஆனால், தற்போது நடந்தவற்றை எல்லாரும் அறிவர்.சரத் பவார், தலைவர், தேசியவாத காங்கிரஸ்

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4325
இணைந்தது : 26/07/2014
மதிப்பீடுகள் : 1205

Back to top Go down

அரசியல் துளிகள். - Page 2 Empty Re: அரசியல் துளிகள்.

Post by சிவனாசான் on Sun Feb 17, 2019 5:03 pm

புதுச்சேரி : 5வது நாளாக தர்ணா போராட்டம் நடத்தி வரும் முதல்வர் நாராயணசாமியை இன்று மாலை பேச்சுவார்த்தைக்கு வரும்படிகவர்னர்கிரண்பேடிஅழைப்புவிடுத்துள்ளார்துணைநிலை கவர்னர் கிரண்பேடிக்கு எதிராக பிப்.,13 ம் தேதி முதல் கவர்னர் மாளிகை முன், கருப்பு சட்டை அணிந்துபடி அமைச்சர்களுடன் தர்ணா போராட்டம் நடத்தி வருகிறார் முதல்வர் நாராயணசாமி. நிலுவையில் உள்ள 36 கோப்புகளுக்கு ஒப்புதல் அளிக்கும் வரை போராட்டம் தொடரும் எனவும் அறிவித்திருந்தார். இதனால் கவர்னர் மாளிகையில் அதிவிரைவுப்படை குவிக்கப்பட்டது. துணை ராணுவத்தின் பாதுகாப்புடன் கவர்னர் மாளிகையில் இருந்து வெளியேறிய கிரண்பேடி, பிப்.,14 அன்று டில்லி புறப்பட்டுச் சென்றார்.முன்னதாக சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய கிரண்பேடி பிப்.,20 வரை சுற்றுப்பயணம் செல்ல உள்ளதாகவும், பிப்.,20 அன்று நள்ளிரவே புதுச்சேரி திரும்ப உள்ளதாக தெரிவித்தார். இருப்பினும் கவர்னர் மாளிகை முன் அமர்ந்து நாராயணசாமி தர்ணா போராட்டத்தை தொடர்ந்தார். தொடர்ந்து கிரண்பேடிக்கு எதிராக கருத்துக்களை கூறி வந்த நாராயணசாமி, கிரண்பேடி பதவி விலக வேண்டும் எனவும் வலியுறுத்தினார். 5வது நாளாக இன்றும் தனது போராட்டத்தை தொடர்ந்து வருகிறார். இந்நிலையில், சென்னை விமான நிலையத்தில் கிரண்பேடி பேசுகையில், முதல்வர் நாராயணசாமியுடன் தனிப்பட்ட முறையில் விரோதம் ஏதும் இல்லை. ஹெல்மெட் அணிவதை மட்டும் நான் வலியுறுத்தினேன். சட்டத்தின்படி தான் நான் பணியாற்றி வவருகிறேன். நிர்வாக ரீதியாகவும், நிதி விவகாரங்கள் அடிப்படையில் முடிவு எடுக்கப்பட்டு வருகிறது. கோப்புகளை முறையாக படித்து பார்க்காமல் நடவடிக்கை எடுக்க முடியாது. முதல்வர் நாராயணசாமி மாலை 6 மணிக்கு , கவர்னர் மாளிகைக்கு வந்து என்னுடன் பேச்சுவார்த்தை நடத்தலாம். இவ்வாறு அவர் கூறினார்.முதல்வர் நாராயணசாமி தனது வீட்டின் முன் கருப்புக் கொடி ஏற்றி கிரண்பேடிக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். புதுச்சேரி காங்., அலுவலகங்களிலும் கருப்புக் கொடி ஏற்றப்பட்டுள்ளது. இந்நிலையில் முதல்வர் நாராயணசாமியை கைது செய்ய போவதாக ஏற்கனவே கூறி இருந்த கிரண்பேடி, புதுச்சேரி திரும்பியதும் முக்கிய முடிவுகள் எடுப்பார் என கூறப்படுகிறது. இதனால் புதுச்சேரி அரசியலில் பதற்றமான நிலை காணப்படுகிறது.
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4325
இணைந்தது : 26/07/2014
மதிப்பீடுகள் : 1205

Back to top Go down

அரசியல் துளிகள். - Page 2 Empty Re: அரசியல் துளிகள்.

Post by சிவனாசான் on Sun Feb 17, 2019 5:06 pm

புதுடில்லி, மகாராஷ்டிராவில் அடுத்த சட்டசபை தேர்தலுக்குப்பின் முதல்வர் பதவியை 28 வயதாகும் ஆதித்ய தாக்கரேக்கு தர வேண்டும் என்ற சிவசேனாவின் நிபந்தனையால் பா.ஜ தவிக்கிறது.மகாராஷ்டிராவில் 48 லோக்சபா தொகுதிகளும், 288 சட்டசபை தொகுதிகளும் உள்ளன. மே மாதம் லோக்சபா தேர்தலும், அக்டோபரில் சட்டசபை தேர்தலும் நடக்க உள்ளன. இரு கட்சிகளுக்குமான கூட்டணி பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. அதில், ''டில்லி உங்களுக்கு, மும்பை எங்களுக்கு'' என்கிறாராம் தாக்கரே.1995 பார்முலாவை பின்பற்ற விரும்புகிறது சேனா. அப்போது 288 தொகுதிகளில் 169 தொகுகளில் சேனாவும், 116 தொகுதிகளில் பா.ஜ.,வும் போட்டியிட்டன.அதில் சேனா 73 தொகுதிகளிலும், பா.ஜ., 65 தொகுதிகளிலும் ஜெயித்து, கூட்டணி ஆட்சி அமைத்தன.பெரும்பாலான சட்டசபை தொகுதிகளை தங்களுக்கு தர சம்மதித்தால் லோக்சபா தேர்தலில் 22 இடங்களை ஏற்கிறோம், என்கிறது சேனா.ஆனால் 2014 தேர்தலில் தனித்தனியாக போட்டியிட்டு பா.ஜ., 122 இடங்களிலும் சேனா 63 இடங்களிலும் வெற்றி பெற்றன.ஆட்சி அமைக்க 145 இடங்கள் தேவைப்பட்டதால் சேனாவுடன் கூட்டணி சேர்ந்து பா.ஜ., ஆட்சி நடத்தி வருகிறது.1995 பார்முலா மட்டுமின்றி யார் அதிக தொகுதிகளில் வென்றாலும் தனது 28 வயது மகன் ஆதித்ய தாக்கரேயை முதல்வராக்க வேண்டும் என்பதே உத்தவின் முக்கிய நிபந்தனை. இதைக் கேட்டு பா.ஜ., முதல்வர் பட்னாவிஸ் அதிர்ந்து நிற்கிறார்.''ஆளுக்கு இரண்டரை ஆண்டுகள் ஆட்சி செய்து கொள்ளலாம்'' என்ற பட்னாவிசின் யோசனைக்கும் தாக்கரே மசிவதாக இல்லை.ஏற்கனவே பட்னாவிஸ் ஒரு சிறந்த முதல்வர் என்ற பெயர் எடுத்து விட்டார். எனவே ஆதித்ய தாக்கரேயை முதல்வராக்க பா.ஜ., விரும்பவில்லை. துணை முதல்வராக வேண்டுமானால் ஏற்கலாம், என்கிறது பா.ஜ., சிவசேனாவின் பல எம்.எல்.ஏ.,க்களும் எம்.பி.,க்களும் பா.ஜ.,வுடன் கூட்டணி வைக்கவே விரும்புகிறார்கள்.சேனாவுடன் கூட்டணி வைக்கலாம், ஆனால், அவர்கள் நிபந்தனைக்கும் பிளாக் மெயிலுக்கும் ஒத்துக்கொள்ள முடியாது'' என்பது மோடி, அமித்ஷா எண்ணம்.மொத்தத்தில் உத்தவ் தாக்கரேயின் நிபந்தனைகளுக்கு பா.ஜ.வில் மட்டுமின்றி சிவசேனாவிலும் அதிருப்தி குரல்கள் எழுந்துள்ளன.
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4325
இணைந்தது : 26/07/2014
மதிப்பீடுகள் : 1205

Back to top Go down

அரசியல் துளிகள். - Page 2 Empty Re: அரசியல் துளிகள்.

Post by சிவனாசான் on Sun Feb 17, 2019 5:30 pm

எதிர்க்கட்சிகள் ஆட்சி நடத்தும், பல்வேறு மாநிலங்களின் முதல்வர்கள், மத்திய அரசை கண்டித்து, போராட்டத்தில் குதிக்கும் போக்கு அதிகரித்து உள்ளது. அரசியலில், தங்கள் இருப்பை தக்க வைக்கவும், விளம்பரம் தேடவும், சுயநலத்துக்காக, இது போன்ற யுக்திகளை அவர்கள் கையில் எடுத்துள்ளதாக, அரசியல் ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.அரசியல் என்பது போராட்டங்களால் நிரம்பியது. பொதுமக்கள், தங்கள் உரிமை களுக்காகவும், எதிர்க்கட்சிகள், தங்கள் எதிர்ப்பு களை தெரிவிப்
பதற்காகவும், போராட்டங்கள் நடத்துவது காலம் காலமாக பின்பற்றப்படும் நடைமுறை.
சமீபகாலமாக, எதிர்க்கட்சிகள் ஆட்சி நடத்தும் பல்வேறு மாநிலங்களின் முதல்வர்கள், மத்திய அரசை கண்டித்து, போராட்டத்தில் ஈடுபடுவது அதிகரித்து வருகிறது.இது குறித்து, அரசியல் ஆர்வலர்கள் கூறியதாவது:மேற்கு வங்கத்தில், பெரும் பரபரப்பை ஏற்படுத்திய, சாரதா, 'சிட்பண்ட்' முறைகேடு விவகாரத்தில், கோல்கட்டா போலீஸ் கமிஷனர், ராஜீவ் குமாரை விசாரிப்பதற்காக, சமீபத்தில், அவரது வீட்டிற்கு, சி.பி.ஐ., சென்றது. இதை கண்டித்து, அம்மாநில முதல்வரும், திரிணமுல் காங்கிரஸ் தலைவருமான, மம்தா பானர்ஜி, விடிய விடிய போராட்டம் நடத்தினார். மாநில போலீசாரை வைத்து,விசாரணைக்கு வந்த, சி.பி.ஐ., அதிகாரிகளையும் கைது செய்தார்.
இதேபோல், ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து தர மறுப்பதாக கூறி, மத்திய அரசை கண்டித்து, அம் மாநில முதல்வரும், தெலுங்கு தேசம் தலைவரு மான, சந்திரபாபு நாயுடு, சமீபத்தில் டில்லியில் உண்ணாவிரதம் இருந்தார்.இந்த போராட்டத்தில் பங்கேற்க, ஆந்திராவிலிருந்து பெரும் படையையே, அவர் திரட்டிச் சென்றார்.இந்த போராட்டம் நடந்த மூன்று நாட்களுக்குப் பின், மாநில அரசுக்கு அதிகாரம் வழங்கக் கோரி, ஆம் ஆத்மி கட்சி தலைவரும், டில்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால், தலைநகரில் அனைத்து எதிர்க்கட்சிகளையும் திரட்டி, போராட்டம் நடத்தினார்
மம்தாவும், சந்திரபாபு நாயுடுவும் தற்போதுநடத்தும் போராட்டங்களில், புதிதாக ஒன்றும் இல்லை. மாநில முதல்வர்களே போராட்டங்களில் இறங்கிய பல சம்பவங்கள், இதற்கு முன்னும் அரங்கேறி உள்ளன. ஆந்திராவில் இருந்து, தெலுங்கானா தனி மாநிலமாக பிரிக்கப்படுவதை கண்டித்து, 2014ல், அன்றைய ஆந்திர முதல்வரும், காங்., மூத்த தலைவருமான கிரண்குமார் ரெட்டி, டில்லியில்போராட்டம் நடத்தினார். முதல்வர்கள் போராட்டத்தில்ஈடுபட்டமபவங்கள்,இதற்குமுன்,வரலாற்றில்இடம்பெற்றிருந்தாலும்,
தற்போது நடக்கும் போராட்டங்கள், முழுக்க முழுக்க சுய நலத்துக்காகவும், விளம்பரத் துக்காகவுமே நடத்தப்படுவதாக சந்தேகம் எழுந்துள்ளது. 'மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்டவர்கள், சட்டத்தை மீறலாமா?' என, மக்கள் கேள்வி எழுப்புகின்றனர். இந்த போராட்டங்கள் அனைத் திலுமே, மாநில நலன் பின்னுக்கதள்ளப்பட்டுள்ளதுமக்களை திசை திருப்பவும், விரைவில் நடக்க உள்ள லோக்சபா தேர்தலில் அரசியல் ஆதாயம் பெறுவதற்காகவுமே, நடத்தப்படுவதாக, பரவலாக பேசப்படுகிறது.
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4325
இணைந்தது : 26/07/2014
மதிப்பீடுகள் : 1205

Back to top Go down

அரசியல் துளிகள். - Page 2 Empty Re: அரசியல் துளிகள்.

Post by சிவனாசான் on Mon Feb 18, 2019 7:14 pm

புதுச்சேரி: கவர்னர் மாளிகை முன்பு கருப்புச் சட்டை அணிந்து, புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி போராட்டம் நடத்தி வரும் நிலையில், தர்ணாவும் ஒரு யோகாதான் என்றும், காக்கையும் யோகா செய்வதாக கிரண்பேடி டுவிட்டரில் கருத்து பதிவிட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.இன்று காலை 8.30 மணியளவில், காக்கை யோகா என்ற பெயரில் இரு காக்கைகள் அமர்ந்திருப்பது போல படம் ஒன்றை தமது டுவிட்டர் பக்கத்தில் கிரண்பேடி வெளியிட்டிருந்தார். அதில் யோகா என்பது சர்வமயம் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
ஒரு மணி நேரம் கழித்து அதே படத்தை பதிவிட்டு, தர்ணா என்பது யோகா ஆகுமா என செய்தியாளர் ஒருவர் தம்மிடம் கேள்வி எழுப்பியதாக அவர் பதிவிட்டிருந்தார். அதற்கு, தர்ணாவும் யோகாதான் . என்ன நோக்கத்திற்காக, எந்த ஆசனத்தில் அமர்ந்து, என்ன சத்தம் எழுப்புகிறோம் என்பதைப் பொறுத்தது என்று தாம் பதிலளித்ததாக கிரண்பேடி பதிவிட்டிருந்தார்.தொடர்ந்து ஒரு மணி நேரத்திற்கு பின், புல்தரை விரிப்பின் மீது பூனை இருப்பது போன்ற படத்தை வெளியிட்டு, தான் ஏற்கெனவே குறிப்பிட்டதுபோல யோகா என்பது சர்வமயம் என கிரண்பேடி பதிவிட்டார். பால்கனிக்கு வந்த காக்கை, முன்னர் பாயை விட்டு நகராத பூனையாக இருந்தது என்று பொருள்படும்படியும் அவர் குறிப்பிட்டுள்ளார். யோகா, தர்ணா, காக்கை என கிரண்பேடி, நாராயணசாமியின் போராட்டத்தை கிண்டலடிப்பதாகவும், காக்கை எனக் கூறியிருப்பது நிறத்தை குறிப்பிட்டு அவமதிக்கும் செயல் என்றும் சர்ச்சைகள் உருவாகியுள்ளன.
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4325
இணைந்தது : 26/07/2014
மதிப்பீடுகள் : 1205

Back to top Go down

அரசியல் துளிகள். - Page 2 Empty Re: அரசியல் துளிகள்.

Post by சிவனாசான் on Mon Feb 18, 2019 8:07 pm

சென்னை: ''நிதி பற்றாக்குறை காரணமாக புதுச்சேரியில் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்த முடியவில்லை'' என புதுச்சேரி கவர்னர் கிரண்பேடி கூறினார்.சென்னை விமான நிலையத்தில் நேற்று அவர் அளித்த பேட்டி:புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி நடத்தி வரும் தர்ணா போராட்டத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. நிதி பற்றாக்குறை காரணமாக பல நலத் திட்டங்கள் செயல்படுத்த முடியாமல் உள்ளன. இது குறித்து நிதித்துறை செயலரிடம் பேச வேண்டும்.நான் கவர்னர் என்பதால் எனக்கு நிதி, அரசு நிர்வாகம், பாதுகாப்பு போன்றவற்றை நிர்வகிக்க அதிகாரம் உள்ளது. முதல்வர் 39 கோப்புகளை கையெழுத்திடும்படி என்னிடம் கொடுத்துள்ளார். மக்கள் வரிப்பணம் என்பதால் கோப்புக்களை ஆராய்ந்து நிதித்துறை அதிகாரிகளிடம் பேசி முடிவெடுக்க வேண்டும்.தற்போதைய சூழலில் மக்களிடம் தவறான தகவல்களை முதல்வர் நாராயணசாமி பரப்பி வருகிறார். 'ஹெல்மெட் அணிவதை கட்டாயமாக்க வேண்டும்' என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு அமல்படுத்தப்படுகிறதா என உச்சநீதிமன்றம் கண்காணித்து வருகிறது. உத்தரவை செயல்படுத்த புதுச்சேரி அரசு முன்வரவில்லை.இவ்வாறு கூறினார்.
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4325
இணைந்தது : 26/07/2014
மதிப்பீடுகள் : 1205

Back to top Go down

அரசியல் துளிகள். - Page 2 Empty Re: அரசியல் துளிகள்.

Post by சிவனாசான் on Mon Feb 18, 2019 8:09 pm

புதுடில்லி : புதுச்சேரி துணைநிலை கவர்னர் கிரண்பேடிக்கு எதிராக முதல்வர் நாராயணசாமி தொடர் தர்ணா போராட்டம் நடத்தி வருகிறார். இந்த போராட்டத்திற்கு திமுக தலைவர் ஸ்டாலின், நேற்று நேரில் சென்று ஆதரவு தெரிவித்தார். இந்நிலையில் டில்லி முதல்வர் கெஜ்ரிவால் இன்று புதுச்சேரி சென்று, நாராயணசாமியின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தார். அங்கு அவர் பேசுகையில்: டில்லி மக்களால் தோற்கடிக்கப்பட்ட கிரண்பேடி புதுச்சேரியில் பிரச்சனை ஏற்படுத்துகிறார். டில்லியை போல் புதுச்சேரியிலும் நிலைமை ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4325
இணைந்தது : 26/07/2014
மதிப்பீடுகள் : 1205

Back to top Go down

அரசியல் துளிகள். - Page 2 Empty Re: அரசியல் துளிகள்.

Post by சிவனாசான் on Tue Feb 19, 2019 7:48 pm

லோக்சபா தேர்தலில் கூட்டணி அமைப்பது தொடர்பாக பா.ம.க., நிறுவனர் ராமதாஸ், அவரது மகன் அன்புமணியை, அமைச்சர் தங்கமணி சந்தித்து பேசினார். இதன் பின்னர், சென்னை நந்தனத்தில் உள்ள தனியார் ஓட்டலுக்கு, ராமதாஸ், அன்புமணி ஆகியோர் வந்தனர். அவர்களை, முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் சால்வை அணிவித்து வரவேற்றனர். தொடர்ந்து, இரு தரப்பிலும் கூட்டணி பேச்சுவார்த்தை நடந்தது. இதில், அதிமுக தரப்பில், முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் தங்கமணி, ஜெயக்குமார், வேலுமணி ஆகியோரும், பா.ம.க., சார்பில், ராமதாஸ், அன்புமணி, ஜி.கே. மணி ஆகியோர் பங்கேற்றனர். இதனை தொடர்ந்து அதிமுக, பாமக இடையே கூட்டணிக்கான ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன் பின்னர் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், பா.ம.க., நிறுவனர் ராமதாஸ், அன்புமணி ஆகியோர் கூட்டாக பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.அப்போது, அதிமுக ஓருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கூறுகையில், லோக்சபா தேர்தலில் அதிமுகவும் பாமகவும் இணைந்து போட்டியிட முடிவு செய்துள்ளது. பாமகவுக்கு 7 லோக்சபா சீட்களும், ஒரு ராஜ்யசபா சீட்டும் ஒதுக்கப்படுகிறது. 21 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு பாம.க., ஆதரவு அளிக்கும் என்றார்.பின்னர் பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் கூறுகையில், அதிமுக - பாமக கூட்டணி., மக்கள் நலகூட்டணி, மெகா கூட்டணி. எந்தெந்த தொகுதிகளில் பாமக போட்டியிடும் என்பது விரைவில் அறிவிக்கப்படும். 10 அம்ச கோரிக்கைகளை முன்வைத்தே கூட்டணி வைத்துள்ளோம். அந்த கோரிக்கைகளை முதல்வர், துணை முதல்வரிடம் வழங்கியுள்ளோம். 40 தொகுதிகளிலும் அதிமுக பாமக கூட்டணி வெற்றி பெறும் என்றார்.

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4325
இணைந்தது : 26/07/2014
மதிப்பீடுகள் : 1205

Back to top Go down

அரசியல் துளிகள். - Page 2 Empty Re: அரசியல் துளிகள்.

Post by சிவனாசான் on Tue Feb 19, 2019 8:03 pm

அரசு ஊழியர்களுக்கு பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.காவிரியில், கர்நாடகா மேகதாது அணை கட்ட அனுமதிக்கக் கூடாது.விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும். உழவர் ஊதியக்குழு அமைக்க வேண்டும். நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும். என பா.ம.க. தேர்தல் கூட்டணியில் கோரிக்கை வைத்துள்ளது. இவைகள் ஏற்க தக்கதல்ல.
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4325
இணைந்தது : 26/07/2014
மதிப்பீடுகள் : 1205

Back to top Go down

அரசியல் துளிகள். - Page 2 Empty Re: அரசியல் துளிகள்.

Post by சிவனாசான் on Tue Feb 19, 2019 8:03 pm

அரசு ஊழியர்களுக்கு பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.காவிரியில், கர்நாடகா மேகதாது அணை கட்ட அனுமதிக்கக் கூடாது.விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும். உழவர் ஊதியக்குழு அமைக்க வேண்டும். நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும். என பா.ம.க. தேர்தல் கூட்டணியில் கோரிக்கை வைத்துள்ளது. இவைகள் ஏற்க தக்கதல்ல.
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4325
இணைந்தது : 26/07/2014
மதிப்பீடுகள் : 1205

Back to top Go down

அரசியல் துளிகள். - Page 2 Empty Re: அரசியல் துளிகள்.

Post by சிவனாசான் on Tue Feb 19, 2019 8:06 pm

சென்னை: அதிமுக கூட்டணியில் பா.ஜ.க.,வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதனை முதல்வர் இ.பி.எஸ்., துணை முதல்வர் ஓ.பி.எஸ்., தமிழக பா.ஜ., தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல் ஆகியோர் கூஅதிமுக - பா.ஜ., கூட்டணி குறித்து இரு கட்சிகள் இடையே 2 ம் கட்ட பேச்சுவார்த்தை சென்னை நந்தனம் கிரவுன்பிளாசா ஓட்டலில் நடந்தது. இங்கு பியூஷ் கோயலுடன் இ.பி.எஸ்., பேச்சு நடத்தினார்.
இந்த பேச்சுவார்த்தையில், பா.ஜ., சார்பில், பியூஷ் கோயல், தமிழக பா.ஜ., பொறுப்பாளர் முரளிதரராவ், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக பா.ஜ., தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் , வானதி சீனிவாசன், அதிமுக சார்பில், முதல்வர் இ.பி.எஸ்., துணை முதல்வர் ஓ.பி.எஸ்., அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி ஆகியோர் பங்கேற்றனர்.இன்றைய பேச்சில் இரு கட்சிகளும் கூட்டணி அமைத்து போட்டியிடுவது எனவும் யாருக்கு எத்தனை தொகுதிகள் எனவும் முடிவானது. இதன்படி லோக்சபா தேர்தலில் பா.ஜ.,வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.ட்டாக நிருபர்களிடம் தெரிவித்தனர்.பேச்சுவார்த்தை முடிந்த பின்னர் ஓ.பி.எஸ்., நிருபர்களிடம் பேசுகையில்:2019 பொதுத்தேர்தலில் அதிமுகவும்,. பாஜவும் வெற்றிக்கூட்டணி அமைத்து தேர்தலை சந்திப்பதுஎன்று முடிவு செய்யப்பட்டுள்ளது. இரு கட்சிகள் இடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தில் பா.ஜ.,வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்குவது என தீர்மானிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.தொடர்ந்து பியூஷ்கோயல் நிருபர்களிடம் பேசுகையில்: (தமிழில் வணக்கம் என்று கூறிவிட்டு தொடங்கினார்) பார்லி., தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இரு கட்சிகளும் இணைந்து போட்டியிடுவது என முடிவு செய்துள்ளோம். இது போல் 21 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு பா.ஜ., ஆதரவு அளிக்கவும் தீர்மானிக்கப்பட்டது.இந்த தேசிய ஜனநாயக கூட்டணியில் நாற்பதும் நமதே (தமிழில் கூறினார்) என வெற்றி பெறுவோம். கடந்த 2016ல் ஜூலையில் ஜெயலலிதாவை சந்தித்து எரிசக்தி தொடர்பாக பேச்சு நடத்தினேன். இது என்றும் எனது நினைவில் உள்ளது
.தற்போது நாங்கள் ஏற்படுத்தியுள்ள இந்த கூட்டணியால் ஜெயலலிதா ஆத்மா மகிழ்ச்சி கொள்ளும். இந்த கூட்டணி வெற்றி பெறும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4325
இணைந்தது : 26/07/2014
மதிப்பீடுகள் : 1205

Back to top Go down

அரசியல் துளிகள். - Page 2 Empty Re: அரசியல் துளிகள்.

Post by சிவனாசான் on Wed Feb 20, 2019 6:52 am

புதுடில்லி:மத்திய அரசால் தடை செய்யப் பட்டுள்ள, 'சிமி' எனப்படும், இந்திய இஸ்லாமிய மாணவர் அமைப்பு, சட்ட விரோதமாக நிதி திரட்டி பயன்படுத்துவதையும், சட்ட விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவதையும் தடுக்கும் அதிகாரங்களை, மாநிலங்களுக்கு, மத்திய அரசு வழங்கி உள்ளது. மேலும், இந்த அமைப்புக்கான தடை, மேலும் ஐந்தாண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.'சிமி' பயங்கரவாத அமைப்பு, நாடு முழுவதும் பல்வேறு நாசகார செயல்களில் ஈடுபட்டு வந்ததால், 2001ல், மத்திய அரசால் தடை செய்யப்பட்டது. அது முதல், அவ்வப்போது, இந்த அமைப்பு மீதான தடை, தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருகிறது.கடைசியாக, 2014, பிப்., 1ல், சிமி அமைப்பின் மீதான தடையை, அப்போதைய, ஐ.மு., கூட்டணி அரசு நீட்டித்து, உத்தரவு பிறப்பித்தது.
இந்நிலையில், சிமி மீதான தடையை, மேலும் ஐந்தாண்டுகளுக்கு நீட்டித்து, மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுகுறித்து, மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை விபரம்:சிமி பயங்கரவாத அமைப்பு மீதான தடை, சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் கீழ், மேலும் ஐந்தாண்டுகளுக்கு நீட்டிக்கப்படுகிறது.இந்த சட்டத்தின் ஏழாவது பிரிவு, சட்டவிரோத மாக நிதி திரட்டி பயன்படுத்துவதை தடுக்கிறது; எட்டாம் பிரிவு, சட்டவிரோத அமைப்புகள், எந்தவொரு இடத்தையும், சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு பயன்படுத்துவதை தடை
செய்கிறது.சட்டவிரோதமாக நிதி திரட்டுவதையும், சட்ட விரோத நடவடிக்கைகளுக்கு, இடங்களை பயன் படுத்துவதையும் தடுக்க, இந்த சட்ட அதிகாரங்கள் அனைத்தையும், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் அரசுகளுக்கு, மத்திய அரசு வழங்கி உள்ளது.எனவே, சிமி அமைப்பு, சட்டவிரோத நடவடிக்கை களில் ஈடுபடாமல் தடுக்க,மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் அரசுகள், தேவையான நடவடிக்கைகளை எடுக்கலாம். சிமி அமைப்பின் சட்டவிரோத நடவடிக்கைகளை, உடன் தடுக்காவிடில், அந்த அமைப்பை சேர்ந்தோர், பிரிவினைவாத நடவடிக்கைகளில் தீவிரம் காட்டுவர்.தலைமறைவாக உள்ள சிமி பயங்கரவாதி கள், மீண்டும் ஒன்று சேர்ந்து, நாட்டின் மதச் சார் பின்மையை சீர்குலைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுவர்.
தேசவிரோத மனப்பான்மையை மக்கள் மத்தியில் விதைக்கச் செய்து, பிரிவினையை வளர்ப்பர். அதற்கு, இடம் தராது, மாநில, யூனியன் பிரதேச அரசுகள் அதிரடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.இதற்கிடையே, ஜம்மு - காஷ்மீர் உட்பட, நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள பாதுகாப்பு நிலை குறித்து, மத்திய உள்துறை அமைச்சர், ராஜ்நாத் சிங், நேற்று ஆய்வு நடத்தினார். இந்த கூட்டத்தில், தேசிய பாதுகாப்பு ஆலோசகர், அஜித் தோவல் உள்ளிட்ட மூத்த அதிகாரிகள்பங்கேற்றனர்சிமி' பயங்ரவாத அமைப்பு, 1977, ஏப்., 25ல், உத்தர பிரதேச மாநிலம், அலிகாரில் துவக்கப்பட்டது. இந்தியாவை மதச்சார்பற்ற நிலைப்பாட்டில் இருந்து விடுவித்து,இஸ்லாமிய நாடாக மாற்ற வேண்டும் என்பதே, இந்த அமைப்பின் கொள்கை. சிமி தலைவர்கள் சப்தர் நகோரி, அபு பைசல் உள்ளிட்டோர் செய்துள்ள கொடுமை யான குற்றங்கள் குறித்த தகவல்களை, மத்திய பிரதேசம், மஹாராஷ்டிரா, டில்லி, தமிழகம், தெலுங்கானா, கேரளா மாநிலங்களை சேர்ந்த போலீசார், விசாரணை அமைப்புகளுக்கு அளித்துள்ளனர்.இவர்களில், அபு பைசல், ஆயுள் தண்டனை அனுபவித்து வருகிறான். மற்ற பயங்கரவாத தலைவர்களும் சிறையில் அடைக்கப்பட்டுள்கடந்த, 2013ல், மத்தியப் பிரதேச மாநிலம், கண்ட்வாவில் உள்ள சிறையில் அடைக்கப் பட்டிருந்த, 'சிமி' பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த ஏழு பயங்கரவாதிகள், 14 அடி உயர சுவரை தாண்டி, தப்பியோடினர். இவர்களில் சிலர் கொல்லப்பட்டனர்; சிலர், மீண்டும் கைது செய்யப்பட்டனர். இதே அமைப்பைச் சேர்ந்த எட்டு பேர், 2016ல், ம.பி., மாநிலம், போபாலில் உள்ள சிறையில் இருந்து தப்பியோடி, பரபரப்பை ஏற்படுத்தினர்.கடந்த,2014ல், கர்நாடக தலைநகர் பெங்களூரில் உள்ள கிரிக்கெட் ஸ்டேடியத்தில், இவர்கள் குண்டுவெடிப்புகளை நிகழ்த்திஉள்ளனர்.கடந்த, 2017ல்,பீஹார் மாநிலம்,கயாவில் நடந்த குண்டு வெடிப்புகளின் பின்னணியில்,'சிமி' பயங்கர வாதிகள் இருந்ததாக, புலனாய்வு தகவல்கள் தெரிவிக்கின்றன.


சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4325
இணைந்தது : 26/07/2014
மதிப்பீடுகள் : 1205

Back to top Go down

அரசியல் துளிகள். - Page 2 Empty Re: அரசியல் துளிகள்.

Post by சிவனாசான் on Wed Feb 20, 2019 6:57 am

புதுடில்லி, தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி டில்லியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: சமூக நீதிக்காக போராடுவதே தன் கொள்கை என பா.ம.க. தலைவர் ராமதாஸ் கூறுவார். தற்போது அந்த கொள்கையை அ.தி.மு.க.- பா.ஜ.வுடன் கூட்டணி அமைத்து குழி தோண்டி புதைத்துவிட்டார்.இரு தரப்பிலும் பேச்சு நடத்தும் வழக்கமுள்ள கட்சியாக பா.ம.க. உள்ளது மிகத் தவறு. யாருடன் கூட்டணி என்பதில் குறைந்தபட்ச கொள்கை அடிப்படை இருந்தாக வேண்டும். அவ்வாறு இல்லாமல் யாரோடு வேண்டுமானாலும் கூட்டணி அமைக்கலாம் என பா.ம.க. நினைப்பது சரியானதாக தெரியவில்லை. தி.மு.க. காங்கிரஸ் கூட்டணி முடிவாகிவிட்டது. இது குறித்த அறிவிப்பு சென்னையில் வெளியாகும்.இவ்வாறு அவர் கூறினார்.
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4325
இணைந்தது : 26/07/2014
மதிப்பீடுகள் : 1205

Back to top Go down

அரசியல் துளிகள். - Page 2 Empty Re: அரசியல் துளிகள்.

Post by சிவனாசான் on Wed Feb 20, 2019 7:00 am

சென்னை: பா.ம.க.,விற்கு ராஜ்யசபா 'சீட்' ஒதுக்கப்பட்டதால் தே.மு.தி.க., தலைமை கடும் அதிர்ச்சி அடைந்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இதுகுறித்து தே.மு.தி.க. வட்டாரத்தில் கூறப்படுவதாவது: ஆரம்பத்தில் அ.தி.மு.க., தலைமையிடம்தே.மு.தி.க.,வும் ராஜ்யசபா எம்.பி. கேட்டு நிர்ப்பந்தம் செய்தது. உள்ளாட்சி தேர்தலில் 20 சதவீதஒதுக்கீடு வழங்க வேண்டும் எனவும் கேட்கப்பட்டது. ஆனால் ராஜ்யசபா 'சீட்' தருவது குறித்து பின்னர் பரிசீலிப்பதாக அ.தி.மு.க. தரப்பில்கூறப்பட்டது.இந்நிலையில் பா.ம.க.விற்கு ஏழு தொகுதிகள் மட்டுமின்றி ஒரு ராஜ்யசபா எம்.பி. பதவியும் தரப்பட உள்ளது. இதனால் பா.ம.க. போல தே.மு.தி.க.வுக்கும் ராஜ்யசபா பதவியை உறுதி செய்ய வேண்டும் என அ.தி.மு.க. - பா.ஜ.விடம் வலியுறுத்தப்பட்டு வருகிறது. இதனால் அ.தி.மு.க.வுடன் கூட்டணியை உறுதி செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அந்த வட்டாரத்தில் கூறப்படுகிறது.


சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4325
இணைந்தது : 26/07/2014
மதிப்பீடுகள் : 1205

Back to top Go down

அரசியல் துளிகள். - Page 2 Empty Re: அரசியல் துளிகள்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை