உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» கருத்துக் கணிப்புகளை எப்போது வெளியிடலாம்: தமிழக தேர்தல் துறை தகவல்
by சிவனாசான் Today at 9:43 pm

» வயதாகும்போது கண்ணும் காதும் முதலில் செயலிழப்பது ஏன்?
by Dr.S.Soundarapandian Today at 7:49 pm

» தொப்புளில் எண்ணை போடுங்கள்!
by Dr.S.Soundarapandian Today at 7:48 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு
by Dr.S.Soundarapandian Today at 7:45 pm

» உலகைச் சுற்றி...
by Dr.S.Soundarapandian Today at 7:43 pm

» மருத்துவ குறிப்புகள் - தொடர் பதிவு
by Dr.S.Soundarapandian Today at 7:42 pm

» ‘குஞ்சுண்ணி’ எழுதிய இரண்டு கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 7:41 pm

» மைக்ரோ கதை
by Dr.S.Soundarapandian Today at 7:39 pm

» பேல்பூரி - தினமணி கதிர்
by ayyasamy ram Today at 2:47 pm

» மணமகனுக்கு தர்மசங்கடம்: ரூ.80 ஆயிரம் இழப்பீடு தருகிறது ரெய்மண்ட் துணிக்கடை
by ayyasamy ram Today at 11:29 am

» ஐபிஎல் 2019 : தில்லியை வெல்லுமா சென்னை? இன்று மோதல்
by ayyasamy ram Today at 10:48 am

» பஞ்சாப் வெற்றி: கெயில் அதிரடி 79
by ayyasamy ram Today at 10:45 am

» உணர்வுகளும் நினைவுகளும் புத்தகம் தேவை
by Guest Today at 10:06 am

» மன்கட் முறையில் அவுட்டான பட்லர் - அஸ்வின் செய்தது சரியா... ஐசிசி விதி சொல்வது என்ன?
by ayyasamy ram Today at 9:28 am

» இ-சிகரெட்டுகளுக்கு நிரந்த தடை கோரி பிரதமர் மோடிக்கு 1000 டாக்டர்கள் கடிதம்
by ayyasamy ram Today at 8:55 am

» பிரபஞ்சத்தில் அணுக்களின் நிறை என்ன?
by ayyasamy ram Today at 8:44 am

» #திருக்கழுக்குன்றம்:-#அருள்மிகு #வீரபத்திரருக்கு அமைந்துள்ள கோயில்கள்.
by velang Today at 7:40 am

» வேலன்:-எம்பி3 பாடல்களை வெட்ட.சேர்க்க Ablessoft -MP3 Cutter
by velang Today at 7:37 am

» ஒற்றுமையாய் வாழ்வதாலே உண்டு நன்மையே- சினிமா பாடல் காணொளி
by ayyasamy ram Yesterday at 3:56 pm

» சிறிய இடைவேளைக்குப் பின் - குறும்படம்- காணொளி
by ayyasamy ram Yesterday at 3:00 pm

» தினத்தந்தி ஆதிச்சநல்லூர்
by kuloththungan Yesterday at 1:25 pm

» தமிழ் ஈ பப் புத்தகங்கள் ஈகரை வெப் இல் எப்படி டவுன்லோட் செய்வது என்று தயவுசெய்து கூறுங்கள்
by aeroboy2000 Yesterday at 11:28 am

» யாரோவாகிப் போன அவள்..கவிதை-(பிரியா ஸ்ரீதர் )
by aeroboy2000 Yesterday at 10:52 am

» ஐ.பி.எல். கிரிக்கெட்: மும்பையை வீழ்த்தியது டெல்லி ரிஷாப் பான்ட் 18 பந்தில் அரைசதம் விளாசினார்
by ayyasamy ram Yesterday at 9:34 am

» கேள்வியும் நானே .. பதிலும் நானே . -வெ.இறையன்பு
by ayyasamy ram Yesterday at 9:27 am

» காலச்சக்கரம் நரசிம்மா எழுதிய 'அத்திமலைத்தேவன்'
by HariSkumar Yesterday at 9:19 am

» யாரோவாகிப் போன அவள்..கவிதை
by ayyasamy ram Yesterday at 9:04 am

» “தமிழனின் அன்பாலும், ஆசியாலும் கண்கலங்கினேன்” சென்னை பவுலர் ஹர்பஜன்சிங் உருக்கம்
by ayyasamy ram Yesterday at 9:01 am

» காங்கிரஸ் சார்பில் சிவகங்கை தொகுதியில் கார்த்தி சிதம்பரம் போட்டி
by ayyasamy ram Yesterday at 8:43 am

» இந்தியாவின் மூத்த வாக்காளர் விளம்பர துாதராக நியமனம்
by ayyasamy ram Yesterday at 8:01 am

» Dr. கவிதாசன் - புத்தகம் தேவை
by ManiThani Sun Mar 24, 2019 9:46 pm

» சுடுகாட்டில் தியானம் செய்தோ, கிளி ஜோசியத்தை நம்பியோ நான் அரசியல் செய்யவில்லை -ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்
by ayyasamy ram Sun Mar 24, 2019 5:40 pm

» வாரணாசி நாடாளுமன்ற தொகுதியில் மோடியை எதிர்த்து 111 தமிழக விவசாயிகள் போட்டி
by ayyasamy ram Sun Mar 24, 2019 5:38 pm

» அஜித் பட பாணியில் சிஎஸ்கே அணியினர் ! வைரலாகும் மாஸ் புகைப்படம்
by ayyasamy ram Sun Mar 24, 2019 1:25 pm

» மதுக்கடைகளை 3 நாள் மூட உத்தரவு: குடிமகன்கள் அதிர்ச்சி
by ayyasamy ram Sun Mar 24, 2019 1:22 pm

» அதிக கட்டண வசூலில் சென்னை விமான நிலைய மெட்ரோ ரயில் நிலையம் முதலிடம்
by ayyasamy ram Sun Mar 24, 2019 1:12 pm

» இது ஆந்திரா அக்கப்போர்! ரூ.895 கோடி சொத்து உள்ள வேட்பாளருக்கு சொந்தமாக ஒரு கார் கூட இல்லையாம்.. -
by ayyasamy ram Sun Mar 24, 2019 1:10 pm

» வெற்றியுடன் தொடங்கியது சென்னை சூப்பர் கிங்ஸ் ஐ.பி.எல். கிரிக்கெட்: பெங்களூருவை 70 ரன்னில் சுருட்டியது
by ayyasamy ram Sun Mar 24, 2019 12:33 pm

» வந்து விட்டது, 'ஹெலி டூரிசம்!'
by சக்தி18 Sun Mar 24, 2019 12:17 pm

» புள்ளிகளால் ஆன ஏரி!
by சக்தி18 Sun Mar 24, 2019 12:09 pm

» அப்படி என்ன இருக்கிறது இலக்கம் 11 இல்?
by சக்தி18 Sun Mar 24, 2019 12:04 pm

» ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2019 10:33 am

» அட்சயபாத்திரம் எப்படி செயல்படுகிறது?
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2019 10:32 am

» பாலைவனச் சோலை!
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2019 10:27 am

» தண்டனை! - கவிதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2019 10:25 am

» காரைக்கால் அம்மையார் கோயிலில் ஐக்கியப் பெருவிழா
by ayyasamy ram Sun Mar 24, 2019 9:55 am

» ஏப்ரல் மாதம் திருப்பதிக்கு செல்வோரின் கவனத்திற்கு!
by ayyasamy ram Sun Mar 24, 2019 9:48 am

» 2019-ல், அதிக முதல் நாள் வசூலைக் கண்ட ஹிந்திப் படம்!
by ayyasamy ram Sun Mar 24, 2019 9:44 am

» விவேக் கதாநாயகனாக நடிக்கும் வெள்ளைப்பூக்கள்: ஏப்ரல் வெளியீடு!
by ayyasamy ram Sun Mar 24, 2019 9:40 am

» உடலின் பாதிப்புக்கு கை விரல் வைத்தியம்!
by ayyasamy ram Sun Mar 24, 2019 6:06 am

Admins Online

நீதி மன்ற துளிகள்.

நீதி மன்ற துளிகள்.

Post by சிவனாசான் on Thu Feb 14, 2019 7:25 pm

First topic message reminder :

சென்னை : தமிழகத்தில் அனைத்து உயரதிகாரிகளின் அலுவலக அறைகளில் சிசிடிவி அமைப்பது கட்டாயம் என சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.ஐஜி முருகன் மீது பெண் அதிகாரி பாலியல் புகார் அளித்திருந்தார். இது தொடர்பான வழக்கை இன்று விசாரித்த ஐகோர்ட் நீதிபதி சுப்ரமணியன், தமிழகம் முழுவதும் அனைத்து துறைகளின் உயரதிகாரிகளின் அலுவலக அறைகளிலும் சிசிடிவி கேமிராக்கள் பொருத்த வேண்டும். 2 வாரங்களில் அதிகாரிகளின் அலுவலக அறைகளில் சிசிடிவி கேமிராக்கள் பொருத்தப்பட வேண்டும். வருங்காலத்தில் பணி செய்யும் இடங்களில் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் தொல்லைகளை தடுக்க சிசிடிவி கேமிராக்கள் பொருத்துவது அவசியம். வழக்கை விசாரித்த நீதிபதி என்ற முறையில் எனது அறையிலும் 2 சிசிடிவி பொருத்த வேண்டும் என தலைமை செயலாளருக்கு உத்தரவிட்டுள்ளார்.மேலும், ஐஜி முருகன் மீதான பாலியல் குற்றங்களை சிபிசிஐடி தொடர்ந்து விசாரிக்கலாம் என உத்தரவிட்டார். தொடர்ந்து இது தொடர்பான அனைத்து வழக்குகளையும் முடித்து வைப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4050
இணைந்தது : 26/07/2014
மதிப்பீடுகள் : 1168

View user profile

Back to top Go down


Re: நீதி மன்ற துளிகள்.

Post by சிவனாசான் on Sat Feb 16, 2019 8:11 pm

மதுரை:மதுரை வழக்கறிஞர் முத்துக்குமார். உயர்நீதிமன்றம் மதுரைக் கிளையில் இவர் தாக்கல் செய்த பொது நல மனு: மதுரை எம்.ஜி.ஆர்., பஸ் ஸ்டாண்டில் நடைபாதை, பெண்கள் பாலூட்டும் அறை, பயணிகள் காத்திருப்பு அறைகளை ஆக்கிரமித்து கடைகள் வைத்துள்ளனர். ஆங்காங்கே ஆட்டோக்களை நிறுத்துகின்றனர். பயணிகள் சிரமப்படுகின்றனர். அடிக்கடி விபத்துகள், போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.
நீதிபதிகள் என்.கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் அமர்வு: ஆக்கிரமிப்புகளை மாநகராட்சி நிர்வாகம் அகற்ற வேண்டும். பஸ் ஸ்டாண்ட் அருகிலுள்ள மனமகிழ் மன்றத்தை அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும். பஸ் ஸ்டாண்டில் எவ்வளவு ஆக்கிரமிப்புகள் உள்ளன, அகற்ற மேற்கொண்ட நடவடிக்கை என்ன என்பது குறித்து மதுரை கலெக்டர், மாநகராட்சி கமிஷனர் பிப்.,22 பதில் மனு செய்ய வேண்டும் என்றனர்.
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4050
இணைந்தது : 26/07/2014
மதிப்பீடுகள் : 1168

View user profile

Back to top Go down

Re: நீதி மன்ற துளிகள்.

Post by சிவனாசான் on Sun Feb 17, 2019 4:52 pm

சென்னை: ரேஷன் கடைகளில், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த, அரசுக்கு அனுப்பப்பட்ட பரிந்துரைகள்மீது, எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து, கூட்டுறவு மற்றும் உணவு பாதுகாப்பு துறையின் முதன்மை செயலர், அறிக்கை தாக்கல் செய்ய, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.ரேஷன் கடை ஊழியர் ஒருவர், பணிநீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு, நீதிபதி, டி.கிருஷ்ணகுமார் முன், விசாரணைக்கு வந்தது.முறைகேட்டில் ஊழியர்கள் ஈடுபடுவதை தடுக்க, அனைத்து ரேஷன் கடைகளிலும், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவது குறித்து, அறிக்கை தாக்கல் செய்ய, நீதிபதி உத்தரவிட்டார்.ரூ.97 கோடி
நுகர்பொருள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறையின், இணை ஆணையர் தாக்கல் செய்த அறிக்கை:நுகர்பொருள் வாணிப கழகம் மற்றும் கூட்டுறவு சங்கங்களின் கீழ், ௩௫ ஆயிரத்து, ௨௩௨ ரேஷன் கடைகள் இயங்குகின்றன.ரேஷன் கடைகளில் கண்காணிப்பு கேமராக்கள்அமைக்கும் பணியை, இந்த இரண்டு துறைகள்தான் மேற்கொள்ள வேண்டும்.தமிழகத்தில், ௨௬ மாவட்டங்களில், ௧,௪௫௫ கடைகளை, நுகர்பொருள் வாணிப கழகம் நடத்துகிறது. இங்கு, கேமராக்கள் பொருத்த, ௨௦.௮௦ கோடி ரூபாய் செலவாகும் என, கணக்கிடப்பட்டுள்ளது. இதற்கான பரிந்துரையை, அரசுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ௩௫ ஆயிரத்து, ௨௩௨ கடைகளிலும், கேமராக்கள் பொருத்த, ௯௭ கோடி ரூபாய் செலவாகும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.இதையடுத்து, வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, நீதிபதி, டி.கிருஷ்ணகுமார் பிறப்பித்த உத்தரவு:கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறையின் ஆணையர் தாக்கல் செய்த அறிக்கை, பரிசீலிக்கப்பட்டது.'ஸ்மார்ட் கார்டு, பாயின்ட் ஆப் சேல்ஸ்' கருவி மற்றும், 'பயோமெட்ரிக்' கருவி பயன்படுத்துவதன் வழியாக, பெரிய அளவில் முறைகேடுகள் தடுக்கப்படும் என, கூறப்பட்டுள்ளது.முதல் கட்டமாக, ௧,௫௦௦ குடும்ப அட்டைகள் உள்ள, ௩௧௪ ரேஷன் கடைகளிலும், ௧௦௨ சிறிய பல்பொருள் அங்காடிகளிலும், கேமராக்கள் பொருத்த, அரசுக்கு கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் பரிந்துரை அனுப்பி உள்ளார்.
உத்தரவு அனைத்து ரேஷன் கடைகளிலும், பயோ மெட்ரிக் விரல் ரேகை பதிவு கருவி பொருத்த, 'டெண்டர்' அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது.அரசுக்கு, கூட்டுறவு சங்கங்களின் பதிவாளரின் அறிக்கை அனுப்பப்பட்டிருப்பதாக, சிறப்பு பிளீடர், எல்.பி.சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார்.எனவே, அரசுக்கு அனுப்பிய பரிந்துரைகளின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து, கூட்டுறவு மற்றும் உணவு பாதுகாப்பு துறையின் முதன்மை செயலர், அறிக்கை அளிக்க வேண்டும்.விசாரணை, மார்ச், ௧௧க்கு தள்ளி வைக்கப்படுகிறது.இவ்வாறு, நீதிபதி உத்தரவிட்டார்.

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4050
இணைந்தது : 26/07/2014
மதிப்பீடுகள் : 1168

View user profile

Back to top Go down

Re: நீதி மன்ற துளிகள்.

Post by சிவனாசான் on Sun Feb 17, 2019 4:54 pm

சென்னை, தனியார் மருத்துவமனைகளுக்கு, மின் கட்டணத்தை குறைத்து, சிறப்பு கட்டணம் நிர்ணயிக்கக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மனுவுக்கு, இரண்டு வாரங்களில் பதில் அளிக்க, தமிழக அரசுக்கு, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.தனியார் மருத்துவமனைகள் சங்கம் சார்பில், உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு:வர்த்தக நிறுவனங்களுக்கு விதிக்கப்படும் மின் கட்டணமே, தனியார் மருத்துவமனைகளுக்கும் விதிக்கப்படுகிறது. தரமான மருத்துவ சேவைக்காக, நவீன வகையிலான உபகரணங்களை பயன்படுத்துகிறோம். அதற்கு, அதிக அளவில் மின்சாரம் செலவாகிறது.தியேட்டர்கள், தொழிற்சாலைகள், ஓட்டல்களுக்கு விதிக்கப்படும் வர்த்தக கட்டணம் போல, மருத்துவமனைகளுக்கும் விதிக்கப்படுகிறது. இதனால், நோயாளிகளின் சிகிச்சை கட்டணம் அதிகரிக்கிறது.வர்த்தக நிறுவனங்களுக்கான கட்டணம் போல அல்லாமல், மருத்துவமனைகளுக்கான மின்சார கட்டணத்தை குறைக்க வேண்டும்.கர்நாடகா, மஹாராஷ்டிரா மாநிலங்களில், தனியார் மருத்துவமனைகளுக்கு, வர்த்தக கட்டணம் வசூலிக்காமல், சிறப்பு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேபோல், சிறப்பு கட்டணத்தை நிர்ணயிக்க உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.மனு, நீதிபதி, டி.ராஜா முன், விசாரணைக்கு வந்தது. மனுவுக்கு, இரண்டு வாரங்களில் பதில் அளிக்கும்படி, தமிழக அரசு மற்றும் மின்சார ஒழுங்கு முறை ஆணையத்துக்கு, நீதிபதி உத்தரவிட்டார்
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4050
இணைந்தது : 26/07/2014
மதிப்பீடுகள் : 1168

View user profile

Back to top Go down

Re: நீதி மன்ற துளிகள்.

Post by சிவனாசான் on Sun Feb 17, 2019 4:56 pm

மதுரை, 'பிளாஸ்டிக்கிற்கு தடை விதித்த தமிழக அரசின் நடவடிக்கை, வரவேற்கும் வகையில் உள்ளது' என, கருத்து வெளியிட்ட உயர் நீதிமன்ற மதுரைக் கிளை, இது குறித்து ஆய்வு செய்ய, நிபுணர் குழு அமைக்க தாக்கலான வழக்கில், அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.மதுரையைச் சேர்ந்த, ரமேஷ் என்பவர், தாக்கல் செய்த பொதுநல மனுவில் கூறியிருந்ததாவது:தெளிவு இல்லைஒருமுறை பயன்படுத்தி, துாக்கி எறியும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்து, 2018 ஜூனில் தமிழக சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அரசாணை பிறப்பித்தது. இதன்படி, 2019 ஜன.,1 முதல் பிளாஸ்டிக் தடை அமலில் உள்ளது.பிளக்ஸ், பிளாஸ்டிக் பேனர் பற்றி அரசாணையில் குறிப்பிடவில்லை.எந்தெந்த பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவது, தவிர்ப்பது என தெளிவற்ற நிலையில் அரசாணை உள்ளது. பால் பாக்கெட்டுக்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால்,தண்ணீர் பாக்கெட்டுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.வெளிநாடுகளிலிருந்து, பிளாஸ்டிக்கினால், பேக்கிங் செய்து பொருட்கள் இறக்குமதியாகின்றன. அதுபற்றி அரசாணையில் தெளிவுபடுத்தவில்லை.நிபுணர் குழுகேரளாவில் பிளாஸ்டிக் தடையை, முறையாக அமல்படுத்துவது குறித்து, ஆய்வு செய்ய, அம்மாநில அரசு, நிபுணர் குழு அமைத்துள்ளது. அதுபோல், அரசாரணையில் உள்ள குறைபாடுகளை களைய, தமிழகத்தில் பிளாஸ்டிக்கை முழுமையாக தடை செய்யும் வகையில், ஆய்வு செய்ய நிபுணர் குழு அமைக்க , அரசுக்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.நீதிபதிகள், என்.கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் அமர்வு விசாரித்தது.தமிழக அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர், ஆஜராகி வாதிடுகையில்,'பிளாஸ்டிக் தடை, வெற்றிகரமாக செயல்படுத்தப்படுகிறது.'தடை செய்த பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவோருக்கு, புதிய சட்டப்படி மூன்று முறை அபராதம் விதிக்கப்படும். 'நான்காவது முறை மீறினால், உரிமம் ரத்து செய்யப்படும்' என்றார்.நீதிபதிகள் கூறியதாவது:பிளாஸ்டிக் தடை விதித்த தமிழக அரசின் நடவடிக்கை வரவேற்கும் வகையில் உள்ளது.அனைத்து வகை பிளாஸ்டிக்குகளையும் தடை செய்ய வேண்டும் என்பதில், மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. மனுதாரர் இதற்கு முன், பல பொதுநல மனுக்கள் தாக்கல் செய்துள்ளார்.சந்தேகம்இவ்வழக்கை தாக்கல் செய்ததில், சந்தேகம் எழுகிறது. மனுதாரர் கோருவதுபோல் குழு அமைத்தால், அரசின் நடவடிக்கைக்கு தொய்வு ஏற்படுத்தும்.இவ்வாறு கூறினர்.பின், தமிழக சுற்றுச்சூழல், நகராட்சி நிர்வாகச் செயலருக்கு நோட்டீஸ் அனுப்பி, இரண்டு வாரங்கள் ஒத்திவைத்தனர்.
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4050
இணைந்தது : 26/07/2014
மதிப்பீடுகள் : 1168

View user profile

Back to top Go down

Re: நீதி மன்ற துளிகள்.

Post by சிவனாசான் on Sun Feb 17, 2019 4:59 pm

கோவை:- ''பொருளாதார குற்ற வழக்குகளை விரைந்து முடிக்க, வழக்கு சாட்சியங்களை ஆராய, பொருளாதார குற்றங்களின் பரிமாணங்களை நீதிபதிகள் அறிந்து கொள்ள வேண்டும்,'' என, சுப்ரீம் கோர்ட் நீதிபதி இந்திரா பானர்ஜி பேசினார்.கோவை, ரேஸ்கோர்ஸ், தமிழ்நாடு மாநில நீதித்துறை அகாடமியில், பொருளாதார குற்றங்களின் பரிமாணங்கள் மற்றும் இயக்கம் குறித்த தேசிய அளவிலான இரண்டு நாள் கருத்தரங்கம் நேற்று துவங்கியது.நிகழ்ச்சியில், சுப்ரீம் கோர்ட் நீதிபதி இந்திரா பானர்ஜி பேசியதாவது:நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு, பொருளாதார குற்றங்கள் தடையாக உள்ளன. இதை, 29வது சட்ட ஆணையம் தெரிவித்துள்ளது. ஒப்பந்தம், உரிமம் பெறுவதற்கு அரசு அதிகாரிகளை தவறாக பயன்படுத்துவது, அரசு இட ஆக்கிரமிப்புகள் உள்ளிட்டவையும் பொருளாதார குற்றங்கள் தான்.பண மோசடி குற்றங்கள் நிதி திட்டத்துக்கு மட்டுமில்லாமல், நாட்டின் நேர்மை, இறையாண்மைக்கும் குந்தகம் விளைவிக்கிறது. பங்குசந்தை மோசடி, கள்ளச்சந்தை, கடத்தல், கலப்படம், கொள்ளை, நில அபகரிப்பு, போதை பொருள் கடத்தல், காப்பீடு மோசடி, மக்களின் பணத்தை தவறாக பயன்படுத்துவது சமூக பொருளாதார குற்றங்களாகும்.அதிகாரத்தில் இருப்பவர்களால் செய்யப்படும் பொருளாதார குற்றங்கள், 'ஒயிட் காலர்' குற்றங்களாகும். பொருளாதார குற்றங்கள் இதுவரை வரையறுக்கப்படவில்லை. இருந்தும், 2014ம் ஆண்டு தேசிய குற்ற ஆவண காப்பகம் சொல்லிய, 24 வகையான பொருளாதார குற்றங்களில் வரி ஏய்ப்பு முதன்மையாக உள்ளது. பொருளாதார வழக்குகளை விரைந்து முடிக்க, வழக்கு சாட்சியங்களை ஆராய பொருளாதார குற்றங்களை நீதிபதிகள் அறிந்து கொள்ள வேண்டும்.இவ்வாறு நீதிபதி இந்திரா பானர்ஜி பேசினார்.உயர்நீதிமன்ற மதுரை கிளை தலைமை நீதிபதி விஜயா கமலேஷ் தஹில்ரமணி பேசுகையில், ''நீதித்துறையில் உள்ளவர்கள் நாளுக்கு நாள் தங்கள் தகவல்களை மேம்படுத்தி கொள்ள வேண்டும். ''பொருளாதார குற்றங்கள், தனி நபரை மட்டுமின்றி, சமுதாயம், நாட்டின் பொருளாதாரத்தையும் பாதிக்கிறது. நுட்பமான தொழில்நுட்பம், வழிமுறைகளை புதிது புதிதாக பொருளாதார குற்றங்களில் ஈடுபடும் நபர்களால் கையாளப்படுகிறது,'' என்றார்.

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4050
இணைந்தது : 26/07/2014
மதிப்பீடுகள் : 1168

View user profile

Back to top Go down

Re: நீதி மன்ற துளிகள்.

Post by சிவனாசான் on Mon Feb 18, 2019 7:56 pm

புதுடில்லி : ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தியை கைது செய்வதற்கான தடையை மார்ச் 8 ம் தேதி வரை நீட்டித்து டில்லி பாட்டியாலா கோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது.
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4050
இணைந்தது : 26/07/2014
மதிப்பீடுகள் : 1168

View user profile

Back to top Go down

Re: நீதி மன்ற துளிகள்.

Post by சிவனாசான் on Mon Feb 18, 2019 8:00 pm

மதுரை : ஜாக்டோ ஜியோ போராட்டம் தொடர்பான வழக்கை இன்று விசாரித்த ஐகோர்ட் மதுரை கிளை, அரசு ஊழியர்களுக்கு உரிமை எவ்வளவு முக்கியமோ அது போல கடமையும், பணியும் முக்கியம் என கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும், அரசு ஊழியர்களின் குழந்தைகளை அரசு பள்ளிகளில் தான் சேர்க்க வேண்டும் என்ற விதியை ஏன் கொண்டு வரக்கூடாது எனவும் நீதிபதிகள் கேள்வி எழுப்பி உள்ளனர்.
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4050
இணைந்தது : 26/07/2014
மதிப்பீடுகள் : 1168

View user profile

Back to top Go down

Re: நீதி மன்ற துளிகள்.

Post by சிவனாசான் on Mon Feb 18, 2019 8:01 pm

சென்னை : கோவையில் ஜல்லிக்கட்டு போட்டிக்காக அமைச்சர்களை வரவேற்று, கடந்த ஒரு வாரமாக விதிகளை மீறி பேனர் வைக்கப்பட்டதாக டிராபிக் ராமசாமி சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த ஐகோர்ட், விதிகளை மீறி வைக்கப்படும் பேனர்கள் குறித்து வழக்குகள், அது தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்குளும் அதிகரித்து கொண்டே செல்கின்றன. சாலையில் வைக்கப்பட்டுள்ள விதிமீறிய பேனர்கள் அதிகாரிகளுக்கு தெரிவதில்லையா ? அதிகாரிகள் ஹெலிகாப்டரிலா பறந்து செல்கிறார்கள்? சாலையில்தானே செல்கின்றனர். இவ்வாறு கடும் கண்டனத்துடன் கேள்வி எழுப்பி உள்ளது.
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4050
இணைந்தது : 26/07/2014
மதிப்பீடுகள் : 1168

View user profile

Back to top Go down

Re: நீதி மன்ற துளிகள்.

Post by சிவனாசான் on Mon Feb 18, 2019 8:03 pm

புதுடில்லி : போராட்டத்தின் போது பஸ்கள் மீது கல்வீசிய சம்பவம் தொடர்பான வழக்கில் முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதனை ரத்து செய்யக்கோரி பாலகிருஷ்ணா ரெட்டி சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கை இன்று விசாரித்த சுப்ரீம் கோர்ட், பாலகிருஷ்ணா ரெட்டிக்கு அளிக்கப்பட்ட தண்டனையை ரத்து செய்ய மறுத்துவிட்டது. மேலும் இவ்வழக்கில் 4 வாரங்களுக்குள் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்யவும் சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது...
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4050
இணைந்தது : 26/07/2014
மதிப்பீடுகள் : 1168

View user profile

Back to top Go down

Re: நீதி மன்ற துளிகள்.

Post by சிவனாசான் on Wed Feb 20, 2019 8:31 pm

திருநெல்வேலி மணல் கடத்தல்காரர்களை பிடிக்க சென்ற தனிப்பிரிவு போலீஸ்காரர் ஜெகதீஷ் துரையை கம்பியால் அடித்து கொலை செய்த வழக்கில் 5 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து நெல்லை கோர்ட் தீர்ப்பளித்துள்ளது.திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அருகே விஜய நாராயணம் போலீஸ் ஸ்டேஷனில் தனிப்பிரிவு போலீஸ்காரராக பணியாற்றி வந்தார். 2018 மே 6 ம் தேதி இரவில் பரப்பாடி அடுத்துள்ள கக்கன்நகர் நம்பியாற்றில் மணல் கடத்தி வந்த டிராக்டரை அந்த வழியாக பைக்கில் வந்த தனிப்பிரிவு போலீஸ்காரர் ஜெகதீஷ்துரை தடுத்தார்.இதில் ஏற்பட்ட மோதலில் மணல் கடத்திய கும்பல், அவரை கம்பியால் அடித்து கொலை செய்துவிட்டு டிராக்டரில் தப்பினர். இது தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த 6 பேர் கைது செய்யப்பட்டனர். இவ் வழக்கு நெல்லை மாவட்ட 4 வது கூடுதல் செஷன்ஸ் கோர்ட்டில் நடந்தது. இதில் குற்றவாளிகள் முருகன் 29, கிருஷ்ணன் 50, மணிகுமார் 24, ராஜா ரவி 25, அமிதாபட்சன் 25 ஆகியோருக்கு ஆயுள் தண்டனையும் விதித்து நீதிபதி கிளாட்ஸன் பிளஸ்டு தாகூர் உத்தரவிட்டார்.
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4050
இணைந்தது : 26/07/2014
மதிப்பீடுகள் : 1168

View user profile

Back to top Go down

Re: நீதி மன்ற துளிகள்.

Post by SK on Thu Feb 21, 2019 12:04 pm

அருமையான தொகுப்பு ஐயா
வாழ்த்துகள்


SK
SK
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 8048
இணைந்தது : 10/12/2010
மதிப்பீடுகள் : 1540

View user profile

Back to top Go down

Re: நீதி மன்ற துளிகள்.

Post by சிவனாசான் on Thu Feb 21, 2019 7:06 pm

நன்றி அன்பரே நன்றி.
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4050
இணைந்தது : 26/07/2014
மதிப்பீடுகள் : 1168

View user profile

Back to top Go down

Re: நீதி மன்ற துளிகள்.

Post by சிவனாசான் on Sat Feb 23, 2019 4:48 pm

சென்னை, தமிழகம் முழுவதும், அரசு நிலங்கள், நீர் நிலைகள், நீர்வழி தடங்களை ஆக்கிரமித்து, 3,168 வழிபாட்டு தலங்கள் கட்டப்பட்டு உள்ளதாக, உயர் நீதிமன்றத்தில், தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்துள்ளது.'அரசு நிலங்கள், பொது சாலைகளை ஆக்கிரமித்து, வழிபாட்டு தலங்கள் கட்டக்கூடாது' என்ற அரசாணையை பின்பற்ற உத்தரவிடக் கோரி, ராமகிருஷ்ணன் என்பவர், உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, எஸ்.எம்.சுப்பிரமணியம், அரசு நிலங்கள், புறம்போக்கு நிலங்கள், நீர்நிலைகள் ஆகியவற்றை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கோவில்கள், மசூதிகள், தேவாலயங்கள் உள்ளிட்ட, வழிபாட்டு தலங்கள் குறித்த விபரங்களை, அறிக்கையாக தாக்கல் செய்யும்படி, அரசுக்கு உத்தரவிட்டிருந்தார்.இந்த வழக்கு, நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக நகராட்சி நிர்வாக துறையின் துணை செயலர், ராமநாதன், அறிக்கை தாக்கல் செய்தார். அந்த அறிக்கை விபரம்:சென்னை உட்பட, 12 மாநகராட்சிகள், 122 நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளின், நீர்நிலைகள், நீர் வழித்தடங்கள், அரசு நிலங்கள், சாலைகள் ஆகியவற்றை ஆக்கிரமித்து, 3,168 வழிபாட்டு தலங்கள் கட்டப்பட்டுள்ளன.இவற்றில், 3,003 கோவில்கள்; 131 தேவாலயங்கள்; 27 மசூதிகள்; பிற மதத்தை சேர்ந்த ஏழு வழிபாட்டு தலங்கள் என, மொத்தம், 3,168 வழிபாட்டு தலங்கள், அரசு நிலங்களை ஆக்கிரமித்துகட்டப்பட்டுள்ளன.இவ்வாறு,அறிக்கையில்\கூறப்பட்டுள்ளது.இதையடுத்து, இந்த வழக்கு விசாரணையை தள்ளி வைத்து, நீதிபதி சுப்பிரமணியம் உத்தரவிட்டார்.
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4050
இணைந்தது : 26/07/2014
மதிப்பீடுகள் : 1168

View user profile

Back to top Go down

Re: நீதி மன்ற துளிகள்.

Post by பழ.முத்துராமலிங்கம் on Sat Feb 23, 2019 6:11 pm

நீராதாரம் காக்க நிச்சயம் நடவடிக்கை
அவசியம்.
நல்லதொரு தகவல் பகிர்ந்தமைக்கு நன்றி ஐயா.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 11956
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 2650

View user profile

Back to top Go down

Re: நீதி மன்ற துளிகள்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை