உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» வேல்ஸ் எழுதிய வாவ் ௨௦௦௦ புக் இருந்தால் தயவு செய்து தரவும்
by dharanidharan Today at 12:13 pm

» புத்தகம் request - Hi Mathan books (all parts) if available
by dharanidharan Today at 12:12 pm

» வேலன்:-பழுதான விண்ரேர் பைல்களை ஒப்பன் செய்திட -WIN RAR REPAIR TOOLAI
by aeroboy2000 Today at 11:15 am

» 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .
by dharanidharan Today at 10:50 am

» வீடுதோறும் இருக்கிறது கிணறு: குடிநீர் பஞ்சம் இவர்களுக்கு இல்லை
by ayyasamy ram Today at 7:13 am

» கஞ்சிக்குழிக்கு, 'சபாஷ்'
by ayyasamy ram Today at 7:09 am

» தாயின் அன்புதான் கவிதை, கதை, எழுத்து : கவிஞர் மு.மேத்தா
by ayyasamy ram Today at 7:05 am

» ஜியோ ரூ.399 இலவச சலுகையை நம்ப வேண்டாம்
by சிவனாசான் Yesterday at 9:32 pm

» வாட்ஸ் அப் நகைச்சுவை
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு
by ayyasamy ram Yesterday at 5:36 pm

» தாயார் இல்லத்தில் தனயன் பாதுகை
by ayyasamy ram Yesterday at 4:55 pm

» வாகன விபத்தில் பாதிக்கப் படுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 3:23 pm

» எல்லா ஆண்களும் தம் மனைவியிடம்"மியாவ்" என்றே கர்ஜிக்கிறார்கள்...!!!
by ayyasamy ram Yesterday at 3:17 pm

» வாட்ஸ்அப் கனவு!
by ayyasamy ram Yesterday at 2:54 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Yesterday at 2:51 pm

» தட்டப் பருப்பு போண்டா
by ayyasamy ram Yesterday at 2:46 pm

» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Yesterday at 2:41 pm

» மன்னரும், சந்தன வியாபாரியும்!
by ayyasamy ram Yesterday at 2:40 pm

» அக்கா விதைத்த அழகு முத்து- விடுகதைகள்
by ayyasamy ram Yesterday at 2:36 pm

» கற்கண்டு சாதம்
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» சிரிக்கலாம் வாங்க….!
by சக்தி18 Yesterday at 2:27 pm

» என்றோ கேட்டவை....இன்றும் இனியவை (திரைப்பாடல் காணொளி)
by சக்தி18 Yesterday at 2:18 pm

» உணவு - அங்கும் இங்கும்
by ayyasamy ram Yesterday at 2:03 pm

» அமைதியில்லா என் மனமே...! - பாதாள பைரவி திரைப்படம்
by சக்தி18 Yesterday at 1:40 pm

» சிந்திக்க வைக்கும் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» காயங்களின்றி காலம் எதையும் கற்றுக்கொடுப்பதில்லை…!!
by ayyasamy ram Yesterday at 12:45 pm

» வெண்முரசு - ஜெயமோகன் pdf கோப்பாக தேவை
by புத்தகப்பிாியன் Yesterday at 12:38 pm

» நாலு மாச பெப்பே...!! (புன்னகை பக்கம்)
by ayyasamy ram Yesterday at 11:58 am

» தடபுடல் அல்வா - புன்னகை பக்கம்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» ஆனந்த விகடன் பொக்கிஷம்
by புத்தகப்பிாியன் Yesterday at 11:37 am

» கட்டபொம்மன் கொள்ளைக்காரன்
by புத்தகப்பிாியன் Yesterday at 11:31 am

» புத்தக தேவைக்கு...
by dharanidharan Yesterday at 11:26 am

» சிவ கீதை புத்தகம்
by புத்தகப்பிாியன் Yesterday at 11:26 am

» ராணி காமிக்ஸ் புத்தகங்கள் - 02
by புத்தகப்பிாியன் Yesterday at 11:22 am

» ராணி காமிக்ஸ் புத்தகங்கள் - 01
by புத்தகப்பிாியன் Yesterday at 11:21 am

» ஆன்மிக சிந்தனை – நபிகள் நாயகம்
by ayyasamy ram Sat May 18, 2019 11:35 pm

» அழகு ரசிப்பதற்கே, அறிவு கொடுப்பதற்கே
by ayyasamy ram Sat May 18, 2019 11:25 pm

» அழகே அழகே எதுவும் அழகே
by ayyasamy ram Sat May 18, 2019 11:19 pm

» மரங்களின் வரங்கள்!: தொழில் புரட்சி செய்த மரம் – ரப்பர் மரம்
by ayyasamy ram Sat May 18, 2019 11:14 pm

» ஆகாயத் தாமரைகளுக்கிடையே சிக்கிக்கொள்ளும் யானைக்குட்டி… வைரலாகும் வீடியோ!
by ayyasamy ram Sat May 18, 2019 11:11 pm

» பீட்ரூட் அசோகா அல்வா
by ayyasamy ram Sat May 18, 2019 11:09 pm

» லூசிபர் – சினிமா விமரிசனம்
by ayyasamy ram Sat May 18, 2019 11:06 pm

» பெயரை மறந்த இயக்குநர் – மன்னிப்புக் கேட்ட ஹீரோயின் ராஷி கண்ணா
by ayyasamy ram Sat May 18, 2019 11:01 pm

» எந்தப் பூச்சிக்குக் குளிரவே குளிராது?”- கடி ஜோக்ஸ்
by ayyasamy ram Sat May 18, 2019 10:54 pm

» உலகில் மிகவும் தைரியமான மனிதன்..!!
by ayyasamy ram Sat May 18, 2019 10:50 pm

» தன் கவிதைகளில் வாழும் நகுலன் நினைவுதினம் இன்று…
by ayyasamy ram Sat May 18, 2019 10:48 pm

» சிவகார்த்திகேயனின் ‘Mr.லோக்கல்’திரை விமரிசனம்
by ayyasamy ram Sat May 18, 2019 10:42 pm

» கேன்ஸ் திரைப்பட விழா - மேக்கப் மற்றும் உடைகளுக்கு அதீத முக்கியத்துவம் தரும் நடிகைகள்
by ayyasamy ram Sat May 18, 2019 10:36 pm

» ஈகரை வாசகர்களுக்கு ஒரு தாழ்மையான வேண்டுகோள்.
by சக்தி18 Sat May 18, 2019 9:52 pm

» ஜெயமோகனின் வெண்முரசு நாவல்கள்
by புத்தகப்பிாியன் Sat May 18, 2019 9:22 pm

Admins Online

பண மதிப்பிழப்பு சிறு தொழில்களை அழித்து விட்டது; தமிழகத்துக்கு ரூ.12 ஆயிரம் கோடி நிதி பாக்கி: மத்திய அரசை விளாசிய தம்பிதுரை

பண மதிப்பிழப்பு சிறு தொழில்களை அழித்து விட்டது; தமிழகத்துக்கு ரூ.12 ஆயிரம் கோடி நிதி பாக்கி: மத்திய அரசை விளாசிய தம்பிதுரை Empty பண மதிப்பிழப்பு சிறு தொழில்களை அழித்து விட்டது; தமிழகத்துக்கு ரூ.12 ஆயிரம் கோடி நிதி பாக்கி: மத்திய அரசை விளாசிய தம்பிதுரை

Post by ayyasamy ram on Tue Feb 12, 2019 10:11 pm

பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் நாட்டில் சிறுதொழில்கள்,
அமைப்பு சாரா தொழில்கள் நசிந்து, அழிந்துவிட்டன.
தமிழகத்துக்கு மட்டும் ரூ.12 ஆயிரம் கோடி நிதியை மத்திய அரசு
தராமல் தாமதம் செய்து வருகிறது என்று மக்களவை துணைத்
தலைவர் தம்பிதுரை காட்டமாகப் பேசினார்.

மத்திய அரசு தாக்கல் செய்த இடைக்கால பட்ஜெட் மீதான
விவாதம் நடந்து வருகிறது. மக்களவையில் இன்று நடந்த
விவாதத்தில் மக்களவை துணைத் தலைவர் தம்பிதுரை பேசினார்.

அப்போது, அவரைப் பேசவிடாமல் தெலுங்குதேசம் கட்சி
எம்.பி.க்கள் தொடர்ந்து கோஷமிட்டு இடையூறு செய்தவாறு
இருந்தனர். காங்கிரஸ் கட்சி எம்.பி.க்கள் வெளிநடப்பு
செய்தனர்.

அவர்களை நோக்கிப் பேசிய தம்பிதுரை நான் உங்களுக்காகவும்
சேர்த்துத்தான் பேசுகிறேன். தயவுசெய்து அமைதியாக இருங்கள்
என்று கூறியவுடன் எம்.பி.க்கள் அமைதியானார்கள்.

மக்களவையில் தம்பிதுரை பேசியதாவது:

''இந்தத் தேசம் விரைவில் பொதுத்தேர்தலை எதிர்கொள்ளும்
சூழலில் தாக்கல் செய்துள்ள இந்த இடைக்கால பட்ஜெட்
மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது. இது இடைக்கால பட்ஜெட்டாக
இருந்திருக்க வேண்டும்.

ஆனால், மக்களைக் கவரும் ஏராளமான கவர்ச்சித் திட்டங்கள்
இருக்கின்றன. கடந்த 4 ஆண்டுகளில் இதை அறிவித்திருக்கலாம்
. ஆனால், அப்போதெல்லாம் அறிவிக்கவில்லை.

நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) உயர்ந்துள்ளது
வரவேற்கக்கூடியது என்றாலும், நாட்டில் வேலையில்லாத்
திண்டாட்டம் என்பது மிகப்பெரிய அளவில் அதிகரித்துள்ளது.
கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேலைப் பஞ்சம்
நிலவுகிறது.

வேளாண் சார்ந்த பிரச்சினைகள் இந்த ஆட்சியில்
தொடர்கின்றன. ஏறக்குறைய 3 லட்சம் விவசாயிகள் தற்கொலை
செய்துள்ளனர். விவசாயிகளின் வருமானத்தை
இரட்டிப்பாக்குவோம் என்று வாக்குறுதி அளித்தது என்னாயிற்று?

விளைபொருட்களுக்கு ஆதார விலை உயர்த்தப்பட்டாலும்,
வருமானம் இரட்டிப்பாக்கப்படவில்லை.

பிரதமரின் விவசாயிகள் திட்டம் என்பது நிலம் வைத்துள்ள
விவசாயிகளுக்கு மட்டும் பொருந்துகிறது. நிலம் இல்லாத
விவசாயிகளுக்கு உதவவில்லை.

மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்துக்கு மத்திய
அரசு ஒதுக்கிய நிதி போதாது. கடந்த ஐக்கிய முற்போக்குக்
கூட்டணி அரசில் ஒதுக்கியதைக் காட்டிலும் குறைக்கப்
பட்டுள்ளது. அதை மறு ஆய்வு செய்ய வேண்டும்.

என்னுடைய தொகுதியில் கட்டப்பட்டுள்ள கழிப்பறைகள்
அனைத்தும் முறையாகக் கட்டப்படவில்லை.
(புகைப்படத்தைக் காட்டினார்) நகரில் இருந்து ஒரு
கிலோமீட்டருக்கு அப்பால் இவை கட்டப்பட்டுள்ளன.

மிக தொலைவில் உள்ள கழிப்பறைகளை பெண்கள் எவ்வாறு
பயன்படுத்த முடியும்?

பிரதமர் மோடி மேக் இன் இந்தியா திட்டத்தை ஊக்கப்படுத்தி
வருகிறார், பேசி வருகிறார். ஆனால், சீனாவில் இருந்து
தயாரிக்கப்பட்ட பொருட்கள் மட்டுமே வாங்கப்படுகின்றன.

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பொருட்களை மக்கள்
வாங்குவதற்கு மத்திய அரசு என்ன நடவடிக்கைகளை எடுத்தது?

மத்திய அரசு கொண்டு வந்த பண மதிப்பிழப்பு நடவடிக்கையால்
சிறுதொழில்கள், அமைப்பு சாரா தொழில்கள் அனைத்தும் நசிந்து,
அழிந்துவிட்டன. இதில் ஏதோ அரசியல் ஆதாயம் இருப்பதாகக்
கூறப்பட்டாலும், எனக்கு அது புரியவில்லை.

ஜிஎஸ்டி வரியை காங்கிரஸும் பாஜகவும் சொந்தம்
கொண்டாடுகின்றன. ஆனால், மாநிலங்களுக்கு உதவாத
திட்டமாகவே ஜிஎஸ்டி வரி இருக்கிறது. ஆந்திரப் பிரதேச
எம்.பி.க்கள் நாள்தோறும் போராட்டம் நடத்துகிறார்கள்.

ஏனென்றால், அவர்களிடம் பணம் இல்லை. மாநிலங்களின்
உரிமைகள் அனைத்தும் பறிக்கப்பட்டுவிட்டன.

தமிழகத்துக்கு மட்டும் மத்திய அரசு தர வேண்டிய நிதி
ரூ.12 ஆயிரம் கோடி நிலுவையில் இருக்கிறது. மறைந்த முதல்வர்
ஜெயலலிதா உயிரோடு இருந்தபோதே இந்த நிதியை நாங்கள்
கோரினோம்.

ஆனால், மத்திய அரசு தராமல் இன்னும் தாமதிக்கிறது.
இதுதான் கூட்டாட்சியா. எந்த விதமான பணமும் இல்லாமல்
எங்கள் மாநிலத்தை எவ்வாறு மேம்படுத்த முடியும்.

தமிழகம் குடும்பக் கட்டுப்பாடு திட்டத்தை வெற்றிகரமாகச்
செயல்படுத்தி வருகிறது. ஆனால், அந்தத் திட்டமே தற்போது
எங்களுக்கு எதிராகத் திரும்பியுள்ளது. 15 நிதிக்குழுவில் மக்கள்
தொகை அடிப்படையில் நிதிஒதுக்கீடு என்று கூறிவிட்டார்கள்''.

இவ்வாறு தம்பிதுரை பேசினார்.
-
---------------------------------
இந்து தமிழ் திசை
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 45131
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12075

View user profile https://rammalar.wordpress.com/

Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை