உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» ஷீரடியில் ஆள் கடத்தல்? ஓராண்டில் 88 பேர் மாயம்
by ayyasamy ram Today at 7:46 am

» பிரிட்டன் தேர்தல்: 15 இந்திய வம்சாவளி எம்.பி.,க்கள் வெற்றி
by ayyasamy ram Today at 7:44 am

» சென்னையில் மூட்டை மூட்டையாக பணம் பறிமுதல்
by ayyasamy ram Today at 7:41 am

» இந்தியாவில் தங்கம் கடத்தல் அதிகரிக்க காரணம் என்ன?
by ayyasamy ram Today at 7:38 am

» சக்திவாய்ந்த 100 பெண்கள் பட்டியலில் நிர்மலா
by ayyasamy ram Today at 7:35 am

» வேலன்:-போல்டர்களை மற்றவர்கள் காப்பி செய்வது மற்றும் டெலிட் செய்வதை தவிர்க்க-Prevent exe
by velang Today at 7:31 am

» குருவிக் கூட்டுக்கும், விதிகளுண்டு!
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» பெரியவா சரணம் !
by T.N.Balasubramanian Yesterday at 8:19 pm

» பிரிட்டனில் தனி மெஜாரிட்டி பெற்றது ஆளுங்கட்சி- போரிஸ் ஜான்சன் மீண்டும் பிரதமர் ஆகிறார்
by ayyasamy ram Yesterday at 6:00 pm

» வயிறு வாழ்த்தும்!
by krishnaamma Yesterday at 2:57 pm

» அந்திம கிரியை!
by krishnaamma Yesterday at 2:55 pm

» கேட்டு ரசித்த திரைப்பட பாடல் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:36 pm

» "வடநாட்டு மார்வாடிக்கு மகாபெரியவா இட்ட கட்டளை!"
by krishnaamma Yesterday at 2:29 pm

» திருமாலிரும் சோலை அழகர் !
by krishnaamma Yesterday at 2:17 pm

» "பேயனும், விளக்கெண்ணையும்"
by krishnaamma Yesterday at 2:04 pm

» பகீரதப் பிரயத்தனம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» மார்கழி மாதத்தின் மகத்துவம் !
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாழ்வில் உயர்வதும், தாழ்வதும் அவரவர் எண்ணத்தைப் பொறுத்ததே..!
by krishnaamma Yesterday at 1:23 pm

» 2 வருடங்கள் நிலாவையே பார்க்காமல் மறைந்து வாழ்ந்த பெண்மணி!
by krishnaamma Yesterday at 1:21 pm

» தெரிந்து கொள்வோம் {ஆன்மீகம்}
by krishnaamma Yesterday at 12:55 pm

» `அந்த விருதாவது ஞாபகமிருக்கிறதா சார்?’ -அமைச்சர் ஜெயக்குமாரை கலாய்த்த நடிகர் சித்தார்த்
by ayyasamy ram Yesterday at 12:54 pm

» விஷ்ணு தீபம் - திருவேங்கடத்தில் மற்றும் ஸ்ரீரங்கத்தில் :)
by krishnaamma Yesterday at 12:50 pm

» ஜல்லிக்கட்டு காளைகள் வளர்க்கும் மதுரை இளம்பெண்: இளங்கலை ஆங்கில இலக்கியம் படித்துவிட்டு விவசாயமும் பார்க்கிறார்
by ayyasamy ram Yesterday at 12:46 pm

» காசி விஸ்வநாதர் கோவிலின் கோடி தீபம்... photos
by krishnaamma Yesterday at 12:33 pm

» முக்தி தரும் காசி
by krishnaamma Yesterday at 12:20 pm

» ராதா பொருள் என்ன?
by krishnaamma Yesterday at 12:14 pm

» கோபுர தரிசனம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:09 pm

» கிறிஸ்துமஸ் போனஸ் ரூ.70 கோடி! இன்ப அதிர்ச்சியில் ஊழியர்கள்
by krishnaamma Yesterday at 11:38 am

» மார்கழி மாத ஆன்மீக தகவல்கள்
by krishnaamma Yesterday at 11:36 am

» திருவாதிரைக் களி
by ayyasamy ram Yesterday at 11:10 am

» சென்னை சா்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும் படங்கள்: முழுப் பட்டியல்!
by krishnaamma Yesterday at 11:08 am

» பஞ்சாப்பைக் கலக்கும் சூப்!
by krishnaamma Yesterday at 10:39 am

» கடந்த 3 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சில்லறைப் பணவீக்கம் அதிகரிப்பு!
by krishnaamma Yesterday at 10:38 am

» நேச நெஞ்சம்- சிறுகதை
by ayyasamy ram Yesterday at 10:32 am

» சினிதுளிகள்- குங்குமம்
by ayyasamy ram Yesterday at 10:28 am

» ஏழு விதமான ஆச்சரியங்கள்
by ayyasamy ram Yesterday at 10:20 am

» சுமங்கலி பெண்கள் கட்டாயம் செய்ய வேண்டிய விளக்கு பூஜை
by ayyasamy ram Yesterday at 9:15 am

» தன்னை உணர்தலே ஆத்ம பலம்! --அர்த்தமுள்ள இந்து மதம் - 63
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ஆறுமுகசாமி கமிஷன் என்ன ஆயிற்று ?
by ayyasamy ram Yesterday at 8:53 am

» நெட்டிசன் நோட்ஸ்: எனை நோக்கி பாயும் தோட்டா -அழகு
by ayyasamy ram Yesterday at 8:47 am

» அறிவியல் களஞ்சியம் அறிவியல் ஆச்சர்யம்
by ayyasamy ram Yesterday at 8:37 am

» பாலியல் வன்கொடுமை குற்றத்துக்கு 21 நாளில் தூக்கு தண்டனை: ஆந்திர அரசு சட்ட மசோதா
by ayyasamy ram Yesterday at 6:01 am

» தலைவி, குயினுக்குத் தடையில்லை: ஜெ. தீபாவின் கோரிக்கையை நிராகரித்தது உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 5:57 am

» பார்வையாளர்களிடம் தமிழில் பேசும் கவர்னர்
by ayyasamy ram Yesterday at 5:36 am

» விழிப்புணர்வுக்காக பள்ளிக்கு குதிரையில் செல்லும் 2 மாணவர்கள்
by ayyasamy ram Yesterday at 5:33 am

» நித்யானந்தா வழக்கில் திருப்பம்- பெண் சீடர்கள் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் புதிய தகவல்
by சிவனாசான் Yesterday at 3:03 am

» மங்கையர் திலகங்கள் தொடர்ச்சி--
by T.N.Balasubramanian Thu Dec 12, 2019 9:02 pm

» உலகின் மிகப்பெரிய பணக்காரர்.. பிரிட்டன்காரர்.. டிஎன்ஏ சோதனை செய்து பார்த்தால் பூர்வீகம் தமிழகமாம்!
by T.N.Balasubramanian Thu Dec 12, 2019 8:33 pm

» ஏழுகறிக் கூட்டு
by ayyasamy ram Thu Dec 12, 2019 8:13 pm

» கடந்து போன நாட்களுக்காக கவலைப்படாதீர்கள்...!
by T.N.Balasubramanian Thu Dec 12, 2019 7:32 pm

Admins Online

நீதி மன்ற துளிகள்.

நீதி மன்ற துளிகள். Empty நீதி மன்ற துளிகள்.

Post by சிவனாசான் on Thu Feb 14, 2019 7:25 pm

சென்னை : தமிழகத்தில் அனைத்து உயரதிகாரிகளின் அலுவலக அறைகளில் சிசிடிவி அமைப்பது கட்டாயம் என சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.ஐஜி முருகன் மீது பெண் அதிகாரி பாலியல் புகார் அளித்திருந்தார். இது தொடர்பான வழக்கை இன்று விசாரித்த ஐகோர்ட் நீதிபதி சுப்ரமணியன், தமிழகம் முழுவதும் அனைத்து துறைகளின் உயரதிகாரிகளின் அலுவலக அறைகளிலும் சிசிடிவி கேமிராக்கள் பொருத்த வேண்டும். 2 வாரங்களில் அதிகாரிகளின் அலுவலக அறைகளில் சிசிடிவி கேமிராக்கள் பொருத்தப்பட வேண்டும். வருங்காலத்தில் பணி செய்யும் இடங்களில் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் தொல்லைகளை தடுக்க சிசிடிவி கேமிராக்கள் பொருத்துவது அவசியம். வழக்கை விசாரித்த நீதிபதி என்ற முறையில் எனது அறையிலும் 2 சிசிடிவி பொருத்த வேண்டும் என தலைமை செயலாளருக்கு உத்தரவிட்டுள்ளார்.மேலும், ஐஜி முருகன் மீதான பாலியல் குற்றங்களை சிபிசிஐடி தொடர்ந்து விசாரிக்கலாம் என உத்தரவிட்டார். தொடர்ந்து இது தொடர்பான அனைத்து வழக்குகளையும் முடித்து வைப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4325
இணைந்தது : 26/07/2014
மதிப்பீடுகள் : 1205

Back to top Go down

நீதி மன்ற துளிகள். Empty Re: நீதி மன்ற துளிகள்.

Post by சிவனாசான் on Thu Feb 14, 2019 7:31 pm

புது டில்லி;- டில்லியில் யாருக்கு அதிகாரம் என்ற வழக்கில் இரண்டு நீதிபதிகள் கொண்ட சுப்ரீம் கோர்ட் அமர்வு டில்லி ஆம்ஆத்மி அரசு மற்றும் துணைநிலை கவர்னருக்கு இடையே யாருக்கு கூடுதல் அதிகாரம் உண்டு என்பது தொடர்பாக தொடர்ந்து மோதல் போக்கு நிலவி வந்தது. இந்நிலையில் யாருக்கு அதிகாரம் என்பது தொடர்பாக டில்லி அரசு சார்பில் டில்லி ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
இதில் துணைநிலை கவர்னருக்கே அதிக அதிகாரம் உள்ளதாக 2018 ல் தீர்ப்பளிக்கப்பட்டது. இதனை எதிர்த்து டில்லி அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட், இன்று தீர்ப்பு வழங்கி உள்ளது.இதில், டில்லியில் நிலம், போலீஸ் தவிர மற்ற அனைத்து அதிகாரங்களும் டில்லி அரசுக்கு உள்ளதாக தீர்ப்பளிக்கப்பட்டது. இருப்பினும் இந்த விவகாரத்தை மீண்டும் ஆய்வு செய்ய முடியாது எனக் கூறி நீதிபதி சிக்ரி, துணைநிலை கவர்னருக்கே அதிகாரம் உள்ளது என்றார். நீதிபதி பூஷண், டில்லி அரசுக்கே அதிகாரம் என மாறுபட்ட தீர்ப்பை வாசித்தார். இதனால் டில்லி அரசு - துணைநிலை கவர்னர் இடையேயான யாருக்கு அதிகாரம் என்ற குழப்பம் தொடர்ந்து வருகிறது.டில்லியை போன்று புதுச்சேரியிலும் துணைநிலை கவர்னர் - முதல்வர் இடையேயான மோதல் தீவிரடைந்து வருகிறது. கவர்னர் கிரண்பேடியை எதிர்த்து முதல்வர் நாராயணசாமி போராட்டம் நடத்தி வரும் நிலையில் யூனியன் பிரதேச அரசுக்கு ஆதரவாக சுப்ரீம் கோர்ட் நீதிபதி தீர்ப்பு வழங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே, நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு வழங்கியதால், வழக்கு 3வது நீதிபதியின் விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது.
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4325
இணைந்தது : 26/07/2014
மதிப்பீடுகள் : 1205

Back to top Go down

நீதி மன்ற துளிகள். Empty Re: நீதி மன்ற துளிகள்.

Post by சிவனாசான் on Thu Feb 14, 2019 7:34 pm

பெங்களூர்: தன்னை பணியிடை நீக்கம் செய்தது தொடர்பாக, சட்டசபை சிறப்பு ஆணையம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, சட்டசபை செயலர் மூர்த்தி தாக்கல் செய்த மனு தொடர்பாக, சபாநாயகர், சட்டசபை சிறப்பு வாரியத்துக்கு, கர்நாடக உயர் நீதிமன்றம், நோட்டீஸ் அனுப்பியுள்ளது.பெலகாவி சுவர்ண விதான்சவுதாவில் 2016, 2017ல் சட்டசபை கூட்ட ஏற்பாடுகள் செய்தது; சட்டசபை அமைச்சகங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கியதில், முறைகேடு நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.எனவே, சபாநாயகர் ரமேஷ்குமார் சிபாரிசுபடி, சட்டசபை செயலர் மூர்த்தியை பணியிடை நீக்கம் செய்து, சட்டசபை சிறப்பு ஆணையம், 2018 டிச., 27ல், உத்தரவு பிறப்பித்தது.முறைகேடு குற்றச்சாட்டு குறித்து, விளக்கமளிக்க வாய்ப்பளிக்காமல், தன்னை பணியிடை நீக்கம் செய்துள்ள உத்தரவை ரத்து செய்ய கோரி, கர்நாடக உயர் நீதிமன்றத்தில், மூர்த்தி மனு செய்திருந்தார்.இம்மனு மீதான விசாரணை நடத்திய உயர் நீதிமன்றம், சபாநாயகர் ரமேஷ்குமார், சட்டசபை சிறப்பு வாரியம், தற்காலிக செயலருக்கு, நேற்று முன்தினம் நோட்டீஸ் அனுப்பியது.
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4325
இணைந்தது : 26/07/2014
மதிப்பீடுகள் : 1205

Back to top Go down

நீதி மன்ற துளிகள். Empty Re: நீதி மன்ற துளிகள்.

Post by சிவனாசான் on Thu Feb 14, 2019 7:36 pm

திருச்சி: முதல்வர் குறித்து, அவதுாறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில், தி.மு.க., தலைவர் ஸ்டாலின், மார்ச், 8ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.கடந்த ஆண்டு, திருச்சி, முக்கொம்பில் உள்ள கொள்ளிடம் அணை உடைந்ததை பார்வையிட வந்த, தி.மு.க., தலைவர் ஸ்டாலின், முதல்வர், இ.பி.எஸ்., மீது குற்றச்சாட்டுகளை சுமத்தினார்.இதையடுத்து, திருச்சி அரசு வக்கீல் சம்பத், மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில், ஸ்டாலின் மீது அவதுாறு வழக்கு தொடர்ந்தார். வழக்கு விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டு, நேற்று ஸ்டாலின் ஆஜராக உத்தரவிடப்பட்டது.ஆனால், ஸ்டாலின் ஆஜராகவில்லை. அவரது சார்பில் ஆஜரான வக்கீல், 'ஸ்டாலின் சட்டசபைக் கூட்டத்தில் பங்கேற்றுள்ளதால், ஆஜராக முடியவில்லை' என, மனு செய்தார். இதை ஏற்ற நீதிபதி குமரகுரு, 'மார்ச், 8ம் தேதி ஸ்டாலின் கண்டிப்பாக ஆஜராக வேண்டும்' என, உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்தார்.


Last edited by சிவனாசான் on Thu Feb 14, 2019 7:39 pm; edited 1 time in total
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4325
இணைந்தது : 26/07/2014
மதிப்பீடுகள் : 1205

Back to top Go down

நீதி மன்ற துளிகள். Empty Re: நீதி மன்ற துளிகள்.

Post by சிவனாசான் on Thu Feb 14, 2019 7:37 pm

மதுரை: தமிழகத்தில் சேவை அறியும் உரிமைச் சட்டம் கொண்டு வரக் கோரிய வழக்கில், அரசுக்கு, 'நோட்டீஸ்' அனுப்ப, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.மதுரை வக்கீல், மணவாளன் என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனு:சேவை பெறும் உரிமைச் சட்டம், ம.பி., பீஹார், டில்லி, பஞ்சாப், கேரளா, கர்நாடகா உட்பட, பல்வேறு மாநிலங்களில் அமலில் உள்ளது.இச்சட்டப்படி, மாநில அரசு அளிக்கும் சேவைகளை, குறிப்பிட்ட காலத்தில் மக்கள் பெற முடியும். சேவையை வழங்கத் தவறும் அலுவலர்கள் மீது, நடவடிக்கை எடுக்க சட்டம் வழிவகுக்கிறது.இச்சட்டத்தின் கீழ், கர்நாடகாவில், 'சகாலா' திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அதன்படி, சேவை பெற விண்ணப்பிக்கும் மக்கள், மனுவின் நிலையை, இணையதளம் மூலம் அறிய முடியும்.உரிய காலத்தில் சேவை அல்லது பதில் அளிக்க தவறும் அலுவலர்களுக்கு, 20 முதல், 500 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும். விண்ணப்பத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து, மனுதாரர்களின் அலைபேசிக்கு, எஸ்.எம்.எஸ்., அனுப்பப்படும்.தமிழக அரசுத் துறைகளில், சேவைகளை மக்கள் பெறுவதில் தாமதம் ஏற்படுகிறது. இது, லஞ்சம், முறைகேடுகளுக்கு வழிவகுக்கிறது.தமிழகத்தில் சேவை அறியும் உரிமைச் சட்டம் கொண்டு வந்தால், பிறப்பு, இறப்புச் சான்று, வருமானச் சான்று, ரேஷன் கார்டு, பட்டா, மின் இணைப்பு பெறுவது உட்பட பல்வேறு சேவைகளை, உரிய காலத்தில் மக்கள் பெற முடியும். சேவை அறியும் உரிமைச் சட்டம் கொண்டு வர, தமிழக அரசு பரிசீலிக்க உத்தரவிட வேண்டும்.இவ்வாறு, மனுவில் கூறியிருந்தார்.நீதிபதிகள், என்.கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் அமர்வு விசாரித்து, தமிழக சட்டத் துறை செயலர், உள்துறை செயலர், பணியாளர் நலன் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறை செயலருக்கு, 'நோட்டீஸ்' அனுப்பி, மார்ச் 6க்கு ஒத்திவைத்தது.
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4325
இணைந்தது : 26/07/2014
மதிப்பீடுகள் : 1205

Back to top Go down

நீதி மன்ற துளிகள். Empty Re: நீதி மன்ற துளிகள்.

Post by சிவனாசான் on Thu Feb 14, 2019 7:39 pm

புதுடில்லி: தேர்தல் கமிஷனராக சுஷில் சந்திரா நியமிக்கப்பட்டு உள்ளார். இதற்கான உத்தரவை சட்ட அமைச்சகம் வெளியிட்டு உள்ளது.தற்போது சுஷில் சந்திரா, நேரடி வரிகள் ஆணைய தலைவராக(CBDT) உள்ளார். ஐஐடி முன்னாள் மாணவரான இவர், 1980ம் ஆண்டு பேட்சை சேர்ந்த ஐஆர்எஸ்(வருமான வரித்துறை) அதிகாரி ஆவார். 2016 நவம்பரில் சிபிடிடி தலைவராக நியமிக்கப்பட்டார். பின்னர், அவரது பதவிக்காலம் ஒராண்டு நீட்டிக்கப்பட்டது. வரும் மே 31ம் தேதியுடன் பதவிக்காலம் முடிவடைய உள்ள நிலையில், சுஷில் சந்திரா தேர்தல் கமிஷனராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.3 பேரை கொண்ட தேர்தல் கமிஷனில், தலைமை தேர்தல் கமிஷனராக சுனில் அரோரா உள்ளார். மற்றொரு கமிஷனராக அசோக் லவாசா உள்ளார்.மார்ச் முதல்வாரத்தில், லோக்சபா தேர்தலுக்கான அறிவிப்பை தேர்தல் கமிஷன் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4325
இணைந்தது : 26/07/2014
மதிப்பீடுகள் : 1205

Back to top Go down

நீதி மன்ற துளிகள். Empty Re: நீதி மன்ற துளிகள்.

Post by சிவனாசான் on Thu Feb 14, 2019 7:41 pm

சென்னை: தமிழகம் முழுவதும், விவசாய நிலத்தில், எத்தனை மதுபான கடைகள், 'பார்'கள் உள்ளன என்ற விபரங்களை தாக்கல் செய்யும்படி, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த, நல்லசாமி நாச்சிமுத்து என்பவர் தாக்கல் செய்த மனு:மயிலம்பாடி கிராமத்தில், விவசாயம் தான் பிரதானம். இந்த கிராமத்திலும், அதை சுற்றியுள்ள கிராமங்களிலும், ௧,௦௦௦ குடும்பங்கள் உள்ளன. திடீரென, இந்த கிராமத்தில் உள்ள விவசாய நிலத்தில், மதுபான கடை திறக்கப்பட்டது.வேறு இடத்தில் உள்ள கடையை, எங்கள் பகுதிக்கு மாற்றி, கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். மதுபான கடையை, விவசாய நிலத்திற்கு மாற்ற, கலெக்டர் அனுமதி வழங்கியிருக்கக் கூடாது. எனவே, கடையை அகற்ற உத்தரவிட வேண்டும்.இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.மனு, நீதிபதிகள், மணிகுமார், சுப்ரமணியம் பிரசாத் அடங்கிய, 'டிவிஷன் பெஞ்ச்' முன், விசாரணைக்கு வந்தது. விவசாய நிலத்தில் உள்ள மதுபான கடையை, உடனடியாக மூடி, அறிக்கை தாக்கல் செய்யும்படி, டாஸ்மாக் அதிகாரிகளுக்கு, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.மாநிலம் முழுவதும், விவசாய நிலங்களில், எத்தனை மதுபான கடைகள் மற்றும் பார்கள் உள்ளன என்ற விபரங்களையும், டாஸ்மாக் நிர்வாக இயக்குனர் அளிக்கும்படி, நீதிபதிகள் உத்தரவிட்டனர். விசாரணையை, வரும், ௨௦ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4325
இணைந்தது : 26/07/2014
மதிப்பீடுகள் : 1205

Back to top Go down

நீதி மன்ற துளிகள். Empty Re: நீதி மன்ற துளிகள்.

Post by சிவனாசான் on Thu Feb 14, 2019 7:42 pm


புது டெல்லி;= தொலை தொடர்பு சேவைகளுக்காக, 'எரிக்சன்' நிறுவனத்துக்கு செலுத்த வேண்டிய நிலுவை தொகையில், 550 கோடி ரூபாயை வழங்க, அனில் அம்பானியின், 'ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ்' நிறுவனத்துக்கு, உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது. இந்த தொகையை அம்பானி நிறுவனம் செலுத்தாததால், எரிக்சன் நிறுவனம் தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கின் தீர்ப்பு, தேதி குறிப்பிடாமல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4325
இணைந்தது : 26/07/2014
மதிப்பீடுகள் : 1205

Back to top Go down

நீதி மன்ற துளிகள். Empty Re: நீதி மன்ற துளிகள்.

Post by T.N.Balasubramanian on Thu Feb 14, 2019 8:31 pm

அருமை தொடருங்கள் .

 ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 25751
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9287

Back to top Go down

நீதி மன்ற துளிகள். Empty Re: நீதி மன்ற துளிகள்.

Post by சிவனாசான் on Sat Feb 16, 2019 7:52 pm

புதுடில்லி: சி.ஐ.சி., எனப்படும், மத்திய தகவல் ஆணையத்தில் காலியாக உள்ள பதவிகளுக்கு, தகுதியானோரை நியமிப்பது குறித்து, உச்ச நீதிமன்றம், நேற்று பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.தகவல் உரிமை ஆர்வலர், அஞ்சலி பரத்வாஜ் தாக்கல் செய்த மனு, உச்ச நீதிமன்ற நீதிபதிகள், ஏ.கே.சிக்ரி, எஸ்.ஏ.நஸீர் அடங்கிய அமர்வு முன், நேற்று விசாரணைக்கு வந்தது.அதில், 'சி.ஐ.சி., எனப்படும், மத்திய தகவல் ஆணையம், எஸ்.ஐ.சி., எனப்படும், மாநில தகவல் ஆணையங்களில் உள்ள பதவிகள் காலியாக இருப்பதால், 23 ஆயிரத்து, 500 தகவல் உரிமை மனுக்களும், புகார்களும், பதில் அளிக்கப்படாமல் நிலுவையில் உள்ளன' என, கூறப்பட்டுள்ளது. மனுவை பரிசீலித்த நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:தலைமை தேர்தல் ஆணையர் பதவிக்கு பின்பற்றப்படும் நடைமுறைப்படி, தலைமை தகவல் ஆணையர் பதவிக்கு உரிய அதிகாரியை தேர்ந்தெடுக்கவேண்டும்.சி.ஐ.சி.,மற்றும்எஸ்.ஐ.சி.,அமைப்புகளில்உள்ளகாலிஇடங்களை,ஆறுமாதங்களில்நிரப்பவேண்டும்.இதற்கானநடவடிக்கைகளை, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடன் எடுக்கவேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4325
இணைந்தது : 26/07/2014
மதிப்பீடுகள் : 1205

Back to top Go down

நீதி மன்ற துளிகள். Empty Re: நீதி மன்ற துளிகள்.

Post by சிவனாசான் on Sat Feb 16, 2019 7:56 pm

புதுடில்லி: வெளிநாடு செல்வதற்காக, பிணைத் தொகையாக செலுத்த வேண்டிய, 10 கோடி ரூபாயை, நாடு திரும்பியதும், வட்டியுடன் திரும்ப அளிக்கக்கோரி, முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரத்தின் மகன் கார்த்தி தாக்கல் செய்த மனுவை, உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து உள்ளது.ஐ.என்.எக்ஸ்., மீடியா நிறுவனம், வெளிநாட்டு முதலீட்டை பெறுவதற்கு ஒப்புதல் வழங்கியதில், முறைகேடுகள் நடந்ததாகவும், இதில், முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான, சிதம்பரத்தின் மகன், கார்த்திக்கு சொந்தமான நிறுவனம் ஆதாயம் அடைந்ததாகவும் புகார்கள் எழுந்தன.'ஏர்செல்' நிறுவனத்தில், மலேஷியாவை சேர்ந்த மேக்சிஸ் நிறுவனம் முதலீடு செய்த விவகாரத்தில், விதிகள் மீறப்பட்டதாகவும், இதற்கு அனுமதி பெற்று கொடுக்க, கார்த்தியின் நிறுவனம் ஆதாயம் அடைந்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டது.முந்தைய, காங்கிரஸ், தலைமையிலான, ஐ.மு., கூட்டணி ஆட்சியில், சிதம்பரம் நிதி அமைச்சராக இருந்தபோது, இந்த முறைகேடு நடந்ததாக புகார் கூறப்பட்டது. கார்த்திக்கு எதிராக, இது தொடர்பான வழக்குகள் நிலுவையில் உள்ளன.இந்நிலையில், சர்வதேச டென்னிஸ் போட்டி தொடர்பான விவகாரத்துக்காக, வெளிநாடு செல்ல அனுமதி கோரி, கார்த்தி சார்பில், உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், 10கோடி ரூபாயை பிணை தொகையாக செலுத்தி, வெளிநாடு செல்ல அனுமதி அளித்தனர்.இந்நிலையில், 'பிணைத் தொகையான, 10 கோடி ரூபாயை, குறுகிய கால, 'டிபாசிட்'டாக வைத்து, நாடு திரும்பியதும், வட்டியுடன் திரும்ப அளிக்க வேண்டும்' எனக்கோரி, கார்த்தி சார்பில், உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது.இந்த மனுவை விசாரித்த, தலைமை நீதிபதி, ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு, கார்த்தியின் கோரிக்கையை நிராகரித்து உத்தரவிட்டது.
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4325
இணைந்தது : 26/07/2014
மதிப்பீடுகள் : 1205

Back to top Go down

நீதி மன்ற துளிகள். Empty Re: நீதி மன்ற துளிகள்.

Post by சிவனாசான் on Sat Feb 16, 2019 7:57 pm

புதுடில்லி: தமிழகத்தின் திருவாரூர், திருப்பரங்குன்றம் சட்டசபை தொகுதிகள் காலியாக உள்ளன. திருவாரூருக்கு மட்டும் இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டது. பின், 'கஜா' புயலை காரணம் காட்டி, தேர்தல் ரத்து செய்யப்பட்டது.இதையடுத்து, மதுரையைச் சேர்ந்த ரமேஷ் என்பவர், உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதில், 'தமிழகத்தில் காலியாக உள்ள திருவாரூர் மற்றும் திருப்பரங்குன்றம் சட்டசபை தொகுதிகளுக்கு, இடைத்தேர்தல் நடத்த, தலைமை தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும்' என, கூறப்பட்டு இருந்தது.இந்த வழக்கு, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு முன், நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதிகள் உத்தரவிட்டதாவது:தேர்தல் நடத்துவது தொடர்பாக, தலைமை தேர்தல் ஆணையம்தான் முடிவு செய்ய வேண்டும். நீதிமன்றம் எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது. மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.இவ்வாறு, நீதிபதிகள் கூறினர்.
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4325
இணைந்தது : 26/07/2014
மதிப்பீடுகள் : 1205

Back to top Go down

நீதி மன்ற துளிகள். Empty Re: நீதி மன்ற துளிகள்.

Post by சிவனாசான் on Sat Feb 16, 2019 7:58 pm

புதுடில்லி: மத்திய பிரதேச மாநிலத்தில், நான்கு வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில், மரண தண்டனை விதிக்கப்பட்ட பள்ளி ஆசிரியருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனைக்கு, உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.ம.பி.,யில் கடந்த ஆண்டு, ஜூலை, 1ல், அருகில் உள்ள ஒரு வீட்டில் விளையாடிய நான்கு வயது சிறுமியை கடத்தி சென்று, பாலியல் பலாத்காரம் செய்ததாக, மஹேந்திர சிங் கோண்ட், 28, என்ற பள்ளி ஆசிரியர் கைது செய்யப்பட்டார்.வழக்கை விசாரித்த சத்னா மாவட்ட நீதிமன்றம், மஹேந்திர சிங்குக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. அந்த தண்டனையை, ம.பி., உயர் நீதிமன்றம் உறுதி செய்தது.மரண தண்டனையை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் மஹேந்திர சிங் மேல் முறையீடு செய்தான். மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு, மரண தண்டனை நிறைவேற்ற தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4325
இணைந்தது : 26/07/2014
மதிப்பீடுகள் : 1205

Back to top Go down

நீதி மன்ற துளிகள். Empty Re: நீதி மன்ற துளிகள்.

Post by சிவனாசான் on Sat Feb 16, 2019 8:02 pm

புதுடில்லி: இணையதளத்தில் ஆட்சேபகரமான பதிவுகளை வெளியிட்டால், சம்பந்தப்பட்டோரை சிறையில் அடைக்க, தகவல் தொழில் நுட்ப சட்ட பிரிவு, 66ஏ வகை செய்தது.இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், 2015, மார்ச், 24ல் பிறப்பித்த உத்தரவில், இணையதள பதிவுகளுக்காக சிறையில் அடைக்கும் ஷரத்தை ரத்து செய்தது.இது தொடர்பாக, அரசு சாரா அமைப்பு ஒன்று தாக்கல் செய்த மனு, உச்ச நீதிமன்ற நீதிபதிகள், ஆர்.எப்.நாரிமன், சஞ்சய் கிஷண் கவுல் அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது.அதில், 'இணையதளத்தில் ஆட்சேபகரமாக பதிவிடுவோரை கைது செய்யும் நடைமுறை தற்போதும் தொடர்கிறது' என, குற்றஞ்சாட்டப்பட்டது.அப்போது, மத்திய அரசு சார்பில் ஆஜரான அட்டர்னி ஜெனரல், கே.கே.வேணுகோபால் கூறியதாவது:இந்த வழக்கு தொடர்பானஉச்சநீதிமன்றஉத்தரவு,அனைத்துஉயர்நீதிமன்றங்கள்,மாவட்டநீதிமன்றங்களுக்கு அனுப்பப்பட வேண்டும்.அப்போது தான், இது தொடர்பான வழக்குவிசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படாது.இவ்வாறு, அவர் கூறினார்.இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:கடந்த, 2015ல், தகவல் தொடர்பு சட்ட பிரிவு, 66ஏ, உச்ச நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டது குறித்து, மாநில அரசுகள், தங்கள் போலீசாருக்கு தெளிவுபடுத்த வேண்டும். இதனால், யாரும்கைதுசெய்யப்படுவதைதவிர்க்கலாம்.உத்தரவின் நகல்களை, மாவட்ட மற்றும் விசாரணை நீதிமன்றங்களுக்கு, அனைத்து உயர் நீதிமன்றங்களும் அனுப்ப வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4325
இணைந்தது : 26/07/2014
மதிப்பீடுகள் : 1205

Back to top Go down

நீதி மன்ற துளிகள். Empty Re: நீதி மன்ற துளிகள்.

Post by சிவனாசான் on Sat Feb 16, 2019 8:09 pm

சென்னை : வறுமை கோட்டிற்கு கீழுள்ள 60 லட்சம் குடும்பங்களுக்கு தலா 2000 ரூபாய் சிறப்பு நிதி உதவி வழங்க எதிர்ப்பு தெரிவித்து தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.சட்டசபையில் 110வது விதியின் கீழ் 'வறுமை கோட்டிற்கு கீழுள்ள தொழிலாளர்களுக்கு தலா 2,000 ரூபாய் வழங்கப்படும்' என முதல்வர் பழனிசாமி அறிவித்தார். இந்த தொகை 60 லட்சம் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு இம்மாத இறுதிக்குள் அவர்களின் வங்கி கணக்கில் செலுத்தப்பட உள்ளது.இதையடுத்து உயர் நீதிமன்றத்தில் சட்டப் பஞ்சாயத்து இயக்கத்தின் அறங்காவலர் செந்தில் ஆறுமுகம் தாக்கல் செய்த மனு: கடந்த ஆண்டு பட்ஜெட் தாக்கல் செய்து நிதி அமைச்சர் பேசுகையில் 'தமிழக மக்கள் தொகையில் வறுமை கோட்டிற்கு கீழ் இருப்பவர்கள் 11.28 சதவீதம்' என குறிப்பிட்டிருந்தார். 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தமிழக மக்கள் தொகை 7.20 கோடி. அமைச்சர் குறிப்பிட்டபடி 11.28 சதவீதம் என்றால் 84.96 லட்சம் பேர்.ஒரு குடும்பத்துக்கு மூன்று பேர் என கணக்கிட்டாலும் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்கள் 28.32 லட்சம் தான். இந்த எண்ணிக்கையை அதிகரித்து 60 லட்சம் குடும்பங்கள் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளதாக சட்டசபையில் அறிவிக்கப்பட்டது. எந்த ஆதாரமும் இன்றி 60 லட்சம் குடும்பங்கள் வறுமை கோட்டிற்கு கீழ் இருப்பதாக அரசு முடிவுக்கு வந்துள்ளது. வறுமை கோட்டிற்கு கீழ் வரும் குடும்பங்கள் எவை என்பதை கண்டறிந்து புதிய பட்டியல் தயாரிக்க வேண்டும். அதுவரை திட்டத்தை அமல்படுத்துவதை நிறுத்தி வைக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.மனு நீதிபதிகள் மணிக்குமார் சுப்ரமணியம் பிரசாத் அடங்கிய 'டிவிஷன் பெஞ்ச்' முன்நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரரான செந்தில் ஆறுமுகம் ஆஜராகி வாதாடினார். அரசு தரப்பில் அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயண், கூடுதல் அட்வகேட் ஜெனரல் எஸ்.ஆர்.ராஜகோபால் ஆஜராகினர். அரசியல் ஆதாயத்துக்காக இந்த அறிவிப்பை முதல்வர் வெளியிட்டிருப்பதாக செந்தில் ஆறுமுகம் தெரிவித்தார். அதற்கு அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயண் ஆட்சேபனை தெரிவித்தார்.அவர் வாதாடியதாவது: வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு மட்டுமே இந்த திட்டம் அறிவிக்கப்பட்டது. ஆதார் அட்டை இணைக்கப்பட்ட வங்கி கணக்குகள் குறித்த விபரங்களை சேகரிக்கவும், கணக்கெடுக்கவும் 55 ஆயிரம் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். பணமாக கையில் வழங்காமல் பயனாளிகளின் வங்கி கணக்கில் செலுத்தப்பட உள்ளது.மனுதாரர் 2011ம் ஆண்டுக்கான புள்ளிவிபரத்தை குறிப்பிட்டுள்ளார்.கடந்த 2006 முதல் 2015 வரை எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் கிராமப்புறங்களில் 32.13 லட்சம்; நகர்ப்புறங்களில் 23.54 லட்சம் என 55.67 லட்சம் ஏழை குடும்பங்கள் உள்ளது கண்டறியப் பட்டுள்ளது. ஆண்டுக்கு 24 ஆயிரம் ரூபாய்க்கு குறைவாக வருமானம் உள்ளவர்கள் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்களாக கணக்கெடுக்கப்பட்டு உள்ளனர். சிறப்பு நிதி உதவி வழங்குவது அரசின் கொள்கை முடிவு. இவ்வாறு அவர் வாதாடினார்.அரசு தரப்பில் அறிக்கையும் தாக்கல் செய்யப்பட்டது. இந்த அறிக்கையை பரிசீலித்த பின் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: அரசு அறிவித்துள்ள சிறப்பு நிதி உதவி திட்டத்தில் எந்த முறைகேடும் இல்லை. ஏழை மக்களுக்கும் 'கஜா' புயலால் பாதிக்கப்பட்டோருக்கும் சிறப்பு நிதி உதவி வழங்க அரசு கொள்கை முடிவெடுத்துள்ளது. இதில் குறுக்கிட முடியாது. எனவே மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4325
இணைந்தது : 26/07/2014
மதிப்பீடுகள் : 1205

Back to top Go down

நீதி மன்ற துளிகள். Empty Re: நீதி மன்ற துளிகள்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை